சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : விஞ்ஞானமும் தொழில்நுட்பமும்

Windows 10: An operating system that gathers data on everything you do

விண்டோஸ் 10 : நீங்கள் செய்யும் ஒவ்வொன்றும் தொடர்பாக தகவல் விவரங்களையும் திரட்டும் ஒரு செயலி

By Mark Blackwood
10 August 2015

Use this version to printSend feedback

ஜூலை 29ம் தேதி அன்று மைக்ரோசாஃப்ட் நிறுவனமானது அதன் விண்டோஸ் செயலியின் சமீபத்திய பதிப்பை வெளியிட்டு, அந்நிகழ்வை என்றுமிராத அளவு மிகப்பெரிய மென்பொருள் தரம் உயர்த்தலாக (upgrade) விளம்பரப்படுத்தியது. முந்தைய வெளியீடுகளைப் போல அல்லாமல், புதிய பதிப்பானது அனைத்து உள்நாட்டு பயனாளர்களுக்கும் இலவச தரம் உயர்த்தலாக மைக்ரோசாஃப்ட்டால் வழங்கப்பட்டிருக்கிறது. அது வெளியிட்டு 24 மணி நேரத்திற்குள்ளாகவே 14 மில்லியன் பயனாளர்கள் அதனைப் பதிவிறக்கும் செய்து நிறுவியிருக்கிறார்கள்.

எவ்வாறாயினும், ஒரே ஒரு கேள்வி விடையிறுக்கப்படாமலே உள்ளது: முதல் 24 மணிநேரத்திற்குள் மேன்மைப்படுத்தம் செய்த14 மில்லியன் பேர்களில், நிறுவுதலுக்கு முன்னர் இறுதி பயனாளர் அனுமதி உடன்படிக்கையில் (EULA) உள்ள 45 பக்கம் கொண்ட தனிநபர் இரகசியம் காப்புக் கொள்கை மற்றும் சேவை உடன்படிக்கையை வாசித்து ஆய்வு செய்வதற்கு எத்தனைபேருக்கு நேரம் இருந்தது?

விண்டோஸ் செயலி வெளியிடுகையில் பொதுவாக அதனுடன் சேர்ந்து வரும் வாடிக்கையான பெருநிறுவன எக்காளமுழக்கத்தைத் தொடர்ந்து, நிறுவனத்தின் தனிநபர் இரகசிய காப்புக் கொள்கை (privacy policy) மற்றும் சேவை ஒப்பந்தத்தில் எளிதில் கவனத்தை ஈர்க்கும் மாற்றங்கள் பற்றி அறிக்கைகள் விரைந்து வெளிப்பட்டன. புதிய ஒப்பந்தமானது, வேறு ஆணை தரப்படாத நிலையில் குறிப்பிட்ட செயற்பாட்டைப் புரிதல் மூலம், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திற்கு பயனாளரின் நடவடிக்கைகளை விசைப்பலகை பதிவு (keylogger) வகையிலான உளவுமென்பொருளைப் (spyware) பயன்படுத்தி கண்காணிப்பதற்கு பயன்கொள்ளத்தக்க முறையில் அனுமதி அளிக்கிறது.

உளவுமென்பொருள் (Spyware) என்பது ஒரு கணினியைப் பற்றியும் அதில் அவற்றின்  வன்பொருளிலிருந்து இரகசியமாக இன்னொரு கணிணிக்கு இம்மாற்றும் அதில் இடம்பெற்ற நடவடிக்கைகளையும் பற்றி தகவல்களை அளிக்கக்கூடியதாக்கும்  ஒரு மென்பொருள் ஆகும். விசைப்பலகை பதிவு (keylogger) என்பது, தான் இம்மென்பொருள் பதிவுசெய்யப்பட்ட எந்திரத்தில் செய்யப்படும் ஒவ்வொரு விசை அழுத்தத்தையும் பதிவதற்கு என்றே உருவாக்கப்பட்ட ஒருவகை உளவறியும் மென்பொருள் அல்லது கண்காணிப்பு மென்பொருள் ஆகும்.

