சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

France’s neo-fascist National Front expels its founder Jean-Marie Le Pen

பிரான்சின் நவ-பாசிச தேசிய முன்னணி அதன் ஸ்தாபகர் ஜோன்-மரி லு பென்னை வெளியேற்றுகிறது

By Stéphane Hugues and Kumaran Ira
25 August 2015

Use this version to printSend feedback

பிரான்சின் நவ-பாசிச தேசிய முன்னணி (FN), அதன் ஸ்தாபகர் ஜோன்-மரி லு பென் பிரான்சின் நாஜி-ஒத்துழைப்பு விச்சி ஆட்சியை நியாயப்படுத்தியும் மற்றும் இனப்படுகொலைகளைக் குறைத்துக் காட்டியும் மீண்டும் மீண்டும் கருத்து கூறி வந்தமைக்காக கட்சியைவிட்டு வெளியேற்றியுள்ளது. அவர் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டமை, இதை முதலாளித்துவ ஊடகங்களின் பிரிவுகள் உத்வேகத்துடன் கோரிவந்திருந்த நிலையில், தேசிய முன்னணி தன்னைத்தானே ஒரு பிரதான மக்கள் கட்சியாக பிம்பத்தை மாற்றிக் கொள்வதற்கு இதுவொரு வெளிப்படையான முயற்சியாகும்.

ஆகஸ்ட் 20 அன்று, தேசிய முன்னணியின் செயற்குழு ஓர் ஒழுங்குநடவடிக்கைக்கான கூட்டத்தைக் கூட்டியது, லு பென்னின் வாதங்களைச் செவியுற்ற பின்னர் அவரை நீக்குவதற்கு வாக்களித்தது.

2011இல் அக்கட்சியின் தலைவராகி இருந்த லு பென்னின் மகள் மரீன்,  கட்சி முன்வைத்த பதினைந்து குற்றச்சாட்டுக்களுக்குப் பதிலளிக்க நேரில் வருமாறு கட்டளையிட்டிருந்தார். லு பென் BFM டிவி மற்றும் RMC போன்ற ஊடகங்களுக்கும், அத்துடன் தீவிர வலது வாரயிதழ் Rivarolக்கும் பேட்டி அளித்ததற்காக குற்றஞ்சாட்டப்பட்டார், இவற்றில் அவர் விச்சி ஆட்சியை நியாயப்படுத்தியதோடு இனப்படுகொலையின் முக்கியத்துவத்தை குறைத்துக்காட்டி இருந்தார்.

லு பென் மீண்டும் மீண்டும் பேட்டியாளர்களிடம், விஷவாயு கூடங்களே ஒரு "வரலாற்று விவரக்குறிப்பு" என்று கூறியதுடன், விச்சி ஆட்சியின் தலைமையிலிருந்த மார்ஷல் பிலிப் பெத்தனைப் பாதுகாத்தார். மார்ஷல் பெத்தனை நான் ஒருபோதும் ஒரு தேசதுரோகியாக கருதியதில்லை. விடுதலையின் போது அவர்கள் அவரிடம் மிகவும் கடுமையாக நடந்து கொண்டார்கள். மார்ஷலை விரும்புகிறவர்களை நான் ஒருபோதும் மோசமான பிரெஞ்சுவாசிகள் என்றோ அல்லது அவர்களை நான் சந்திக்க கூடாதென்றோ நினைத்ததில்லை, இது லு பென் கூறியது.

மூத்த லு பென்னின் கருத்துக்கள், தேசிய முன்னணியை "வழமையாக்கும்" மரீன் லு பென்னின் கொள்கைக்குப் பாதிப்பேற்படுத்தியதால், அது தேசிய முன்னணிக்குள் சர்ச்சையைத் தூண்டின. மகளைச் சுற்றியிருந்த முன்னணி நிர்வாகிகள் அவரது தந்தைக்கு எதிராக கடுமையான நிலைப்பாடு எடுத்தனர். ஏப்ரலில், மரீன் லு பென் கூறுகையில், அவரது தந்தையுடன் அவர் "ஆழமாக கருத்துவேறுபடுவதாக" தெரிவித்தார், அத்துடன் டிசம்பரில் வரவிருக்கின்றன பிராந்திய தேர்தல்களில் அவரை வேட்பாளராக நிறுத்துவதையும் எதிர்த்தார்.

