சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Chinese currency devaluation underscores global instability

சீன நாணய மதிப்பிறக்கம் உலகளாவிய ஸ்திரமின்மையை எடுத்துக்காட்டுகின்றது

Nick Beams
12 August 2015

Use this version to printSend feedback

அதன் செலாவணி ரென்மின்பியின் (இது யுவான் என்றும் கூறப்படும்) மதிப்பில் 2 சதவீதத்தை குறைப்பதென செவ்வாயன்று சீன அரசாங்கம் மேற்கொண்ட திடீர் நகர்வு, உலகளாவிய நிதியியல் சந்தைகளை அதிர செய்தது. இது சீனப் பொருளாதார நிலை மற்றும் ஒட்டுமொத்தமாக உலக முதலாளித்துவத்தின் ஸ்திரப்பாடு பற்றி தெரியப்படுத்துவதைவிட, எடுக்கப்பட்ட தீர்மானத்தின் உடனடி விளைவுடன் பெரிதும் தொடர்புபட்டதல்ல.      

2005 இல் அமெரிக்க டாலருக்காக சீனா அதன் இறுக்கமான செலாவணி விகித கட்டுப்பாடுகளைக் கைவிட்டு, பணப்புழக்க நிர்வகிப்பை ஏற்றதற்குப் பின்னர், ஒரே நாளில் செலாவணி மதிப்பில் செய்யப்பட்ட மிகப்பெரிய மாற்றம் இதுவேயாகும். நேற்றைய நடவடிக்கைக்கு முன்னர், 0.16 சதவீத மாற்றியமைப்பே இந்த ஆண்டில் செய்யப்பட்ட மிகப்பெரிய மாற்றியமைப்பாக இருந்தது.

சீனப் பொருளாதாரத்திற்கு அதிகரித்துவரும் பிரச்சினைகளை எடுத்துக்காட்டும் புள்ளிவிபரங்களால் தூண்டப்பட்டு, இந்த மதிப்பிறக்கம் கொண்டு வரப்பட்டது. இந்த ஆண்டு முழுவதும் வீழ்ச்சி அடைந்துள்ள ஏற்றுமதிகள், ஜூலையில் மீண்டும் 8.3 சதவீத அளவிற்கு சரிந்தன. இறக்குமதிகளும் குறைந்தன, ஜூனில் 6.1 சதவீத வீழ்ச்சிக்குப் பின்னர், ஜூலையில் ஓராண்டுக்கு முந்தையதை விட 8.1 சதவீதம் வீழ்ச்சி அடைந்தன. இது சீனத் தொழில்துறைகளுக்கு மூலப் பொருட்களின் தேவை குறைந்து வருவதைக் காட்டுகிறது.    

இரண்டாம் காலாண்டிற்கான உத்தியோகபூர்வ வளர்ச்சி விகிதம், அரசின் இலக்கிற்கு அண்மித்தளவில் 7 சதவீதத்திற்கு வந்திருந்த போதினும், பெரும்பாலான நடுநிலை ஆய்வாளர்கள் நிஜமான வளர்ச்சி அனேகமாக 4 சதவீதத்தை அண்மித்தே இருக்குமென்று குறிப்பிடுகிறார்கள். இந்த உத்தியோகபூர்வ 7 சதவீத விகிதமே கூட ஆறு ஆண்டுகளைவிட குறைவானதாகும்.  

1997-98 ஆசிய நிதியியல் நெருக்கடிக்கான பிரதிபலிப்பாகவோ அல்லது செப்டம்பர் 2008 லெஹ்மன் பிரதர்ஸ் பொறிவை அடுத்து ஏற்பட்ட உலகளாவிய சரிவிற்கான பிரதிபலிப்பாகவோ கூட சீன அதிகாரிகள் நாணய மதிப்பிறக்கத்தை செய்யவில்லை என்ற உண்மையே, செவ்வாய்கிழமை தீர்மானத்தின் முக்கியத்துவத்தை அடிக்கோடிடுகிறது.

ஏழு ஆண்டுகளுக்கு முன்னர், கடன்வழங்குவதன் ஒரு விரிவாக்கத்துடன் சேர்ந்து ஒரு பாரிய ஊக்கப்பொதி சீனப் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்காக கொண்டு வரப்பட்டது. இது ஒட்டுமொத்த அமெரிக்க நிதியியல் அமைப்புமுறைக்கு சமமானதென்று மதிப்பிடப்பட்டது. சீனாவிற்கான முக்கிய ஏற்றுமதி சந்தைகளாக உள்ள பிரதான முதலாளித்துவ நாடுகளின் பொருளாதாரங்கள், ஒரு கூர்மையான வீழ்ச்சிக்குப் பின்னர், பலமான வளர்ச்சிக்குத் திரும்புமென்று எதிர்பார்க்கப்பட்டது.   

