சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Global Ponzi scheme threatens to implode

உலகளாவிய பொன்ஜி திட்டம் உள்வெடிப்புடன் அச்சுறுத்துகிறது

Andre Damon
24 August 2015

Use this version to printSend feedback

ஆசிய பங்குச்சந்தைகள் திங்களன்று மற்றொரு கூர்மையான விற்றுத்தள்ளலுடன் தொடங்கியது. இதை எழுதுகையில், சீனாவின் ஷாங்காய் காம்போசிட் குறியீடு 8 சதவீதத்திற்கு அதிகமாக சரிந்திருந்தது மற்றும் ஜப்பானின் நிக்கி, ஹாங்காங்கின் ஹாங் சென் மற்றும் ஆஸ்திரேலியாவின் ஆல் ஆர்டனரீஸ் குறியீடு ஆகிய அனைத்தும் 3 சதவீதத்திற்கு அதிகமாக வீழ்ந்திருந்தன. சீனாவின் மத்திய வங்கி அந்நாட்டின் நிதியியல் சந்தைகளுக்குள் பணம் உட்செலுத்தும் மற்றொரு சுற்றுக்குத் தயாராகி வருகிறது.

உலந்தழுவிய பதட்டம், இது அமெரிக்காவில் மட்டும் பங்கு மதிப்புகளில் ட்ரில்லியன் கணக்கான டாலர்களை அழித்துவிட்டுள்ள நிலையில், அமெரிக்காவும் உலக பொருளாதாரங்களும் ஒரு பொருளாதார மீட்சிக்கு மத்தியிலிருக்கின்றன என்ற வாதத்தை தகர்த்துவிடுகிறது.

வீழ்ச்சியடைந்துவரும் சீனப் பொருளாதார வளர்ச்சி, எழுச்சிபெற்றுவரும் சந்தைகள் என்றழைக்கப்பட்ட நாடுகளின் நிதியியல் சந்தைகள் மற்றும் செலாவணிகளில் பொறிவு, எண்ணெய் மற்றும் ஏனைய பண்டங்களில் தொடர்ச்சியான விலைவீழ்ச்சி, பங்கு விலைகளில் சரிவு என இவற்றால் எடுத்துக்காட்டப்படுவது வெறுமனே தற்காலிக நிலைமைகளின் ஒரு வெளிப்பாடல்ல. மாறாக 2008-2009 வோல் ஸ்ட்ரீட் பொறிவு மற்றும் மந்தநிலைமைக்கு இட்டுச் சென்ற, முதலாளித்துவ அமைப்புமுறையின் அடிப்படை முரண்பாடுகளை அரசாங்கங்களும் மத்திய வங்கிகளும் தீர்க்க இலாயக்கற்று இருப்பதன் ஒரு வெளிப்பாடாகும்.

என்ன முடிவுக்கு வருவதாக தெரிகிறதென்றால், சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கை தரங்கள் மீதான ஓர் ஈவிரக்கமற்ற தாக்குதலோடு இணைந்து மத்திய வங்கிகள் நிதியியல் சந்தைகளுக்குள் பாரியளவில் பணத்தை பாய்ச்சுகையில், நெருக்கடியின் அமைப்புரீதியிலான குணாம்சத்தை கடந்து சென்று, நிஜமான பொருளாதாரம் தேக்கமடைந்திருந்தாலும் கூட, பங்கு விலைகள், பெருநிறுவன இலாபங்கள் மற்றும் நிதியியல் பிரபுத்துவத்தின் செல்வவளத்தை அதிகரிக்க முடிந்திருந்த காலகட்டம் முடிவுக்கு வருவதாக தெரிகிறது.

ஞாயிறன்று ("முதலீட்டாளர்கள் உலகளாவிய பத்திரங்களது HYPERLINK "http://www.nytimes.com/2015/08/23/business/investors-race-to-escape-risk-in-once-booming-emerging-market-bonds.html?ref=business" அபாயத்திலிருந்து தப்பிக்க ஓடுகிறார்கள் என்ற) நியூ யோர்க் டைம்ஸில் பிரசுரமான ஒரு கட்டுரை, உலகளாவிய சந்தைகளின் நெருக்கடி சூழலுக்கு பின்னாலிருக்கும் ஒரு முக்கிய காரணியை வெளிச்சமிடுகிறது. பிளாக்ராக், பிரான்ங்க்ளின் டெம்ப்ளிடன் மற்றும் பிம்கோ உட்பட அமெரிக்காவை மையமாக கொண்ட மிகப்பெரிய பரஸ்பர பத்திர நிதியங்களில் சில எழுச்சிபெற்றுவரும் சந்தை அரசாங்க பத்திரங்களில் பாரியளவில் முதலீடு செய்திருந்தன, இவற்றின் மதிப்புகள் இப்போது பொறிந்து வருகிறது.

