சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : ஜப்பான் 

Japanese PM snubs Chinas World War II victory ceremony

ஜப்பானிய பிரதம மந்திரி சீனாவின் இரண்டாம் உலக போர் வெற்றி கொண்டாட்டத்தை தட்டிக்கழிக்கிறார்

By Peter Symonds
26 August 2015

Use this version to printSend feedback

திங்களன்று ஜப்பானிய மந்திரிசபை முதன்மை செயலர் யோஷிஹைட் சுகாவின் அறிக்கை ஒன்று, இரண்டாம் உலக போர் முடிந்ததன் 70வது நினைவாண்டைக் குறிக்கும் வகையில் அனேகமாக பிரதம மந்திரி ஷின்ஜோ அபே சீனாவிற்கு விஜயம் செய்வார், அங்கே செப்டம்பர் 3 அன்று நடைபெறவுள்ள உத்தியோகபூர்வ நினைவுதின விழாக்களில் பங்கேற்பாரென்ற ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

சுகா பத்திரிகையாளர் கூட்டம் ஒன்றில் கூறுகையில், அபே அந்த கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளமாட்டார், அத்தேதிக்கு நெருக்கமாக முன்னரோ அல்லது பின்னரோ சீனாவிற்கு விஜயம் செய்யும் எந்த திட்டமும் இல்லை என்றார். இந்த முடிவு டயட் இன் [ஜப்பான் நாடாளுமன்றம்] சூழல்கள் மற்றும் ஏனைய பரிசீலனைகளைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டது என்று அவர் கூறியது, நாடாளுமன்ற மேல்சபையில் விவாதிக்கப்பட உள்ள மக்கள்விரோத பாதுகாப்பு சட்டமசோதாவைக் குறித்தவொரு குறிப்பாகும்.

பெயர்வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் ஜப்பான் டைம்ஸிற்குக் கூறினார்: இம்முடிவை எடுப்பதற்கு முன்னதாக அரசாங்கம் ஏனைய நாடுகளுடன் கலந்தாலோசித்தது, அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா மற்றும் உயர்மட்ட ஐரோப்பிய தலைவர்கள் அதில் கலந்து கொள்ளப் போவதில்லை, மாறாக அரசாங்க மந்திரிமார்கள், முன்னாள் தலைவர்கள் மற்றும் பெய்ஜிங்கில் உள்ள தூதரக அதிகாரிகளைக் கொண்டு பிரதிநிதித்துவம் செய்வார்கள்.

"இரண்டு நாடுகளது தலைவர்களும் வெளிப்படையான விவாதங்களில் ஈடுபடுவதற்கு களமமைக்க" ஜப்பான் முயற்சித்து வருவதாக சுகா தெரிவித்தார், இருப்பினும் அபே இரண்டே இரண்டு முறை மட்டுமே சுருக்கமாக சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் உடன் நேருக்கு-நேர் பேச்சுவார்த்தைகள் நடத்தியுள்ளார். டிசம்பர் 2012 இல் அபே பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார், அதேவேளையில் ஜி மார்ச் 2013 இல் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார்.

அபே சீன அழைப்பைத் திடீரென நிராகரித்தமை, அவ்விரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து கொண்டிருக்கும் கூர்மையான பதட்டங்களுடன் பிணைந்துள்ளது. இதில், 1930கள் மற்றும் 1940களின் ஜப்பானிய இராணுவ குற்றங்கள் மற்றும் அட்டூழியங்களை அபே மூடிமறைப்பதும் உள்ளடங்குகிறது. வரலாற்றைத் திருத்தியெழுதும் அபேயின் முயற்சிகள், அவரது அரசாங்கத்தின் ஜப்பானை மீள்இராணுவமயப்படுத்துவதன் பாகமாக மற்றும் அதன் கூறுபாடாக உள்ளன. அந்த இரண்டு பாதுகாப்பு சட்டமசோதாக்களின் நோக்கம், "கூட்டாக சுய-பாதுகாப்பில்" ஈடுபடுவதற்கு அதாவது அமெரிக்க தலைமையிலான ஆக்கிரமிப்பு போர்களில் பங்குபெறுவதற்கு ஆயுதப்படைகளின் ஆற்றல்கள் மீதான அரசியலமைப்பு தடைகளை அகற்றுவதாகும்.

"ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு சீன மக்களின் போர் எதிர்ப்பு" என்பதாக பெய்ஜிங் எதை குறிப்பிடுகிறதோ, அதன் வெற்றி நினைவுவிழாவில் நடத்தப்படும் சீன இராணுவ அணிவகுப்பில் அபேயின் பிரசன்னம், ஜப்பானில் அவர் யாரை திருப்திப்படுத்தி வருகிறாரோ அந்த வலதுசாரி இராணுவவாத அடுக்குகளால் ஏற்றுக் கொள்ள முடியாது. இம்மாத தொடக்கத்தில் அபே ஜப்பானின் அரசு ஒளிபரப்பு ஸ்தாபனம் NHKக்குக் கூறுகையில், "ஜப்பானிய-விரோதம்" இல்லாத மற்றும் சிநேகமான நினைவாண்டு நிகழ்வுகளில் மட்டுமே அவரால் கலந்துகொள்ள முடியுமென தெரிவித்தார்.

