சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The significance of the elevation of the Chinese renminbi

சீன ரென்மின்பியை மேலுயர்த்தியதன் முக்கியத்துவம்

Nick Beams
5 December 2015

Use this version to printSend feedback

சீன ரென்மின்பியை (யுவான் என்றும் இது அறியப்படுகிறது) நடைமுறையில் ஒரு சர்வதேச செலாவணி நாணயமாக ஆக்கும் விதத்தில், சர்வதேச நாணய நிதியத்தின் சிறப்பு நிதி உரிமை (special drawing rights – SDR) கொண்ட உலகளாவிய நாணயங்களின் தொகுப்பிற்குள் அதை மேலுயர்த்தியமை, அனேகமாக எந்தவிதமான பெரிய உடனடி விளைவுகளையும் கொண்டு வராமல் போகலாம். ஆனாலும், நீண்டகால அமெரிக்க பொருளாதார வீழ்ச்சியின் விளைவாக கடந்த மூன்று தசாப்தங்களில் உலக பொருளாதாரத்தின் அடித்தளங்களில் நடந்துள்ள பரந்த மாற்றங்களை அது அடிக்கோடிடுகிறது.

அம்முடிவைக் குறித்து Stratfor வலைத்தளம் அதன் கருத்துரையில் குறிப்பிடுகையில், முன்னதாக டாலர், பிரிட்டிஷ் பவுண்ட், ஜப்பானிய யென் மற்றும் யூரோவை உள்ளடக்கிய செலாவணி நாணயங்களின் தொகுப்பில் முதல்முறையாக    அமெரிக்காவின் கூட்டணியில் இல்லாத ஒரு நாட்டின் நாணயம் உள்ளடக்கப்படுவதாக குறிப்பிட்டது.

சர்வதேச நாணய நிதியத்தையும் அதன் பாகமாக கொண்ட இரண்டாம் உலக போருக்குப் பிந்தைய நாணய ஒழுங்குமுறையில், அமெரிக்க பொருளாதார மேலாதிக்கமே அதிகரித்தளவில் அடித்தளத்தில் அமைந்திருந்தது. 1945 இல் அமெரிக்க மொத்த உள்நாட்டு உற்பத்தி உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50 சதவீதத்திற்கும் அதிகமாக மதிப்பிடப்பட்டதை Stratfor சுட்டிக்காட்டியது. இது இந்தாண்டு 22 சதவீதத்தில் இருக்கும்.

SDR தொகுப்பில் ரென்மின்பியை உள்ளடக்கும் முடிவை அமெரிக்கா ஆதரித்தது என்றாலும், அது மிகவும் கடுகடுப்போடு தான் அதை செய்தது. SDR தொகுப்பில் உள்ளடக்க வேண்டுமென்று 2010 இல் இருந்து சீனாவின் அழுத்தத்தைத் தடுப்பதில் அது முன்னணி பாத்திரம் வகித்திருந்த நிலையில், அதன் தொடர்ச்சியான மறுப்பு ஏனைய சக்திகளிடமிருந்து எதிர்ப்பைத் தூண்டிவிடும் என்ற பயமே அதன் சம்மதத்திற்குப் பிரதான காரணமாகும். சீனாவிற்கான வாக்குரிமை புள்ளிகளை (voting rights) அதிகரிக்க வேண்டுமென்ற 2010 முடிவை, காங்கிரஸ் செல்லுபடியானதாக ஆக்க மறுத்துள்ளதால், அங்கே ஏற்கனவே சர்வதேச நாணய நிதியத்திற்குள் அமெரிக்கா விமர்சிக்கப்படுகிறது. அந்த அமைப்பின் குழுவுக்குள் இப்போது சீனாவின் வாக்கு மதிப்பு, பெல்ஜியத்தின் வாக்கு மதிப்பு அளவில் தான் உள்ளது.

