சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : கிரீஸ்

European parliaments move to back austerity measures for Greece

ஐரோப்பிய நாடாளுமன்றங்கள் கிரீஸிற்கான சிக்கன நடவடிக்கைகளை ஆதரிக்க நகர்கின்றன

By Peter Schwarz
19 August 2015

Use this version to printSend feedback

பல்வேறு ஐரோப்பிய நாடுகளின் நாடாளுமன்றங்கள் கிரீஸிற்கான புதிய கடன் பொதி மற்றும் சிக்கன நடவடிக்கைகள் மீது இவ்வாரம் வாக்களிக்கின்றன.

அந்த பொதிக்கு திங்களன்று லாட்வியா மற்றும் லித்துவேனியாவில் ஒப்புதல் வழங்கப்பட்டது. எஸ்தோனியா செவ்வாயன்று ஒப்புதல் வழங்கியது. ஓர் உத்தியோகபூர்வ வாக்கெடுப்பு அவசியமில்லை என்பதால், ஸ்பானிய நாடாளுமன்றமும் செவ்வாயன்று கிரேக்க பொதியை ஆதரித்தது. ஆஸ்திரேலியாவில், தேசிய கவுன்சிலின் துணைக்குழு அந்நடவடிக்கைகளை அங்கீகரித்தது. ஜேர்மனி மற்றும் நெதர்லாந்தில், நாடாளுமன்றங்கள் இன்று வாக்களிக்கின்றன.

கடந்த வெள்ளியன்று யூரோ மண்டல நிதி மந்திரிமார்கள் அந்த பொதி மீது உடன்பாட்டை எட்டியதிலிருந்து, மற்றும் கிரேக்க நாடாளுமன்றம் ஏற்கனவே கடுமையான சிக்கன நடவடிக்கைகளை திணிக்க தனக்குத்தானே பொறுப்பேற்றுள்ள நிலையில், கிட்டத்தட்ட நிச்சயமாக அந்த உடன்படிக்கை எல்லா நாடாளுமன்ற சிக்கல்களையும் கடந்துவிடும். இருப்பினும், இந்த நாடாளுமன்ற விவாதங்களும் வாக்கெடுப்புகளும் முக்கியத்துவமற்றவை அல்ல. அவை, வங்கிகளின் ஈவிரக்கமற்ற சர்வாதிகாரத்திற்காக, ஐரோப்பிய ஒன்றிய உடன்படிக்கைகள் மற்றும் அதன் அங்கத்துவ நாடுகளின் அரசியலமைப்புகளின் மிக கண்ணியத்துடன் உறுதியளிக்கப்பட்ட ஜனநாயக மற்றும் சமூக கோட்பாடுகளை எந்தளவிற்கு மூடிமறைக்கின்றன என்பதை எடுத்துக்காட்டுகின்றன.

கிரேக்க மக்களின் கொடிய வறுமையைக் கண்டுகொள்ளாத, ஜனநாயகத்தை நடைமுறைரீதியில் அகற்றுகின்ற மற்றும் அந்நாட்டை செல்வாக்கு மிகுந்த ஐரோப்பிய அதிகாரங்களின் ஒரு காபந்து அரசாக மாற்றுகின்ற நிபந்தனைகளோடு, அப்புதிய கிரேக்க பொதி 86 பில்லியன் யூரோ புதிய கடன்களை உள்ளடக்கி உள்ளது, இது பெரும்பாலும் பழைய கடன்களை திரும்ப செலுத்துவதற்கும் மற்றும் வங்கிகளின் மறுநிதியாதாரத்திற்குமே பயன்படுத்தப்படும்.

வெள்ளியன்று காலை கிரேக்க நாடாளுமன்றத்தால் ஒப்புதல் வழங்கப்பட்ட அந்த 360 பக்க புரிந்துணர்வு ஒப்பந்தம், ஏனையவற்றோடு சேர்ந்து, கிரேக்க அரசாங்கம் முதலில் "அமைப்புகளின்" (ஐரோப்பிய ஆணைக்குழு, ஐரோப்பிய மத்திய வங்கி, ஐரோப்பிய நிதியியல் ஸ்திரப்பாட்டு இயங்குமுறை மற்றும் சர்வதேச நாணய நிதியம்) ஒப்புதல் இல்லாமல், அரசு சம்பந்தப்பட்ட எந்தவொரு சட்டமசோதாவையும் பொது விவாதத்திலிலோ அல்லது நாடாளுமன்றத்திலோ கொண்டு வரக்கூடாதென நிபந்தனை விதிக்கிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அரசும் நாடாளுமன்றமும் அந்த "அமைப்புகளின்" வெறும் நிறைவேற்று அங்கங்களாக கீழிறக்கப்பட்டுள்ளன.