மே மாதம் மரீன் லு பென் ஒரு சிறப்பு கூட்டத்திற்கு அழைப்புவிடுத்தார், அதில் தேசிய முன்னணியின் மூத்த நிர்வாகிகள் அவரது தந்தையாரை உறுப்பினர் அந்தஸ்திலிருந்து தற்காலிகமாக நீக்கினர். அவர் அம்முடிவை எதிர்த்து போராடியதால், நாந்தேர் நீதிமன்றம் அவரை மீளமர்த்துமாறு அவருக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. இளம் லு பென் பின்னர் அவரது தந்தை வசமிருந்த கௌரவ கட்சி தலைவர் பதவியைப் பறிக்க ஓர் அசாதாரண பொதுக்கூட்டத்தைக் கூட்டினார். கட்சி பெரும்பான்மை ஜூலையில் அவரை அப்பதவியிலிருந்து நீக்குவதற்கு ஆதரவாக வாக்களித்த போதினும், அந்த வாக்கெடுப்பும் மீண்டும் நீதிமன்றங்களால் செல்லுபடியாகதென இரத்து செய்யப்பட்டது.

கடந்த வார முடிவைக் கண்டித்து லு பென் தெரிவிக்கையில், "அரசியல் குழுவின் ஒரு தொங்குதசையினது" சூழ்ச்சிக்கு" அவர் பலியாக்கப்பட்டு இருப்பதால் "கொந்தளிப்புடன்" இருப்பதாக கூறினார். அவரது மகள், "அவருடன் 100 சதவீத உடன்பாடு இல்லாத எவரொருவரையும் விலக்கிவிடுவதாக" தெரிவித்த அவர், அடுத்த மாத கட்சி மாநாட்டில் கலந்து கொள்ளவிருப்பதாக அறைகூவல் விடுத்தார்.

மரீன் லு பென், அந்த முடிவை "தர்க்கரீதியானது" என்று குறிப்பிட்டதோடு, ஜோன்-மரி லு பென் என்ன விளைவு வரும் என்பதைத் தெரிந்தே ஒரு நிகழ்வுபோக்கை ஆரம்பித்தார், அவரது தவறுகளைப் பல வாரங்களாக பல மடங்காக்கிவிட்டார், என்றார்.

லு பென்னை ஓரங்கட்டும் தேசிய முன்னணியின் முடிவு தந்திரோபாய பரிசீலனைகளை அடித்தளத்தில் கொண்டவொரு நகர்வாகும். மரீன் லு பென் கட்சி தலைமையை ஏற்றதிலிருந்து, அப்பெண்மணி அவரது தந்தையால் அடையாளப்படுத்தப்பட்ட தேசிய முன்னணியின் அப்பட்டமான பாசிச மற்றும் யூதயின-விரோத கண்ணோட்டங்களைக் குறைத்துக் காட்டுவதன் மூலம், கட்சியை "பூதாகரமாக-காட்டாமல்" இருக்க முயன்று வந்தார்.

தேசிய முன்னணியின் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார், பிராந்திய மற்றும் ஜனாதிபதி தேர்தல்களுக்கு முன்னதாக, கட்சி தலைவர், எங்களுக்கு எதிரான இனவாதம் அல்லது யூதயின-விரோத உணர்வு குறித்த முக்கிய குற்றச்சாட்டுக்களைத் தணிக்க அவரால் ஆனமட்டும் அனைத்தும் செய்து கொண்டிருக்கிறார்".

ஆளும் சோசலிஸ்ட் கட்சி (PS) மற்றும் பழமைவாத குடியரசுவாதிகள் உட்பட பிரான்சின் முக்கிய கட்சிகளின் மீது மக்களின் பரந்த பெரும்பான்மை ஆழமாக அவநம்பிக்கையில் உள்ளதால், தேசிய முன்னணி சமீபத்திய தேர்தல்களில் கணிசமான தேர்தல் வெற்றிகளைப் பெற்றது. ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகத்தின் மாற்றத்திலிருந்து அது மிக பரந்தளவில் அதி வலது என்பதிலிருந்து வலது என்பதாக இலாபமடைந்தது. புலம்பெயர்ந்தோர்-விரோத வெறி, சட்ட ஒழுங்கு நடவடிக்கைகள், சிக்கனத்திட்டங்கள் மற்றும் ஏகாதிபத்திய போர்கள் ஆகியவற்றை தேசிய முன்னணி ஊக்குவித்தமை இப்போது பிரதான பிரெஞ்சு அரசியலுக்குள்ளேயே நிலவி வருகின்றன.