இந்த மனமாற்றம், கடந்த கால் நூற்றாண்டுகளாக உலக பொருளாதாரத்தில் ஏற்பட்ட மாற்றத்தின் ஒரு நடவடிக்கையாகும். இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர், சீனா உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 2 சதவீதத்தைக் கொண்டிருந்தது. அப்போதிலிருந்து, அதன் பங்கு ஆறு மடங்கு உயர்ந்து, உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரமாக இந்தாண்டு அது 12 சதவீதத்தை எட்டும். இது உலக பொருளாதார வரலாற்றில் மிக முக்கிய மாற்றங்களில் ஒன்றாகும்.

ஆனால் புவிசார் அரசியல் மீது அதன் தாக்கங்கள் மற்றும் பாதிப்புகளை, வெறுமனே ஏற்கனவே என்ன நடந்துள்ளதோ அதை மேலோட்டமாக மதிப்பீடு செய்வதன் மூலமாகவும் மற்றும் சீனா தவிர்க்கவியலாமல் உலகின் பொருளாதார ஆதிக்க சக்தியாக மாறியுள்ளது என்ற முடிவுக்கு வருவதன் மூலமாகவோ, அல்லது அது ஓர் ஏகாதிபத்திய சக்தியாக இதுவரையில் இல்லையென்றாலும் இப்போது அவ்விதமாக ஆகி வருகிறது என்ற முடிவுக்கு வருவதன் மூலமாகவோ தீர்மானத்து விட முடியாது.

சீனாவை வரலாற்று மற்றும் சர்வதேச உள்ளடக்கத்தில் நிறுத்துவதன் மூலமாக மட்டுமே அதன் உயர்வைப் புரிந்துகொள்ள முடியும். இது முற்றிலுமாக, சீனா உலக முதலாளித்துவத்திற்கு ஒரு புதிய அடித்தளத்தை வழங்க உள்ளது என்று கூறுபவர்களாலும் மற்றும் அதையொரு ஏகாதிபத்திய சக்தியாக கூறும் பல்வேறு போலி-இடது போக்குகளாலும் இந்த இருதரப்பினராலும் நிராகரிக்கப்படுகிறது.

உலக முதலாளித்துவ கட்டமைப்பிற்குள் சீனாவினது வரலாற்று ஒருங்கிணைவில் மேலோங்கி உள்ள போக்கு எதுவென்றால், அதன் மீது ஆதிக்கம் செலுத்தி அடிபணியச் செய்ய வைக்க முயலும் ஏகாதிபத்திய சக்திகளின் முனைவே ஆகும்.

இது 19 ஆம் நூற்றாண்டு மத்தியில் பிரிட்டனால் ஆரம்பிக்கப்பட்ட அபினி போர்களுடன் (Opium Wars) தொடங்கியது. 19 ஆம் நூற்றாண்டின் இறுதி வாக்கில், அமெரிக்கா, ஜப்பான் மற்றும் குறிப்பாக ஜேர்மனி என எழுச்சிபெற்று வந்த இவை உள்ளடங்கலாக, சகல ஏகாதிபத்திய சக்திகளும் அவற்றின் சொந்த பொருளாதார மண்டலங்களை மற்றும் செல்வாக்கு எல்லைகளை நிறுவ முயன்ற போது, அங்கே ஆபிரிக்காவைக் கைப்பற்றியதும், சீனாவைச் சுற்றி வளைப்பதும் மட்டுமே நடந்தது. சீனாவில் ஒரு "திறந்த கதவு" கொள்கையை அமெரிக்கா விரும்புகிறது என்ற அறிவிப்புடன், அது உலக அரங்கில் அதன் எழுச்சியை அறிவித்ததுவேறு வார்த்தைகளில் கூறுவதானால், அதன் அதிகரித்துவந்த நலன்களை அடைவதிலிந்து அது ஒதுங்கி கொள்ள முடியாதிருந்தது.