முதலீட்டாளர்கள் அவர்களது பணத்தைத் திருப்பியளிக்க கோரும் கோரிக்கைகளின் போது, இவற்றில் ஒரு நிறுவனமோ அல்லது பல நிறுவனங்களோ, அவற்றின் எழுச்சிபெற்றுவரும் சந்தை பத்திரங்களை விற்று இத்தகைய கோரிக்கைகளை பூர்த்தி செய்யவியலாமல் திவாலாகக்கூடிய நிஜமான சாத்தியக்கூறை அக்கட்டுரை உயர்த்துகிறது. அதுபோன்றவொரு சம்பவம், 2008 லெஹ்மன் பிரதர்ஸின் பொறிவை விட மோசமான ஒன்றாக இல்லையென்றாலும், அதனுடன் ஒப்பிடக்கூடியதாக இருக்கும்.

இத்தகைய அதிக அபாயகரமான பத்திரங்களில் பரஸ்பர பத்திர நிதியங்கள் பாரியளவில் முதலீடு செய்திருப்பது, பொருளாதார மீட்சி என்றழைக்கப்படுவதன் அடித்தளங்கள் இற்றுப்போயிருப்பதை மட்டுமல்ல, மாறாக உலக முதலாளித்துவ அமைப்புமுறையின் அடித்தளமே இற்றுப்போயிருப்பதை அடிக்கோடிடுகிறது. 2008-2009 பொருளாதார உடைவை முதலிடத்திலிருந்து தூண்டிவிட்ட, ஒட்டுண்ணித்தனம் மற்றும் ஊகவணிகத்தை தொடர்ந்ததும், அதிகரிக்க செய்ததுமே அதற்கு முதலாளித்துவ வர்க்கத்தினது விடையிறுப்பாக இருந்தது என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது.

இது உலக முதலாளித்துவத்தின் வழமையான செயல்முறையின் பலவீனம் மற்றும் சீரழிவை எடுத்துக்காட்டுகிறது. தொழிற்சாலைகள் மற்றும் சுரங்கங்கள் கட்டுவதற்கும், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திகளுக்கும், தொழிலாளர்களை வேலையில் அமர்த்துவதற்கும் மூலதனத்தை முதலீடு செய்வது, மற்றும் அவர்களை சுரண்டுவதிலிருந்து பெறப்பட்ட உபரி மதிப்பிலிருந்து இலாபங்களை உருவாக்குவது என எது வரலாற்றுரீதியில் வழமையான முறையாக கருதப்பட்டதோ, அது இப்போது நிதியியல் தில்லுமுல்லு மற்றும் நேரடியான மோசடியின் பல்வேறு வடிவங்களைக் கொண்டு முன்னொருபோதும் இல்லாதளவிற்கு, ஏறத்தாழ பெரும் இலாபங்களுக்கான ஒரு இடைவிடாத துடிப்பார்ந்த நாட்டத்தின் தற்காலிக துணைவிளைபொருளாக மாறியுள்ளது.

பழைய ஏகாதிபத்திய மையங்களில், குறிப்பாக அமெரிக்காவில், தொழில்துறை உள்கட்டமைப்பு பெரிதும் அழிக்கப்பட்டுள்ளது, நிதியியல் குமிழிகள் தோன்றுவதிலிருந்து உயர்ந்த இலாபங்களைப் பெறும் முனைப்பில், தொழிலாள வர்க்கத்தின் வேலைகள் மற்றும் வாழ்க்கை நிலைமைகள் சீரழிக்கப்பட்டுள்ளன. 2008 வோல் ஸ்ட்ரீட் பொறிவை அடுத்து, பங்குவிலைகளை சாதனையளவிற்கு உயர்த்துவதற்கும் மற்றும் எழுச்சிபெறும் சந்தை குமிழியை தோற்றுவிப்பதற்கும், அமெரிக்க ஆளும் வர்க்கம் மத்திய வங்கிகள் மூலமாக தோற்றப்பட்டாளவில் வட்டிகுறைந்த கடன்களை வரம்பின்றி வினியோகித்ததன் மூலமாக பாதை அமைத்தது. அதேவேளையில் தொழிலாளர்களது வேலைகள், ஊதியங்கள் மற்றும் நிலைமைகளை பாரிய வேலைவாய்ப்பின்மை மற்றும் சிக்கன கொள்கைகளுக்கான பாதையை திறந்துவிட்டது.

