சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan election: 110 unions and NGOs back right-wing, pro-US UNP

இலங்கை தேர்தல்: 110 தொழிற்சங்கங்கள் மற்றும் அரசுசாரா அமைப்புகளும் வலதுசாரி, அமெரிக்க-ஆதரவிலான ஐக்கிய தேசிய கட்சியை ஆதரிக்கின்றன

By Saman Gunadasa
12 August 2015

Use this version to printSend feedback

இலங்கையில் ஆகஸ்ட் 17 பொது தேர்தலுக்கு முன்னதாக, ஐக்கிய தேசிய கட்சி (யூ.என்.பீ.) தலைவரும் பிரதம மந்திரியுமான ரணில் விக்ரமசிங்க, 110 அரசுசார அமைப்புகள் (NGO), தொழிற்சங்கங்கள், தொழில்துறைசார் மற்றும் கல்வித்துறைசார் குழுக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் (NMSJ) தலைவரான ஒரு புத்தமதகுரு மடுலுவாவே சோபித தெரோ உடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

ஜனவரி 8 இல் கிடைத்த வெற்றியை பாதுகாத்து, பலப்படுத்தி, தொடர்வதற்கான பொது பகிரங்க உடன்படிக்கை" என்று தலைப்பிட்ட அந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், மஹிந்த இராஜபக்ஷவை நீக்கி மைத்திரிபால சிறிசேனவை நிறுவுவதற்கு ஜனவரி ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தை ஆதரித்த உயர்மட்ட மத்தியதர வர்க்க குழுக்களுக்கு பின்னால் ஓரணியில் நிற்பதை பிரதிபலிக்கிறது. சீனாவிற்கு எதிரான அதன் "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்புக்கும்" மற்றும் அப்பிராந்தியம் முழுவதிலும் இராணுவத்தை ஆயத்தப்படுத்துவதற்கும் ஆதரவான ஓர் அரசாங்கத்தை நிறுவுவதற்காக, அந்த ஆட்சி-மாற்றம் திரைக்குப் பின்னால் நீண்டகாலமாக அமெரிக்கா ஆதரித்து நடந்திய தந்திரங்களின் விளைபொருளாக இருந்தது.

அந்த கடந்த மாத உடன்பாட்டில் கையெழுத்திட்ட அமைப்புகள், இந்த தேர்தல் மூலமாக மறுபிரவேசம் செய்ய முயன்றுவரும் இராஜபக்ஷக்கு எதிராக சிறிசேன மற்றும் விக்ரமசிங்கவை "ஜனநாயகவாதிகளாக" பெருமைப்படுத்தி வருகின்றன. வாஷிங்டன் இராஜபக்ஷவை எதிர்ப்பது அவரது ஜனநாயக-விரோத ஆட்சி முறைகளுக்காகவோ அல்லது ஊழல்களுக்காகவோ அல்ல, மாறாக அவர் பெய்ஜிங் உடன் மிக நெருக்கமான உறவை ஸ்தாபித்துள்ளார் என்பதற்காக ஆகும். அதேபோல தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான குற்றங்களில் அளவுக்கதிகமாய் மூழ்கிய இரண்டு முதலாளித்துவ அரசியல்வாதிகளான சிறிசேன மற்றும் விக்ரமசிங்கவுக்கும் அது ஆதரவளிக்கிறது, ஏனென்றால் அவர்கள் கொழும்பு மற்றும் வாஷிங்டனுக்கு இடையே நெருக்கமான உறவுகளை மீள்ஸ்தாபிதம் செய்தனர்.

சண்டே டைம்ஸ் குறிப்பிட்டதுபோல், வெகுகாலத்திற்கு முன்னர் 2013 இலேயே வாஷிங்டனால் அது அரவணைக்கப்பட்டு, அவர் வசிக்கும் அரண்மனையிலேயே இலங்கைக்கான அமெரிக்க தூதர் மிக்கெல் ஜெ. சிசன் அவரை சந்தித்ததாக குறிப்பிட்டது. அந்த சந்திப்பைத் தொடர்ந்து, அவர் ஊடகங்களுக்கு கூறுகையில், அந்த தூதர் பிரச்சினைகளை முன்னுக்குக் கொண்டு வருவதற்காக அவரது குழுவைப் பாராட்டினார் "அவற்றை, ஒரு வெளிநாடு முன்னுக்குக் கொண்டு வந்திருந்தால், மற்றொரு நாட்டு விவகாரங்களில் தலையிடுவதாக அங்கே குற்றச்சாட்டுக்கள் வந்திருக்கும்,” என்றார்.

