சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan plantation workers must oppose wage struggle betrayal

இலங்கை பெருந்தோட்டத் தொழிலாளர்கள் சம்பளப் போராட்டம் காட்டிக்கொடுக்கப்பட்டதை எதிர்க்க வேண்டும்

By M. Thevarajah—Socialist Equality Party election candidate and group leader for the Nuwara Eliya district
24 July 2015

Use this version to printSend feedback

சோசலிச சமத்துவக் கட்சி (சோ...), 1,000 ரூபா தினக்கூலிக்காக முன்னெடுத்த "மெதுவாக வேலை செய்யும்" போராட்டத்தை தொழிற்சங்கங்கள் காட்டிக்கொடுத்ததை எதிர்க்குமாறு அனைத்து தோட்டத் தொழிலாளர்களுக்கும் அழைப்புவிடுப்பதுடன், இன்ஜஸ்றீ தோட்டத்தின் ஏழு தொழிலாளர்களை உடனடியாக விடுவிக்குமாறும், அவர்களுக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் திரும்ப பெறுமாறும் கோருகிறது. ஜூலை 16 அன்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (.தொ.கா.) அதிகாரத்துவம் "மெதுவாக வேலை செய்யும்" போராட்டத்தை கைவிட அழைப்புவிடுத்த பின்னரே, ஹட்டன், டிக்கோயாவில் உள்ள இன்ஜஸ்றீ தோட்ட தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

தேயிலை தோட்ட முதலாளியும், முன்னாள் அரசாங்கத்தின் அமைச்சரும் நுவரெலியா பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகம் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (.தொ.கா.), சம்பள உயர்வு கோரி நடந்த 10 நாள் போராட்டத்தை நிறுத்தியது, போராட்டத்தில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் ஆர்வமின்றி இருந்ததினால் அல்ல, மாறாக துல்லியமாக அதற்கு எதிரான காரணத்திற்காகவே ஆகும். ஆகஸ்ட் 17 நாடாளுமன்ற தேர்தல்கள் நெருங்கி வருவதால் அந்த நடவடிக்கையைக் கைவிட வேண்டியுள்ளதாக .தொ.கா. எரிச்சலூட்டும் விதத்தில் அறிவித்ததுடன், பொதுத் தேர்தலுக்கு பின்னர் தோட்ட உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்துவதாக அது கூறிக்கொண்டது. இது ஒரு பொய்யாகும்.

.தொ.கா. மற்றும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் (LJEWU), தேசிய தொழிலாளர்கள் சங்கம் (NUW) மற்றும் மலையக மக்கள் முன்னணி (..மு.) போன்ற ஏனைய தோட்ட தொழிற்சங்கங்களும், பல்வேறு விதத்தில் இலங்கையின் முதலாளித்துவ கட்சிகளுடன் அணி சேர்ந்துள்ளன. இந்த தொழிற்சங்கங்கள் அத்தனையும் இந்த தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன. அவை நாடாளுமன்றத்தில் ஆசனங்களை பெற முயல்வது, தமது அங்கத்தவர்களின் நலன்களுக்கு சேவை செய்வதற்காகவோ அல்லது இந்த இலாபகர அமைப்பு முறையை சவால் செய்வதற்காகவோ அல்ல, மாறாக தமது சிறப்புரிமைகள் மற்றும் அமைச்சுப் பதவிகளை வெல்வதற்காகவே ஆகும்.

LJEWU, NUW, ..மு. ஆகியவை, நேரடியாக ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துடன் இணைந்திருப்பதுடன், ஆரம்பத்திலிருந்தே மெதுவாக வேலை செய்யும் நடவடிக்கையை எதிர்த்தன. NUW தலைவர் பி. திகம்பரம், தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சராவார். அதேவேளை LJEWU தலைவர் கே. வேலாயுதம் பெருநதோட்ட இராஜாங்க அமைச்சராவார். இருவருமே மெதுவாக வேலை செய்யும் போராட்டத்துக்கு எதிராக பகிரங்கமாகவே பிரச்சாரம் செய்தனர்.

உண்மையில் .தொ.கா, தமது வறிய மட்டத்திலான ஊதியம் மற்றும் வாழ்க்கை நிலைமைகள் சீரழிந்து வருகின்றமை தொடர்பாக அங்கத்தவர்களிடையே அதிகரித்துவரும் கோபத்தை தணிக்கவே இந்த மட்டுப்படுத்தப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கைகளை தொடங்கியது. தோட்டக் கம்பனிகள் மற்றும் அரசாங்கத்துடனும் ஒரு பெரும் மோதலைத் தடுப்பதே அதன் நோக்கமாகும்.

