சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

German parliament votes for military intervention in Syria

ஜேர்மன் நாடாளுமன்றம் சிரியாவில் இராணுவ தலையீட்டுக்கு வாக்களிக்கிறது

By Ulrich Rippert
5 December 2015

Use this version to printSend feedback

வெள்ளியன்று, ஜேர்மன் நாடாளுமன்றம் (Bundestag) பெரும் பெரும்பான்மையுடன் சிரியா போரில் பங்குபற்றுவதற்கு வாக்களித்தது. ஜேர்மன் இராணுவத்தைப் (Bundeswehr) அதிகளவில் அனுப்ப தொடங்குவதற்கான, இந்த முடிவு, நீண்டகால மற்றும் கணிக்கவியலாத விளைவுகளுடன், அவசர நிகழ்முறையினூடாக நாடாளுமன்றத்தில் கொண்டு செல்லப்பட்டது.

செவ்வாயன்று, மந்திரிசபை, போருக்கு 1,200 சிப்பாய்கள், ஆறு டோர்னொடொ விமானங்கள் மற்றும் ஒரு சிறிய போர்வேவுகலத்தை அனுப்ப முடிவெடுத்திருந்தது. அது குறித்து வெறுமனே நாடாளுமன்ற பிரதிநிதிகளுக்குத் தகவல் மட்டுமே அளிக்கப்பட்டது. புதனன்று, ஜேர்மன் நாடாளுமன்றத்தில் முதல் வாசிப்பு நடந்தது; அரசாங்கத்திடம் கேள்வி எழுப்புவதற்கான கால அவகாசம் மொத்தமே 30 நிமிடங்கள் தான் ஒதுக்கப்பட்டிருந்தது. இரண்டாவது மற்றும் மூன்றாவது வாசிப்புகள் ஓர் அமர்வை அடுத்து வெள்ளியன்று நடந்த அந்த அமர்வு வெறுமனே இரண்டு மணிநேரங்களே நீடித்தது. காலை 11 மணிக்கு வாக்கெடுப்புத் தொடங்கியது.

சிரியாவில் போர் நடவடிக்கைக்கு ஆதரவாக 445 பிரதிநிதிகள் வாக்களித்தனர், 146 பேர் எதிராக வாக்களித்தனர் மற்றும் ஏழு போர் வாக்களிப்பைப் புறக்கணித்தனர். "ஆதரவு" வாக்குகள் ஏறத்தாழ முழுமையாக—சமூக ஜனநாயக கட்சி (SPD) மற்றும் கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம்/கிறிஸ்துவ சமூக ஒன்றியம் (CDU/CSU) ஆகிய—மிகப்பெரிய கூட்டணியிடமிருந்து வந்தது. இடது கட்சி மற்றும் பசுமைக் கட்சி பிரதிநிதிகளில் பெரும்பான்மையினர் எதிராக வாக்களித்தனர்.

இரண்டாம் உலக போருக்குப் பின்னர் போரில் பங்குபற்றுவதன் மீதான ஒரு முடிவு இந்தளவிற்கு விரைவாக ஒருபோதும் எடுக்கப்பட்டிருக்கவில்லை. தங்களைத்தாங்களே அதன் முகவர்களாக கருதும் அங்கத்தவர்களைக் கொண்ட ஒரு பணிவான நாடாளுமன்றத்தை அரசாங்கம் கருத்தில் எடுத்திருந்திருக்கும். இத்தகைய தந்திரோபாயங்கள், சிரியா நடவடிக்கை, அதன் அபாயங்கள், அதன் விளைவுகள், சர்வதேச சட்டபூர்வ மற்றும் அரசியலமைப்பு அடிப்படையில்லாத தன்மையின் முக்கியத்துவம் ஆகியவற்றைக் குறித்த சகல பொது விவாதங்களையும் நசுக்க சேவையாற்றியது.

போர் மற்றும் இராணுவவாதத்திற்கு அங்கே ஆழ்ந்த மக்கள் எதிர்ப்பு வேரூன்றியிருப்பதை அரசாங்கம் நன்கறியும். முதலாம் உலக போரின் போது மற்றும் குறிப்பாக இரண்டாம் உலக போரின் போதும் ஜேர்மன் இராணுவத்தால் நடத்தப்பட்ட குற்றங்கள் இன்னும் மறந்துபோகவில்லை, மாறாக சமூக நனவுக்குள் பதிந்திருக்கின்றன.

ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்னர், சமூக ஜனநாயகக் கட்சி ஆகஸ்ட் 1914 இல் கெய்சரின் போர்க் கடன்களுக்கு ஒப்புதல் வழங்கியது; இன்றோ, சமூக ஜனநாயகவாதிகள் போரை நோக்கிய போக்கைக் குறித்த முன்னணி விமர்சனங்களில் ஒரு முக்கிய பாத்திரம் வகிக்கின்றனர்.

