சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The international significance of the Sri Lankan general election

இலங்கை பொதுத் தேர்தலின் சர்வதேச முக்கியத்துவம்

Peter Symonds
28 July 2015

Use this version to printSend feedback

ஆகஸ்ட் 17 அன்று நடைபெறவிருக்கும் இலங்கை பாராளுமன்ற தேர்தல் மிகக் கவனமாக புரிந்துகொள்ளவேண்டிய ஒன்றாகும். கிரீஸ் நிகழ்வுகளும் சிரிசா காட்டிக்கொடுப்பும் பரந்த ஊடக கவனத்தை பெற்றிருக்கும் விடயமாகியிருக்கும் வேளையில், இலங்கையிலான அரசியல் நெருக்கடியானது, கடுமையான புவி-அரசியல் மோதல்களுக்கும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான சமூக எதிர்ப்புரட்சிக்கும் எரியூட்டிக் கொண்டிருக்கும் உலக முதலாளித்துவத்தின் நிலைமுறிவின் இன்னொரு கூர்மையான வெளிப்பாடாக அமைந்திருக்கிறது.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பிரிவான இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி ஒரு பெரும் இலட்சியத்துடனான பிரச்சாரத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. தலைநகர் கொழும்பு, போரினால் சீரழிந்த தீவின் வடக்குப் பகுதியை சேர்ந்த யாழ்ப்பாணம், நாட்டின் பரந்து விரிந்த தேயிலைத் தோட்டங்களது மையமாக அமைந்திருக்கும் நுவரேலியா ஆகிய மூன்று முக்கியமான தேர்தல் மாவட்டங்களில் 43 வேட்பாளர்களை அது நிறுத்தியுள்ளது. சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே போர், சிக்கன நடவடிக்கைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் ஆகியவற்றுக்கு எதிரான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துகின்ற சோசலிச சர்வதேசியவாத முன்னோக்கிற்காக போராடுகின்ற ஒரேயொரு கட்சியாக இருக்கின்றது.

இலங்கை அதிமுக்கியமான கடல் பாதைகளுக்கு நெருக்கமாக அமைந்திருப்பதால், அமெரிக்காவின் "ஆசியாவை நோக்கிய திருப்பத்திற்கும்", சீனாவுக்கு எதிரான அதன் போர்த் தயாரிப்புகளுக்குமான கவனக்குவிப்பு மையமாக இருக்கிறது. ஜனவரி 8 அன்று நடந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த இராஜபக்ஷ ஜனாதிபதி பதவியில் இருந்து அகற்றப்பட்டதில் திரைமறைவில் நடந்த விடயங்களில் இந்தியாவுடன் சேர்ந்து அமெரிக்காவும் ஆழமான பங்கை கொண்டிருக்கிறது. அமெரிக்கா மற்றும் இந்தியாவை பொறுத்தவரை, இராஜபக்ஷவின் "குற்றம்" அவரது எதேச்சாதிகார ஆட்சி வழிமுறைகளிலோ அல்லது பிரிவினைவாத விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு எதிரான இனவாதப் போரின் இறுதிக் கட்டங்களில் நடத்தப்பட்ட அட்டூழியங்களுக்கு அவரது அரசாங்கமே பொறுப்பாக இருந்தது என்பதிலிருந்தோ எழவில்லை, மாறாக சீனாவுடன் அவர் கொண்டிருந்த நெருக்கமான உறவுகளே அவரது "குற்றமாக" இருந்தது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க மற்றும் அமெரிக்க ஆதரவு ஐக்கிய தேசியக் கட்சி ஆகியோருடன் கூடி அமெரிக்காவினால் வடிவமைக்கப்பட்ட ஆட்சி-மாற்ற நடவடிக்கையின் விளைவாக மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக அமர்த்தப்பட்டார். இராஜபக்க்ஷ அமைச்சரவையில் சுகாதார அமைச்சராக இருந்து அரசாங்கத்தின் குற்றங்கள் அனைத்திலும் அதேஅளவுக்கு பொறுப்பாளியாக ஆகக் கூடிய சிறிசேனவை ஜனநாயகத்தின் காவலராக ஒப்பனை செய்வதில் பல்வேறு நடுத்தர வர்க்க தாராளவாதக் குழுக்களும் மற்றும் போலி-இடது அமைப்புகளும் அதிமுக்கியமான பாத்திரம் வகித்தன. சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே இந்த மோசடியை அம்பலப்படுத்தியதோடு பெருவணிகத்தின் நிகழ்ச்சிநிரலை திணிப்பதில் இராஜபக்க்ஷ அளவுக்கு சிறிசேனவும் இரக்கமற்று செயல்படுவார் என தொழிலாள வர்க்கத்தை எச்சரித்தது.

