சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : கிரீஸ்

EU backs Greece’s Tsipras as Left Platform splits from Syriza

சிரிசாவிலிருந்து இடது அரங்கம் உடைகையில் ஐரோப்பிய ஒன்றியம் கிரீஸின் சிப்ராஸை ஆதரிக்கிறது

By Robert Stevens
22 August 2015

Use this version to printSend feedback

கிரேக்க பிரதம மந்திரி அலெக்சிஸ் சிப்ராஸ் திடீர் தேர்தல்களுக்கு அழைப்புவிடுக்க முடிவெடுத்தமை, ஆழ்ந்த மக்கள்விரோத சிக்கன நடவடிக்கைகளைத் திணிப்பதற்காக ஒரு புதிய அரசியல் கட்டமைப்பை ஸ்தாபிக்க நோக்கங்கொண்ட கணக்கிடப்பட்ட ஒரு தந்திரமாகும்.

அவர் இராஜினாமா செய்துவிட்டு, புதிய தேர்தல்களுக்கு அழைப்புவிடுக்க இருப்பதாக சிப்ராஸ் அறிவித்த ஒருசில மணிநேரத்திற்குள், ஐரோப்பிய அதிகாரிகள், கிரீஸின் ஐரோப்பிய ஒன்றிய கடன்வழங்குனர்களது வழிகாட்டுதலின்படியே அம்முடிவு எடுக்கப்பட்டதாக தெளிவுபடுத்தினர். சிப்ராஸின் சிரிசா கட்சி அடுத்த மாதம் நடக்கவுள்ள அந்த தேர்தல்களில் வெற்றிபெற்று, அனேகமாக சிக்கன நடவடிக்கைக்கு ஆதரவான கூட்டணி பங்காளி ஒன்றுடனோ அல்லது ஏனையவற்றுடனோ சேர்ந்து ஒரு புதிய அரசாங்கம் அமைக்கலாமென எதிர்பார்க்கிறது.

வெள்ளியன்று பத்திரிகையாளர் கூட்டமொன்றில், ஐரோப்பிய ஆணைக்குழு செய்தி தொடர்பாளர் அனிக்கா பிரைட்ஹார்ட், சிப்ராஸின் இராஜினாமா திட்டங்கள் குறித்து ஆணைக்குழுவிற்கு முன்னரே தெரியுமென்பதை உறுதிப்படுத்தினார். “[ஐரோப்பிய ஆணைக்குழு] தலைவர் ஜோன்-குளோட் ஜூங்கர், பிரதம மந்திரி சிப்ராஸ் மற்றும் [கிரேக்க ஜனாதிபதி] பிரோகோபிஸ் பாவ்லொபௌலொஸ் ஆகியோருக்கிடையே தொடர்ந்து தொலைபேசிவழி உரையாடல்கள் இருந்ததையடுத்து, இதில் நாங்கள் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை,” என்று கூறிய அவர், “இதை நாங்கள் எதிர்பார்த்தோம்,” என்றார்.

யூரோ குழும ஜனாதிபதி ஜெரொன் திஜிஸ்செல்ப்லோம் கூறுகையில் தேர்தல்கள் எவ்வளவுக்களவு சாத்தியமோ அவ்வளவுக்களவு விரைவில் முடிக்கப்பட வேண்டுமென தெரிவித்தார். அவர் கூறினார், “பிரதம மந்திரி சிப்ராஸ் இன்னும் ஸ்திரமான அரசாங்கத்தைப் பெற நினைக்கிறாரென்று நான் நினைக்கிறேன்”. சிரிசா தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கை தரங்கள் மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கு ஒப்புதல் கூறி சூளுரைத்து ஜனவரியில் அதிகாரத்திற்கு வந்ததால் உருவான பிரச்சினைகள் இல்லாமல், அதற்கு எதிர்விதமாக செலவின வெட்டுக்கள் மற்றும் தாக்குதல்களைத் திணிக்க தகைமை கொண்ட ஓர் அரசாங்கத்தைத் தான் திஜிஸ்செல்ப்லோம் ஸ்திரப்பாடு என்பதைக் கொண்டு அர்த்தப்படுத்துகிறார்.

அதை சமஅளவில் ஒப்புக்கொள்வதைப் போல ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெலும், “நெருக்கடியின் பாகமாக அல்ல, தீர்வின் பாகமாகவே சிப்ராஸ் பதவியிலிருந்து இறங்குகிறார்,” என்று கூறினார்.

