சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : கிரீஸ்

Greece’s Popular Unity: An attempt to create Syriza 2.0

கிரீஸின் மக்கள் ஐக்கியம்: சிரிசா 2.0 இனை உருவாக்கும் ஒரு முயற்சி

By Robert Stevens
26 August 2015

Use this version to printSend feedback

கிரேக்க ஆளும் உயரடுக்கு மற்றும் அதிக செல்வாக்குபெற்ற குட்டி-முதலாளித்துவ பிரிவினரை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு கட்சியாக இருந்து, சிரிசா, தொழிலாள வர்க்கத்தைக் காட்டிக்கொடுப்பதில் பாத்திரம் வகிக்குமென, அது பதவியேற்பதற்கு முன்னரே, உலக சோசலிச வலைத் தளம் கிரேக்க மற்றும் சர்வதேச தொழிலாளர்களை எச்சரித்தது. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் உலக முதலாளித்துவத்தின் ஏனைய அமைப்புகளிடம் அது மொத்தமாக சரணடைந்தமை, இந்த மதிப்பீட்டை முழுமையாக உறுதிப்படுத்தியது.

கிரேக்க தொழிலாள வர்க்கம் ஒரு பாரிய விலை செலுத்திய ஒரு அரசாங்கத்தில் பங்கெடுத்த வெறும் ஒருசில வாரங்களுக்குப் பின்னர், இப்போது, சிரிசாவின் இடது அரங்கம் (Left Platform) ஒரு புதிய கட்சியை ஸ்தாபித்துள்ளது.

கடந்த வாரம் வரையில் அது யாரை ஆதரித்ததோ, அந்த சிரிசாவின் திவாலான, முதலாளித்துவ-சார்பு முன்னோக்கை தொடர்ந்து பின்பற்றுவதே மக்கள் ஐக்கியத்தின் (Laïkí Enótita) பணியாகும். சிரிசாவின் மத்திய குழுவில் அங்கத்தவர்களாக இருக்கும் டஜன் கணக்கானவர்களையும் மற்றும் அதன் அரசியல் செயலகத்தின் 11 பதவிகளில் நான்கு இடங்களையும் கொண்ட ஒரு அணியால் அக்கட்சி தலைமை கொடுக்கப்படுகிறது. அதன் பிரதான தலைவர்களே வலதுசாரி சுதந்திர கிரேக்கர்கள் (Anel) உடனான சிரிசாவின் ஆளும் கூட்டணியில் மந்திரிப் பதவி வகித்தவர்களாவர்.

மக்கள் ஐக்கியத்தின் தலைவர் பனஜியோடிஸ் லவாஷானிஸ், இவர் முன்னதாக பிரதம மந்திரி அலெக்சிஸ் சிப்ராஸின் மந்திரிசபையில் எரிசக்தித்துறை மந்திரியாக இருந்துள்ளார். தேசிய பாதுகாப்புத்துறை முன்னாள் துணை மந்திரி கொஸ்ராஸ் லிசிசோஸ் மற்றும் சமூக பாதுகாப்பிற்கான துணை மந்திரி டிமிட்ரிஸ் ஸ்ராதோலிஸ் ஆகிய ஏனைய இடது அரங்க பிரமுகர்களும் இதில் உள்ளடங்குவர்.

உண்மையில் லவாஷானிஸ் கிரீஸின் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவிலும், அரசியல் செயலகத்திலும் ஓர் அங்கத்தவராவார். அவர் சோவியத் ஒன்றியத்தின் முதலாளித்துவ மீட்சி மற்றும் ரஷ்யாவிலும் கிழக்கு ஐரோப்பா எங்கிலும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட நாசகரமான "அதிர்ச்சி வைத்தியத்தை" அரவணைத்த ஒரு கட்சியான யூரோ-கம்யூனிஸ்ட் குழுவான Synaspismos உடன் இணைந்தார். அப்போதிருந்தே சிரிசாவிற்குள் அது பிரதான அணியாக இருந்து வருகிறது.

