சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka: SEP’s final election meeting warns of sharp struggles ahead

இலங்கை: சோசலிச சமத்துவக் கட்சியின் இறுதித் தேர்தல் கூட்டம் எதிர்வரவுள்ள கூர்மையான போராட்டங்கள் பற்றி எச்சரித்தது

By our correspondent
18 August 2015

Use this version to printSend feedback

இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி (சோ...) மற்றும் சமூக சமத்துவத்துக்கான  சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பும், நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலுக்கான இறுதி பிரச்சாரக் கூட்டத்தை ஆகஸ்ட் 14 அன்று கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நடத்தின. உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள், தொழிலாளர்கள், குடும்பப் பெண்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்களுமாக சுமார் 150 பேர் இதில் கலந்து கொண்டனர்.

சோ... மூன்று மாவட்டங்களில் மொத்தம் 43 வேட்பாளர்களை களமிறக்கியது. தலைநகர் கொழும்பு, யுத்தத்தால் நாசமாக்கப்பட்ட வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம் மற்றும் மத்திய மலையக பெருந்தோட்டத் பகுதியில் நுவரெலியாவிலும் சோ... போட்டியிட்டது. தொழிலாளர்கள் வாழும் பிரதேசங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் வேலைத் தளங்களிலும் பிரச்சாரம் செய்த கட்சி, தேர்தலின் உள்ளர்த்தம் குறித்து முக்கிய கலந்துரையாடல்களையும் நடத்தியது. வளர்ச்சி கண்டுவரும் உலகப் போர் அச்சுறுத்தல் மற்றும் சர்வதேச நிதி மூலதனத்தின் ஆணைகளை செயல்படுத்தும் ஆளும் தட்டுக்கள் முன்னெடுக்கும் சமூக எதிர்ப்-புரட்சிக்கும் எதிராக தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை அணிதிரட்ட சோ... போராடுகின்றது.

உத்தியோகபூர்வமாக ஒதுக்கீடு செய்யப்பட்ட நேரங்களை பயன்படுத்தி, கொழும்பு மாவட்டத்தில் வேட்பாளர்களுக்கு தலைமை வகித்த சோ... அரசியல் குழு உறுப்பினர் விலானி பீரிஸ், தேசிய தொலைக்காட்சி சேவையிலும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் வானொலி சேவையிலும் பேசினார். சோ... அரசியல் குழு உறுப்பினரும் நுவரெலியா மாவட்டத்தில் வேட்பாளர்களின் தலைவருமான எம்.தேவராஜா, இதே சேவைகளில் தமிழ் மொழியில் உரையாற்றினார். சோ... பொதுச் செயலாளர் விஜே டயஸ், ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் தேசிய தேர்தல் சேவைக்கு பேட்டி வழங்கினார்.

இவை தவிர, அரசாங்கக் கட்டுப்பாட்டுபாட்டிலான மற்றும் கூட்டுத்தாபன ஊடகங்கள், சோ... பிரச்சாரம் பற்றி இருட்டடிப்புச் செய்தமை, கட்சியின் சோசலிச முன்னோக்கு  தொடர்பாக கொழும்பு அரசியல் ஸ்தாபகத்திலான விசனத்தை பிரதிபலித்தது.

கொழும்பு கூட்டத்துக்கு தலைமை வகித்த பீரிஸ், உலக சோசலிச வலைத் தளத்தில் வெளியான விரிவான கட்டுரைகள் மற்றும் கருத்துரைகளும் அடங்கிய ஒரு பரந்த அரசியல் பிரச்சாரத்தை சோ... முன்னெடுத்தது, என்று விளக்கினார்.கிரேக்கத்தில் போல், முதலாளித்துவத்தின் உலகப் பொருளாதார நெருக்கடி இலங்கை தேர்தலில் ஒரு கூர்மையான வெளிப்பாட்டை கண்டது," என்று அவர் கூறினார். "இலங்கையானது ஆபிரிக்கா மற்றும் ஆசியாவிலிருந்து மூலப்பொருட்கள் சீனவுக்கு போக்குவரத்து செய்யும் மிகவும் முக்கியமான சர்வதேச கடல் பாதைகளுக்கு அருகில் அமைந்துள்ளது."

