சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

No to German intervention in Syria!

சிரியாவில் ஜேர்மன் தலையீட்டை எதிர்ப்போம்!

Statement by the Partei für Soziale Gleichheit—German section of the ICFI
28 November 2015

Use this version to printSend feedback

சிரியா போரில் பங்குபற்றுவதென்ற ஜேர்மன் அரசாங்கத்தின் முடிவு, ஜேர்மன் இராணுவவாதத்தின் மீள்எழுச்சியில் ஒரு புதிய கட்டத்தைக் குறிக்கிறது. மக்களின் முதுகுக்குப் பின்னால் ஒரு இரத்தந்தோய்ந்த அபாயகரமான நடவடிக்கைக்கு தயாரிப்பு நடந்து வருகிறது.

வியாழனன்று மத்திய அரசாங்கம், ஆறு டோர்னாடொ போர்விமானங்கள், எரிபொருள் நிரப்பும் குறைந்தபட்சம் ஒரு போர்விமானம், ஒரு போர்க்கப்பல் மற்றும் செயற்கைக்கோள் உளவுவேலை ஆகியவற்றுடன் ISIS இன் (ஈராக் மற்றும் சிரியாவின் இஸ்லாமிக் அரசு) சிரிய நிலைகள் மீது குண்டுவீசி வரும் அமெரிக்க தலைமையிலான சர்வதேச இராணுவ கூட்டணியில் பங்குபற்றுவதற்கு உடன்பட்டது. கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம்/கிறிஸ்துவ சமூக ஒன்றியம் (CDU/CSU) இரண்டும், அத்துடன் சமூக ஜனநாயக கட்சியும் (SPD) இராணுவ நடவடிக்கையை ஆதரிப்பதால், அந்நகர்வு ஜேர்மன் நாடாளுமன்றத்தின் (Bundestag) ஒப்புதலைப் பெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

டோர்னாடொ போர்விமானங்கள் குண்டுகளைக் காவிச் செல்லாமல் உளவு வேலைகளுக்காக பயன்படுத்தப்படும் என்றாலும் கூட, தெளிவாக அதுவொரு போர் நடவடிக்கையே ஆகும். யூகோஸ்லாவியா போர் (1999) மற்றும் (2001 இல் இருந்து இன்றுவரை நடந்து வருகின்ற) ஆப்கானிஸ்தான் போரை அடுத்து, இரண்டாம் உலக போருக்குப் பிந்தைய ஜேர்மன் இராணுவ படை வரலாற்றில் இது மூன்றாவது போர் நடவடிக்கையாக உள்ளது.

டோர்னாடொக்களால் சேகரிக்கப்படும் அதி-துல்லிய புள்ளிவிபரங்கள் நேரடியாக கூட்டணியின் ஏனைய அங்கத்தவர்களுக்கு அனுப்பப்பட்டு, இலக்குகளை தேர்ந்தெடுக்கவும் மற்றும் தாக்கவும் பிரயோகிக்கப்படும். SPD இன் பாதுகாப்புத்துறை வல்லுனர் ரைய்னர் ஆர்னோல்ட் அந்நடவடிக்கையின் தன்மை குறித்து எவ்வித சந்தேகத்திற்கும் இடமளிக்காமல், அந்த உளவு விமானங்கள் "நடந்துவரும் சண்டைக்கு ஒரு பங்களிப்பாகும், இதைக் குறித்து நாம் எதையும் மூடி மறைக்க வேண்டியதில்லை,” என்றவர் தெரிவித்தார். “இலக்குகளை தேர்ந்தெடுக்கிறோமா அல்லது இலக்குகளை தாக்குகிறோமா என்பதில் தார்மீக அடிப்படையில் எந்த வித்தியாசமும் இல்லை" என்றார்.

உளவு விமானங்களை அனுப்பியமை வெறும் தொடக்கமேயாகும். ஜேர்மன் இராணுவம் (Bundeswehr) மீண்டுமொருமுறை போரில் இறங்குகிறது என்பதால், தரைப்படை துருப்புகளின் பிரயோகம் உட்பட அதிகளவில் ஈடுபடுவதற்கான கோரிக்கைகள் விரைவிலேயே பின்தொடரும்.

