சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Pro-US United National Party to form government in Sri Lanka

இலங்கையில் அமெரிக்க-சார்பு ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தை அமைக்கவுள்ளது

By Saman Gunadasa
19 August 2015

Use this version to printSend feedback

இலங்கையில் திங்களன்று நடந்த பொதுத் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சி (.தே..) மற்றும் அதன் பங்காளிகளும் கசப்பான மோதல்கள் நிறைந்த பிரச்சாரத்தில் 106 ஆசனங்களை வென்ற போதும், 225 ஆசனங்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மைக்கு ஏழு உறுப்பினர்கள் குறைவாகும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ..சு..) தலைமையிலான போட்டி கூட்டணியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி (..சு.மு.) 95 ஆசனங்களை வென்றது.

.தே.. ஏனைய சில சிறிய கட்சிகளின் ஆதரவுடன் அரசாங்கம் அமைக்கும் வாய்ப்பு உள்ளது அதேவேளை, கொழும்பில் அரசியல் குழப்பம் தொடரும். ஜனவரியில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவினால் பதவியில் இருந்து அகற்றப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, தற்போது பாராளுமன்றத்தில் உறுப்பினராகி இருப்பதோடு ஸ்ரீ..சு.. மற்றும் ..சு.முன்னணியில் குறிப்பிடத்தக்க ஆதரவை கொண்டுள்ளார்.

ஆளும் வட்டாரத்திலான கூர்மையான பிளவுகளின் மையத்தில் இருப்பது வெளியுறவுக் கொள்கைகளின் சார்பு பற்றிய பிரச்சினையே ஆகும். இராஜபக்ஷ அரசாங்கத்தின் அமைச்சரவையில் உறுப்பினராக இருந்த சிறிசேன, சீனாவிற்கு எதிரான அதன் "ஆசியாவில் முன்னிலை" கொள்கையின் ஒரு பகுதியாக, வாஷிங்டனால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு ஆட்சி மாற்றத்தில், .தே.. ஆதரவுடன் ஜனவரி தேர்தலில் வெற்றி பெற்றார். பெய்ஜிங் உடனான இராஜபக்ஷவின் நெருக்கமான உறவுகளை அமெரிக்க எதிர்க்கின்றது.

ராஜபக்ஷ பிரதமராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டு விடுவார் என்று வாஷிங்டன் மற்றும் புது தில்லியில் நிலவிய அச்சத்தின் மத்தியில், சர்வதேச பத்திரிகைகளில் இலங்கை தேர்தல் நெருக்கமாக அவதானிக்கப்பட்டு வந்துள்ளது. அரசாங்கம் அமைக்கப்பட முன்பே, இந்திய பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் முடிவுகளுக்காக .தே. தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை வாழ்த்துவதற்காக அவரை தொலைபேசியில் அழைத்தார்.

நியூ யோர்க் டைம்ஸ், "குறிப்பிடத்தக்க புவிசார் அரசியல் தாக்கங்கள்" உள்ளன என வலியுறுத்தி தேர்தல் முடிவுகளை வரவேற்றது: "ஒரு ஜனாதிபதி என்ற வகையில், திரு. இராஜபக்ஷ, இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு விழிப்பூட்டுமளவு பொருளாதார மற்றும் இராணுவ உறவுகளை கட்டியெழுப்பி, மிகத் தீவிரமான முறையில் சீனாவுடன் இணக்கமாக இருந்தார். வங்காள விரிகுடா மற்றும் அரபிக் கடலுக்கும் இடையேயான வர்த்தக கடல் மார்க்கத்தில் மிகவும் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்து அமைந்துள்ள ஒரு தீவில், சீனா அந்தளவு பிரமாண்டமான இருப்பை கொண்டிருப்பதை எந்த நாடும் விரும்பாது. திரு. சிறிசேன மற்றும் ரணில் விக்கிரமசிங்கவும் சீனா உடனான உறவுமறுசமநிலைப்படுத்தப்பட வேண்டும்என்று கூறி அந்த இணக்கப்பாட்டுக்கு தடை போட்டுள்ளார்கள்.”