அதிதீவிர வலது, ஜப்பானின் மூர்க்கமான கட்டுப்பாட்டின் கீழ் சீனா மற்றும் ஏனைய ஆசிய நாடுகளை கொண்டு வருவதை, டோக்கியோவின் "பரந்த கிழக்கு ஆசிய கூட்டு-செல்வவள பரப்பெல்லையின்" பாகமாக, மேற்கத்திய காலனித்துவம் மற்றும் அதன் கைப்பாவை ஆட்சிகளிடமிருந்து ஆசியாவை விடுவிக்கும் ஒரு "விடுதலை போர்" என்பதாக தொடர்ந்து நியாயப்படுத்துகிறது.

ஜப்பான் தோல்வியின் 70ஆம் நினைவாண்டை குறிக்கும் வகையில் ஆகஸ்ட் 14 அன்று அபேயின் வழங்கிய சொந்த உரையே கூட மிக கவனமான முயற்சியாக இருந்தது, அது முந்தைய தலைவர்கள் ஜப்பானிய ஆக்கிரமிப்புக்காக வெளியிட்ட கடந்தகால மட்டுப்படுத்தப்பட்ட மன்னிப்புகளை உதட்டளவில் உச்சரித்தது, அத்துடன் ஜப்பான் காலவரையின்றி தொடர்ந்து மன்னிப்பு கோராது என்பதையும் உறுதியாக எடுத்துரைத்தது. அனைத்திற்கும் மேலாக, அந்த உரை, நூறு ஆயிரக் கணக்கான பெண்களின் திட்டமிட்ட பாலியல் துஷ்பிரயோகம் உட்பட ஜப்பானிய இராணுவம் நடத்திய குறிப்பிட்ட குற்றங்கள் மற்றும் போருக்கான ஜப்பானின் பொறுப்பைத் தட்டிக்கழித்தது.

1930கள் மற்றும் 1940களில் "சர்வதேச ஒழுங்கமைப்பிற்கு சவால்விடுப்பாளராக" ஜப்பான் இருந்தது என்பதை ஒப்புக்கொண்ட வேளையில், சீனாவிற்கு எதிராக திருப்பிவிடப்பட்ட தற்போதைய அமெரிக்க மற்றும் ஜப்பானிய பிரச்சாரத்தை மீள்வலியுறுத்துவதற்கும் அதே வார்த்தை மிகக் கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது. சீனாவிற்கு எதிரான அதன் "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பின்" பாகமாக, ஒபாமா நிர்வாகம் "சர்வதேச ஒழுங்கமைப்பு விதிகளை" அதாவது, அமெரிக்க மேலாதிக்கத்தின் கீழ் போருக்குப் பின்னர் ஸ்தாபிக்கப்பட்ட ஒழுங்கமைப்பை பெய்ஜிங் பின்பற்றவில்லையென குற்றஞ்சாட்டி, அப்பிராந்தியம் முழுவதிலும் வேண்டுமென்றே பதட்டங்களைத் தூண்டிவிட்டுள்ளது.

சீனாவில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் (CCP) பிரதான ஊதுகுழல் Peoples Daily, அபேயின் உரை பொறுப்பற்று இருப்பதாக விமர்சித்தது. "இது நாள் வரையில், ஜப்பான் வெட்கக்கேடான அதன் கடந்தகாலத்துடன் தெளிவாக உடைத்துக் கொள்ளவில்லை," என்று அறிவித்தது. அரசுக்கு சொந்தமான Xinhua பத்திரிகை அபேயின் அறிக்கையை, "பலவீனமான" ஒன்றாக மற்றும் "சர்வசாதாரண வார்த்தைஜால நெளிவுசுளிவுகளைக்" கொண்ட ஒரு "பின்னோக்கிய திருப்பம்" என்பதாக வர்ணித்தது.

அந்த விமர்சனங்கள் ஒப்பீட்டளவில் பணிவடக்கத்தோடு இருந்தன, CCP தலைமை கிட்டத்தட்ட முழுமையாக அதன் முந்தைய சோசலிச மற்றும் ஏகாதிபத்திய-எதிர்ப்பு தொனிகளை விட்டுவிட்ட நிலையில், அதிகரித்துவரும் சமூக பதட்டங்களை வெளிநோக்கி திருப்பிவிடுவதற்காக, குறிப்பாக ஜப்பானுக்கு எதிராக நோக்கங்கொண்ட, சீன தேசியவாதத்தை முடுக்கிவிடுவதில் தங்கியுள்ளது. அது அந்நோக்கத்திற்காக, 1945 இல் USS மிசோரி போர் கப்பலைக் கண்டு ஜப்பான் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளிடம் உத்தியோகபூர்வமாக சரணடைந்ததற்கு அடுத்த நாளைக் குறிக்கும் செப்டம்பர் 3 நினைவுதினத்தை அந்நோக்கத்திற்காக பயன்படுத்தி வருகிறது.