ஆனால் 2008 நெருக்கடி வெறுமனே குறிப்பிட்ட காலகட்டத்திற்குரிய ஒரு இறக்கமல்லாது,  மாறாக ஓர் அமைப்புமுறைரீதியிலான நிலைமுறிவின் தொடக்கமாக இருந்ததால், சீன அரசாங்கத்தின் அந்த முன்னோக்கை தூக்கிவீசிவிட்டது. ஐரோப்பிய உற்பத்தி இன்னமும் 2007 மட்டங்களுக்குத் திரும்பவில்லை, அதேவேளையில் ஜப்பான் மற்றும் அமெரிக்க வளர்ச்சி விகிதங்களோ வரலாற்றளவில் குறைந்த மட்டங்களில் உள்ளன. 2008க்கு முந்தைய வளர்ச்சி விகிதங்களுக்குத் திரும்புவதென்பது நடக்கப் போவதில்லை என்பதை சர்வதேச நாணய நிதியம் கடந்த ஏப்ரலில் சுட்டிக்காட்டியது.

ஐரோப்பாவிற்கான ஏற்றுமதிகளில் ஓராண்டுக்கு முன்னர் இருந்த மட்டங்களை விட 12 சதவீத சரிவு, ஜப்பானுடனான உறவுகளில் 10 சதவீத சரிவு என இவற்றால் சீனா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.   

அதன் உத்தியோகபூர்வ அறிக்கையில், சீன மக்கள் வங்கி ஓர் உலகளாவிய செலாவணி போரில் இணைய முயலவில்லை என்பதை குறிப்பிட்டுக்காட்ட மிகுந்த சிரமம் எடுத்தது. ஓர் உலகளாவிய செலவாணி போரில், பல நாடுகள் அவற்றின் ஏற்றுமதிகளை அதிகரிக்க வேண்டுமென்றே அவற்றின் செலாவணி மதிப்புகளைக் குறைத்துள்ளன. சீனா தெரிவிக்கையில், இந்த நடவடிக்கை "ஒரேயொரு முறை" முடிவு என்றும், கடந்த ஆண்டில் அதன் செலாவணி 10 சதவீதத்திற்கு அதிகமாக உயர்ந்துவிட்டதை அடுத்து அதன் செலாவணி விகிதத்தை மிகவும் "சந்தை-அடிப்படையில்" வைப்பதே அதன் விருப்பமென்றும் அறிவித்தது.  

உலகளாவிய பொருளாதார நிலை குறித்து சீன நடவடிக்கை என்ன அர்த்தப்படுத்துகிறது என்பதன் மீதான அச்சங்கள், சீனா எடுத்த தீர்மானத்திற்கு ஒப்பீட்டளவில் மௌனமான உத்தியோகபூர்வ அமெரிக்க விடையிறுப்புக்குப் பின்னால் தெரிகிறது.

ரென்மின்பியை ஓர் உலகளாவிய மத்திய செலாவணியாக்க அனுமதிக்கும் எந்தவொரு முடிவும், "கோழிக்கூட்டிற்கு நரியை காவலாக வைப்பதுடன்" ஏன் சம்பந்தப்படுகிறது என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது என்று கூறி, நியூயோர்க்கின் மூத்த ஜனநாயக கட்சி செனட்டர் சார்லஸ் ஸ்கூமர் அந்த முடிவுக்கு எதிராக சீறியிருந்த போதினும், அமெரிக்க கருவூலரோ மிக மிக எச்சரிக்கையோடு இருந்தார்.  

அதன் உத்தியோகபூர்வ அறிக்கையில் அது குறிப்பிடுகையில், “இன்று அறிவிக்கப்பட்ட மாற்றங்கள்" அமெரிக்க கொள்கையின் போக்கிலேயே "இன்னும் கூடுதலாக செலாவணி விகிதத்தை சந்தையே-தீர்மானிக்குமாறு செய்வதை நோக்கிய அதன் நகர்வில் மற்றொரு படியாகும் என்பதை சீனா சுட்டிக்காட்டியுள்ளது,” என்றது. “இந்த மாற்றங்கள் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்பதை அது தொடர்ந்து கண்காணிக்கும்" என்பதையும் அது சேர்த்துக் கொண்டது, அத்துடன் "எவ்விதத்திலாவது சீர்திருத்தங்கள் திரும்ப பெறப்பட்டால் அது ஒரு பிரச்சனைகளை கொடுக்கும் நிகழ்வாகவே,” என்றது எச்சரித்தது.   