திங்களன்று வாக்கெடுப்பானது .தே.., சிறிசேன மற்றும் வாஷிங்டனும் நம்பிக்கொண்டிருந்ததை விட மாறுபட்டதாக இருந்தது. ..சு.மு. (United People’s Freedom Alliance) பெற்ற 4.7 மில்லியன் வாக்குகள் அல்லது 42 வீதத்துடன் ஒப்பிடும்போது, .தே.. தலைமையிலான நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி (United National Front for Good Governance -UNFGG) மொத்தத்தில் வெறும் 5 மில்லியன் அல்லது 45.7 சதவிகித வாக்குகளையே பெற்றது.

ஜனவரி மாதம் சிறிசேனவால் பிரதமராக நியமிக்கப்பட்ட .தே.. தலைவர் விக்கிரமசிங்க, "நல்ல ஆட்சி மற்றும் ஒருமித்த அடிப்படையிலான அரசியலுக்கான மக்கள் ஆணை." எனக்கூறியுள்ளார். அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக ஜனாதிபதியுடன் கலந்துரையாடலைத் தொடங்கியுள்ள அவர், அடுத்த பிரதமராக நாளை பதவி ஏற்கவுள்ளார்.

ஸ்ரீ..சு.. உள்ளே உள்ள அவரது விசுவாசிகளின் ஆதரவைப் பெறுவதற்கு .தே.. சிறிசேனவின் உதவியை நாடும். அவர் ஜனவரியில் இராஜபக்ஷவுக்கு எதிராக போட்டியிட்ட அதேவேளை, சிறிசேன ஸ்ரீ..சு.. உறுப்பினராக இருப்பதோடு ஸ்ரீ..சு.. மற்றும் ..சு.மு. தலைவர் என்ற சக்தி வாய்ந்த பதவியிலும் உள்ளர். அவர் கடந்த வெள்ளிக்கிழமை ஸ்ரீ..சு.. மற்றும் ..சு.மு. பொதுச் செயலர்களைப் பதவி நீக்கம் செய்ததுடன், திங்களன்று ஸ்ரீ..சு. மத்திய குழு உறுப்பினர்கள் 13 பேரை ஓரங்கட்டி, இராஜபக்ஷவின் ஆதரவாளர்களை களையெடுப்பதில் ஈடுபட்டார்.

விக்கிரமசிங்க 16 ஆசனங்களைப் பெற்றுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பையும் (TNA) நாடத் தள்ளப்படுவார். நேற்றுக் சுருக்கமாக கருத்துத் தெரிவித்த தமிழ் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன், ஜனாதிபதி சிறிசேனவுக்கான "மக்கள் ஆணையை" முன்னோக்கி கொண்டு செல்ல அரசாங்கத்தை ஆதரிப்பதாக் கூறினார்.

2009ல் தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்வியை அடுத்து, தமிழ் தேசிய கூட்டமைப்பானது கொழும்பு அரசாங்கத்துடன் ஒரு அதிகாரப்பகிர்வு ஒழுங்கு வடிவத்தில், தீவின் நீண்ட உள்நாட்டு யுத்தத்துக்கு ஒரு "அரசியல் தீர்வு" காண அழுத்தம் கொடுத்து வருகின்றது. அதன் தேர்தல் விஞ்ஞாபனம், ஒரு "சமஸ்டி இலங்கைக்கும்" மற்றும் மாகாண சபைகளுக்கு பரந்த அதிகாரப் பரவலாக்கத்தையும் கோருகிறது.

எனினும், தமிழ் கூட்டமைப்புடனான கொடுக்கல் வாங்கல், ஒரு சமஷ்டி அரசியலமைப்பையும் மற்றும் தமிழ், முஸ்லீம் ஆளும் தட்டுக்களுக்கு வழங்கப்படும் எந்தவொரு சலுகையையும் கடுமையாக எதிர்க்கும் சிங்கள-தீவிரவாத கட்சியான ஜாதிக ஹெல உறுமயவும் (JHU) அங்கத்துவம் வகிக்கும் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணிக்குள் (.தே.மு.) பதட்டங்களை ஏற்படுத்தும். நல்லாட்சிக்கான .தே.முன்னணியில் வகுப்புவாத அடிப்படையை கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் (SLMC) மற்றும் தமிழ் முற்போக்கு முன்னணியும் உள்ளமை, மேலும் ஸ்திரமின்மை ஏற்படுவதற்கான சாத்தியத்தை அதிகரித்துள்ளது.

