சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

The Socialist Equality Party (Sri Lanka) replies to the United Socialist Party

இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி ஐக்கிய சோசலிச கட்சிக்கு பதிலளிக்கிறது

By the Socialist Equality Party
14 August 2015

Use this version to printSend feedback

ஏந்த முதலாளித்துவ கட்சியுடன் கூட்டு சேர விரும்புகிறது" என்று தலைப்பிட்டு ஜூலை 29 அன்று உலக சோசலிச வலைத் தளத்தில் பிரசுரிக்கப்பட்ட அம்பலப்படுத்தலுக்கு விடையிறுப்பாக போலி-இடது ஐக்கிய சோசலிச கட்சி (யூ.எஸ்.பி.) சோசலிச சமத்துவக் கட்சிக்கு (சோ...) எதிராக கடந்த வாரம் ஒரு பழிப்புரையை பிரசுரித்தது.

மார்க்சிச அணுகுமுறைகளுக்கு பதிலாக குறுங்குழுவாதம்" என்று தலைப்பிட்ட யூ.எஸ்.பி. இன் கட்டுரை, “உலக சோசலிச வலைத் தளத்தின் (சோ...) அவதூறுகளுக்கு விடையிறுக்கும் தலையங்க அறிக்கை" என்பதாக அதன் கொள்கை பரப்பு சாதனம் Ratutharuwa இல் பிரசுரிக்கப்பட்டது. அது மீண்டும் மீண்டும் சோசலிச சமத்துவக் கட்சியின் "பொய்கள் மற்றும் அவதூறுகளைக்" குற்றஞ்சாட்டுவதுடன், உலக சோசலிச வலைத் தளத்தின் (WSWS) அந்த கட்டுரை "அவர்களது குறுங்குழுவாதத்தையும், மார்க்சிசம் மற்றும் ட்ரொட்ஸ்கிசத்தை அவர்கள் முழுமையாக புரிந்துகொள்ள தவறியிருப்பதையும் இரண்டையும் அம்பலப்படுத்துகிறது" என்று அறிவிக்கிறது.

ஆகஸ்ட் 17 பொது தேர்தலுக்கு வேட்பாளர் மனுதாக்கலுக்கான கடைசி நாள் ஜூலை 13 அன்று, யாழ்பாண மாவட்ட தலைமை செயலகத்திற்கு வெளியே யூ.எஸ்.பி. தலைவர் சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்த கருத்துக்களின் அரசியல் முக்கியத்துவத்தை சோ... விவரித்து விளங்கப்படுத்தியது என்ற உண்மையை யூ.எஸ்.பி. கடுமையாக எதிர்க்கிறது. ஒரு டஜனுக்கு அதிகமான இதழாளர்களும் மற்றும் WSWS செய்தியாளரும் ஆங்கிலத்தில் வழங்கப்பட்ட ஜயசூரியவின் அந்த கருத்துக்களை பதிவு செய்தனர். இலக்கணப்பிழை அல்லது ஏனைய பிழைகளுக்காக திருத்தம் செய்யாத, அதன் முழுமையான எழுத்துவடிவ உரையை இங்கே காணலாம்.   

அந்த எழுத்துவடிவ உரையில், அவ்வுரையாடலின் போக்கே மலைப்பூட்டுகிறது. தமிழர்கள் நிறைந்த யாழ்பாண வடக்கு நகரில் உரையாற்றுகையில், ஐக்கிய தேசிய கட்சி (யூ.என்.பீ.) மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணிக்கு (UPFA) தலைமை கொடுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி (ஸ்ரீ..சு..) ஆகிய இரண்டு பிரதான முதலாளித்துவ கட்சிகளிடமிருந்தும் தன்னைத்தானே விலக்கிவைத்து காட்டும் முயற்சியில் ஜயசூரிய மிகவும் சிரமப்பட்டார். நீண்டகால சிங்கள மேலாதிக்க வகுப்புவாத போருக்கு அவ்விரு கட்சிகளுமே பொறுப்பாகின்றன, அதில் நூறு ஆயிரக் கணக்கானவர்கள் விலையாக கொடுக்கப்பட்டதோடு, அத்தீவின் வடக்கு மற்றும் கிழக்கின் பெரும்பகுதிகளை அது நாசகரமாக ஆக்கியது.

முன்னதாக அவர் ஐக்கிய தேசிய கட்சியுடன் அரங்கங்களில் தோன்றியிருந்தமை குறித்து உலக சோசலிச வலைத் தள செய்தியாளர் சவால்விடுத்த போது, அவர் யூ.என்.பீ. தலைவர் ரணில் விக்ரமசிங்க உடன் மட்டுமல்ல, மாறாக கடந்தகாலங்களில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ உடனுடன் இணைந்திருந்ததாகவும், அதை மீண்டும் செய்ய நேரிடலாமென்றும் ஜயசூரிய திடமாக அறிவித்தார். “ஒடுக்குமுறையாளருக்கு எதிராக போராட நாங்கள் பேய்களுடனும் கூட கை கோர்ப்போம்,” என்றவர் தெரிவித்தார். “அதைத்தான் நாங்கள் ரணில் விக்ரமசிங்க உடனும் மற்றும் யூ.என்.பீ. உடனும் செய்தோம், ஆனால் எந்தவொரு தேர்தலிலும் நாங்கள் முதலாளித்துவ கட்சிகளுடன் சேர்ந்து போட்டியிட மாட்டோம்,” என்றார்.

ஜயசூரிய முதலாளித்துவ அரசியல்வாதிகளுக்கு ஜனநாயக வேஷமளிப்பதை மறுக்கின்ற போதினும், யூ.எஸ்.பி. அதைத்தான் துல்லியமாக செய்து கொண்டிருக்கின்றது. சோ... அதன் கட்டுரையில் இந்த முடிவிற்கு வந்தது: “ஐக்கிய சோசலிசக் கட்சி எந்த முதலாளித்துவ கட்சியுடனும் கூட்டுச் சேரக்கூடிய, விலைக்கு வாங்கப்படக்கூடிய ஒரு அரசியல் அமைப்பாகும். அக்கட்சிகள் எவ்வளவு பிற்போக்குத்தனமான அமைப்பாக இருந்தாலும் சரி அதை போலி ஜனநாயக வண்ணம்பூசி வாக்காளர்களுக்கு காட்ட அது தயாராக இருக்கின்றது.”

ஐக்கிய சோசலிச கட்சியும், “சுதந்திரத்திற்கான அரங்கமும்"

குறிப்பாக யூ.என்.பீ. தலைமையிலான "சுதந்திரத்திற்கான அரங்கத்தில்" (Platform of Freedom) யூ.எஸ்.பி. பங்கெடுப்பதை Ratutharuwa தலையங்க அறிக்கை நியாயப்படுத்துகிறது. Sunday Leader இதழின் பதிப்பாசிரியர் லசந்தா விக்ரமதுங்க கொழும்பில் வேலைக்கு செல்லும்போது பட்டப்பகலில் கொல்லப்பட்டதற்கு பின்னர், ஜனவரி 2009 இல் "சுதந்திரத்திற்கான அரங்கம்" நிறுவப்பட்டது. அவரது படுகொலை, பாதுகாப்பு படைகளின் ஒத்துழைப்புடன் செயல்பட்டுவந்த அரசாங்க-ஆதரவு கொலைப்படைகள் நடத்திய நூற்றுக்கணக்கானவர்களின் படுகொலைகளில் ஒன்றாகும். இராஜபக்ஷ அரசாங்கத்தின் கீழ், இராணுவம் வடக்கில் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களை தொடுத்ததில், பத்தாயிரக் கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதோடு, மே 2009இல் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகள் (எல்.டீ.டீ..) இயக்கமும் நசுக்கப்பட்டது.

போர்வெறி கொண்ட சர்வாதிகாரத்திற்கு ஓர் எதிர்ப்பை உருவாக்கும் முக்கிய முயற்சி" என்பதாகவும், “ஓர் அரசியல் அணி" அல்ல, “மாறாக ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்கான ஓர் உறுதியான நடைமுறை பிரச்சாரம்" என்பதாகவும் அறிவிக்கும் அந்த "சுதந்திரத்திற்கான அரங்கத்தில்" அது ஏன் நுழைகிறது என்பதைப் புரிந்துகொள்ளாததற்காக, யூ.எஸ்.பி. சோசலிச சமத்துவ கட்சிக்கு எதிராக சீறுகிறது. அனைத்திற்கும் மேலாக அது, "எந்தவொரு சக்திகளும்" —அதாவது, யூ.என்.பீ. மாதிரியான மதிப்பிழந்த முதலாளித்துவ கட்சிகள்— "முதலாளித்துவ கட்டமைப்பிலிருந்து வெளியேற விரும்பவில்லை என்றாலும்கூட அவற்றை சேர்த்துக்கொள்ளாமல் விடக்கூடாது என்ற தனது முடிவு சரியானது,” என்கிறது.

ஆனால் சுதந்திரத்திற்கான அரங்கம்", கொலைப்படைகளிடமிருந்து யாரொருவரையும் காப்பாற்றுவதற்கு எந்தவொரு நடைமுறை நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை, போரையும் எதிர்க்கவில்லை, ஜனநாயக உரிமைகளை அதுவும் குறிப்பாக தமிழர்களது உரிமைகளைப் பாதுகாக்கவும் எதையும் செய்யவில்லை. ஏனென்றால் அதை ஐக்கிய தேசிய கட்சியால் சகித்துக் கொள்ள முடியாது. ஸ்ரீ..சு.கட்சியைப் போலவே அதுவும் சிங்கள பேரினவாதத்தில் பின்னிபிணைந்துள்ளது. அத்தீவை உள்நாட்டு போருக்குள் மூழ்கடித்த 1983 தமிழர்-விரோத இனப்படுகொலைகளுக்கு யூ.என்.பீ. தான் பொறுப்பானது என்பதுடன், பதவியிலிருந்தபோது அதுதான் அப்போரை இரக்கமின்றி நடத்தியது.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு (யூ.என்.பீ.) ஜனநாயக நற்சான்றுகள் வழங்குவதன் மூலமாக அதன் நல்வாய்ப்புகளை மீட்டுயிர்பெறச் செய்வதே "சுதந்திரத்திற்கான அரங்கத்தின்" அரசியல் நோக்கமாகும். "சுதந்திரத்திற்கான அரங்கத்தினது சாசனமே" இந்த அரசியல் அணியின் கூட்டு வேலைத்திட்டமாகும், அதில் பங்குபெற்றிருக்கும் அனைத்து கட்சிகளும் அதற்கு உடன்பட்டுள்ளன. அந்த சிறிய ஆவணம் வெற்றுத்தனமாக, “இந்த மண்ணின் நான்கு மூலைகளிலும் மற்றும் ஒன்பது மாகாணங்களிலும் உள்ள எல்லா இன, மத மக்களின்" "வாழ்வுரிமை" மற்றும் "கருத்து சுதந்திரத்தை" பாதுகாப்பது குறித்து பேசுகிறது. ஆனால் அதில் எதுவொன்றுக்கும் யாரொருவரும் பொறுப்பேற்கவில்லை, மிக நிச்சயமாக திடமான நடைமுறை நடவடிக்கைகள் இல்லவே இல்லை.

