சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka: JVP election manifesto woos big business

இலங்கை: ஜே.வி.பி. தேர்தல் அறிக்கை பெருவணிகங்களுக்கு ஆதரவை காட்டுகின்றது

By W. A. Sunil
4 August 2015

Use this version to printSend feedback

எதிர்கட்சியான மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) ஆகஸ்ட் 17 இலங்கை பொது தேர்தலுக்கான அதன் தேர்தல் அறிக்கையை கடந்த மாதம் வெளியிட்டது. இரண்டு பிரதான முதலாளித்துவ கட்சிகளான ஆளும் ஐக்கிய தேசிய கட்சி (.தே..) மற்றும் எதிர்கட்சியான ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி (ஸ்ரீ..சு..) ஆகியவற்றிற்கு அதுவொரு நம்பகமான மற்றும் நீடித்த மாற்றீடு என்பதை ஆளும் உயரடுக்கிற்கு எடுத்துக்காட்டுவதே, “பகுத்தறிவிற்கான உடன்பாடு" என்று தலைப்பிடப்பட்ட அந்த அறிக்கையின் மேலோங்கிய நோக்கமாகும்.

1960களில் ஆயுதமேந்திய போராட்டத்திற்கு" வக்காலத்துவாங்கிய கிராமப்புற சிங்கள இளைஞர்களால் நிறுவப்பட்ட ஜே.வி.பி., பாராளுமன்ற இடங்களுக்காக அதன் கொரில்லா சீருடைகளை மாற்றிக்கொண்டு, நீண்டகாலத்திற்கு முன்பிருந்தே கொழும்பு அரசியல் ஸ்தாபகத்திற்குள் ஒருங்கிணைந்துள்ளது. .தே.. மற்றும் ஸ்ரீ..சு.. மீது உழைக்கும் மக்களிடையே நிலவும் பரந்த விரோதத்திற்கு ஓர் அரசியல் பாதுகாப்பு தடுப்பாக செயல்பட அது முயற்சிக்கிறது.

ஆனால் அவ்வாறு செய்வதற்கான ஜே.வி.பி. இன் ஆற்றல், 2004 இல் அது ஸ்ரீ..சு.. தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தில் இணைந்த பின்னரிலிருந்து அதை பலவீனப்படுத்திவரும் பல உடைவுகளாலும் மற்றும் அதற்கு சரிந்துவரும் ஆதரவாலும் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. 2004 இல் 39 ஆக இருந்த ஜே.வி.பி. பாராளுமன்ற அங்கத்தவர்களின் எண்ணிக்கை 2010 பொது தேர்தல்களில் 4 ஆக குறைந்தது. 2013 மற்றும் 2014 இறுதிச்சுற்று மாகாண சபைத் தேர்தல்களின், மத்திய மாகாணம், வடமேற்கு, மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களிலும் அதன் ஒட்டுமொத்த இடங்களின் எண்ணிக்கை 55 இல் இருந்து 7 ஆக சரிந்தது.

பொதுமக்களை அன்னியப்படுத்தி பாதுகாப்பான பாராளுமன்ற தடங்களுக்குள் திசைதிருப்புவதில் ஜே.வி.பி. வகித்த பாத்திரத்தை நனவூப்பூர்வமாக உணர்ந்துள்ள கொழும்பு ஊடகங்கள், ஜூலை 22 அன்று அதன் அறிக்கை வெளியீட்டுக்குப் பரந்த விளம்பரம் அளித்தன. அரசுக்கு சொந்தமான சுதந்திர தொலைக்காட்சி வலையமைப்பு (ITN) வெறும் 54,600 ரூபா ($4,082) செலவில் ஒட்டுமொத்த நிகழ்வையும் நேரடியாக ஒளிபரப்பியது. இது வழமையான சுமார் 200,000 ரூபா கட்டணத்தை விட குறிப்பிடத்தக்க அளவிற்கு குறைவாகும்.

