சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

COP21 ecological summit opens amid war tensions, with Paris in lockdown

போர் பதட்டங்களுக்கிடையே, பாரிஸ் வழி அடைக்கப்பட்டு இருக்கும் நிலையில் COP21 சுற்றுச்சூழலியல் உச்சிமாநாடு தொடக்கம்

By Stéphane Hugues 
1 December 2015

Use this version to printSend feedback

பாரிஸில் நடத்தப்பட்ட நவம்பர் 13 பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பின்னர் பிரெஞ்சு அரசாங்கத்தால் நெருக்கடிநிலைமை அறிவிக்கப்பட்டதன் காரணத்தால் முற்றுகை நிலைமையில் உள்ள பாரிஸில் COP21 உச்சிமாநாடு நேற்று தொடங்கியது. பிரதான சாலைகள் மூடப்பட்டு பல இடங்களில் கட்டுப்பாட்டு முனைகள் ஏற்படுத்தப்பட்டதுடன், ஆயிரக்கணக்கான இராணுவ துருப்புக்கள், பொலீஸ் மற்றும் துணைநிலை கலவர தடுப்பு பொலீசார் வீதிகளில் திரிந்தனர்.

ஞாயிறன்று COP21 உச்சி மாநாட்டு எதிர்ப்பு ஊர்வலத்தை நசுக்குவதற்கு பொலீஸ் தங்களின் அவசரகால அதிகாரங்களை பயன்படுத்திய பின்னர், பாரிசில் மட்டுமே 6,300 பேர்கள் உள்பட, பிரான்சுக்குள்ளே 120,000 படைவீர்ர்கள் மற்றும் பொலீஸ்காரர்கள் நிறுத்தப்பட்டனர். 341 பேர் கைது செய்யப்பட்டதும் ஒரே இரவில் 317 பேர் பிடித்து நிறுத்தப்பட்டதும் இறுதிக் கணக்காகும்.

இந்த கொடூரமான நிலைமைகளின் கீழ், பிரெஞ்சு அரசாங்கமானது பாரிசில் இரு முக்கிய விமான நிலையங்களான சார்லஸ் டு கோல் மற்றும் ஒர்லி ஆகியவற்றில் வந்திறங்கிய 145 அரசுகளின் தலைவர்கள் உள்பட, 195 பேராளர்களை வரவேற்றது. அந்த விமான நிலையங்களுக்கு செல்ல பயன்படும் பன்முக தேசிய நெடுஞ்சாலை மற்றும் பாரிஸ் ரிங் சாலையின் கிளைவழிகளும், பிரதான பாரிஸ் விடுதிகளுக்கு பேராளர்களைக் கொண்டு வரும் வாகனங்களை தவிர ஏனைய அனைத்து போக்குவரத்துக்களுக்கும் வகையில்லாதவாறு அடைக்கப்பட்டன.

தொடக்கத்தில், அதிகாரிகள் பாரிஸ் பகுதியில் பொதுப் போக்குவரத்து ஞாயிறும் திங்களும் தாராளமாய் இருக்கும் என்று அறிவித்தனர். அடுத்து, ஊடகங்களும் அதிகாரிகளும் பொதுப்போக்குவரத்து இயங்குவது ஆபத்தானது என்று எச்சரித்த்துடன், அதற்குப் பதிலாக தொழிலாளர்கள் திங்களன்று விடுமுறைநாளாக எடுக்க வேண்டும் என அறிவித்தனர்.

COP21 உச்சி மாநாட்டில் முன்னெடுக்கப்பட்ட சில சுற்றுச்சூழலியல் முன்மொழிவுகள், பாரிசில் செய்யப்படும் பகாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் மாநாட்டுக்கு வருகை தரும் பிரதான வல்லரசுகளுக்கிடையில் யுத்தம் நேரக்கூடிய ஆபத்துக்களின் தீவிரங்கள் ஆகியவற்றால் பெரும்பாலும் முக்கியத்துவம் குறைபட்டுத் தோன்றுமாறு செய்தன. சிரியாவிலும் அதற்கு அப்பாலும் இந்த அரசுகள் நேரடியான இராணுவ மோதலின் விளிம்பில் இருக்கும் நிலைமைகளின் கீழ், உச்சிமாநாடு குறிப்பிடப்போவதாக கூறப்படும் சிக்கலான சுற்றுச்சூழலியல் பிரச்சினைகளை பேசுவதற்கு ஒன்றிணைந்து வர இயலாத தன்மையை அவை ஆச்சரியத்துக்கு இடமில்லா வகையில் நிரூபித்தன.

