சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

SEP campaign receives support in northern Sri Lanka

சோசலிச சமத்துவக் கட்சி வடக்கு இலங்கையில் ஆதரவு பெறுகிறது

By our correspondent
10 August 2015

Use this version to printSend feedback

வடக்கு இலங்கையில் நடைபெற உள்ள கட்சியின் இரண்டாவது தேர்தல் கூட்டத்திற்காக சோசலிச சமத்துவ கட்சி (SEP) மற்றும் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர் அமைப்பின் (IYSSE) அங்கத்தவர்களும் ஆதரவாளர்களும் காரைநகரில் தொழிலாளர்கள், மீனவர்கள், குடும்ப ஸ்திரீகள், இளைஞர்கள் மற்றும் ஓய்வூபெற்றவர்களிடையே பிரச்சாரம் செய்தனர். ஆகஸ்ட் 17 இல் நடைபெற உள்ள பொது தேர்தலில் சோசலிச சமத்துவ கட்சி, தலைநகர் கொழும்பு, வடக்கு பகுதியான யாழ்ப்பாணம் மற்றும் பெருந்தோட்டங்கள் நிறைந்த நுவரெலியா ஆகிய மூன்று மாவட்டங்களில் 43 வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது.


யாழ்பாண கூட்டத்தின் ஒரு பகுதி

சோ... பிரச்சாரகர்களுடனான நேரடி விவாதங்களில், காரைநகர் மக்கள் பெரும்பாலும் பிரதான முதலாளித்துவ தமிழ் கட்சியான தமிழ் தேசிய கூட்டணி மீது (TNA) வெறுப்பை வெளிப்படுத்தியதோடு, அதை எதிர்த்தனர். மேலும் பிரிவினைவாத தமிழீழ விடுதலை புலிகளுக்கு (எல்.டீ.டீ..) எதிரான அரசாங்கத்தின் வகுப்புவாத போர் முடிந்து ஆறு ஆண்டுகளுக்கு பின்னரும், வடக்கு பிராந்தியத்தில் இராணுவம் ஆக்கிரமித்திருப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

காரைநகர் ஒரு நீண்ட கடல்வழிப்பாதை மூலமாக யாழ்பாணத்துடன் இணைக்கப்பட்ட ஒரு தீவாகும். அங்கே வசிப்போரில் சுமார் பாதி குடும்பங்கள் மீன்பிடி குடும்பங்கள், மீதமுள்ளவர்கள் தொழிலாளர்கள், அரசு சேவகர்கள் மற்றும் விவசாயிகளாவர். போரின் காரணமாக இடம்பெயர்ந்த பல குடும்பங்கள், அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் அங்கே தான் குவிக்கப்பட்டனர். அதனோடு சேர்ந்து புதிய இராணுவ முகாம்களும் அப்பகுதியில் ஸ்தாபிக்கப்பட்டன. அரைகுறையாக சேதப்பட்ட வீடுகளும் கட்டிடங்களின் இடிபாடுகளும், இரண்டு தசாப்தத்திற்கு அதிகமாக நடந்த அந்த வகுப்புவாத போரின் கண்கூடான அடையாளங்களாக உள்ளன. பல வறிய மீன்பிடி குடும்பங்கள் கடல் ஏரிகளில் இறால் பிடிப்பதைச் சார்ந்துள்ளன

யாழ்பாணத்திலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஓரி எனும் மீன்பிடி கிராமத்தில் ஜூலை 31 அன்று தேர்தல் கூட்டம் நடத்தப்பட்டது. மீனவர்கள், விவசாயிகள், ஆசிரியர்கள், குடும்ப பெண்கள் மற்றும் மாணவர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர், அதேவேளையில் பல நூறு மக்கள் கூட்டத்திற்கு வெளியே இருந்தும் அதை செவிமடுத்தனர்.

 
விஜே
டயஸ்

சோசலிச சமத்துவ கட்சி செயலர் விஜே டயஸ் பிரதான பேச்சாளராக இருந்தார். சோசலிச சமத்துவ கட்சி வேட்பாளர் வி. கமலதாசன் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். யாழ்பாண சோ... வேட்பாளர்களுக்கு தலைமை வகிக்கும் பரமு திருஞானசம்பந்தர், IYSSE பிரதிநிதித்துவப்படுத்தும் பன்கஜ ஜயவிக்ரம மற்றும் சோ... வேட்பாளர் இராசரத்தினம் பாலகௌரி ஆகியோர் மற்ற பேச்சாளர்களாவர்.

