சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka: Pseudo-left USP willing to ally with any capitalist party

இலங்கை: போலி-இடது ஐக்கிய சோசலிசக் கட்சி எந்த முதலாளித்துவக் கட்சியுடனும் கூட்டுச் சேர விரும்புகிறது

By R. Shreeharan
29 July 2015

Use this version to printSend feedback

பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கலின் முடிவுநாளான ஆகஸ்ட் 17 அன்று, போலி-இடது ஐக்கிய சோசலிசக் கட்சியின் (USP) தலைவரான சிறிதுங்க ஜயசூரிய, அக்கட்சியின் கண்ணோட்டத்தை இரத்தினச் சுருக்கமாகத் தெளிவாக்கினார்: ஐக்கிய சோசலிசக் கட்சி எந்த முதலாளித்துவ கட்சியுடனும் கூட்டுச் சேர விரும்பும் வாடகைக்கு அமர்த்திக் கொள்ளத்தக்க ஒரு அரசியல் அமைப்பு, எவ்வளவு பிற்போக்குத்தனமான அமைப்பாக இருந்தாலும் சரி அதை போலி ஜனநாயக வண்ணம்பூசி வாக்காளர்கள் முன்நிறுத்த அது தயாராக இருக்கின்றது. ஐக்கிய தேசியக் கட்சி (UNP), ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ..சு..) ஆகிய இரு பெரிய முதலாளித்துவக் கட்சிகளையும் வெவ்வேறு தருணங்களில் ஆதரித்ததாக அவர் பெருமையுடன் கூறிக்கொண்டார்.

ஐக்கிய சோசலிசக் கட்சியின் யாழ்ப்பாண வேட்பாளர் அணிக்கு ஜயசூரி தலைமை வகிக்கின்றார். ஜூலை 13 அன்று யாழ்ப்பாணத்தின் மாவட்ட செயலகத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அவர்: [ஸ்ரீ..சு.. தலைமையிலான] ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அல்லது யூ.என்.பீ. ஆகிய இரண்டு பிரதான முதலாளித்துவக் கட்சிகளுமே தமிழ் மக்கள் குறித்து பேசுகின்றன, ஆனால் அவை ஒரு தீர்வினை முன்வைக்கவில்லை,” என அறிவித்தார்.

தமிழ் சிறுபான்மையினர் மீது அக்கறை காட்டுவதில்லை என்ற யூ.என்.பீ. மற்றும் ஸ்ரீ..சு.. மீதான ஜயசூரியவின் விமர்சனங்கள் முழுக்க வஞ்சகமானது என்பது WSWS இன் இந்த கட்டுரையாசிரியர் குறுக்கிட்டுக் கேட்ட கேள்வியில் வெளிப்படுத்தப்பட்டது. “ஆனால், நீங்கள் சமீப வருடங்களில் யூ.என்.பீ. உடன் அரசியல் மேடைகளில் நின்றீர்களே!என அவர் கேட்டார்.

ஜயசூரிய அதற்கு பெருமைபொங்க பிரதிபலித்தார்: [யூ.என்.பீ. தலைவரும் தற்போதைய பிரதமருமான] “ரணில் விக்கிரமசிங்க உடன் மட்டுமல்ல. 1993ல் நான் கொழும்பில் இருந்து கதிர்காமம் வரை [முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீ..சு.. தலைவருமான] மஹிந்த இராஜபக்ஷவுடன் நான் பேரணியில் சென்றிருக்கிறேன். ஆனால் அரசாங்கத்தை அமைப்பதில் நாங்கள் இணையவில்லை.” ஒரு அரசாங்கம் பிழை செய்யுமெனில், “நாங்கள் யாருடனும் இணைந்து போராடுவோம், ஒடுக்குமுறையாளருக்கு எதிராக பிசாசுடனும் கூட நாங்கள் கைகுலுக்குவோம்.”

ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க ஐக்கிய சோசலிசக் கட்சி ஒருபோதும் போராடியது கிடையாது, மாறாக, ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், முதலாளித்துவக் கட்சி அவர்களது ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கும் என்ற மாயையை முன்னிலைப்படுத்துவதன் மூலம், தொழிலாள வர்க்கத்தையும் ஒடுக்கப்பட்ட மக்களையும் ஏதாவதொரு முதலாளித்துவக் கட்சிக்கு அடிபணிய வைப்பதற்கே முனைந்து வந்திருக்கின்றது. மாறி மாறி ஆட்சியில் இருந்து வந்துள்ள இந்த கட்சிகள், உழைக்கும் மக்களை ஒடுக்குவதில் தனது எதிரிகளைப் போலவே ஈவிரக்கமற்றவையாக இருந்து வந்துள்ளன.

1993ல், இராணுவம் மற்றும் யூ.என்.பீ. அரசாங்கத்துடன் கைகோர்த்துக்கொண்டிருந்த கொலைப் படைகளால் கிராமப்புற இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டு வந்தமைக்கு எதிராக மஹிந்த இராஜபக்ஷவுடன் ஜயசூரிய பேரணி நடத்தினார். 1983ல் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஒரு இனவாதப் போரை தொடங்கிய யூ.என்.பீ., 1987ல் இந்திய-இலங்கை ஒப்பந்தம் மூலமாக இந்திய “அமைதி காக்கும்” படைகளை வட இலங்கைக்குள் கொண்டுவருவதன் மூலமே அதனை முடிவுக்குக் கொண்டுவர முனைந்தது.

இந்த ஒப்பந்தத்திற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பீ.) ஒரு பேரினவாதப் பிரச்சாரத்தை முன்னெடுத்தது. அதனை ஆதரிக்க மறுத்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்களையும் மற்றும் அரசியல் மற்றும் தொழிற்சங்கத் தலைவர்களையும் அதன் துப்பாக்கிதாரிகள் கொலைசெய்தனர். தொழிலாள வர்க்கத்தை அச்சுறுத்துவதற்கு ஜே.வி.பீ.யின் பிரச்சாரத்தை சுரண்டிக் கொண்ட யூ.என்.பீ., இறுதியில் ஜே.வி.பீ. மற்றும் அதன் தலைவர்களுக்கு எதிராக மட்டுமன்றி, அதன் சமூக அடித்தளமாக இருந்த சிங்கள கிராமப்புற இளைஞர்களுக்கு எதிராகவும் திரும்பியது. கொலைப் படைகள் சுமார் 60,000 பேர் வரை கொலை செய்ததாகவும், இன்னும் பலரை கைது செய்து சித்திரவதை செய்ததாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்ரீ..சு..யின் தேர்தல் வாய்ப்புகளை அதிகரிப்பதும், இலங்கையில் அமைதியையும் ஜனநாயகத்தையும் கொண்டுவருவதாக அது அளித்த மோசடியான வாக்குறுதிகளை முன்னிலைப்படுத்துவதுமே 1993 பேரணியின் நோக்கமாக இருந்தது. அதற்கடுத்த ஆண்டு ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தலைமையின் கீழான ஸ்ரீ..சு.. ஆட்சி, போரை உக்கிரமாக்கி, போலிஸ்-அரசு வழிமுறைகளை விரிவாக்கியதோடு உழைக்கும் மக்களின் வாழ்க்கைத்தரங்களை இன்னும் மோசமாக வெட்டிச் சரித்ததை மட்டுமே செய்தது.