ஜனவரி முதலாகவே, இலங்கையானது சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் "ஆசியாவை நோக்கிய திருப்பத்தில்" மிகத் துரிதமாக இழுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. தேர்தலை தொடர்ந்து, அமெரிக்க நிர்வாகம் மற்றும் இராணுவத்தை சேர்ந்த உயர்மட்டப் புள்ளிகள் கொழும்பிற்கு படையெடுத்தனர், அதன் உச்சமாக அமெரிக்க வெளியுறவுச் செயலரான ஜோன் கெர்ரி மே மாதத்தில் விஜயம் செய்தார். "வருடாந் கூட்டுழைப்பு பேச்சுவார்த்தை"க்கு அழைப்புவிடுத்த அவர், "நவீன மற்றும் செயலூக்கமான இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் அச்சாணியாக சேவை செய்ய" வழிவகை கொண்டிருக்கக் கூடிய வகையில் "இந்தியா மற்றும் மியான்மாரில் உள்ள ஆழ்-நீர் துறைமுகங்களுக்கு அருகிலான மூலோபாய முக்கியத்துவம் கொண்டிருக்கும் இடத்தில்" அமைந்திருக்கும் இலங்கையின் முக்கியத்துவத்தையும் அடையாளம் காட்டினார். ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கின் எரிபொருள் மற்றும் கச்சாப் பொருட்கள் விநியோகத்திற்காக இந்திய பெருங்கடல் வழியான சீனாவின் போக்குவரத்து தடங்களை முடக்கும் திறன் கொண்டிருப்பது சீனாவுக்கு எதிரான பென்டகனின் போர்த் திட்டமிடலில் ஒரு அதிமுக்கியமான அம்சமாக திகழ்கிறது.

100 நாட்களுக்குள் சூறாவளி போல், வாழ்க்கைத்தரங்கள் மேம்படுத்தல் மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கு உத்தரவாதமளிக்கப்படும் என உத்தரவாதமளித்த பின்னர் ஒரு பாராளுமன்ற தேர்தலுக்கு அழைப்பு விடுப்பார் என்பதாக வாக்குறுதி அளித்துத்தான் சிறிசேன அதிகாரத்திற்கு வந்தார். ஆனால், மோசமடைந்து கொண்டிருந்த சர்வதேசப் பொருளாதார முறிவு மற்றும் கிரீஸில் போல, உலக நிதி மூலதனத்திடம் இருந்தான அரக்கத்தனமான சிக்கன நடவடிக்கை கோரிக்கைகள் இவற்றுக்கு மத்தியில் இந்த திட்டங்கள் வெகுவிரைவாக உருத்திரிந்துபோயின. பெருகிச் செல்லும் கடன் சுமை அழுத்த, இலங்கை பொருளாதாரமானது செலுத்துமதி நிலுவை நெருக்கடியில் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. மார்ச் மாதத்தில் 4 பில்லியன் டாலர் கடன் உதவி கோரிய இலங்கையின் கோரிக்கையை சர்வதேச நாணய நிதியம் ஒட்டுமொத்தமாக நிராகரித்து, இன்னும் அதிகமான வரவு-செலவுத் திட் வெட்டுகளையும், அதன் விளைவாக, அரசாங்கத்தின் மிக மட்டுப்படுத்தப்பட்ட கையிருப்புக்களையும் குறைக்குமாறு கோரியது.

உதாரணமாக, மாணவர்களுக்கான கடனுதவி அதிகரிப்புகளை தாமதப்படுத்துவது, பொதுத்துறை தொழிலாளர்களுக்கு வாக்குறுதியளித்த ஊதிய அதிகரிப்பில் பகுதியை மட்டுமே வழங்குவது என சிறிசேன ஏற்கனவே தனது "100 நாள்" வாக்குறுதிகளில் பலவற்றையும் மீறி விட்டார். அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் 20 சதவீதம் வரை ஏறி விட்டிருக்கும் நிலையிலும் தனியார்துறை தொழிலாளர்களுக்கு எந்த ஊதிய அதிகரிப்பும் கிடைக்கவில்லை.