ஆயிரக் கணக்கான துருப்புகளும், அத்துடன் டாங்கிகள் மற்றும் ஏவுகணைவீசிகள் மற்றும் இராணுவ விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களின் வான்வழி காட்சிகளை உள்ளடக்கிய ஓர் இராணுவ அணிவகுப்புக்கான ஒத்திகைகள் ஏற்கனவே நடந்து வருகின்றன. CCP அதிகாரத்துவத்தின் நம்பிக்கைகளைப் பிரதிபலிக்கும் வகையில், அரசால் நடத்தப்படும் போர்வெறி கொண்ட குளோபல் டைம்ஸ் குறிப்பிட்டது: "அது கண்களுக்கு விருந்தாக இருக்கும். மக்கள் அந்த அணிவகுப்பை உற்சாகத்துடன் எதிர்பார்க்கின்றனர்."

சீன கல்வியாளர் சாங் லுஜெங் கார்டியனுக்குக் தெரிவித்தார்: மேற்கு நிஜமான அரசியல் மற்றும் சர்வதேச உறவுகளின் முன்னோக்குகளிலிருந்து அந்த அணிவகுப்பை உணரத் துடிக்கிறது அந்த அணிவகுப்பின் முதல் நோக்கம், ஒரு மிகப்பெரிய விலை கொடுத்து பெற்ற ஒரு வெற்றிகரமான தேசமாக சீனாவின் அந்தஸ்தை உலகிற்கு நினைவூட்டுவதாகும்.

நிச்சயமாக விடயம் அவ்விதமானது தான், 1931 இல் ஜப்பானிய ஏகாதிபத்தியம் மஞ்சூரியாவைக் கைப்பற்றியதுடன், 1937 இல் சீனாவின் ஏனைய பகுதிகளின் மீது படையெடுத்தது, இதில் சீன மக்கள் கடுமையான துன்பங்கள் மற்றும் தொல்லைகளை அனுபவித்தனர். ஆகக்குறைந்தது 15 மில்லியன் சீன சிப்பாய்கள் மற்றும் பொதுமக்கள் போரில் உயிரிழந்தனர். ஆனால் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை, சீனாவின் பில்லியனர்கள் மற்றும் மில்லியனர்களின் ஒரு சிறிய பெரும்பணக்கார அடுக்கை பிரதிநிதித்துவம் செய்கிறது, கட்சி தலைமை அதன் சொந்த ஆட்சியைச் சட்டப்பூர்வமாக்கி வைக்கும் முயற்சியில் இத்தகைய கொடூர அனுபவங்களைச் சுரண்டுகிறது.

அரசியல் சட்டபூர்வதன்மைக்கான அந்த ஆட்சியின் மற்றுமொரு ஊன்றுகோல், அந்நாட்டின் உயர்ந்தளவிலான பொருளாதார வளர்ச்சியாகும், இது இப்போது சீனப் பங்குச்சந்தைகளின் கொந்தளிப்புக்கு இடையே வேகமாக மங்கி வருகிறது.

சீனாவின் உலகளாவிய மற்றும் பிராந்திய செல்வாக்கை பலவீனப்படுத்தும் நோக்கில், அத்துடன் இந்தோ-பசிபிக் முழுவதிலும் அமெரிக்க இராணுவ கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கான ஒரு நீடித்த அமெரிக்க இராஜாங்க மற்றும் பொருளாதார தாக்குதலாக, அமெரிக்காவின் "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பை" சீன அரசாங்கம் எதிர்கொள்கிறது. வாஷிங்டன் மற்றும் அதன் கூட்டாளிகளுடன் ஆயுத போட்டியில் ஈடுபடுவதும் மற்றும் உள்நாட்டில் அதன் சிறிய சமூக அடித்தளத்தைப் பலப்படுத்துவதற்கு வழிவகையாக ஜப்பானிய-விரோத பேரினவாதத்தை தூண்டிவிடுவதே சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் விடையிறுப்பாகி உள்ளது.

சீன தேசியவாதத்தில் புகலிடம் நாடுவதென்பது, சீன தொழிலாளர்களை ஜப்பான் மற்றும் சர்வதேசளவில் உள்ள அவர்களது வர்க்க சகோதர சகோதரிகளிடமிருந்து மட்டும் பிளவுபடுத்தவில்லை, மாறாக அது நேரடியாக அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் ஜப்பான் உள்ளடங்கிய அதன் கூட்டாளிகளின் கரங்களிலும் விளையாடுகிறது. ஜப்பானை மீள்ஆயுதமேந்த செய்வதை மற்றும் இராணுவத்திற்கு இருக்கும் சட்டரீதியிலான மற்றும் அரசியலமைப்புரீதியிலான தடைகளை முடிவுக்குக் கொண்டு வருவதை, அபே, சீன "அச்சுறுத்தல்" மீதான ஐய உணர்வை மற்றும் அச்சத்தைத் தூண்டிவிடுவதன் மூலமாக நியாயப்படுத்தி வருகிறார்.