சீனாவின் நடவடிக்கை உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரத்தில் ஒரு கீழ்நோக்கிய சுழற்சிக்கு முன்னறிவிப்போ என்ற அச்சங்கள் பங்குச்சந்தைகள் மற்றும் பண்டங்களின் விலைகள் என இரண்டினது நகர்வுகளிலும் பிரதிபலித்தன. அமெரிக்காவில், டோவ் 212 புள்ளிகள் சரிந்தது, அதை தொடர்ந்து ஐரோப்பாவில் கூர்மையாக வீழ்ச்சிகள் இருந்தன மற்றும் ஆசியாவிலும் சரிவுகள் இருந்தன, அதேவேளையில் தொழில்துறை பண்டங்கள் மேற்கொண்டு விலை வீழ்ச்சிகளால் பாதிக்கப்பட்டன.  

உலகளாவிய பொருளாதார நடவடிக்கைக்கு ஒரு குறியீடாக கருதப்படும் தாமிரம், ஆறு ஆண்டு புதிய குறைவாக 4 சதவீதம் சரிந்தது, அதேவேளையில் எண்ணெய் உச்ச வரம்பை தீர்மானிக்கும் Brent கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 50 டாலருக்கும் குறைவாக வீழ்ச்சி அடைந்தது. இரும்பு எஃகு சுரங்க தொழில் நிறுவனம் BHP Billiton இன் பங்குகள் 5 சதவீத அளவிற்கு வீழ்ச்சி அடைந்தன, பண்டங்களுக்கான Glencore கூட்டுக்குழுமத்தினது பங்குகள் சாதனையளவிற்கு குறைவாக 7.3 சதவீதம் வீழ்ந்தன.

சீனாவின் செலாவணி நடவடிக்கை ஒட்டுமொத்த உலகளாவிய பொருளாதாரத்தில் ஆழமடைந்துவரும் மந்தநிலை போக்குகளைக் குறித்துக் காட்டுகிறது என்ற அச்சங்களையே சந்தையின் எதிர்விடையிறுப்பு பிரதிபலிக்கிறது.

2008 உலகளாவிய நிதியியல் நெருக்கடிக்குப் பின்னர் உடனடியாக, உலக பொருளாதார வளர்ச்சிக்கான ஊக்குவிக்கும்சக்தியாக சீனா சேவையாற்றுமென்ற வாதம் முன்னெடுக்கப்பட்டது. சில காலத்திற்கு முன்னர் அந்த பிரமை தகர்ந்து போனது. அதற்கு பின்னரில் இருந்து, சீன முதலீடும் மற்றும் நில/கட்டிடத்துறை வளர்ச்சியும் தளர்ந்துவருவது, உலகளாவிய அளவில், அதுவும் குறிப்பாக சீனப் பொருளாதாரத்தைச் சார்ந்திருக்கும் எழுச்சிபெற்றுவரும் சந்தைகள் என்றழைக்கப்படுபவைகளுக்கு, மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்துமென்ற அதிகரித்துவரும் அச்சங்கள் அந்த பிரமையைப் பிரதியீடு செய்துள்ளன.    

அவர்களது பங்கிற்கு, சீன அரசாங்கமும் நிதியியல் அதிகாரிகளும் உலக வங்கியுடன் இணைந்து இயங்கி கொண்டே, சந்தை சக்திகளுக்கு நிதியியல் அமைப்புமுறையைத் திறந்துவிடுவதன் மூலமாக பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு புதிய அடித்தளம் அமைக்க பெரும்பிரயத்தனத்துடன் இயங்கி உள்ளனர்.