அந்த நோக்கம் 1930களில் ஜப்பானால், முதலில் 1931 இல் மஞ்சூரியா படையெடுப்புடனும் பின்னர் 1937 இல் அந்த ஒட்டுமொத்த நாட்டையும் வெற்றிகொள்ளும் முயற்சியாலும், சவாலுக்கு உள்ளாக்கப்பட்ட போது, அமெரிக்கா தன்னைத்தானே அதன் ஆசிய போட்டியாளருக்கு எதிரான போர் பாதையில் நிறுத்தியது, அது 1941 பியர்ல் துறைமுக தாக்குதலுடன் வெடித்து, ஆகஸ்ட் 1945 இல் ஜப்பான் மீது இரண்டு அணுகுண்டுகள் வீசப்பட்டதுடன் முடிவுக்கு வந்தது.

ஆனால் சீனப் பெருநிலத்தை ஆக்கிரமிப்பதற்கான அமெரிக்காவின் திட்டங்களில், 1949 சீனப் புரட்சி, ஏகாதிபத்திய தளைகளை அறுத்தெறிந்து குறுக்கிட்டது. ஆனால் "தனியொரு நாட்டில் சோசலிசம்" எனும் ஸ்ராலினிச வறட்டுவாதத்தின் அடிப்படையில் மாவோயிச ஆட்சியின் தேசியவாத கொள்கைகள் மற்றும் வேலைத்திட்டம், 1950 களில் "முன்னோக்கிய பெரும் பாய்ச்சல்" (Great Leap Forward) மற்றும் 1960 களில் "கலாச்சார புரட்சி" (Cultural Revolution) போன்ற தொடர்ச்சியான நெருக்கடிகளை உண்டாக்கி, அந்நாட்டின் பொருளாதார பிரச்சினைகளைத் தீர்க்கவியலாது என்பதை எடுத்துக்காட்டியது.

அடிமட்டத்திலிருந்து தொழிலாள வர்க்கத்தின் வெடிப்பைக் குறித்த அச்சத்தில், மாவோயிச ஆட்சி 1970களின் தொடக்கத்தில் நிக்சன்-மாவோ சமரசத்துடன் ஆரம்பித்து, ஏகாதிபத்தியத்தை நோக்கி பின்னோக்கி நகர்ந்தது, அது அத்தசாப்தத்தின் முடிவில் டெங் சியாபிங் கீழ் சந்தை சக்திகளை நோக்கி திரும்புவதற்கு இட்டுச் சென்றது. ஜூன் 1989 சம்பவங்களில் இரத்தந்தோய்ந்த தொழிலாள வர்க்க ஒடுக்குமுறை மற்றும் அடுத்தடுத்து சீனாவின் பொருளாதார திறந்துவிடல்களுடன், மாவோயிச-ஸ்ராலினிச அதிகாரத்துவம், அதன் பொருளாதாரம் முன்பினும் அதிகமாக உலகளாவிய மூலதன மாற்றங்கள் மற்றும் வரவுகளைச் சார்ந்திருக்கும் வகையில் செய்து, முதலாளித்துவ மீட்சியை நடத்தியது.

ஆனால், இப்போதிருக்கும் ஏகாதிபத்திய சக்திகள் அவற்றின் ஆரம்ப வரலாற்று காலத்தில் எடுத்த பாதையையே கடந்த கால் நூற்றாண்டில் பகட்டான சீன பொருளாதார வளர்ச்சி எடுத்துள்ளது என்று அர்த்தமாகாது. முதலாவதாக, அதன் பொருளாதார விரிவாக்கம் மிகவும் வித்தியாசமான விதத்தில் நிகழ்ந்தது: அது அமைப்புரீதியிலான சில தேசிய வளர்ச்சியின் விளைபொருளாக அல்ல, மாறாக அனைத்திற்கும் மேலாக பிரதான சக்திகளின் பன்னாட்டு பெருநிறுவனங்களுக்கு மலிவு-உழைப்பு உற்பத்தி தளமாக அது வகித்த பாத்திரத்திலிருந்து பெருக்கெடுத்ததாகும்.