அந்த விவாதம் தொடங்குவதற்கு முன்னரே, SPD இன் நாடாளுமன்ற தலைவர் தோமஸ் ஓப்பர்மான் (Thomas Oppermann) ஜேர்மன் நாடாளுமன்ற அவசர நடவடிக்கைகள் நியாயமானதும் அவசியமானதும் என்று அறிவித்து, அவற்றை விமர்சிப்பதை நிராகரித்தார். "பிரான்ஸ் நம்மிடம் உதவி கோரியுள்ளது," என்று அறிவித்த அவர், ஆழ்ந்த பொது விவாதங்களுக்குப் பின்னர், "நாம் ஒரு பொறுப்பான முடிவை எடுக்கக்கூடிய நிலைமையில் இருக்கிறோம்," என்று வலியுறுத்தி, விவாதத்தை நிறைவுசெய்ய கோரினார்.

நீதித்துறை மந்திரி Heiko Maas (SPD) அந்த மிகப்பெரும் கூட்டணியின் முடிவை பாதுகாத்ததுடன், இராணுவ நடவடிக்கை பற்றிய சட்டபூர்வ அக்கறைகளை ஒதுக்கித் தள்ளினார். "சிரியாவுக்கு ஜேர்மன் இராணுவம் (Bundeswehr) அனுப்புவது சர்வதேச சட்டத்தையோ அல்லது அரசியலமைப்பையோ மீறாது என்பதில் ஜேர்மனியர்கள் உறுதியாக இருக்கலாம்," என்றவர் வியாழனன்று Berliner Tagesspiegel இல் தெரிவித்தார்.    

ஜேர்மன் இராணுவத்தின் வெளிநாட்டு நடவடிக்கைகள் ஒரு கூட்டு பாதுகாப்பு முறையின் பாகமாக இருந்தால் அவை நியாயமானதே என்ற 1994 கூட்டாட்சி அரசிலமைப்பு நீதிமன்றத் தீர்ப்பை அதற்கு ஆதரவாக மாஸ் மேற்கோளிட்டு காட்டினார்: "தற்போதைய தீர்மானமும் உள்ளடங்கிய விதத்தில், IS க்கு [இஸ்லாமிய அரசு போராளிகள் குழுவுக்கு] எதிராக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையால் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அனைத்திற்கும் மேலாக ஐரோப்பிய ஒன்றிய அடிப்படை உடன்படிக்கையின்படி, பிரான்ஸ் அதன் ஐரோப்பிய ஒன்றிய பங்காளிகளின் பாதுகாப்பு கடமைப்பாடுகளையும் கோர முடியும்." 

திட்டவட்டமாக இது உண்மையல்ல. பரம பழமைவாத Neue Zürcher Zeitung கூட, "இராணுவத்தை அனுப்புவதை சட்டபூர்வமாக்கும் ஐ.நா. பாதுகாப்பு அவை தீர்மானம் எதுவும் இல்லை," என்பதை ஒப்புக்கொண்டிருந்தார். ஐரோப்பிய ஒன்றிய அடிப்படை உடன்படிக்கை, சிரியாவில் இராணுவ தலையீட்டை அனுமதிக்கவில்லை—அங்கே பிரான்ஸ், அமெரிக்கா, துருக்கி மற்றும் ஏனைய நாடுகள் பல ஆண்டுகளாக ஆட்சி மாற்றத்தைக் கோரி வருவதுடன், ரஷ்யா மற்றும் ஈரானுக்கு எதிராக ஒரு பினாமிப் போரை நடத்தி வருகின்றன.     

ஜேர்மன் இராணுவ நடவடிக்கைகள் ஜேர்மனியில் பயங்கரவாத தாக்குதல் அபாயத்தை அதிகரிக்கின்றன என்பது "ஜேர்மனி நீண்டகாலமாக பயங்கரவாதிகளின் பார்வையில் வைக்கப்பட்டிருக்கிறது" என்ற உண்மையை உதறிவிடுகிறது என்று வாதாடுபவர்களைக் குற்றஞ்சாட்டியதன் மூலமாக, SPD துணை தலைவர் Rolf Mützenich ஜேர்மன் போர் நடவடிக்கையைப் பாதுகாத்தார். 

