சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

Hundreds dead as refugee boat sinks in Mediterranean

மத்தியதரைக் கடலில் அகதிகள் படகு மூழ்கியதில் நூற்றுக் கணக்கானவர்கள் உயிரிழந்தனர்

By Martin Kreickenbaum
7 August 2015

Use this version to printSend feedback

புதனன்று லிபிய கடற்கரையிலிருந்து 15 கடல் மைல் தூரத்தில் கவிழ்ந்த ஒரு மீன்பிடி படகில் சுமார் 700 அகதிகள் இருந்தனர். 200க்கும் மேற்பட்டவர்கள் மூழ்கியிருப்பார்களென அஞ்சப்படுகிறது. இத்தாலிய கடல் ரோந்துப்படை தகவல்படி, சுமார் 400 பேர் மீட்கப்பட்டனர், அதேவேளையில் இதுவரையில் 26 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. அனேகமாக அந்நேரத்தில் அடித்தளத்திலிருந்த ஒரு நூறு அகதிகள் அக்கப்பலுக்கடியில் சிக்கியிருக்கக்கூடும்.

அளவுக்குமீறி ஆட்களையேற்றிய அந்த சிறிய மீன்பிடிப் படகு கொந்தளிப்பான கடலில் சிக்கி, அவசர அழைப்பை அனுப்பியது. அதைத்தொடர்ந்து ஐரிஷ் ரோந்துப்படை கப்பல் LE அப்படகை அணுகிய போது, பல அகதிகள் கண்முன்னாலேயே படகின் ஒருபக்கத்திற்கு விரைந்தனர், இது படகு கவிழ்வதற்கு காரணமானது.

அது பார்ப்பதற்கே பயங்கரமாக இருந்தது,” என்று அகதிகளின் உதவிக்கு வந்திருந்த Dignity I கப்பலின் எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பின் (Doctors without Borders) ஒருங்கிணைப்பாளர் ஜூவான் மத்தியாஸ் கூறினார். “மூழ்கிக் கொண்டிருந்தவர்களுக்கும், ஏற்கனவே இறந்து போனவர்களுக்கும் இடையே தங்களின் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள போராடி கொண்டிருந்தவர்கள், உயிர்காப்பு வளையங்களையும், படகின் பாகங்களை அல்லது எது கிடைத்ததோ அவற்றை இறுக்கமாக பிடித்துக் கொள்ள கடுமையாக போராடி கொண்டிருந்தார்கள்,” என்றார்.

சிக்கலில் சிக்கியிருந்த மற்றொரு மீன்பிடி படகிலிருந்த 100 அகதிகளை காப்பாற்றிக் கொண்டிருந்த போது தான், ரோந்துபடையிடமிருந்து Dignity Iக்கு அழைப்பு வந்தது. மத்தியாஸ் கூறுகையில், “முதலில் நாங்கள் இந்த படகின் உதவிக்குத் தான் அழைக்கப்பட்டோம், அதற்கு பின்னர் உடனடியாக மற்றொரு இடத்திற்கு அனுப்பப்பட்டோம், இது மீட்பு நடவடிக்கைகளுக்கான ஆதாரவளங்கள் கடுமையான பற்றாக்குறையில் இருப்பதையே எடுத்துக்காட்டுகிறது,” என்றார்.

ஏப்ரலில் தொடர்ச்சியாக பல படகுகள் கவிழ்ந்து 1,200 அகதிகள் உயிரிழந்ததற்குப் பின்னர், புதனன்று நடந்த இந்த சம்பவமே இந்தளவிற்கு மிகப்பெரிய முதல் மூழ்குதலாகும். அந்த ஏப்ரல் சம்பவங்களுக்குப் பின்னர் ஐரோப்பிய ஒன்றியம் காலந்தாழ்த்தாமல் மத்தியத்தரைக்கடலில் ரோந்து நடவடிக்கைகளை அதிகரித்ததோடு, அகதி படகுகள் லிபிய கடற்கரையிலிருந்து புறப்படுவதற்கு முன்னதாக அவற்றிற்கு எதிராக வான்வழி தாக்குதல்களைக் கொண்டு அச்சுறுத்துவதையும் செய்தன.