அதன் விளைவாக, சீன ஆளும் உயரடுக்கின் முக விலாசம்அதன் உயர்மட்ட அடுக்குகள் பெரும் செல்வவளத்தில் இருந்தாலும் கூடபெரிதும் காலனித்துவ அடிபணிவின் ஆரம்ப காலக்கட்டத்தில் எழுந்த தரகு முதலாளித்துவமாக உள்ளது, அது பெரும்பாலும் அரசியல் வழிவகைகள் மற்றும் ஒரேயடியான ஊழலைக் கொண்டு அதன் செல்வவளத்தைப் பெருக்கிக் கொண்டே, சக்திவாய்ந்த உலகளாவிய பொருளாதார ஓட்டத்திலிருந்து அதன் பாதைக்கான உபாயத்தை முயல்கிறது.

சிறப்பு நிதி உரிமையின் (SDR) பாகமாக ரென்மின்பி அங்கீகரிக்கப்படுவதற்கு அந்த ஆட்சியின் ஒருமித்த அழுத்தமே கூட இத்தகைய குணாம்சங்களை எடுத்துக்காட்டுகிறது. சீனாவின் பொருளாதார அந்தஸ்தை விரிவாக்க முயற்சிப்பதையும் மற்றும் குறைந்தபட்சம் ஏதேனும் விதத்தில் உலக சந்தை உடனான அமெரிக்க டாலர் இணைப்புகளைத் தீர்மானிக்கின்ற அதன் பலத்தைக் குறைக்க முயற்சி செய்வதிலும் அது நிறைய வசதி ஏற்படுத்தி கொடுக்கும் என்பதே அதன் நோக்கமாகும்.

அவ்வழியில், அந்த ஆட்சி எதை சீனாவின் "அமைதியான வளர்ச்சி" என்று அழைக்கிறதோ அதற்கு அது பங்களிப்பளிக்குமென நம்புகிறது.

ஆனால் அத்தகைய கணக்கீடுகள், உலக பொருளாதார கட்டமைப்பிலும் மற்றும் ரென்மின்பியின் உயர்வுக்கு இட்டுச் சென்ற புவிசார் அரசியல் உறவுகளிலும் ஏற்பட்டுவரும் பெரும் மாற்றங்களின் தாக்கங்களை முற்றிலுமாக கணக்கில் எடுக்கவில்லை.

ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்னர், ஏகாதிபத்திய போர்கள் மற்றும் புரட்சிகளின் சகாப்தம் தொடங்கிய போது முதலாம் உலக போரின் முக்கியத்துவத்தைப் பகுத்தாராய்ந்து, லெனின் விவரித்தார், முதலாளித்துவத்தின் கீழ் நிரந்தர சமாதானம் இருக்க முடியாது ஏனென்றால் பிரதான சக்திகளுக்கு இடையிலான எந்தவொரு சமநிலையும் அதன் இயல்பிலேயே மற்றும் முதலாளித்துவ பொருளாதார இயக்கவியலின்படி, தற்காலிகமாக மட்டுமே இருக்கும்.

இது ஏனென்றால் முதலாளித்துவ பொருளாதாரம் ஏற்றத்தாழ்வுகளோடு அபிவிருத்தி அடைகிறது. அதன் விளைவாக ஒரு சமயத்தில் மேலோங்கி ஸ்திரப்பாட்டிற்கு அடித்தளத்தை நிறுவும் பொருளாதார நிலைமைகள் உடனடியாக நிலைகுலைய தொடங்கி, தவிர்க்கவியலாமல் புதிய போர்கள் வெடிப்பதற்கு இட்டுச் செல்கின்றன.

நாடுகள் மற்றும் கோட்பாடுகளின் ஒரு "அவலமான" கூட்டுக்கலவையாக இருந்ததிலிருந்து வெறும் 50 ஆண்டுகால இடைவெளியில் ஒரு பிரதான பொருளாதார சக்தியாக ஜேர்மனி உயர்வதற்கு இட்டு சென்ற மாற்றத்தைக் குறிப்பாக லெனின் சுட்டிக்காட்டினார்.

