சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The police crackdown in Paris and the drift towards dictatorship in France

பாரிஸில் போலிஸ் ஒடுக்குமுறையும் பிரான்சில் சர்வாதிகாரத்தை நோக்கிய சாய்வும்

Alex Lantier
30 November 2015

Use this version to printSend feedback

130 பேர் கொல்லப்படுவதற்கும் பாரிஸில் குடியரசு சதுக்கத்தைச் சுற்றிய பெரும் பகுதிகள் மூடப்படுவதற்கும் இட்டுச் சென்ற நவம்பர் 13 பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்து இரண்டே வாரங்களின் பின்னர், நேற்று, நகரின் வீதிகளில் மீண்டும் வன்முறை வெடித்தது. பிரான்ஸ் எங்கிலும் 120,000 படைவீரர்களும் மற்றும் போலிஸ் படைகளும் நிறுத்தப்பட்டுள்ள நிலையிலும், அத்துடன் பாரிஸின் பிரதான உட்பகுதிகளில் மட்டும் 6,300 போலிசாரும் மற்றும் துணைராணுவ கலகத் தடுப்பு போலிஸ் படைகளும் குவிக்கப்பட்டுள்ள நிலையிலும், குடியரசு சதுக்கமானது ஒரு பாரிய போலிஸ் சுற்றிவளைப்பினால் மீண்டும் முடக்கப்பட்டுள்ளது.

ஆயினும், நவம்பர் 13 தாக்குதல்களுக்கு பின்னர் ஜனாதிபதி ிரான்சுவா ஹாலண்டின் சோசலிஸ்ட் கட்சி அரசாங்கத்தினால் திணிக்கப்பட்ட அவசரகாலநிலையின் கீழ் நடத்தப்பட்ட இந்த படையமர்த்தத்தில் குறிவைக்கப்பட்டது, ISISக்கு விசுவாசமான போராளிகளின் ஒரு குழு அல்ல. மாறாக பாரிஸில் இன்று தொடங்குகின்ற COP-21 சுற்றுச்சூழல் உச்சிமாநாட்டுக்கு எதிராய் சுற்றுச்சூழல் குழுக்கள் நடத்துகின்ற உள்நாட்டிலான ஒரு சமூக ஆர்ப்பாட்டம் ஆகும்.

வசரகாலநிலையானது மூன்று மாதங்களுக்கு பொது எதிர்ப்பின் அத்தனை வடிவங்களையும் தடைசெய்கிறது. பல்லாயிரம் பேர் கொண்ட ஒரு கூட்டத்தின் மீது ஒரு கொடூரமான தாக்குதல்களை அரங்கேற்றுவதற்கு போலிஸ் இந்தத் தடையை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டது. நவம்பர் 13 தாக்குதல்களில் பலியானவர்களுக்காக  விழிப்புகள் மற்றும் தேசிய ஒற்றுமைக்கான உத்தியோகபூர்வ விண்ணப்பங்களை கண்டிருந்த குடியரசு சதுக்கமானது கண்ணீர்புகையால் நிரப்பப்பட்டது, அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்களின் மீது போலிஸ் இரப்பர் குண்டுகளால் சுட்டது.

80 ுகமூடி அணிந்த ஆர்ப்பாட்டக்காரர்களின் குழு ஒன்று நடத்திய வன்முறையை காரணமாகக் காட்டி, போலிஸ் 289 ஆர்ப்பாட்டக்காரர்களை கைதுசெய்தது, 174 பேரை காவலில் வைத்தது.

ஆர்ப்பாட்டங்களுக்கு முன்னரேயே, போலிஸ் தமது அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்தி, 20 க்கும் அதிகமான சூழலியல் செயல்பாட்டாளர்களை விசாரணையற்ற வீட்டுக்காவலில் வைத்தது. நவம்பர் 13க்குப் பின்னர் பிரான்ஸ் எங்கும் நடத்தப்பட்ட ஒரு பரந்த ஒடுக்குமுறையில், அடையாளம் காணப்படாத 100க்கும் அதிகமானோர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டதன் ஒரு பகுதியாக இது இருந்தது.