தேர்தலின் அடிநிலையில் உள்ள புவி-மூலோபாய பதட்டங்களை சுட்டிக்காட்டிய பீரிஸ், வாஷிங்டன் மற்றும் புது தில்லியின் நலன்களை பிரதிபலிக்கும் பிரஹ்மா செல்லானியின் ஒரு கட்டுரையில் இருந்து இந்திய சிந்தனைக் குழாமிடம் இருந்து மேற்கோள் காட்டினார். "அடுத்து வரும் தேர்தலில், தங்கள் நாடு சீனாவின் பிராந்திய அபிலாசைகளை பின்பற்றுவதா அல்லது ஒரு சுயாதீனமான வெளியுறவுக் கொள்கையை முன்னிலைப்படுத்தி திறந்த பொருளாதாரத்தை ஊக்குவிப்பதா என்பதை விளைபயனுள்ள வகையில் இலங்கை வாக்காளர்கள் முடிவெடிப்பர். ஒருவர் அவர்கள் பிந்தைய விருப்பத்தை தேர்வு செய்வர் என்று எதிர்பார்க்கலாம். இலங்கையானது சீனா, இந்தியா மற்றும் அமெரிக்கவுக்கும் இடையிலான கடற் பிராந்திய மேலாதிக்கத்திற்கான போட்டியில் ஒரு 'ஊசலாடும் அரசு' என்பதை விட வேறொன்றும் இல்லை. "

.வை.எஸ்.எஸ்.. அழைப்பாளர் கபில பெர்ணான்டோ, இளைஞர்கள் எதிர்கொண்டிருக்கும் இருண்ட நிலைமைகள் உத்தியோகபூர்வ தேர்தல் விவாதங்களில் மூடி மறைக்கப்படுவதை அம்பலப்படுத்தினார். "ஆளும் வர்க்கத்தின் பகுதியினர் மத்தியிலான கருத்து வேறுபாடுகள், முக்கியமாக வெளியுறவுக் கொள்கை தொடர்பான வேறுபாடுகள் தந்திரோபாயமானவை மட்டுமே," எனக் கூறிய அவர், தேர்தலுக்கு பின்னர் ஒரு பதட்ட சூழ்நிலை வரும் என எச்சரித்தார். போலி இடது முன்னிலை சோசலிசக் கட்சி மற்றும் அதன் மாணவர் அமைப்பான அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும், "குறைந்தபட்சம் மட்டுப்படுத்தப்பட்ட சீர்திருத்தங்களை தன்னும் முன்னெடுக்குமாறு அழைப்பு விடுப்பதன் மூலம், சிறிசேன-விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தின் அமெரிக்க சார்பு திட்டத்தை மூடி மறைக்கின்றன, என பெர்னாண்டோ கூறினார்.

தேவராஜா, பிரதான முதலாளித்துவ கட்சிகளுடன் தமிழ் முதலாளித்துவக் கட்சிகள் மேற்கொள்ளும் தந்திர உத்திகளை அம்பலப்படுத்தினார். "சிங்கள பேரினவாதம் மற்றும் தமிழ் பிரிவினைவாதத்துக்கும் எதிராக சோ... இடையறா போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அதேவேளை, இந்த அமைப்புக்கள் தமிழ் மக்களையும் இளைஞர்களையும் ஏமாற்றுவதற்கு முடிந்தவரை முயல்கின்றன," என்று அவர் கூறினார். அமைச்சரவை அமைச்சர் பி. திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கம் போன்ற பெருந்தோட்டத் தொழிற்சங்கம்-சார்-அரசியல் கட்சிகள், சோ...க்கு எதிராகப் பயன்படுத்தப்படும் ஜனநாயக விரோத வழிமுறைகளை தேவராஜா விளக்கினார்.