ஒரு நூற்றாண்டுக்கு முந்தைய நிலைமை துல்லியமாக இன்றைக்கு பொருத்தமான உவமையாக இருக்காது தான். கடந்த நூற்றாண்டின் முதல் தசாப்தத்தில் ஜேர்மனி இருந்ததைப் போலில்லாமல் சீனா ஓர் ஏகாதிபத்திய சக்தி அல்ல. ஆனால் லெனினின் பகுப்பாய்வு எவ்வாறிருப்பினும் சமகாலத்திற்குப் பொருத்தங்களைக் கொண்டுள்ளது. சீனாவின் பொருளாதார வளர்ச்சி முற்றிலுமாக போருக்குப் பிந்தைய பொருளாதார ஒழுங்கமைப்பையும் மற்றும் 1914 இல் இருந்து 1945 வரையிலான 30 ஆண்டுகாலத்தில் இரண்டு உலக போர்கள் மற்றும் பல சிறிய சண்டைகள் என பல மோதல்களுக்குப் பின்னர், பிரதான ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையே நிறுவப்பட்ட சமநிலைமையையும் தொந்தரவுக்கு உள்ளாக்கி உள்ளது.

சீன நாணயத்தை மேலுயர்த்தியமை இந்த உள்ளடக்கத்திலிருந்து பார்க்கப்பட வேண்டும். ஸ்திரப்பாடு மற்றும் ஒழுங்கமைப்பிற்கு ஒரு புதிய அடித்தளத்தை வழங்குவதற்கு மாறாக, அது, சவாலுக்கு இடமின்றி அமெரிக்க பொருளாதார மேலாதிக்கத்தின் அடிப்படையில் அமைந்த அடித்தளங்களை அரிப்பதிலிருந்து தொடங்கி, அதிகரித்தளவில் உலகளாவிய பொருளாதாரத்தைக் குணாம்சப்படுத்தும் ஆழமடைந்துவரும் ஸ்திரமின்மை மற்றும் ஒழுங்கு குலைவிற்கு அதுவொரு வெளிப்பாடாக உள்ளது.

இந்நிலைமையை முகங்கொடுக்கையில், அமெரிக்கா சமாதானமாக பின்னுக்கு ஒதுங்கிக் கொள்ள திட்டமிடவில்லை, மாறாக அதன் பொருளாதார வீழ்ச்சியை இராணுவ வழிவகைகளைக் கொண்டு எதிர்கொள்ள முனைகிறது. இது தான் ரஷ்யாவை நோக்கிய அதன் முன்பினும் அதிக போர்வெறியின் மற்றும் சீனாவை அடிபணிய செய்யும் நோக்கம் கொண்ட அதன் ஆசியாவை நோக்கிய முன்னிலையின் அர்த்தமாகும். ஆனால் இந்த முனைவு அதை அதன் பழைய ஏகாதிபத்திய போட்டியாளர்களுடன் மோதலுக்குள் கொண்டு வருகிறது, அவையும் அதைப்போலவே அவற்றின் எதிர்காலத்தை ஆதாரவளங்களைச் சுரண்டுவதிலும் மற்றும் யுரேஷிய பெருநிலத்தின் தொழிலாளர் உழைப்பைச் சுரண்டுவதிலும் பிணைந்திருப்பதாக காண்கின்றன, மற்றும் அவற்றின் நலன்கள் அமெரிக்காவின் நலன்களுடன் நிச்சயமாக பொருந்தி இல்லை என்பதையும் பார்க்கின்றன.

இந்த முன்னோக்கிலிருந்து பார்க்கையில், ரென்மின்பி மேலுயர்த்தப்பட்டமையானது, புவிசார் அரசியல் பதட்டங்களுக்கு எண்ணெய் ஊற்றிவரும் மற்றும் ஒரு மூன்றாம் உலக போர் வெடிப்புக்கு நிலைமைகளை உருவாக்கி வரும் உலக பொருளாதார அடி-அடுக்குகளில் நிகழ்ந்துவரும் மாற்றங்களின் ஒரு வெளிப்பாடாகும் —உலக சோசலிச புரட்சி வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதன் மூலமாக மட்டுமே ஒரு மூன்றாம் உலக போர் பேரழிவை தடுக்க முடியும்.