நவ சம சமாஜ கட்சி, ஐக்கிய சோலிஸ்ட் கட்சி, முன்னிலை சோசலிஸ்ட் கட்சி ஆகிய போலி-இடது அமைப்புகள் அந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்றாலும், அவை ஒன்றுபோல வலதுசாரி அமெரிக்க-ஆதரவிலான யூ.என்.பீ. மற்றும் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி (UNFGG) என்றறியப்படும் அதன் கூட்டணிக்கு, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, அவர்களது ஆதரவை நீடித்து வருகின்றன.

இந்த மோசடியை விற்கும் பணி மிகவும் சிக்கலானது ஏனென்றால் யூ.என்.பீ. தலைமையிலான அரசாங்கம் பதவியிலிருந்த ஏழு மாதங்களில், ஜனவரி தேர்தலில் அளிக்கப்பட்ட பல வாக்குறுதிகளைக் கைத்துறந்துள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் புதிய கொள்கை வாக்குறுதிகளின் ஒரு நீண்ட பட்டியலை முன்வைக்கிறது. ஒரு புதிய அரசியலமைப்பு; சிறந்த இலவச கல்வி, சுகாதாரம், குழந்தை உரிமைகள், கலை மற்றும் கலாச்சாரம்; விவசாயிகள், மீனவர்கள் மற்றும் சுய-தொழில் செய்பவர்களுக்கு உதவிகள்; சொத்து வைத்திருப்பவர்கள் மற்றும் சொத்து-இல்லாதவர்களுக்கு இடையிலான இடைவெளியைக் குறைக்கும் பொருளாதார திட்டமிடல்; புதிய ஊழல்-எதிர்ப்பு சட்டமசோதா மற்றும் நிதியியல் குற்றங்கள் மற்றும் இலஞ்சங்கள் மீதான விசாரணைக்கு உதவியாக புதிய தொழில்நுட்பம், இன்னும் ஏனையவையும் அப்பட்டியலில் உள்ளடங்கி உள்ளன.

இந்த வாக்குறுதிகளை யாருமே நம்ப மாட்டார்கள். இலங்கையின் மிகப் பழைய முதலாளித்துவ கட்சியான யூ.என்.பீ. 1977 இல் சந்தைசார் மறுகட்டமைப்பை அறிமுகப்படுத்தியதுடன், அப்போதிருந்து அதை பாதுகாத்து வந்துள்ளது. அதன் எதிராளியான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் சேர்ந்து, அது பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளி ஆழமடைவதற்கும், கல்வி மற்றும் சுகாதாரத்துறை போன்ற சமூக சேவைகள் சீரழிக்கப்படுவதற்கும், விவசாயிகள் மற்றும் பல சிறுவணிகங்கள் வறுமைக்குள் தள்ளப்படுவதற்கும் பொறுப்பாகிறது. ஆழமடைந்து வரும் உலகளாவிய பொருளாதார நெருக்கடி நிலைமைகளின் கீழ், அடுத்த அரசாங்கம், அது யூ.என்.பீ. தலைமையிலானதாக சரி அல்லது ஸ்ரீ..சு.கட்சி தலைமையில் இருந்தாலும் சரி, உழைக்கும் மக்களின் வாழ்க்கை நிலைமைகள் மீதான தாக்குதலை ஆழப்படுத்தும்.