ஆர்ப்பாட்டங்கள் மீதான ஒடுக்குமுறையானது, அரசு மக்களை பரந்த பீதிக்குள்ளாக்குவதுடன் கைகோர்த்து நடக்கின்றது. வீதிகளில் போகும் எவரொருவரும் கவச உடையணிந்து துப்பாக்கிசகிதமான மனிதர்களை எதிரில் காண்பது சர்வசாதாரணமாக நிகழ்வாகி இருக்கிறது.

முதலாளிகள், வேலையிடங்களை கண்காணிப்பதற்கும்தீவிரமயப்பட்டதொழிலாளிகளை போலிசிடம் புகாரளிப்பதற்கும் வசரகாலநிலையை பயன்படுத்திக் கொள்ள, வணிகக் குழுக்கள் ஏற்கனவே அழைப்பு விடுத்திருக்கின்றன.

2001 தொடங்கிபயங்கரவாதத்தின் மீதான போர்என்ற பெயரின் கீழ் சர்வதேச அளவில் அமல்படுத்தப்பட்டு வருகின்ற போலிஸ்-அரசு நடவடிக்கைகள், ஜனநாயகத்தின் ஒரு அடிப்படையான நிலைமுறிவின் வெளிப்பாடாய் இருந்தது என்பதை உலக சோசலிச வலைத் தளம் தொடர்ந்து எச்சரித்து வந்திருக்கிறது. இவையெல்லாம் வெற்று வார்த்தைகள் என்று எண்ணிய எவரொருவரும் நவம்பர் 13 பயங்கரவாத தாக்குதல்களுக்கு பின்னர், பிரான்சில் நடந்து வருபவற்றை ஆய்வு செய்வது அவசியமாகும்.

ிடயங்களை அவற்றின் உரிய பெயரில்தான் ஒருவர் அழைத்தாக வேண்டும்: பிரான்சில் ஸ்தாபிக்கப்பட்டுக் கொண்டிருப்பது ஒரு போலிஸ்-அரசு சர்வாதிகாரம் ஆகும். நவம்பர் 13 தாக்குதல்களை நடத்திய ஒரு சிலரது நடவடிக்கைகளைக் காரணமாக்கி, சமூக எதிர்ப்பு என்பதே ஏறக்குறைய தடைசெய்யப்பட்டதாகி விட்டிருக்கிறது; தேடல்களை நடத்துவதற்கும் பறிமுதல் செய்வதற்கும் போலிஸ் தன்னிச்சையான அதிகாரங்களைப் பெற்றிருக்கிறது, தனிநபர்களை கைதுசெய்வதற்கும் அமைப்புகளை கலைப்பதற்குமான பிரம்மாண்டமான அதிகாரங்களை அரசு தனக்குத்தானே கையளித்துக் கொள்கிறது. மேலும், ஒரு அரசியல் யாப்பு திருத்தத்தை நிறைவேற்றுவதன் மூலமாக இந்த நிலவரத்தினை நிரந்தரமாக்க PS நோக்கம் கொள்கிறது.

ுதலாளித்துவ அரசியல் ஸ்தாபகத்தின் பல-கட்சி ஒழுங்கமைப்போ, அத்துடன், இப்போதைக்கேனும் வழக்கமான தேர்தல் சம்பிரதாயங்கள் பராமரிக்கப்படுவதோ, பிரான்சை ஒரு போலிஸ் அரசாக மாற்றுவதற்கு முட்டுக்கட்டையாக இருக்கவில்லை. அவசரகாலநிலைக்கும் சிரியாவில் குண்டுவீச்சு நடவடிக்கையை தீவிரப்படுத்துவதற்கும் பிரெஞ்சு தேசிய பாராளுமன்றத்தில் ஏறக்குறைய ஏகமனதான வாக்குகள் கிட்டியமை எடுத்துக்காட்டுவதைப் போல, இந்த கொள்கைகள் அரசின் அத்தனை ஸ்தாபனங்களின் ஆதரவையும் மற்றும் பெயரளவிலானஇடதுஅமைப்புகள் உள்ளிட்ட அத்தனை அரசியல் கட்சிகளின் ஆதரவையும் பெற்றிருக்கின்றன.

