சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The new imperialist carve-up of the Middle East

மத்திய கிழக்கில் புதிய ஏகாதிபத்திய துண்டாடல்

Joseph Kishore
7 December 2015

Use this version to printSend feedback

கடந்த வார சம்பவங்கள் 21 ஆம் நூற்றாண்டு ஏகாதிபத்தியத்தின் அபிவிருத்தியில் ஒரு மைல்கல்லாக வரலாற்றில் பதியப்பெறும். பிரான்ஸ் கடந்த மாதம் சிரியாவில் அதன் சொந்த குண்டுவீச்சு நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியதைப் பின்தொடர்ந்து, ஒரு சில நாட்கள் இடைவெளியில், அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஜேர்மனியும் சிரியாவில் அவற்றின் இராணுவ தலையீட்டைத் தீவிரப்படுத்தின.

இந்நடவடிக்கைகளுக்கு சாக்குபோக்காக இருப்பவை பாரிஸில் நடந்த நவம்பர் 13 பயங்கரவாத தாக்குதல்களாகும், அதற்குப் பின்னர் இப்போது புதனன்று கலிபோர்னியாவின் சான் பெர்னார்டினோவில் நடந்த கொடூரமான பாரிய துப்பாக்கிச்சூடு சம்பவமும் ஆகும். ஆனால் பொது மக்களுக்கு முன்வைக்கப்பட்ட காரணங்கள், இராணுவ மற்றும் உளவுத்துறை அமைப்புகளின் உயர்மட்டத்தில் நடந்துவரும் மூலோபாய விவாவதங்களுடன் வெகு குறைந்தளவே சம்பந்தப்படுகின்றன.

பாரிஸில் 130 பேர் மற்றும் சான் பெர்னார்டினோவில் 14 பேர் கொல்லப்பட்டமையின் துன்பத்தை, மத்திய கிழக்கில் பிரதான ஏகாதிபத்திய சக்திகளின் திடீர் அதிர்ச்சியூட்டும் இராணுவ விரிவாக்கத்தை கொண்டு விளக்க முடியாது. 1915 இல், 1,198 பேர் உயிரிழந்த RMS லூசிடானியா கப்பல் மூழ்கிய பின்னர், அமெரிக்கா முதலாம் உலக போருக்குள் இறங்குவதைத் தவிர்த்துக் கொண்டதை ஒருவர் நினைவுகூர வேண்டும். அச்சமயத்தில், அமெரிக்க ஆளும் வர்க்கம் அப்பெரும் போரில் தலையீடுவதன் அவசியம் மீது அப்போது பிளவுபட்டிருந்தது.

சிரியா போருக்குப் பின்னாலிருக்கும் அடிப்படை சக்தி எதுவோ அதே தான் ஒட்டுமொத்தமாக மத்திய கிழக்கின் ஏகாதிபத்திய தூண்டாடலுக்கும் ஊக்கமளித்து வருகிறது: அதாவது, சர்வதேச நிதிய மூலதனத்தின் நலன்கள். கொள்ளையடிப்பதில் பங்கு கோர வேண்டுமானால், அவர்கள் பங்கிற்கு அவர்கள் எவ்வளவு கொலை செய்திருக்கிறார்கள் என்ற பட்டியலை வைத்திருக்க வேண்டும் என்பது பிரதான ஏகாதிபத்திய சக்திகளுக்கு தெரியும்.

இந்த மத்திய கிழக்குப் போர் முனைவுக்கு மக்களிடையே ஆழ்ந்த அதிருப்தி நிலவுகிறது, அது ஊடகங்களால் தூண்டிவிடப்படும் பீதியூட்டும் ஒரு சூழலுடன் சேர்ந்து சமீபத்திய தாக்குதல்களைப் பயன்படுத்தவும், நடவடிக்கைகளை எந்தளவிற்கு சாத்தியமோ அந்தளவிற்கு துரிதமாக முடுக்கிவிடவும் வெறித்தனமாக பாய்வதை எடுத்துக்காட்டுகிறது. கடந்த வார சம்பவங்களைக் கவனித்து பாருங்கள்:

செவ்வாயன்று ஒபாமா நிர்வாகம் அறிவிக்கையில், அது சிறப்பு நடவடிக்கை படைகளின் ஒரு புதிய பிரிவை அனுப்பவிருப்பதாக அறிவித்தது, இது ISIS அல்லது ISIL (ஈராக் மற்றும் சிரியாவின் இஸ்லாமிய அரசு) நோக்கி திருப்பிவிடப்பட்டிருப்பதாக பெயரளவிற்கு கூறப்பட்டது. சிரியாவில் எந்தவிதமான போர் தீர்வும் ரஷ்யாவின் முக்கிய கூட்டாளியான ஜனாதிபதி பஷார் அல் அசாத் நீக்கப்படுவதை உள்ளடக்கி இருக்க வேண்டுமென, அதே நாளின் பத்திரிகையாளர் கூட்டம் ஒன்றில், ஒபாமா மீண்டும் அறிவித்தார்.