தோல்வியை ஒப்புக்கொண்டுள்ள இராஜபக்ஷ, தான் பாராளுமன்ற எதிர்க் கட்சிக்கு தலைமை வகிக்க எதிர்பார்ப்பதாக கூறியுள்ளதோடு "நல்ல கொள்கைகளை ஆதரிப்பதாகவும் [அரசாங்கத்தின்] கெட்ட விஷயங்கள் எதிர்ப்பதாகவும்" சமிக்ஞை செய்துள்ளார். அவருடைய பிரச்சாரமானது, மீள் எழுச்சி பெற்றுள்ளதாகக் கூறப்படும் "பயங்கரவாத" புலிகளிடம் இருந்து "தாய்நாட்டை காப்பாற்றும்" சிங்கள இனவாதத்தை கிளறிவிடுவதை அடிப்படையாகக் கொண்டிருந்து.

இராஜபக்ஷ ஐயத்திற்கு இடமின்றி, .தே.. மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு இடையேயான ஏதேனும் உடன்பாட்டை பற்றிக்கொண்டு, நாட்டை பிரிப்பதாகவும் தேசிய பாதுகாப்பை கீழறுப்பதாகவும் அரசாங்கத்தை கண்டனம் செய்வதோடு அதிகரித்து வரும் சமூக பதட்டங்களை பிற்போக்கு இனவாத திசைகளில் திருப்பவிட முயல்வார்.

தமிழ் கூட்டமைப்பைப் போல், மக்கள் விடுதலை முன்னணியும் (ஜே.வி.பி.) .தே.. தலைமையிலான அரசாங்கத்தை ஆதரிக்கும் என்று சமிக்ஞை செய்துள்ளது. அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்கும் சபையாகவும் .தே.. தலைமையிலான முந்தைய சிறுபான்மை அரசாங்கத்துக்கு முண்டு கொடுக்கவும் ஜனவரி மாதம் நியமிக்கப்பட்ட தேசிய நிறைவேற்றுக் குழுவிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி.யும் பிரதிநிதிகளைக் கொண்டுள்ளன.

ஜே.வி.பி. 544.000 வாக்குகளை தேசிய ரீதியில் பெற்று, முந்தைய பாராளுமன்றத்தில் இருந்ததை விட இன்னும் இரண்டு ஆசனங்கள் அதிகமாக ஆறு ஆசனங்களை வென்றது. நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில், ஜே.வி.பி. தலைவர் அனுர குமார திசாநாயக்க, தனது அமைப்பு எதிர்க் கட்சியாகவே இருக்கும் பிரதான கட்சிக்கு ஆதரவு கொடுக்காது என்று கூறினார். அதே நேரத்தில் அவர், "அரசாங்கத்தை கவிழ்க்க" பிறர் எடுக்கும் முயற்சிகளையும் ஜே.வி.பி. ஆதரிக்காது என்று வலியுறுத்தினார்இது ஒரு நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு கொண்டுவரப்பட்டால் அது .தே.. வை ஆதரிக்கும் என்பதை மூடிமறைத்து பிரகடனம் செய்வதாகும்.

நேற்று வெளியிட்ட "வெற்றி" அறிக்கை ஒன்றில், விக்கிரமசிங்க கூறியதாவது: "நாம் இந்த நாட்டில் ஒரு புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்க ஒரு குடும்பம் போல் ஐக்கியப்பட வேண்டும்... இந்த நாட்டின் பெரும்பான்மை மக்கள் ஜனவரி 8 புரட்சியின் நன்மைகளை நிலைநிறுத்தவும் நல்லாட்சி மற்றும் ஒருமைப்பாட்டை முன்னோக்கி எடுத்துச் செல்லவும் வாக்களித்துள்ளனர்."