தேபோல பிரான்சில் எதேச்சாதிகார ஆட்சியை நோக்கிய சாய்வு வேகம்பெற்றிருப்பதற்கு சர்வதேச அளவில் ஆளும் ஸ்தாபகங்களில் இருந்து எந்த விமர்சனமும் எழவில்லை. மாறாக அமெரிக்கா, தேசிய பாதுகாப்பு முகமையை (NSA) அமெரிக்க மக்களை நோக்கி திருப்புகிறது, ஜேர்மனியும் ஜப்பானும் மக்கள் எதிர்ப்புக்கிடையே தமது வெளியுறவுக் கொள்கையை மீண்டும் இராணுவமயமாக்கிக் கொண்டிருக்கின்றன. அத்தனை பிரதான ஏகாதிபத்திய சக்திகளும், பிரான்சின் நிகழ்வுகளை கண்காணித்து, இந்த நடவடிக்கைகளது தங்களது பதிப்புகளுக்காய் தயாரிப்பு செய்து கொண்டிருக்கின்றன

ந்த அரசியல் நெருக்கடியானது, முதலாளித்துவ வர்க்கத்தில் முதலாளித்துவ ஜனநாயகத்திற்கான எந்த தனியிடமும் இருக்கவில்லை என்பதையே தோலுரித்துக் காட்டிக் கொண்டிருக்கிறது. ஜனநாயக உரிமைகளின் மீதான PS இன் தாக்குதலுக்குப் பின்னால் உந்துசக்தியாக இருப்பது, சிரியாவின் இஸ்லாமிய எதிர்ப்புப் படைகளின் - எப்படிப் பார்த்தாலும் அவை, சிரிய ஜனாதிபதி பஷார் அல்-அசாத்திற்கு எதிரான ஏகாதிபத்திய சக்திகளது ஆட்சி மாற்ற திட்டநிரலுக்கே சேவை செய்து வருபவை ஆகும் - பயங்கரவாதத் தாக்குதல்கள் அல்ல

ாறாக, பெரும்செல்வத்தில் கொழிக்கும் நிதிப் பிரபுத்துவத்திற்கும், நாளுக்குநாள் அதிகரித்துச் செல்லும் சுரண்டலுக்கும் வறுமைப்படலுக்கும் இலக்காகும் பரந்த உழைக்கும் மக்களுக்கும் இடையிலான அதீத சமூகத் துருவப்படுத்தலே அந்த உந்துசக்தியாக இருக்கிறது. 1930களுக்குப் பிந்தைய காலத்தின் மிகப்பெரும் அழிவுகரமான உலக முதலாளித்துவ நெருக்கடியின் ஏழு ஆண்டு காலத்தில் பின்பற்றப்பட்ட சிக்கன நடவடிக்கை கொள்கைகள் பத்துமில்லியன்கணக்கான மக்களை வேலைவாய்ப்பின்மைக்குள் தள்ளியிருப்பதோடு ஐரோப்பாவெங்கிலும் அடிப்படையான சமூக வேலைத்திட்டங்களை தகர்த்தெறிந்திருக்கிறது.

ாரிஸ் தாக்குதல்களுக்கு ஒரு மாதம் முன்பாகத் தான், பெரும் வேலையிழப்புகளை திட்டமிட்ட ஏர் பிரான்ஸ் அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகளை எதிர்த்து நின்ற ஏர் பிரான்ஸ் தொழிலாளர்கள் ஏர் பிரான்ஸ் அதிகாரிகள் இருவரது சட்டைகளைக் கிழித்தனர். பிரான்ஸ் மற்றும் ஐரோப்பாவெங்கிலும் தொழிலாளர்களிடையே பரந்த ஆதரவைப் பெற்ற இந்த செயல், பிரெஞ்சு முதலாளித்துவத்தினை திடுக்கிடச் செய்ததோடு அதற்கு திகிலூட்டியதாகவும் இருந்தது.