இந்த ஆண்டில் சுமார் 224,000 அகதிகள் மத்தியத்தரைக் கடலை கடந்துள்ளதாக அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையாளர் வியாழனன்று அறிவித்தார். படகின் மூலமாக வந்த 97,000 அகதிகளை இத்தாலியும், 91,000 பேரை கிரீஸூம் பதிவு செய்துள்ளன. படகில் பயணித்துவரும் அகதிகளில் மூன்றில் ஒருவர் சிரியாவிலிருந்து வருகிறார், ஆப்கானிஸ்தான், எரித்திரியா, சோமாலியா மற்றும் நைஜீரியா உட்பட ஏனைய பிரதான நாடுகளிலிருந்தும் வருகின்றனர்.

ஏக்கத்தோடு ஐரோப்பாவிற்கு வர முயலுபவர்களின் மரண எண்ணிக்கை மலைப்பூட்டுகிறது. செவ்வாயன்று, புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு (IOM) ஜெனீவாவில் குறிப்பிடுகையில், இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து ஐரோப்பாவிற்கு வரும் முயற்சியில் 2,000க்கு அதிகமான அகதிகள் உயிரிழந்திருப்பதாக தெரிவித்தது.

IOM இன் தகவல்படி, “மத்தியத்தரைக் கடல் வழியாக செல்லும் பாதை புலம்பெயர்வோருக்கு மிகவும் மரணகரமாக இருப்பதையே,” இத்தகைய புள்ளிவிபரங்கள் உறுதிப்படுத்துகின்றன, இந்தவொரு அபிவிருத்தி கடந்த ஆறு மாதங்களில் தீவிரப்பட்டுள்ளது. துன்புறுத்தல்கள் மற்றும் வறுமையிலிருந்து தப்பிப்பதற்காக ஐரோப்பாவிற்கு பாதுகாப்பு தேடிவரும் முயற்சியில், 2014 இல், 3,279 அகதிகள் அவர்களது உயிரை விலையாக கொடுத்துள்ளனர்.

மோதல்கள், துன்புறுத்தல்கள், வறுமை மற்றும் நிலச்சீரழிவிலிருந்து தப்பிப்பதற்காக நாட்டைவிட்டு வெளியேறிவரும் 21ஆம் நூற்றாண்டு மக்கள், அவர்களது தாய்நாடுகளில் அதுபோன்ற கொடூரமான அனுபவங்களைத் தாங்கிக் கொள்ள வேண்டும், அல்லது ஐரோப்பாவின் வாசற்படியில் வந்து உயிரிழக்க வேண்டுமென்பதை ஏற்றுக் கொள்ள முடியாது, அவர்கள் கடந்துவரும் பாதையைக் குறித்தோ கூற வேண்டியதே இல்லை,” என்று IOM இன் இயக்குனர் ஜெனரல் வில்லியன் லேசி ஸ்விங் தெரிவித்தார்.

லிபியாவிலிருந்து இத்தாலி வரையில் மத்தியத்தரைக் கடலின் பிரதான பாதையில் ஏறத்தாழ அன்றாடம் மிகக்கொடூரமான சம்பவங்கள் நடக்கின்றன. ஜூலை 29 அன்று, உயிர்பிழைத்திருந்த 456 நபர்களுடன் ஒரு கப்பல் மெசினாவின் சிசிலியன் துறைமுகம் வந்தது, அதில் 14 அகதிகள் உயிரிழந்திருந்தனர். எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பிலிருந்து ஒரு மீட்பு கப்பல், ஆகஸ்ட் 1 அன்று, 120 அகதிகளுடன் பயணித்து கொண்டிருந்த ஒரு படகில் ஐந்து சடலங்களைக் கண்டது.

மத்தியதரைக் கடலில் ஏற்படும் உயிரிழப்புகள் வெறுமனே ஒரு துயரகரமான சம்பவம் மட்டுமல்ல, மாறாக ஒரு குற்றமுமாகும். கடலில் அகதிகளின் இந்த பாரிய உயிரிழப்புகளுக்கு, ஐரோப்பிய மற்றும் அமெரிக்க ஏகாதிபத்திய சக்திகளே பொறுப்பாகின்றன.

அகதிகளுக்கான .நா. அமைப்பின் கணக்கீடுகளின்படி, கடந்த மூன்று ஆண்டுகளில் அகதிகளின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்துள்ளது. ஏறத்தாழ 60 மில்லியன் பேர் 2014 இல் இடம்பெயர்ந்துள்ளனர், இது 2011 இல் இருந்ததை விட 40 சதவீதம் அதிகமாகும்.