எவ்வாறெனினும் இன்ஜஸ்றீ தோட்டத் தொழிலாளர்கள் தொழிற்சங்க நடவடிக்கையைத் தொடர்ந்த அதேவேளை, மத்திய மலையக பிரதேசங்களான அக்கரபத்தனை, நோர்வுட், பொகவந்தலாவ மற்றும் கண்டியிலும் தோட்டத் தொழிலாளர்கள் பிரச்சாரம் தொடர வேண்டும் எனக் கோரி போராட்டங்களை நடத்தினர். “தேர்தலை ஒரு சாக்காக பயன்படுத்தாதீர். எங்களுக்கு ஒரு கண்ணியமான சம்பள உயர்வு வேண்டும்,” என்று எழுதிய ஒரு பதாகையை அக்கரபத்தனை தொழிலாளர்கள் ஏந்தியிருந்தனர்.

தோட்ட நிர்வாகி ஒருவரை அச்சுறுத்தினார்கள்" என்ற போலி குற்றச்சாட்டின் கீழ் ஏழு இன்ஜஸ்றீ தோட்டத் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டதே .தொ.கா. காட்டிக்கொடுப்பினது உடனடி விளைவாக இருந்தது. ஜூலை 16 அன்று .தொ.கா.வின் வழிகாட்டுதலை நிராகரித்ததற்காகவே இன்ஜஸ்றீ தோட்டத் தொழிலாளர்கள் மீது வழக்கு ஜோடிக்கப்பட்டன. ஜூலை 20 அன்று தோட்ட நிர்வாகம் பறிக்கும் கொழுந்துகளை வாங்க மறுத்தபோது, தொழிலாளர்கள் போராட்டத்தில் கொழுந்துகளை நிர்வாகியின் பங்களாவிற்கு அருகே கொட்டினர்.

நிர்வாகம் பொலிஸை அழைத்ததை அடுத்து, தோட்டத் தொழிலாளர்கள் எவரும் கைது செய்யப்படாமல் தடுத்தனர். அடுத்த நாள், நிர்வாகம் அந்த ஏழு தொழிலாளர்களையும் நோர்வுட் பொலிஸிடம் சரணடையுமாறு அறிவுறுத்தியத்து. அவர்கள் கைது செய்யப்படமாட்டார்கள் என்றும் அவர்களுக்கு உறுதியளித்தது. அந்த தொழிலாளர்கள் நிர்வாகத்தை அச்சுறுத்தியதற்காக பொலிஸ் நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டு, ஏழு நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். அவர்கள் குற்றவியல் வழக்குகளை எதிர்கொள்ளக் கூடும்.

பெருந்தோட்ட கம்பெனிகள் உற்பத்தியை அதிகரிப்பதில் உறுதியாக உள்ளன. முந்தைய கூட்டு உடன்படிக்கை ஏப்ரலில் முடிவுற்றபோது, பெருந்தோட்ட உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ரொஷான் ராஜதுரை, ஒரு நாள் பறிக்க வேண்டிய கொழுந்தின் அளவு ஊதிய உயர்வின்றி 16-18 கிலோவில் இருந்து 25 கிலோ வரை அதிகரிக்கப்பட வேண்டுமென கோரினார். இது அவசியமாகும், அதன்மூலமாகத்தான் இலங்கை தேயிலை சீனா, இந்தியா, வியட்நாம் மற்றும் கென்யாவிலிருந்து வரும் ஏற்றுமதிகளோடு உலக சந்தையில் போட்டியிட முடியுமென அவர் அறிவித்தார்.

இலங்கை முதலாளிமார் சம்மேளனம் (CEF), ஜூலை 15 அன்று பெருந்தோட்ட தொழிற்சங்கங்களுடன் நடந்த பேச்சுவார்த்தைகளின் போது நாளொன்றுக்கு 1,000 ரூபா சம்பள உயர்வை ஒரேயடியாக நிராகரித்து, உற்பத்தித்திறன் அதிகரிப்புடன் பிணைக்கப்பட்ட 80 ரூபா கொடுப்பனவுடன் இப்போது வழங்கப்படும் 450 ரூபாய் தினக்கூலியுடன் வெறும் 60 ரூபாய் உயர்த்துவதற்கு முன்வந்தது. பெருந்தோட்ட கம்பெனிகள் தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிரான வர்க்கப் போர் தொடுக்க தயாராகி வருகின்றன. சாமிமலையில் கிளினியூஜி தோட்டத்தின் டீசைட் பிரிவில் தொழிலாளர்களுக்கு எதிரான திட்டமிடப்பட்ட பழிவாங்கலைத் தொடர்ந்து, இன்ஜஸ்றீயில் ஏழு தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டதன் அர்த்தம் இதுவே ஆகும்.