COP21 உச்சிமாநாடானது வெகு சில ஸ்தூலமான முன்மொழிவுகளை தயாரித்துள்ளது. ஐரோப்பிய கமிஷனின் தலைவரான Jean-Claude Juncker குறிப்பிட்டார்: “ஆற்றல் உருமாற்றம் கரி வெளியேற்றத்தில் மோசமான மற்றும் படைப்புருவாக்கத்தில் வளத்தையும் கொண்டு ஒரு புதிய உலகை வடிவமைத்துள்ளது. இங்கே புதிய உலக இயக்க ஆற்றல்வளம் (dynamic) இருக்கிறது. ஆயினும் புவி வெப்பமடைதலை 2 சென்டிகிரேடுக்கு மட்டுப்படுத்தக்கூடியதற்கு போதுமான அர்ப்பணிப்பு நம்மிடம் இல்லாதிருக்கிறது. பெரிய அளவில் வாக்குறுதிகள் கொடுப்பது போதாது, பலமான மற்றும் நீடித்திருக்கக்கூடிய ஒரு கட்டுப்படுத்தக்கூடிய ஒப்பந்தத்தைக் கண்டறிய வேண்டிய தேவை நமக்கிருக்கிறது.”

உண்மையில், புவி வெப்பமயமாதலைக் மட்டுப்படுத்தும் ஒப்பந்தம் எதுவும் உச்சிமாநாட்டிலிருந்து எழவில்லை, உச்சிமாநாட்டில் முக்கிய இயக்க ஆற்றல்வளமாக இருப்பது உறுப்பினர் நாடுகளுக்கிடையிலான எழுந்துவரும் மோதலாக இருக்கிறது. உச்சிமாநாடு ஒரு ஸ்தூலமான முன்மொழிவை தயாரித்தாலும் கூட, அம்முன்மொழிவோடு பொருந்திப்போவதை உறுதிப்படுத்துவதற்கான ஒரு இயங்குமுறை அங்கு இருக்காது. கடந்த மாதம், அமெரிக்க வெளிவிவகாரச் செயலர் ஜோன் கெர்ரி ஃபைனான்சியல் டைம்ஸ் உடனான ஒரு நேர்காணலில், பிரதான வல்லரசுகளுக்கிடையில் விதிமுறைகளுக்கு கீழ்ப்படிந்து நடக்கக்கூடிய ஒப்பந்தம் எதையும் பாரிஸ் உச்சிமாநாடு தயாரிக்காது என்று அப்பட்டமாக அறிவித்தார்.

COP21 உச்சிமாநாட்டிலிருந்து வரப்போவதுநிச்சயமாக ஒரு உடன்படிக்கையாக இருக்காதுஎன கெர்ரி கூறினார், மேலும் “1997 கியோட்டோ எழுந்துபூர்வ உடன்படிக்கையைக் குறிப்பிட்டு, “கியோட்டோ போன்ற குறைக்கும் இலக்குகளை (பசுமை இல்ல வாயுக்கள்) சட்டரீதியாக கட்டுப்படுத்துவதாக இருக்காதுஎன்று சேர்த்துக்கொண்டார்.

ஆகையால் தொடக்கத்திலிருந்து, பாரிஸ் உச்சிமாநாட்டில் எந்தவிதமான சுற்றுச்சூழலியல் நடவடிக்கைகளுக்கு சம்பிரதாயபூர்வமாக உடன்பட்டாலும் அது சிறிதளவே முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கும்.