தற்போது யூ.என்.பி. தலைவர் விக்ரமசிங்கவை ஆதரித்து வரும் அரசுசாரா அமைப்பான Rights Now—Collective for Democracy, “சுதந்திரத்திற்கான அரங்கத்தின்" நோக்கம் குறித்து மிக மிக வெளிப்படையாக அறிவித்தது. “இந்த முயற்சி மக்களின் கண்களில் எதிர்கட்சிகளை நியாயப்படுத்த வழிவகுக்கிறது, ஆனால் அதேநேரத்தில் மனித உரிமை பாதுகாவலர்கள் அவர்களது இடத்தை மீண்டும் உரிமைகோருவதற்குரிய ஒரு சந்தர்ப்பத்தையும் வழங்குகிறது,” என்று அறிவித்தது.

ஜனவரி 2010 இல், ஒரு ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்கிடையே, ஐக்கிய சோசலிச கட்சி தலைவர் ஜயசூரிய மோசடியான இந்த "சுதந்திரத்திற்கான அரங்கத்தின்" வெற்றியை கொண்டாடுவதற்காக விக்ரமசிங்கவுடன் ஒரு கூட்டு அரங்கத்தில் இணைந்தார். அந்நேரத்தில் ஐக்கிய தேசிய கட்சியோ, போரின் இறுதி மாத அட்டூழியங்களுக்கு நேரடி பொறுப்பான, முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவை எதிர்கட்சிகளின் "பொது வேட்பாளராக" ஆதரித்திருந்தது.

உலக சோசலிச வலைத் தளம் அப்போது குறிப்பிட்டதைப் போல, விக்ரமசிங்க ஜயசூரியவை பின்வருமாறு கூறிப் புகழ்ந்தார்: “இந்த சக்தியை உருவாக்குவதில் அவர்தான் முனைப்பாக இருந்தார். நாங்கள் அவரைப் பின்தொடர்ந்தோம். இன்று நாங்கள் முன்னோக்கி சென்றுள்ளோம். நான் சிறிதுங்கவிற்கு தலைவணங்குகிறேன். படுகொலை அச்சுறுத்தல்களால், நாங்கள் வெளியே வரவே பயந்திருந்தோம். அப்போது சிறிதுங்க முன்னால் வந்தார். அப்போது பதவியிலிருந்த ஜனாதிபதிக்கு சவால்விடுக்க எங்களுக்கு அது பாதை வகுத்து கொடுத்தது,” என்றார்.

இந்த புகழ்ச்சி மயக்கத்தில், போட்டியாளர் தளபதி பொன்சேகா குறித்தும் அவரது போர் குற்றங்களை குறித்தும் ஜயசூரிய முற்றிலும் மௌனமாக இருந்தார்.

ஐக்கிய முன்னணி

சோசலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் விஜே டயஸின் WSWS கருத்துரையும், தற்போதையதை போலவே, ஐக்கிய சோசலிசக் கட்சியிடமிருந்து பழிப்புரைகளை தூண்டிவிட்டது. குறிப்பாக யூ.என்.பி. உடனான அதன் சந்தர்ப்பவாத சூழ்ச்சிகள், லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கி நடைமுறைப்படுத்திய ஐக்கிய முன்னணி தந்திரோபாயத்தை ஒரு முன்மாதிரியாக கொண்டவை என்ற ஐக்கிய சோசலிசக் கட்சியின் வாதத்தை அம்பலப்படுத்தி டயஸ் விரிவாக பதிலளித்தார்.   

யூ.எஸ்.பி. அதற்குப்பின்னர் ஒருபோதும் டயஸிற்கு பதிலளிக்கவில்லை. “லெனின், ட்ரொட்ஸ்கி மற்றும் போல்ஷ்விக்குகள் பல சந்தர்ப்பங்களில் இதேபோன்ற நடவடிக்கைகளை கொண்டு ஜாரிசத்திற்கு எதிரான போராட்டத்தில் குட்டி-முதலாளித்துவ மற்றும் முதலாளித்துவ சக்திகளை எதிர்கொண்டனர்,” என்று அது சர்வசாதாரணமாக மீண்டுமொருமுறை வாதிடுகிறது. அந்த பல சந்தர்ப்பங்களில்" எதையொன்றைக் குறித்தும் அது உறுதியாக ஆராய எந்த முயற்சியும் செய்யவில்லை, ஏனென்றால் லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கி, ஐக்கிய சோசலிசக் கட்சி ஈடுபட்டுள்ளதைப் போல முதலாளித்துவ கட்சிகளுடன் இந்த விதமான சந்தர்ப்பவாத உறவுகளையும் ஒருபோதும் வலியுறுத்தியதில்லை. ஐக்கிய முன்னணி தந்திரோபாயம் என்பது தொழிலாள வர்க்க கட்சிகள் மற்றும் அமைப்புகளுடன் மட்டுமே பயன்படுத்தப்பட்டது, முதலாளித்துவ கட்சிகளுடன் அல்ல.

டயஸின் பதிலுரையிலிருந்து சில பகுதிகளை, ஆபத்திலிருக்கும் அரசியல் பிரச்சினைகளை குறித்த ஒரு சுருக்க தொகுப்பாக, இங்கே வழங்குகிறோம்:

இந்த அரசியல் கேவலத்தை பரிந்துரைப்பவர்களாக லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியின் பெயர்களை ஐக்கிய சோசலிச கட்சி பயன்படுத்திக்கொள்கிறது. தேவையான மேற்கோள்களை "உலக சோசலிச வலைத் தளத்தின் கற்றறிந்த பேராசிரியர்களுக்கு" வழங்க முடியும் என்றும் கூட அந்த எழுத்தாளர் குத்தலாக தெரிவிக்கின்றார். தேவையில்லை. மார்க்சிச இயக்கத்தில் நீண்ட வரலாற்றைக் கொண்ட ஐக்கிய முன்னணி தந்திரோபாயத்துக்கும் மற்றும் ஐக்கிய சோசலிச கட்சி அதன் முழு அரசியல் இருப்பின் ஊடாக மேற்கொண்ட, எப்பொழுதும் தொழிலாள வர்க்கத்துக்கு ஆபத்தானது என நிரூபிக்கப்பட்ட, சந்தர்ப்பவாத கூட்டணி முறைக்கும் இடையிலான வேறுபாடுகள் பற்றி சோசலிச சமத்துவக் கட்சி மிகவும் விழிப்பாக இருக்கின்றது.

வர்க்கப் போராட்டத்தின் வழிமுறைகளைப் பயன்படுத்தி வர்க்க எதிரிக்கு எதிராக தனது உரிமைகளை காக்க தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதும் அணிதிரட்டுவதுமே ஐக்கிய முன்னணியின் உட்பொருளாகும். இந்த முன்னெடுப்பில், தொழிலாள வர்க்கத்தின் சந்தர்ப்பவாத தலைவர்களின் தடுமாற்றத்தையும் போலித்தனத்தையும் அம்பலப்படுத்த மார்க்சிஸ்டுகள் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் பயன்படுத்திக்கொள்வர். ஐக்கிய முன்னணியை ஸ்தாபிப்பதில் இன்றியமையாத நிபந்தனை என்னவெனில், புரட்சிகரக் கட்சியின் அரசியல் சுயாதீனமேயாகும் கூட்டு அரசியல் வேலைத்திட்டமோ, பொதுச் சுலோகமோ மற்றும் பதாதைகளை கலந்துகொள்வதோ அல்ல.

நாஜிகளுக்கு எதிராக 1930களில் சமூக ஜனநாயகவாதிகளுடன் ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியின் ஐக்கிய முன்னணிக்காக பிரச்சாரம் செய்தபோது, லியோன் ட்ரொட்ஸ்கி தெளிவுபடுத்தியதாவது: "சமூக ஜனநாயகவாதிகளுடன் அல்லது ஜேர்மன் தொழிற்சங்க தலைவர்களுடன் பொது மேடை கிடையாது, பொது வெளியீடுகள், பதாகைகள், சுலோக அட்டைகள் கிடையாது! எப்படி வேலை நிறுத்தம் செய்வது, யார் வேலை நிறுத்தம் செய்வது, மற்றும் எப்போது வேலை நிறுத்தம் செய்வது என்ற விடயத்தில் மட்டும் உடன்படுங்கள்! பிசாசுடன் கூட அதனது பாட்டியுடன் மற்றும் நொஸ்கேயுடன் மற்றும் கிரிஸென்ஸ்கியுடன் கூட அத்தகைய ஒரு உடன்பாட்டுக்கு வரமுடியும். இந்த ஒரு நிபந்தனையின் கீழ்த்தான். அதாவது, ஒருவரின் சொந்தக் கைகளை கட்டிப்போடுவதற்கல்ல."

ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் இருந்தபோது, 1980களின் கடைப்பகுதியில், சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் சரியாக இதை தான் செய்தது. 1983இல் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை முன்னெடுத்த யூ.என்.பி., தெற்கில் வளர்ச்சிகண்டு வந்த அமைதியின்மையை நசுக்க பாதுகாப்பு படைகளை விடுவித்தது, வடக்கில் இந்திய அமைதிப்படை என சொல்லப்படுவதை அனுமதிப்பதற்காக இந்திய-இலங்கை உடன்படிக்கையில் கைச்சாத்திட்டது. பிற்போக்குத்தனமான சிங்கள பேரினவாத நிலைப்பாட்டிலிருந்து இந்த உடன்படிக்கையை எதிர்த்த மக்கள் விடுதலை முன்னணியை (ஜே.வி.பி.) நசுக்குவதற்காக இராணுவ சட்டத்தை அது அமுல்படுத்தியது. பாதுகாப்பு படைகளாலும் மற்றும் பாசிச வகை ஜே.வி.பி. கும்பல்களாலும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள், தொழிற்சங்கவாதிகள் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்களும் படுகொலை செய்யப்பட்டனர்.

புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமானது யூ.என்.பி. அரசாங்கத்துக்கு எதிராக தொழிலாளர் பாதுகாப்பு படைகளை, கூட்டு மறியல் போராட்டங்களை, கூட்டு ஆர்ப்பாட்டங்களை மற்றும் ஒரு பொது வேலை நிறுத்தத்தை அமைப்பது போன்ற செயல்முறை நடவடிக்கைகளை எடுக்க ஐக்கிய முன்னணியை பிரேரித்து, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கும் மற்றும் அப்போது ஜயசூரியவும் ஒரு தலைவராக இருந்த நவ சம சமாஜக் கட்சிக்கும் கடிதம் எழுதியது.

இந்த பிரேரணையை முழுமையாக நிராகரித்த நவ சம சமாஜக் கட்சி, "புதிய பாட்டாளி வர்க்க சீர்திருத்தவாத வெகுஜனப் போக்காக" அது விவரித்த ஸ்ரீலங்கா மக்கள் கட்சியை (Sri Lanka Mahajana Party - எஸ்.எல்.எம்.பி.) உள்ளடக்காமைக்காக, புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தை "குறுங்குழுவாதிகள்" என குற்றஞ்சாட்டியது. அப்போது புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் விளக்கியவாறு, ஒரு முதலாளித்துவக் கட்சியாக இருந்த எஸ்.எல்.எம்.பி., ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் (ஸ்ரீ..சு..) இணைக்கப்படுவதாக இருந்தது. அதன் தலைவர் சந்திரிகா குமாரதுங்க, நாட்டின் ஜனாதிபதியானார். ஸ்ரீ..சு.. யின் தற்போதைய தலைவர் வேறு யாருமல்ல, ஜனநாயக-விரோத வழிமுறைகளில் பேர் போன ஜனாதிபதி இராஜபக்ஷவே ஆவார்.

கருத்து வேறுபாடுகள் தெளிவாக இல்லாமல் இருந்திருக்கலாம். புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் விடுத்த ஐக்கிய முன்னணிக்கான அழைப்புக்கு எதிராக, புரட்சிகர மார்க்சிச கட்சியால் ஏற்றுக்கொள்ள முடியாதது என லெனினும் ட்ரொட்ஸ்கியும் எப்போதும் வலியுறுத்திவந்த அரசியல் கூட்டினை, நவ சம சமாஜக் கட்சி உறுதியாக பாதுகாத்தது. புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் சுட்டிக் காட்டியது போல், நவ சம சமாஜக் கட்சி, "முன்நோக்கு மற்றும் முன்நோக்கிய பாதை" என்ற பெயரில் அரசாங்கத்துக்கான ஒரு பொது வேலைத் திட்டத்தின் அடிப்படையில் முதலாளித்துவ எஸ்.எல்.எம்.பி. உடன் ஒரு தேர்தல் கூட்டை ஸ்தாபித்துக்கொண்டது. ஸ்ராலினிஸ்டுகளால் முன்னிலைப்படுத்தப்பட்ட இத்தகைய மக்கள் முன்னணி கூட்டுகள், 1930களில் பிரான்சிலும் ஸ்பெயினிலும் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் அழிவுக்கு வழிவகுத்தது. 1980களில் இலங்கையிலும் விளைவு வேறுபட்டதாக இருக்கவில்லை தொழிலாள வர்க்கத்துக்கு சுயாதீன அரசியல் அணிதிரள்வு மிகவும் அத்தியாவசியமான கட்டத்தில் அது துல்லியமாக தொழிலாள வர்க்கத்தை முடமாக்கியது.

ஜே.வி.பி. யை அரசாங்கத்துக்குள் எடுக்க வழிமுறைகளை கையாண்டு பார்த்த பின்பு, 1989ல் இருந்து தெற்கு பூராவும் ஜே.வி.பி. மற்றும் சிங்கள கிராமப்புற இளைஞர்களுக்கு எதிராக பாதுகாப்புப் படைகளை யூ.என்.பி. ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச கட்டவிழ்த்துவிட்டார். இராணுவத்தாலும் அதன் கொலைப் படைகளாலும் மற்றும் அதன் இரகசிய சித்திரவதை முகாங்கள் மற்றும் சிறைச்சாலை வலயமைப்பின் ஊடாகவும் 60,000 இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஜயசூரிய மேடையை பங்கிட்டுக்கொள்ளும் மற்றும் ஜனநாயகத்துக்கான போராளியாக சித்தரிக்கும் தற்போதைய யூ.என்.பி. தலைவர் ரணில் விக்கிரமசிங்க, அந்த யூ.என்.பி. அரசாங்கத்தில் அமைச்சராக இருந்ததோடு அதன் குற்றங்களுக்கும் நேரடி பொறுப்பாளியாவார், என்பதை சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

எதிர்கட்சிகளின் போராட்டம் [விபக்க்ஷயே விரோதயா] என்னும் கூட்டு

சுதந்திரத்திற்கான அரங்கத்தின்" பாகமாக உள்ள போலி-இடது நவ சம சமாஜக் கட்சி (என்.எஸ்.எஸ்.பீ.) உடன் சேர்ந்து ஐக்கிய சோசலிசக் கட்சி, 2012 இன் இறுதியில், எதிர்கட்சிகளின் போராட்டம் (Vipakshaye Virodhaya  - விபக்க்ஷயே விரோதயா) அல்லது சுருக்கமாக VV என்றழைக்கப்படும் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான ஒரு கூட்டணியில் இணைந்தது.

பெப்ரவரி 2013 புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் VV உத்தியோகபூர்வமாக கையெழுத்திடுகையில், விக்ரமசிங்க, “இதுவொரு புரட்சியின் ஆரம்பம்" என்று அறிவித்தார். உண்மையில் அந்த யூ.என்.பீ. தலைவர் ஒரு புரட்சியை பெருந்திரளான மக்களின் ஓர் இயக்கம் என்ற அர்த்தத்தில் குறிப்பிடவில்லை. நிஜத்தில் அந்த விடயம் அதற்கு எதிர்விதமாக இருந்தது. தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளிடையே அதிகரித்துவந்த அதிருப்தியை, பாதுகாப்பான பாராளுமன்ற வழித்தடங்களுக்குள் திருப்புவதற்கு விபக்க்ஷயே விரோதயா மிகச் சரியான ஓர் அரசியல் அணியாக கருதப்பட்டது. “நாம் நல்லாட்சியை நோக்கிய ஒரு பயணத்தைத் தொடங்கியுள்ளோம்,” என்று அறிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சிக்கு அப்பாற்பட்டு, விபக்க்ஷயே விரோதயாவில் ஐக்கிய சோசலிசக் கட்சியின் பங்காளிகளாக இருந்தவர்களில், நவ சம சமாஜ கட்சியும், இரண்டு தமிழ் முதலாளித்துவ கட்சிகளான தமிழ் தேசிய கூட்டணி (.தே.கூ.) மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணியும், இரண்டு சிங்கள தீவிரவாத குழுக்களான நவ சிங்கள உறுமய மற்றும் தாய்நாடு பாதுகாப்பு முன்னணியும் உள்ளடங்கும்.

அந்நாடு ஓர் "ஒதுக்கப்பட்ட அரசாக" மாறிவருவதைத் தடுப்பதற்குரிய ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தைக் கோரியும் மற்றும் இலங்கை மனிதஉரிமைகள் மீறல்கள் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் (UNHCR) கையாள்வதற்கு ஓர் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்புவிடுத்தும், மார்ச் 2013 இல், விபக்க்ஷயே விரோதயா இராஜபக்ஷக்கு ஒரு கடிதம் அனுப்பியபோது, அதன் அரசியல் நிலைநோக்கு விரைவிலேயே வெளிப்படையாக ஆனது.

2009 வரையில் இராஜபக்ஷவின் மூர்க்கமான போரை ஆதரித்திருந்த அமெரிக்கா, இலங்கை ஜனாதிபதியை சீனாவிடமிருந்து தூர விலக்கி வைப்பதற்கு அழுத்தமளிப்பதற்கொரு வழிவகையாக, எரிச்சலூட்டும் வகையில் அத்தீர்மானத்தை ஆதரித்தது. அப்பிராந்தியம் முழுவதிலும் சீன செல்வாக்கைப் பலவீனப்படுத்தி சீனாவை இராணுவரீதியில் சுற்றிவளைக்கும் நோக்கில், ஒபாமா நிர்வாகம் அதன் "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பை" தீவிரப்படுத்தி இருந்தபோதுதான் அது வந்தது. இந்தியப் பெருங்கடலின் கப்பல் போக்குவரத்து பாதையின் குறுக்குவெட்டு சந்தியில் இலங்கை முக்கிய மூலோபாய இடத்தில் அமைந்துள்ளதால், பெண்டகனின் திட்ட வகுப்பாளர்கள் ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கிலிருந்து சீனாவின் எரிசக்தி மற்றும் கனிம வள இறக்குமதிகளை தடுப்பது உள்ளடங்கலாக, அவர்களது போர் மூலோபாயங்களுக்கு எப்போதுமே இத்தீவை மிக முக்கியமாக பார்க்கிறார்கள்.

விபக்க்ஷயே விரோதயாவிற்கு ஐக்கிய சோசலிச கட்சி மற்றும் நவ சம சமாஜ கட்சியும் ஆதரவளிப்பது சர்வதேச அளவில் போலி-இடது அமைப்புகளிடையிலான ஒரு பரந்த மாற்றத்தின் பாகமாகும், அது 2011 இல் லிபியாவில் அமெரிக்க-தலைமையிலான இராணுவ தலையீட்டுக்கு அவர்களது ஆதரவிலும் மற்றும் "மனித உரிமைகள்" எனும் போலி சாக்குபோக்கின்கீழ் சிரியாவில் நடந்துவரும் ஆட்சி மாற்ற நடவடிக்கைக்கு அவர்களது ஆதரவிலும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. இலங்கையை பொறுத்த வரையில், வாஷிங்டன் இராஜபக்ஷவை அதிகாரத்திலிருந்து நீக்குவதற்கு இராணுவ தலையீட்டுக்கு மாறாக இராஜதந்திர சூழ்ச்சி அணுகுமுறைகளை பயன்படுத்தியது.

கொழும்பில் ஆட்சி-மாற்றம்

சுதந்திரத்திற்கான அரங்கம்" மற்றும் விபக்க்ஷயே விரோதயா அந்த ஆட்சி மாற்ற நடவடிக்கையில் கருவாக இருந்தன. அவை ஜனவரி 8, 2015 இல் ஒரு முன்கூட்டிய ஜனாதிபதி தேர்தலை இராஜபக்ஷ அறிவித்த உடனேயே நடவடிக்கையில் இறங்கின. அதற்கடுத்த நாளே, இராஜபக்ஷவின் முக்கிய கைக்கூலிகளில் ஒருவரான சுகாதாரத்துறை அமைச்சர் மைத்திரிபால சிறிசேன அமைச்சர் பதவியிலிருந்து வெளியேறி, ஜனாதிபதிக்கு சவாலாக எதிர்த்துப் போட்டியிடும் அவரது விருப்பத்தை அறிவிக்க ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தைக் கூட்டினார்.

