சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Vote for the Socialist Equality Party!

For socialist program against war, austerity and to defend democratic rights! For a workers and peasants government!

சோசலிச சமத்துவக் கட்சிக்கு வாக்களிக்கவும்!

போர், சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராகவும் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கவுமான சோசலிச வேலைத்திட்டத்திற்காக!

தொழிலாளர் விவசாயிகள் அரசாங்கத்திற்காக!

By Socialist Equality Party (Sri Lanka)
15 August 2015

Use this version to printSend feedback

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.), சகல முதலாளித்துவ கட்சிகளுக்கும் -ஐக்கிய தேசியக் கட்சி (யூ.என்.பி.) மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் (ஸ்ரீ.ல.சு.க.)- அவற்றின் பல்வேறு கூட்டணிகளுக்கும் எதிராக, ஒரு சோசலிச மாற்றீட்டுக்கு ஆதரவை வெளிப்படுத்துவதற்காக திங்களன்று நடக்கவுள்ள பொதுத் தேர்தலில் எமது வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற உழைக்கும் மக்களுக்கும் அழைப்பு விடுக்கின்றது.

சோ.ச.க. நாட்டின் 22 தேர்தல் மாவட்டங்களில் கொழும்பு, யாழ்ப்பாணம், நுவரேலியா ஆகிய மூன்றில் 43 வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. நீண்ட கால சோ.ச.க. தலைவர்களான விலானி பீரிஸ், பரமு திருஞானசம்பந்தர் மற்றும் .தேவராஜாவும் வேட்பாளர் குழுக்களுக்கு தலைமை வகிக்கின்றனர். சோ.ச.க.யின் உத்தியோகபூர்வ தேர்தல் சின்னம் கத்திரிக்கோல் ஆகும்.

தொழிலாள வர்க்கத்தின் நலன்களை பாதுகாக்கின்ற, வளர்ச்சிகண்டுவரும் போர் அபாயத்துக்கும் உழைக்கும் மக்களின் வாழ்க்கை நிலைமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான உக்கிரமடைந்து வரும் தாக்குதல்களுக்கும் எதிராகப் போராட ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தை அபிவிருத்தி செய்யும் ஒரே கட்சி சோ.ச.க. மட்டுமே ஆகும்.

தேர்தல் பிரச்சாரம் பொய்கள் மற்றும் கசப்பான உள் மோதல்களால் ஆதிக்கம் செலுத்தப்படுகிறது. யூ.என்.பி. தலைமையிலான நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி, ஸ்ரீ.ல.சு.க. தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இரண்டும் அமுல்படுத்தும் எண்ணமே இல்லாத தேர்தல் வாக்குறுதிகளை பொழிகின்றன.

2008 உலக நிதிய நெருக்கடியைத் தொடர்ந்து, முதலாளித்துவ அமைப்பின் தொடர்ச்சியான சர்வதேச முறிவு இலங்கையில் பாரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. பொருளாதாரம் பிரமாண்டமான வெளிநாட்டு கடன்களின் கீழும் அரசாங்கத்தின் நிதிய முறிவின் விளிம்பிலும் தடுமாறிக்கொண்டிருக்கின்றது. ஐரோப்பிய மற்றும் சர்வதேச வங்கிகள் கிரேக்க மக்கள் மீது சுமத்திவரும் ஈவிரக்கமற்ற சிக்கன நடவடிக்கைகள், இலங்கை உட்பட ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தொழிலாளர்களுக்கு நடக்கப் போவது என்ன என்பது பற்றிய ஒரு எச்சரிக்கை ஆகும்.

யூ.என்.பி., ஸ்ரீ.ல.சு.க. ஜனநாயகத்தை ஸ்தாபிக்கவோ அல்லது தொழிலாளர்கள் மற்றும் வறியவர்களின் வாழ்க்கை நிலைமையை மேம்படுத்தவோ ஆட்சியைக் கைப்பற்ற முனையவில்லை. மாறாக, சர்வதேச நாணய நிதியம் (IMF) கட்டளையிட்டுள்ள சிக்கன திட்டத்தை அமல்படுத்தவே முனைகின்றனர்.