புதிய ஜனநாயகம்/Pasok கூட்டணியின் முன்னாள் அரசாங்கம் கையெழுத்திட்ட சிக்கன நடவடிக்கைகளின் பெருந்தொகுப்பை நடைமுறைப்படுத்த ஏற்கனவே பெப்ரவரியில் ஒப்புக் கொண்டிருந்த நிலையில், சிப்ராஸூம் நிதி மந்திரி யானிஸ் வாரௌஃபாகிஸூம் கிரீஸின் கடன்வழங்குனர்களுடன் பேரம்பேசி வந்தபோது, லவாஷானிஸ் மற்றும் இடது அரங்கம் அவருக்கு ஓர் "இடது" மூடுதிரையை வழங்கினர்.

சிரிசா அது வாக்குறுதி அளித்ததைப் போல, சிக்கனத்திட்டத்தை இல்லாதொழிக்கவில்லையே என மார்ச்சில் ஓர் இதழாளர் வினவியதற்கு லவாஷானிஸ் இவ்வாறு பதிலளித்தார்: “புரிந்துணர்வு மற்றும் அவற்றை நடைமுறைப்படுத்துவதை முழுமையாக கைவிடுவததற்கான எங்களின் கடமைப்பாடு இன்னமும் செல்தகமை கொண்டுள்ளது.” "வரவிருக்கும் சில மாதங்களில் முழுமையாக" அதற்கு "மதிப்பளிக்கப்படும்" என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

ஜூலை 5 வெகுஜன வாக்கெடுப்பில் சிக்கனத்திட்டத்திற்கு எதிராக பிரமாண்ட வாக்குகள் வந்த பின்னரும் கூட, சிரிசா வேகமாக முக்கூட்டு கோரிய மிக அழிவுகரமான வெட்டு திட்டங்களுக்கு ஒப்புக் கொண்டது. புதிய ஜனநாயகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை விட அதிகமானவற்றை நிராகரிப்பதற்கு இடது அரங்கம் உத்தியோகபூர்வமாக வாக்களித்தது, ஆனால் அது சிப்ராஸிற்கு அதன் விசுவாசத்தை சூளுரைத்து கொண்டே தான் அதை செய்தது. சிப்ராஸின் அரசாங்கம் உயிர்பிழைத்திருப்பதை உறுதிசெய்வதற்கு அவர்களது அங்கத்தவர்களில் யார் அந்த உடன்படிக்கைக்கு எதிராக வாக்களிக்க வேண்டும், யார் வாக்களிப்பைப் புறக்கணிக்க வேண்டும் என்று முடிவு செய்தது உட்பட அவர்களால் ஆனமட்டும் அனைத்தையும் செய்தனர்.

அவர்களது கோழைத்தனமான நடவடிக்கை இருந்தபோதினும் கூட, இம்மாதம் சிப்ராஸ் இடது அரங்கத்திற்கு எதிராக நகர்ந்தார். எதிர்பாரா பொது தேர்தல்களுக்கு வழிவகுத்து, அதற்கு முன்னதாகவே இடது அரங்கத்தின் ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்கக்கூடிய வகையில் அவர் இராஜினாமா செய்தார். அப்படி செய்தால் தான், அவர்களைப் பிடித்து வெளியில் தள்ளுவதற்கு முன்னரே, இடது அரங்கம் தானாகவே வெளியேறும் என அவர் கருதினார்.

சிரிசா வகித்த பாத்திரம் மற்றும் அதன் காட்டிக்கொடுப்பில் அவர்களும் சம்பந்தப்பட்டிருந்ததிலிருந்து தொழிலாள வர்க்கம் அவசியமான படிப்பினைகளை பெறுவதைத் தடுப்பதே மக்கள் ஐக்கியத்தின் பிரதான இலட்சியமாகும். மேற்கூறியதை எட்டுவதற்காக, ஆகஸ்ட் 20 இல் அவர்கள் அறிவித்தனர், அவரது தேர்தல் அறிவிப்புடன் சேர்ந்து, "சிரிசாவின் இதுவரையிலான பொறுப்புறுதிகள் மற்றும் போராட்டங்களுக்கு எதிராக முற்றிலும் தீவிரத்தோடு,” சிப்ராஸ் "மற்றொரு முகத்தைக் காட்டியுள்ளார்" — இது ஏதோ அவரது வாக்குறுதிகளை அவர் மீற மாட்டார் என்பதற்கு அதற்கு முன்னர் அறிகுறிகள் இருந்ததைப் போலல்லவா இருக்கிறது!

