சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தோனேசியா

Australian government hypocrisy over Indonesia’s executions

இந்தோனேஷிய மரணதண்டனை மீதான ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் பாசாங்குத்தனம்

By Peter Symonds
29 April 2015

Use this version to printSend feedback

போதைப்பொருள் கடத்திய குற்றங்களுக்காக ஆஸ்திரேலிய பிரஜைகள் ஆண்ட்ரூ சான் மற்றும் மயூரன் சுகுமாரன் ஆகியோருடன், நான்கு நைஜீரியர்கள், ஒரு பிரேசிலியர் மற்றும் ஒரு இந்தோனேஷியர் உள்ளடங்கிய எட்டு பேருக்கு நேற்று இரவு இந்தோனேஷிய அதிகாரிகள் துப்பாக்கிப்படையைக் கொண்டு மரண தண்டனை நிறைவேற்றினர். இந்த காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கை ஆஸ்திரேலியாவில் பரந்த எதிர்ப்பைத் தூண்டிவிட்டுள்ளது.

அவர்களது உறவினர்களின் கருணை கோரிய முறையீடுகள், இந்தோனேஷிய சட்ட நடைமுறைகள் அத்துடன் நடந்துவந்த நீதிமன்ற வழக்கு விசாரணை பற்றிய கேள்விகள், மரண தண்டனைகளை மாற்றுமாறு ஆஸ்திரேலிய, பிரேசிலிய மற்றும் நைஜீரிய அரசாங்கங்களின் பிரதிநிதிகளிடமிருந்து வந்த கோரிக்கைகளை இந்தோனேஷிய ஜனாதிபதி ஜோகோ விடோடொ நிராகரித்தார். பதவியேற்று வெறும் ஏழு மாதங்களில் அதுவும் ஏற்கனவே அரசியல் நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், விடோடொவின் "சட்டம் ஒழுங்கு" நடவடிக்கையானது ஒரு வலதுசாரி தேசியவாத மற்றும் இஸ்லாமியவாத பிரிவினரிடமிருந்து ஆதரவிற்கான அடித்தளத்தைப் பெறுவதை நோக்கமாக கொண்டது.

எவ்வாறிருந்த போதினும், அந்த மரண தண்டனைக்கு எதிராக இருப்பதைப் போல காட்டிக்கொள்வதற்காக, அந்த மரணதண்டனைகளின் மீது பகிரங்கமான வெறுப்புணர்ச்சியைக் காட்டுவதும் மற்றும் அவர்களது உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவிப்பதும், சான் மற்றும் சுகுமாரனின் வருந்தத்தக்க நிலையை பற்றிப்பிடித்துக்கொண்டு, ஒட்டுமொத்த ஊடகம் மற்றும் அரசியல் ஸ்தாபகத்துடன் சேர்ந்து, ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் வெறுமனே வெறுப்பூட்டுவதாக உள்ளது.

அந்த மரணதண்டனைக்கு சில மணிநேரங்களுக்குள், ஆஸ்திரேலிய பிரதம மந்திரி டோனி அப்போட் உயர்மட்ட அமைச்சரவை மட்டத்திலான தொடர்பை இரத்து செய்துவிட்டு, இந்தோனேஷியாவிற்கான அதன் தூதரை கான்பெர்ரா திரும்ப அழைத்துக் கொள்வதாக அறிவிக்க ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தை கூட்டினார். அந்த மரணதண்டனைகளை "கொடூரமானதாக மற்றும் அவசியமற்றதாக" கண்டித்த அப்போட், தொடர்ந்து கூறுகையில், “நாங்கள் இந்தோனேஷியாவின் இறையாண்மையை மதிக்கிறோம் ஆனால் என்ன செய்யப்பட்டதோ அதை நாங்கள் கண்டிக்கிறோம் என்பதுடன், இதை வழமையான சாதாரண நடவடிக்கையாக ஏற்றுக் கொள்ள முடியாது,” என்றார்.

