சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Tamil nationalist groups adopt pro-imperialist policy in Sri Lankan elections

இலங்கை தேர்தலில் தமிழ் தேசியவாதக் குழுக்கள் ஏகாதிபத்திய-ஆதரவுக் கொள்கையை பின்பற்றுகின்றன

By K. Nesan and V. Gnana
15 August 2015

Use this version to printSend feedback

தமிழ் தேசிய கூட்டமைப்பு (TNA) மற்றும் தமிழ் தேசியவாத முன்னோக்கிற்கு தமிழ் தொழிலாளர்களிடையே அதிருப்தி பெருகி வரும் நிலையில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் (TNPF)  ஜனநாயகப் போராளிகள் (CD) குழுவும் இலங்கைத் தேர்தலில் ஒரு தேசியவாத, ஏகாதிபத்திய-ஆதரவு வேலைத்திட்டத்தை முன்னெடுக்கின்றன.

ஜனவரி தேர்தலில், அப்போது ஜனாதிபதியாக இருந்த மஹிந்த இராஜபக்ஷவுக்கு எதிராக அமெரிக்க ஆதரவு வேட்பாளரான மைத்ரிபால சிறிசேனாவுக்கு வாக்களிக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு விடுத்த அழைப்பை அநேக தமிழ் வாக்காளர்கள் பின்பற்றினர். 2009 இல் இலங்கையின் உள்நாட்டுப் போர் முடிவில் பத்தாயிரக்கணக்கிலான தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை மேற்பார்வை செய்த அவரது பாத்திரத்தின் காரணத்தால் இராஜபக்ஷவுக்கு எதிராக இருந்த பரந்த கோபத்தை அமெரிக்காவின்ஆசியாவை நோக்கிய முன்னெடுப்புக்கும் இலங்கையில் ஆட்சி மாற்றத்திற்கான அதன் திட்டங்களுக்கும் சேவை செய்வதற்காய் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சூழ்ச்சியாக பயன்படுத்திக் கொண்டது. இராஜபக்ஷ தனது வெளியுறவுக் கொள்கை மற்றும் பொருளாதாரக் கொள்கைகளை சீனாவை நோக்கி நோக்குநிலை அமைத்திருந்த காரணத்தால் அமெரிக்கா ராஜபக்ஷவை பதவியில் இருந்து அகற்றியது.

சிறிசேனாவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் அளித்த சீர்திருத்த வாக்குறுதிகள் அனைத்தும் ஒரு அரசியல் மோசடி என்பது துரிதகதியில் அம்பலப்பட்டு வந்திருக்கிறது. ஜூன் மாதத்தில் சிறிசேனா நாடாளுமன்றத்தைக் கலைக்கத் தள்ளப்பட்டது முதலாகவே TNPFவும் CDயும் தமிழ் தேசியவாதத்தை ஊக்குவித்து வருவதோடு இப்போது மதிப்பிழந்தும் குறிப்பிடும்படியான ஆதரவை ஈர்க்கும் திறனற்றதாகவும் ஆகியிருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கான ஒரு மாற்றாக வேடமிட்டுக் கொண்டிருக்கின்றன.

இலங்கையின் பெரும்பான்மை சிங்கள இனத்தவருக்கும் சிறுபான்மை தமிழ் இனத்தவருக்கும் இடையிலான மோதலுக்கான தனது தீர்வாக TNPF இன் தேர்தல் அறிக்கை முன்வைப்பது இதுதான்: “ஒரே நாடு, இரண்டு தேசங்களின் கூட்டு. தாயகம், தேசியம், மற்றும் சுய-நிர்ணயம் ஆகியவற்றின் அடிப்படையில், தனி இறையாண்மையுடனான தேசம் அங்கீகரிக்கப்பட வேண்டும்.”

TNA செய்ததைப் போலவே ஏகாதிபத்தியத்திற்கு அதே நாற்றமெடுக்கும் விண்ணப்பத்தை செய்வதன் அடிப்படையில் இந்த இலக்குகளை அடையமுடியும் என்று TNPF தேர்தல் அறிக்கை முன்மொழிகிறது. ”தீவின் உலக அரசியலையும் அதில் தமிழர்களின் பாத்திரத்தையும் பயன்படுத்தி சர்வதேசக் கருத்தினை தமிழர்களின் நலன்களை நோக்கித் திருப்ப முனைவதாக அது எழுதுகிறது. “சர்வதேச மத்தியஸ்தத்தின் இந்த பின்புலத்தில் இலங்கை அரசாங்கத்துடன் நாங்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம்.”

அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனும் சிங்கள முதலாளித்துவத்துடனும் ஒரு அரசியல் ஏற்பாட்டைச் செய்து கொள்வதன் அடிப்படையில் செழிப்பையும் நல்லெண்ணத்தையும் உருவாக்கவிருப்பதாகக் கூறும் TNPF இன் வாக்குறுதிகள் வெற்று மோசடிகளாகும். தமிழ் மற்றும் சிங்களத் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதற்கு தமிழர்களிடையே பெருகிவரும் சிந்தனைகளுக்கு எதிரான வகையில், TNPF, ஒரு பேரழிவுகரமான உலகப் போருக்கு அச்சுறுத்துகின்ற வகையில் இந்திய பெருங்கடலில் சீனாவின் அதிமுக்கியமான கப்பல் போக்குவரத்து பாதைகளை குறிவைத்து இலங்கையை ஒரு கடற்படைத் தளமாக மாற்றுவதற்கு அமெரிக்க ஏகாதிபத்தியம் போடும் திட்டங்களின் பின்னால் தன்னை நிறுத்திக் கொண்டிருக்கிறது.

தமிழ் முதலாளித்துவத்தின் நலன்களின் பேரில் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனும் இலங்கை அரசாங்கத்துடன் எப்படி ஒரு உடன்பாட்டை எட்டுவது என்பதில் TNPF விற்கும் TNA விற்கும் இடையில் இருப்பவை வெறும் தந்திரோபாய வேறுபாடுகள் மட்டுமே.

வெளிநாட்டு சக்திகளுடனான பேச்சுவார்த்தைகளின் போது இலங்கையின் புவி-மூலோபாய முக்கியத்துவத்தைமுறையாகப் பயன்படுத்தவில்லை என்று TNA மீது TNPF இன் தேர்தல் அறிக்கை குற்றம்சாட்டுகின்றது. ஜனவரி தேர்தலின் போது இலங்கையில் நடந்த அமெரிக்க பொறியமைவிலான ஆட்சி மாற்ற நடவடிக்கை குறித்து அது முழு மௌனம் காக்கிறது.

உதவிக்கு ஏகாதிபத்தியத்தை சார்ந்திருக்கும் தனது முன்னோக்கின் திவால்நிலையை வஞ்சகமாக ஒப்புக்கொள்ளும் முறையில் TNPF தேர்தல் அறிக்கையானது, 2006க்கும் 2009க்கும் இடையில் உள்நாட்டுப் போரின் முடிவில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைத் தடுத்து நிறுத்தசர்வதேச சமூகம் தலையிடத் தவறியதாக புகார் கூறுகிறது.

இலங்கை உள்நாட்டுப் போரில் பிரதான தமிழ் போர் சக்தியாக இருந்த, தோற்கடிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பைக் குறிப்பிட்டு, அது எழுதுகிறது, “தனது பாதுகாப்புக் கவசத்தை இழந்து நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருக்கும் தமிழ் தேசத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு சர்வதேச சமுதாயத்திற்கு உள்ளது. “சர்வதேச சமுதாயத்தின் ஆதரவையும் பாதுகாப்பையும் உறுதிசெய்கின்ற வகையில், நமது ஜனநாயகப் போராட்டத்தை நோக்கி சர்வதேச சமுதாயத்தின் கவனத்தைத் திருப்புவதற்கான அத்தனை அவசியமான நடவடிக்கைகளையும் நாங்கள் எடுப்போம் என்று அது மேலும் சேர்த்துக் கொள்கிறது.

ஏகாதிபத்தியத்தின் மீது TNPF வைத்திருக்கும் குருட்டுத்தனமான நம்பிக்கைக்கு நிகராகச் சொல்லவேண்டுமெனில் போரின் குருதிபாய்ந்த இறுதி ஆண்டுகளைக் குறித்த அதன் பரிதாபகரமான திரிப்பையே கூற முடியும். “சர்வதேச சமூகத்தின் அரசியல், இராஜதந்திர, மற்றும் இராணுவரீதியான தலையீடுகள் தான் ராஜபக்2006 ஜூலையில் போரை மீண்டும் தொடக்கி வைப்பதற்கு இறுதியாக உதவியது. 2006 ஏப்ரலில் கனடா, விடுதலைப் புலிகள் அமைப்பை ஒருபயங்கரவாத அமைப்பு எனக் கூறி தடை செய்தது, அடுத்த மாதத்தில் ஐரோப்பிய ஒன்றியமும் அதே நடவடிக்கையை பின்பற்றியது. போரின் கடைசி மூன்று ஆண்டுகளில், பிரிட்டனும் இந்தியாவும் இலங்கை அரசாங்கத்துக்கு இராணுவத் தளவாடங்களை வழங்கி ஆதரித்தன.

விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒரு அரசியல் பினாமி போல் 2001 இல் ஸ்தாபிக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து உடைந்து 2010 பிப்ரவரியில் உருவாக்கப்பட்டது தான் இந்த TNPF. விடுதலைப் புலிகளின் தோல்வி தான் TNPF-TNA உடைவின் உந்துசக்தியாக இருந்தது. ஒரு தனித் தமிழ் அரசுக்கான கோரிக்கையை கைவிடுவதன் மூலமாக விடுதலைப் புலிகளின் அரசியலில் இருந்து TNA தடம் புரள்வதாகக் குற்றம்சாட்டி, TNPF இன் தலைவரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தான் இந்த உடைவினை தொடக்கிவைத்தார். தீவில் ஈழத் தமிழர்களின் இறையாண்மையை திட்டவட்டப்படுத்துவதில் TNA காட்டிய பலவீனம் தான் பிரதான வேறுபாடு என்று அவர் காரணம் காட்டினார்.

ஜனநாயகத்திற்கான போராளிகள் (CD) என்பது விடுதலைப் புலிகள் அமைப்பின்மறுவாழ்வளிக்கப்பட்ட காரியாளர்களைக் கொண்டு இந்த ஆண்டில் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு ஆகும். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒரு முன்னிலை அங்கத்தவருக்குச் சொந்தமான உதயன் தமிழ் தினசரியின் முன்னாள் ஆசிரியரான நடேசப்பிள்ளை வித்தியாதரன் இதன் ஒருங்கிணைப்பாளராக இருக்கின்றார்.

CD தனது சொந்தக் கட்சியின் வேட்பாளர்களை நிறுத்துவதற்கு முன்னதாக TNA உடன் இணைந்து கூட்டு வேட்பாளர்களை நிறுத்துவதற்கு பேச்சுவார்த்தைக்கு முயற்சி செய்தது. ஆயினும் பேச்சுவார்த்தைகளின் முடிவில்இனப் பிரச்சினையை தீர்க்க சர்வதேச அளவில் தனது கட்சி மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஊறு விளைவிக்கத்தக்க முடிவுகள் எதனையும் தன்னால் எடுக்க இயலாது என்று TNA தலைவர் சம்பந்தன் எங்களிடம் கூறி விட்டார் என்று வித்தியாதரன் அறிவித்தார். விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் காரியாளர்களை நிறுத்தினால் அது அமெரிக்க வெளியுறவுத் துறைக்கு எரிச்சலூட்டக் கூடும் என்று TNA கருதியது என்பது வெளிப்படை. அமெரிக்காவில் விடுதலைப் புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்புப் பட்டியலில் தான் இன்னமும் இடம்பெற்றுள்ளது.

CD இன் நிலைப்பாடு பெருமளவில் TNA மற்றும் TNPF க்கு ஒத்ததே. சொல்லப் போனால் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு கும்பிடுபோடுவதிலும் சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் போர் முனைவுகளிலும் காட்டும் ஆர்வத்தில் அது TNA மற்றும் TNPF ஐ விடவும் அதிக வெளிப்படையாக செயல்படுகிறது. CD பின்வருமாறு எழுதுகிறது: “இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் அரசியல் மற்றும் பொருளாதார முக்கியத்துவத்தை ஜனநாயகத்திற்கான போராளிகள் புரிந்து கொண்டுள்ளது. உலகின் மிகப்பெரும் பொருளாதார மற்றும் அரசியல் சக்தியாக விளங்குகின்ற ஒரு நாடாகிய அமெரிக்கா இந்தப் பிராந்தியத்தில் கொண்டுள்ள நலன்களுக்கு நாங்கள் மதிப்பளிக்கிறோம்.”

இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடியின் பிற்போக்குத்தனமான அரசாங்கத்திற்கும் CD ஆதரவளிக்கிறது. “இந்தியாவின் நலன்களுக்கு ஜனநாயகத்திற்கான போராளிகள் முக்கியத்துவம் அளிக்கிறது என்று அது எழுதுகிறது.

பெரும் சக்திகளுடன் உடன்பாடுகளை எட்டுவதன் மூலமாக தமது நிதி நலன்களை முன்னெடுக்க ஆர்வத்துடன் இருக்கின்ற தமிழ் முதலாளிகள் மற்றும் வசதியான நடுத்தர வர்க்கத்தின் ஒரு குறுகிய அடுக்கின் நலன்களையே தமிழ் தேசியவாதக் குழுக்களின் பிற்போக்குத்தனமான முன்னோக்குகள் பிரதிபலிக்கின்றன. இலங்கையின் தமிழ் மற்றும் சிங்கள வறுமைப்பட்ட தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட வெகுஜனங்களுக்கும் இவர்களுக்கும் இடையில் ஒரு பெரும் வர்க்கப் பிளவு பிரித்து நிற்கிறது.