சந்தர்ப்பவாதத்தில் ஊறிய ஜயசூரிய தன் உதவியால் விளைந்த நாசத்திற்கு எந்த பொறுப்பும் ஏற்கவில்லை. ஒரு தசாப்தத்திற்கும் குறைவான காலத்திற்குள், அவர் அந்தப் படுகொலையை நடத்திய யூ.என்.பீ. உடன் சேர்ந்துகொண்டு, முந்தைய யூ.என்.பீ. அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த, அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை, குமாரதுங்கவிற்கான ஜனநாயக மாற்றீடாக முன்னிலைப்படுத்தினார். 2001ல் குமாரதுங்க அரசாங்கத்தின் ஜனநாயக-விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக நடைபெற்ற கூட்டு ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்வதில் இவரே விக்கிரமசிங்கவின் வலது-கரமாக செயல்பட்டார்.

ஐக்கிய சோசலிசக் கட்சியானது இன்று வரையிலும் யூ.என்.பீ. மற்றும் விக்கிரமசிங்கவின் மௌனப் பங்காளியாகவே தொடர்ந்து செயல்பட்டு வந்துள்ளது. 2005ல் இராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் வென்ற பின்னர், அரசியல் எதிரிகள் மற்றும் ஊடகங்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட அரசாங்க கொலைத் தாக்குதல்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்வதில் யூ.என்.பீ. உடன் ஐக்கிய சோசலிசக் கட்சி இணைந்து செயல்பட்டது. 2010 ஜனாதிபதித் தேர்தலின்போது, போர்க் குற்றங்களுக்கு நேரடிப் பொறுப்பாளியான முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை, எதிர்க்கட்சிகளது பொது வேட்பாளராக யூ.என்.பீ. ஆதரித்த நிலையிலும் கூட ஐக்கிய சோசலிசக் கட்சி அதற்கு தொடர்ந்து ஆதரவளித்து வந்தது.

இந்த ஆண்டு ஜனவரியில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில், இராஜபக்ஷ வெளியேற்றப்பட்டப்படுவதை கண்ட அமெரிக்க-ஏற்பாட்டிலான ஆட்சி-மாற்ற நடவடிக்கையில் பல்வேறு தாராளவாத அமைப்புகள் மற்றும் ஏனைய போலி-இடது குழுக்களுடனும் சேர்ந்து, ஐக்கிய சோசலிசக் கட்சியும் ஒரு பிரதான பாத்திரத்தை வகித்தது. அது மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகவும் விக்கிரமசிங்க பிரதமராகவும் அமர்த்தப்படுவதற்கு வழி வகுத்தது. இராஜபக்ஷ அரசாங்கத்தின் போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களின் காரணமாக அவரை அமெரிக்கா எதிர்க்கவில்லை, மாறாக அவர் சீனாவுடன் மிகவும் நெருக்கம் கொண்டிருந்தார் என்பதாலேயே எதிர்த்தது.

ஐக்கிய சோசலிசக் கட்சியின் தேர்தல் துண்டறிக்கை தெரிவிப்பதாவது: “யூ.என்.பீ. மற்றும் ஸ்ரீ..சு.. இடையே கொள்கையில் எந்த வித்தியாசமும் இல்லை. ஆகஸ்ட் தேர்தலுக்குப் பின்னர் இந்த இரண்டு கட்சிகளுமே ஒரே நிலைப்பாட்டிற்கே வரக்கூடும்.” யூ.என்.பீ.யும் ஸ்ரீ..சு..யும், அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான புவி-சார் அரசியல் மோதல் மற்றும் போருக்கான தயாரிப்புகளும் இத்தீவை சூழச் செய்துள்ள நிலையில், தொழிலாள வர்க்கம் முகம்கொடுக்கும் தீவிரமான ஆபத்துகளை இது இருட்டடிப்பு செய்கின்றது.

குமாரதுங்க விடயத்தில் போலவே, சிறிசேன மற்றும் விக்கிரமசிங்கவை அதிகாரத்தில் அமர்த்த உதவியதற்கான எந்த பொறுப்பையும் ஜயசூரிய மறுக்கிறார். வெறும் ஏழே மாதங்களில், இந்த புதிய அரசாங்கமானது தனது தொழிலாள-வர்க்க-விரோத குணாம்சத்தை எடுத்துக் காட்டும் வண்ணம், வேலைநிறுத்தம் செய்த சுகாதாரத் துறை தொழிலாளர்களுக்கு எதிராக, யாழ்ப்பாண ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக மற்றும் மாணவர் ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக பாதுகாப்புப் படைகளைக் கட்டவிழ்த்து விட்டது.

