சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Unidentified gunmen fire on Sri Lankan election rally

அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகள் இலங்கை தேர்தல் பேரணியில் துப்பாக்கியால் சுட்டர்

By Peter Symonds
1 August 2015

Use this version to printSend feedback

இலங்கை தலைநகர் கொழும்பில் தேர்தல் பிரச்சாரகர்கள் மீது துப்பாக்கிதாரிகள் நேற்று சுட்டதில் ஒருவர் கொல்லப்பட்டார், ஆகக்குறைந்தது 12 பேர் காயமுற்றனர். இந்த வன்முறை தாக்குதல், ஆளும் ஐக்கிய தேசிய கட்சி (.தே..) மற்றும் எதிர்கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி (ஸ்ரீ..சு..) ஆகிய இரண்டு பிரதான ஸ்தாபக கட்சிகளுக்கு இடையிலான விரோதத்தால், ஆகஸ்ட் 17ஆம் தேதி பொதுதேர்தல் பிரச்சாரத்தில் உருவாக்கப்பட்டு வருகின்ற பதட்டங்களின் மற்றொரு அறிகுறியாகும்.

நிதி அமைச்சர் ரவி கருணநாயக்க தலைமையில் சுமார் 500 ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் கொட்டஹேன பகுதியின் புளோமென்டல் சாலையொட்டி பிரச்சாரம் செய்து கொண்டிருந்தபோது முகமூடியணிந்த துப்பாக்கிதாரிகள் தானியங்கி ஆயுதங்களைக் கொண்டு கூட்டத்தை நோக்கி சுட்டனர். அத்தாக்குதலில் ஒரு பெண் கொல்லப்பட்டார், 12 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இரண்டு பேர் மிகவும் மோசமான நிலைமையில் உள்ளனர். கருணநாயக்க காயமடையவில்லை.

தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான மையம் (சி.எம்..வி.) குறிப்பிடுகையில், அந்த துப்பாக்கிசூடு காலை 11.30க்கு நடந்ததாகவும், 10 நிமிடங்கள் நீடித்ததாகவும் குறிப்பிட்டது. பொலிஸ் அவ்விடத்திலிருந்து குண்டுகள் நிரம்பிய 16 பெட்டிகளை கைப்பற்றியது. அந்த துப்பாக்கிதாரிகள் அவ்விடத்திலிருந்து இரண்டு வாகனங்களில் தப்பிவிட்டனர். யாரும் கைது செய்யப்படவில்லை.

கருணநாயக்க உடனடியாக அவரே அதன் இலக்காக இருந்ததாக அறிவித்ததுடன், அந்த தாக்குதலை "பொலிஸ் பயங்கரவாதம்" என்றும் முத்திரை குத்தினார். “இந்த நடவடிக்கை முற்றிலும் ஒரு திவாலான எதிர்கட்சியால் தூண்டிவிடப்பட்ட ஜனநாயக மீறலாகும்,” என்று கூறி, அவர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் ஆதரவாளர்களைக் குற்றஞ்சாட்டினார்.

ஸ்ரீ..சு.. இன் அதிருப்தி உறுப்பினர்களுடனும் .தே.. உடனும் சேர்ந்து, வாஷிங்டனால் ஆதரிக்கப்பட்ட ஓர் ஆட்சிமாற்ற நடவடிக்கையின் விளைவாக இராஜபக்ஷ ஜனவரி 8 ஜனாதிபதி தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார். இராஜபக்ஷ இன் சுகாதாரத்துறை அமைச்சர் பதவியிலிருந்து இராஜினாமா செய்த மைத்திரிபால சிறிசேன, அந்த தேர்தலை வென்றதோடு, ஒரு சிறுபான்மை .தே.. தலைமையிலான அரசாங்கத்தை நிறுவினார்.