அந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் "தேசிய மற்றும் மத நல்லிணக்கத்தைத் தொந்தரவிற்குட்படுத்தாமல்" அரசு எந்திரத்தை சீரமைக்கவும் வாக்குறுதி அளிக்கிறது. 1948இல் உத்தியோகபூர்வமாக சுதந்திரம் அடைந்ததிலிருந்து, யூ.என்.பீ. மற்றும் ஸ்ரீ..சு.கட்சி இரண்டுமே தொழிலாள வர்க்கத்தைப் பிளவுபடுத்தவும் மற்றும் முதலாளித்துவ ஆட்சிக்கு முட்டுகொடுக்கவும் தமிழ்-விரோத வகுப்புவாதத்தைப் பயன்படுத்தி உள்ளன. 1983 தமிழர்-விரோத படுகொலைக்குக்கு ஐக்கிய தேசிய கட்சியே பொறுப்பானது, அது அண்மித்தளவிற்கு மூன்று தசாப்தகால வகுப்புவாத போர் தொடங்கியதைக் குறித்தது. அத்தகையவொரு போரில் அத்தீவு கந்தலாக கிழிக்கப்பட்டு, பரந்தளவிலான மரணங்கள் மற்றும் பேரழிவுகள் ஏற்பட்டன.

அரசாங்க கொள்கை உருவாக்குவதில் ஒத்துழைக்கும் பொருட்டு, அந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளைக் கொண்டு இப்போது ஓர் ஆலோசனை குழு அமைக்க யூ.என்.பீ. திட்டமிட்டு வருகிறது. ஆகஸ்ட் 17 தேர்தலில் UNFGG வென்றால் ஒரு புதிய அரசியலமைப்பை வரைவதற்கு, தேர்ந்தெடுக்கப்படாத "அரசியலமைப்பு நிர்ணய சபைக்கு" தலைவராக அவரை நியமிக்க வேண்டுமென்ற நிபந்தனையின் மீதே அவர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக, கையெழுத்திடும் அந்நிகழ்வில் புத்தமதகுரு சோபித வலியுறுத்தினார்.

சோபித மற்றும் UNFGG ஆதரிப்பதில் பல தொழிற்சங்கங்கள் ஒரு முக்கிய பாத்திரம் வகிக்கின்றன. ஆனால் அவற்றின் அங்கத்தவர்களிடமிருந்து அவை எதிர்ப்பை முகங்கொடுக்கின்றனர். 1980களில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட நூறு ஆயிரக் கணக்கான பொதுத்துறை தொழிலாளர்களை அது நீக்கியமை உட்பட தொழிலாள வர்க்கத்தின் மீதான யூ.என்.பீ. இன் கடந்தகால தாக்குதல்களை அவர்கள் இன்னும் நினைவில் கொண்டுள்ளனர்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்கு ஒரு வழிவகையாக இருக்கும் என்று அறிவித்து, அரசு தாதிமார் அதிகாரிகள் அமைப்பின் தலைவர் சமன் ரத்னபிரிய தொழிலாளர்களுக்கு மறுஉத்தரவாதம் அளிக்க முயன்றார். “மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் முன்னோக்கி செல்லவும் நாங்கள் [அரசாங்கத்திற்கு] ஒத்துழைப்போம். ஆனால் நாங்கள் மக்களுக்கு கூறுவதென்னவென்றால், அரசாங்கம் அதன் வாக்குறுதிகளைக் கைவிட்டால் நாங்கள் அதிலிருந்து வெளியேறி போராடுவோம்,” என்றார்.