.வை.எஸ்.எஸ்.. பல்கலைக்கழக கிளைத் தலைவரும் சோ... கொழும்பு வேட்பாளருமான பங்கஜ ஜயவிக்ரம, சகல பிரதான கட்சிகளும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களை ஏமாற்ற முயல்கின்றன என்று கூறினார். அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி கட்சி தேர்தல் விஞ்ஞாபனங்களில் வழங்கப்படும் பல்வேறு வாக்குறுதிகள் பற்றிய ஒரு மதிப்பீட்டை அவர் கொடுத்தார். "இந்தக் கட்சிகள் அனைத்தும் வாக்குறுதிகளைக் கொடுத்து அவற்றை மிறி வருவதால் அவை மீது எந்த நம்பிக்கையும் வைக்க வேண்டாம் என்று ஜயவிக்கிரம மாணவர்கள் மற்றும் இளைஞர்களை எச்சரித்தார். தனது ஆட்சியின் கீழ் வேலையின்மையை குறைப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ வாய்ச்சவடால் விடுத்த போதிலும், உண்மை எதிர்மாறானது என்று அவர் விளக்கினார்.

சோ... பொதுச் செயலாளர் விஜே டயஸ், தொழிலாள வர்க்கத்தை அதன் வரலாற்றுப் பணிகளை இட்டு நிரப்ப அரசியல் ரீதியில் கல்வியூட்டி தயார் செய்வதே சோ...யின் பிரதான நோக்கம் எனக் கூறினார். தொழிலாள வர்க்கத்தின் வரலாற்றுப் பணி, இன்னொரு ஏகாதிபத்திய உலகப் போரை தடுப்பதும் ஒரு புதிய சர்வதேச சோசலிச அமைப்பைக் கட்டியெழுப்புவதும் ஆகும்.

"அமெரிக்க ஏகாதிபத்தியம், ஒரு வலிமையான இராணுவச் சக்தி என்ற வகையில், அதன் போட்டியாளர்களுக்கு எதிராக அணு ஆயுதங்களை கூட பயன்படுத்தி உலக மனித குலத்தின் இழப்பில் தனது உலக மேலாதிக்கத்தை நிலைநாட்டிக்கொள்ள அச்சுறுத்தும் நிலையில், இந்தப் பணி இன்று மிக அவசரமானதாக ஆகிவிட்டது," என டயஸ் விளக்கினார்.

"சர்வதேச தொழிலாள வர்க்கத்துக்கு தேவை என்னவெனில், அனைத்துக்கும் மேலாக, ஏகாதிபத்தியத்தின் இத்தகைய காட்டுமிராண்டித்தனமான தயாரிப்புக்களை முறியடிப்பதற்கான ஒரு புரட்சிகர மூலோபாயம் ஆகும். இதனாலேயே உலக சோசலிசப் புரட்சிக்கான கட்சியான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அனைத்து பகுதிகளும் ஒரு உலக போர் எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கும், நிதி மூலதனத்தின் சிக்கன திட்டங்களை தோற்கடிக்க ஒரு சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் வெகுஜனங்களை அணிதிரட்டுவதற்கும் தமது அன்றாட போராட்டங்களில் முன்னுரிமை கொடுக்கின்றன. "

மாறாக, போலி இடது குழுக்கள், தேர்தல் காலங்களில் கொடுக்கப்படும் பொய் வாக்குறுதிகள் உட்பட முதலாளித்துவ அரசியல் மோசடிகளில் நம்பிக்கை வைக்குமாறு மக்களுக்கு கூறுகின்றன, என டயஸ் கூறினார். பேச்சாளர், அத்தகைய குழுக்களில் ஒன்றான ஐக்கிய சோசலிசக் கட்சி (USP), "தொழிலாளர்களின் அன்றாட போராட்டங்களில் சோ... பங்கேற்க முயற்சிப்பதில்லை," என சுமத்திய குற்றச்சாட்டை மறுதலித்தார். சோ... உறுப்பினர்கள் "சோசலிசத்தின் தூய்மையை" தங்கள் வீடுகளில் "ஆறுதலாக" இருந்து போதிக்கின்றனர் என்று ஐக்கிய சோசலிசக் கட்சி முன்வைக்கும் குற்றச்சாட்டை மறுத்த டயஸ், இது புரட்சிகர அரசியல் தொடர்பாக அனைத்து போலி-இடதுகளும் கொண்டுள்ள அப்பட்டமான விரோதப் போக்கை வெளிப்படுத்துகிறது என்று விளக்கினார்.