உச்சிமாநாட்டின் முதல்நாள் சுற்றுச்சூழல் மாசுபடல் மற்றும் புவிவெப்பமாதலை குறைப்பது பற்றிய பேச்சுக்களால் மேலாதிக்கம் செய்யப்படவில்லை, சிரியா மீதாக வெடித்திருக்கும் சர்வதேச பெரும் பதட்டங்களை நிர்வகிக்க முயற்சிக்கும் பிரதான வல்லரசுகளுக்கிடையிலான, மேடைக்குப் பின்னாலான, தனிப்பட்ட ஒருத்தருக்கொருத்தர் கலந்துரையாடலால் ஆதிக்கம் செய்யப்பட்டிருந்தது. ரஷ்ய குண்டு வீச்சு விமானத்தை துருக்கி சுட்டு வீழ்த்தியதானதுவிளைவுகளைப் பற்றி எண்ணாமல் துணிகின்ற இந்நகர்வு வாஷிங்டனால் நியாயப்படுத்தப்பட்டதுரஷ்யாவுக்கும் ஏகாதிபத்திய தலைமையிலான நேட்டோ கூட்டிற்கும் இடையில் யுத்தம் நிகழும் ஆபத்தை வெடிக்கும் புள்ளிக்கு கொண்டுவந்துள்ளது.

துருக்கி பிரதமர் Ahmet Davutoglu திங்களன்று அந்நிகழ்வுக்காக மன்னிப்பைக்கோர மறுத்தார். Ahmet Davutoglu, “பொருளாதார தடைகள் நம் இருவர் நலன்களுக்கும் எதிரானவைஎன்று கூறி, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை தனது நாட்டுக்கு எதிராக மாஸ்கோ தற்போதுதான் கடைப்பிடிக்கத்தொடங்கிய பொருளாதார தடைகளை  மறு ஆய்வு செய்யுமாறு கூட கேட்டுக்கொண்டார்.

COP21 உச்சிமாநாட்டின்பொழுது திங்களன்று அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும் புட்டினும் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தினர். கிரெம்ளின் செய்தித்துறை செயலாளர் Dmitry Peskov, “ஒபாமா சிரியாவில் துருக்கி விமானப்படையால் ரஷ்ய ஜெட் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் தொடர்பாக வருத்தம் தெரிவித்ததாககூறினார்.

அத்தாக்குதல் ரஷ்யதுருக்கி உறவுகளில்பாரிய விளைவுகளைகொண்டிருக்கும் என்று புட்டின் எச்சரித்திருக்கிறார், ஏற்கனவே 37 துருக்கிய வணிகமுதலாளிகள் ரஷ்யாவிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அவர் அத்தாக்குதல் பயங்கரவாதிகளின் உடந்தையால் நடத்தப்பட்டரஷ்யாவின் முதுகில் குத்தியசெயல் என்று விவரித்தார். அவர் ISIS எண்ணெயை சர்வதேச சந்தையில் விற்பதற்காக ட்ரக்குகளின் தொகுதி வரிசையாக துருக்கிக்கு எண்ணெயை எடுத்துச்செல்லும் படங்களைக் காட்டினார். திங்கள் மாலை புட்டின் கையெழுத்திட்டு உடனடியாக அமலுக்கு வரும் ஆணை, ரஷ்யாவிலிருந்து சார்ட்டர் விமானங்கள் தடைசெய்யப்படுகின்றன, சுற்றுலா நிறுவனங்கள் எந்த விடுமுறைகால திட்டத்தையும் விற்கக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது, குறிப்பிடப்படாத துருக்கிய இறக்குமதிகள் சட்டத்திற்கு புறம்பானதாக ஆக்கப்பட்டுள்ளது மற்றும் துருக்கிய நிறுவனங்களும் குடிமக்களும் தங்களது பொருளாதார நடவடிக்கைகளை நிறுத்தவேண்டும் அல்லது கட்டுப்படுத்தவேண்டும் என்று கூறுகிறது.

