சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

The significance of the SEPs vote in Sri Lankan elections

இலங்கை தேர்தல்களில் சோசலிச சமத்துவக் கட்சிக்கான வாக்குகளின் முக்கியத்துவம்

By Deepal Jayasekera
20 August 2015

Use this version to printSend feedback

திங்களன்று நடந்த இலங்கைப் பொதுத் தேர்தல்களில் சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) பெற்ற வாக்குகள், தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் ஒரு முன்னேற்றமான பகுதியினர் சர்வதேச சோசலிச முன்னோக்கை நோக்கி திரும்பியிருப்பதை குறிக்கின்றது. சோ.ச.க. நாட்டின் 22 தேர்தல் மாவட்டங்களில் தலைநகர் கொழும்பு, யுத்தத்தால் நாசமாக்கப்பட்ட வடக்கில் யாழ்ப்பாணம், மத்திய தேயிலைத் தோட்ட பகுதியான நுவரேலியா ஆகிய மூன்று மாவட்டங்களில் 43 வேட்பாளர்களை நிறுத்தியது.

சோ.ச.க. 321 வாக்குகளைப் பெற்றது -நுவரெலியா 54, கொழும்பு 125, யாழ்ப்பாணம் 142. சிறிய எண்ணிக்கை என்றாலும், இவை ஏகாதிபத்திய போருக்கும் சிக்கன நடவடிக்கைகளுக்கும் எதிரான மற்றும் தொழிலாளர்-விவசாயிகளின் அரசாங்கத்துக்கும் சோசலிச கொள்கைகளுக்குமான சோ.ச.க.யின் கொள்கைப் பிடிப்பான பிரச்சாரத்திற்கு நனவுபூர்வமாக அழிக்கப்பட்ட வாக்குகளாகும். ஒவ்வொரு மாவட்டத்திலும் அனைத்து தேர்தல் தொகுதிகளிலும் சோ.ச.க. வாக்குகளைப் பெற்றமை, அந்த எல்லா பிரதேசங்களிலும் உழைக்கும் மக்கள் மத்தியில் கட்சி வேர் பரப்பி இருப்பதை காட்டுகின்றது.

வாக்காளர்கள் ஆகஸ்ட் 17 தேர்தல்களில் 21 அரசியல் கட்சிகள் மற்றும் 201 சுயேட்சைக் குழுக்களில் இருந்து 6,151 வேட்பாளர்களை எதிர்கொண்டார்கள். சோ.ச.க. மற்றும் அதன் வேட்பாளர்கள் தவிர அவர்கள் அனைவரும், முதலாளித்துவ ஆட்சியை பாதுகாக்கும் பிரச்சாரமே செய்தனர். பெருந்தொகையான வேட்பாளர்கள் மற்றும் கட்சிகள், அத்துடன் ஊடக ஸ்தாபனங்களினாலும் உருவாக்கப்பட்ட அரசியல் குழப்பத்தை முறியடித்து, முதலாளித்துவ ஆட்சியை தூக்கி வீசும் ஒரு புரட்சிகரப் போராட்டத்தில் ஒடுக்கப்பட்ட மக்களையும் இணைத்துக்கொண்டு, தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டும் ஒரு பிரச்சாரத்திலேயே சோ.ச.க. இந்த வாக்குகளை வென்றது.

சோ.ச.க. ஜூலை 13ல் தேர்தல் அறிவித்தலை வெளியிட்டதை அடுத்து ஒரு விரிவான தேர்தல் விஞ்ஞாபனத்தையும் வெளியிட்டது. அவற்றின் ஆயிர்கணக்கான சிங்கள, தமிழ் பிரதிகளை மூன்று தேர்தல் மாவட்டங்களிலும் தீவின் ஏனைய பகுதிகளிலும் வினியோகித்தது. அவற்றுக்கும் மேலாக, டஜன் கணக்கான கட்டுரைகள் உலக சோசலிச வலைத் தளத்தில் வெளியிடப்பட்டன. அவை பிரச்சாரத்தின் போது அரசியல் அபிவிருத்திகள் பற்றிய பகுப்பாய்வுகளை முன்வைத்ததோடு, ஏனைய கட்சிகளில் இருந்தும் வேறுபடுத்தி காட்டியதுடன் சோ.ச.க.யின் கொள்கைகளையும் அபிவிருத்தி செய்தன.

வெறும் ஒரு மாதக் காலத்தில், சோ.ச.க.யின் முன்னணி வேட்பாளர்களும் கட்சியின் பொதுச் செயலாளர் விஜே டயசும் உரையாற்றிய 10 பொதுக்கூட்டங்களை மூன்று தேர்தல் மாவட்டங்களிலும் கட்சி நடத்தியது. பிரான்சில் உள்ள நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) ஆதரவாளர்கள் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தின் சர்வதேச முக்கியத்துவம் பற்றி ஆகஸ்ட் 15 அன்று பாரிசில் ஒரு பொதுக் கூட்டத்தை நடத்தினர். மண்டபம் நிறைந்திருந்த இந்த கூட்டத்தில் டயஸ் மற்றும் கட்சியின் இரு வேட்பாளர்களும் இணைய வழி ஊடாக உரையாற்றினர்.