அதுவும் உண்மையல்ல, ஏனெனில் "பயங்கரவாதத்திற்கு எதிரான போரின்" முந்தைய இராணுவ தலையீடுகளே அதை எடுத்துக்காட்டியுள்ளன. Frankfurter Rundschau பின்வருமாறு கருத்துரைத்தது, "பயங்கரவாதத்திற்கு எதிரான போர் பயங்கரவாதிகளின் எண்ணிக்கையை மட்டும் உயர்த்தவில்லை. அது அதன் பூகோள பரவலையும் விஸ்தரித்துள்ளது." போருக்குள் நுழைவது பாரியளவில் ஜேர்மனியில் தாக்குதல் அபாயத்தை அதிகரிக்கும் என்பதை பாதுகாப்பு வல்லுனர்களுமே நம்புகின்றனர்.

"உண்மையில் நாம் நீண்டகாலமாக காத்திருந்து ஒவ்வொன்றையும் மிகவும் தாமதப்படுத்தவில்லையா?" என்று வினவியதன் மூலமாக, SPD பாதுகாப்புத்துறை வல்லுனர் ரைய்னர் ஆர்னோல்ட், ஜேர்மன் நாடாளுமன்ற தீர்மானம் ஒரு "கட்டுப்பாடற்ற வேகத்தில்" (gallop) நாடாளுமன்றத்தினூடாக கொண்டு செல்லப்படுகிறது என்ற இடது கட்சி நாடாளுமன்றவாதிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்தார். ஆர்னோல்ட் பின்வருவதையும் உணர்ச்சிகரமாக சேர்த்துக் கொண்டார், "ஓர் இராணுவ நடவடிக்கையானது அபாயங்களைக் கொண்டிருக்கிறது என்ற உண்மை குறித்து நம்மால் பல மணிக்கணக்கில் பேச முடியும். நான் இதை பூசிமொழுக விரும்பவில்லை. ஆனால் நாம் நமது சிப்பாய்களை சாகச வேலைகளுக்கு அனுப்பவில்லை," என்றார்.   

பசுமை கட்சி மற்றும் இடது கட்சி இரண்டும் சேர்ந்துதான் இந்த விளையாட்டை விளையாடுகின்றன. அவர்கள் கோட்பாட்டுரீதியில் இராணுவ தலையீட்டை எதிர்க்கவில்லை என்பதோடு, அவர்கள் சிரிய போரில் பல்வேறு கன்னைகளைப் பல ஆண்டுகளாக ஆதரித்து வந்துள்ளனர். அவர்களது "எதிர்ப்பானது", போர் பற்றிய ஒரு தீவிர பொது விவாதம் உண்மையில் நடந்து வருகிறது என்ற பொய்யான பிம்பத்தை உருவாக்கவே சேவையாற்றுகிறது.

இது பசுமை கட்சி தலைவர் Anton Hofreiter இன் பங்களிப்பிலிருந்து தெளிவாகிறது. ஜேர்மன் இராணுவத்தின் அதிகாரத்தை பசுமை கட்சி நிராகரிப்பதானது அவர்கள் இராணுவ நடவடிக்கை எடுக்க விரும்பவில்லை என்பதை அர்த்தப்படுத்தாது என்றும், அவர்கள் வெறுமனே அரசாங்கத்தின் முன்னுக்குப்பின் முரணான மற்றும் சரியான முறையில் பரிசீலிக்கப்படாத நடவடிக்கைகளைத் தான் நிராகரிக்கிறார்கள் என்பதையும் அவர் அழுத்தந்திருத்தமாய் தெரிவித்தார்.

"முதலில் ஒரு தெளிவான தீர்மானத்தை முன்வையுங்கள்!" என்று உரக்க கூறிய அவர், "யார் கட்டளை இடுவார்கள்? ரஷ்யாவை எவ்வாறு நீங்கள் கையாள்வீர்கள்? அசாத்தை நீங்கள் எவ்வாறு கையாள்வீர்கள்" என்பது போல சகல முக்கிய வினாக்களும் பதிலின்றி இருப்பதாக குறைபட்டு கொண்டார். பாதுகாப்பு மந்திரி வொன் டெர் லெயன் தொடர்ந்து அவரது நிலைப்பாடுகளை மாற்றி வருவதற்காகவும் மற்றும் அவரது கருத்துக்களுக்கு அவரே முரண்படுவதற்காகவும் அவரைக் குறைகூறி, தம்மால் "எந்த தெளிவான மூலோபாயத்தையும்" காண முடியவில்லை என்றுரைத்தார். 

இடது கட்சி தலைவர் Sahra Wagenknecht, "போர் விடயங்களை மோசமாக்குகின்றன!" என்று அறிவித்து, அந்த முடிவு துரிதமாக முன் தள்ளப்பட்டு வருவதைக் குறித்து புலம்பினார். போர் புதிய பயங்கரவாத நடவடிக்கைகளை மட்டுமே உருவாக்கும் என்பதையும் சேர்த்துக் கொண்ட அவர், யார் அதிகமானவர்களைக் கொல்கிறார்கள் என்று உண்மையில் IS உடன் மேற்கு போட்டிபோட விரும்புகிறதா என்றவர் கேள்வி எழுப்பினார். இதில் ஏனைய நாடாளுமன்ற கன்னைகளும் சேர்ந்து கொண்டன.

