சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Pro-US UNP leader sworn in as new Sri Lankan prime minister

அமெரிக்க-சார்பு ஐ.தே.க. தலைவர் புதிய இலங்கை பிரதமராக பதவியேற்பு

By K. Ratnayake
22 August 2015

Use this version to printSend feedback

ஐக்கிய தேசியக் கட்சி (.தே..) தலைவர் ரணில் விக்கிரமசிங்க, நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இலங்கையின் புதிய பிரதமராக பதவிப் பிரமானம் செய்யப்பட்டார். ஒரு தீவிர அமெரிக்க ஆதரவாளரான விக்கிரமசிங்கவின் நியமனம், இலங்கை வெளியுறவு கொள்கையானது வாஷிங்டன் மற்றும் அதன் நட்பு நாடான இந்தியாவை நோக்கி ஆழமாக மாற்றம் எடுத்திருப்பதையும், அதே போல் கடுமையான சிக்கன நடவடிக்கைகளையும் சமிக்ஞை செய்துள்ளது.

.தே.. தலைமையிலான நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி (.தே.மு.) திங்கள் நடந்த பாராளுமன்ற தேர்தலில் 225 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மை பெறத்தவறி, 106 ஆசனங்களை வென்றது. வியாழக்கிழமை சிறிசேன தனது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை (ஸ்ரீ..சு..) நல்லாட்சிக்கான .தே.மு. உடன் ஒரு கூட்டணியில் சேர கட்டளையிடும் வரை விக்கிரமசிங்கவின் பதவியேற்பு தாமதமானது. அதன்படி, விக்கிரமசிங்க பதவியேற்ற பின்னர், ஸ்ரீ..சு..யின் பதில் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்க, .தே.. பொதுச் செயலாளர் கபீர் ஹஸிம் உடன் "தேசிய அரசாங்கம்" ஒன்றை ஸ்தாபிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவை வெளியேற்றி சிறிசேனவை நியமித்த ஜனவரி ஜனாதிபதி தேர்தலில், அமெரிக்காவின் ஒத்துழைப்பிலான ஆட்சி மாற்றத்தை திட்டமிட்டதில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்க குமாரதுங்கவுடன் விக்கிரமசிங்க ஒரு பங்காளி ஆவார். ஒரு போர் தயாரிப்பான, சீனாவிற்கு எதிரான அதன் "ஆசியாவில் முன்னிலை" திட்டத்தை முன்நகர்த்தும் ஒபாமா நிர்வாகம், பெய்ஜிங் உடனான இராஜபக்ஷவின் நெருக்கமான உறவுகளையிட்டு அதிக குரோதமாக இருந்தது.

விக்கிரமசிங்க, முன்னதாகவே கடந்த ஆண்டு மார்ச்சில் அமெரிக்க இராஜாங்க திணைக்கள அதிகாரிகளுக்கு சந்தித்ததுடன் பின்னர் கொழும்பில் அமெரிக்க இராஜதந்திரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளினதும் நிகழ்ச்சி நிரலில் இராஜபக்ஷவின் நீக்கம் முதன்மையாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை. இராஜபக்ஷவுக்கு எதிராகத் தேர்தலில் போட்டியிட ஸ்ரீ..சு.. செயலாளரும் சுகாதார அமைச்சருமாக இருந்த சிறிசேனவை வெளியில் எடுப்பதில், குமாரதுங்க கட்சிக்குள் தனக்கு இருந்த தொடர்புகளை பயன்படுத்தினார். மறுபக்கம் விக்கிரமசிங்க, பொது வேட்பாளராக சிறிசேன போட்டியிடுவதற்கு சம்மதித்தார். ஜனவரியில் வென்ற பின்னர், சிறிசேன .தே.. தலைவரை பிரதமராக நியமித்தார்.