சூழ்நிலைமைகள் முன்எதிர்பாராத வகையில் இருக்கின்றன. ரஷ்யாவிற்கு கொடுமை விளைவிக்கப்பட்டது முன்னோடி இல்லாதது. எனவே பதில் நடவடிக்கை இயல்பாகவே இந்த அச்சுறுத்தலோடு பொருந்தியதாக இருக்கிறதுஎன்று இந்த ஆணை வெளியிடப்படுமுன் பெஸ்கோவ் தெரிவித்தார்.

தங்களின் பணியின்போது வழக்கத்திற்கு மீறிய சம்பவங்களை தவிர்ப்பதற்காக தங்களின் விமான புள்ளிவிவரங்களை யாருக்கு ரஷ்யர்கள் அளித்துவருகிறார்களோ, அந்த அமெரிக்க அதிகாரிகள், நேட்டோவின் கூட்டாளியான துருக்கிக்கு இந்தவிவரங்களை ரஷ்ய ஜெட்விமானத்தை சுட்டுவீழத்துவதற்கு அவர்களை அனுமதிக்கும் வகையில் அளித்தனர் என்று புட்டின் கருத்துரைத்தார். “துருக்கி பகுதியாக இருக்கும் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் அமெரிக்க தரப்புக்கு எங்கு எப்பொழுது எமது போர்விமானங்கள் நடவடிக்கைகளில் ஈடுபட்டன (அந்த சம்பவத்தின்பொழுது) என்பது தெரியும். அங்குதான் தாக்குதல் துல்லியமாக இடம்பெற்றது,” என புட்டின் வலியுறுத்தினார்.

இது ரஷ்யாவை சிரிய யுத்தத்தில் தீவிரமாய் ஈடுபடுவதற்கு வழிவகுத்துள்ளது. மாஸ்கோ வான்வெளியிலிருந்து வான்வெளியில் செலுத்தக்கூடிய ஏவுகணைகளை சுமந்து செல்லும், அதேபோல தங்களது பணிகளில் குண்டுகளை வீசும் ரஷ்ய SU-34 போர்விமானங்களை அனுப்புவதற்காகவும் ரஷ்யாவின் மிகவும் முன்னேறிய S-400 பாதுகாப்புத்திட்டதை சிரியாவில் நிறுவுவதற்குமான திட்டங்களை அறிவித்துள்ளது.

பில்லியன் டாலர்கள் மதிப்புடைய துருக்கி வழியாக செல்லும் ரஷ்ய எண்ணெய்க்கான திட்டங்கள் மறு மதிப்பீடு செய்யப்படலாம்.

அதேவேளை,ரஷ்யா, அமெரிக்க ஆதரவு உக்ரேன் ஆட்சியால் கொடுக்கப்பட வேண்டிய 3 பில்லியன் டாலர் இயற்கைவாயு கடன் பற்றி மீண்டும் எழுப்பி உள்ளது.

சிரியாவும் கூட விரிவாக விவாதிக்கப்பட்டது, ஒரு அரசியல் தீர்வை ஆரம்பிப்பதை நோக்கிய நகர்வுகளுக்கு ஆதரவாக இரு ஜனாதிபதிகளும் பேசினர்என்று பெஷ்கோவ் கூறினார்.

அவர்கள் உக்ரேன் பற்றியும் கூட பேசினர் மற்றும் மின்ஸ் உடன்பாடுகளை விரைவில் அமல்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டினர்.”

உண்மையில், ராய்ட்டரின் படி, சிரியாவில் அரசியல் மாற்றத்தின் ஒரு பகுதியாக சிரிய ஜனாதிபதி பஸ்ஸார் அல் - அசாத் அதிகாரத்தை விட்டு கீழிறங்க வேண்டும் என்று ஒபாமா புட்டினிடம் மீண்டும் வலியுறுத்தினார். அமெரிக்க நிலைப்பாடு ரஷ்ய அரசாங்கத்தால் எதிர்க்கப்பட்டது, அது அசாத்தை வெளியேற்றுவது சிரிய யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முன்நிபந்தனையாக இருக்கக்கூடாது என்று வலியுறுத்தி உள்ளது.