இந்த மாதத்தில் யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஜயசூரிய, தான் சிறிசேனவை ஆதரித்ததை மறுத்தார். “மஹிந்தவை அகற்ற [மட்டுமே] நான் கூறினேன். மைத்திரி [சிறிசேன] சுபிட்சத்தைக் கொண்டு வருவார் என்று மக்கள் நினைத்தார்கள். அதுதான் இந்த நாட்டில் உள்ள பிரச்சினை. மக்கள் குறுக்குவழியை எதிர்பார்க்கின்றார்கள்” என்று அவர் முறைப்பாடு செய்தார். ஜயசூரியவோ ஐக்கிய சோசலிசக் கட்சியோ, சிறிசேன மீதான மாயைகளை அகற்றுவதற்கு துரும்பளவுக்கு கூட எதுவும் செய்யவில்லை, அதன் மூலம் அவர் அதிகாரத்திற்கு வர அவர்கள் உதவியிருந்தனர்.

ஒரு அசாதாரணமான கருத்தில், தேவைப்பட்டால் தலைகீழாக கரணம் அடித்து இராஜபக்ஷவை, அதாவது ஒரு பாசிசவாதி என்றும் சர்வாதிகாரி என்றும் ஐக்கிய சோசலிசக் கட்சி கண்டனம் செய்து வந்திருக்கிறவரை, ஆதரிக்கவும் கூட தான் தயாராக இருப்பதாக ஜயசூரிய அறிவித்தார். “ரணில் [விக்கிரமசிங்க] [ஒடுக்குமுறையாளராக] மாறுவாரேயானால், நாங்கள் மஹிந்த இராஜபக்ஷவுடன் கை கோர்ப்போம்” என்று அவர் தெரிவித்தார்.

அநேகமானவர்களை வீடற்றவர்களாக, வேலை வாய்ப்பற்றவர்களாக, வாழ்வதற்குப் போராடும் நிலையில் தள்ளியுள்ள கால் நூற்றாண்டுக்கும் மேலான இனவாதப் போரின் பாதிப்பில் இருந்து இன்னும் மீண்டிருக்காத யாழ்ப்பாணத்தில், தனது கட்சியின் வேட்பாளர் அணிக்குத் தலைமை தாங்க ஐக்கிய சோசலிசக் கட்சியின் தலைவர் முடிவு செய்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஒட்டு மொத்த பிராந்தியமும் இன்னும் இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் இருந்து வருவதோடு, பெரும்பான்மை தமிழ் மக்கள் தொடர்ச்சியான கண்காணிப்புக்கும் துன்புறுத்தல்களுக்கும் ஆளாகி வருகின்றனர்.

பரவலான எதிர்ப்பு மற்றும் அதிருப்திக்கு மத்தியில், மாகாண சபையை கட்டுப்படுத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட யாழ்ப்பாணத்தில் நாளுக்கு நாள் மதிப்பிழந்து செல்லும் தமிழ் முதலாளித்துவக் கட்சிகளுக்கு தனது சேவைகளை வழங்குவதற்கான வாய்ப்பு இருப்பதை ஐக்கிய சோசலிசக் கட்சி உணர்ந்துள்ளது.