அபோட்டின் ஊடக மாநாட்டிற்கு முன்னரே, எதிர்கட்சி தலைவரான தொழிற் கட்சியின் தலைவர் பில் சார்டன் மற்றும் அவரது துணை தலைவர் டான்யா லிபெர்செக் கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அது "சாத்தியமானளவிற்கு கடுமையான வார்த்தைகளால்" அந்த மரணதண்டனைகளை கண்டித்ததுடன், ஆஸ்திரேலியாவின் கருணை முறையீடுகள் நிராகரிக்கப்பட்டதால் அது "ஆழமாக காயப்பட்டுள்ளதாக" அறிவித்தது. ஏனைய அரசியல்வாதிகளும் சௌகரியமாக அதையே பின்தொடர்ந்தனர். பசுமை கட்சி தலைவர் கிறிஸ்டைன் மில்னே அறிவிக்கையில், ஆஸ்திரேலியா "மரண தண்டனையை இல்லாதொழிக்குமாறு ஆலோசனை" வழங்க வேண்டுமென அறிவித்தார்.

இந்த பாசாங்குத்தனம் உண்மையிலேயே மூச்சடைக்க வைக்கிறது. முதல் சான்றாக, அபோட் ஒரு மூத்த மந்திரியாக இருந்த அந்த ஹோவார்ட் தாராளவாத அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு ஆதரவாக நின்று, ஆஸ்திரேலிய மத்திய பொலிஸ்தான் (AFP) சானும் சுகுமாரனும் துப்பாக்கிப் படைக்கு முன் நிற்பதை உறுதிப்படுத்துவதற்கு நேரடியாக பொறுப்பாகிறது. "போதைப்பொருள் எடுத்துச் சென்ற" ஏழு பேருடன் சேர்ந்து இந்த இரண்டு பேரும், பாலி ஒன்பது (Bali Nine) என்றழைக்கப்பட்ட இவர்கள், 2005 இல் இந்தோனேஷியாவில் கைது செய்யப்பட்டனர். அது இந்தோனேஷிய அதிகாரிகளுக்கு ஆஸ்திரேலிய மத்திய பொலிஸ் வழங்கிய தகவல்களின் விளைவாகவே நடந்தது. ஒன்பது பேரும் இந்தோனேஷியாவிலிருந்து வெளியேறும் வரையில் காத்திருந்து, ஆஸ்திரேலியாவிற்குள் வந்தததும் அவர்களை கைது செய்திருக்கலாம். அங்கே ஆஸ்திரேலியாவில் மரண தண்டனை கிடைத்திருக்காது, ஆனால் இந்தோனேஷிய அதிகாரிகளுடன் பொலிஸ் மற்றும் இராணுவ உறவுகளைப் பலப்படுத்துவதற்காக அது அவ்வாறு செய்யவில்லை.

இந்தோனேஷிய மரணதண்டனைக்கு கண்டனம் தெரிவித்த அரசியல்வாதிகளில் யாருமே ஆஸ்திரேலிய மத்திய பொலிஸின் (AFP) பாத்திரத்தை விமர்சிக்கவில்லை, இந்தோனேஷியாவின் மற்றும் மரண தண்டனை விதிக்கும் ஏனைய நாடுகளின் பொலிஸ் படைகளுடன் அதன் ஒத்துழைப்புகளை நிறுத்துமாறு அழைப்புவிடுக்கவும் இல்லை. உண்மையில், பாலி ஒன்பது சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவருமே அல்லது சிலர் அனேகமாக துப்பாக்கியால் கொல்லப்படும் சூழலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்ற போதினும், அதன் இந்தோனேஷிய சமதரப்பினருக்கு தகவல் வழங்க அனுமதிக்கும் நெறிமுறைகளை, கடந்த தசாப்தத்தில் தாராளவாத மற்றும் தொழிற் கட்சி அரசாங்கங்களும் வேறுபாடில்லாமல் நடைமுறையில் வைத்திருந்தன.