ஓய்வூதியங்கள் எவ்வாறு குறைக்கப்பட வேண்டும், தொழிலாளர் சந்தை எவ்வாறு தாராளமயப்படுத்தப்பட வேண்டும், பொது சொத்துக்களின் விற்பனை மற்றும் சமூக உரிமைகள் எவ்வாறு கலைக்கப்பட வேண்டுமென அந்த புரிந்துணர்வு ஆவணம் விவரமாக குறிப்பிடுகிறது.

கிரீஸ் ஒரேநேரத்தில் பாரிய வெட்டுக்களையும் மற்றும் வழங்கப்படும் பில்லியன் கணக்கான புதிய கடன்களிலிருந்து உறுதியான முதலீட்டு திட்டங்களுக்கு அங்கே பணமில்லாமல் போவதையும் முகங்கொடுக்கையில், இந்த அதிர்ச்சி வைத்தியத்தில் பகட்டுக்காக காட்டப்பட்டுள்ள நோக்கத்தை அதாவது அந்நாட்டின் பொருளாதார மீட்சியை எட்டுவது சாத்தியமே இல்லை என்று சில பழமைவாத பொருளாதார நிபுணர்களே கூட சுட்டிக்காட்டுகின்றனர்.

யதார்த்தத்தில், ஊடங்கங்கள் தொடர்ச்சியாக வலியுறுத்துவதை போல, அந்த உடன்படிக்கை கிரீஸை "காப்பாற்றுவதற்கு" உரியதல்ல. மாறாக அந்நாடு திட்டமிட்டு சூறையாடப்பட உள்ளது. சான்றாக, கிரேக்க வரவு-செலவு திட்டக்கணக்கு 2018க்குள் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.5 சதவீத முதன்மை உபரியை (அதாவது கடன் சேவைகள் அல்லாத வரவு-செலவு திட்டக்கணக்கு உபரியை) அடைந்தாக வேண்டும். இந்த பணம் திரும்பவும் நேரடியாக சர்வதேச கடன் வழங்குனர்களுக்கு போய் சேரும். தற்போது ஒரேயொரு ஐரோப்பிய நாடு கூட அந்தளவிற்கு உயர்ந்த முதன்மை உபரியை (primary surplus) எட்டவில்லை.

இலாபகரமான அரசு நிறுவனங்களை தனியார்மயப்படுத்துவதென்பது சர்வதேச மூலதனத்திற்கு மிகவும் இலாபகரமான வாய்ப்புகளையும் வழங்குகிறது. சான்றாக, பிரான்ங்பேர்ட் விமானநிலைய சேவை நிறுவனம் Fraportக்கு, 1.2 பில்லியன் யூரோ மதிப்பில் 14 கிரேக்க பிராந்திய விமானநிலையங்களைப் பராமரிக்கும் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. அந்த புதிய கடன் பொதி மீதான பேரம்பேசல்களின் பாகமாக அது அந்த ஒப்பந்தத்தை பெறுமென அந்த ஜேர்மன் நிறுவனம் உறுதியாக இருந்தது, இது முற்றிலும் ஓர் வழமைக்குமாறான நடைமுறையாகும்.

புதிய கடன்களில், 25 பில்லியன் யூரோ, அல்லது மூன்றில் ஒரு பங்கிற்கு அண்மித்தளவில், கிரேக்க வங்கிகளின் மீள்மூலதனமாக்கலுக்கு ஒதுக்கப்படுகிறது. இவ்விதத்தில் சிரிசா தலைமையிலான அரசாங்கத்தின் ஆசிர்வாதத்துடன், அந்த வங்கிகள் பணக்கார கிரேக்கர்களால் வெளிநாடுகளுக்கு எடுத்துச்செல்லப்பட்ட பணத்தைத் திரும்ப பெறும், அதேவேளையில் ஏழைகளோ ஓய்வூதியங்கள் மற்றும் சமூக வெட்டுக்கள் மூலமாக அதை செலுத்தியாக வேண்டும். பின்னர் சீரமைக்கப்பட்ட வங்கிகள் விற்கப்படும் அனேகமாக சர்வதேச நிதியியல் முதலீட்டாளர்களுக்கு.