நடந்துகொண்டிருக்கும் "மீட்சி", ஒரு தேக்கமடைந்த நிஜமான பொருளாதாரம் மற்றும் முன்பினும் அதிகரித்துவரும் சமூக சமத்துவமின்மையில் தங்கியுள்ள ஒரு பிரமாண்டமான பொன்ஜி திட்டத்தின் குணாம்சத்தைக் கொண்டுள்ளது. இத்தகைய நிதியியல் சீட்டுக்கட்டு மாளிகை, பண்டங்களது விலைச் சரிவிலும் மற்றும் சீன வளர்ச்சிக்குறைவிலும், ஜப்பான், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் துவண்டுபோன வளர்ச்சி அல்லது ஒரேயடியான மந்தநிலையிலும் கூட மிக கூர்மையாக பிரதிபலிக்கின்ற, உலக பொருளாதார பணச்சுருக்க போக்குகளின் அதிகரிப்பால் பலவீனமடைந்து வருகிறது.

அந்நெருக்கடி அப்போது அதன் ஆரம்ப கட்டங்களில் இருந்தபோதே, ஜனவரி 2008 இல் உலக சோசலிச வலைத் தளம் குறிப்பிடுகையில், இந்நெருக்கடி வெறுமனே ஓர் தற்காலிக இடைமுறிவு அல்ல, மாறாக" முதலாளித்துவ அமைப்புமுறையின் "ஓர் ஆழ்ந்த அமைப்புரீதியிலான உருக்குலைவாகும்,” என்பதைக் குறிப்பிட்டது.

செப்டம்பர் 16, 2008 இல் லெஹ்மன் பிரதர்ஸின் பொறிவுக்கு அடுத்த நாள், அறிவித்தது: “அமெரிக்க மற்றும் உலக பொருளாதாரத்தில் ஒரு கடலளவிலான மாற்றம் கட்டவிழ்ந்து வருகிறது, அது 1930களின் பெருமந்தநிலைமைக்குப் பின்னர் கண்டிராத ஒரு பேரழிவுகரமான பரிமாணங்களை முன்னறிவிக்கிறது.”

அக்கட்டுரை தொடர்ந்து குறிப்பிட்டது: "இத்தகைய சம்பவங்கள் அமெரிக்க மற்றும் உலக முதலாளித்துவத்தின் வரலாற்று தோல்விக்கு அறிவிப்புபலகைகளாகும். தொழிலாள வர்க்கத்தை பொறுத்தவரையில், அவை அவர்களுக்கு வேலைவாய்ப்பின்மை, வறுமை, வீடற்ற நிலைமை மற்றும் சமூக அவலத்தின் வேகமான அதிகரிப்பைக் குறிக்கின்றன. அரசாங்கம், வோல் ஸ்ட்ரீட் மற்றும் இரண்டு அரசியல் கட்சிகளும் அவர்களது சொந்த பேராசை மற்றும் கையாளத்தனத்தினது விளைவுகளின் சுமையை நேரடியாக உழைக்கும் மக்கள் மீது சுமத்த முயலும்.”

இந்த பகுப்பாய்வு முற்றிலுமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஏழு ஆண்டுகளுக்கு பின்னர், அமெரிக்காவின் தொழிலாளர் சக்தியின் பங்களிப்பு விகிதம் நான்கு தசாப்தங்களுக்கு அண்மித்தளவில் மிகக் குறைவான மட்டத்திலுள்ளது, அதேபோல யூரோ பிரதேச பொருளாதார வெளியீடு அதன் 2008 மட்டத்திற்கும் கீழே உள்ளது.

இந்த நெருக்கடியோடு கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் அதிகமாக பின்பற்றப்பட்ட கொள்கைகளும் ஒன்று சேர்ந்துள்ளன. உலகின் பிரதான மத்திய வங்கிகள் பாரியளவிலான கடன் மட்டங்களை ஏற்றுக் கொண்டுள்ளன, இது ஒரு புதிய ஸ்தம்பிப்பிற்கு விடையிறுக்கும் அவற்றின் ஆற்றலை மட்டுப்படுத்துகின்றது. 2008 இல் ஒரு ட்ரில்லியன் டாலருக்கு குறைவாக இருந்த அமெரிக்க பெடரல் ரிசர்வின் இருப்புநிலை கணக்கு, இன்று 4 ட்ரில்லியனுக்கு அதிகமாக ஊதிப் பெருத்துள்ளது. பெடரலின் உச்சபட்ச வட்டி விகிதம் இன்றியமையா விதத்தில் பூஜ்ஜியத்தில் வைக்கப்பட்டுள்ளது, வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் வார்த்தைகளில் கூறுவதானால், இது ஒரு புதிய நிதியியல் நெருக்கடிக்கு விடையிறுக்க மத்திய வங்கிக்கு குறிப்பிடத்தக்களவில் மிகக்குறைந்த "தளவாடங்களையே" (ammo) தருகிறது.