ஐக்கிய சோசலிசக் கட்சி "சுய-நிர்ணய உரிமைகளை முழுவதுமாக பாதுகாப்பதாக” அறிவித்ததன் மூலம் அவர் அந்த கட்சிகளுக்கு நேரடியாக விண்ணப்பம் செய்தார். “முற்போக்குவாதிகள், தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் வடகிழக்கில் இருக்கும் தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களுடன் இணைந்து, தேசியப் பிரச்சினைக்கு ஒரு நீடித்த தீர்வினைக் காண்பதற்காக முதலாளித்துவ அமைப்பு முறைக்கு அழுத்தம் கொடுக்கும் ஒரு வலிமையான சக்தியைக் கட்டியெழுப்ப வேண்டும்”, என அவர் மேலும் கூறினார்:

என்ன ஒரு முழுமையான மோசடி! “சுய-நிர்ணயம்” குறித்த ஜயசூரியவின் கருத்து தமிழ் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கிலானது அல்ல, மாறாக தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் கூடுதலான தன்னாட்சி அதிகாரம் அல்லது ஒரு தனியான முதலாளித்துவ அரசுக்கான தமிழ் முதலாளித்துவத்தின் வேலைத்திட்டத்தை பாதுகாக்கும் நோக்கமுடையதாககும். “ஒரு வலிமையான சக்தியைக்” கட்டியெழுப்புவதற்கான அவரது அழைப்பானது தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் பிற தமிழ்க் கட்சிகளுடனான ஒரு சந்தர்ப்பவாதக் கூட்டணிக்கான ஒரு அழைப்பே ஆகும்.

2009ல் புலிகளின் தோல்வி மற்றும் அதில் பத்தாயிரக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்கள் இலங்கை இராணுவத்தால் கொலை செய்யப்பட்டமையில் இருந்து பெறவேண்டிய மைய அரசியல் படிப்பினையை மறைக்கும் நோக்கத்தையும் அது கொண்டுள்ளது. புலிகளின் தோல்வியானது அடிப்படையின் இராணுவத் தோல்வி அல்ல, மாறாக அதன் அரசியல் வேலைத்திட்டத்தின் விளைவாகும்.

புலிகள் தமிழ் முதலாளித்துவத்தின் வர்க்க நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய காரணத்தால் தமிழ் தொழிலாளர்கள் அல்லது விவசாயிகளின் எந்தவொரு எதிர்ப்பையும் ஈவிரக்கமற்று ஒடுக்கினர். தமிழ் பிரிவினைவாதம் மற்றும் பேரினவாதத்தை அடிப்படையாகக் கொண்டிருந்ததால், புலிகளால் இலங்கையின் தென்பகுதியில், அல்லது இன்னும் பரந்த அளவில் தெற்காசியா மற்றும் சர்வதேச அளவில் உள்ள உழைக்கும் எதிர்க்க மக்களுக்கு எந்த அறைகூவலும் விடுக்க முற்றிலும் இலாயக்கற்றவர்களாக இருந்தனர். அதற்கு நேர்மாறாக அவர்கள் இராஜதந்திர ரீதியிலும் இராணுவ ரீதியிலும் இலங்கை அரசாங்கத்துக்கும் அதன் போருக்கும் உதவிக் கொண்டிருந்த அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் மற்றும் இந்திய அரசாங்கத்திற்கும் விண்ணப்பம் செய்தனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பும் மற்ற தமிழ் முதலாளித்துவக் கட்சிகளும் முன்வைக்கும் முன்னோக்கானது அழிவுகரமானவை என்பதற்கு எந்தவகையிலும் குறைவானதல்ல. தமக்கு மாகாண மட்டத்தில் அதிக அதிகாரத்தையும், தொழிலாள வர்க்கத்தையும் கிராமப்புற பரந்த மக்களையும் கூட்டாகச் சுரண்டுவதால் கிடைக்கும் இலாபங்களில் ஒரு கூடுதலான பங்கையும் பெறும் வகையில் கொழும்பு அரசாங்கத்துடன் ஒரு அதிகாரப் பகிர்வு ஏற்பாட்டிற்காக இவை முனைந்து கொண்டிருக்கின்றன. உழைக்கும் மக்களின் எதிர்ப்பை ஒடுக்குவதில் கொழும்பில் இருக்கும் அரசாங்கங்களுக்கு சற்றும் சளைக்காதவர்களாக இவர்கள் இருப்பர்.