இரு பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.) மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க.) இடையிலான கசப்பான பகைமை, அதிகரித்து வரும் பூகோள-அரசியல் பதட்டங்களுடன் பிணைந்துள்ளது என்பதை விளக்கிய ஒரே கட்சி சோ.ச.க. மட்டுமே. ஜனவரியில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த இராஜபக்ஷவை அகற்றி மைத்திரிபால சிறிசேன பதவியில் அமர்த்தப்பட்டமை, சீனாவிற்கு எதிரான அமெரிக்காவின் "ஆசியாவில் முன்னிலை" திட்டத்தின் ஒரு பகுதியாக வாஷிங்டன் ஆதரவுடன் நடந்த ஒரு ஆட்சி மாற்ற சதியாக இருந்தது. பெய்ஜிங் உடனான ராஜபக்ஷ அரசாங்கத்தின் நெருக்கமான உறவுகளின் விளைவே அவர் மீதான அமெரிக்காவின் விரோதத்துக்கு காரணமாகும்.

இந்தியப் பெருங்கடலின் போக்குவரத்துப் பாதையின் மூலோபாய நிலையில் இலங்கை இருப்பதன் காரணமாக, சீனாவிற்கு எதிரான அமெரிக்காவின் போர் தயாரிப்புகளுக்குள் அது இழுபட்டுச் செல்கின்றது என சோ.ச.க. எச்சரித்தது. முதலாளித்துவத்தையும் காலாவதியாகிவிட்ட தேசிய அரசு அமைப்பு முறையையும் ஒழிக்கும் போராட்டத்தின் மூலம் போரை நோக்கிய நகர்வை தடுத்து நிறுத்தக் கூடிய ஒரே சமூக சக்தி சர்வதேச தொழிலாள வர்க்கமே என்று நாம் வலியுறுத்தினோம்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு முன்னெடுக்கும் பிரச்சாரத்தின் ஒரு பாகமாக, எமது வேட்பாளர்கள் தொழிலாள வர்க்கத்தின் ஒரு சர்வதேச போர்-எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தை தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு உணர்த்த முயன்றார். சோ.ச.க. அனைத்து வடிவிலான தேசியவாதம் மற்றும் இனவாதத்தையும் விட்டுக்கொடுப்பின்றி எதிர்ப்பதுடன் உலகம் பூராவும் மற்றும் தெற்காசியாவிலும் சோசலிச குடியரசு ஒன்றியங்களின் பாகமாக ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசுக்கான போராட்டத்தில் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்த போராடுகின்றது.

ஆட்சிக்கு வர வாக்களித்தால் ஜனநாயகம், நீதி மற்றும் பொருளாதார நலனை கொண்டு வருவதாக ஐ.தே.க., ஸ்ரீ.ல.சு.க. மற்றும் அவர்களது கூட்டாளிகளும் கூறும் வெட்கமற்ற பொய்களையும் சோ.ச.க. அம்பலப்படுத்தியது. உலக முதலாளித்துவத்தின் நெருக்கடி, எல்லாவற்றிற்கும் மேலாக, கிரேக்கத் தொழிலாள வர்க்கத்தின் மீது முன்னெடுக்கப்படும் கொடூரமான சிக்கன நடவடிக்கைகள் ஒவ்வொரு நாட்டிலும் வாழ்க்கை நிலைமைகளை ஆழமாக சீரழிப்பதை சுட்டிக்காட்டுகிறது என எமது வேட்பாளர்கள் தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை செய்தனர். எந்தக்கட்சி அடுத்த அரசாங்கத்தை அமைத்தாலும், சர்வதேச நாணய நிதியம் (IMF) கோரும் சிக்கன திட்டத்தை ஈவிரக்கமின்றி அமுல்படுத்துவதோடு உழைக்கும் மக்களின் எதிர்ப்பை ஒடுக்க பொலிஸ்-அரச வழிமுறைகளை பயன்படுத்தத் தயங்கப் போவதில்லை.

ஜனவரியில் ஜனாதிபதியாக இருந்த இராஜபக்ஷவை அகற்றும் அமெரிக்காவின் திட்டத்திற்கு ஆதரவளித்ததில் போலி இடது அமைப்புக்களா நவ சம சமாஜக் கட்சி (ந.ச.ச.க.) மற்றும் ஐக்கிய சோசலிச கட்சி போன்றவற்றின் வகிபாகத்தை  தெளிவுபடுத்த தேர்தல் பிரச்சாரத்தில் சோ.ச.க. முயன்றது. அது கிரேக்கத்தில் சிரிசா செய்த காட்டிக் கொடுப்பின் படிப்பினைகளில் கவனத்தை குவித்தது. சிக்கனத் திட்டத்தை எதிர்ப்பதாக கொடுத்த வாக்குறுதியை மீறிய ஆட்சியில் இருந்த போலி இடது சிரிசா, கடந்த மாத கருத்துக்கணிப்பில் "வேண்டாம்" என்ற பெரும் வாக்களிப்பை அலட்சியம் செய்துள்ளதோடு ஐரோப்பிய மற்றும் சர்வதேச நிதி மூலதனத்தின் நீண்ட விளைவுகள் கொண்ட சிக்கன கோரிக்கைகளை செயல்படுத்த தொடங்கியுள்ளது.