அமெரிக்கா இராஜபக்ஷவுக்கு எதிராக உள்ளது, இது அவரது எதேச்சதிகார ஆட்சி முறைகளுக்காகவோ அல்லது பிரிவினைவாத தமிழீழ விடுதலை புலிகளை (எல்.டி.டி.) தோற்கடிப்பதில் அந்த அரசாங்கத்தின் போர் குற்றங்களுக்காகவோ அல்ல, மாறாக பெய்ஜிங் உடன் அவரது நெருக்கமான உறவுகளுக்காக ஆகும். அவரது வெளியேற்றம், அப்பிராந்தியம் முழுவதிலும் சீனாவின் இடத்தைப் பலவீனப்படுத்துவதை நோக்கமாக கொண்ட பரந்த "அமெரிக்காவின் ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பு" கொள்கையின் பாகமாக இருந்தது.

தற்போதைய பாராளுமன்ற தேர்தலில், ஸ்ரீ..சு.கட்சியை வெற்றி பெறச்செய்து பிரதம மந்திரியாக ஆவதன் மூலமாக இராஜபக்ஷ மறுபிரவேசம் செய்ய விரும்புகிறார். ஆனால் ஸ்ரீ..சு. கட்சியோ இராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி சிறிசேனக்கு இடையே பிளவுபட்டுள்ளது. சிறிசேன ஐக்கிய தேசிய கட்சிக்கான அவரது ஆதரவை சிறிதும் இரகசியமாக வைத்திருக்கவில்லை.

இப்போதைய நிலையில் அந்த தாக்குதலுக்கு யார் பொறுப்பாளி என்பது தெளிவாக இல்லை. இராஜபக்ஷ முகாமில் உள்ள கூறுபாடுகளே அவர்களது எதிராளிகளை மிரட்டுவதற்காக நேற்றைய பேரணியை இலக்கில் வைத்திருக்கலாம் அல்லது ஒரு பழிவாங்கும் நடவடிக்கையாகவும் இருக்கலாம். அதேநேரத்தில், அந்த துப்பாக்கிச்சூட்டால் இராஜபக்ஷ ஆதாயமடைவார் என்பதும் வெளிப்படையாக இல்லை.

கொழும்பு சிந்தனை குழாமான சமூக ஜனநாயகத்திற்கான மையத்தின் இயக்குனர் குசால் பெரேரா, வாய்ஸ் ஆஃப் அமெரிக்காவிற்கு கூறுகையில், “அதை இராஜபக்ஷ உடன் யாரேனும் தொடர்புபடுத்தினால், அதிலிருந்து இராஜபக்ஷக்கு என்ன ஆதாயம் கிடைக்கும் என்று தான் அவரிடம் நீங்கள் கேட்க வேண்டியிருக்கும். ஆனால் இதுபோன்ற வன்முறை நாடெங்கிலும் பரவினால், பின்னர் அதை நாம் இராஜபக்ஷ இன் சில கூறுபாடுகளோடு இணைக்க முடியும்,” என்றார்.

இராஜபக்ஷவின் செய்தித்தொடர்பாளர் ரோஹன் வெலிவிட்டா அதில் அவர்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லையென மறுத்தார். “இந்நாட்டை சுதந்திரமடைய செய்த தலைவரைக் குற்றஞ்சாட்டுவது நகைச்சுவையாக உள்ளது. ஒரு பொறுப்பான அமைச்சர் முறையான பொலிஸ் விசாரணைகள் கூட இல்லாமல் ஜனாதிபதி இராஜபக்ஷவைக் குற்றஞ்சாட்டுவது வெட்கக்கேடானது,” என்றார்.

நாங்கள் முற்றிலுமாக இந்த குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கிறோம். திரு இராஜபக்ஷ இன்று தென் மாகாணங்களில் பிரச்சாரம் செய்து வருகிறார். அவருக்கும் இந்த வன்முறைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை,” என்றார்.