அந்த பத்திரிகையாளர் கூட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஸ்தாபகரின் மகளான முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் பிரசன்னம், பரந்த அரசியல் சூழ்ச்சிகள் சம்பந்தப்பட்டிருந்ததை சுட்டிக்காட்டியது. குமாரதுங்க இரண்டு முறை இலங்கை ஜனாதிபதியாக சேவையாற்றிய பின்னர், கிளின்டன் அமைப்பின் மூலமாக வாஷிங்டனுடன் நெருக்கமான உறவுகளை ஸ்தாபித்திருந்தார். ஒபாமாவின் முன்னாள் வெளியுறவுத்துறை செயலர் ஹிலாரி கிளின்டன் "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பின்" முக்கிய வடிவமைப்பாளர்களில் ஒருவராக இருந்த நிலையில், இலங்கையில் உட்பட அதனது எல்லா சதிகளிலும் அவர் சம்பந்தப்பட்டிருந்தார்.

இந்தளவிற்கு விபரங்கள் பகிரங்கமாக வெளியானதும், சோசலிச சமத்துவக் கட்சி, இராஜபக்ஷவிற்கு எதிராக நடவடிக்கைகளில் குமாரதுங்க, விக்கிரமசிங்க உட்பட மூத்த யூ.என்.பீ. பிரபலங்களுக்கும் மற்றும் வாஷிங்டன் அதிகாரிகளுக்கும் இடையிலான நயவஞ்சக கூட்டை குறைந்தபட்சம் ஏப்ரல் 2014 இல் இருந்து ஆவணப்படுத்தியது. ஜனாதிபதி தேர்தலில் விக்கிரமசிங்க ஒதுங்கிக் கொண்டார், யூ.என்.பி., சிறிசேனவை பொதுவான எதிர்கட்சி வேட்பாளராக ஆதரித்தது. இராஜபக்ஷவை தோற்கடித்த சிறிசேன, அதற்கு கைமாறாக, விக்கிரமசிங்கவை பிரதம மந்திரியாக மற்றும் சிறுபான்மை யூ.என்.பி. தலைமையிலான அரசாங்கத்தின் தலைவராக நிறுவியது.  

உயர் நடுத்தர வர்க்க கல்வியாளர்கள் மற்றும் தொழில்வல்லுனர் குழுக்களின் ஒரு மிகப்பெரிய கூட்டத்துடன் போலி-இடது அமைப்புகளும், அரசு-சாரா அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்களும், அரசாங்கத்தின் சகல குற்றங்கள் மற்றும் அட்டூழியங்களில் ஆழமாக உடந்தையாய் இருந்த சிறிசேனவை, “சர்வாதிகார" மற்றும் "பாசிச" இராஜபக்ஷவிற்கு ஜனநாயக மாற்றீடாக ஊக்குவிப்பதில் ஒரு முக்கிய பாத்திரம் வகித்தன.

என்.எஸ்.எஸ்.பி. மற்றும் யூ.எஸ்.பி. நடைமுறையில் ஒரு தொழில் பங்கீட்டை கொண்டுள்ளன. என்.எஸ்.எஸ்.பி. தலைவர் விக்ரம்பாஹூ கருணரத்ன மீண்டும் மீண்டும் சிறிசேனவின் மேடைகளில் தோன்றி இராஜபக்ஷவின் "பாசிச ஆட்சியைக்" குற்றஞ்சாட்டிய அதேவேளையில், ஐக்கிய சோசலிசக் கட்சியோ அதன் இடைவெளியைப் பேணிவந்தது, ஆனால் எவ்வாறிருந்த போதினும் மறைமுகமாக இராஜபக்ஷவிற்கு-எதிரான பிரச்சாரத்தை ஆதரித்தது. யூ.என்.பி. மற்றும் ஸ்ரீ..சு.. இரண்டிடம் இருந்தும் சுயாதீனமானது என்று காட்டிக்கொண்டே, யூ.எஸ்.பி. இன் ஜனாதிபதி வேட்பாளர் ஜயசூரிய, "நவ-தாராளவாத பொருளாதார கொள்கைகளுக்கு" சிறிசேனவினது "கடமைப்பாடுகள்" மீது மட்டுப்படுத்தப்பட்ட விமர்சனங்களையே வைத்தார், ஆனால் பாதுகாப்பு மந்திரியாக செயல்பட்டு கொண்டிருந்த சந்தர்ப்பங்கள் உட்பட அரசாங்கத்தின் போர் குற்றங்களில் அவரது பொறுப்புணர்வைக் குறித்து மவுனமாக இருந்தார். அவரது நிஜமான கோபம் இராஜபக்ஷவிற்கு எதிராக மற்றும் அவரது "சர்வாதிகார ஆட்சிக்கு" எதிராக திரும்பி இருந்தது. சிறிசேனவை "தீமை குறைந்தவர்" என்று எடுத்துக்காட்டியதன் மூலமாக, வாக்காளர்களில் மிகவும் அவநம்பிக்கையோடு இருந்தவர்களை, முன்னாள் சுகாதார அமைச்சரின் பின்னால் அணிதிரட்டுவதில் ஒரு முக்கிய பாத்திரம் வகித்தது.             

ஐக்கிய சோசலிச கட்சியின் வரலாற்று வேர்கள்

சோசலிச சமத்துவக் கட்சிக்கு எதிரான அதன் பழிப்புரையில், யூ.எஸ்.பி. சோசலிச சமத்துவக் கட்சியின் வலியுறுத்தலான, வரவிருக்கும் புரட்சிகர போராட்டங்களுக்கு தயாரிப்பு செய்வதில், தொழிலாளர்கள், இலங்கை மற்றும் சர்வதேச அளவில் இருபதாம் நூற்றாண்டின் முக்கிய மூலோபாய அனுபவங்களிலிருந்து பெற்ற அரசியல் படிப்பினைகளைக் கொண்டு ஆயுதபாணியாக்கப்பட வேண்டும் என்பதை ஏளனஞ் செய்கிறது. ஐக்கிய சோசலிச கட்சிக்கு அளித்த அவரது 2010 பதிலுரையில், சோசலிச சமத்துவக் கட்சி செயலர் விஜே டயஸ் இந்த பிரச்சினைகளை வரையறுத்து, ஐக்கிய சோசலிச கட்சியின் வரலாற்று வேர்களை வரைந்தளித்தார். அதற்கும் ஐக்கிய சோசலிச கட்சி பதிலுரைக்கவில்லை.

வரலாற்றுப் பிரச்சினைகள் பற்றிய [ஓர்] அற்பத்தனமான போக்கு, குட்டி-முதலாளித்துவ அமைப்புக்களின் அடையாளக் குறியீடாகும். ஜயசூரிய எந்தவொரு வரலாற்றையும், குறிப்பாக அதன் சொந்த அமைப்பின் வரலாற்றையே நினைவுகூர விரும்பவில்லை. தொழிலாள வர்க்கம் பெரும் விலை கொடுக்க நேர்ந்த சந்தர்ப்பவாத சூழ்ச்சிகளதும் அரசியல் மூழ்கடிப்புகளின் துதிபாடல்களே அவரது சாதனையாக உள்ளது. எப்படியாயினும், இலங்கையிலும் மற்றும் அனைத்துலகிலும் தனது சொந்த மூலோபாய அனுபவங்களில் இருந்து அத்தியாவசிய பாடங்களை கற்றுக்கொள்ளுமளவுக்கு மட்டுமே தொழிலாள வர்க்கத்தால் முன்செல்ல முடியும். மார்சிசம் அல்லது புரட்சிகர அரசியல் கொள்கைகளுடன் ஐக்கிய சோசலிச கட்சிக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்பதையே வரலாறு தெளிவுபடுத்துகிறது.

பரந்த தொழிலாள வர்க்க போராட்டங்களின் மத்தியில் 1964 இல் சிறிமா பண்டாரநாயக்க அம்மையாரின் முதலாளித்துவ அரசாங்கத்தில் இணைந்த லங்கா சம சமாஜக் கட்சியின் காட்டிக்கொடுப்பு, இலங்கையிலும் மற்றும் சர்வதேச ரீதியிலும் தொழிலாள வர்க்கத்துக்கு ஆழமான தாக்கத்தைக் கொண்டிருந்தது. ஒரு ட்ரொட்ஸ்கிச கட்சியாக வெளியில் காட்டிக்கொண்ட ஒரு கட்சி, சோசலிச சர்வதேசியவாத அடிப்படைகளை வெளிப்படையாக கைவிட்டது அதுவே முதல் தடவையாகும். இதன் விளைவாக, வர்க்க ஐக்கியத்துக்கான போராட்டம் இன்மையால், குட்டி முதலாளித்துவ கெரில்லாவாத ஜே.வி.பி. மற்றும் விடுதலைப் புலிகள் உட்பட இனவாத அரசியல் தழைத்தோங்கியது. அடுத்து வந்த முழு வரலாற்றையும் லங்கா சம சமாஜக் கட்சியின் காட்டிக்கொடுப்பு தீர்மானிக்காவிட்டாலும், அதன் விளைவுகளை புரிந்துகொள்ளாமல் உள்நாட்டு யுத்தத்தின் வெடிப்பு உட்பட அடுத்து வந்த நிகழ்வுகளை புரிந்துகொள்வது சாத்தியமற்றது.

1964 இல், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரித்தானிய பகுதியான, சோசலிச தொழிலாளர் கழகத்தின் தலைவரான ஜெரி ஹீலி, கொழும்புக்கு சென்றதோடு, பண்டாரநாயக்க அரசாங்கத்துக்குள் நுழைவதற்கு முடிவெடுக்கும் லங்கா சம சமாஜக் கட்சி மாநாட்டுக்கு வெளியில் பிரச்சாரம் செய்தார். 1950களின் முற்பகுதியில், மிஷேல் பப்லோ மற்றும் ஏர்னெஸ்ட் மன்டேல் ஆகியோரின் தலைமையில் நான்காம் அகிலத்துக்குள் தலைதூக்கிய சந்தர்ப்பவாத போக்கிலேயே இந்தக் காட்டிக்கொடுப்பு வேரூன்றியுள்ளது என்பதை ஹீலி அடையாளங்கண்டார். யுத்தத்துக்கு பின்னரான முதலாளித்துவ மறுஸ்திரப்பாட்டுக்கும் மற்றும் ஸ்ராலினிச, சமூக ஜனநாயகவாத மற்றும் முதலாளித்துவ தேசியவாதிகளின் மேலாதிக்க தலைமைத்துவத்துக்கும் பப்லோவாதிகள் அடிபணிந்தனர்.

இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி அங்கம் வகிக்கும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, பப்லோவாத சந்தர்ப்பவாதத்துக்கு எதிராகப் போராடவும் ட்ரொட்ஸ்கிசத்தின் கொள்கைகளை பாதுகாக்கவும் 1953ல் ஸ்தாபிக்கப்பட்டது. தற்போது ஐக்கிய சோசலிச கட்சி கூட்டு வைத்துள்ள சந்தர்ப்பவாத "அகிலமான" தொழிலாளர் அகிலத்துக்கான குழு (Committee for a Workers International), காலஞ்சென்ற டெட் கிராண்டுடன் தொடர்புபட்டுள்ளது. பப்லோ மற்றும் மண்டேலுக்கு சமமான நோக்கை கொண்டிருந்த டெட் கிரான்ட், பப்லோவாத அகிலத்தின் பிரித்தானிய பகுதிக்கு குறிப்பிட்டகாலம் வாக்குரிமை கொண்டிருந்தார்.

இலங்கை: மாபெரும் காட்டிக்கொடுப்பு என்ற அவரது பிரசுரத்தில் ஹீலி விளக்கினார்: "[லங்கா சம சமாஜக் கட்சியின்] சீரழிவு, சர்வதேச ட்ரொட்ஸ்கிச இயக்கத்துக்குள்ளான போராட்டத்துடன் விடுவிக்கமுடியாதளவு பிணைந்துள்ளது. அது, பப்லோவினதும் அவரது ஐரோப்பிய பங்காளிகளான ஜேர்மைன் [மன்டேல்] மற்றும் பியர் பிராங்கினதும் காட்டிக்கொடுப்பை முழு உதாரணமாகக் கொண்டுள்ளது." "இதற்கான பதில் இலங்கையில் அன்றி, பப்லோவாத திருத்தல்வாதத்துக்கெதிரான போராட்டம் பற்றிய சர்வதேச கற்கையில் காண வேண்டும். இந்தக் கூட்டின் உண்மையான சிருஷ்டிகள் பாரிசில் உள்ளனர்," என அவர் வலியுறுத்தினார். பல ஆண்டுகளாக லங்கா சம சமாஜக் கட்சியின் பின்னடிப்பை அனுமதித்து பொறுத்துக்கொண்ட இந்த பப்லோவாதிகள், கொழும்பில் கூட்டணி அரசாங்கத்துக்கு வழியமைத்தனர்.

1968ல் ஸ்தாபிக்கப்பட்ட புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம், இந்தப் படிப்பினைகளின் அடிப்படையில் ஸ்தாபிக்கப்பட்டதோடு ஹீலியின் இந்த மரபுரிமையை பெருமையுடன் காக்கின்றது. ஹீலியின் பிந்தைய அரசியல் சீரழிவுக்கு எதிராக, பு... நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் சேர்ந்து ஒரு அரசியல் போராட்டத்தை முன்னெடுக்க முடிந்ததும் இந்த அடிப்படையிலேயே ஆகும். ஹீலியின் அரசியல் சீரழிவு சோசலிச தொழிலாளர் கழகத்தின் புதிய வடிவமாயிருந்த பிரிட்டிஷ் தொழிலாளர் புரட்சிக் கட்சியுடனான பிளவில் 1985-86ல் உச்சக் கட்டத்தை அடைந்தது. தொழிலாளர் புரட்சிக் கட்சியின் காட்டிக்கொடுப்பில் இருந்து அவசியமான படிப்பினைகளை விவரமாக நான்காம் அகிலம் ஆராய்ந்தறிந்து கொண்டிருந்த அதேவேளை, ட்ரொட்ஸ்கிச கொள்கைகளை காக்க குறிப்பாக 1960களில் ஹீலி இட்டு நிரப்பிய மிகப்பெரும் அரசியல் பாத்திரத்தை முன்பைவிட சிறப்பாக அடையாளம் கண்டது.

லங்கா சம சமாஜக் கட்சியின் காட்டிக்கொடுப்பு மறக்கப்படுவதை ஐக்கிய சோசலிச கட்சி விரும்புவது ஆச்சரியத்திற்குரியதல்ல. ஜயசூரிய, நவ சம சமாஜக் கட்சி தலைவர் விக்கிரமபாகு கருணாரட்னவுடன் சேர்ந்து, காட்டிக் கொடுப்பின் பின்னரும் ஒரு தசாப்தத்துக்கும் மேலாக, லங்கா சம சமாஜக் கட்சியில் தொடர்ந்தும் இருந்துள்ளார். 1965ல் பண்டாரநாயக்க அரசாங்கம் கவிழ்ந்த போதிலும், லங்கா சம சமாஜக் கட்சி தலைவர்களுக்கு கொடுத்த பிரதான அமைச்சர் பதவிகளுடன் இன்னுமொரு கூட்டரசாங்கம் 1970ல் பதவிக்கு வந்தது. அந்தக் கூட்டணி அரசாங்கம், 1971ல் ஜே.வி.பி.யினரை நசுக்கி, ஒரு மதிப்பீட்டின்படி 15,000 இளைஞர்களை கொன்று, பெளத்தத்தை அரச மதமாக ஆக்கிய இனவாத அரசியலமைப்பை திணித்து, கல்வியில் தமிழர்களுக்கு எதிரான பாரபட்ச நடவடிக்கைகளை அமுல்படுத்தி மற்றும் தமிழ் பேசும் தோட்டத் தொழிலாளர்களை இந்தியாவுக்கு திரும்பிச் செல்ல நெருக்கிய நிலையிலும், ஜயசூரியவும் கருணாரட்னவும் லங்கா சம சமாஜக் கட்சியிலேயே இருந்தனர். உண்மையான சந்தர்ப்பவாதிகளைப் போல், 1977 பொதுத் தேர்தலில் லங்கா சம சமாஜக் கட்சி தோல்வி கண்டு, தொழிலாளர்கள் மத்தியில் தூற்றப்பட்ட பின்னரே அவர்கள் அதில் இருந்து விலகினர். ஜயசூரியவும் கருணாரட்னவும் 1978ல் நவ சம சமாஜக் கட்சியை ஸ்தாபித்ததோடு தொடர்ந்து தமது சொந்த அமைப்புகளுக்கு தலைமை வகிக்க பிரிந்து சென்ற போதிலும், அவர்கள் வர்க்க ஒத்துழைப்பை செய்யும் கூட்டணிவாத அரசியலில் இருந்து பிளவுபடவில்லை.

சோசலிச சமத்துவக் கட்சியின் சான்றுகள்

ஒருபுறம் சோசலிச சமத்துவ கட்சி மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவுக்கும், மறுபுறம் சகல போலி-இடது அமைப்புகளுக்கும் இடையே இணைக்கவியலாத வர்க்க இடைவெளி நிலவுகிறது. புரட்சி கம்யூனிஸ்ட் கழகம் ஸ்தாபிக்கப்பட்டதிலிருந்து அரை நூற்றாண்டுக்கு அண்மித்தளவில், இக்கட்சி நடத்தியுள்ள கொள்கைரீதியிலான நீடித்த போராட்டம், சகல வடிவிலான தேசியவாதம் மற்றும் வகுப்புவாதத்திற்கு எதிராக பாட்டாளி வர்க்க சர்வதேசியத்திற்கான அதன் போராட்டம், மற்றும் சிறுபான்மை தமிழர்களின் ஜனநாயக உரிமைகளை ஒடுக்குவதற்கு அடுத்தடுத்து வந்த கொழும்பு அரசாங்கங்களால் நடத்தப்பட்ட போருக்கு எதிராக அதன் தைரியமான போராட்டம் என இவற்றின் விளைவாக தொழிலாள வர்க்கத்தில் அது ஆழமாக வேர்களை ஸ்தாபித்துள்ளது.    

Ratutharuwa தலையங்க அறிக்கை அதன் சந்தர்ப்பவாத நடவடிக்கைகளில் பங்கெடுக்க மறுப்பதற்காக சோசலிச சமத்துவக் கட்சியை "குறுங்குழுவாதமாக" கண்டிப்பதுடன், தத்துவார்த்த தெளிவுக்கான சோ... இன் போராட்டத்தை பரிகசிக்கிறது, அத்துடன் தொழிலாள வர்க்கத்தில் சோ... கொண்டுள்ள நீண்ட வரலாற்று பதிவுகளை மறுக்கும் முயற்சியாக அதன் சொந்த பொய்களைப் பிடித்துக் கொள்கிறது. “சோசலிச சமத்துவ கட்சிக்கு தொழிலாள வர்க்கத்தில் ஏதேனும் செல்வாக்கோ அல்லது அடித்தளமோ இருக்கிறது என்பதற்கு அங்கே சிறிதும் ஆதாரமில்லை என்ற உண்மையிலிருந்தே இந்த முற்றுப்பெறாத குறுங்குழுவாதம் பெருக்கெடுத்துள்ளது. அது தொழிலாளர்களின் அன்றாட போராட்டங்களில் பங்கெடுக்க எந்தவொரு முயற்சியும் செய்வதில்லை. அதற்கு மாறாக, பெரும்பாலும் சிக்கலான உயிர்வாழ்விற்கான போராட்டங்களில் அவர்களது கரங்களை அசுத்தப்படுத்திக் கொள்ளாமல், சோசலிச சமத்துவ கட்சி அங்கத்தவர்கள் அவர்களது வீடுகளில் சௌகரியமாக இருந்து கொண்டு 'சோசலிசத்தின் தூய்மை' குறித்து உபதேசிக்கின்றனர்,” என்றது எழுதியது.

