சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

French President Hollande promotes the neo-fascist National Front

பிரெஞ்சு ஜனாதிபதி ஹோலாண்ட் நவ-பாசிசவாத தேசிய முன்னணியை ஊக்குவிக்கிறார்

By Stéphane Hugues
25 April 2015

Use this version to printSend feedback

நவ-பாசிசவாத தேசிய முன்னணியை (FN) 1970களின் ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியுடன் (PCF) ஒப்பிட்ட பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்டின் கருத்துக்கள், தேசிய முன்னணிக்கு "இடது" ஜனரஞ்சகவாத மூடிமறைப்பை வழங்கும் ஒரு பிற்போக்குத்தனமான முயற்சியாகும். அந்த கருத்துக்களை அவர் நடப்பு விவகாரங்களைக் பற்றிய Canal+ தொலைக்காட்சி சேனலின் Supplement சிறப்பு நிகழ்ச்சியில் தெரிவித்தார். அவரது சிக்கன கொள்கைகள் மீது அதிகரித்துவரும் கோபத்தைத் திசைதிருப்பும் ஒரு முயற்சியாக அதில் அவர் தோன்றினார்.

சிக்கன நடவடிக்கைகள், வேலைவாய்ப்பின்மை, மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவில் பிரெஞ்சு போர்கள் குறித்த ஒளிப்பட காட்சிகளை நிகழ்ச்சி வழங்குனர் Maïtena Biraben, ஹோலாண்டுக்கு போட்டு காட்டினார். படுமோசமாக நாசமாக்கப்பட்ட வடக்கு பிரான்ஸின் தொழிலாள வர்க்க நகரமான ஜென்னே குறித்து அங்கே 10 நிமிட செய்திப்படம் ஒன்று காட்டப்பட்டது. PCF நகரசபை தலைவரைக் கொண்ட அந்நகரின் 70 சதவீதத்தினர் 2012 ஜனாதிபதி தேர்தல்களில் ஹோலாண்டுக்கு வாக்களித்தனர், ஆனால் இந்த வருடம் மரீன் லு பென்னின் தேசிய முன்னணிக்கு வாக்களித்துள்ளனர். அந்நகரவாசிகள், அவர்களில் பலர் மாதத்திற்கு 200இல் இருந்து 300 யூரோ உதவித்தொகைகளை சார்ந்து உயிர்பிழைத்துள்ள நிலையில், அவர்கள் எப்போதும் ஹோலாண்டின் சோசலிஸ்ட் கட்சி (PS) அல்லது PCFக்கு வாக்களித்து வந்துள்ளதாகவும், ஆனால் இப்போது அவர்கள் தேசிய முன்னணிக்கு வாக்களித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

அந்த செய்திப்படம் முடிந்ததும், Biraben உறுதியாக அறிவித்தார்: [சோசலிஸ்ட் கட்சியின் பொருளாதார மந்திரி] இமானுவெல் மாக்ரோனை விட மரீன் லு பென் மிகவும் இடதில் இருப்பதாக பலர் நினைக்கின்றனர். அது தான் தவறு...

ஹோலாண்டு விடையிறுத்தார்: அதுவொரு தவறல்ல. அதுவொரு வினோதம், ஒரு பிரமை. திருமதி. லு பென்னின் பேச்சுக்கள், 1970களின் கம்யூனிஸ்ட் கட்சி துண்டு பிரசுரம் போன்றுள்ளது. ஏனென்றால் அது தான் யதார்த்தம். அந்த கட்சியைப் போல அவர் பேசுகிறார், அது அப்பிராந்தியத்தில் செல்வாக்கு பெறுகிறது, ஏனென்றால் அப்பிராந்தியம் இன்னமும் கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வாக்கில் உள்ளது.

தேசிய முன்னணியை 1970களின் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியுடன் ஹோலாண்ட் வரலாற்றுக்குப்புறம்பாக ஒப்பிடுவது, பிற்போக்குத்தனமாக உள்ளதைப் போலவே பொய்யானதுமாகும். அது ஒரு பரந்த மற்றும் வஞ்சகமான அரசியல் முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. பிரெஞ்சு அரசின் தலைவராக மற்றும் ஆளும் சோசலிஸ்ட் கட்சியின் தலைவராக அவர், லு பென் மற்றும் அவரது கட்சியை ஊக்குவித்து வருகிறார்.