நேற்றைய இரவின் மரணதண்டனைகள் குறித்து இந்தோனேஷிய அரசாங்கத்தை கண்டித்த அதேவேளையில், ஆஸ்திரேலியாவின் பிரதான கூட்டாளியான அமெரிக்காவில் அதிர்ச்சியூட்டும் வகையில் வழமையாக நடத்தப்படும் அரசு படுகொலைகளைக் குறித்து ஆஸ்திரேலிய அரசாங்கமும் மற்றும் ஊடகங்களும் வழக்கம் போல கண்டு கொள்வதேயில்லை.

ஆஸ்திரலிய ஊடகங்களின் படுமோசமான செய்தி வெளியீடு ஒன்றில்இரத்தக்கறை படிந்த கரங்கள்" என்ற தலைப்பின் கீழ் முதல் பக்கத்தில் விடோடொவின் மாற்றங்கள் செய்யப்பட்ட புகைப்படத்துடன் முர்டோச்சின் இன்றைய பிரிஸ்பைன் Courier Mail இன் ஒரு சிறப்பு பதிப்பு வெளிவந்தது. தற்போதைய அபோட் அரசாங்கமும், அதற்கு முன்னர் இருந்த தாராளவாத மற்றும் தொழிற் கட்சி அரசாங்கங்களைப் போலவே, அதன் கரங்களை இரத்தத்தில் நனைத்துள்ளது.

நூறு ஆயிரக் கணக்கானவர்கள் கொல்லப்பட்ட, மற்றும் மில்லியன் கணக்கான பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அவர்களது இழப்புக்கள் குறித்து பெருந்துயரில் விடப்பட்ட, அமெரிக்க தலைமையிலான குற்றகரமான ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் போர்களின் ஒரு பாகமாக ஆஸ்திரேலிய இராணுவமும் இருந்துள்ளது. அமெரிக்க நடவடிக்கைகளுக்குள் மிக மிக நெருக்கமாக ஒருங்கிணைந்தது எதுவென்றால் ஆஸ்திரேலிய உளவுத்துறை அமைப்பாகும். இது அமெரிக்க மற்றும் சர்வதேச சட்டங்களை அப்பட்டமாக புறக்கணித்து மத்திய கிழக்கு மற்றும் ஆசியாவில் நடத்தப்பட்ட அமெரிக்க டிரோன் தாக்குதல்கள், மத்திய ஆஸ்திரேலியாவின் கூட்டு Pine Gap உளவு தளத்தால் வழங்கப்பட்ட தகவல்களை சார்ந்திருந்தன.

பசுமை கட்சி ஆதரவிலான முந்தைய தொழிற் கட்சி அரசாங்கத்தின் அல்லது தற்போதைய அபோட் அரசாங்கத்தின் எந்தவித ஆட்சேபனையும் இன்றி, அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் விசாரணையின்றி படுகொலை செய்வதற்கான "கொலைப் பட்டியலில்" ஆஸ்திரேலிய பிரஜையான முஸ்தபா பராக் இடம்பெற்றிருந்தார் என்பதை கடந்த மாதம் Australian இதழ் வெளியிட்டது.

இந்தோனேஷிய ஜனாதிபதி விடோடொ அவரது சொந்த அரசியல் இலக்குகளுக்காக மரண தண்டனைகளைச் சுரண்டி வருவதைப் போலவே, அபோட்டும் மற்றும் அவரது மந்திரிகளும் அவர்களது சொந்த அரசியல் நெருக்கடியிலிருந்து வெளிவருவதற்கு சான் மற்றும் சுகுமாரனின் பாதுகாவலர்களாக தம்மைக் காட்டிக் கொள்கின்றனர்.