சமரசமற்ற சர்வதேச மோதல்களின் குவிமையமாக மாறியுள்ளதும், முதலாம் உலக போருக்கு முந்தைய பால்கன் மோதல்களைப் போன்றதுமான ஒரு போரில் ஜேர்மன் தலையிடுகிறது. மூன்றாண்டுகளுக்கும் மேலாக சிரியாவில் நடத்தப்பட்டு வரும் ஒரு "பினாமி போர்", "ரஷ்யா மற்றும் அமெரிக்காவிற்கு இடையே ஓர் ஆக்ரோஷ போராக மாறக்கூடும்,” என்று அக்டோபர் 18 இல் பழமைவாத நாளிதழ் Frankfurter Allgemeine Sonntagszeitung எழுதியது.

துருக்கிய போர்விமானங்களால் ஒரு ரஷ்ய போர்விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டமை, அதுவும் ஜனாதிபதி ஒபாமாவினால் அது பகிரங்கமாக பாதுகாக்கப்பட்டமை, இந்த அபாயத்தை உறுதிப்படுத்துகிறது. அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிற்கு இடையே பதட்டங்கள் தொடர்ந்து தீவிரமடையக்கூடும். இந்நிலையில் தான், அல்லது அனேகமாக துல்லியமாக இதனால் தானோ என்னவோ, ஜேர்மன் அரசாங்கம் போரில் பங்குபற்ற முடிவெடுத்துள்ளது.

சகல போர்களைப் போலவே, கூறப்படும் காரணங்களுக்கும் நிஜமான காரணங்களுக்கும் இடையிலான வேறுபாட்டை ஒருவர் வேறுபடுத்தி பார்க்க வேண்டும்.

இந்த இராணுவ தலையீடானது, உத்தியோகபூர்வமாக, பாரிஸ் தாக்குதல்களை அடுத்து பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்ட் இன் முறையீட்டின் பேரில் நியாயப்படுத்தப்பட்டு வருகிறது. ஜேர்மன் தலையீட்டின் நோக்கம் சர்வதேச பயங்கரவாதத்திற்கு எதிராக சண்டையிடுவதும் மற்றும் பயங்கரவாத போராளிகள் குழுவான ISIS தோற்கடிப்பதுமாகும் என்பதே உத்தியோகப்பூர்வ நியாயப்படுத்தலாக உள்ளது. ஆனால் யதார்த்தத்தில், மத்திய கிழக்கில் ஜேர்மன் இராணுவ தலையீட்டுக்கு பல ஆண்டுகளாக தயாரிப்பு செய்யப்பட்டுள்ளன. பாரிஸ் தாக்குதல்கள் கைவசமிருந்த திட்டங்களை நடைமுறைக்குக் கொண்டு வர போலிக்காரணத்தை மட்டுமே வழங்கி உள்ளன.

நான்கரை ஆண்டுகளுக்கு முன்னர் லிபிய போருக்குப் பின்னரில் இருந்து, ஊடக மற்றும் அரசியல் ஸ்தாபகத்தின் முன்னணி பிரபலங்கள் போரில் பங்குபற்றாமல் இருக்கும் ஜேர்மனியின் முடிவை ஒரு பிழையாக வாதிட்டு வந்தனர். சகல கட்சிகளிலிருந்தும் 50க்கும் அதிகமான முன்னணி அரசியல்வாதிகளும், இதழாளர்கள், கல்வித்துறையினர், இராணுவ மற்றும் வணிக தலைவர்களும் அரசு-ஆதரவு சிந்தனை குழாம் Stiftung Wissenschaft und Politik (SWP) இன் குடையின் கீழ் ஒரு புதிய வெளியுறவு கொள்கையை விவரித்தனர். இது, ஒரு "வர்த்தக மற்றும் ஏற்றுமதி நாடாக" விளங்கும் ஜேர்மனி, ஏறத்தாழ ஏனைய வேறெந்த நாட்டையும் விட அதிகமாகஏனைய சந்தைகள் மற்றும் சர்வதேச வர்த்தக பாதைகள் மற்றும் மூலப்பொருட்களின் தேவையைச்" சார்ந்திருப்பதால், அது அரசியல்ரீதியாகவும் மற்றும் இராணுவரீதியிலும் மீண்டுமொருமுறை சர்வதேச "தலைமையை" எடுக்க வேண்டுமென்ற முறையீட்டைக் கொண்டு வந்தது.