தொழிலாள வர்க்கம் மற்றும் அதன் அன்றாட போராட்டங்கள் குறித்து யூ.எஸ்.பி. என்ன குறிப்பிடுகிறதோ அதற்கும் தொழிலாளர்களுக்கும் உள்ளபடியே எந்த சம்பந்தமும் இல்லை. எல்லா போலி-இடது அமைப்புகளையும் போலவே, ஐக்கிய சோசலிச கட்சியும் தொழிற்சங்கங்களின் ஊழல்மிகுந்த நடுத்தர வர்க்க எந்திரங்களுக்குள்ளும், பல்வேறு அரசு-சாரா அமைப்புகளுக்குள்ளும் "தொழிலாள வர்க்கத்தை" அடையாளம் காண்கிறது. இவை தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் எதிர்ப்பை ஒடுக்குவதில் இலங்கையில் போலவே ஒவ்வொரு நாட்டிலும் ஆளும் வர்க்கங்களுக்காக ஒரு முக்கிய பாத்திரம் வகித்துள்ளன. சுதந்திர வர்த்தக மண்டலங்கள் மற்றும் பொது சேவை பணியாளர் தொழிற்சங்கம் (FTZGSEU), சிலோன் ஆசிரியர்கள் தொழிற்சங்கம் (CTU) மற்றும் அரசு தாதிமார் அதிகாரிகள் அமைப்பு (GNOA) ஆகியவற்றுடன் ஐக்கிய சோசலிச கட்சி நெருக்கமாக தொடர்பு கொண்டுள்ளது, அவை அனைத்துமே காட்டுக்கொடுப்புகளின் வரலாற்று பதிவுகளை கொண்டுள்ளன. இந்த CTU மற்றும் GNOA இப்போது செயலூக்கத்துடன் யூ.என்.பி. தேர்தல் பிரச்சாரத்தை ஆதரித்து வருகின்றன.

ஐக்கிய சோசலிச கட்சியின் பொருத்தமற்ற அவமதிப்புகளுக்கு முழுமையான பதில் வழங்குவதென்றால் ஏற்கனவே இந்த மிக நீண்ட பதிலுரையை இன்னும் இரண்டு மடங்கு அதிகமாக்கிவிடும். ஆனால் சில அவதூறுகளைப் போனால் போகட்டும் என விட்டுவிட முடியாது. பு.../சோ... இன் அங்கத்தவர்கள் தொழிலாள வர்க்கத்திற்குள் மற்றும் கிராமப்புற மக்களிடையே அவர்களது கொள்கைக்கான தீர்க்கமான போராட்டத்திற்காக எத்தனையோ சந்தர்ப்பங்களில் பெரும் விலை கொடுத்திருக்கிறார்கள்.

* 1971 இல், மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) எழுச்சியை தடுக்க அதன் இராணுவத்தைக் கட்டவிழ்த்துவிட்டிருந்த பண்டாரநாயக்க அரசாங்கத்தின் பாகமாக ல.... இருந்தது, ஜயசூரிய அதன் ஓர் அங்கத்தவராக இருந்தார். புரட்சி கம்யூனிஸ்ட் கழகம் தலைமறைவாக இருக்க நிர்பந்திக்கப்பட்டு, அதன் பிரசுரங்களுக்குத் தடைவிதிக்கப்பட்ட போதினும் கூட, அது ஜே.வி.பி. அங்கத்தவர்கள் மற்றும் கிராமப்புற இளைஞர்கள் மீதான அரசு ஒடுக்குமுறைக்கு எதிராக ஒரு கோட்பாட்டுரீதியிலான நிலைப்பாட்டை எடுத்தது, அதேவேளையில் அரசியல்ரீதியில் ஜே.வி.பி. இன் அரசியலை எதிர்த்தது. புரட்சி கம்யூனிஸ்ட் கழகத்தின் இரண்டு அங்கத்தவர்களான மத்திய குழு அங்கத்தவர் லக்ஷ்மன் வீரக்கோன் மற்றும் எல்.ஜி. குணதாச கைது செய்யப்பட்டு, பொலிஸ் காவலில் கொல்லப்பட்டார்கள்.

* 1977 இல் பண்டாரநாயக்க அரசாங்கத்தின் தோல்வியை தொடர்ந்து, அதற்கடுத்து வந்த யூ.என்.பி. அரசாங்கம் துரிதமாக வகுப்புவாத பதட்டங்களைத் தூண்டிவிட்டு, நாட்டின் வடக்கில் துருப்புகளை அதிகரித்தது. புரட்சி கம்யூனிஸ்ட் கழகம் ஆரம்பத்திலிருந்தே, அதுவும் வகுப்புவாத பிற்போக்குத்தன சூழலிலும், வடக்கு மற்றும் கிழக்கிலிருந்து இராணுவத்தை நிபந்தனையின்றி உடனடியாக வெளியேற்ற கோரியதுடன், தொழிலாள வர்க்க ஐக்கியத்திற்காக போராடியது. 1979 இல், பொலிஸூடன் இணைந்து வேலை செய்து வந்த யூ.என்.பீ. இன் குண்டர்களால் முன்னணி பு... அங்கத்தவர் ஆர்.பி. பியதாச அரசாங்க கொள்கைகளை எதிர்த்ததற்காக கொடூரமாக கொல்லப்பட்டார்.

* 1988 மற்றும் 1998 இல், இந்திய-இலங்கை உடன்படிக்கைக்கும் மற்றும் ஜே.வி.பி. இன் "தாய்நாட்டை பாதுகாக்கும்" பேரினவாத பிரச்சாரத்திற்கும் எதிராக நின்ற ஒரே கட்சி பு... மட்டுமே ஆகும். அதன் நிலைப்பாட்டின் விளைவாக, கட்சி, பொலிஸ் தாக்குதல்களையும், கைது நடவடிக்கைகளையும் அத்துடன் ஜே.வி.பி. இன் தாக்குதல்களையும் முகங்கொடுத்தது. ஜே.வி.பி. இன் துப்பாக்கிதாரிகள் மூன்று பு... அங்கத்தவர்களான ஆர். . பிட்டவல, பீ. எச். குணபால மற்றும் கிரேஷன் கீகியனகே ஆகியோரை கொன்றனர்.

* வடக்கில், போரை எதிர்க்கவும் மற்றும் துருப்புகளை நிபந்தனையின்றி உடனடியாக திரும்ப பெறுவதையும் கோரி, அதே நேரத்தில் எல்.டீ.டீ.. இன் தமிழர் பிரிவினைவாதத்திற்கு எதிராகவும் சோசலிச சமத்துவக் கட்சி அங்கத்தவர்கள் ஒரு கடினமான அரசியல் போராட்டத்தை நடத்தினர். 1998 இல் எல்.டீ.டீ.., கட்சியை மிரட்டவும் மற்றும் மவுனமாக்கவும் மற்றும் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தும் அதன் போராட்டத்தை தடுக்கும் முயற்சியில் ஐந்து சோ... அங்கத்தவர்களான இராசேந்திரன் சுதர்சன், பரமு திருஞானசம்பந்தர், காசிநாதன் நகுலேஸ்வரன், . இராஜரத்தினம் மற்றும் ஈ. நயல்வேல் ஐ கைது செய்தது. சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் அதன் சகோதரத்துவ கட்சிகளது சர்வதேச பிரச்சாரத்தின் காரணமாக மட்டுமே அவர்கள் பாதிப்பின்றி விடுவிக்கப்பட்டார்கள். 2007 இல், அப்போது அரசாங்க ஆதரவிலான கொலைப்படைகள் விலக்கீட்டுரிமையுடன் செயல்பட்ட நிலையில், சோசலிச சமத்துவக் கட்சி அங்கத்தவர் நடராஜா விமலேஸ்வரன் கடற்படையின் கட்டுப்பாட்டிலிருந்த ஊர்காவற்துறை தீவுக்குச் சென்று கொண்டிருந்தபோது காணாமல் போனார், அனேகமாக அவர் கொல்லப்பட்டிருக்கலாம்.

2005 ஜனாதிபதி தேர்தல்

சோ... அரசியல் போராட்டத்திலிருந்து ஒதுங்கிக் கொள்கிறது என்ற கருத்துக்கு ஒரேயொரு திடமான எடுத்துக்காட்டாக பின்வருவதைத் தான் Ratutharuwa குறிப்பிட்டது: “2004 இல் தேர்தல் புறக்கணிப்பு பிரச்சாரம் செய்த எல்.டீ.டீ.. இன் தவறுக்கு எதிராக யூ.எஸ்.பி. ஒரு பலமான பிரச்சாரத்தைத் தொடங்கியபோது, சோசலிச சமத்துவ கட்சி அந்த தேர்தலில் எங்கேயும் காணப்படவில்லைஜனாதிபதி வேட்பாளரும் மற்றும் ஐக்கிய சோசலிச கட்சி பொது செயலாளருமான சிறிதுங்க ஜயசூரிய அத்தேர்தலில் மூன்றாவது இடத்தில் வந்தபோது, அவர் மிகத் தெளிவாக மஹிந்த இராஜபக்ஷவால் பேரினவாத சக்திகள் கட்டவிழ்த்து விடப்படுதவற்கு எதிராக எச்சரிப்பதற்கு அந்த மேடையை பயன்படுத்தினார். சோசலிச சமத்துவக் கட்சியோ அது மாதிரி எதையும் செய்யவில்லை. அவர்களது வேட்பாளர் விஜே டயஸ் அதே அரங்கில் பேசியபோது, (வழமை போல) ஒரு சிறிய வரலாற்று பாடம் எடுத்தார், பின்னர் எந்த தேர்தல் வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படாது என்று அறிவித்து, தொழிலாள வர்க்கத்தை அவர் மட்டுமே காப்பாற்ற முடியுமென்று வீராவேசமாக வாதிட்டு முடித்தார்,” என்றது.

அனைத்து சந்தர்ப்பவாதிகளைப் போலவே, யூ.எஸ்.பி. எடுத்த ஒரு குறிப்பிடத்தக்க வரலாற்று பயணம், ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது இடத்தில் வந்தது குறித்த பெருமைபீற்றலைப் போலவே, அதன் எண்ணிக்கையில் மெய்மறந்து போயிருந்தது. அந்த தேர்தல் 2004 இல் அல்ல, 2005 இல் நடந்தது என்பதையாவது அவர்கள் குறைந்தபட்சம் நினைவுகூர வேண்டும்.   

மிக முக்கியமாக, எல்.டீ.டீ.. இன் "புறக்கணித்த தவறு" குறித்து யூ.எஸ்.பி. இந்தளவிற்கு கவலைப்பட்ட போதினும், பிரதானமாக ஏனென்றால் அந்த தேர்தலில் யூ.என்.பீ. விலை கொடுக்க வேண்டியதாக இருந்திருக்கும் என்பதால் ஆகும். இராஜபக்ஷ நாட்டை மீண்டும் போருக்குள் மூழ்கடிப்பார் என்று தொழிலாள வர்க்கத்தை எச்சரித்த ஒரே கட்சி சோ... மட்டுமே ஆகும். அதன் தேர்தல் அறிக்கை தெளிவாக குறிப்பிட்டது: “அவர் ஜே.வி.பி. மற்றும் ஜே.எச்.யு. இன் சிங்கள தீவிரவாதிகளுடன் தன்னைத்தானே இணைத்துக் கொண்டுள்ளார், அவர்கள் இராணுவத்தைப் பலப்படுத்தவும், தற்போதைய போர்நிறுத்தத்தை மறுவிசாரணைக்கு உட்படுத்தவும் மற்றும் சுனாமி நிவாரண கூட்டு நிர்வாகத்திற்காக எல்.டீ.டீ.. உடன் செய்யப்பட்ட P-TOMS உடன்படிக்கையைக் கைவிடுமாறும் கோரி வருகின்றனர். இந்த கொள்கைகளின் தர்க்கம் போருக்கான போக்கை அமைப்பதாகும்,” என்று குறிப்பிட்டது.    

