சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

German and French leaders meet in Berlin summit on refugee crisis

ஜேர்மன் மற்றும் பிரெஞ்சு தலைவர்கள் அகதிகள் நெருக்கடி பற்றிய பேர்லின் மாநாட்டில் சந்திக்கின்றனர்

By Alex Lantier
25 August 2015

Use this version to printSend feedback

ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்டும் ஐரோப்பிய அகதிகள் நெருக்கடி மீதான ஓர் மாநாட்டிற்காக பேர்லினில் நேற்று சந்தித்தனர். மேற்கத்திய ஆதரவிலான உக்ரேனிய ஜனாதிபதி பெட்ரோ பொறோஷென்கோவுடன் உக்ரேனில் தீவிரமடைந்துவரும் சண்டை குறித்தும் அவர்கள் விவாதித்தனர்.

அக்கூட்டத்திற்குப் பிந்தைய ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், அகதிகளைக் கவனித்துக் கொள்வதற்குரிய சுமையை ஐரோப்பிய நாடுகளிடையே சமஅளவில் பகிர்ந்து கொள்வதற்காக, மேர்க்கெலும் ஹோலாண்டும் தஞ்சம் கோருவோர் சட்டங்களை ஐரோப்பாவெங்கிலும் ஒரேமாதிரியானதாக ஆக்க அழைப்புவிடுத்தனர். ஜேர்மனியில் Heisenau முகாமில் அதி-வலதுசாரிகளால் நடத்தப்பட்ட கலவரங்களில் புலம்பெயர்ந்தவர்கள் இலக்கில் வைக்கப்பட்டதற்காக மேர்க்கெல் முதலைக்கண்ணீர் வடித்தார், புலம்பெயர்ந்தவர்கள் தகுந்த ஐரோப்பிய "ஜனநாயகத்துடன்" கையாளப்படுவார்களென ஹோலாண்ட் வலியுறுத்தினார். ஆனால் யதார்த்தத்தில், பிரெஞ்சு மற்றும் ஜேர்மன் அரசாங்கங்கள் புலம்பெயர்வோர் மீதும் மற்றும் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதும் கடுமையான தாக்குதல்களுக்கு திட்டமிட்டு வருகின்றன.

சிரியா மற்றும் லிபியாவில் ஏகாதிபத்திய-ஆதரவு போர்கள், மத்திய கிழக்கெங்கிலும் மற்றும் ஆபிரிக்க சாஹெலின் பெரும்பகுதிகளிலும் பரவியுள்ள நிலையில், இத்தகைய நாடுகளில் நிலவுகின்ற கடுமையான வறுமையோடு சேர்ந்து, இவை மில்லியன் கணக்கான மக்களைப் புலம்பெயரச் செய்து வருகின்றன. சிரியாவில் மட்டும், பத்து மில்லியன் கணக்கான மக்கள் அவர்களது வீடுகளை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். மத்தியத்தரைக்கடல் வழியாக கிரீஸ் மற்றும் இத்தாலிக்கு மட்டும் வருகின்ற நூறு ஆயிரக் கணக்கான புலம்பெயர்ந்தவர்கள் உட்பட, மில்லியன் கணக்கான அகதிகள் ஐரோப்பாவை வந்தடைகின்றனர். அகதிகள் நெருக்கடி பரவலாக இப்போது இரண்டாம் உலக போருக்குப் பிந்தைய ஐரோப்பாவின் மிக தீவிரமான நெருக்கடியாக வர்ணிக்கப்படுகிறது.

ஜேர்மனியிலுள்ள அதிகாரிகள், அங்கே அண்ணளவாக 40 சதவீத புதிய புலம்பெயர்வோர்கள் தஞ்சம் கோருவதாகவும், இந்த ஆண்டு ஜேர்மனியில் 800,000 புலம்பெயர்வோர் வந்திருக்கலாமெனவும் கூறுகின்றனர். இது, சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதற்குப் பின்னர் மற்றும் பேர்லின் சுவரின் வீழ்ச்சிக்கு பின்னர், 1992 இல் வந்த 440,000 என்ற முந்தைய அளவை விட இரண்டு மடங்காகும்.

அவர்களது பத்திரிகையாளர் சந்திப்பில், மேர்க்கெலும் ஹோலாண்டும் இத்தாலி மற்றும் கிரீஸில் ஐரோப்பிய ஒன்றியத்தால் நிர்வகிக்கப்படும் காவல் முகாம்களை அமைக்கும் திட்டங்களை வேகமாக நடைமுறைப்படுத்த முறையிட்டனர், அவை பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்ட புலம்பெயர்வோரை ஐரோப்பாவெங்கிலும் மிக சமஅளவில் பகிர்ந்தளிக்கும்.  