இந்த தள்ளுபடி, ஐயத்திற்கிடமின்றி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்கவிற்கு அது வழங்கிய சேவைகளுக்காகவே ஆகும். ஜனவரி ஜனாதிபதி தேர்தலில் சிறிசேன தேர்ந்தெடுக்கப்படுவதை ஜே.வி.பி. ஆதரித்தது பெய்ஜிங்கிற்கு மிகவும் நெருக்கமாக இருப்பதாக வாஷிங்டன் கருதிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவை வெளியேற்றுவதற்காக அந்த ஜனாதிபதி தேர்தலே, அமெரிக்காவால் ஆதரிக்கப்பட்டு கவனமாக முடுக்கிவிடப்பட்ட ஒரு நடவடிக்கையாகும். சிறிசேன பின்னர் சிறுபான்மை .தே.. தலைமையிலான அரசாங்கத்திற்கு தலைமை கொடுக்க விக்கிரமசிங்கவைப் பிரதம மந்திரியாக நியமித்தார்.

ஜே.வி.பி., நடப்பு தேர்தல் பிரச்சாரத்தில், .தே.. மற்றும் ஸ்ரீ..சு.கட்சிக்கு ஒரு எதிர்ப்பாளராக காட்டிக் கொள்கிறது. ஒரு சிறப்பு கட்சி கூட்டத்தில் அந்த அறிக்கையை முன்வைத்து ஜே.வி.பி. தலைவர் அனுர குமார திஸ்சநாயக, .தே.. மற்றும் ஸ்ரீ..சு.கட்சி இரண்டையும் திஸ்சநாயக விமர்சித்தார். “கடந்த 67 ஆண்டுகளாக அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் நாட்டை அபிவிருத்தி செய்ய ஒன்றுமே செய்யவில்லை,” என்றவர் அறிவித்தார்.

ஆனால் ஜே.வி.பி. அது ஸ்தாபிக்கப்பட்டதிலிருந்தே பிரதான முதலாளித்துவ கட்சிகளில் ஏதேனும் ஒரு கட்சியை ஆதரித்து வந்துள்ளது, இது மிக சமீபத்தில் சிறிசேன மற்றும் விக்கிரமசிங்கவை ஆட்சியில் நிறுவுவதற்கு அது அளித்த ஆதரவில் எடுத்துக்காட்டப்பட்டது. ஜனவரி தேர்தலுக்குப் பின்னர், ஜனாதிபதி மற்றும் பிரதம மந்திரியை உள்ளடக்கியதும் மற்றும் அரசாங்க கொள்கை நடைமுறைகளை மேற்பார்வையிடுவதுமான 13 அங்கத்தவர்களைக் கொண்ட அந்நாட்டின் உயர்மட்ட ஆலோசனை குழுவான தேசிய நிர்வாக சபையில் ஜே.வி.பி. பிரதிநிதித்துவம் செய்யப்பட்டுள்ளது.

ஐயத்திற்கிடமின்றி ஜே.வி.பி. இந்த தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியை ஆதரித்து வருகிறது. அதன் பிரச்சாரங்களில் விக்கிரமசிங்கவை அடக்கமாக விமர்சனம் செய்து வருகின்ற அதேவேளையில், ஜே.வி.பி. தலைவர்கள் அவர்களது பிரதான தாக்குதலை "ஊழல்மிக்க, வேண்டியவர்களுக்கு சலுகை காட்டும் மற்றும் சர்வாதிகார" இராஜபக்ஷேவிற்கு எதிராக திருப்பி உள்ளனர், அத்துடன் மீண்டும் அவர் அதிகாரத்திற்கு வருவதிலிருந்து அவரை தடுக்க சூளுரைத்துள்ளனர். ஸ்ரீ..சு.. மற்றும் .தே.. இரண்டுமே முதலாளித்துவ கட்சிகளாகும், தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக உரிமைகள் மற்றும் சமூக நிலைமைகள் மீதான தாக்குதல்களின் ஒரு நீண்ட வரலாற்றை அவை கொண்டுள்ளன.