சிப்ராஸ் வெளியேறுவதன் மூலமாக, வெளிப்படையாக சிக்கன நடவடிக்கைக்கு ஆதரவான அரசியல்வாதியாகிறார் என்பதாக பல பிரதான ஐரோப்பிய பத்திரிகைகளும் புதிய தேர்தல்களை வரவேற்றன. இத்தாலியின் Corriere della Sera, வெகுஜன வாக்குறுதிகளைக் கைவிட்டு, “அதன் எல்லா சிரமங்களுக்காகவும், புதுப்பித்தலின் ஒரு நீண்ட பாதையில், இது மட்டுமே ஒரே சாத்தியம் என்பதை அதுவே காட்டியுள்ளதால் அதில்" பயணிக்க தொடங்கியுள்ள சிப்ராஸைப் பாராட்டியது.

கடந்த தசாப்தத்தில், கிரீஸின் வலதுசாரி புதிய ஜனநாயக (ND) கட்சியும் மற்றும் சமூக ஜனநாயக Pasok கட்சியும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கட்டளைக்கிணங்க தொடர்ச்சியான சிக்கன நடவடிக்கைகளைத் திணித்ததற்காக முற்றிலுமாக மதிப்பிழந்திருந்தன. இதனால் தான் ஆளும் வர்க்கம் சிரிசாவின் பக்கம் திரும்பியது. கார்டியன் இதழின் ஏதென்ஸ் செய்தியாளர் ஹெலினா ஸ்மித் எழுதினார், “சிப்ராஸால், இந்த ஒரு மனிதரால் மட்டுந்தான், உண்மையிலேயே கிரீஸை மாற்ற முடியுமென தர்க்கம் நீள்கிறது. எதிர்க்கும் மக்களிடம் நவ-தாராளவாத கொள்கைகளை விண்ணப்பிப்பது இடதிலிருந்து மட்டுந்தான் வர முடியும் …"

தேர்தல் அறிவிப்பை வெளியிட சிப்ராஸ், ஆகஸ்ட் 20 அன்று மாலை நேரத்தைத் தேர்ந்தெடுத்திருந்தார். கிரேக்க அரசாங்கம் அதே தினத்தன்று காலையில், பெரும்பான்மையுடன் அதன் நாடாளுமன்றத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட புதிய சிக்கன நடவடிக்கைகளைத் திணிக்கும் நிபந்தனைகளுடன் கூடிய, புதிய கடன்களிலிருந்து அதன் முதல் தவணையைப் பெற்றது. அந்நிதிகள் கிடைத்ததும், அரசாங்கம் உடனடியாக ஐரோப்பிய மத்திய வங்கிக்கு அது செலுத்த வேண்டிய 3.2 பில்லியன் யூரோவைத் திரும்ப செலுத்தியது.

எதன் அடிப்படையில் அது தேர்ந்தெடுக்கப்பட்டதோ, அந்த சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான திட்டத்தை சிரிசா முற்றிலுமாக கைவிட்டதால் ஏற்பட்ட குழப்பநிலையை பயன்படுத்திக் கொள்வதற்காகவே சிப்ராஸ் தேர்தல்களுக்கு அழைப்பு விடுத்தார். அவர் தெரிவிக்கையில், “ஜனவரி 25 தேர்தல்களின் அரசியல் தீர்ப்பு அதன் வரம்புகளிலிருந்து செயலிழந்துவிட்டது, இப்போது கிரேக்க மக்கள் அவர்களது கருத்தைத் தெரிவிக்க வேண்டியுள்ளது,” என்றார்.

சிரிசாவிற்கு அளிக்கப்பட்ட "அரசியல் தீர்ப்பு", அதை அதிகாரத்திற்குக் கொண்டு வந்த சிக்கன-எதிர்ப்புணர்வை அரசாங்கம் கைவிட்டதால் தான் "செயலிழந்து போனது.” கிரேக்க மக்கள் "அவர்களது கருத்தை" தெரிவிக்கலாம் என்பதைப் பொறுத்த வரையில், இது ஜூலை தொடக்கத்தில் நடத்தப்பட்ட சிக்கன நடவடிக்கைகள் மீதான வெகுஜன வாக்கெடுப்பின் நோக்கத்தைப் போலவே பெயரளவிற்கானதாகும். தொழிலாளர்களும் இளைஞர்களும் பெருமளவிற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் கோரிக்கைகளை எதிர்த்தனர், சிரிசா தலைமையிலான அரசாங்கமோ உடனடியாக இன்னும் கடுமையான நடவடிக்கைகளை ஒப்புக் கொண்டதன் மூலமாக விடையிறுத்தது.

வெகுஜன வாக்கெடுப்பைப் போலவே, இந்த புதிய தேர்தலும் மக்களின் ஜனநாயக விருப்பத்தை பதிவு செய்வதை நோக்கமாக கொண்டிருக்கவில்லை. அதற்கு மாறாக, இது வங்கிகள் மற்றும் கிரேக்க ஆளும் வர்க்கத்தின் அரசியல் சதியின் ஒரு தொடர்ச்சியாகும்.