இடது அரங்கத்தின் முன்னணி அங்கத்தவர் ஸ்டாதிஸ் குவெலாகிஸ் முன்னதாக வலியுறுத்துகையில், சிப்ராஸின் நடவடிக்கைகளை ஒரு காட்டிக்கொடுப்பு என்று கூறுவது பொருத்தமானதல்ல என்றார். அதற்கு மாறாக, அது "இடது-ஐரோப்பியவாத" முன்னோக்கின் தோல்வியாம் ஒரு நல்ல ஐரோப்பியராகவே இருந்து கிரீஸின் ஆதாயத்திற்குரிய விட்டுக்கொடுப்புகளைப் பெற முடியுமென்ற நம்பிக்கையாக அதை அவர் விவரித்தார்.

இடது அரங்கம் மிகவும் கடுமையான தேசியவாத நிகழ்ச்சிநிரலை பரிந்துரைக்கிறது. யூரோவிலிருந்து வெளியேறி, முன்னாள் நாணயமான டிராஹ்மாவை மறுஅறிமுகம் செய்து மூலதன கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டியிருக்கலாம் என்பது உட்பட "மாற்று திட்டத்தை" (Plan B) நடைமுறைப்படுத்தும் அச்சுறுத்தலின் அடிப்படையில் விட்டுக்கொடுப்புகளைப் பேரம்பேசியிருக்க வேண்டுமென அது குறிப்பிடுகிறது.

இதுவொரு சிக்கன-எதிர்ப்பு நிகழ்ச்சிநிரல் அல்ல. யூரோ மண்டலத்திலிருந்து கிரீஸ் முதலாளித்துவ அடிப்படையில் வெளியேறுவது என்பது, அவ்வாறு நடந்தால் அது ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பதிலாக கிரேக்க முதலாளித்துவ வர்க்கம் சிக்கன நடவடிக்கையைத் திணிக்கும் என்பதையே அர்த்தப்படுத்தும்.

இதற்கு பதிலாக, கப்பல்துறை நிறுவனங்கள் மற்றும் சுற்றுலாதுறையின் வரி மானியங்களை வெட்டும் நடவடிக்கைகள் உட்பட தங்களது நலன்களைப் பாதிக்கும் கடுமையான நிபந்தனைகளை சிப்ராஸ் ஒப்புக்கொண்டு விட்டாரென நம்புகின்ற கிரேக்க முதலாளித்துவ வர்க்கத்தின் ஒரு கணிசமான பிரிவிடம் இடது அரங்கம் கோரிக்கைவிடுகின்றது. "தேசிய சுதந்திரம், இறையாண்மை, மறுகட்டுமானம் மற்றும் ஒரு புதிய முற்போக்கான போக்கின் ஒரு புதிய பாதையில்" அமைந்த ஒரு தேசியவாத, தன்னிறைவு பொருளாதார தீர்வை மக்கள் ஐக்கியம் அறிவுறுத்துகிறது.

முன்னதாக சிரிசாவிற்கு அவர்கள் வழங்கிய அதே பாத்திரத்தை மக்கள் ஐக்கியத்தின் அரசியல் அனுதாபிகளாக இருந்து ஆற்றுவதற்கு லவாஷானிஸ் மற்றும் மற்றவர்களும் போலி-இடது குழுக்களைச் சார்ந்துள்ளனர். சிரிசாவிலிருந்து அவர்கள் உடைத்துக் கொள்வதற்கு முன்னதாக, இடது அரங்கம் ஏற்கனவே 13 போலி-இடது குழுக்களின் பிரதிநிதிகளின் சேவைப்பட்டியலைப் பெற்றிருந்தது. அதில் இடது அரங்கத்தில் உள்ள சர்வதேச தொழிலாளர்களது இடது அணி (DEA) இன் அன்ரோனிஸ் டாவனேலோஸ் மற்றும் Xekinima போக்கின் அந்திரேயாஸ் பாகியாற்சோஸ் ஆகியோரும் உள்ளடங்குவர்.