ஐந்து மாவட்டங்களில் வேட்பாளர்களை நிறுத்திய நவ சம சமாஜக் கட்சியின் முயற்சிகள், "பாசிச இராஜபக்ஷ ஆட்சியை" வெளியேற்றிய ஜனவரி "ஜனநாயகப் புரட்சியை" பாதுகாப்பதன் பேரில், வெளிப்படையாகவே ஐ.தே.க.யின் வெற்றியை உறுதி செய்ய செயற்பட்டது. உழைக்கும் மக்களின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது ஐ.தே.க. அரசாங்கங்கள் முன்னெடுத்த தாக்குதல்களின் நீண்ட வரலாற்றை மூடிமறைத்த நவ சம சமாஜக் கட்சி, இலங்கையில் "ஜனநாயகம்" மற்றும் "நல்ல ஆட்சி" கொண்டு வருவது பற்றிய ஐ.தே.க.யின் பொய்களை வாக்காளர்களை நம்ப வைப்பதற்கு முயன்றது.

ஐக்கிய சோசலிச கட்சி (USP), முன்னிலை சோசலிசக் கட்சி (FSP) ஆகியவை, ஐ.தே.க. மற்றும் ஸ்ரீ.ல.சு.கட்சியையும எதிர்ப்பதாக காட்டிக்கொண்ட போதிலும், அவர்களது விமர்சனங்களை பிரதான உந்துதலானது இராஜபக்ஷவையும் ஸ்ரீ.ல.சு.க.வையும் தோற்கடிப்பதையே குறிக்கோளாகக் கொண்டிருந்தது. இதன் விளைவாக, அவர்கள் ஐ.தே.க.வை "குறைந்த தீமையாக" காட்டினர், அதன் மூலம் அவநம்பிக்கை கொண்டிருந்த வாக்காளர்கள் ஐ.தே.க.வுக்கு வாக்களிக்க ஊக்குவித்தனர்.

 ஐ.தே.க. உடனான அதன் முந்தைய கூட்டுக்களை அம்பலப்படுத்தி உலக சோசலிச வலைத் தளத்தில் வெளியான கட்டுரைக்கு அவதூறு மற்றும் வசைமாரியாக பதிலிறுத்த ஐக்கிய சோசலிச கட்சியானது, சோ.ச.க.யின் கருத்துக்களை "பொய்கள், அவதூறுகள்" என கண்டனம் செய்தது. ஐ.தே.க., ஸ்ரீ.ல.சு.க. ஆகிய இரண்டு கட்சிகளுடனும் அணிதிரளும் ஐக்கிய சோசலிச கட்சியின் சந்தர்ப்பவாத வரலாற்றை ஒரு நீண்ட பதிலில் அம்பலப்படுதிய சோ.ச.க., முதலாளித்துவத்தின் அனைத்து பிரிவுகளில் இருந்தும் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தை ஸ்தாபிப்பதற்கான தனது கொள்கைப் பிடிப்பான போராட்டத்தின் வரலாற்றை ஸ்தாபித்தது.

எமது பிரச்சாரத்திற்கு உதவிய, அதே போல் எமது சோசலிச சர்வதேசிய வேலைத்திட்டத்திற்கு தங்கள் ஆதரவை காட்ட கட்சிக்கு வாக்களித்த தொழிலாளர்கள், இளைஞர்கள் கிராமப்புற உழைப்பாளிகளுமாக அனைவருக்கும் சோ.ச.க. நன்றி தெரிவித்துக்கொள்கின்றது. தேர்தலை அடுத்து, ஐ.தே.க. தலைமையிலான அரசாங்கம், அமெரிக்காவின் போர் திட்டங்களுக்குள் இலங்கையை இழுத்துப் போடுகின்ற நிலையிலும் உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரங்கள் மீதான தாக்குதல் தீவிரப்படுத்தவுள்ள நிலையிலும், பெரும் போராட்டங்கள் வெடிக்கவுள்ளன. சோ.ச.க.யின் வேலைத்திட்டத்தை படிக்ககுமாறும் உலக சோசலிச வலைத் தளத்தை தொடர்ந்து வாசிக்குமாறும் வரவுள்ள அரசியல் போராட்டங்களுக்கு தேவையான தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர தலைமையாக சோ.ச.க.யை கட்டியெழுப்ப அதில் இணைந்துகொள்ளுமாறும்  நாம் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம்.