ஸ்ரீ..சு.. தலைமையிலான ஐக்கிய மக்கள் முன்னணி கூட்டணி (...கூ.) இன் ஒரு முன்னாள் பாராளுமன்றவாதியான டிலான் பெரேரா குறிப்பிடுகையில், அந்த துப்பாக்கிச்சூடு, விருப்ப வாக்குகளோடு மோதல் கொண்ட .தே.. உடன் சம்பந்தப்பட்ட நிழலுலக நபர்களால் நடத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

இத்தகைய குற்றச்சாட்டுக்களில் எதையுமே முகமதிப்பாக கொள்ள முடியாது. ஆனால் .தே.. உடன் தொடர்புபட்ட கூறுபாடுகள் அவற்றின் சொந்த நோக்கங்களுக்காக துப்பாக்கிச்சூடு நடத்தி இருக்கலாம் என்பதையும் விட்டுவிட முடியாது. இத்தகைய ஸ்தாபக கட்சிகள் இரண்டுமே குற்றகர கும்பல்களோடு நெருக்கமாக தொடர்பு வைத்துள்ளன, அவை அவர்களது போட்டியாளர்களுக்கு எதிராக கடந்த காலத்தில் குண்டர்களைப் பயன்படுத்தி உள்ளன.

ஒவ்வொரு இலங்கை தேர்தலும் வன்முறை மற்றும் ஊழலால் சிதைந்து போயுள்ளது. சி.எம்..வி. இன் சமீபத்திய அறிக்கை நேற்று வரையில், 61 மிகப்பெரிய சம்பவங்கள் மற்றும் 261 சிறிய சம்பவங்கள் என்று வகைப்படுத்தப்பட்டவை உட்பட, 322 சம்பவங்களைப் பட்டியலிட்டது.

மிகப்பெரிய சம்பவங்களில், அரசு ஆதாரவளங்களின் துஷ்பிரயோகம் 30 மற்றும் தாக்குதல்களாக பட்டியலிடப்பட்ட 16 ஆகியவை உள்ளடங்கும். அச்சுறுத்தல்கள் மற்றும் பீதியூட்டல்கள், தீயிட்டு கொளுத்துதல் மற்றும் சொத்துக்களை சேதப்படுத்தல் ஆகியவை ஏனைய சம்பவங்களில் உள்ளடங்குகின்றன. சுடும் ஆயுதங்கள் சம்பந்தப்பட்டவை ஐந்து. குற்றச்சாட்டுக்களின் அதிகபட்ச எண்ணிக்கை ..மு.கூ.க்கு எதிராக இருந்தது — 22 — அதேவேளையில் .தே..க்கு எதிராக 13 இருந்தன.

அமெரிக்க மற்றும் சர்வதேச ஊடகங்களின் கவனத்தை அது ஈர்த்திருந்தது என்பதுதான் நேற்றைய சம்பவத்தின் ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாக இருந்தது. நியூ யோர்க் டைம்ஸ், வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல், வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா மற்றும் ஏனைய செய்தி நிறுவனங்களும் அந்த துப்பாக்கிச்சூடு குறித்து செய்திகள் வெளியிட்டன.

நடைமுறையளவிற்கு முந்தைய தேர்தல்களின் வன்முறை மற்றும் ஊழல் குறித்தோ, அல்லது இலங்கை அரசியலின் ஏனைய எந்த அம்சத்தைக் குறித்தோ எந்த செய்தியும் இல்லாதிருந்ததை பார்க்கும்போது, இந்தமுறை கவனம் அளிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். இராஜபக்ஷ பதவிக்கு வர மறுபடியும் முயற்சி செய்வதன் மீது வாஷிங்டனில் நிலவும் ஆழ்ந்த கவலையையே இப்போதைய ஊடக கவனம் அடிக்கோடிடுகிறதுஇதற்கு பதில் நடவடிக்கையாக அதை தடுப்பதற்கு அமெரிக்கா அதனால் ஆனமட்டும் அனைத்தையும் செய்யும்.