கிரேக்க மக்களின் வாழ்க்கை தரங்களை மூன்றாம் உலக நாடுகளின் மட்டத்திற்கு திட்டமிட்டு குறைப்பதும் இவை எல்லாவற்றோடும் சேர்கிறது, இது ஐரோப்பா எங்கிலும் கூலிகள் மற்றும் சலுகைகளுக்கு ஒரு புதிய நிர்ணய வரம்பை ஸ்தாபிக்கும்.

கிரீஸ் மீது திணிக்கப்பட்டு வருகின்ற முறைமைகளும், மற்றும் தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்ற விதமும், நாஜிக்களால் கிரீஸ் கொள்ளையடிக்கப்பட்டதை மற்றும் கொடூரமாக ஆக்கிரமிக்கப்பட்டதை நினைவூட்டுகின்றன. 1930களில் ஜேர்மனி Brüning regime ஆட்சியுடனான சமாந்தரங்களே கூட அங்கே உள்ளன, அந்த ஆட்சி அவசரகால ஆணைகளைக் கொண்டு மில்லியன் கணக்கானவர்களை வறுமைக்குள் மூழ்கடித்ததுடன், ஹிட்லருக்கும் பாதை வகுத்தளித்தது.

அங்கே எந்தவொரு ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்குள் இருந்தும் இத்தகைய கொடூர ஆணைகளுக்கு ஒரேயொரு வார்த்தை எதிர்ப்பு கூட இருக்கவில்லை என்பது அனைத்தினும் மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். முதலாளித்துவ நாடாளுமன்ற அமைப்புகள் பரந்த சமூக அடுக்குகளின் கவலைகளை எந்த வழியிலும் வெளிப்படுத்துவதை விட்டுவிட்டன என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது. சமூகத்தின் உயர்மட்ட பத்து அல்லது ஐந்து சதவீதம் அவற்றினது தந்திரோபாய கருத்துவேறுபாடுகளுக்காக போராடும் அங்கங்களாக அவை சிதைந்து போயுள்ளன.

குறிப்பாக ஜேர்மன் நாடாளுமன்ற விவாதம் முக்கியத்துவம் பெறுகிறது. கிரீஸ் மீது கடுமையான நிபந்தனைகளை விதிப்பதில் அந்த அரசாங்கமும் மற்றும் குறிப்பாக நிதி மந்திரி வொல்ஃப்காங் சொய்பிளவும் முக்கிய பாத்திரம் வகித்துள்ளனர். சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் ஞாயிறன்று ஒளிபரப்புசேவை ஸ்தாபனம் ZDF உடனான அவரது கோடைகால நேர்காணலில், கிரீஸின் சிரிசா தலைமையிலான அரசாங்கம் "நிஜமான சீர்திருத்த" அவசியத்தைக் கண்டிருப்பதற்காக, சொய்பிள மற்றும் ஜேர்மனியின் "கடுமையான நிலைப்பாட்டிற்கு" தான் நன்றி தெரிவிக்க வேண்டுமென பெருமை பீற்றினார். எல்லோருமே ஒருவருக்கொருவர் சுமூகமாக" இருந்தால், அது உதவாது என்பதையும் அவர் கடுமையாக சேர்த்துக் கொண்டார்.

எவ்வாறிருப்பினும், ஜேர்மன் நாடாளுமன்றத்தில் ஒரேயொரு முக்கிய எதிர்ப்பு, மேர்கெலின் சொந்த கட்சியிலிருந்து, வலதிலிருந்து வருகிறது. அந்த சிக்கன நடவடிக்கைகள் போதுமானளவிற்கு இல்லையென கிறிஸ்துவ ஜனநாயக யூனியன்/கிறிஸ்துவ சமூக யூனியன் நாடாளுமன்ற குழுவில் ஒரு கணிசமான பிரிவு கருதுகிறது. கிரீஸ் டிராச்மாவிற்கு திரும்புவதன் மூலமாக முன்பினும் அதிக கடுமையான பொருளாதார சுருக்கத்திற்குள் செல்லுமாறு அதை நிர்பந்திக்க அவர்கள் விரும்புகிறார்கள்..

ஏற்கனவே ஜூலையில் கிரீஸில் நடந்த கடந்த வாக்கெடுப்பில், அறுபது கிறிஸ்துவ ஜனநாயக பிரதிநிதிகளுக்கு அதிகமானவர்கள் புதிய கடன்களை ஆதரிப்பதில் மேர்கெலைப் பின்தொடர மறுத்தனர். இந்த முறை, இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கக்கூடும். நிறைய பிரதிநிதிகள் விடுப்பில் இருப்பதால், துல்லியமான எண்ணிக்கை கிடைக்காது. ஆனால், ஆட்சியில்-உடனிருக்கும் சமூக ஜனநாயகவாதிகள் மற்றும் எதிர்கட்சியான பசுமை கட்சியினர் மிக பெரும்பான்மையாக அந்த முறைமைகளை ஆதரிப்பார்கள் என்பதால், கிரீஸ் பொதிக்கான ஒப்புதல் ஆபத்தில் இல்லை.