ஐக்கிய சோசலிச கட்சியின் குற்றச்சாட்டானது 1943ல் இந்திய போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சியின் இலங்கைப் பகுதியினுள்ளான சந்தர்ப்பவாதப் போக்கு முன்வைத்த குற்றச்சாட்டை ஒத்ததாக உள்ளது என டயஸ் நினைவு கூர்ந்தார். அச்சமயம், தீவிர மத்தியதர வர்க்க சக்திகளுடனான சமரசத்தை ஏற்க மறுத்த கொள்கை ரீதியான ட்ரொட்ஸ்கிச போராளிகளை "மலர்ச்சாலை போல்ஷிவிக்குகள்" என பிலிப் குணவர்த்தன மற்றும் என்.எம்.பெரேரா முத்திரை குத்தினர். அதன் பின்னரான அரசியல் பரிணாமத்தில் இருந்து எடுக்க வேண்டிய ஒரு முக்கியமான படிப்பினை இருந்தது என டயஸ் தெரிவித்தார். இந்த சந்தர்ப்பவாதிகள் முதலாளித்துவ பண்டாரநாயக்க அரசாங்கத்தில் சேர்வதுடன் முடிவுக்கு வந்தனர் -1956ல் குணவர்தனவும் 1964ல் பெரேராவும் நுழைந்துகொண்டனர்.

ஜனாதிபதி சிறிசேன ஜனநாயகத்தைக் கொண்டுவருவார் என்று மத்தியதர வர்க்க மற்றும் சலுகை பெற்ற புத்திஜீவிகளதும் உயர் மட்டத்தினர் கூறிக்கொள்வதை டயஸ் கண்டனம் செய்தார். தனது சொந்த கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் அதன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் செயலாளர்களாக இருந்தவர்களை வெளியேற்றி, அவரது விசுவாசிகளை நியமிக்க நீதிமன்றத்தை சிறிசேன பயன்படுத்திக்கொண்டமை, அவரது ஆட்சியின் ஜனநாயக விரோத தன்மையை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது என டயஸ் கூறினார். உண்மையில், போலி ஊழல் எதிர்ப்பு பிரச்சாரங்கள் மூலம், அரச இயந்திரங்களை வலுப்படுத்த புதிய நடவடிக்கைகளை அறிமுகம் செய்தமை, உழைக்கும் மக்களுக்கு எதிராக மேலும் கடுமையான அடக்குமுறையை தயார் செய்வதில் ஆளும் வர்க்கங்களின் நன்கு பரீட்சிக்கப்பட்ட தந்திரோபாயமாகும்.

தேர்தலுக்கு பின்னர் கொழும்பில் உருவாக்கப்படும் எந்த அரசாங்கத்துடன் ஒத்துழைப்பதற்கு முதலாளித்துவ தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுதிப்படுத்திய போதிலும் கூட, சிறிசேன அரசாங்கத்தின் பிரதி பாதுகாப்பு அமைச்சர் ருவன் விஜேவர்தன ஏற்கனவே இலங்கையில் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு மற்றும் கிழக்கில் ஒரு வலுவான "சட்டம் மற்றும் ஒழுங்கு" ஆட்சியை ஸ்தாபிக்க அழைப்புவிடுத்தார், என டயஸ் விளக்கினார். டெயிலி மிரர் பத்திரிகையில் வெளியான ஒரு பேட்டியில், விஜேவர்தன கூறியதாவது: "வடக்கில் சட்டம், ஒழுங்கு இறுக்கமாக்கப்பட வேண்டும். அந்த பகுதியில் பொலிசுக்கு அதிக முன்னுரிமையும் கூடுதல் அதிகாரங்களும் கொடுக்கப்பட வேண்டும் என்று நினைக்கிறேன்."

"ஏகாதிபத்திய போர் மற்றும் சமூக எதிர்ப் புரட்சிக்கு தயாரிப்புகளை பாராளுமன்ற தேர்தலில் வாக்கு பெறுவதன் மூலம் தோற்கடித்து விட முடியாது. இதனாலேயே, ஒரு சர்வதேச முன்னோக்கின் அடிப்படையில் ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசை ஸ்தாபிக்க ஒரு வெகுஜன புரட்சிகர கட்சியை கட்டியெழுப்புவதற்கான போராட்டத்திற்கு நீங்கள் அனைவரும் இணைய வேண்டும் என நாங்கள் அழைக்கின்றோம், என்று கூறி டயஸ் உரையை முடித்தார்.