காஸ்ட்ரோயிசம், மாவோயிசம் மற்றும் சிங்கள வெகுஜனவாத சித்தாந்தத்தின் மீது தான் ஜே.வி.பி. இன் அடித்தளம் அமைக்கப்பட்டது. ஆனால் அது அதன் முந்தைய சோசலிச மற்றும் ஏகாதிபத்திய-எதிர்ப்பு வாய்ஜாலங்களை முற்றிலுமாக விட்டுவிடவில்லை. “அரசு-தனியார் பாங்காண்மையை" ஊக்குவிக்கவும், முதலீட்டாளர்களுக்கு ஐந்தாண்டுகால வரி சலுகையையும் மற்றும் ஏனைய சலுகைகளை வழங்கவும், மற்றும் ஏற்றுமதிகளுக்கான ஒரு நோக்குநிலையோடு விவசாயத்தைத் தொழில்துறைமயமாக்கவும் ஜே.வி.பி. வாக்குறுதிகள் அளிக்கிறது. உலக சந்தையில் இலங்கையின் பாகத்தை 0.45 சதவீதமாக குறைத்தமைக்காக அடுத்தடுத்து வந்த அரசாங்கங்களை திஸ்சநாயக குற்றஞ்சாட்டியதோடு, அந்த போக்கைத் திருப்புவதற்கும் சூளுரைத்தார்.

உலக பொருளாதார உடைவு மற்றும் பண்டங்களின் விலைகள் வீழ்ச்சி அடைந்துவரும் நிலைமைகளின் கீழ், ஜே.வி.பி. இன் வாக்குறுதிகள். குறைந்த கூலிகள் மற்றும் அதிக உற்பத்தித்திறனுக்கான அதாவது, மிகப்பெரும் சுரண்டல் விகிதத்திற்கான பெருவியாபாரங்களின் கோரிக்கைகளை அமுல்படுத்தி அது நடைமுறைப்படுத்தும் என்பதை மட்டுமே அர்த்தப்படுத்துகிறது. இது ஏற்கனவே தேயிலை தோட்டத்துறையில் வெளிப்படையாக உள்ளது, அங்கே கம்பெனிகள் உலக சந்தையில் போட்டியிடுவதற்காக கூலி உயர்வின்றி வேலைபளுவை அதிகரிக்க வலியுறுத்தி வருகின்றன.

அந்நாட்டின் பொருளாதாரம் "புதிய சோசலிசத்தின்" அடிப்படையில் அமைக்கப்பட வேண்டுமென ஜே.வி.பி. அறிக்கை அழைப்புவிடுக்கிறது. இது ஸ்ராலினிச சீனக் கம்யூனிஸ்ட் கட்சியிடமிருந்து (CCP) அது ஏற்றுக் கொண்ட ஒரு வார்த்தையாகும். சீனாவை உலகளாவிய பெருநிறுவனங்களுக்கான ஒரு பிரமாண்டமான மலிவு தொழிலாளர் தளமாக மாற்றியதை, “சீனா இயல்பிலான சோசலிசம்" என்பதாக CCP நியாயப்படுத்துகிறது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இன்னமும் கட்சிக்கும் கட்சிக்கான உறவுகளைப் பேணி வருகின்ற ஜே.வி.பி., சீனத் தொழிலாளர்கள் மீதான மூர்க்கமான சுரண்டலைப் போலவே இலங்கையில் செய்ய முன்வருகிறது.

ஜூலை 27 அன்று ஜே.வி.பி. கொழும்பில் பெருநிறுவன தலைவர்களுக்கான ஒரு சிறப்பு கூட்டத்தை ஏற்பாடு செய்தது. “வியாபார சமூகத்துடன்" ஜே.வி.பி. "கரங்களை இணைக்க தயாராக" இருப்பதாக திஸ்சநாயக அங்கே கூடியிருந்தவர்களுக்கு உத்தரவாதம் அளித்ததோடு, கட்சியை சந்தேகத்தோடு பார்க்க வேண்டாமென தொழிலதிபர்களைச் சமாதானப்படுத்த அக்கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார். “பணக்காரர்களிடமிருந்து எடுத்து ஏழைகளுக்கு கொடுக்கும் ஒரு பொருளாதார அமைப்புமுறையை ஜே.வி.பி. ஏற்படுத்துவதற்கு அங்கே ஒரு வாய்ப்பிருக்கிறது,” என்றவர் அறிவித்தார், ஆனால் அது தவறானதாகும் என்றவர் வலியுறுத்தினார்.