அமெரிக்க சர்வதேச சோசலிச அமைப்புடன் DEA இணைப்பு பெற்றதாகும், அதேவேளையில் Xekinima சர்வதேச தொழிலாளர் குழுவில் இணைந்ததாகும். அவர்கள் போலி-இடது கூட்டணிக்குள் உள்ள சில அணிகளான அண்டார்ஸ்யாவின் (Antarsya) ஆதரவையும் பெற்றுள்ளனர். பப்லோவாத இதழான International Viewpoint, மக்கள் ஐக்கியம் மற்றும் குவெலாகிஸ் ஆல் பிரசுரிக்கப்பட்ட ஒவ்வொரு அறிக்கையையும் பிரசுரித்துள்ளது.

மக்கள் ஐக்கியம் ஸ்தாபிக்கப்பட்டதை அறிவித்த ஒருசில மணிநேரங்களுக்குள், லவாஷானிஸ், அவர் அலேகோஸ் அலவனோஸின் Plan B கட்சியுடன் ஒரு தேர்தல் உடன்படிக்கை கொண்டிருப்பதாக அறிவித்தார். அலவனோஸ் 2007 வரையில் சிரிசாவின் தலைவராக இருந்தவர். எவ்வாறிருப்பினும் மக்கள் ஐக்கியம் ஒரு பரந்த "சிக்கன-விரோத" முன்னணியை உருவாக்கும் அதன் நோக்கத்தில் "இடதை" மட்டுமே கொண்டிருக்காது என்பதை வலியுறுத்தி உள்ளது.

மக்கள் ஐக்கியம் பிறந்தது" என்ற ஆகஸ்ட் 21 ஆம் தேதி கட்டுரையில், குவெலாகிஸ் குறிப்பிடுகையில், அந்த இயக்கம் "கிரேக்க தீவிர இடதின் மறுகலவை….. ஆனால் முன்னணியின் இலட்சியம் அதை விட இன்னும் பரந்தது, அது தங்களைத் தாங்களே நிச்சயமாக இடதின் பாகமாக உணராத ஆனால் சிக்கனத்திட்டத்திற்கு எதிராக போராட விரும்புகின்ற…" சமூக சக்திகளுக்கு ஒரு வெளிப்பாட்டை வழங்கும் என்றார். [அழுத்தம் சேர்க்கப்பட்டது]

இதுவொன்றும் இடது அரங்கத்திற்கு அனுபவமற்ற புதியதொன்றல்ல. சுதந்திர கிரேக்கர் கட்சியில் ஒருசமயம் முன்னணி அங்கத்தவராக இருந்த ரசால் மாக்ரியும் சிரிசாவிலிருந்து வெளியேறிய பிரதிநிதிகளில் உள்ளடங்குவார், இவர் ஜனவரி தேர்தலுக்கு சற்று முன்னர் தான் சிரிசா வேட்பாளராக கையெழுத்திட்டிருந்தார்.

சுதந்திர கிரேக்கர்களுடன் ஒரு கூட்டணி அமைப்பதென்ற சிரிசாவின் முடிவை அங்கீகரிப்பதில் இடது அரங்கம் தான் மிகவும் உற்சாகமாக குரலெழுப்பியது. இடது அரங்கத்தின் Isychos, பாதுகாப்பு மந்திரியாக பாத்திரம் வகித்த சுதந்திர கிரேக்கர் கட்சி தலைவர் பேனொஸ் கமெனொஸ் க்கு துணை மந்திரியாக சேவையாற்றியவராவார்.

அதன் தாய் அமைப்பின் காட்டிக்கொடுப்புகளுக்கு ஒரு மாற்றீடாக காட்டிக்கொள்ளும் சிரிசாவின் இரண்டாம் பதிப்பான மக்கள் ஐக்கியத்தின் வாதங்களை கிரேக்க தொழிலாள வர்க்கம் நிராகரிக்க வேண்டும்.

என்ன அவசியப்படுகிறதென்றால், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஒரு கிரேக்க பிரிவாக ஒரு புதிய புரட்சிகர சோசலிச தலைமையைக் கட்டியெழுப்புவதாகும் இப்பணி உலக சோசலிச வலைத் தளத்தின் பக்கங்களில் உள்ள சிரிசாவிற்கு எதிரான அரசியல் எதிர்ப்பின் சக்திவாய்ந்த ஆவணங்களை உள்வாங்கிக் கொள்வதிலிருந்து தான் தொடங்குகிறது.