இத்தகைய "முக்கிய இடங்கள்" (hot spots) சட்டரீதியான கரும்புள்ளிகளாகும், இவை புலம்பெயர்வோரை 18 மாதங்கள் வரையில் தடுப்புக்காவலில் வைத்திருக்கலாம், அதற்குப் பின்னர் பொது விதிகளின்படி புலம்பெயர்வோர் அவர்களது தாய்நாட்டிற்கு திரும்ப அனுப்பப்படுவார்கள். தஞ்சம்கோரும் விதிகளின்படி புலம்பெயர்வோர் அவர்கள் வந்தடையும் நாடுகளில் பெறக்கூடிய முழு உரிமைகள் மற்றும் பாதுகாப்புகள் பறிக்கப்படும். புலம்பெயர்வோர் உள்வரவு அதிகரித்தால், முகாம்களில் இருக்கும் புலம்பெயர்ந்தோரின் தடுப்புக்காவல் மற்றும் அவர்களை திரும்ப அனுப்புவதன் மீதான ஐரோப்பிய ஒன்றிய சட்ட வரம்புகளும் நீக்கப்படும்.   

ஜேர்மன் சட்டத்தின்படி வடிவமைக்கப்பட்ட, "பாதுகாப்பான நாடுகளது" ஒரு பொதுவான பட்டியலையும் அந்த முகாம்கள் பகிர்ந்து கொள்ளும், அப்பட்டியலிலுள்ள நாடுகளிலிருந்து எந்த புலம்பெயர்வோரும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டார்கள்.

ஒரு பொதுவான மூலோபாயத்தை வரைய ஜேர்மன் உள்துறை மந்திரி தோமஸ் டு மஸியர் அவரது பிரெஞ்சு சமதரப்பு பேர்னார்ட் கசெனேவ் ஐ பேர்லினில் வரவேற்பார் என்று ஹோலாண்டு தெரிவித்தார். அந்த ஜோடி, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் தஞ்சம் கோரும் விண்ணப்பங்களை கட்டுப்படுத்தி கையாள்வதன் மீதான டப்ளின் உடன்படிக்கைகளில் திருத்தம் செய்வது குறித்தும் விவாதிக்கும்.

இப்போது வரையிலுள்ள விடயத்தைப் போல, ஐரோப்பாவின் சுமார் 40 சதவீத அகதிகள் மற்றும் தஞ்சம் கோருவோரை ஜேர்மனியால் வரவேற்று ஏற்றுக்கொள்ள முடியாது, இதை டு மஸியர் நேற்று தெரிவித்தார். ஏதாவது மாற்றம் இல்லையென்றால், செங்கென் உடன்படிக்கை முறிந்துபோகுமென அவர் அறிவித்தார் இது, கிரீஸ், பால்கன்கள் அல்லது இத்தாலியிலிருந்து அகதிகள் வருவதைத் தடுக்க, ஜேர்மனி ஏனைய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் எல்லைக்கட்டுப்பாடுகளை மீள்ஸ்தாபிதம் செய்யும் என்றவொரு வெளிப்படையான அச்சுறுத்தலாகும்.

ஜேர்மனியும் பிரான்சும் ஒட்டுமொத்த பால்கன் பிரதேசத்தையும் "பாதுகாப்பான நாடுகளின்" பட்டியலில் சேர்க்க அச்சுறுத்தி வருகின்றன, பின் அங்கிருந்து எந்த புலம்பெயர்வோரும் ஏற்கப்பட மாட்டார்கள். இது, மேற்கு ஐரோப்பாவை நோக்கி வரும் அகதிகளை தடுத்து அவர்கள் மீது மூர்க்கமான ஒடுக்குமுறையை அதிகரிக்குமாறு செய்ய, பால்கன் அரசாங்கங்கள் மீது அழுத்தங்களை அதிகரிக்கும்.