அன்றாடம் கொழுந்து பறிக்கும் அளவை 16 முதல் 18 கிலோ வரையில் அதிகரிக்கும் நிர்வாகத்தின் கோரிக்கைகளை எதிர்த்து, டீசைட் பிரிவு தொழிலாளர்கள் பெப்ரவரியில் மூன்று நாட்கள் வேலை நிறுத்தம் செய்தனர். .தொ.கா. அந்த வேலைநிறுத்தத்துக்கு குழி பறித்த போதிலும், கம்பெனி உற்பத்தியை அதிகரிப்பதை கைவிட நிர்பந்திக்கப்பட்டது. ஆனால் நிர்வாகம் ஏழு தொழிலாளர்களுக்கு எதிராக வழக்குகளை புனைந்து, அவர்கள் ஒரு தோட்ட மேற்பார்வையாளரை தாக்கியதாக குற்றஞ்சாட்டியது. மூன்று தொழிலாளர்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்டதுடன், நான்கு பேர் வேலையிலிருந்து ஒரு மாதத்திற்கு இடைநீக்கப்பட்டார்கள். பின்னர் நிர்வாகமும் மற்றும் ஒரு உள்ளூர் .தொ.கா. தலைவரும், டீசைட் பிரிவு தோட்ட மேற்பார்வையாளரை பொலிஸிடம் முறையிடுமாறு ஊக்கப்படுத்தினார். இப்போது அந்த தொழிலாளர்கள் நீதிமன்ற நடவடிக்கையை முகங்கொடுக்கின்றனர்.

சோசலிச சமத்துவக் கட்சி (சோ...) மிக கவனமாக எச்சரித்ததை போலவே, .தொ.கா.வும் ஏனைய தோட்டத் தொழிற்சங்கங்களும் தொழிலாள வர்க்க அமைப்புகள் அல்ல, மாறாக அவை பெருந்தோட்ட கம்பெனிகளின் ஒரு தொழில்துறை பொலிஸ்காரனாக செயல்படுகின்றன. கூட்டுத்தாபன கும்பல்கள் பிரமாண்டமான இலாபம் குவிக்கும் அதே வேளை, தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களும் வறுமையிலேயே இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில், அற்ப சம்பள உயர்வுக்கு கைம்மாறாக வேலைச் சுமையை அதிகரிக்கும் கூட்டு ஒப்பந்தங்களை திட்டமிட்டு திணிப்பதில் இது எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் தொழிற்சங்கங்களுடன் இணைந்து வேலை செய்துவரும் முதலாளிமார்கள், “குறைந்த கூலிகளைப் பெற்று கொண்டு, உங்களது உற்பத்தித்திறனை அதிகரியுங்கள்" என்ற அதே கோரிக்கையைத் தான் முன்வைக்கின்றனர்.

முதலாளித்துவ வர்க்கத்தின் மற்றும் அதன் அரசியல் சேவகர்களின் எப்போதும் அதிகரிக்கும் கோரிக்கைகளை வெறுமனே போர்குணம் மிக்க வேலை நிறுத்த நடவடிக்கைகள் மூலம் மட்டுமே தோற்கடிக்க முடியாது. பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின் கீழ், தோட்ட தொழிலாளர்களுக்கான கண்ணியமான ஊதியம், வீட்டுவசதி, சுகாதார வசதி, கல்வி மற்றும் ஏனைய அடிப்படை வசதிகளும் மறுக்கப்பட்ட நிலைமை, இலங்கை தேசிய முதலாளித்துவ வர்க்கத்தின் கீழும் நீண்டகாலமாக தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. இந்த சுரண்டல் இப்போது தொழிற்சங்கங்களின் செயலூக்கம் கொண்ட ஒத்துழைப்போடு அதிகரிக்கப்பட்டு வருகிறது.

பெருந்தோட்ட தொழிலாளர்களும் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் ஏனைய பிரிவுகளும் தொழிற்சங்கங்களிடமிருந்து உடைத்துக்கொண்டு, தமது ஊதியம், வாழ்க்கை தரங்கள் மற்றும் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க ஒவ்வொரு தோட்டத்திலும் நடவடிக்கை குழுக்களை கட்டியெழுப்ப வேண்டும். இதற்கு தொழிலாள வர்க்கத்தின் பரந்துபட்ட பிரிவுகளை நோக்கி திரும்பி, சோ... அபிவிருத்தி செய்யும் சோசலிச மற்றும் சர்வதேச வேலைத்திட்டத்தின் வழியில் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளது அரசாங்கம் ஒன்றுக்காக போராடுவதும் அவசியமாகும். பிரதான பெருந்தோட்ட கம்பெனிகள் மற்றும் ஏனைய முக்கிய தொழில்துறைகள் மற்றும் வங்கிகளை தொழிலாளர்களது கட்டுப்பாட்டின் கீழ் தேசியமயமாக்குவதும் இதில் உள்ளடங்கும். இந்த போராட்டத்தில் சர்வதேச வர்க்க சகோதரர்களுடன் ஐக்கியப்பட வேண்டும்.

ஆகஸ்ட் 17 பொது தேர்தலில் நுவரெலியா, யாழ்பாணம் மற்றும் கொழும்பில் போட்டியிடும் சோ... மற்றும் அதன் வேட்பாளர்களால் இந்த வேலைத்திட்டமே முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அனைத்திற்கும் மேலாக, இந்த போராட்டத்தை வழிநடத்த தொழிலாளர்களுக்கு ஒரு புரட்சிகர கட்சி அவசியமாகும். நாங்கள் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடம் எமது போராட்டத்திற்கு ஒத்துழைக்குமாறும், சோ...வில் இணையுமாறும் கேட்டுக் கொள்கிறோம்.