கட்சி வளர்ந்துள்ளதுடன் அதற்குள் மோதல்களும் அபிவிருத்தியடைந்துள்ளன, அக்கட்சியின் துணை தலைவரும் முன்னாள் சோசலிஸ்ட் கட்சி அங்கத்தவர் ஜோன்-பியர் செவனுமோவின் கூட்டாளியுமான புளோரியான் பிலிப்போ போன்றவர்கள் சோசலிஸ்ட் கட்சியின் விளிம்பிலிருந்து ஈர்க்கப்படும் சக்திகளாக உள்ளே வருகிறார்கள்.

லு பென் வெளியேற்றப்பட்டதற்குப் பின்னர், Le Monde குறிப்பிடுகையில், திரு லு பென்னை வெளியேற்றுவதற்காக இந்த மோதலின் ஆரம்பத்திலிருந்தே "போராடி வந்த" பிலிப்போ, இந்த உடைவு ஏதேனும் ஒரு வழியில் 'நடந்தேற வேண்டியிருந்ததாக' சமீபத்தில் தெரிவித்தார், 'இதற்கு மக்களிடம் அங்கே பலமான கோரிக்கை இருப்பதாகவும்' தேசிய முன்னணியின் துணை-தலைவர் குறிப்பிட்டார்" என்று குறிப்பிட்டது.

தேசிய முன்னணியை ஏற்கத்தக்க அரசாங்க கட்சியாக முத்திரை குத்த மற்றும் சந்தைப்படுத்த வழிகளை எதிர்பார்த்து வருகின்ற அரசியல் ஸ்தாபகத்தினது பரந்த பிரிவுகளின் அதே போக்கில், லு பென்னை வெளியேற்றியதன் மூலமாக தேசிய முன்னணி செயல்பட்டுள்ளது.

ஏப்ரல் 8 தலையங்கத்தில் Le Monde எழுதியது: ஒன்று, நிஜமாகவே தேசிய முன்னணி என்ன யோசித்து வருகிறதென்பதை தேசிய முன்னணியின் கௌரவ தலைவராக ஜோன்-மரி லு பென் உரக்க கூறி வருகிறார் அல்லது கடந்த நான்காண்டுகளாக தேசிய முன்னணியை "பூதாகரமாக-காட்டாமல்" இருக்க செய்யப்பட்டுள்ள எல்லா வேலைகளையும் சிதைத்து கொண்டே, ஜோன்-மரி லு பென் அவரது சொந்த கட்சிக்குள்ளேயே ஒரு அதிருப்தியாளராக மாறி வருகிறார். அவரது தந்தைக்கும் மற்றும் அவரது கட்சிக்கும் இடையே, மரீன் லு பென் ஏதாவதொன்றைத் தேர்ந்தெடுத்தாக வேண்டும். அவரது தேர்வை எவரொருவராலும் ஊகிக்க முடியும்".

லு பென் மற்றும் அவரது மகள் மரீனுக்கு இடையிலான மோதல்களைக் கொண்டு ஊடகங்கள் விளையாடிக் கொண்டிந்தாலும், பகுப்பாய்வின் இறுதியாக அது அதன் குணாம்சத்தில் தந்திரோபாயமானதே ஒழிய, கோட்பாட்டுரீதியிலானது அல்ல. மூத்த லு பென்னை நீக்கியமை, தேசிய முன்னணி மேலும் பிரதான அரசியலுக்குள் ஒருங்கிணைவதற்கும், ஒட்டுமொத்த ஆளும் வர்க்கமும் இன்னும் அதிகமாக வலதை நோக்கி மற்றொரு திருப்பத்தை எடுக்க தயாராவதற்குரிய தயாரிப்பாகும்.