இந்த ஆவணத்தின்படி, ஜனாதிபதி ஜோஹாயிம் கௌவ்க், வெளியுறவு மந்திரி பிராங்க்-வால்டர் ஸ்ரைன்மையர் மற்றும் பாதுகாப்பு மந்திரி ஊர்சுலா வொன் டெர் லெயன் ஆகியோர் 2014 இன் தொடக்கத்தில் "இராணுவ தடைகளை முடிவுக்குக் கொண்டு வர" கோரினர். ஜேர்மனி "உலக அரசியலில் வெறுமனே ஒதுங்கியிருந்து கருத்து தெரிவிப்பதையும் விட மிக முக்கியமானது, “வெளியுறவு மற்றும் பாதுகாப்பு கொள்கை பிரச்சினைகளில் உடனடியாகவும் மற்றும் கணிசமானளவிற்கு அதிகமாகவும் ஈடுபட தயாரிப்பு செய்து கொள்ள வேண்டும்,” என்று அவர்கள் அறிவித்தனர்.

இப்போது, வணிக நாளிதழ் Handelsblatt க்கு வழங்கிய ஒரு பேட்டியில், வொன் டெர் லெயன் கடந்த ஆண்டு அவர் அபிவிருத்தி செய்த கருத்துருக்களின் அடித்தளத்தில் சிரியாவில் இராணுவ தலையீட்டை நியாயப்படுத்தினார். “2014 இளவேனிலில், தற்போதைய நிலைமையை யாராலும் முன்ஊகித்திருக்க முடியாது,” என்றவர் அறிவித்தார். “இருப்பினும், ஜனாதிபதியும், வெளியுறவுத்துறை மந்திரியும், நானும் ஏறத்தாழ ஒரே நேரத்தில் இந்த விவாதத்தைத் தொடங்கி வைத்தது நல்லதாய் போய்விட்டது: நாங்கள் அங்கே பிரச்சினைகளை விவாதித்து கண்ணோட்ட புள்ளிகளை அபிவிருத்தி செய்தோம், ஒரு சில மாதங்களுக்குப் பின்னர் எங்களால் நிஜமான நெருக்கடியைக் கருதிப் பார்க்க முடிந்தது.”

அத்தகைய "கண்ணோட்ட புள்ளிகள்" முதலில் உக்ரேனில் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டன, அங்கே ஜேர்மனி, அமெரிக்காவுடன் சேர்ந்து, ஒரு மேற்கு-ஆதரவிலான ஆட்சியை அதிகாரத்திற்குக் கொண்டு வந்த வலதுசாரி ஆட்சிக் கவிழ்ப்பு சதியை ஆதரித்தது. நேட்டோ மற்றும் ரஷ்யாவிற்கு இடையே ஒரு கூர்மையான மோதலைத் தூண்டிவிட்ட அது, இன்று வரையில் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

உக்ரேனிய நெருக்கடிக்கு இடையே, ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சி (PSG) மத்திய கிழக்கு மோதல் தீவிரமடைவதைக் குறித்து எச்சரித்தது. செப்டம்பர் 2014 இல் போருக்கு எதிராக சோசலிச சமத்துவக் கட்சியின் ஒரு சிறப்பு மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு தீர்மானம், பின்வருமாறு குறிப்பிடுகிறது: “அமெரிக்கா, கட்டார், சவூதி அரேபியா மற்றும் துருக்கியால் ஆதரிக்கப்பட்டு உருவாக்கப்பட்ட பயங்கரவாத போராளிகள் குழு இஸ்லாமிய அரசுக்கு (IS) எதிராக போராடுவது என்ற சாக்கில், அந்த மூலப்பொருள் வளம் நிறைந்த அப்பிராந்தியத்தைக் கூடுதலாக வன்முறைரீதியில் பங்கீடு செய்ய தொடங்கியுள்ளமை, ஈராக், லிபியா மற்றும் சிரியாவின் முந்தைய போர்களை விட இன்னும் அதிக இரத்தந்தோய்ந்த போர்களுக்கு அச்சுறுத்துகிறது.”

இதற்கிடையே, சிரியா, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானின் பெரும் பகுதிகள் அழிக்கப்பட்டுள்ளன. மில்லியன் கணக்கான மக்கள் அண்டைநாடுகளுக்கும் மற்றும் ஐரோப்பாவிற்கும் தப்பியோடியுள்ளனர். ஒட்டுமொத்த பகுதியும் மிகப் பெரிய வெடிப்பார்ந்த வெடிஉலையாக மாறியுள்ளது, இதில் சர்வதேச மற்றும் பிராந்திய சக்திகள் ஒன்றுக்கொன்று முரண்பாடான நலன்களைப் பின்தொடர்கின்றன. அமெரிக்கா, ரஷ்யா, துருக்கி, பிரான்ஸ், பல அரேபிய நாடுகளும் மற்றும் விரைவிலேயே இங்கிலாந்தும் சிரியா மற்றும் ஈராக்கின் இலக்குகள் மீது குண்டுவீசுகின்றன மற்றும் உள்நாட்டு போராளிகள் குழுக்களை ஆயுதமேந்த செய்கின்றன.