ஹங்கேரி அதன் தெற்கு எல்லைகளைக் கடந்துவரும் புலம்பெயர்வோரை தடுக்க ஒரு பாரிய எல்லையோர முள்வேலியை அமைத்து வருகிறது, மாசிடோனிய பொலிஸ் கடந்த வாரம் கிரேக்க-மாசிடோனிய எல்லையிலிருந்து அகதிகள் அந்நாட்டிற்குள் எல்லைக்கடப்பதைத் தடுக்கும் முயற்சியில் அவர்களுடன் மூன்று-நாட்கள் சண்டையிட்டது. இறுதியில் புலம்பெயர்வோர் மாசிடோனிய பொலிஸைத் தோற்கடித்து, அப்பாதையில் நுழைந்தார்கள். ஆனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட அவர்களில் பலர், உணவின்றி அல்லது போக்குவரத்தின்றி அந்நாட்டைக் கடந்துவர முயல்வதால் மிகக்கொடூரமான நிலைமைகளை முகங்கொடுக்கின்றனர். (பார்க்கவும்: மாசிடோனியாவில் நுழைய முயன்ற அகதிகள் மீது துருப்புகள் துப்பாக்கிச்சூடு நடத்துகின்றன)

அல்பானியா மற்றும் கொசோவோ உட்பட பால்கன் அரசுகளது தலைவர்களுடன் புலம்பெயர்வோர் நெருக்கடி குறித்து விவாதிக்க வியாழனன்று மேர்க்கெல் ஒரு மாநாட்டிற்காக வியன்னா பயணிப்பார். இந்த நாடுகளிலிருந்து ஏன் இத்தனை ஆயிரம் பேர் வருகிறார்கள்" என்பதை அவர் விசாரிப்பார் என்று அவரது செய்தி தொடர்பாளர் ஸ்ரெபான் சைய்பேர்ட் தெரிவித்தார்.

புலம்பெயர்வோரின் அவலநிலை குறித்தும் மற்றும் ஐரோப்பிய மதிப்புகளுக்காகவும் அக்கறை கொண்ட வெற்று வழிபாடுகளை தோலுரித்துக்காட்டும் பரிந்துரைகள், பாரீஸ் மற்றும் பேர்லினில் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன என்பது ஐரோப்பிய முதலாளித்துவ ஜனநாயகத்தின் சீரழிவு ஆழமடைந்து செல்வதை நிரூபிக்கிறது.

பாசிசம் தோற்கடிக்கப்பட்ட பின்னர், ஐரோப்பா வரலாற்று குப்பைத் தொட்டியில் தூக்கியெறிந்துவிட்டதாக மில்லியன் கணக்கானவர்கள் நம்பிய ஆட்சி வடிவங்களும் மற்றும் நடைமுறைகளும், முன்னொருபோதும் இல்லாத சர்வதேச சமூக நெருக்கடிக்கு இடையே, மீண்டும் மேலெழும்பி வருகின்றன. ஜேர்மனி, இரண்டாம் உலக போருக்குப் பிந்தைய அதன் இராணுவ கட்டுப்பாட்டு கொள்கையை ஒதுக்கிவைத்து வருகின்ற நிலையில், மற்றும் பிரான்ஸ், கூடுதல் அதிகாரத்தில் படுகொலை செய்வதற்கான இலக்கில் வைக்கப்பட்டவர்களது "கொலை பட்டியல்களைத்" தயாரித்து வருகின்ற நிலையில், ஐரோப்பிய முதலாளித்துவமே அதன் சொந்த சிறைச்சாலை முகாம்களின் வலையமைப்புடன் ஆயுதமயப்பட்டு வருகிறது.

தேசிய வழியில் ஐரோப்பிய உடைவிற்கான சாத்தியமான நிலைமைகள் முன்பினும் அதிக தெளிவாக மேலெழுகின்றன. ஐரோப்பிய கண்டத்திற்குள் எல்லையின்றி சுதந்திரமாக பயணிப்பதன் மீது ஏற்றுகொள்ளப்பட்ட செங்கென் உடன்படிக்கை மற்றும் ஐரோப்பிய ஒன்றியமெனும் கவசத்தின் கீழ், ஐரோப்பிய நாடுகளுக்கிடையிலான பகுதியாக பெரிதும் மட்டுப்படுத்தப்பட்ட ஒருங்கிணைப்பு, அகதிகள் குறித்து தீவிரமடைந்துவரும் சர்வதேச பதட்டங்களுக்கு இடையே, சுமையேறி நொருங்கி வருகிறது.