இலங்கை அமெரிக்க ஏகாதிபத்திய போர் தயாரிப்புகளுக்குள் இழுக்கப்பட்டு வருகின்ற நிலையில், இத்தேர்தல் சர்வதேச முக்கியத்துவம் பெற்றிருப்பதைத் திருஞானசம்பந்தர் குறிப்பிட்டுக் காட்டினார். சீனாவுடன் நெருக்கமான உறவுகளை ஸ்தாபித்த மஹிந்த இராஜபக்ஷவை நீக்கும் பொருட்டு, கடந்த ஜனவரி ஜனாதிபதி தேர்தலை மைத்திரிபால சிறிசேன வெல்வதற்கு அமெரிக்கா அவருக்கு ஆதரவளித்ததை அப்பேச்சாளர் குறிப்பிட்டார். “ஜனவரி ஜனாதிபதி தேர்தலில் அந்த ஆட்சி-மாற்ற நடவடிக்கையானது, இத்தகைய போர் தயாரிப்புகளின் பாகமாக இருந்தது, அதில் சம்பந்தப்பட்டவர்கள் இப்போது இந்த பொது தேர்தலில் இவ்வரசாங்கத்தை பலப்படுத்த முயன்று வருகிறார்கள்,” என்றவர் தெரிவித்தார்

கட்சியின் புரட்சிகர சோசலிச வேலைத்திட்டத்திற்கு ஆதரவை எடுத்துக்காட்டும் வகையில் சோசலிச சமத்துவ கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு விஜே டயஸ் அழைப்புவிடுத்தார். மக்கள் முகங்கொடுக்கும் அதிமுக்கிய பிரச்சினைகளை ஒரு பாராளுமன்ற ஆட்சி வடிவத்தினூடாக தீர்த்துவிடலாம் என்ற பிரமையை சோசலிச சமத்துவக் கட்சி ஊக்குவிக்கவில்லை என்பதையும் அவர் விளங்கப்படுத்தினார். இலாபநோக்குடைய  அமைப்புமுறையை ஒழித்துக்கட்டி, சோசலிசத்தை ஸ்தாபிப்பதன் மூலமாக மட்டுமே தொழிலாளர்கள், மீனவர்கள், விவசாயிகள், குடும்ப பெண்கள், மாணவர்கள் மற்றும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகளைத் தீர்க்க முடியுமென அவர் வலியுறுத்தினார்.

முதலாளித்துவத்தை தூக்கியெறிந்து சோசலிசத்தை ஸ்தாபிப்பதற்கு, இலங்கை-ஈழம் சோசலிச குடியரசு என்ற வடிவத்தில் தொழிலாளர்களது மற்றும் விவசாயிகளது அரசாங்கம் ஒன்று அதிகாரத்திற்குக் கொண்டு வரப்பட வேண்டும்,” என்று டயஸ் அறிவித்தார்.

பிரிவினைவாத எல்.டீ.டீ.., தமிழ் உயரடுக்கிற்கான தனிச்சலுகைகளைப் பாதுகாப்பதற்காக கொழும்பு அரசாங்கத்துடன் ஓர் உடன்படிக்கைக்கு வேலை செய்யும் பொருட்டு இந்தியா மற்றும் ஏகாதிபத்திய சக்திகளின் மீது நம்பிக்கை வைத்திருந்தது, அந்த தவறான அரசியல் முன்னோக்கின் காரணமாகவே அது இராணுவரீதியில் நசுக்கப்பட்டது என்பதை டயஸ் விளங்கப்படுத்தினார். “உழைக்கும் மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பெறுவதில் முதலாளித்துவ வர்க்கத்தின் இலாயக்கற்ற தன்மையையே இந்த அனுபவம், மீண்டுமொருமுறை, துயரகரமாக நிரூபித்துக் காட்டியது. தேசிய முதலாளித்துவ வர்க்கம், சிங்கள மற்றும் தமிழ் இரண்டுமே, வகுப்புவாத பிளவுகளைக் கொண்டு தொழிலாள வர்க்கத்தினது ஐக்கியத்தை நோக்கிய முனைவுகளை பலமாக எதிர்க்கின்றன.”