இராஜபக்ஷவுக்கு எதிராக சூழ்ச்சிகள், சீனாவுடனான உறவுகள் வாஷிங்டனின் பதிலடியை தூண்டக் கூடும் என்று இலங்கை ஆளும் வர்க்கத்தின் கணிசமான பகுதியினர் கொண்டிருந்த அச்சத்தினால் இயக்கப்பட்டது. பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராஜபக்ஷவின் யுத்தத்தை அமெரிக்கா ஆதரித்த அதேவேளை, 2009ல் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர், பெய்ஜிங்கில் இருந்து தூர விலகுவதற்கு இராஜபக்ஷ மீது அழுத்தம் கொடுப்பதற்காக இலங்கை இராணுவம் மேற்கொண்ட போர்க்குற்றங்களை அது இழிந்த முறையில் சுரண்டிக்கொண்டது.

.நா. மனித உரிமைகள் சபை அறிக்கை ஒன்று, சிறிசேன தேர்வு செய்யப்பட்ட பின்னர் வாஷிங்டனின் வேண்டுகோளின் பேரில் ஒத்தி வைக்கப்பட்டதோடு அடுத்த மாதம் முன்வைக்கப்பட உள்ளது. மனித உரிமை மீறல் அட்டூழியங்களுக்கான ஆதராங்கள், பொருளாதார தடைகளை விதிப்பதற்கான சாக்குப் போக்காக பயன்படுத்தப்படக் கூடும். அத்துடன் இன்னமும் இராஜபக்ஷவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சுமத்த அதை சுரண்டிக்கொள்ள முடியும். இலங்கை, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஏற்றுமதி சந்தைகளில் பெரிதும் தங்கியுள்ளது
.

விக்கிரமசிங்க பதவிப் பிரமாணம் செய்திருந்தாலும், அமைச்சுப் பதவிகளுக்கான பேரம் பேசல்களால் அமைச்சரவை அமைப்பது அடுத்த வாரம் வரை தாமதிக்கும். ஸ்ரீ..சு..வுக்குள் இராஜபக்ஷ மற்றும் சிறிசேன ஆதரவாளர்கள் இடையே கசப்பான வேறுபாடுகள் உள்ளன. தேசிய ஐக்கிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாகக் கலந்துரையாட சிறிசேனவால் அழைக்கப்பட்ட ஸ்ரீ..சு.. பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தை இராஜபக்ஷ தவிர்த்துக்கொண்டார். அவரது ஆதரவாளர்கள் .தே.. சம்பந்தப்பட்ட எந்தவொரு கூட்டணிக்கும் எதிரானவர்களாக இருக்கின்றனர்.

இரு கட்சிகள் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தமாவது வாக்குறுதிகள் அடங்கிய ஒரு நீண்ட பட்டியலைக் கொண்டுள்ளதோடு அவை நிறைவேற்றப்படக் கூடியவை அல்ல. அவை பின்வருமாறு: பத்து லட்சம் தொழில்கை உருவாக்குதல், நுகர்வோரைப் பாதுகாக்க விலை ஒழுங்குகள், சமூகப் பிளவுகளை குறைக்க உயர்ந்த வருமானம், ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க புதிய சட்டங்கள், ஊழலை ஒழிக்க புதிய நிறுவனங்கள் மற்றும் சட்டங்கள், கல்வி மற்றும் சுகாதார செலவுகளை அதிகரிக்க மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 மற்றும் 3 சதவிகிதம் ஒதுக்கீடு மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் பெண் துஷ்பிரயோகத்தை தடுக்கும் நடவடிக்கைகள்.

இழிவான கொழும்பு அரசியலில் நீண்ட காலம் இருந்து வரும் பழக்கமான, ஒரு கட்சியில் இருந்து இன்னொன்றுக்கு தாவுவதை தடுப்பதில், கட்சி தலைமைகள் இடையே உடன்பாடு காணப்பட்டுள்ளமை ஒரு முக்கிய புள்ளியாகும். இது இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கும், அதைத் தொடர்வது பற்றி பின்னர் கலந்துரையாடப்படும்.

வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்த மற்றும் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க கொடுத்த வாக்குறுதிகள் முற்றிலும் போலியானவை. 1948ல் உத்தியோகபூர்வ சுதந்திரத்தில் இருந்து இலங்கையை ஆண்டு வந்துள்ள .தே..வும் ஸ்ரீ..சு..வும் தொழிலாள வர்க்கத்தின் மீதும் ஏழைகள் மீதும் ஈவிரக்கமற்ற தாக்குதலை தொடுப்பதில் நீண்ட சாதனை படைத்த பெருவணிகர்களின் கட்சிகளாகும்.

சர்வதேச நாணய நிதியம் (IMF) கோரும் கொடூரமான சிக்கன நடவடிக்கைகளை விக்கிரமசிங்க அரசாங்கம் அமுல்படுத்துகின்ற நிலையில், இந்த இரண்டு நீண்டகால போட்டியாளர்களும் முதல் முறையாக ஒன்றாக ஒரு ஐக்கிய முன்னணியை உருவாக்க முன்வந்துள்ளதன் உண்மையான நோக்கம், தொழிலாள வர்க்கத்திற்கு எதிரானதாகும்.

பொருளாதாரம் கணிசமானளவு கடன் சுமையில் பாதிக்கப்பட்டுள்ளதோடு உற்பத்தி பண்டங்களின் விலை வீழ்ச்சி மற்றும் ஏற்றுமதியிலான வீழ்ச்சியிலும் சிக்கிக்கொண்டுள்ளது. அந்நிய செலாவனி நெருக்கடி ஏற்படும் ஆபத்தை அடிக்கோடிட்டுக் காட்டிய மத்திய வங்கி, " ஏற்றுமதி விழ்ச்சியடைந்து, தேயிலை மற்றும் ஆடை ஏற்றுமதிகளிலான வருவாய் வீழ்ச்சயடைந்துள்ள அதே வேளை, இறக்குமதிகள் அதிகரித்துள்ளதனால் 2015 ஜூனில் வர்த்தகப் பற்றாக்குறை விரிவடைந்துள்ளது" என்று நேற்று அறிவித்தது.

கூட்டணியின் உண்மையான நோக்கத்தைக் கோடிட்டுக் காட்டி, ஸ்ரீ..சு.. செயலாளர் திசாநாயக்க கூறியதாவது: "இந்த சூழ்நிலையில், நாடு எதிர்கொள்ளும் சர்வதேச மற்றும் பொருளாதார சவால்களை சமாளிக்க ஒரு தேசிய ஐக்கிய அரசாங்கம் அவசியம் என்று ஜனாதிபதி [சிறிசேன] வலியுறுத்தினார்." தொழிலாளர்கள் மற்றும் வறியவர்களின் நலன்களை மேம்படுத்துவது அன்றி, சிக்கன நடவடிக்கைகளே அரசாங்கத்தின் பொன்மொழியாக இருக்கும்.

"பாசிச இராஜபக்ஷ ஆட்சிக்கு" எதிராக ஜனநாயகத்தின் பாதுகாவலர்களாக .தே..யையும் விக்கிரமசிங்கவையும் தூக்கிப் பிடித்தவர்கள்எல்லாவற்றுக்கும் மேலாக போலி இடது அமைப்புக்களான நவ சம சமாஜக் கட்சி மற்றும் ஐக்கிய சோசலிசக் கட்சியும்- அனைவரும், புதிய அரசாங்கம் தொழிலாள வர்க்கத்தின் மீது கட்டவிழ்த்துவிடும் தாக்குதல்களுக்கு அரசியல் ரீதியில் பொறுப்புச் சொல்ல வேண்டும்.

இராஜபக்ஷ போலவே, விக்கிரமசிங்கவும், உழைக்கும் மக்களுக்கு எதிரான கொடூரமான தாக்குதல்களுக்கு பொறுப்பான ஒரு நீண்டகால முதலாளித்துவ அரசியல்வாதி ஆவார். அவர் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்த்தனாவின் .தே.. அரசாங்கத்தில் இளைஞர் விவகார மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சராக தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். 1977ல் பதவியேற்ற அந்த அரசாங்கம், திறந்த சந்தை மறுசீரமைப்பை தீவிரமாக முன்னெடுத்தது. 1980ல், அது ஊதியம் மற்றும் நிலைமைகள் தொடர்பாக நடந்த ஒரு பொது வேலைநிறுத்தத்தை முறியடிக்க 100,000 தொழிலாளர்களை வேலைநீக்கம் செய்தது.