அகதிகள் குறித்த விவாதங்களைத் தொடர்ந்து, மேர்க்கெலும் ஹோலாண்டும் கடந்த ஆண்டின் நேட்டோ ஆதரவிலான கியேவ் ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்குப் பின்னர் உண்டான இரத்தந்தோய்ந்த உள்நாட்டு போரைக் குறித்து விவாதிக்க, செல்வந்த பில்லியனரும் உக்ரேனிய தீவிர-வலது ஜனாதிபதியுமான பெட்ரோ பொறோஷென்கோவுடன் ஒரு கூட்டு பத்திரிகையாளர் கூட்டத்தை நடத்தினர்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், அம்மூவரும் கிழக்கு உக்ரேனில் கியேவ் ஆட்சிக்கும் ரஷ்ய-ஆதரவிலான பிரிவினைவாத போராளிகளுக்கும் இடையிலான சண்டையை, அது நேட்டோ மற்றும் ரஷ்யாவிற்கு இடையே முழு-அளவிலான போராக தீவிரமடைய அச்சுறுத்திய நிலையில், அதை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக போர்நிறுத்த உடன்பாடுகளைக் குறித்து பேரம்பேச மின்ஸ்கில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினை சந்தித்தனர். ஆனால் இந்த முறை, மேர்க்கெல், ஹோலாண்டு மற்றும் பொறோஷென்கோ புட்டினை வெட்டிவிட்டனர், அவர் அக்கூட்டத்திற்கு அழைக்கப்படவில்லை.

மின்ஸ்கில் ஒப்புக்கொள்ளப்பட்ட போர்நிறுத்த பாதையில் தீவிரமடைந்துவரும் மோதல்களுக்கு இடையே அக்கூட்டம் நடந்துள்ளது. சமீபத்திய நாட்களில் பிரிவினைவாத படைகளின் துப்பாக்கிச்சூட்டில் ஐந்து பேர் காயமடைந்ததாக உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்தனர், அதேவேளை ரஷ்ய-ஆதரவிலான பிரிவினைவாதிகள் டொனெட்ஸ்க் பீரங்கி தாக்குதலில் ஐந்து பேர் உயிரிழந்ததாக அறிவித்தனர்.

பொறோஷென்கோ உடனான பத்திரிகையாளர் கூட்டத்தில், மேர்க்கெல் மற்றும் ஹோலாண்டும் மாஸ்கோவுடன் முழு மோதல் அபாயமற்ற ஐரோப்பிய ஒன்றிய கொள்கையின் பாதையில் வருமாறு கிரெம்ளினுக்கு அழுத்தமளிக்க முனைந்தனர். இரண்டு தரப்பும் மின்ஸ்க் உடன்படிக்கைகளை மற்றும் கனரக ஆயுதங்களை திரும்ப பெறுவதை மதிக்க வேண்டுமென மேர்க்கெல் முறையிட்டார். ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் கூட்டு-ஒத்துழைப்பு அமைப்பு (OSCE) இன்னும் அதிக சுதந்திரமாக உக்ரேனில் தொழிற்பட அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்திய அவர், OSCE மோதல் கண்காணிப்பாளர்களுடன் முரண்படுவதற்காவும் மற்றும் அந்நாட்டிற்குள்ளே டிரோன்களைப் பறக்கவிடுவதற்காகவும் கிழக்கு உக்ரேனிய பிரிவினைவாதிகளை விமர்சித்தார்.

கைதிகள் பரிவர்த்தனை மற்றும் ரஷ்ய-உக்ரேனிய வர்த்தக உறவுகளை மீட்டமைப்பது உட்பட பல்வேறு பிரச்சினைகளை மேர்க்கெல் சுட்டிக்காட்டினார். ரஷ்ய-உக்ரேனிய வர்த்தக உறவுகள் கியேவ் ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்குப் பின்னர் சண்டை வெடித்ததிலிருந்து தீர்க்கப்படவில்லை.

ரஷ்ய அதிகாரிகள், அந்த மோதலுக்காக நேட்டோ மற்றும் அதன் உக்ரேனிய பினாமிகளது ஆக்ரோஷமான நடவடிக்கைகள் மீது பழிசுமத்தி விடையிறுக்கின்றனர். நாங்கள் இந்த கூட்டத்தின் தயாரிப்புகளை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் மற்றும் அதன் விளைவுகளையும் கவனமாக பார்ப்போம், என்று ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்தார். எங்களைப் பொறுத்த வரையில், வெளிப்படையாக கியேவ் மீது கூடுதல் அழுத்தமளிக்க வேண்டியிருக்கிறது. மின்ஸ்க் உட்படிக்கைகளின் பின்புல எழுத்தாளர்களான ஜேர்மனியும் பிரான்சும் [சமாதான நிபந்தனைகள்] நிபந்தனையின்றி பூர்த்தி செய்யப்படுவதை சாத்தியமான அனைத்து வகையிலும் உறுதிப்படுத்தி வைக்க வேண்டுமென நாங்கள் எதிர்பார்க்கிறோம், என்றார்.