யூ.என்.பி. மற்றும் ஸ்ரீ.ல.சு.க. இடையே இலங்கையின் ஆளும் கும்பலுக்குள் நடக்கும் கன்னை மோதலானது கூர்மையடைந்து வரும் பூகோள-அரசியல் பதட்ட நிலைமைகளால் உந்தப்படுகிறது, அனைத்துக்கும் மேலாக தனது சாத்தியமான போட்டியாளர்களுக்கு எதிராக உலக மேலாதிக்கத்தை உறுதிப்படுத்திக்கொள்வதன் பேரில் அமெரிக்க ஏகாதிபத்தியம் மேற்கொள்ளும் முயற்சிகளால் உந்தப்படுகிறது. சீனாவிற்கு எதிரான தனது "ஆசியாவில் முன்னிலை" கொள்கையின் ஒரு பகுதியாக, அமெரிக்காவானது அணு-ஆயுத அரசுகளுக்கு இடையில் யுத்தத்தை தூண்டிவிடக்கூடிய வெடிமுனைகளுக்கு ஈவிரக்கமின்றி தீ மூட்டிவருகின்றது.

கொழும்பில் வாஷிங்டனின் முதன்மை உடந்தையாளர்களாக, இப்போதைய பிரதமரும் யூ.என்.பி. தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் உள்ளனர். அவர்கள், அமெரிக்கா சீனாவுக்கு எதிரான போரைத் தயார் செய்கையில், பெய்ஜிங் உடனான இராஜபக்ஷவின் நெருக்கமான உறவுகள் வாஷிங்டனின் பழிவாங்கலை விளைவாக்கும் என பீதியடைந்துள்ள இலங்கை முதலாளித்துவத்தின் பிரிவினரை பிரதிநிதித்துவம் செய்கின்றனர். சிறிசேன மற்றும் யூ.என்.பி.யின் கீழ், இலங்கை வெளியுறவு கொள்கை அமெரிக்கா மற்றும் இந்தியவை நோக்கி மீண்டும் பலமாக திருப்பப்பட்டுள்ளது.

தேர்தலை வாஷிங்டனும் புது டில்லியும் நெருக்கமாக அவதானிக்கின்றன. இந்திய அரசியல் ஆய்வாளர் பிரஹ்மா சலானி எழுதியதாவது: "திங்களன்று இலங்கையின் பாராளுமன்ற தேர்தலானது நாட்டின் அரசியல் எதிர்காலத்தை வடிவமைக்க மட்டுமன்றி, பரந்த இந்திய பெருங்கடல் பகுதியில் புவிசார் அரசியலையும் வடிவமைக்க வாக்குறுதியளித்துள்ளது." இந்து சமுத்திரத்தில் பிரதான கடற் பாதைகளின் சந்தியில் அமைந்துள்ள இலங்கையின் "மூலோபாய முக்கியத்துவம்" பற்றி வெளிச்சம் போட்டுக் காட்டிய அவர், இந்த தேர்தலில் இராஜபக்ஷ மீண்டும் பிரதமரானால் சீனா நன்மையடையும் என்று கவலை தெரிவித்தார்.

ஆட்சி மாற்றம் ஒன்றைச் செய்த பின்னர், இராஜபக்ஷ ஆட்சிக்கு திரும்புவதை அனுமதிக்க அமெரிக்கா தயாரில்லை. இராஜபக்ஷவை தடுக்க ஜனநாயக விரோத வழிமுறைகள் பயன்படுத்தப்படும் என்று சுவரில் ஏற்கனவே எழுதப்பட்டுள்ளது. ஒரு பெரிய ஜனநாயகவாதியாக ஜனவரி தேர்தலில் பதவி உயர்த்தப்பட்ட சிறிசேன, ஸ்ரீ.ல.சு..க. வெற்றி பெற்றாலும் கூட, இராஜபக்ஷவை பிரதமராக நியமிக்க முடியாது என்று இந்த வாரம் மீண்டும் அறிவித்தார் -அரச எந்திரம் மற்றும் பாதுகாப்புப் படைகளை பயன்படுத்தி மட்டுமே இதை நடைமுறைப்படுத்த முடியும்.