மத்திய கிழக்கில் அமெரிக்க போரில் அதன் கடமைப்பாடுகளுக்காக, போலித்தனமான "பயங்கரவாதத்திற்கு எதிரான போரின்" கீழ் ஜனநாய உரிமைகள் மீதான அதன் தாக்குதல்களுக்காக, மற்றும் தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலைமைக்குள் ஆழமாக வேரூன்ற செய்யப்பட்டுள்ள அதன் சிக்கன நடவடிக்கைகளுக்காக, அபோட் அரசாங்கம், அதனுடன் அரசியல் ஸ்தாபகத்தின் எஞ்சிய பிரிவுகளோடு சேர்ந்து, பரந்தளவில் தூற்றப்படுகிறது. மே 12 இல் தாக்கல் செய்யப்பட உள்ள இந்த ஆண்டின் மத்திய வரவு-செலவு திட்டத்தில் அத்தியாவசிய சேவைகள் மீது கூடுதல் வெட்டுக்கள் செய்யப்பட உள்ள நிலையில், அந்த அரசாங்கம் இந்தோனேஷிய மரண தண்டனை பிரச்சினை மூலமாக பொதுமக்களிடையே நன்மதிப்பைப் பெற பிரயத்தனம் செய்கிறது.

அதே நேரத்தில், அபோட் அரசாங்கம் இந்தோனேஷியாவுடனான உறவுகள் ஆழமாகவோ அல்லது நிரந்தரமாகவோ பாதிக்கப்படாமல் இருப்பதையும் உறுதிப்படுத்தி வைக்க முயல்கிறது. வரவு-செலவு திட்டத்தில் இந்தோனேஷியாவிற்கு வழங்கப்படும் உதவிகள் அனேகமாக குறைக்கப்படலாம் என்பதை வெளியுறவுத்துறை மந்திரி ஜூலி பிஷாப் சுட்டிக்காட்டி உள்ள போதினும், பொலிஸ் மற்றும் இராணுவ உறவுகளில் எந்தவொரு மாற்றத்தையும் அரசாங்கம் நிராகரித்துள்ளதுடன், வர்த்தகம் மற்றும் முதலீட்டில் எதுவும் சமரசம் செய்து கொள்ள வேண்டாமென பெருநிறுவன மேற்தட்டின் அழுத்தத்தின் கீழ் உள்ளது. இன்று காலை அவரது அறிக்கையில், அபோட் பகிரங்கமாக நிதானமாக இருக்குமாறு கேட்டுக் கொண்டார். “நான் மக்கள் தரப்பில் தான் பேசுவேன், ஆம், கோபப்படுவதற்கு உங்களுக்கு முழுமையாக உரிமை உள்ளது ஆனால் நமது கோபம் மோசமான சூழலை படுமோசமானதாக ஆக்குவதற்கு நாம் அனுமதிக்க கூடாது, இதை நாம் மிக கவனத்துடன் உறுதிப்படுத்த வேண்டும்,” என்றார்.

அபோட் அரசாங்கமும் சரி அல்லது அவரது இந்தோனேஷிய சமதரப்பும் சரி அவர்கள் முறையீடு செய்து வருகின்ற உணர்வுகளைக் கட்டுப்படுத்திவைக்க முடியாது. மிக முக்கியமாக, அமெரிக்க ஊடகங்கள் இந்தோனேஷிய மரண தண்டனைகள் மீது, அதுவும் குறிப்பாக ஆஸ்திரேலியாவின் பிரதிபலிப்பை மிக உன்னிப்பாக கவனம் செலுத்தி வருகின்றன. வாஷிங்டனின் நிலைப்பாட்டிலிருந்து, அதன் ஆக்ரோஷமான "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பின்" மூலோபாய அஸ்திவாரங்களில் ஒன்றாக உள்ள ஆஸ்திரேலியாவிற்கும் மற்றும் அது நெருக்கமான இராணுவ உறவுகளைக் கோரி வருகின்ற இந்தோனேஷியாவிற்கும் இடையே ஒரு பிளவை அதனால் ஏற்றுக் கொள்ள முடியாது. அமெரிக்கா ஒரு பெரும் இராஜாங்க இழுபறியைத் தடுக்க ஐயத்திற்கிடமின்றி திரைக்குப் பின்னால் வேலை செய்து வரும்.