ஜே.வி.பி. தேர்தல் அறிக்கையை வெளியிடுகையில், திஸ்சநாயக ஆளும் உயரடுக்கிற்கு மற்றொரு உத்தரவாதமும் வழங்கினார் அதுவாவது, கட்சி மீண்டும் ஆயுதம் ஏந்தாது என்பதாகும். “ஒரு கட்சி செய்யக்கூடாத சில காரியங்களை நாங்கள் செய்துள்ளோம். அந்த காரியங்களுக்காக நாங்கள் வருந்துகிறோம். நாங்கள் ஆயுதம் ஏந்தி போராட மாட்டோம். எங்களது போராட்டம் கருத்துகளுக்கு இடையிலான போராட்டமாக இருக்கும்,” என்றவர் அறிவித்தார்.

1971 இல் ஜே.வி.பி. ஒரு வீரதீரமான ஆயுத எழுச்சியைத் தொடங்கியது, அது மூர்க்கமாக ஒடுக்கப்பட்டது. மீண்டும் 1980களின் இறுதியில், அதன் துப்பாக்கிதாரிகள் இந்திய-இலங்கை உடன்படிக்கைக்கு எதிரான அதன் பேரினவாத பிரச்சாரத்தை ஆதரிக்க மறுத்த நூற்றுக் கணக்கான அரசியல் எதிர்ப்பாளர்களையும் தொழிலாளர்களையும் கொன்றனர். அந்த உடன்படிக்கை, மாகாண அளவில் மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரபகிர்வை வழங்குவற்கு கைமாறாக அந்நாட்டின் உள்நாட்டு போரில் ஒரு போர்நிறுத்தத்தை அமுலாக்குவதற்காகவும் மற்றும் பிரிவினைவாத தமிழீழ விடுதலை புலிகளை நிராயுதபாணி ஆக்குவதற்காகவும் கொழும்பிற்கும் புது டெல்லிக்கும் இடையே செய்து கொள்ளப்பட்ட ஓர் உடன்படிக்கையாகும்.

வாக்காளர்களுக்கு ஜே.வி.பி. இன் வெற்று வாக்குறுதிகளுக்கும் .தே.. மற்றும் ஸ்ரீ..சு.கட்சியால் கூறப்பட்டு வருகின்ற பொய்களுக்கும் இடையே அடிப்படையில் எந்த வித்தியாசமும் இல்லை. அடுத்தடுத்து வந்த ஜனாதிபதிகளால் அவர்களது எதேச்சதிகார ஆட்சி முறைகளைக் கீழ்செருக பயன்படுத்தப்பட்டுள்ள. அந்நாட்டின் கூடுதல் அதிகாரம் பெற்ற ஜனாதிபதி பதவியை அது அகற்றுமென்று அறிவிப்பதன் மூலமாக, ஜனநாயகம் உறுதிப்படுத்தப்படுமென அது அறிவிக்கிறது.

ஜே.வி.பி. மீண்டும் மீண்டும் இதே வாக்குறுதியை அளிக்கின்றது ஆனால் அது மீண்டும் மீண்டும் ஜனாதிபதிகள் அவர்களது கூடுதல் அதிகாரங்களைப் பிரயோகிப்பதையும் ஊக்குவிக்கிறது. 2003 இல், .தே.. அரசாங்கத்தின் பாதுகாப்புத்துறை மற்றும் உள்துறை அமைச்சர்களை நீக்குமாறும், அதற்கடுத்த ஆண்டு, “தேசிய பாதுகாப்பின்" அடித்தளத்தில் ஒட்டுமொத்த அரசாங்கத்தையும் கலைக்குமாறும் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்காவிடம் ஜே.வி.பி. பிரச்சாரம் செய்தது. பின்னர் ஜே.வி.பி. 2004 தேர்தலில் ஸ்ரீ..சு.. உடன் சேர்ந்து பிரச்சாரம் செய்ததோடு, அக்கட்சி அரசாங்கம் அமைத்த போது மூன்று அமைச்சகங்களை ஏற்றிருந்தது.