உலக பொருளாதாரம் உயிர்காப்பு படகுகளில்லா ஒரு பெருங்கடல் கப்பலைப் போலுள்ளது,” என்று HSBC இன் மூத்த பொருளாதார நிபுணர் ஸ்டீபன் கிங் அவரது சமீபத்திய ஆய்வு குறிப்பொன்றில் தெரிவித்தார்.

முதலாளித்துவ ஆட்சியின் எல்லா அமைப்புகளும், மிக முக்கியமாக ஐரோப்பிய ஒன்றியமே, 2008க்குப் பிந்தைய காலத்தில் வேகமாக பலவீனப்பட்டுள்ளன. சீனத் தொழிலாளர்களது அதிகரித்துவரும் வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்ட அலைக்கு இடையே, பெய்ஜிங்கின் நிலைகுலைவு மற்றும் ஸ்திரமின்மையின் அறிகுறிகள், உலகின் ஆளும் வர்க்கங்கள் ஒரு மலிவு-தொழிலாளர் உற்பத்தி மையத்தை வழங்குவதற்காக மற்றும் உலகளாவிய வளர்ச்சியை அதிகரிப்பதற்காக எதை சார்ந்திருந்தனவோ அந்த ஆட்சி சிதறிவிடுமோ என்று அவர்களிடையே அச்சங்களைத் தூண்டியுள்ளது.

புதிய வீழ்ச்சியின் முன்னால் அரசாங்கங்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களின் குழப்பநிலை மற்றும் திவால்நிலை, வாரயிறுதியில் பைனான்சியல் டைம்ஸில் முன்னாள் கருவூலத்துறை செயலர் லாரன்ஸ் சம்மர்ஸால் ஒரு கட்டுரையில் தொகுத்தளிக்கப்பட்டது, அவர் பெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களை காலவரையின்றி பூஜ்ஜியத்திலேயே வைத்திருக்க அழைப்புவிடுத்தார்.

சம்மர்ஸ் பின்வருமாறு எழுதினார்: “திருப்தியான வளர்ச்சி, இதை எட்ட முடியுமானால், அதற்கு வரலாற்றுரீதியில் நாம் பொருளாதார நெருக்கடிகளின் போது மட்டுமே பார்த்துள்ள மிகக் குறைந்த வட்டிவிகிதங்கள் அவசியப்படுகின்றன. இதனால் தான் நீண்டகால பத்திர சந்தைகள், அடுத்த தசாப்தம் முழுவதிலும் தொழில்துறைமயப்பட்ட உலகில் நிஜமான வட்டிவிகிதங்களை பூஜ்ஜியத்திற்கு நெருக்கமாக இருக்குமாறு எதிர்பார்க்கப்படுகின்றன.”

பொருளாதார நெருக்கடியின் தீவிரப்பாடு ஆழ்ந்த சமூக போராட்டங்களுக்கு களம் அமைக்கிறது. தொழிலாள வர்க்கம் மீண்டும் பாரிய வறுமை மற்றும் தொழில்துறை அடிமைத்தன நிலைமைகளுக்கு திரும்புவதை ஏற்காது.

ஆனால் தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பு வெற்றி பெற வேண்டுமானால், அதுவொரு சோசலிச மற்றும் சர்வதேச வேலைத்திட்டத்துடன், ஒரு புரட்சிகர கட்சியின் தலைமையில் வழிநடத்தப்பட வேண்டும் என்பதையே இருபதாம் நூற்றாண்டின் ஒட்டுமொத்த வரலாறும் ரஷ்யாவில் 1917 இல் தொழிலாள வர்க்கத்தின் வெற்றி மற்றும் அதை தொடர்ந்து ஏற்பட்ட தோல்விகள் மற்றும் நடப்பு நூற்றாண்டில், எகிப்தில் இருந்து கிரீஸ் வரையில், இதுவரையிலான பாரிய போராட்டங்களின் ஆரம்ப விளைவுகளும் எடுத்துக்காட்டுகின்றன. இந்த தலைமையான நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவை கட்டியெழுப்புவது தான் உலக முதலாளித்துவ உடைவு முன்னிறுத்துகிற முக்கிய பணியாகும்