ரந்த பெரும்பான்மை மக்களின் மனோநிலைகளை வெறுப்புடனும் அச்சத்துடனும் கண்ணுறும் அரசியல் ஸ்தாபகத்திற்குள், சிக்கன நடவடிக்கை மற்றும் ஏகாதிபத்திய போருக்கு எதிரான பரந்த மக்களின் எதிர்ப்பானது எந்த வெளிப்பாடையும் காண இயலாதிருக்கிறது. இந்த நிலைமைகளின் கீழ், முதலாளித்துவ ஜனநாயகத்திற்கான சமூக அடிப்படை உருக்குலைந்து கொண்டிருக்கிறது. இந்த நிகழ்முறையின் அரசியல் இயக்கவியலானது, எட்டு தசாப்தங்களுக்கு முன்பாக, ஐரோப்பிய பாசிசத்தின் எழுச்சியின் சமயத்தில், மாபெரும் ரஷ்யப் புரட்சியாளரான, லியோன் ட்ரொட்ஸ்கியினால் பின்வருமாறு வருணிக்கப்பட்டது:

 “ின் பொறியியலுடன் ஒப்புமை செய்தால், அதிக மின்னழுத்தம் ஏற்படும் மின்சாரத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு அமைக்கப்படும் பாதுகாப்பு சுவிட்சுகள் மற்றும் சர்க்யூட் பிரேக்கர்கள் கொண்ட ஒரு அமைப்புமுறையாக, தேசிய அல்லது சமூகப் போராட்டத்தில் ஜனநாயகத்தை குறிப்பிடலாம். மனித வரலாற்றின் எந்தக் காலகட்டத்திலும் - ஏதோ ஒரு மூலையிலும் கூட - நமது காலத்தைப் போல குரோதங்கள் ஒருபோதும் அதிகப்படியாக ஆகியிருந்தது கிடையாது. ஐரோப்பிய பவர் கிரிட்டில் பல்வேறு இடங்களிலும் மேலும் மேலும் அடிக்கடி மின்பாதைகள் ஓவர்லோடு ஆவது நடந்தேறுகிறது. ரொம்பவும் அதிக சார்ஜ் ஆகி விடுகின்ற வர்க்க மற்றும் சர்வதேச முரண்பாடுகளது தாக்கத்தின் கீழ், ஜனநாயகத்தின் பாதுகாப்பு சுவிட்ச்கள் புகைந்து விடுகின்றன அல்லது வெடிக்கின்றன. இதுதான் அத்தியாவசியமாக சர்வாதிகாரம் என்னும் ஷார்ட் சர்க்யூட்டிங் குறித்து நிற்பதாகும்.”  

ன்று, இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் போராட்டங்களின் சமயத்தில் போல, வர்க்கப் பதட்டங்கள் பல்கிப்பெருகி முதலாளித்துவ ஜனநாயகத்தின் சர்க்யூட் பிரேக்கர்களை ஓவர்லோடு செய்து கொண்டிருக்கின்றன.

னநாயகத்திற்கும் ஜனநாயக உரிமைகளுக்குமான ஒரு சக்திவாய்ந்த ளமாக தொடர்ந்தும் திகழ்வது தொழிலாள வர்க்கமே. பெருகிச் செல்லும் வர்க்கப் பதட்டங்களே ஜனநாயக உரிமைகள் மீதான இத்தகைய அதிரடியான தாக்குதல்களுக்கு இட்டுச் செல்கின்றன என்ற உண்மையானது, சூழ்நிலையின் புரட்சிகர தன்மையையும் ஒரு புரட்சிகர, சோசலிச முன்னோக்கின் அடிப்படையிலான ஒரு முதலாளித்துவ-எதிர்ப்புப் போராட்டத்தின் அவசர அவசியத்தையும் சுட்டிக்காட்டுவதாக இருக்கிறது.