அதேநேரத்தில் Wagenknecht, அவர் போரை நிராகரிப்பது குறிப்பாக அமெரிக்காவை நோக்கி மற்றும் நேட்டோ கூட்டணியில் அதன் மேலாதிக்கத்தை நோக்கி திரும்பியிருப்பதை தெளிவுபடுத்தினார். "அமெரிக்காவின் போர்களில் அதை ஆதரித்த ஐரோப்பிய கொள்கை ஒரு பிரதான தோல்வியாகும்," என்றவர் அறிவித்தார்.

போருக்கு எதிரான போராட்டம் தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களின் ஒரு சுயாதீனமான இயக்கம் அவசியப்படுகிறது என்பதையே அந்த விவாதம் எடுத்துக்காட்டுகிறது. மத்திய கிழக்கில் ஜேர்மனியின் இராணுவ தலையீட்டுக்குப் பல ஆண்டுகளாக தயாரிப்பு செய்யப்பட்டுள்ளது என்ற வெளிப்படையான உண்மையை நாடாளுமன்ற பிரதிநிதிகளில் ஒருவர் கூட குறிப்பிட்டுக் காட்டவில்லை.

பாரிஸ் தாக்குதல்கள் கைவசமிருந்த இத்தகைய திட்டங்களை நடைமுறைப்படுத்த வெறுமனே ஒரு சாக்குபோக்கை வழங்கியது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், ஜனாதிபதி கௌவ்க், வெளியுறவு மந்திரி ஸ்ரைன்மையர் மற்றும் பாதுகாப்பு மந்திரி வொன் டெர் லெயன் "இராணுவ கட்டுப்பாடுகள் முடிவுக்கு" வருவதாக பிரகடனப்படுத்தினார்கள். ஜேர்மனி "உலக அரசியல் பக்கவாட்டில் இருந்து மட்டும் கருத்து தெரிவிப்பதையும் விட மிகவும் பலமானது" என்று கூறிய அவர்கள், "வெளிநாட்டு மற்றும் பாதுகாப்பு கொள்கை விவகாரங்களில் விரைவாகவும், இன்னும் அதிக உறுதியோடும் இன்னும் நிறைய போதுமானளவிற்கும் தலையீடு செய்ய தயாரிப்பு செய்ய" வேண்டுமென தெரிவித்தார்கள்.

சகல நாடாளுமன்ற கட்சிகளும், ஜேர்மன் இராணுவவாதத்திற்கும் மற்றும் வல்லரசு அரசியலுக்கும் திரும்புவதை ஆதரிக்கின்றன, இதில், வேறுவேறு தந்திரோபாய கருத்துவேறுபாடுகள் இருந்தாலும், மக்களுக்கு எதிராக ஒரு கண்கூடான போருக்கான சதி நடந்து வருகிறது. 

உலக சோசலிச வலைத் தளமும் மற்றும் ஜேர்மன் சோசலிச சமத்துவ கட்சியும் (Partei für Soziale Gleichheit - PSG) நீண்ட காலத்திற்கு முன்னரே அதிகரித்துவரும் போர் அபாயத்தைக் குறித்து எச்சரித்தது. செப்டம்பர் 2014 இல், ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியின் சிறப்பு மாநாடு போருக்கு எதிராக ஒரு தீர்மானம் நிறைவேற்றியது, அது பின்வருமாறு குறிப்பிடுகிறது: "அமெரிக்கா, கட்டார், சவூதி அரேபியா மற்றும் துருக்கியால் உருவாக்கப்பட்டு ஆதரிக்கப்பட்ட பயங்கரவாத போராளிகள் குழுவான இஸ்லாமிய அரசுக்கு (IS) எதிராக சண்டையிடுகிறோம் என்ற சாக்கில், மூலப்பொருள் வளம் நிறைந்த அப்பிராந்தியத்தின் கூடுதல் வன்முறையான பங்கீடு தொடங்கியுள்ளது, இது ஈராக், லிபியா மற்றும் சிரியாவின் முந்தைய போர்களைக் காட்டிலும் இன்னும் நிறைய இரத்தந்தோய்ந்ததாக இருக்கும் என்பதை நிரூபிக்க அச்சுறுத்துகிறது." 

இப்போதோ, ஜேர்மனியும் அந்த வளம் நிறைந்த பிராந்தியத்தின் வன்முறைரீதியிலான மறு-பங்கீட்டில் இராணுவரீதியில் பங்கெடுத்து வருகிறது.