இராஜபக்ஷ, தன் பங்கிற்கு பிற்போக்கு தமிழர்-விரோத இனவாதத்தை தூண்டி வருவதோடு 2009ல் தமிழீழ விடுதலைப் புலிகளை இராணுரீதியில் தோற்கடித்து பெற்ற வெற்றிக்கு அச்சுறுத்தல் விடுப்பதாக யூ.என்.பீ.யை குற்றஞ்சாட்டுகிறார். அவரை இலங்கையில் கணிசமான சீன உதவி மற்றும் முதலீட்டில் பயனடைந்த வர்க்கத்தின் பிரிவுகள் ஆதரிக்கின்றன.

உலகை போரில் மூழ்கடிக்க அச்சுறுத்தும் பூகோள-அரசியல் பகைமை நீர்ச்சூழலுக்குள் தவிர்க்க முடியாமல் இலங்கையும் இந்தப் பிராந்தியம் முழுவதும் இழுக்கப்படுகின்றன. அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய சக்திகளுமாக அனைத்து முக்கிய ஏகாதிபத்திய சக்திகள் தாம் உரிமை கோருபவற்றை பற்றிக்கொள்ள முயல்வதோடு தேவைப்பட்டால் இராணுவ வலிமையைப் பயன்படுத்தவும் தயங்கப் போவதில்லை.

போருக்கான உந்துதலானது உலகப் பொருளாதாரத்துக்கும் காலாவதியான தேசிய அரசு அமைப்பு முறைக்கும் இடையேயான உலக முதலாளித்துவ அமைப்பு முறையின் அடிப்படை முரண்பாடுகளின் ஒரு விளைவே ஆகும். சோசலிசப் புரட்சி ஊடாக இலாப நோக்கு அமைப்பு முறையை ஒழிப்பதன் மூலம் யுத்தத்தை தடுக்கக் கூடிய ஒரே சமூக சக்தி சர்வதேச தொழிலாள வர்க்கமே ஆகும்.

சோ.ச.க.யின் பிரச்சாரமானது தொழிலாள வர்க்கத்தின் ஒரு சர்வதேச போர்-எதிர்ப்பு இயக்கத்தை உருவாக்க நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் (ICFI) அதன் பிரிவுகளும் முன்னெடுத்து வரும் போராட்டத்தின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாகும். இலங்கை மற்றும் இந்தப் பிராந்தியத்தில் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தும் எமது போராட்டமானது தெற்காசியாவிலும் மற்றும் உலகம் பூராவும் ஐக்கிய சோசலிச அரசுகளின் பகுதியாக ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசுக்கான எமது அழைப்பில் வெளிப்படுத்தப்படுகிறது.

இலங்கையில் ஏனைய ஒவ்வொரு கட்சிகயும் ஏதாவது ஒரு வழியில் இரண்டு முதலாளித்துவ பிரிவுகளின் பின்னால் அணி சேர்ந்துள்ளன.

* சிங்களம் பேரினவாத மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.), யூ.என்.பீ. உடன் அணிசேர்ந்துள்ளது. பிரதமராக இராஜபக்ஷவை நியமிக்க முடியாது என்ற சிறிசேனவின் அறிவிப்பை அது பகிரங்கமாக ஆதரித்தது. ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் ஆதரவை பெருக்குவதற்காக சிறிசேன மற்றும் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட உயர் மட்ட ஆலோசனை சபையான தேசிய நிர்வாகக் குழுவிலும் (NEC) ஜே.வி.பி. அங்கம் வகிக்கின்றது.

* தீவின் தமிழ் முதலாளித்துவ தட்டுக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் (TNA), ஜனவரி மாதம் ஆட்சி மாற்றத்துக்கு ஆதரவளித்ததோடு யூ.என்.பி.க்கு தனது ஆதரவை சமிக்ஞை செய்துள்ளது. அதுவும் தேசிய நிர்வாகக் குழுவை பிரதிநிதித்துவம் செய்கின்றது. சிங்களம் மற்றும் தமிழ் மேல்தட்டினர் தொழிலாள வர்க்கத்தை கூட்டாக சுரண்டுவதன் பேரில், யூ.என்.பீ. அரசாங்கத்துடன் ஒரு அதிகார பரவலாக்கல் ஒழுங்கை அமெரிக்கா மற்றும் இந்தியாவின் ஆதரவுடன் ஏற்படுத்திக்கொள்ள முடியும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்பார்க்கின்றது.