1970களில் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி ஒரு திவாலாகிப்போன ஸ்ராலினிச கட்சியாக இருந்தது. அது எண்ணற்ற புரட்சிகர சந்தர்ப்பங்களில், அனைத்திற்கும் மேலாக மே-ஜூன் 1968இன் பொது வேலைநிறுத்தத்தில் தொழிலாள வர்க்கத்தைக் காட்டிக்கொடுத்தது. இருந்தபோதினும், சோவியத் அரசாங்கத்துடன் அப்போது தன்னைத்தானே இணைத்துக் கொண்டிருந்த அது, தேர்தல் மூலமாக மற்றும் அப்போது பாரிய தொழிற்சங்கங்களாக இருந்தவைகளைக் கொண்டு இரண்டினூடாகவும் தொழிலாள வர்க்கத்தின் மீது பாரியளவில் செல்வாக்கு கொண்டிருந்தது. தேசியளவில் அடித்தளம் கொண்ட இடது-சீர்திருத்தவாத வேலைத்திட்டத்தை அது முன்னெடுத்தது.

தேசிய முன்னணியோ முற்றிலும் வேறுவிதமான கட்சியாகும், அது தீவிர வலதில் அடித்தளம் இட்டிருந்ததுடன், திடமாக இப்போதும் இருந்து வருகிறது. ஒளிவுமறைவின்றி முதலாளித்துவத்தின் மீது அடித்தளம் கொண்ட இக்கட்சி, சிக்கன நடவடிக்கைகள், போர் மற்றும் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பைப் பாதுகாக்கிறது. அதன் வேர்கள், பெத்தானின் விச்சி ஆட்சி மற்றும் ஆல்ஜீரியாவில் பிரெஞ்சு காலனித்துவ ஆட்சியின் மிக இரக்கமற்ற பாதுகாவலர்களின் பிரெஞ்சு பாசிசவாதத்தில் வேரூன்றியுள்ளது.

தேசிய முன்னணியின் நன்கறியப்பட்ட பாசிசவாத வேர்களை உதறிவிட்டு, ஹோலாண்டின் மோசடியான ஒப்பீடானது, 2008 நெருக்கடிக்குப் பின்னர் பிரெஞ்சு அரசியலின் கூர்மையான வலதுசாரி திருப்பத்திற்கு சான்று பகிர்கிறது. பிரெஞ்சு ஊடகங்கள் மற்றும் அரசியல் ஸ்தாபகத்தால் தேசிய முன்னணி உட்பட நவ-பாசிசவாத சக்திகள் ஊக்கப்பட்டுள்ளதே, இந்த திருப்பத்தின் மத்திய அம்சமாகும். விச்சி ஆட்சியுடனான அதன் உறவுகளைக் குறைத்துக் காட்டுவதன் மூலமாக மற்றும் இனப்படுகொலையை அற்பமானதாக காட்டும் அவரது தந்தையின் தொடர்ச்சியான அறிக்கைகளிலிருந்து தேசிய முன்னணி தலைவர் மரின் லு பென் ஏதோவிதத்தில் தன்னைத்தானே தூர நிறுத்திக் கொண்டும், அவரது கட்சியை "பூதாகரமாக-காட்டிக் கொள்ளாமல் இருக்க" முயற்சிக்கின்ற நிலையில் தான், பிரெஞ்சு ஜனாதிபதி அவரே தேசிய முன்னணியின் "ஜனரஞ்சகவாத" நற்சான்றுகளை ஊக்குவிப்பதில் இணைகிறார்.

தற்போது பிரான்சின் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் மேலெழுந்திருக்கும் எதிர்ப்பின் முன்னால் சிக்கன நடவடிக்கைகளைத் திணிக்க மற்றும் ஏகாதிபத்திய போர்களை நடத்த தற்போது முதலாளித்துவ வர்க்கம் ஹோலாண்டின் சோசலிஸ்ட் கட்சி அரசாங்கத்தின் மீது தங்கியுள்ளது. ஆனால் அவர்கள் முன்னர் சோசலிஸ்ட் கட்சி மற்றும் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆட்சி செய்த, நாசமாக்கப்பட்ட தொழில்துறை பகுதிகளில் நிலவும் சமூக கோபத்தைக் கட்டுப்படுத்த, அங்கே தொழிலாளர்கள் இப்போது அந்த பழைய ஆளும் கட்சிகளை நிராகரிக்கின்ற நிலையில், தேசிய முன்னணி மீதும் தங்கியுள்ளனர்.  இஸ்லாம்-விரோத பிரச்சாரம், புலம்பெயர்ந்தோரை பலிக்கடா ஆக்குவது, மற்றும் பிரெஞ்சு தேசியவாதம் என வெடிப்பார்ந்த சமூக அதிருப்தியை நவ-பாசிசவாதம், பிற்போக்குத்தனமான திசையில் திருப்பிவிடுகிறது. அவ்விதத்தில் அது முதலாளித்துவ வர்க்க ஆட்சியின் ஓர் இன்றியமையா உட்கூறாக எழுந்துள்ளது.