இந்த ஒன்றுக்கொன்று முரண்பாடான நலன்கள் ஆழமாக சிக்கலாகவும் மற்றும் முரண்பட்டும் உள்ளன. உண்மையில், ஒவ்வொரு நாட்டிற்குள்ளும் அங்கே சர்வதேச கொள்கை விவகாரத்தில் கசப்பான கருத்துவேறுபாடுகள் உள்ளன. ஆனால் சிரியா மீதான மோதலின் பிரதான போக்கு பின்வருமாறு உள்ளது: அசாத் ஆட்சி அதன் சொந்த இராணுவத்தைச் சார்ந்து மட்டுமின்றி, மாறாக ஈரானிய போராளிகள் குழுக்கள் மற்றும் லெபனிய ஹெஸ்புல்லாவையும் சார்ந்துள்ள நிலையில், அதை அமெரிக்கா தூக்கியெறிய விரும்புகிறது. ரஷ்யாவோ, அசாத் ஆட்சியைப் பாதுகாப்பதுடன், அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளால் ஆதரிக்கப்படும் அல்-நுஸ்ரா முன்னணி, சிரியா பிரிவான அல்-கொய்தா உட்பட அசாத் எதிர்ப்பாளர்கள் மீது குண்டுவீசுகிறது.

ஜேர்மனியும் பிரான்சும் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவை, மற்றும் சில உள்நாட்டு விரோதிகளையும், விவாத மேடைக்குக் கொண்டு வர முயன்று வருகின்றன, ஏனென்றால் அசாத் ஆட்சி கட்டுப்பாடின்றி பொறிந்தால் அது இன்னும் மில்லியன் கணக்கான அகதிகளை ஐரோப்பாவிற்குக் கொண்டு வரும் என்பதுடன், சிரியாவை ஒரு நிரந்தர உள்நாட்டு போருக்குள் மூழ்கடிக்குமென அஞ்சுகின்றன. இருந்தாலும் கூட அவர்கள் அப்போரைத் தீவிரப்படுத்துவதன் மூலமாக இன்னும் நிலைமையை மோசமாக்குகின்றன. ரஷ்ய போர்விமானத்தை துருக்கி சுட்டுவீழ்த்தியமை பிரான்கோ-ஜேர்மனியின் இந்த திட்டங்களுக்கு முட்டுக்கட்டையாக சேவையாற்றியது.

அமெரிக்காவை போலவே, துருக்கியும் அசாத் ஆட்சியைத் தூக்கியெறிய விரும்புகிறது, ஆனால் அது அதேநேரத்தில், அமெரிக்கா மற்றும் ஜேர்மனி இரண்டும் பயிற்சியளித்து, ஆயுதமளித்துவரும் துருக்கியர்கள் பலப்படுவதைத் தடுக்கவும் விரும்புகிறது. ஜேர்மனி, இதற்கு பதிலாக, ஐரோப்பிய ஒன்றியத்தையே உடைக்க அச்சுறுத்தும் வகையில் ஐரோப்பாவிற்குள் அகதிகள் பெருக்கெடுத்து வருவதைத் தடுக்க துருக்கியின் ஆதரவை நாடுகிறது.

வல்லரசுகளின் மிக ஆக்ரோஷமான மூர்க்கத்தனம், மிகவும் சிக்கலான மற்றும் அபாயகரமான நிலைமையாகும். நெப்போலியன் ஒருசமயம் அறிவிக்கையில், “சண்டையில் இறங்குவோம் பின்னர், என்ன நடக்குதென பார்ப்போம்” (On s’engage et puis on voit) என்றார். இது, மத்திய கிழக்கில், "ஒவ்வொன்றையும் தூள்தூளாக்க குண்டுவீசிய பின்னர், என்ன வெளிப்படுகின்றது என பார்க்கலாம்,” என்பதே குறிக்கோளாக இருப்பதாக தெரிகிறது.