விண்டோஸ் 10ல் உள்ளது போன்ற ஒரு விசைப்பலகை பதிவு (keylogger), ஆயத்த செய்திகள், மின்னஞ்சல்கள், தேடல் வெண்டுகோள்கள், கடன்அட்டை விவரங்கள், ஆவணங்கள் மற்றும் கணிணி நிரல்(spreadsheets)-ன் விவரங்கள், அல்லது ஒரு விசைப்பலகை மீது தட்டச்சு செய்யும் எதையும் பதிவு செய்யக்கூடியதாக இருக்கும். விசைப்பலகை பதிவால் உருவாக்கப்பட்ட பதிவுக்கோப்பு பின்னர், மைக்ரோசாப்ஃட் விடயத்தில் இதற்கென்றே வடிவமைக்கப்பட்ட மின்னணு சமிக்கை வாங்கிக்கு (receiver) அனுப்பப்படும்.

கார்டியன் இதழின்படி, விண்டோஸ் 10 இனால் நிறுவனத்தால் முன்னரே வரையறுக்கப்பட்ட பதிவுமுறை, “இதே செயலியால் இயங்கும் இதர கணினிகளுக்கு தகவல்விவரங்களை பதிவேற்றவும், ஆன்லைன் நண்பர்களுடனான Wi-Fi கடவுச்சொற்களைப் பகிர மற்றும் பாதுகாப்பு மேம்படுத்தல்களில் ஈடுபடும் திறனை அகற்றஒரு பயனாளரின் அகலஅலைக்கற்றையை (bandwidth) கட்டுப்படுத்தவும் வேண்டி, ஒரு பயனாளரின் அகலஅலைக்கற்றையை கட்டுப்படுத்தவும் கூட மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கிறது.

மைக்ரோசாஃப்ட் அதன் பயனாளர்களை ஒட்டுமொத்தமாகக் கண்காணிக்க வேண்டியதற்கான பிரதான காரணம் அவர்களைப் பற்றியும் அவர்களின் பழக்கவழக்கங்கள் பற்றியும் தகவல்களை பதிவதற்குத்தான். உலகின் 90 சதவீத மடிக்கணினிகள் மற்றும் கணினிகள் விண்டோஸ் செயலிகளால் இயக்கப்படும் நிலையில், இந்நிறுவனத்தின் ஏகபோக நிலையானது அதன் வாடிக்கையாளர்களின் தகவல்களை அறுவடைசெய்வதற்கான பெரும் மறைமுகமான வாய்ப்பை அதற்கு அளிப்பதுடன், கூகுள் மற்றும் ஆப்பிளின் விருப்பங்களை முன்மாதிரியாக கொள்ளும் வாய்ப்பு அளிக்கிறது.

ஐரோப்பிய எண்ணியக்கம்சார் (Digital) உரிமைகள் தொடர்பான சமுதாய மற்றும் தகவல் தொடர்பு மேலாளரான Heini Järvinen கூறுகிறவாறு, “மைக்ரோசாஃப்ட் நிறுவனமானது அதிக இலக்குவைக்கப்பட்ட விளம்பரங்களை விற்கும்பொருட்டு அல்லது உங்கள் தகவல்களை மூன்றாம்தரப்பினருக்கு விற்பதற்கு, அடிப்படையிலேயே நீங்கள் செய்யும், சொல்லும் மற்றும் எழுதும் எல்லாவற்றையும் திரட்டுவதற்கான பரந்த உரிமையை தனக்குத்தானே அளித்துக்கொண்டிருக்கிறது. அந்நிறுவனமானது உங்கள் தகவல்விவரங்களை உங்கள் அனுமதியுடனோ அல்லது தேவைப்படுகிறது என்றவகையிலோபகிர்ந்துகொள்ளும் உரிமையை தனக்குத்தானே வழங்கவிருப்பதாக காணப்படுகிறது.”

பல பயனாளர்கள், விண்டோஸ் 10 கணினியில் நிறுவும்பொழுது, புதிய நிறுவனத்தால் முன்னரே வரையறுக்கப்பட்ட பதிவுமுறை மென்பொருளை தானாகவே பதிவுசெய்வதை தடுப்பது எப்படி என்பது பற்றி அறியாதவர்கள். மேலும், பரந்த பெரும்பான்மையினரான கணினி மற்றும் மடிக்கணினி பயனர்கள் EULA-வை படிக்காமலேயே மென்பொருளை பதிவிறக்கம் செய்து நிறுவுகிறார்கள்.