சமூக ஜனநாயக கட்சி தலைவர் மற்றும் துணை-சான்சிலர் சிங்மர் கேப்ரியல் அவரது நாடாளுமன்ற குழுவிற்கு எழுதிய கடிதம் ஒன்றில் உச்ச தொனியில் அப்பொதியைப் பாராட்டினார். பேரம்பேசப்பட்ட மூன்றாவது ஆதரவு பொதி முந்தைய முன்மொழிவுகளை விட சிறந்தவொன்று என்பது மட்டுமல்ல, மாறாக எல்லா தரப்பும் ஒன்றுக்கொன்று அருகில் நெருங்கி வந்து கொண்டிருக்கின்றன என்ற உண்மையையும் பிரதானமாக குணாம்சப்படுத்துகின்றது, என்றவர் வலியுறுத்தினார். ஜேர்மன் சமூக ஜனநாயகவாதிகள் ஐரோப்பாவில் அவர்களது சம்மதத்தை வழங்க வேண்டும், ஆனால் ஜேர்மனியின் நலன்களிலிருந்தும் தான், என்றார்.

அப்பொதியை நிராகரிக்க வேண்டுமென அழைப்புவிடுத்துள்ள ஒரே நாடாளுமன்ற குழு, இடது கட்சியாகும். ஆனால் மீண்டும் இங்கேயும், அதை சில பிரதிநிதிகள் தவிர்த்துக் கொண்டனர்.

இடது கட்சியின் மனோபாவம் முற்றிலுமாக எரிச்சலூட்டும் வகையில் உள்ளது. அந்த முறைமைகளை நிறைவேற்ற அதன் ஆதரவு அவசியமில்லை என்பதால் மட்டுமே அது "சம்மதமில்லை" என்று வாக்களிக்கிறது. ஜேர்மன் நாடாளுமன்றத்தின் கடந்த வாக்கெடுப்பிலும் கூட, இடது கட்சி நாடாளுமன்ற தலைவர் கிரிகோர் கீசி கூறுகையில், அவர் கிரேக்க நாடாளுமன்றத்தில் இருந்திருந்தால் அவரும் சிக்கன பொதியை ஆதரித்திருப்பார் என்று தெரிவித்தார். ஆகவே இது மீண்டும் நடக்கிறது. அமைப்புகளின்" எல்லா அவசியங்களையும் ஈவிரக்கமின்றி அமுலாக்க தீர்மானகரமாக உள்ள கிரேக்க பிரதம மந்திரி அலெக்சிஸ் சிப்ராஸிற்கு இடது கட்சி தொடர்ந்து அதன் முழு ஆதரவை வழங்குகிறது.

இடது கட்சியின் கொள்கை பரப்பு சாதனமான Neues Deutschland இன் சமீபத்திய பதிப்பில், அதன் தலைமை பதிப்பாசிரியர் Tom Strohschneider, அந்த கடுமையான சிக்கன பொதியை பேர்லினின் தோல்வி என்றும் சிப்ராஸின் வெற்றி என்றுமே கூட காட்ட முயல்கிறார். ஏனென்றால் புதிய கடன்களுக்கான கால வரம்பும் வட்டிவிகிதங்களும் நிஜத்தில் திட்டமிட்டதை விட சற்றே மிக ஆதாயமாக இருக்கின்றன என்றவர் வாதிடுகிறார், இந்த புள்ளியில் சிரிசா தலைமையிலான அரசாங்கத்தால் வெல்ல முடியும், என்றார். Strohschneider இன் கருத்துப்படி, சர்வதேச நாணய நிதியம், சிரிசா, சில ஐரோப்பிய ஒன்றிய அரசாங்கங்கள் மற்றும் ஜேர்மன் நாடாளுமன்றத்தில் உள்ள எதிர்கட்சிகள் "நடைமுறையில் ஒன்றுசேர்ந்து ஒரே கயிறை இழுக்கின்றன". ஒவ்வொன்றும் "அவற்றின் சொந்த வழிகளில்" பொதுவான காரண வகையைப்" பின்தொடர்ந்தன.