இந்த சதியில் சிரிசாவின் "இடது அரங்கம்" முழுமையாக பங்கெடுத்துள்ளது, அது சிப்ராஸை மூடிமறைக்க அதனால் ஆனமட்டும் அனைத்தும் செய்துள்ளதோடு, வங்கிகளின் கட்டளைகளை எதிர்க்க சிரிசாவே ஒரு வாகனம் என்று அது வலியுறுத்தி உள்ளது.

சிக்கன நடவடிக்கையினது ஒரு புதிய அலை பாரியளவில் சமூக எதிர்ப்பை மற்றும் கோபத்தைத் தூண்டிவிடுமென்பதை முன்னுணர்ந்து, இடது அரங்கத்தின் ஒரு பிரிவு இப்போது அது கட்சியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது. இதன் பிரதிநிதிகளில் இருபத்தைந்து பேர், “மக்கள் ஐக்கியம்" (Popular Unity) என்ற பெயரில், தேர்தல்களில் போட்டியிட ஒரு புதிய கட்சியை நிறுவ உள்ளார்கள். இடது அரங்கம் இந்த முடிவை அறிவிப்பதற்கு முன்னதாக, அது ஒரு "பரந்த, புரிந்துணர்வு-விரோத, முற்போக்கான, ஜனநாயக முன்னணியை" ஸ்தாபிக்க இருப்பதாகவும், “அது எல்லா புரிந்துணர்வுகளையும் திரும்ப பெறுமாறு நிர்பந்திக்க உறுதியாக தேர்தல்களில் போட்டியிடுமென்றும்" தெரிவித்தது.

இப்புதிய கட்சி சிப்ராஸினது சிக்கனத்திற்கு ஆதரவான அரசாங்கத்திற்குள் விசுவாசமாக சேவை செய்துள்ள மெய்பிக்கப்பட்ட மோசடியாளர்களின் ஒரு கூட்டமாகும். முன்னாள் ஸ்ராலினிசவாதிகள், மாவோயிஸ்டுகள் மற்றும் வகைப்படுத்தப்பட்ட போலி-இடது அமைப்புகளின் ஒரு கலவையாக விளங்கும் இந்த இடது அரங்கம், பல ஆண்டுகளாக, சிக்கன திட்ட எதிர்ப்பு வார்த்தைஜாலங்களைப் பேசுவதில் சிறப்புத்தேர்ச்சி பெற்றுள்ளது. அவர்கள் கிரேக்க முதலாளித்துவ அரசின் ஒரு முன்னணி கூறுபாடுகளாக செயல்பட்ட பின்னரும் கூட இது தொடர்ந்தது. அவர்கள் சிரிசா தேர்ந்தெடுக்கப்பட்டதை ஐரோப்பிய அரசியலில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக கொண்டாடினர், சிப்ராஸின் மோசடியான ஜூலை மாத வெகுஜன வாக்கெடுப்பை அரசாங்க கொள்கை மீது மக்கள் கட்டுப்பாடு கொண்டிருப்பதற்கான முன்னுதாரணமற்ற அங்கீகாரம் என்பதாக காட்ட முயன்றனர்.

சிப்ராஸ் மிக வெளிப்படையாக சிக்கன-ஆதரவு நிலைப்பாட்டிற்குத் திரும்புகையில், மக்கள் ஐக்கிய கட்சி சமூக கிளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதில் பாத்திரம் வகிக்க முனையும்.

மக்கள் ஐக்கியம், அது வலதுசாரி உட்பட அரசியல் களத்திலுள்ள சக்திகளுடன் கூட்டணி உருவாக்க தயாராக இருப்பதை அறிவித்துள்ளது. வெள்ளியன்று புதிய கட்சியை வரவேற்கும் அறிக்கை ஒன்றில், முன்னாள் இடது அரங்கம் மற்றும் சிரிசா மத்தியக்குழு உறுப்பினர் ஸ்டாதிஸ் குவெலாகிஸ் குறிப்பிடுகையில், மக்கள் ஐக்கியம் "தங்களைத்தாங்களே நிச்சயமாக இடதின் பாகமாக உணர்ந்திராத, ஆனால் சிக்கனத்திட்டம், புரிந்துணர்வுக்கு எதிராக போராட விரும்புகின்ற சமூக சக்திகளுக்கு ஒரு வெளிப்பாட்டை வழங்குமென" குறிப்பிட்டார்.