ஜனவரி "புரட்சி" பற்றிய குறிப்பிட்டது ஒரு போலித்தனம் ஆகும். ஜனாதிபதி தேர்தலில், .தே.. பிரகாசமான "ஜனநாயக" வண்ணங்களில் சிறிசேனவை சித்தரிப்பதில், உயர் மத்தியதர வர்க்க கல்விமான்கள் மற்றும் தொழில்முறை குழுக்கள், தொழிற்சங்கங்கள், அரசு சாரா நிறுவனங்கள், மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக நவ சம சமாஜக் கட்சி மற்றும் ஐக்கிய சோசலிச கட்சி போன்ற போலி இடது குழுக்களின் தலைமையில் அணிதிரண்டிருந்தது. சிறிசேன மற்றும் விக்கிரமசிங்க இருவரும் வலதுசாரி முதலாளித்துவ அரசியல்வாதிகளாவர். உழைக்கும் மக்களுக்கு எதிராக குற்றங்களில் அவர்களுக்கு நீண்ட வரலாறு உண்டு.

புதிய .தே.. அரசாங்கம் அதன் எதிரிகளையும் தொழிலாள வர்க்கத்தையும் கையாள்வதில் எதேச்சதிகார இராஜபக்ஷ ஆட்சி போலவே ஈவிரக்கமற்றதாக இருக்கும். அது இராஜபக்ஷவுக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் மேலும் அடிகொடுக்கும் இலக்குடன் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் உயர் மட்ட அரச அதிகாரிகள் மீது ஒரு தொடர் மோசடி வழக்குகளை தொடுத்துள்ளது. தேர்தல் பிரசாரத்தின் இறுதி வாரத்தில், 2012ல் தேசிய ரக்பி அணியின் உறுப்பினராக இருந்த வாசிம் தாஜுதீனின் கொலையுடன் தொடர்புபட்டவர்கள் என இராஜபக்ஷவின் குடும்ப உறுப்பினர்கள் மீது விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளது.

அரசாங்கம் அமெரிக்க மற்றும் அதன் நட்பு நாடுகளுடன் இலங்கையின் உறவுகளை ஆழப்படுத்துவதோடு சர்வதேச நிதி மூலதனம் கோரும் தொழிலாள வர்க்கத்தின் மீதான சிக்கன தாக்குதலை முடுக்கிவிடும். பங்குச் சந்தை தேர்தல் நாளன்று ஏழு மாதங்களில் மிக அதிக அளவில் உயர்ந்தது என்ற உண்மையில் .தே..வின் வணிக சார்பு நம்பகத்தன்மை நன்கு சுட்டிக்காட்டப்படுகின்றது. அதே சமயம், அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு சரிவுற்றமை அந்நிய செலாவணி நெருக்கடியும் தொழில் மற்றும் வாழ்க்கை நிலைமைகள் மீதான ஒரு புதிய சுற்று தாக்குதல்களும் நெருங்கி வருவதையும் சுட்டிக் காட்டுகின்றன.

சோசலிச சமத்துவக் கட்சி (சோ...) மூன்று தேர்தல் மாவட்டங்களில் 43 வேட்பாளர்களை நிறுத்தி ஒரு லட்சிய பிரச்சாரத்தை மேற்கொண்டது. அது, உலகம் பூராவும் மற்றும் தெற்காசியாவிலும் ஐக்கிய சோசலிச குடியரசுகளின் பாகமாக இலங்கையில் ஒரு தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை அமைக்க, அனைத்து முதலாளித்துவ பிரிவுகளுக்கும் எதிராக தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்தும் ஒரு சுயாதீனமான வேலைத் திட்டத்துக்காக போராடிய ஒரே கட்சியாகும்.

21 பதிவுசெய்யப்பட்ட கட்சிகள் மற்றும் 201 சுயேட்சைக் குழுக்கள் பங்குபற்றிய ஒரு பெரிய களத்தில், சோ... 321 என்ற சிறிய எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்றாலும், அது வர்க்க உணர்வுடைய தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் தட்டினரின் முக்கியமான பிரதிபலிப்பாகும். நாம் சோ... தேர்தல் பிரச்சாரத்தின் மற்றும் அது பெற்றிருக்கின்ற வாக்குகளின் முக்கியத்துவம் பற்றி பிரத்தியேகமாக எழுதவுள்ளோம்.