சிரிசா, சர்வதேச நாணய நிதியம் மற்றும் சில ஐரோப்பிய ஒன்றிய அரசாங்கங்களுடன் சேர்ந்து இடது கட்சி இழுத்து கொண்டிருக்கும் கயிறு, தொழிலாள வர்க்கத்தின் கழுத்தைச் சுற்றி உள்ளது. இந்த புதிய புரிந்துணர்விலிருந்து ஏற்படும் கிரேக்க மக்களது படுபயங்கர அவதி, Strohschneiderக்கு, குறிப்பிடுவதற்குரிய மதிப்பார்ந்த ஒன்றாக இருக்கவில்லை. சிரிசா மற்றும் இடது கட்சியைப் போலவே, அவரும் அனைத்திற்கும் மேலாக முதலாளித்துவ அமைப்புமுறை மற்றும் அதன் ஐரோப்பிய மற்றும் தேசிய அமைப்புகளைப் பாதுகாப்பது குறித்து கவலைக் கொண்டுள்ளார். கிரீஸின் பேரழிவிலிருந்து உழைக்கும் மக்கள் புரட்சிகர தீர்மானங்களைப் பெறுவதை அவர், என்ன விலை கொடுத்தாவது, தடுக்க விரும்புகிறார்.  

கிரீஸிற்கான புதிய சிக்கன கட்டளையின் கொடூரத்தன்மையும், அதற்கு ஐரோப்பா மற்றும் அதன் அரசியலமைப்பிற்குட்பட்ட நாடுகளது அரசியல் ஸ்தாபகங்களுக்குள் எந்தவொரு தீவிர எதிர்ப்பும் இல்லாமல் இருப்பதும், முதலாளித்து அமைப்புமுறையின் அதிகரித்த நெருக்கடியின் வெளிப்பாடுகளாகும். ஜேர்மனி மற்றும் ஐரோப்பாவின் ஆளும் வட்டாரங்கள், சமூக மற்றும் சர்வாதிகார மோதல்களை சமரசங்களின் மூலமாக தடுக்க விரும்பவில்லை அல்லது அவ்வாறு செய்ய இலாயக்கற்று உள்ளன. கிரேக்க தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல்கள் ஜேர்மனி உட்பட ஐரோப்பா எங்கிலுமான தொழிலாளர் வர்க்கத்தின் மீதான அதேபோன்ற தாக்குதல்களை முன்னறிவிக்கிறது.

டோர்ட்முன்ட் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் பொருளாதார கொள்கை இதழியல் பேராசிரியர் மற்றும் Spiegel Online இன் கட்டுரையாளர் ஹென்றிக் முல்லர், ஒரு புதிய சர்வதேச நெருக்கடியின் விளைவுகளுக்கு எதிராக சமீபத்தில் எச்சரித்தார். முழு வேகத்துடன் அடுத்த நெருக்கடி" என்ற தலைப்பின் கீழ் அவர் எழுதினார், உலக நிலைமுறிவு மோசமடைந்தால், 2008ஐ போலில்லாமல், அரசாங்கங்கள் மற்றும் மத்திய வங்கிகளிடம் "எதிர்கொள்வதற்கு ஒன்றும் இல்லை". வட்டி விகிதங்கள் பூஜ்ஜியத்தில் உள்ளன, பல அரசுகள் திவால்நிலைமையின் விளம்பில் சென்று கொண்டிருக்கின்றன, மூலப்பொருட்கள் மலிந்து போயுள்ளன. ஆகவே உள்நாட்டு மற்றும் சர்வதேச மோதல்கள் உள்ளடங்கிய ஒரு கடுமையான கட்டத்திற்கு நீங்கள் தயாராகலாம், என்றவர் நிறைவு செய்கிறார்.

இந்த "கடுமையான கட்டத்திற்கு" ஆளும் வர்க்கம் எவ்வாறு தயாரிப்பு செய்து வருகிறது என்பதை தான் கிரீஸின் சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன. உழைக்கும் மக்களும் இளைஞர்களும் முதலாளித்துவ கட்சிகள் மற்றும் அவற்றின் போலி-இடது பாதுகாவலர்களுடன் உடைத்துக் கொண்டு, ஒரு சோசலிச வேலைத்திட்டதின் அடிப்படையில் சர்வதேசரீதியில் ஒருங்கிணைந்து, ஒரு புதிய புரட்சிகர கட்சியைக் கட்டமைத்து, தங்களைத்தாங்களே தயார் செய்து கொள்ள வேண்டும்.