சோசலிச சமத்துவக் கட்சி முன்னரே எச்சரித்திருந்ததைப் போல, தொழிலாள வர்க்கத்தில் பெருகும் எதிர்ப்பை அடக்குவதற்கு பாதுகாப்பு படைகளை திரட்டுவதற்கு "ஜனநாயகவாதி"யான சிறிசேன சிறிதும் தயங்கம் காட்டவில்லை. அரசாங்கம், சுகாதாரத்துறை தொழிலாளர்களுக்கு எதிரான வேலைநிறுத்தத்தை உடைக்க இராணுவத்தை நிறுத்தியது, ஆர்ப்பாட்டம் செய்யும் மாணவர்களுக்கு எதிராக போலிசை பிரயோகித்தது, அத்துடன் தோட்டத்துறை வேலைநிறுத்த தலைவர்கள் பழிவாங்கப்படுவதை ஆதரித்தது.

கொழும்பில் கூர்மையான அரசியல் நெருக்கடி மற்றும் ஆளும் உயரடுக்கிற்குள் ஆழமான விரிசல்கள் ஆகிய நிலைமைகளின் கீழ் இப்போதைய தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஜனவரி ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட இரண்டு பேருமே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) அங்கத்தவர்களே, அதிலும் சிறிசேன, நாட்டின் ஜனாதிபதியாக இருப்பதால், பெயரளவில் அவரே கட்சித் தலைவராகவும் ஆகிறார். ஆயினும், அரசாங்கத்தை நோக்கிய பொதுமக்களின் விரோதம் அதிகரித்திருப்பதானது இராஜபக்ஷ மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தை கையிலெடுப்பதற்கும் வெளியேற்றப்பட்ட ஜனாதிபதியை அடுத்த பிரதமராக முன்நிறுத்துவதற்கும் துணிச்சலூட்டியிருக்கிறது. அவ்வாறு செய்வதன் பாகமாக இராஜபக்ஷ, தமிழ்-விரோத பேரினவாதம் மற்றும் விடுதலைப் புலிகள் மீண்டெழுவது குறித்தான அச்சங்கள் ஆகியவற்றை தூண்டிவிடும் கொழும்பு அரசியல்வாதிகளின் வழக்கமான அம்சத்தைக் கையிலெடுக்கிறார்.

இராஜபக்ஷ அதிகாரத்திற்குத் திரும்ப இருக்கின்ற சாத்தியமானது அமெரிக்கா மற்றும் இந்தியாவில் ஏற்கனவே எச்சரிக்கை மணியை ஒலிக்கச் செய்திருக்கிறது. இலங்கை மீண்டும் சீனாவுடன் நெருக்கமான உறவுகளைத் தொடருவதை அவ்விரு நாடுகளும் சகித்துக் கொள்ள போவதில்லை. தேர்தலில் இராஜபக்ஷ போட்டியிடுவார் என்ற அறிவிப்பானது இலங்கையின் தாராளவாத மற்றும் போலி-இடது அமைப்புகளிடம் இருந்து கடும் விமர்சனத்தின் மூலம் எதிர்கொள்ளப்பட்டது. ஜனவரியில் "பாசிச இராஜபக்ஷ சர்வாதிகாரம்" என்று கண்டித்தவர்கள் இப்போது இராஜபக்ஷ அதிகாரத்துக்கு திரும்புவதை தடுக்க, சிறிசேன ஜனாதிபதிக்கான தனது எதேச்சாதிகார அதிகாரங்களை பயன்படுத்தக் கோருவதற்கு கொஞ்சமும் தயக்கம் காட்டவில்லை.

ஆகஸ்ட் 17 தேர்தலில் SLFP மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் வெற்றிபெற்றாலும் கூட, தான் இராஜபக்ஷவை பிரதமராக நியமிக்கப் போவதில்லை என்பதை சிறிசேன ஏற்கனவே அறிவித்திருக்கிறார். இத்தகைய ஒரு அப்பட்டமான அரசியல்சட்ட-விரோத நடவடிக்கையானது இராணுவத்தின் ஆதரவுடனான ஒரு எதேச்சாதிகார ஆட்சி ஸ்தாபிக்கப்படுவதன் ஊடாக மட்டுமே நிலைநிறுத்தப்பட முடியும்.