* போலி இடது அமைப்புக்கள் அனைத்தும் யூ.என்.பி. உடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அணி சேர்ந்துள்ளன. நவ சம சமாஜக் கட்சி (ந.ச.ச.க.) தலைவரும் தேசிய நிறைவேற்றுக் குழுவில் உறுப்பினராக உள்ளார். அது யூ.என்.பி. தலைமையிலான அரசாங்கத்துக்காகப் பிரச்சாரம் செய்கின்றது. ஐக்கிய சோசலிச கட்சி (USP), முன்னிலை சோசலிசக் கட்சி (FSP) இரண்டும் இரு பிரதான கட்சிகளையும் எதிர்ப்பதாக கூறிக்கொண்டாலும், "சர்வாதிகார" இராஜபக்ஷவுக்கு எதிராகவே அவர்களின் தாக்குதல் இலக்கு வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்கள், நிலைப்பாடு எடுக்காத வாக்காளர்களை "குறைந்த தீமை" என யூ.என்.பி.க்கு வாக்களிக்க ஊக்குவிக்கின்றனர்.

* சமூக நீதிக்கான தேசிய இயக்கம், பிரஜைகள் சக்தி, சமூக நீதிக்கான தொழிற்சங்கங்களின் கூட்டு உட்பட உயர் நடுத்தர வர்க்க கல்விமான்கள், அரச சாரா அமைப்புக்கள், தொழில் வல்லுனர் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்களுமாக, யூ.என்.பி.யை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு எதிரான ஒரு ஜனநாயக மாற்றீடாக போலியாக புகழ்ந்து அதனுடன் ஒரு தேர்தல் உடன்பாட்டை செய்துகொண்டனர். போலி இடது அமைப்புக்களுடன் சேர்ந்து இந்த குழுக்கள், இராஜபக்ஷவின் வெற்றியைத் தடுக்க ஒரு "வண்ணப் புரட்சியை" முன்னெடுப்பது பற்றி வாஷிங்டன் தீர்மானிக்கும் வரை அதற்கான அடித்தளத்தை இட்டு காத்திருக்கின்றன.

யு.என்.பி. மற்றும் ஸ்ரீ.ல.சு.க., அவர்களது அரசியல் கூட்டாளிகள், அவர்களுக்கு வக்காலத்து வாங்குபவர்கள் மற்றும் கைக்கூலிகளையும் நிராகரிக்க  வேண்டும் என சோ.ச.க. தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றது. இந்த இரு கட்சிகளும் 1948ல் உத்தியோகபூர்வ சுதந்திரத்தில் இருந்து இலங்கை அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வருவதோடு உழைக்கும் மக்களுக்கு ஒன்றன்பின் ஒன்றாக பேரழிவுகளை கொண்டு வந்துள்ளன. இரு கட்சிகளும் சிங்கள இனவாதத்தில் முற்றிலும் மூழ்கிப் போயுள்ளதுடன் தீவைப் பேரழிவிற்கு உள்ளாக்கி, இலட்சக்கணக்கான உயிர்களைக் காவுகொண்ட கால் நூற்றாண்டு கால உள்நாட்டு யுத்தத்துக்கு பொறுப்பாளிகள் ஆகும்.

தேர்தலில் எந்தக் கட்சி வெற்றி பெற்றாலும், அடுத்த அரசாங்கம் சர்வதேச நாணய நிதியம் கோரும் பேரழிவு தரும் சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்துவதோடு உழைக்கும் மக்களின் எதிர்ப்பை ஒடுக்க யுத்தத்தின் போது கட்டியெழுப்பப்பட்ட பொலிஸ்-அரச இயந்திரத்தைப் பயன்படுத்தும்.

இரு கட்சிகளும் தொழிலாள வர்க்கம் மற்றும் ஏழைகளுக்கும் எதிரான கொடூரமான குற்றங்களுக்கு பொறுப்பாகும். ஸ்ரீ.ல.சு.க. தலைமையிலான அரசாங்கம் 1971ல் ஜே.வி.பி.யின் எழுச்சியை ஈவிரக்கமற்று நசுக்கியதில் 15,000 கிராமப்புற இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 1980களின் பிற்பகுதியில், தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக ஜே.வி.பி.யைப் பயன்படுத்திய நிலையில், யு.என்.பி. ஏறத்தாழ அதன் கூட்டாளியாக இருந்த ஜே.வி.பி.க்கு எதிராகத் திரும்பி, கொலைப் படைகளைக் கட்டவிழ்த்து விட்டது. இதன்போது ஒரு மதிப்பீட்டின்படி 60,000 பேர் கொல்லப்பட்டனர்.