போர் நடவடிக்கைகளுக்கான தியாகம் என்ற பெயரில் இராஜபக்ஷ அரசாங்கம் திணித்த கூலி உயர்வு முடக்கத்திற்கு எதிரான தொழிலாளர்களின் எந்தவொரு போராட்டத்தையும் நசுக்குவதில், இராஜபக்ஷ அரசாங்கத்தின் கீழ் இத்தகைய தொழிற்சங்க அதிகாரத்துவவாதிகளின் வரலாற்றை தொழிலாளர்கள் நினைவுகூர வேண்டும். தொழிற்சங்கங்கள் மட்டுப்படுத்தப்பட்ட தொழில்துறை நடவடிக்கையை கொண்டு அச்சுறுத்தியபோது, இராஜபக்ஷ, தொழிலாளர்களின் கோரிக்கைகளைப் பூர்த்தி செய்ய அவரது வகுப்புவாத போரை அவர் நிறுத்த வேண்டுமா என கேள்வி எழுப்பினார். தொழிற்சங்க தலைவர்களின் மௌனம் போருக்கான மற்றும் தொழலாள வர்க்கத்தின் வாழ்க்கை நிலைமைகள் மீதான அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கான அவர்களது ஆதரவைச் சமிக்ஞை செய்தது.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட உயர்மட்ட மத்தியத வர்க்க அமைப்புகள், ஐக்கிய தேசிய கட்சிக்காக (யூ.என்.பீ.) பிரச்சாரம் மட்டும் செய்யவில்லை, மாறாக அக்கட்சி தேர்தலில் தோற்றால் அதற்கும் தயாரிப்பு செய்து வருகின்றன. இராஜபக்ஷ மீண்டும் அதிகாரத்திற்கு திரும்பி வருவதையோ, சீனாவை நோக்கி வெளியுறவு கொள்கையைத் திருப்புவதையோ வாஷிங்டன் அனுமதிக்காது. “ஜனவரி 8ஆம் தேதி புரட்சி தலைகீழாவதை அனுமதிக்க கூடாது,” என்று விக்ரமசிங்க உறுதியாக அறிவித்துள்ளார். அந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை சுற்றி குழுமியிருக்கும் உயர்மட்ட மத்தியதர வர்க்க அடுக்குகள், ஈரான் மற்றும் உக்ரேன் போன்ற நாடுகளில் செய்ததைப் போல ஒரு "வண்ணப் புரட்சிக்கு" வாஷிங்டன் அனுமதி வழங்க முடிவெடுக்குமா என்று காத்திருக்கின்றன.

தொழிலாளர்களும் கிராமப்புற ஏழைகளும் ஒட்டுமொத்தமாக ஆளும் வர்க்கத்திடமிருந்து உடைத்துக் கொள்வதன் மூலமாக மட்டுமே அவர்களது அடிப்படை நலன்களைப் பாதுகாக்க முடியும் என்பதை சோசலிச சமத்துவ கட்சி (SEP) வலியுறுத்துகிறது. இராஜபக்ஷ மற்றும் விக்ரமசிங்க ஆகிய இரண்டு முகாம்களுமே சிக்கன நடவடிக்கைகளை ஈவிரக்கமின்றி நடைமுறைப்படுத்துவதிலும் மற்றும் ஜனநாயக உரிமைகளைத் தாக்குவதிலும் சமஅளவில் பொறுப்பேற்றுள்ளன. முதலாளித்துவ கட்சிகள் உழைக்கும் மக்களும் இளைஞர்களும் முகங்கொடுக்கும் பொருளாதார பிரச்சினைகள் மற்றும் ஜனநாயக அபிலாஷைகளுக்கு தீர்வு வழங்க அமைப்புரீதியில் இலாயக்கற்றுள்ளன.

சோசலிச சமத்துவ கட்சி தொழிலாள வர்க்கத்திற்குக் கல்வியூட்டி ஒன்றுதிரட்டுவதற்காகவும் மற்றும் வரவிருக்கும் போராட்டங்களுக்கு அவசியமான புரட்சிகர தலைமையைக் கட்டமைப்பதற்காகவும் கொழும்பு, யாழ்பாணம் மற்றும் நுவரேலியா மாவட்டங்களில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. ஐக்கிய தேசிய கட்சியும் மற்றும் ஸ்ரீ..சு.கட்சியும், ஒரு புதிய உலக போரைத் தூண்டிவிட அச்சுறுத்துகின்ற புவிசார் அரசியல் பதட்டங்களின் சுழலுக்குள் இலங்கை தொழிலாள வர்க்கத்தை இழுத்து வருகின்றன என்பதை நாங்கள் எச்சரிக்கிறோம். தெற்காசியா மற்றும் சர்வதேச அளவில் சோசலிசத்திற்கான போராட்டத்தின் பாகமாக இலங்கை-ஈழ சோசலிச குடியரசுக்கான சோசலிச சமத்துவ கட்சியின் தேர்தல் அறிக்கையை வாசிக்குமாறும், எமது கட்சியில் இணைய விண்ணப்பிக்குமாறும் நாங்கள் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.