2011 இல் அமெரிக்கா மற்றும் அதன் அரபு கூட்டாளிகளால் சிரியாவில் தூண்டிவிடப்பட்ட உள்நாட்டு போர், இப்போதும் ஆக்ரோஷத்துடன் நடந்துவரும் நிலையில், 3.5 மில்லியனுக்கும் அதிகமான மக்களை எல்லை கடந்து வெளியேறச் செய்துள்ளது. அதற்கு கூடுதலாக சிரியாவிற்குள்ளேயே 7.5 மில்லியன் பேர் அவர்களது வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர்.

லிபியாவில், ஏறத்தாழ அதேகாலத்தில் தொடங்கிய, கடாபி ஆட்சிக்கு எதிரான நேட்டோ-தலைமையிலான போர், 1 மில்லியனுக்கும் அதிகமான மக்களை அகதிகளாக்கியது. சிரியா, சூடான், எரித்திரியா மற்றும் சோமாலியாவிலிருந்து வந்த மற்றொரு 500,000 அகதிகள், ஐரோப்பாவிற்கான ஒரு படகில் இடங்கிடைக்கும் என்ற ஏக்கத்துடன் கூடிய நம்பிக்கையில், லிபிய கடற்கரையோரம் தங்கியுள்ளனர், இப்போது அப்பகுதி போட்டி போராளிகள் குழுக்களின் கட்டுப்பாட்டில் உள்ளது.

ஏகாதிபத்திய போர்களின் விளைவாகவும், ஆபிரிக்க முனையில் (எத்தியோப்பியா, எரித்திரியா மற்றும் சோமாலியா ஆகியவற்றில்) பஞ்சங்களால் ஏற்பட்ட அடுத்தடுத்த நெருக்கடியாலும் நூறு ஆயிரக் கணக்கானவர்கள் அவர்களது வீடுகளை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட்டனர். ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க-தலைமையிலான போர்கள் இரண்டு நாடுகளின் மக்களுக்கும் பேரழிவுகரமான விளைவுகளைக் கொண்டிருந்திருக்கின்றன. யேமனில், அமெரிக்காவினால் வினியோகிக்கப்பட்ட ஆயுதங்களைக் கொண்டு, அந்நாட்டின் மீது அமெரிக்க-தரப்பில் அணிசேர்ந்துள்ள சவூதி அரேபிய ஆட்சியின் குண்டுவீச்சு நடவடிக்கைகள், வாஷிங்டனின் டிரோன் போருடன் சேர்ந்து, எண்ணற்ற மக்களை நாட்டைவிட்டு வெளியேற நிர்பந்தித்துள்ளது.

அதற்கும் கூடுதலாக, அங்கே காசா பகுதியில் இஸ்ரலிய போரில் எண்ணிலடங்கா பாலஸ்தீன அகதிகள் அவர்களது வாழ்க்கையை இழந்துள்ளனர், நடைமுறையில் அவர்கள், ஒரு பக்கம் இஸ்ரேலிய அரசாங்கத்தாலும், மறுபக்கம் எகிப்திய இராணுவ சர்வாதிகாரத்தாலும் எல்லைகள் அடைக்கப்பட்ட நிலையில் சிறைபட்டுள்ளனர்.

மேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்காவில், அனைத்திற்கும் மேலாக, மாலி, மொரித்தானியா, மத்திய ஆபிரிக்க குடியரசு, நைஜர் மற்றும் சாட் ஆகிய நாடுகளிலிருந்த ஆயிரக் கணக்கானவர்கள், போர்கள் மற்றும் ஐரோப்பிய நிறுவனங்களால் அந்நாடுகள் சூறையாடப்படுவதை முகங்கொடுத்த நிலையில், ஐரோப்பிய சக்திகளின் நவ-காலனித்துவ கொள்கைகள் அவர்களை வெளியேற நிர்பந்தித்துள்ளன.

ஐரோப்பிய ஒன்றியமோ, கோட்டை அகழியின் மேலுள்ள பாலத்தை இழுப்பதைப் போலவும், ஐரோப்பாவெனும் படையரணை விரிவாக்குவதன் மூலமாகவும் இந்த மனிதாபிமான பேரழிவுக்கு விடையிறுத்துள்ளது. ஐரோப்பிய ஒன்றிய வெளி-எல்லைகளில் நடக்கும் அகதிகளின் மரணங்கள், அகதிகளை அதைரியப்படுத்தி பின்வாங்க செய்வதற்குப் பயன்படுத்தப்படுகின்றன.