ஜே.வி.பி. இப்போது இராஜபக்ஷவை "ஊழல்மிக்க, வேண்டியவர்களுக்கு சலுகை காட்டும் மற்றும் சர்வாதிகாரி" என்பதாக குற்றஞ்சாட்டுகிறது, ஆனால் 2005 இல், அவரே ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவதற்காக அதன் தலைவர்கள் பிரச்சாரம் செய்தனர். சரியாக 2009 இல் LTTE தோற்கடிக்கப்படும் வரையில், ஜே.வி.பி. இராஜபக்ஷவையும் அவரது கூடுதல் அதிகாரத்தையும் ஆதரித்ததோடு, பத்து ஆயிரக் கணக்கான பொதுமக்களின் உயிர்களை விலையாக பறித்த இராணுவத்தின் கொடூரமான போருக்கு ஓர் உற்சாகமூட்டும் தலைவராக விளங்கியது.

ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைத்து அவற்றை பாராளுமன்றத்தில் கொண்டு வருவதன் மூலமாக ஜனநாயகத்திற்கு உத்திரவாதம் அளிக்கப்படும் என்ற ஜே.வி.பி. இன் வாதம் ஒரு மோசடியாகும். ஏனைய நாடுகளைப் போலவே, இலங்கையிலும், பாராளுமன்றம் என்பது முதலாளித்துவ வர்க்க ஆட்சிக்கான மற்றும் தொழிலாள வர்க்கத்தை விலையாக கொடுத்து தனியார் சொத்துக்களையும் மற்றும் இலாபங்களையும் பாதுகாப்பதில், அரசு எந்திரத்தை இரக்கமின்றி பிரயோகிப்பதற்குமான வெறும் பிம்பமாகவே உள்ளது.

ஜே.வி.பி. அதன் பிரச்சாரத்தில் சேர்த்துக் கொண்டுள்ள ஒரேயொரு புதிய பொய் என்னவென்றால் வகுப்புவாத போரின் 30க்கு அண்மித்த ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட பிளவுகளை திருத்திக்கொள்ளும் ஒரு கட்சியாக இப்போது அது காட்டிக் கொள்கிறது. சிறப்பு கட்சி கூட்டத்தில் ஜே.வி.பி. தலைவர் திஸ்சநாயக, “அவரவர்களது அதிகாரத்தை நிறுவுவதற்கு இனவாதத்தை விதைத்து வருவதாக", கடந்தகால மற்றும் நிகழ்கால அரசாங்கங்களைக் குற்றஞ்சாட்டினார்.

இந்த கருத்து அதன் எரிச்சலூட்டும் தன்மையிலும் மற்றும் பாசாங்குத்தனத்திலும் மலைப்பூட்டுவதாக உள்ளது. பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் எழுத்துப்பூர்வ உடன்படிக்கை பத்திரமில்லா உழைப்பாளிகளாக ஒடுக்கப்பட்ட தமிழ் தோட்ட தொழிலாளர்கள் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டதை "தாய்மண்ணுக்கு" ஓர் அச்சுறுத்தலாக அதையொரு "இந்திய கலாச்சார படையெடுப்பு" என்பதாக அது முத்திரை குத்திய போதிருந்து, அதன் தொடக்கத்திலிருந்தே ஜே.வி.பி. சிங்கள வகுப்புவாதத்துடன் பின்னிபிணைந்துள்ளது.

1983 இல் .தே.. ஆல் தொடங்கப்பட்ட வகுப்புவாத போரை ஜே.வி.பி. எப்போதுமே முழுமையாக ஆதரித்து வந்துள்ளது. 1980களின் இறுதியில் இந்தோ-இலங்கை உடன்படிக்கைக்கு அதன் எதிர்ப்பானது அது தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக இருந்தது என்பதற்காக அல்ல, மாறாக அது இந்திய துருப்புகளின் ஒரு "படையெடுப்பை" அனுமதிப்பதன் மூலமாக அது "தாய்மண்ணை காட்டிக்கொடுத்தது" என்பதற்காக இருந்தது. 2009 இல் LTTE இன் தோல்வி வரையில், ஜே.வி.பி. “தாய்மண்ணை பாதுகாப்பதற்காக" அந்த போர் முயற்சிகளுக்கு உழைக்கும் மக்கள் "தியாகம்" செய்ய வேண்டுமென கோரியது. 2006இல் இராஜபக்ஷ மீண்டும் போர் தொடங்கிய போது, ஜே.வி.பி. இராணுவத்திற்குப் பதுங்குக்குழிகளை அமைக்க உதவியதோடு, போர் வரவுசெலவு திட்டக்கணக்குகளுக்கு ஆதரவாக வாக்களித்தது, போரை எதிர்த்த அனைவரையும் "துரோகிகளாக" மற்றும் "பயங்கரவாத ஆதரவாளர்களாக" அது குற்றஞ்சாட்டியது.