ஜயசூரிய குறிப்பிடுகின்ற அந்த "மேடை" உத்தியோகபூர்வ தேர்தல் முடிவு பற்றி அறிவிக்கும் இடமாகும், அதில் ஒவ்வொரு வேட்பாளர்களும் சுருக்கமான ஓர் உரை வழங்க அனுமதிக்கப்பட்டார்கள். அந்நேரத்தில் WSWS குறிப்பிட்டது, இராஜபக்ஷவிற்கு எதிராக முழங்குவதிலிருந்து விலகி, ஜயசூரிய, மைக் வாங்க செல்கையில், தேர்ந்தெடுக்கப்படவிருந்த அந்த ஜனாதிபதியின் கரங்களை அவரது இரு கரங்களில் பிடித்து, உவப்புடன் அந்த வெற்றியாளரை வாழ்த்தினார். இராஜபக்ஷவிற்கு இணக்கமான அறிவுரையை வழங்கிய அவரது பேச்சின் தொனியிலும் அமைந்திருந்தது. “சிங்கள தேசியத்தைக்" கட்டுப்பாட்டில் கொள்வதிலும் மற்றும் தமிழர்களுக்கு அவர்களுக்குரிய உரிமைகளை வழங்குவதிலும் அவருக்கு "ஒரு மிகப்பெரிய சவாலும் ஒரு சிறப்பு பொறுப்புணர்வும்" இருப்பதாக கூறினார். “இன்றைய தினத்தைப் போன்றவொரு தினத்தில், இதை தவிர வேறெந்த எதிர்மறை கருத்துக்களையும் வெளியிட நான் விரும்பவில்லை,” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

அவரது முறை வந்த போது, டயஸ், கிடைத்த ஒருசில நிமிடங்களில், முற்றிலும் ஒரு வித்தியாசமான செய்தியை வழங்கினார்.

சோசலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் என்ற முறையில், இந்நாட்டில் சில வாக்குகளை சேகரிப்பதற்காக இத்தேர்தலில் நாங்கள் கலந்து கொள்ளவில்லை என்பதை எமது பிரச்சாரத்தின் ஆரம்பத்திலேயே நான் கூறியிருந்தேன். எமது இலக்கு இந்த வாய்ப்பை பயன்படுத்தி எமது கொள்கைகள் மற்றும் முன்னோக்கு பற்றி ஒரு விவாதத்தை இலங்கை, இந்தியத் துணைக்கண்டம், தெற்கு ஆசியா மற்றும் சர்வேதேச அளவிலும் தொடக்கி வைப்பதாகும். அது ஒரு சர்வதேசிய சோசலிச முன்நோக்காகும். இந்தப் பணியை முன்னெடுப்பதில் அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்காக சோ..க உறுப்பினர்களுக்கும் அதற்கு ஆதரவு தந்தவர்களுக்கும் நான் எனது நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இப்பொழுது தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளதோடு ஒரு புதிய ஜனாதிபதியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆனால் தொழிலாளர்கள், ஒடுக்கப்பட்டவர்கள், விவசாயிகள், இளைஞர்கள், தமிழ் மக்கள் மற்றும் ஏனைய பிரிவினரும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் ஒன்றேனும் தீர்க்கப்படும் என்று சோசலிச சமத்துவக் கட்சி நம்பவில்லை. இத்தேர்தல் முடிவுகளுக்கு பின்னால் நேர்மையீனமும், ஒருபோதும் செயல்படுத்தப்படாத உறுதிமொழிகளுமே இருக்கின்றன. என்னுடைய குறிப்பு வெறும் ஊகம் அல்ல. இந்தப் பெயரளவிலான சுதந்திர அரசின் கடந்த 58 ஆண்டுகால வரலாற்றுப் படிப்பினை இதுவேயாகும். .தே.30 ஆண்டுகளாகவும் அதன்பின்னர் பல கூட்டணிகள் மற்றும் முன்னணிகளுடன் ஸ்ரீ..சு.க யும் இந்த நாட்டை ஆண்டு வந்துள்ளன. ஆனால் மக்களுடைய பிரச்சினைகளில் ஒன்றுகூட தீர்த்துவைக்கப்படவில்லை.

எனவேதான், சோசலிச சமத்துவக் கட்சியினரான நாங்கள், யுத்தத்திற்கு முடிவுகட்ட, அனைவரதும் ஜனநாயக உரிமைகளை ஸ்தாபிக்க மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு முடிவு கட்டவும் ஒரு சோசலிசத் தீர்வைக் கொண்டுவரும் ஒரு வேலைத்திட்டத்திற்காக வெகுஜனங்கள் போராட வேண்டும் என்று அவர்களுக்கு உறுதியுடன் வலியுறுத்துகின்றோம். வெகுஜனங்களுக்கு அவசியமான வேலைத் திட்டமும் முன்னோக்கும், சர்வதேச சோசலிச வேலைத்திட்டமாகும். எதிர்வரும் காலத்தில் சோசலிச சமத்துவக் கட்சி அத்தகைய வேலைத்திட்டத்தை மக்களுக்கு வழங்கும் என்றும் மற்றும் அதற்காகப் போராடும் என்றும் உறுதிகூறி என்னுடைய உரையை முடிக்கிறேன்."

இது தான் நிஜமான வரலாறு.

ஐக்கிய சோசலிச கட்சி யாழ்பாணத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறது?

இந்த இப்போதைய தேர்தலில், ஐக்கிய சோசலிச கட்சி அது போட்டியிட்ட மாவட்டத்தில் அதன் வேட்பாளர்களின் தலைவராக ஜயசூரியவை நிறுத்தியதன் மூலமாக யாழ்பாணத்தை நோக்கிய ஒரு முக்கிய நிலைநோக்கை எடுத்துள்ளது. அங்கே யூ.என்.பி. மற்றும் ஸ்ரீ..சு.. இரண்டையும் உறுதியாக எதிர்ப்பதில், யூ.எஸ்.பி. தமிழர் உரிமைகளின் ஒரு பாதுகாவலராக காட்டிக் கொள்கிறது. அதனால் தான், அவரது கட்சி கிடைக்கும் சூழ்நிலைக்கு தகுந்தவாறு இரண்டு கட்சிகளில் ஏதாவதொன்றுடன் வேலை செய்ய விரும்புவதாக ஜயசூரிய கூறிய கருத்துக்களை WSWS அம்பலப்படுத்தியதற்கு இந்தளவிற்கு அது மிரட்டலாக எதிர்வினை காட்டியது.

குறிப்பாக தமிழ் இளைஞர்கள் மத்தியில், அதிகரித்துவரும் அமைதியின்மையில், யாழ்பாண அரசியல் சூழ்நிலையும் ஒன்றாகும். 2009 இல் எல்.டீ.டீ.. தோற்கடிக்கப்பட்டதற்குப் பின்னரும் கூட, அந்த ஒட்டுமொத்த மக்களும் இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் நிறுத்தப்பட்டுள்ளனர், வழமையான அலைக்கழிப்புகளுக்கும் மற்றும் ஜனநாயக உரிமைகளது துஷ்பிரயோகத்திற்கும் உட்படுத்தப்படுகிறார்கள். வேலைவாய்ப்பின்மை உயர்ந்துள்ளது. பலருக்கு போதிய இருப்பிட வசதியும் இல்லை. மேலும் அங்கே வடக்கு மாகாண சபை கட்டுப்பாட்டை வென்ற முதலாளித்துவ தமிழ் தேசிய கூட்டமைப்புடன் அதிருப்தியும் இருந்து வருகிறது, அது அங்கிருக்கும் பெரும்பான்மை மக்கள் முகங்கொடுக்கும் கடுமையான நிலைமைகளை போக்க எதுவும் செய்யப்படவில்லை.

தமிழ் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் முகங்கொடுக்கும் மிக முக்கிய அரசியல் பிரச்சினைகளை தெளிவுபடுத்தவும் மற்றும் இலங்கை-ஈழம் சோசலிச குடியரசுக்கான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர ஐக்கியத்திற்காக போராடவும் சோசலிச சமத்துவ கட்சி யாழ்பாணத்தில் தலையீடு செய்து வருகிறது. ஐக்கிய சோசலிச கட்சியின் பிரச்சாரம் துல்லியமாக அதற்கு எதிர்விதமாக செய்வதற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது: அதாவது, எல்.டீ.டீ.. இன் தோல்வி மற்றும் தமிழ் தேசியவாதத்தின் திவால்நிலைமையிலிருந்து தொழிலாள வர்க்கம் அவசியமான அரசியல் படிப்பினைகளைப் பெறுவதைத் தடுப்பதற்காக உள்ளது.

இதுதான் "தமிழ் மக்களின் சுய-நிர்ணய உரிமை" என்ற யூ.எஸ்.பி. முழக்கத்தின் நோக்கம். ஒன்று ஒரு சுதந்திர முதலாளித்துவ அரசு மூலமாகவோ அல்லது, தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்மொழிவதைப் போல, ஒரு கூட்டாட்சி இலங்கையில் ஒரு சுயாட்சி மாகாணமாகவோ வடக்கு மற்றும் கிழக்கை ஆள்வதற்கும் மற்றும் தமிழ் பேசும் தொழிலாள வர்க்கத்தைச் சுரண்டுவதற்கும் தமிழ் முதலாளித்துவ வர்க்கத்தின் உரிமையைப் பாதுகாக்கிறது என்பதைத் தவிர அது வேறொன்றையும் அர்த்தப்படுத்தவில்லை. விபக்க்ஷயே விரோதயாவில் த.தே.கூட்டமைப்பின் ஒரு கூட்டாளியாக இருந்த ஐக்கிய சோசலிச கட்சி இப்போதைய தேர்தலில் அதிகளவில் மதிப்பிழந்த இந்த முதலாளித்துவ கட்சியைத் தான் ஊக்குவித்து வருகிறது.