இது தான் கடந்த ஆண்டு, பங்குச்சந்தைக்குள் நிறைய முதலீடு செய்யுமாறு நடுத்தர வர்க்கங்களின் பிரிவுகளை ஊக்குவித்ததற்கு பின்னால் இருந்தது. ஆனால் அந்த முனைவும் ஒரு பேரழிவுக்கு நெருக்கத்தில் போய் முடிந்தது. நிதியியல் அதிகாரிகள் ஜூனில் அரசாங்கத்தால்-தோற்றுவிக்கப்பட்ட பங்குச்சந்தை குமிழியைக் கட்டுப்பாட்டில் கொண்டு வர நகர்ந்த போது, அதுவொரு சந்தை பொறிவைத் தூண்டியது. நூறு பில்லியன் கணக்கான டாலர்கள் ஒதுக்கீடு மற்றும் நூற்றுக் கணக்கான நிறுவனங்களின் பங்கு-வர்த்தகத்திற்குத் தற்காலிக தடை ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு மிகப்பெரிய தலையீடு அதற்கு அவசியப்பட்டது.

கம்யூனிஸ்ட் கட்சியால் பிரதிநிதித்துவம் செய்யப்படும் மிகப் பணக்கார ஒரு செல்வந்த அடுக்கின் சீன ஆட்சி, ஒரு பொருளாதார நெருக்கடி பாரிய சமூக மற்றும் வர்க்க போராட்டங்களுக்கு எழுச்சி கொடுக்கும் என்றும், அது பதவியிலிருப்பதையே அச்சுறுத்தும் வகையில் சட்டபூர்வத்தன்மை மீதான ஒரு நெருக்கடிக்கு இட்டுச் செல்லுமென்றும் மிகப்பெரும் அச்சத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

சீன ஆட்சிக்கு அப்பாற்பட்டு, ஆளும் பொருளாதார மற்றும் நிதியியல் உயரடுக்கு, தொடர்ச்சியான வளர்ச்சி என்பதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும், பொருளாதார ஸ்திரப்பாட்டை மீட்டமைப்பதற்கான வேறெந்த நடவடிக்கைகளையும் கூட ஆலோசிக்க சாத்தியமில்லாமல் இருக்கிறது என்ற ஆழமான முரண்பாடுகளையே இந்த மதிப்பிறக்க நடவடிக்கை எடுத்துக்காட்டுகிறது. பைனான்சியல் டைம்ஸ் அந்த செலாவணி நகர்வு குறித்து குறிப்பிடுகையில், சீனா "அதன் வர்த்தக பங்காளிகளுக்கு இடையிலான சலசலப்புகளை ஒரு முழு-அளவிலான போருக்குள் முடுக்கிவிட விரும்புவதற்கு" அக்கறைகொண்டிருப்பதாக கருதமுடியாதென்று குறிப்பிட்டது. ஆனால் அது தொடர்ந்து குறிப்பிடுகையில், “விருப்பங்கள் ஒருபுறம் இருந்தாலும், விளைவுகள் மறுபுறம் இருக்கின்றன,” என்றது.        

முன்பு எப்போதையும் விட ஒன்றோடொன்று மிக ஆழமாக பிணைந்துள்ள சர்வதேச பொருளாதாரத்திற்கு, அறிவுபூர்வமான உலகளாவிய வழிகாட்டலும், கட்டுப்பாடும் அவசியப்படுகிறது. ஆனால் முதலாளித்துவ ஆளும் வர்க்கங்களோ தேசிய-அரசு அமைப்புமுறையில் வேரூன்றி உள்ளன. அவை அனைத்தினும் மிக கூர்மையாக மந்தநிலைமை மற்றும் பின்னடைவு நிலைமைகளின் கீழ் ஒன்றோடு மற்றொன்று மோதலுக்கு வருகையில், அவற்றின் சொந்த நலன்களை அவை பாதுகாக்க மற்றும் முன்னெடுக்க விழைகின்றன

சீனாவினால் எடுக்கப்பட்ட மதிப்பிறக்க முடிவிலிருந்து வெளிப்பட்ட உலகளாவிய பொருளாதாரத்தின் நெருக்கடிகள் மற்றும் முரண்பாடுகளை, ஒரேயொரு சமூக சக்தியால் மட்டுமே தீர்க்க முடியும், அது அதன் இயல்பிலேயே சர்வதேசியத்தன்மையைக் கொண்டிருப்பதுடன், காலங்கடந்த தேசிய-அரசு அமைப்புமுறையையும் கடந்து நிற்கிறது. அந்த சக்தி உலக தொழிலாள வர்க்கமாகும், அது முதலாளித்துவத்தை தூக்கியெறிவதற்காக மற்றும் சோசலிசத்தை ஸ்தாபிப்பதற்காக ஒன்றுதிரட்டப்பட வேண்டும்.