கிரீஸில் அதிகாரத்தில் இருக்கும் போலி-இடது சிரிசா அரசாங்கம் தொழிலாள வர்க்கத்தின் மீது மிகப் பிரம்மாண்டமான காட்டிக் கொடுப்பை நடத்தியது. இலங்கையில், போலி-இடது அமைப்புகளான நவ சம சமாஜக் கட்சி (NSSP), ஐக்கிய சோசலிச கட்சி (UNP), மற்றும் முன்னிலை சோசலிச கட்சி (FSP) ஆகியவை - சிறிசேன மற்றும் வலது-சாரி, அமெரிக்க ஆதரவு UNP ஆகியவற்றின் ஊக்குவிப்பாளர்களாக இருந்து வருகின்றன. அவை ஆளும் வட்டாரங்களுக்குள் ஒருங்கிணைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பது, கொள்கை முலாக்கத்தை மேற்பார்வை செய்யும் உயர்மட்ட அரசாங்க ஆலோசனை அமைப்பான 13 உறுப்பினர் கொண்ட தேசிய நிறைவேற்றுக் குழுவிற்கு (National Executive Council - NEC) நவ சம சமாஜக் கட்சி தலைவரான விக்ரமபாகு கருணாரத்ன நியமனம் பெற்றதன் மூலம் எடுத்துக்காட்டப்படுகின்றது. ஆட்சியின் தலைமை வக்காலத்துவாதியாக செயல்படுவதுதான் அந்த அமைப்பில் இவரது வேலையாகும்.

வெளியுறவுக் கொள்கை நோக்குநிலையில் கூர்மையான வேறுபாடுகள் இருந்தபோதும், எந்தக் கட்சிகள் அடுத்த அரசாங்கத்தை அமைத்தாலும், அவை சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கை கோரிக்கைகளை திணிக்க முன்னேறுகின்ற நேரத்தில் விரைவாக தமது தேர்தல் வாக்குறுதிகளை கைவிட்டுவிடும். தொழிலாள வர்க்கத்தின் தேவைகளுக்கும் அபிலாசைகளுக்கும், ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகத்தின் தேவைகளுக்கும் அபிலாசைகளுக்கும் இடையில் அமைந்திருக்கும் பெரும் இடைவெளியானது, பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலமைந்த தீவிரமான சமூகப் பிளவு மற்றும் கூர்மையடைந்து செல்லும் வர்க்கக் குரோதங்களின் சமரசப்படுத்தவியலாத தன்மை ஆகியவற்றின் ஒரு வெளிப்பாடாக அமைந்திருக்கிறது.

ஆளும் வர்க்கத்தின் சிறிசேன முகாம் மற்றும் இராஜபக்ஷ முகாம் இரண்டையும் எதிர்த்து நின்று போர், சிக்கன நடவடிக்கை மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கு எதிரான தாக்குதல் ஆகியவற்றுக்கு எதிராக ஒரு புரட்சிகர சோசலிச வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதில் சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே தனித்து நிற்கிறது. புவி-அரசியல் போட்டி மற்றும் மோதலின் ஒரு சூறாவளிச் சுழலுக்குள் இலங்கை தப்பிக்கவியலா வகையில் இழுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. போரின் மூல காரணமான முதலாளித்துவத்தை ஒழித்துக் கட்டுவதற்கு தீவின் தொழிலாளர்களை இந்திய துணைக்கண்டம் மற்றும் உலகெங்கிலும் உள்ள அவர்களது வர்க்க சகோதர சகோதரிகளுடன் ஐக்கியப்படுத்துவதை நோக்கமாய் கொண்ட ஒரு சர்வதேசியவாத முன்னோக்கின் அடிப்படையில் மட்டுமே இந்த நிகழ்வுப்போக்கை எதிர்த்து நிற்க முடியும்.

சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே இனவேறுபாடுகளை கடந்து தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தும் திறன் கொண்ட ஒரேயொரு கட்சியாகும். தேசியவாதத்தின் மற்றும் வகுப்புவாதத்தின் அத்தனை வடிவங்களுக்கு எதிராகவும் அது சமரசமற்றதொரு அரசியல் போராட்டத்தை நடத்தி வந்திருக்கிறது என்பதோடு கொழும்பில் பதவியிலிருந்த அடுத்தடுத்த அரசாங்கங்கள் தமிழ் சிறுபான்மையினரின் ஜனநாயக உரிமைகளுக்கு எதிராக நடத்திய நெடியதொரு போருக்கு எதிராகவும் அது வளைந்துகொடுக்காத மற்றும் கோட்பாடுமிக்கதொரு எதிர்ப்பை எதிர்நிறுத்தி வந்துள்ளது. தெற்காசியா மற்றும் சர்வதேச அளவில் சோசலிசத்துக்கான போராட்டத்தின் பாகமாக ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசுக்காக சோசலிச சமத்துவக் கட்சி போராடுகிறது. உலகெங்குமான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களது ஆதரவு அதற்கு தேவையாகும்.