சமீபத்திய உள்ளாட்சி மற்றும் மாநில தேர்தல்களில் பிரெஞ்சு முதலாளித்துவ அரசியலின் மூன்றாவது துருவமாக தேசிய முன்னணி எழுச்சி பெற்றுள்ளது. 1980களில் இருந்து பிரெஞ்சு முதலாளித்துவ அரசியலில் செல்வாக்கு செலுத்தி உள்ள வலதுசாரி UMP (மக்கள் இயக்கத்திற்கான யூனியன்) மற்றும் சோசலிஸ்ட் கட்சிக்கு இடையிலான பழைய ஏகபோகம், PS, UMP மற்றும் FNக்கு இடையே ஒரு மும்முனை துருவமுனைப்பாட்டுக்கு (tripolarization) பாதையைத் திறந்துவிடுமென அங்கே பரந்த எதிர்ப்பார்ப்பு உள்ளது.

இத்தகைய நிலைமைகளின் கீழ், சோசலிஸ்ட் கட்சியின் பிரிவுகளும் மற்றும் அதன் சுற்றுவட்டத்தில் உள்ள பிரிவுகளும் தேசிய முன்னணி மீது பாசம் கொண்டு, வலதுசாரி உடன் நெருக்கமான உறவுகளைப் பரிசீலித்து வருகின்றன. இடது கட்சியை மற்றும் PCF உடனான இடது முன்னணி கூட்டணியை ஸ்தாபித்தவரான ஒரு முன்னாள் சோசலிஸ்ட் கட்சி மந்திரி ஜோன்-லூக் மெலென்சோன், சில காலமாக ஒரு அதி-வலதுசாரி இதழாளர் மற்றும் எழுத்தாளரான எரிக் சிமோருக்கு அரசியல் போர்வை வழங்கி வருகிறார். (பார்க்கவும்: போலி-இடதில் இருந்து புதிய வலதிற்கு: பிரான்சின் ஜோன்-லூக் மெலோன்சோனின் பயணப்பாதை)

தேசிய முன்னணி மீதான ஹோலாண்டின் தந்திரோபாயரீதியாலான விமர்சனங்கள் என்னவாக இருந்தாலும், இந்த உள்ளடக்கத்தில், தேசிய முன்னணியை 1970களின் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி உடன் அவர் ஒப்பிடுவது தீர்க்கமான கேள்விகளை எழுப்புகின்றன. 1968 பொது வேலைநிறுத்தத்திற்குப் பின்னர் வெகு விரைவிலேயே பழைய சமூக-ஜனநாயக கட்சிகள் மற்றும் 1968 மாணவர் இயக்கத்திற்குப் பிந்தைய அடுக்குகள் என இவற்றிலிருந்து ஒன்றுசேர்க்கப்பட்டு புதிதாக உருவாக்கப்பட்ட சோசலிஸ்ட் கட்சியுடன் 1970களின் போது தான் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி ஆண்டுக்கணக்கிலான அரசியல் கூட்டணியை கொண்டிருந்தது. தேசிய முன்னணியையும், 1970களின் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியையும் சமாந்தரப்படுத்தி ஒரு நியாயமான ஒப்பீடை அவர் செய்வதாக ஹோலாண்ட் கருதுகிறார் என்றால், அவர் தேசிய முன்னணி உடன் அரசியல் கூட்டுறவை முயன்று வருகிறாரா?

அவர்களது ஆழமாக மதிப்பிழந்த கொள்கைகள், 2017இல் ஹோலாண்டின் முதல் பதவிகாலம் முடிந்ததும் வரவுள்ள தேர்தல்களில், கட்சியின் எதிர்காலத்தையே சந்தேகத்திற்கு உள்ளாக்கும் வகையில், அவமானகரமாக நிராகரிக்கப்படுமென சோசலிஸ்ட் கட்சிக்குள் கருதப்படுகின்ற நிலையில், சோசலிஸ்ட் கட்சியின் பிரிவுகள் நவ-பாசிசவாதிகளுடன் ஏதேனும் வகையில் கூட்டணி அமைப்பதன் மூலமாக உயிர்பிழைக்கலாமென நம்பி வருகின்றனவா?

தேசிய முன்னணி உடன் அவர்களை ஹோலாண்ட் ஒப்பீடு செய்ததற்கு, அனுமானிக்ககூடிய வகையில் கண்டனம் தெரிவித்த பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியை பொறுத்த வரையில், அவரது கருத்துக்களுக்கு எதிராக அதன் மிதமான எதிர்ப்புகாட்டல்கள் உள்ளடக்கத்தில் மோசடியானதும் மற்றும் பாசாங்குத்தனமானதுமாகும்.