அதிகரித்தளவில் பிரமாண்ட இராணுவ தளவாடங்கள் நிலைநிறுத்தப்பட்டு வருகின்ற அதேவேளையில், அந்த போர்வெறியர்களில் எவருக்குமே அம்மோதலை எவ்வாறு முடிவுக்குக் கொண்டு வருவது என்பதைக் குறித்து எந்த யோசனையும் இல்லை. இது ஊடகங்களின் பல விமர்சகர்களுக்குத் தெளிவாக தெரிகிறது. சான்றாக, Frankfurter Allgemeine Zeitung வியாழனன்று கருத்துரைக்கையில், ISIS கடுமையாக தாக்க சிரியாவைச் சுற்றி போதுமானளவிற்கு இராணுவ தளவாடங்கள் இருக்குமாறு செய்யப்படும் என்று கருத்துரைத்தது. “ஆனால் ஒன்றுதிரட்டிய இராணுவ பலத்தை எந்த நோக்கத்திற்காக பயன்படுத்துவது என்பதில் அங்கே உள்ள பல போர்வெறியர்களிடையே ஒற்றுமை இல்லை. ISIS மீதான 'வெற்றிக்குப்' பின்னர் என்ன நடக்கும்?”

மத்திய கிழக்கு போரைத் தீவிரப்படுத்துவதன் மூலமாக, அமெரிக்கா, ஜேர்மனி மற்றும் ஏனைய பிரதான சக்திகள் முதலாளித்துவ அமைப்புமுறையின் ஆழ்ந்த நெருக்கடிக்குப் பிரதிபலிப்பு காட்டி வருகின்றன. “வெடிப்பார்ந்த சமூக பதட்டங்கள், ஆழ்ந்த பொருளாதார நெருக்கடி மற்றும் ஐரோப்பிய அதிகாரங்களுக்கு இடையே அதிகரித்துவரும் மோதல்களுக்கு இராணுவவாதத்தைப் புதுப்பிப்பதே ஆளும் வர்க்கத்தின் விடையிறுப்பாக உள்ளது,” இதை மேலே குறிப்பிட்ட தீர்மானத்தில் நாம் எழுதினோம். “ஜேர்மன் பொருளாதாரம் ஏற்றுமதிக்காக சார்ந்துள்ள புதிய அதிகார எல்லைகளை, சந்தைகளை மற்றும் மூலப்பொருட்களை அடிமைப்படுத்துவதும்மற்றும் அனைத்தையும் தழுவிய தேசிய உளவுபார்ப்பு எந்திரத்தை அபிவிருத்தி செய்வது, சமூக மற்றும் அரசியல் எதிர்ப்பை ஒடுக்குவது, ஊடகங்களை அதன் வழிக்குக் கொண்டு வருவது உள்ளடங்கலாக ஒட்டுமொத்தமாக சமூகத்தையும் இராணுவமயப்படுத்துவது அதன் நோக்கமாகும்.”

ஏகாதிபத்தியத்தின் பொருளாதார மற்றும் அரசியல் தர்க்கம் முன்பினும் பரந்த மற்றும் அதிக பேரழிவுகரமான மோதல்களுக்கு இட்டுச் செல்கிறது. தேசிய தலைவர்கள் மோதல்களின் அளவை மட்டுப்படுத்த நினைத்தாலும் கூட, பதட்டங்களின் தீவிரப்பாடு முன்அனுமானிக்கவியலாத அல்லது கட்டுப்படுத்தவியலாத விளைவுகளைக் கொண்டுள்ளது. இத்தகையவொரு சூழலில், தொழிலாள வர்க்கமும் மற்றும் அதன் முன்னணி படையும், அரசியல் சுயதிருப்திஅதாவது, ஒரு பகுத்தறிவற்ற அமைப்புமுறையில் "பகுத்தறிவு மேலோங்கும்" என்று நம்பிக்கைவைக்க முடியாது.

ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தை ஒன்றுதிரட்டும் ஒரு சர்வதேச போர் எதிர்ப்பு இயக்கத்தால் மட்டுமே, இம்முறை அணுஆயுதங்களுடன் கூடிய, மத்திய கிழக்கிலும் உலகின் ஏனைய பகுதிகளிலும் வடிவெடுக்க தொடங்கியுள்ள ஒரு மூன்றாம் உலக போரின் அபாயத்தைத் தடுக்க முடியும். போருக்கு எதிரான போராட்டம் மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டம் என்பது ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்கவியலாததாகும்.