வலைத் தள உருவாக்குநரான Jonathan Porta மைக்ரோசாஃப்டால் அதன் செயலியை நிறுவும்பொழுது பயன்படுத்தப்படும் தந்திரங்கள் பற்றி விவரிக்கிறார்.இந்த திரையில் இருக்கும் ஒவ்வொன்றும் நிறுவனத்தால் முன்னரே வரையறுக்கப்பட்ட பதிவுமுறை மென்பொருள் ஒழுங்கமைவை சாதாரணமாக ஏற்றுக்கொண்டு உயிரோட்டத்தைப் பெறுங்கள்…… என என்னை வற்புறுத்தும்இவ்விரு திரைகளின் மீதான இவ்வனைத்து அமைவுநிலைகளுடன் எனது கணினியை மைக்ரோசாஃப்ட் தலைமையகங்களுக்கு நன்றாய் இடமாற்றி வைக்கக்கூடியதாக என்னை ஆக்கும் மற்றும் முழுநிறுவனமும் எனது தோளுக்கு மேலாக எட்டிப்பார்க்கும் வசதி பெற்றிருக்கும்.”

மைக்ரோசாஃப்டின் புதிய செயலி பற்றி அதிகம் கவலை கொள்ளவைப்பது என்னவென்றால், பல வருடங்களாக கணினி பயனாளர்களின் ஜனநாயக உரிமைகளை மீறுவதில் படிமுறைரீதியாகவும் சட்டவிரோதமாகவும் ஈடுபட்டுவரும் தேசிய பாதுகாப்பு முகவாண்மை (NSA) மற்றும் எப்பிஐ (FBI) ஆகியவற்றுடனான அதற்குள்ள நெருக்கமான தொடர்பாகும்.

2014ல், NSA சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதைப் பற்றி தகவல் அளிப்பவரான எட்வர்டு ஸ்னோவ்டென் தனக்கு வேலை அளிப்பவரின் நோக்கம் அது அனைத்தையும் திரட்டவிரும்புவதாகும் என விவரிக்கிறார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அமெரிக்க அரசாங்கத்தின் எதிர்கால எதிர்ப்பாளர்கள் அனைவரதும், அனைத்திற்கும் மேலாக, தொழிலாள வர்க்கத்திடமிருந்து வரும் அரசியல் எதிர்ப்பினை, அனைவரதும் முக்கிய விவரத் தொகுப்பினை அறியவும் ஆய்வு செய்யவும்பொருட்டு உலக இணைய நடவடிக்கையின் முழு உள்ளடக்கத்தையும் கைப்பற்றுவதாகும்.

ஸ்னோவ்டென் NSA வுக்கும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திற்கும் (இதர தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும்) இடையிலான ஒத்துழைப்பின் ஆழத்தை, மைக்ரோசாஃப்ட் உற்பத்தியின் பயனாளர் பற்றிய தகவல் விவரங்களை கண்காணிக்கவும் திரட்டவும் அவர்கள் முனைகையில் அம்பலப்படுத்தினார். Outlook.com, Skype, SkyDrive வழியாக அனுப்பப்படும் ஆவணங்கள் கண்காணிக்கப்பட்டன. மைக்ரோசாஃப்ட் அதனது பயனாளர் தகவல்களை NSA முழுமையாய் அடையக்கூடியதை உறுதிப்படுத்துவதற்கு அதனது சொந்த குறிமுறையிலான மென்பொருளுக்கு ஒரு கொல்லைப்புறவழியை உருவாக்குவதற்கு அதனுடன் கூட வேலைசெய்தது.

இலவச செயலி மேன்மைப்படுத்தமாக இருக்கின்றதற்காக அதனை ஆர்வத்துடன் வாழ்த்தி வரவேற்பதைக் காட்டிலும், ஒவ்வொருவரும் கேட்டாக வேண்டிய கேள்வி, மைக்ரோசாஃப்ட் போன்ற, அத்தகைய நீண்ட வரலாற்றைக் கொண்ட ஒரு பெருநிறுவனம் இந்த செயலியை ஏன் இலவசமாக விட்டுக்கொடுக்க விரும்பி முன்வரவேண்டும் என்பதுதான்.