France2 தொலைக்காட்சியில் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் பியர் லோரண்ட் கூறுகையில், நான் அதிர்ச்சி அடைந்து போனேன். இந்த வாசகத்திற்காக ஒரு பொது மன்னிப்பு கோருமாறு நான் ஜனாதிபதியைக் கோரி உள்ளேன், என்றார்.

ஹோலாண்டின் கருத்துக்கள் "வருந்தத்தக்கதாக" குறிப்பிட்ட லோரண்ட், வாக்காளர்களின் மனக்குறைகளுக்கு விடையிறுக்க" ஹோலாண்டால் "இந்த விடயத்தைத் தான் காண முடிந்திருக்கிறது, என்றார். அவர் தொடர்ந்து கூறினார்: 1970களை நான் நினைவுகூர்கிறேன், அப்போது இடது ஒரு வேலைத்திட்டத்தைக் கொண்டிருந்தது, என்றார்.

1970களின் வீராவேசத்திற்கு பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி திரும்பும் என்ற நம்பிக்கைகளை ஊக்குவிப்பதும் முற்றிலும் திவாலானதாகும், மேலும் அது தொழிலாள வர்க்கத்தின் பரந்த அடுக்குகளிடமிருந்து எந்த விடையிறுப்பையும் எழுப்பவில்லை. அது சோசலிஸ்ட் கட்சி மற்றும் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்று நடவடிக்கைகளோடு முரண்படுகிறது. அதிகாரத்திற்கு வருவதற்காக வீராவேச இடது" வாய்ஜம்பங்கள் மற்றும் ஒரு தேசிய சீர்திருத்த வாக்குறுதிகளைப் பயன்படுத்தி, 1981 இல் மித்திரோன் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  மித்திரோன் பதவியேற்று இரண்டு ஆண்டுகளுக்குள், அவர்கள் சிக்கன நடவடிக்கை மற்றும் போர் கொள்கைகளுக்குத் திரும்பினார்கள்.

மித்திரோனின் 1983 சிக்கன கொள்கை திருப்பம்" மற்றும் 1991 இல் சோவியத் ஒன்றியத்தில் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் முதலாளித்துவ மீட்சி ஆகியவை PCF அதிகாரத்துவம் யாருக்காக பேசியதோ அந்த செல்வாக்கு மிகுந்த மத்தியதர வர்க்க அடுக்குகளது தொழிலாள வர்க்கத்தை நோக்கிய வன்முறையான விரோதத்தை வெளிப்படுத்தியது. அவர்கள் முன்னெடுத்த தேசிய வேலைத்திட்டமோ, பகுப்பாய்வின் இறுதியில் எப்போதும் தொழிலாள வர்க்கத்தின் ஒரு சர்வதேச புரட்சிகர எழுச்சிக்கு எதிரான ஒரு பாதுகாப்பு அரணாக சேவை செய்ததுடன், அது பூகோளமயமாக்கலின் முன்னால் இயங்கவியலாத ஒன்றாக அம்பலமானது. அவர்கள் சமூக பிற்போக்குத்தனத்தின் முகாமிற்குள் மாறியதன் மூலமாக எதிர்வினையாற்றினர்.

பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி பிற்போக்குத்தனமான சிக்கன நடவடிக்கை மற்றும் போர் கொள்கைகளை ஏற்றுகொண்டு சோசலிஸ்ட் கட்சியுடன் கூட்டு சேர்ந்திருந்த தசாப்தங்களுக்கு பின்னர், தொழிலாளர்களோ வலதுசாரி கட்சியிலிருந்து இன்றைய பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியை வேறுபடுத்தி பார்ப்பதைப் பெரிதும் சிரமமாக காண்கின்றனர். Biraben கூறியது போல, சோசலிஸ்ட் கட்சி அரசாங்கங்கள் மற்றும் அவர்களது கூட்டாளிளை விட, மரீன் லு பென்னின் ஜனரஞ்சகவாத வீராவேச பேச்சுக்கள் பலருக்கு "இடதாக" தோன்றுகிறது.

இது தரந்தாழ்ந்த அரசியல் சூழலை உருவாக்குகிறது, அதில் ஹோலாண்ட், மொலோன்சோன் மற்றும் அவர்களது கூட்டம், தொழிலாள வர்க்கத்தில் அதிகரித்துவரும் கோபத்தைத் திசைதிருப்பும் முயற்சியில், தேசிய முன்னணியின் திசையில் முன்னீடான அரசியல் பரிசோதனை முயற்சிகளைச் செய்து பார்க்கின்றனர்.