1998 இன் போது எல்.டீ.டீ.. வன்னியில் சோசலிச சமத்துவக் கட்சி அங்கத்தவர்களை பல வாரங்கள் பலவந்தமாக கைது செய்து வைத்திருந்தது என்பதையும் அப்பேச்சாளர் மக்களுக்கு நினைவூட்டினார். அது, தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்திற்கான போராட்டத்தைத் தடுப்பதற்குரிய முன்முயற்சியாக இருந்தது. ஒடுக்கப்படும் மக்களின் ஜனநாயக உரிமைகள் குறித்த பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தகைமை கொண்டது தொழிலாள வர்க்கம் மட்டுமே ஆகும். “உலக சோசலிச வலைத் தளம் எனும் எமது கொள்கை பரப்பும் சாதனத்தை பயன்படுத்தி சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் அரசியல் பலத்தை ஒன்றுதிரட்டியதன் மூலமாகவே, எங்களால் எல்.டீ.டீ.. இன் பிடியிலிருந்து எமது அங்கத்தவர்களைப் பாதிப்பின்றி விடுவிக்க முடிந்தது,” என்றார்.   

முன்னர் எல்.டீ.டீ.. இன் பாராளுமன்ற ஊதுகுழலாக செயல்பட்டு வந்த தமிழ் தேசிய கூட்டணி (.தே.கூ.) இந்த பிற்போக்குத்தனமான வகுப்புவாத அரசியலைத் தொடர்ந்து கொண்டிருப்பதை டயஸ் அம்பலப்படுத்தினார். அவர் .தே.கூ. இன் தேர்தல் அறிக்கை சுட்டிக்காட்டினார். அது தமிழ் மக்களை ஒடுக்கிய மற்றும் மூன்று தசாப்தங்களுக்கு அண்மித்தளவில் அவர்களுக்கு எதிராக ஒரு மூர்க்கமான போர் தொடுத்த அதே சக்திகளோடு இணைந்து செயல்பட தயாராக இருப்பதைப் பகிரங்கமாக குறிப்பிடுகிறது.

அப்பேச்சாளர் .தே.கூ. அறிக்கையை மேற்கோளிட்டு காட்டினார்: “இலங்கை அரசு, வெளிநாடுவாழ் தமிழர்கள் மற்றும் சர்வதேச சமூகத்தின் ஆக்கபூர்வமான உதவியோடு, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவது உள்ளடங்கலாக வடக்கு மற்றும் கிழக்கின் அபிவிருத்திக்கான ஒரு விரிவான வேலைத்திட்டம் செயல்படுத்தப்படும்,” என்று குறிப்பிடுகிறது. இங்கே "சர்வதேச சமூகம்" என்ற வார்த்தை பிரதான வல்லரசுகளைக் குறிக்கிறது என்பதை டயஸ் விளங்கப்படுத்தினார்.  

அத்தகையவொரு ஏகாதிபத்திய-சார்பு முன்னோக்குடன் வகுப்புவாத கூச்சல்களும் தவிர்க்கவியலாதவாறு கைகோர்த்து செல்கின்றன என்பதையும் டயஸ் விவரித்தார். இதனால் தான் .தே.கூ., “இலங்கை அரசியலமைப்பு சட்டங்கள் தமிழர்களது சம்மதமில்லாமல் கொண்டு வரப்பட்டதாக" கூறியது. டயஸ் விவரித்தார்: “பிரிட்டிஷ் காலனிய நாட்களிலிருந்து இன்று வரையிலான அரசியலமைப்பு சட்டங்கள் அனைத்துமே சிங்கள மற்றும் தமிழ் மக்கள் இருதரப்பினரது சம்மதமின்றி தான் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த பொதுவான அடித்தளம் சிங்கள மற்றும் தமிழ் முதலாளித்துவ வர்க்கங்களால் ஒன்றுபோல மறைக்கப்படுகிறது, ஏனென்றால் அவை இரண்டுமே அவ்விரு சமூகங்களின் ஓர் ஒருங்கிணைந்த போராட்டத்தைக் குறித்து அஞ்சுவதுடன், அதை எதிர்க்கின்றன, அது சமூக புரட்சியெனும் பிரச்சினையை மேலுயர்த்துகிறது,” என்றார்.    

 
சோ
... அங்கத்தவர் இளைஞர்களுடன் பேசுகிறார்

சோசலிச சமத்துவ கட்சி பிரச்சாரகர்கள் தோப்புக்காடு கிராமத்திற்கு சென்றனர், அங்கே அத்தீவு மக்களில் பெரும்பான்மையினர் போர் முடிந்ததிற்குப் பின்னர் மீண்டும் குடியமர்த்தப்பட்டவர்களாவர். ஒரு பெண்மணி கூறுகையில், அவரது சிரமங்கள் அத்தேர்தலைக் குறித்து யோசிக்க கூட விடாமல் தடுப்பதாக தெரிவித்தார். “அரசாங்கம் ஒரு புதிய வீடு கட்டுவதற்கு 500,000 ரூபா வழங்குவதற்கு வாக்குறுதி அளித்தது, ஆனால் அதில் பாதி தொகை தான் எங்களுக்கு கிடைத்ததுகட்டுமானம் மற்றும் குடிநீருக்காக 1,000 லிட்டர் 600 ரூபா கொடுத்து தண்ணீர் விநியோக லாரிகளில் தண்ணீர் வாங்க வேண்டியுள்ளது. 2010 இல் நாங்கள் மீண்டும் குடியமர்த்தப்பட்டோம், வீடு கட்டிமுடிப்பதற்கு முன்னரே கடன்தொகை 350,000 ரூபாயாக அதிகரித்தது, கொடுக்கப்பட்ட பணமும் போதுமான அளவிற்கு இல்லை. அதுவே எங்களுக்கு பெரும் சுமையாகி விட்டது,” என்றார்.         