முன்னதாக சிப்ராஸின் எரிசக்தித்துறை மந்திரியாக சேவை செய்த பானஜியோடிஸ் லவாஷானிஸ் தலைமையில், 25 பிரதிநிதிகளுடன், மக்கள் ஐக்கியம் இப்போது நாடாளுமன்றத்திலுள்ள மூன்றாவது மிகப்பெரிய குழுவாகும். கிரேக்க அரசியலமைப்பின்படி, ஒரு தேர்தல் நடந்து ஒரு வருட இடைவெளிக்குள் மற்றொரு தேர்தல் நடத்த வேண்டியிருந்தால், ஜனாதிபதி முன்னணியிலுள்ள இரண்டு எதிர்கட்சிகளை அரசாங்கம் அமைக்க முயற்சிக்குமாறு முதலில் கேட்டுக் கொள்வார். அவர்களால் முடியாமல் போனால் தான், தேர்தல்கள் நடத்தப்படும்.

வெள்ளியன்று பாவ்லொபௌலொஸ் பிரதான எதிர்கட்சியான புதிய ஜனநாயகத்திற்கு ஆணை வழங்கினார், இப்போது அதற்கு ஓர் அரசாங்கம் அமைக்க முயற்சிக்க மூன்று நாட்கள் அவகாசமுள்ளது. புதிய ஜனநாயகமும் அதன் கூட்டாளிகளாக சாத்தியக்கூறு உள்ளவர்களும் ஒரு பெரும்பான்மையைப் பெற முடியாமல் போனால், பின் அந்த ஆணை மக்கள் ஐக்கியத்திற்கு வழங்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

கிரீஸின் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி (KKE) உட்பட "சிக்கனத்திட்டத்தை எதிர்க்கும்" சக்திகளுடன் அது பேச்சுவார்த்தைகளுக்கு முயற்சிக்குமென மக்கள் ஐக்கியத்தின் அறிக்கை ஒன்று அறிவித்தது, இருப்பினும் அது நம்பகமான கூட்டணிக்கு நிஜமான வாய்ப்பேதும் வழங்கவில்லை. அதற்கு மாறாக அது ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சிறிய அரசியல் குழுக்களை ஓர் அரசியல் கூட்டணிக்குள் ஒன்றுசேர்க்கும் ஒரு இயங்குமுறையாக தெரிகிறது.

பரபொலிடிகா வானொலி நிலையத்துடன் பேசுகையில், ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி பொது செயலாளர் Dimitris Koutsoubas புதிய கட்சியுடனான எதிர்கால கூட்டுறவு சாத்தியக்கூறை உதறித்தள்ளினார். “தவறுக்கிடமின்றி அவரது உள்கட்சி போட்டியாளர்களும், அத்துடன் முதலாளித்துவ எதிர்ப்பு கட்சிகளும், தங்களைத்தாங்களே ஒழுங்கமைத்துக் கொள்ள முடியாதவாறு" சிப்ராஸ் "மிக விரைவில்" தேர்தல்களுக்கு அழைப்புவிடுத்திருந்தார்.

சிப்ராஸின் காட்டிக்கொடுப்பும், இடது அரங்கத்தின் எரிச்சலூட்டும் தந்திரங்களும் மிக வலதுசாரி மற்றும் பாசிச சக்திகளைப் பலப்படுத்துவதற்கு இட்டுச் செல்லும். சிரிசா தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து அதன் நடவடிக்கைகள், போலி-இடதிற்குள் உள்ள அனைவர் மீதும், சிப்ராஸினது அரசாங்கத்தை ஆதரிப்பதைச் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் கிரீஸில் பாசிச அச்சுறுத்தல் இரண்டுக்கும் எதிராக போராடுவதற்குரிய ஒரு வழிவகையாக வாதிட்ட அவர்கள் மீது வைக்கப்பட்ட ஒரு பேரழிவுகரமான குற்றப்பத்திரிக்கையாகும்.

பதவியேற்றதும் முதல் நடவடிக்கையாக, வெளிநாட்டவர் விரோதபோக்கு கொண்ட சுதந்திர கிரேக்கர்கள் உடன் பகிரங்கமாக ஒரு கூட்டணிக்குள் நுழைந்த சிரிசா, மேற்கொண்டும் வலதிற்கு மட்டுமே நகரும்.

இந்த உள்ளடக்கத்தில் வெள்ளியன்று சிரிசா தொழிலாளர்துறை மந்திரி George Katrougalos இன் கருத்துக்கள் மலைப்பூட்டின. சிரிசா சிக்கன நடவடிக்கைகளைத் தழுவியதால் அங்கே வலதுசாரி கட்சிகளுக்கு ஆதரவு வளரும் அபாயம் இருக்கிறதா என பிபிசி இதழாளர் ஒருவர் கேட்ட போது, Katrougalos “இடதிற்கும் வலதிற்கும் இடையே குறிப்பிடத்தக்க மோதல்" எதுவும் அங்கே இல்லையென பதிலுரைத்தார்.