ஜே.வி.பி. சிறுத்தை அதன் இடங்களை மாற்றிக் கொள்ளவில்லை. “தேசிய ஒருமைப்பாட்டுக்கான" அதன் முறையீடும் மற்றும் இனவாதத்திற்கு எதிரான அதன் பாசாங்குத்தனமான எதிர்ப்பும் அது வேட்பாளர்களை நிறுத்தியுள்ள வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழர்களிடமிருந்து ஆதரவை வென்றெடுப்பதை நோக்கமாக கொண்டதாகும். அதேநேரத்தில் ஒரு கூட்டாட்சி அரசியலமைப்பிற்கு அழைப்புவிடுக்கும் முதலாளித்துவ வர்க்க தமிழ் தேசிய கூட்டணியை அது தாக்கியுள்ளது, அக்கட்சி (.தே.கூ.) உழைக்கும் மக்களைப் பிளவுப்படுத்துகிறது என்ற நிலைப்புள்ளியிலிருந்து அல்ல, மாறாக அது "தேசத்தைப் பிளவுபடுத்தும்" பேரினவாத நிலைப்பாட்டிலிருந்து சாடுகிறது.

ஜே.வி.பி. "இனவாத-எதிர்ப்பைக்" காட்டுவதானது, கொழும்பிலும் சர்வதேச அளவிலும் உள்ள ஆளும் வட்டாரங்களில் இன்னும் மதிக்கத்தக்க பிம்பத்தை முன்னிறுத்துவதற்காகவே ஆகும். அது நடைமுறையில் அமெரிக்காவின் ஆதரவைப் பெற்றுள்ள .தே.. உடன் அணிசேர்ந்துள்ளது. விடுதலை புலிகள் தோற்கடிக்கப்படும் வரையில் அதற்கு எதிரான போரை வாஷிங்டன் ஆதரித்தது, ஆனால் இப்போது அது அத்தீவின் சிங்கள மற்றும் தமிழ் உயரடுக்குகளுக்கு இடையே ஓர் அரசியல் சமரசத்தை ஊக்குவிக்க முயன்று வருவதுடன், சீனாவின் செல்வாக்கை இலங்கையில் குறைக்கவும் முயன்று வருகிறது.

ஜே.வி.பி. இன் தேர்தல் அறிக்கையில் இப்போதும் "ஏகாதிபத்திய-எதிர்ப்பு" மற்றும் "காலனித்துவ-எதிர்ப்பு" போன்ற வார்த்தைகள் இடம் பெற்றுள்ளன, இருந்தாலும் அது மேற்கத்திய தூதரக அதிகாரிகளுடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்தி வருகிறது. அது அமெரிக்க தலைமையிலான ஆப்கானிஸ்தான் படையெடுப்பை ஆதரித்ததுடன், வாஷிங்டனின் மோசடியான "பயங்கரவாதத்திற்கு எதிரான போரையும்" ஆதரித்தது, அத்துடன் கொழும்புவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பல விவாதங்கள் நடத்தப்பட்டுள்ளன, மூத்த நிர்வாக அதிகாரிகளுடனான விவாதங்களும் அதில் உள்ளடங்கும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஜே.வி.பி. தன்னைத்தானே இலங்கை ஆளும் வர்க்கத்திற்கான ஓர் பயனுள்ள அரசியல் கருவியாக மாற்றிக்கொண்டது என்பது மட்டுமல்ல, மாறாக ஏகாதிபத்தியத்திற்கு அதன் சேவைகளையும் வழங்கி வருகிறது.