கிரீஸ், பல்கேரியா, ஹங்கேரியில் மற்றும் ஸ்பானிய நிலப்பகுதியில் உள்ள செய்டா மற்றும் மெலில்லா ஆகியவற்றில், அகதிகளுக்கு எதிரான பாதுகாப்பிற்காக கூர்மையான இரும்புகம்பிகளைக் கொண்ட பல மீட்டர் உயர தடுப்புகள் கட்டப்பட்டுள்ளன. நவம்பர் 2013 இல், டிரோன்கள், செயற்கை கோள்கள் மற்றும் உளவுபார்க்கும் விமானங்களோடு மத்தியத்தரைக் கடலை உளவுபார்க்கும் யூரோசர் (Eurosur) திட்டத்தை ஐரோப்பிய ஒன்றியம் தொடங்கியது.

ஜேர்மன் அரசாங்கத்திடமிருந்து வந்த அழுத்தத்தின் கீழ், இத்தாலிய அரசாங்கம் நடத்திய இராணுவ நடவடிக்கையில் அது மத்தியத்தரைக் கடல் முழுவதும் அகதிகளை தேடுவதற்கு போர்க்கப்பல்களை பயன்படுத்தி இருந்த நிலையில், அவர்களை மீண்டும் லிபியாவிற்கு திரும்ப அனுப்புவதற்காக, அந்நடவடிக்கையானது ஐரோப்பிய ஒன்றிய எல்லையோர அமைப்பான Frontex ஆல் செயல்படுத்தப்பட்ட ட்ரிடொன் (Triton) நடவடிக்கைக்கையோடு இணைத்துக் கொள்ளப்பட்டது. Mare Nostrum என்று கூறப்படும் இத்தாலிய திட்டம் பல அகதிகளை ஐரோப்பாவிற்குள் பயணிக்க ஊக்குவித்ததாக ஐரோப்பிய ஒன்றிய அரசுகள் எரிச்சலூட்டும் விதத்தில் அறிவித்தன.

இவ்வாண்டு ஏப்ரலில் நடந்த இரண்டு துயரகர சம்பவங்களுக்கு விடையிறுப்பாக, ஐரோப்பிய ஒன்றியம் கூடுதல் போர்க்கப்பல்களை மத்தியத்தரைக் கடல் பகுதிக்கு அனுப்பியது. ஆனால் இந்த கப்பல்கள் பிரதானமாக கடல்களிலிருந்து அகதிகளை மீட்பதன் மீது கவனம் செலுத்தவில்லை, மாறாக Eunavfor Med திட்டத்தின் பாகமாக "கடத்தல்காரர்களுக்கு" எதிராக போர் தொடுத்து, அகதி படகுகளை அழிப்பதில் கவனம் செலுத்தியது. அதற்கும் கூடுதலாக, அகதிகளை ஆபிரிக்காவிற்கும் மற்றும் மத்திய கிழக்கின் நெருக்கடி பிராந்தியங்களுக்கும் திரும்ப அனுப்பும் நிகழ்முறையை தீவிரப்படுத்தும் நடவடிக்கைகளும் ஒப்புக்கொள்ளப்பட்டன.

அதேநேரத்தில், ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்த புலம்பெயர்வுக்கான "மூல காரணங்களுக்கு" எதிரான எதிர்நடவடிக்கை என்பது, ஆபிரிக்காவிலுள்ள சர்வாதிகார ஆட்சிகள் அவற்றின் மக்கள் நாட்டைவிட்டு வெளியேறுவதை இன்னும் துல்லியமாக தடுக்கும் வகையில், அவற்றை ஆயுதமேந்த செய்யும் ஒரு முயற்சியாக அம்பலமாகி உள்ளது. எரித்திரியா, சூடான், தெற்கு சூடான் மற்றும் எகிப்து ஆகியவை அவற்றின் சிப்பாய்களுக்கு பயிற்சியளிப்பதன் மூலமாக ஐரோப்பிய ஒன்றிய எல்லை கட்டுப்பாட்டு முறைக்குள் மிக நெருக்கமாக ஒருங்கிணைந்துள்ளதாக ஜேர்மன் தொலைக்காட்சி நிகழ்ச்சி Monitor அறிவித்தது.