ஆட்சியில் இருந்த யு.என்.பி. மற்றும் ஸ்ரீ.ல.சு.க. அரசாங்கங்கள், சித்திரவதை, கடத்தல்கள் மற்றும் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின்போது பொதுமக்களை கண்மூடித்தனமாக கொன்றதற்கும் பொறுப்பாகும். இரு கட்சிகளும் நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கில் தொடரும் இராணுவ ஆக்கிரமிப்புக்கும் மற்றும் தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை ஒடுக்குவதற்கும் ஆதரவளித்தன.

அனைத்து சமூக மற்றும் ஜனநாயக பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஒரு புரட்சிகர சோசலிச வேலைத்திட்டத்துக்காக சோ.ச.க. போராடுகிறது. தொழிலாளர்கள், ஆளும் வர்க்கத்தினால் கிளறிவிடப்படும் இனவாத பிளவுகளை நிராகரித்து, சோசலிச கொள்கைகளுக்காகவும் முதலாளித்துவத்தை இல்லாதொழிக்கவும் போராட இனப் பிளவுகளுக்கு எதிராக சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லீம்களுமாக ஐக்கியப்படுமாறு நாம் அழைப்பு விடுக்கின்றோம். இனவாத பாரபட்சங்களுக்கு முடிவு கட்டவும் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் ஜனநாயக உரிமைகளை ஸ்தாபிதம் செய்யவும் சோசலிசத்திற்கான போராட்டத்தின் அடையில் மட்டுமே முடியும்.

அழுகி நாறும் முதலாளித்துவத்தின் கீழ், சிக்கன நடவடிக்கைகளை எதிர்த்து போராடவும் கல்வி, சுகாதாரம், வீட்டுவசதி போன்ற சமூக உரிமைகளைப் பாதுகாக்கவும் முடியாது. சிறு விவசாயிகள் மற்றும் மீனவர்கள் உரிமைகள் இந்த முறைமையின் கீழ் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகின்றன. பெரிய வங்கிகள், பெருந்தோட்டங்கள் மற்றும் தொழிற்துறைகளை தேசியமயப்படுத்துவதன் மூலமும் வெளிநாட்டு கடன்களை திருப்பிச்செலுத்த மறுப்பதன் மூலமும் மட்டுமே இந்த தாக்குதல்கள் நிறுத்தவும் சோசலிச சமுதாயத்திற்கான அடிப்படைகளை தயாரிப்பதைத் தொடங்கவும் முடியும்.

சர்வதேச நிறுவனங்கள் மற்றும் நிதி மூலதனத்தின் ஆதிக்கத்திலான ஒரு உலகத்தில், சோசலிசத்திற்கான போராட்டமாடது சர்வதேச அளவிலானதாக இருப்பது இன்றியமையாததாகும். சோ.ச.க. உலகம் பூராவும் மற்றும் தெற்காசியாவிலும் சோசலிசத்திற்கான போராட்டத்தின் பாகமாக, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்காகவும் ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசுக்காகவும் போராடுகிறது.

நாம் சோசலிசத்திற்கான போராட்டத்திற்கு உங்கள் ஆதரவை காட்ட கொழும்பு, யாழ்ப்பாணம் மற்றும் நுவரேலியா மாவட்டங்களில் இந்த தேர்தலில் போட்டியிடும் சோசலிச சமத்துவக் கட்சிக்கு வாக்களிக்குமாறு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.

வரவிருக்கும் வர்க்கப் போராட்டங்களுக்கு அவசியமான புரட்சிகர தலைமையை கட்டியெழுப்ப, எமது வேலைத் திட்டத்தை வாசிக்குமாறும் எமது சோசலிச சமத்துவக் கட்சியிலும் எமது இளைஞர் இயக்கமான சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பிலும் சேர விண்ணப்பிக்குமாறும் அழைப்பு விடுக்கின்றோம்.