கல்வி அமைச்சராக இருந்த விக்கிரமசிங்க, கல்வி செலவுகளை வெட்டிக் குறைக்க அனுமதிக்கும் கல்வி தொடர்பான ஒரு வெள்ளை அறிக்கையை 1981ல் அறிமுகப்படுத்தினார்.

சமூகப் பதட்டங்கள் அதிகரித்த நிலையில், ஜயவர்த்தன அரசாங்கம் பிரிவினையான தமழிர்-விரோத இனவாதத்தை கிளறிவிட்டது. இது 1983ல் நாடளாவிய இனப் படுகொலையில் உச்சக் கட்டத்தை எட்டியதோடு நாட்டின் நீண்ட கால உள்நாட்டு யுத்தத்தை வெடிக்கச் செய்து நூறாயிரக்கணக்கான உயிர்களை காவுகொண்டது. 1980களின் பிற்பகுதியில், .தே.. அரசாங்கம் மக்கள் விடுதலை முன்னணிக்கு (ஜே.வி.பி) எதிராக, மிகப் பரந்தளவில் சிங்களம் கிராமப்புற இளைஞர்கள் மத்தியிலான ஜே.வி.பி.யின் சமூக அடித்தளத்துக்கு எதிராக இராணுவ ஆதரவு கொலைக் குழுக்கள் கட்டவிழ்த்து விட்டதுடன், 60,000 பேர் கொன்று குவிக்கப்பட்டனர்.

விக்கிரமசிங்க இந்த அனைத்து அரசாங்கங்களிலும் ஒரு அமைச்சராக இருந்ததோடு இந்த குற்றங்களுக்கு நேரடி பொறுப்பாளியாவார்.

2002ல் பிரதமராக இருந்த விக்கிரமசிங்க, உலக வங்கி ஒப்புதலுடன் புத்துயிர் பெறும் இலங்கை என்ற திட்டத்தை தொடங்கினார். இது நூறாயிரக்கணக்கான அராசங்க தொழில்களை வெட்டவும், கிராமப்புற விவசாயிகளுக்கானவை உட்பட விலை மானியங்களை வெட்டிக் குறைக்கவும், வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கு தாராளமாக சலுகைகளை அளிக்கவும் முன்மொழிந்தது. ஒரு நவீன "வர்த்தக மையமாக" கொழும்பை மாற்றும் அவரது அரசாங்கத்தின் திட்டங்களே இராஜபக்ஷ அரசாங்கத்தினால் கையாளப்பட்டது. இந்த நோக்கத்துக்கு வழி செய்வதற்காக இராஜபக்ஷ குடிசைவாசிகளை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தார்.

உலகப் பொருளாதார நெருக்கடி மோசமடைந்து வரும் நிலைமைகளின் கீழ், உழைக்கும் மக்கள் மீது புதிய சுமைகளை திணிப்பதில் புதிய .தே.. அரசாங்கம் இராஜபக்ஷ விட்ட இடத்திலிருந்து தொடங்கும்.

சோசலிச சமத்துவக் கட்சி (சோ..), அதன் தேர்தல் பிரச்சாரத்தின் போது விளக்கியது போல், சர்வதேச அளவில் சோசலிசத்திற்கான போராட்டத்தின் பாகமாக, சோசலிசக் கொள்கைகளை செயல்படுத்துவதற்கு ஒரு தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்துக்கான போராட்டத்தில் தொழிலாள வர்க்கம் முதலாளித்துவத்தின் ஒவ்வொரு பிரிவில் இருந்தும் பிரிந்து சுயாதீனமாக அணிதிரள்வதன் மூலம் மட்டுமே அதன் உரிமைகளை பாதுகாக்க முடியும்.