1948ல் பிரிட்டனிடம் இருந்து உத்தியோகபூர்வ சுதந்திரத்தைப் பெற்றது முதல் இலங்கையின் ஒட்டுமொத்த வரலாறும், குறிப்பாக கொடூரமான நீண்ட இனவாதப் போரும், “பொருளாதார ரீதியாக பின்தங்கிய நாடுகளில் இருக்கும் முதலாளித்துவத்தின் அத்தனை கன்னைகளும் ஜனநாயகக் கடமைகளைப் பூர்த்தி செய்வதற்கு இலாயக்கற்றவை” என்ற லியோன் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவத்தின் உண்மையையே வெளிப்படுத்துவனவாக அமைந்திருக்கின்றன.

ஜயசூரிய கூறுவது போன்று, தமிழ் மக்களுக்கோ அல்லது உழைக்கும் மக்களின் வேறெந்த பிரிவிற்கோ ஜனநாயக உரிமைகளை வழங்கும் படி “முதலாளித்துவத்தை நிர்ப்பந்திக்க ஒரு வலிமையான சக்தியால்” தான் முடியும் என்ற யோசனை முற்றிலும் மோசடியானதாகும். ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடும் திறன்படைத்த ஒரேயொரு சமூக சக்தி தொழிலாள வர்க்கம் மட்டுமே ஆகும். ஆளும் வர்க்கத்தின் அத்தனை கன்னைகளில் இருந்தும் சுயாதீனமாக, முதலாளித்துவ அரசாங்கங்களுக்கு அழுத்தம் கொடுப்பதற்கு மாறாக, முதலாளித்துவத்தையே தூக்கி வீசி, சோசலிசக் கொள்கைகளை அமல்படுத்துகின்ற ஒரு தொழிலாளர் மற்றும் விவசாயிகளது அரசாங்கத்தை ஸ்தாபிப்பதன் அடிப்படையில், ஐக்கியப்பட்டு அணிதிரள்வதன் மூலமே இதைச் செய் முடியும்.

இலங்கையின் “தேசியப் பிரச்சினை” என்றழைக்கப்படுவதானது -அதாவது இன ரீதியாக சிறுபான்மையினர் ஒடுக்கப்படுவது- தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துவதில் தங்கியிருக்கின்ற இலாப நோக்கு அமைப்பு முறையின் ஒரு விளைபொருளாகும். தொழிலாள வர்க்கத்தின் தலைமையிலான ஒரு ஐக்கியப்பட்ட இயக்கத்தின் பாகமாக, சோசலிசத்திற்காக போராடாமல், வடக்கு கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவருவது, அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்வது மற்றும் பாகுபாடு காட்டுகின்ற அத்தனை சட்டங்களையும் ஒழிப்பது உள்ளிட்ட தமது ஜனநாயக உரிமைகளை தமிழ் மக்களால் வென்றெடுக்க முடியாது.

இந்த முன்னோக்கிற்காகப் பாடுபடுகின்ற ஒரேயொரு கட்சி சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே. தெற்காசிய மற்றும் உலகளாவிய சோசலிச அரசுகளின் ஒன்றியத்திற்கான போராட்டத்தின் பாகமாக ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசு என்ற அதன் சுலோகத்தில் இந்த முன்னோக்கு இரத்தினச்சுருக்கமாக எடுத்துரைக்கப்படுகிறது. இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கும் அதனை இட்டு நிரப்ப அவசியமான புரட்சிகர தலைமையை கட்டியெழுப்புவதற்கும் யாழ்ப்பாணம், கொழும்பு, மற்றும் நுவரேலியாவிலான எங்களது பிரச்சாரத்திற்கு ஆதரவளிக்க வேண்டுமென தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் நாம் வலியுறுத்துகிறோம்.