போரில் தனது குழந்தையை இழந்த ஒரு பெண் கூறுகையில், “2009 சண்டையின் இறுதியில், எல்.டீ.டீ.. 18 மற்றும் 20 வயது நிரம்பிய எனது இரண்டு குழந்தைகளையும் பலவந்தமாக தம்முடன் இணைத்துக் கொண்டனர். ஒரு குழந்தை சண்டையில் இறந்துவிட்டது, மற்றொன்று காணாமல் போய்விட்டது. எங்களது குழந்தைகளைக் கண்டறிய தமிழ் கட்சிகள் ஒன்றுமே செய்யவில்லை. அவர்கள் ஒவ்வொரு தேர்தலிலும் வாக்குறுதிகள் அளிக்கின்றனர் ஆனால் எதையும் நிறைவேற்றுவதில்லை. தமிழ் தேசிய கூட்டணியிடமிருந்து எங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை என்றாலும் கூட, அவர்கள் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்வதால் பெரும்பாலானவர்கள் அவர்களுக்கு தான் வாக்களிக்கின்றனர். நானும் ஒருவேளை அதையே செய்ய வேண்டியிருக்கும்,” என்றார். தமிழ் தேசிய கூட்டணியின் அரசியல், தமிழ் முதலாளித்துவ வர்க்கத்தைப் பிரதிநிதித்துவம் செய்கிறது என்பதை சோசலிச சமத்துவ ஆதரவாளர்கள் விவரித்த போது, அவர், “நீங்கள் கூறுவது சரி தான். ஆனால் இதுபோல எங்களுக்கு யாரும் விளங்கப்படுத்தவில்லை,” என்றார்.

சரஸ்வதி என்பவர் போரில் அவர் மகள் கொல்லப்பட்டதாகவும், அவரது மகன் இராணுவ சிறை முகாமில் நீண்டகாலத்திற்கு அடைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவித்தார். “வடக்கு மாகாண கவுன்சில் அன்புக்குரியவர்களை இழந்தவர்களது குடும்பங்களுக்காக ஒரு பதிவாளரை அறிவித்தது, உதவி வழங்கவும் வாக்குறுதி அளித்தது,” என்று கூறிய அவர், “நாங்கள் பதிவு செய்தோம், ஆனால் எந்த உதவியும் கிடைக்கவில்லை. முன்னாள் கைதிகளுக்கு அரசாங்கம் உதவுமென்றும் அறிவிக்கப்பட்டது, ஆனால் ஒன்றுமே செய்யவில்லை. நாங்கள் வறுமையில் தான் வாழ்கிறோம். அவர்கள் தேர்தல் சமயத்தில் மட்டும் எங்களைச் சந்திக்க வருகிறார்கள், பின்னர் எங்களை மறந்துவிடுகிறார்கள்,” என்றார்.   

போருக்கு முன்னதாக மீன்பிடி சாதனங்களை உற்பத்தி செய்த சீநோர் ஆலையில் வேலையிலிருந்த நாகேஸ், ஒரு கண்ணிவெடியில் அவரது காலை இழந்திருந்தார், அவர் கூறுகையில், “எனக்கு வேலை இல்லை, வறுமையில் வாழ்கிறேன்,” என்று விவரித்தார். “சீநோர் ஆலையிலிருந்து நான் வேலையை விட்டு நீக்கப்பட்ட போது அவர்கள் எனக்கு 200,000 ரூபா கொடுத்தார்கள். அது எனது வீட்டை பழுது பார்க்க கூட போதுமானதல்ல. எனது கால்களுக்கு சாக்ஸ் வாங்க கூட என்னிடம் பணமில்லை உங்களது கருத்துக்களைக் கேட்ட பின்னர் இந்த முறை உங்களுக்கு வாக்களிக்க நான் முடிவெடுத்திருக்கிறேன்,” என்றார்.