ஆனால் இந்த தமிழ் பிரிவினைவாத முன்னோக்கு துல்லியமாக, அதுவும் குறிப்பாக தமிழ் பேசும் தொழிலாள வர்க்கத்திற்கு அத்தகையவொரு பேரழிவைத்தான் உருவாக்கி உள்ளது. யாழ்பாணத்தில் ஜயசூரியவின் கருத்துக்களை எடுத்துக்காட்டி சோ... விவரிக்கையில்:

புலிகளின் தோல்வியானது அடிப்படையில் இராணுவத் தோல்வி அல்ல, மாறாக அதன் அரசியல் வேலைத்திட்டத்தின் விளைவாகும். புலிகள் தமிழ் முதலாளித்துவத்தின் வர்க்க நலன்களை பிரதிநிதித்துவப்படுத்திய காரணத்தால் தமிழ் தொழிலாளர்கள் அல்லது விவசாயிகளின் எந்தவொரு எதிர்ப்பையும் ஈவிரக்கமற்று ஒடுக்கினர். தமிழ் பிரிவினைவாதம் மற்றும் பேரினவாதத்தை அடிப்படையாகக் கொண்டிருந்ததால், புலிகளால் இலங்கையின் தென்பகுதியில், அல்லது இன்னும் பரந்த அளவில் தெற்காசியா மற்றும் சர்வதேச அளவில் உள்ள உழைக்கும் எதிர்க்க மக்களுக்கு எந்த அறைகூவலும் விடுக்க முற்றிலும் இலாயக்கற்றவர்களாக இருந்தனர். அதற்கு நேர்மாறாக அவர்கள் இராஜதந்திர ரீதியிலும் இராணுவ ரீதியிலும் இலங்கை அரசாங்கத்துக்கும் அதன் போருக்கும் உதவிக் கொண்டிருந்த அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் மற்றும் இந்திய அரசாங்கத்திற்குமே விண்ணப்பம் செய்தனர்.

யாழ்பாணத்தின் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் பொதுவான ஒடுக்குமுறையாளருக்கு முதலாளித்துவ அமைப்புமுறைக்கு முடிவு கட்டும் ஒரு ஐக்கியப்பட்ட போராட்டத்தில் அவர்களது பங்காளிகளாக இருப்பது ஊழல்மிகுந்த நேர்மையற்ற தமிழ் உயரடுக்குகள் அல்ல, மாறாக அத்தீவு முழுவதிலும், மற்றும் தெற்காசியாவிலும் சர்வதேச அளவிலும் உள்ள தொழிலாள வர்க்கம் என்பதே அவர்கள் பெற வேண்டிய தீர்மானமாகும்.

ஐக்கிய சோசலிச கட்சி கொழும்பில் என்ன செய்து கொண்டிருக்கிறது?

ஜயசூரிய யாழ்பாணத்தில் தமிழ் மக்களை பாதுகாக்க முறையிட்டு வருகின்ற அதேவேளையில், யூ.எஸ்.பி. கொழும்புவில் வேறொரு அரசியல் தொனியை ஒலித்துக் கொண்டிருக்கிறது, அங்கே அது நவ சம சமாஜ கட்சி மற்றும் முன்னிலை சோசலிச கட்சி (FS) உடன் ஒரு பொது வேட்பாளர்கள் பட்டியலை உருவாக்குவதன் மூலமாக அல்லது இரண்டு கட்சிகளுடனும் தேர்தல் இட ஒதுக்கீடை ஏற்படுத்திக் கொள்வதன் மூலமாக தேர்தலுக்காக அவற்றுடன் ஒரு "மாற்று இடது சக்தியை" உருவாக்க முயன்று தோல்வியடைந்தது.

எப்போதுமே சிறுபான்மை தமிழர்களுக்கு எந்தவொரு விட்டுக்கொடுப்பும் வழங்க ஆழமாக விரோதமாக இருந்துவரும் ஜே.வி.பி. இல் இருந்து உடைந்து வந்த அமைப்பான முன்னிலை சோசலிச கட்சி உடன் யூ.எஸ்.பி. இன் பேச்சுவார்த்தைகள் முக்கியமானவையாகும். ஜே.வி.பி. இன் வகுப்புவாத அரசியலை மறுப்பதிலிருந்து விலகி, முன்னிலை சோசலிச கட்சி தலைவர்கள் 1980களின் இறுதியில் இந்திய-இலங்கை உடன்படிக்கைக்கு எதிரான ஜே.வி.பி. இன் பேரினவாத பிரச்சாரம் மற்றும் அதன் மரணகதியிலான நடவடிக்கைகளின் போது அவர்கள் வகித்த பாத்திரத்தைக் குறித்து பெருமைபீற்றுகிறார்கள். “சுய-நிர்ணய உரிமைக்கு" ஐக்கிய சோசலிச கட்சியின் ஆதரவு மீது அந்த பேச்சுவார்த்தைகள் முறிந்து போனபோதினும், உண்மை என்னவென்றால் அவர்கள் கொழும்பில் யூ.எஸ்.பி. சிங்கள வகுப்புவாதத்தை ஏற்றதை நிரூபணம் செய்ய தொடங்கினார்கள்.

தொழிலாளர்களும் இளைஞர்களும் கிரீஸின் சம்பவங்களிலிருந்து ஆழ்ந்த அரசியல் படிப்பினைகளைப் பெற வேண்டும், அங்கே சிரிசா வடிவத்தில் "ஒரு மாற்று இடது சக்தி" இப்போது தான் கிரேக்க மற்றும் ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தின் ஒரு வரலாற்று காட்டிக்கொடுப்பை நடத்தி உள்ளது. சிக்கன நடவடிக்கைகளை எதிர்ப்போம் என்ற வாக்குறுதிகளின் பேரில் ஜனவரியில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிரிசா அரசாங்கம் விரைவிலேயே அதன் வாக்குறுதிகளைக் கைவிட்டதுடன், கடந்த மாதத்தின் வெகுஜன வாக்கெடுப்பில் வந்த பெருமளவிலான "வேண்டாமென்ற" வாக்குகளையும் மறுத்தளித்து, ஐரோப்பிய மற்றும் சர்வதேச நிதி மூலதனத்தின் கடுமையான கட்டளைகளைத் தொழிலாள வர்க்கத்தின் மீது திணித்து வருகிறது. இந்த காட்டிக்கொடுப்பானது போலி-இடதுகள் அதிகாரத்திற்கு வந்தால் என்ன செய்யும் என்பதற்கு எங்கெங்கிலும் உள்ள தொழிலாளர்களுக்கு ஓர் எச்சரிக்கையாகும்.

சிரிசாவின் தேர்தல் வெற்றியை மற்றும் அதன் சகோதரத்துவ கட்சியான தொழிலாளர்களுக்கான சர்வதேச கமிட்டியின் கிரேக்க பிரிவான Xeknima ஐ ஐக்கிய சோசலிச கட்சி பாராட்டியதுடன், சிரிசா அரசாங்கத்திற்கு பின்னால் அணிதிரண்டது. உள்நாட்டு கொள்கை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வெளியுறவு கொள்கையை பின்தொடர்கிறது. சிரிசாவிற்கான ஐக்கிய சோசலிச கட்சியின் உற்சாகபூர்வ ஆதரவு தொழிலாளர்களுக்கு ஓர் எச்சரிக்கையாகும், அது இப்போது இலங்கையில் துரோகத்திற்குக் குறைவில்லாத ஒரு பாத்திரம் வகிக்கும்.

உலகெங்கிலும் உள்ள அவர்களது சமதரப்பினரைப் போலவே, இலங்கையின் போலி-இடதுகள் தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்டோரை அடித்தளமாக கொண்டிருக்கவில்லை, மாறாக உயர் நடுத்தர வர்க்கத்தில் தனிச்சலுகை கொண்ட அடுக்குகளின் நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்கின்றன. முதலாளித்துவ வர்க்கத்தின் எதிர்விரோத கன்னைகளுக்குள் மூன்று தசாப்தங்களுக்கும் அதிகமாக சூழ்ச்சிகள் செய்ததன் மூலமாக, ஐக்கிய சோசலிச கட்சியும் மற்றும் நவ சம சமாஜ கட்சியும் தங்களைத்தாங்களே கொழும்பு அரசியல் ஸ்தாபகத்திற்குள் ஒருங்கிணைத்துக் கொண்டுள்ளன, அது அந்நாட்டின் பொருளாதார நெருக்கடியின் சுமையை உழைக்கும் மக்கள் மீது சுமத்த தீர்மானகரமாக உள்ளது.

கிரீஸ் சம்பவங்கள் உலகளாவிய பொருளாதார உடைவு துரிதமாக மோசமடைந்து வருவதைச் சமிக்ஞை செய்கிறது, அது புவிசார் அரசியல் பதட்டங்களுக்கு எண்ணெய் வார்த்து, போர் அபாயத்தை உயர்த்தி, ஒவ்வொரு நாட்டிலும் தொழிலாள வர்க்கம் மற்றும் நகர்புற மற்றும் கிராமப்புற ஏழைகளின் வாழ்க்கை நிலைமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது ஆழ்ந்த தாக்குதலை உந்திச் செல்கிறது. ஆளும் வர்க்கத்தின் அனைத்து கன்னைகளிடமிருந்தும் மற்றும் அவர்களது போலி-இடது அனுதாபிகளிடமிருந்து சுயாதீனப்பட்டு ஒரு தொழிலாளர்-விவசாயிகள் அரசாங்கத்திற்காக மற்றும் சோசலிச கொள்கைகளுக்காக போராடுவதற்கு தொழிலாள வர்க்கத்தை கற்பிப்பதற்காக மற்றும் ஐக்கியப்படுத்துவதற்காகவே இலங்கை தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சி போட்டியிடுகின்றது.

தொழிலாளர்களும் இளைஞர்களும் எமது தேர்தல் அறிக்கையை கவனமாக வாசிக்குமாறும், எமது பிரச்சாரத்தை செயலூக்கத்துடன் ஆதரிக்குமாறும் மற்றும் எமது சோசலிச சர்வதேச முன்னோக்கிற்கு உங்களது ஆதரவை எடுத்துக்காட்ட எமது வேட்பாளருக்கு வாக்களிக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம். அனைத்திற்கும் மேலாக, தவிர்க்கவியலாதவாறு வெடிக்கவிருக்கும் போராட்டங்களுக்கு அவசியமான புரட்சிகர தலைமையை கட்டியெழுப்ப சோசலிச சமத்துவக் கட்சியின் படிநிலைகளில் இணைய விண்ணப்பிக்குமாறு உங்களுக்கு அழைப்புவிடுக்கிறோம்.