பிரிட்டன் தொழிற் கட்சி தலைவர் ஜெர்ரெமி கோர்பின் அவரது கட்சி நாடாளுமன்ற அங்கத்தவர்கள் "சுதந்திரமாக வாக்களிக்கலாம்" என்பதற்கு உடன்பட்டதன் மூலமாக போருக்குப் பாதையைத் திறந்துவிட்டதும், புதனன்று, பிரிட்டிஷ் நாடாளுமன்றம் சிரியாவில் இராணுவ நடவடிக்கைக்கு ஆதரவாக வாக்களித்தது. பிரிட்டிஷ் போர்விமானங்கள் உடனடியாக புதனன்று இரவே சிரியா இலக்குகள் மீது குண்டுவீச நகர்ந்தன, அதேவேளையில் பிரதம மந்திரி டேவிட் கேமரூன் போரை எதிர்க்கும் யாரொருவரையும் "பயங்கரவாதத்தின் அனுதாபியாக" கண்டித்தார்.

வெள்ளியன்று ஜேர்மன் நாடாளுமன்றம் (Bundestag) ஏறத்தாழ எந்தவித விவாதமும் இன்றி ஒரு வாக்கெடுப்பு மூலமாக அவசர அவசரமாக சிரிய போரில் இணைந்தது. இந்த நாடாளுமன்ற போர் தீர்மானத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்னரே 1,200 துருப்புகள், ஆறு டொர்னொடோ விமானங்கள் மற்றும் ஒரு போர்க்கப்பலை அப்பிராந்தியத்திற்கு அனுப்ப முடிவெடுத்திருந்தது.

பின்னர், வாரயிறுதி வாக்கில், அமெரிக்க ஊடகங்களும் மற்றும் அரசியல் ஸ்தாபகங்களும் போரை விரிவாக்க அழுத்தமளிப்பதற்காக சான் பெர்னார்டினோ படுகொலையை சுரண்ட நகர்ந்தன. அமெரிக்கா "அடுத்த உலகப் போரை" முகங்கொடுக்கிறது (நியு ஜெர்சி கவர்னர் கிறிஸ் கிறிஸ்டீன்) என்றும், “தேசத்திற்கு ஒரு போர்கால ஜனாதிபதி அவசியப்படுகிறார்" (டெக்சாஸ் செனட்டர் டெட் குரூஸ்) என்றும், “அவர்கள் நம் மீது போர் அறிவித்துள்ளனர், நாமும் அவர்கள் மீது போரை அறிவிக்க வேண்டும்" (முன்னாள் புளோரிடா கவர்னர் ஜெப் புஷ்) என்றும் கூறி, குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்கள் போர்வெறியூட்டும் அறிக்கைகளை வெளியிட்டனர்.

ஞாயிறன்று இரவு உரையில், ஒபாமா அவருக்கு எதிரான குடியரசு கட்சி விமர்சனங்களுக்கு எதிராக சிரியாவில் அவரது சொந்த கொள்கையைப் பாதுகாத்தார். ஈராக் மற்றும் சிரியாவிற்கு பாரியளவில் தரைப்படைகளை அனுப்புவதற்கான அவரது எதிர்ப்பையும், விமானத் தாக்குதல்களை அதிகரிக்க, சிரியாவிற்குள் இருக்கும் குழுக்களுக்கு நிதியளிக்க மற்றும் அண்டைநாடுகளின் துருப்புகளைப் பிரயோகிக்க அவரது ஆதரவையும் அவர் மீண்டும் வலியுறுத்தினார். பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் இங்கிலாந்தின் நடவடிக்கைகளை பாராட்டிய ஒபாமா, “[நவம்பர் 13] பாரிஸ் தாக்குதல்களுக்குப் பின்னர், நமது நெருக்கமான கூட்டாளிகள்நமது இராணுவ நடவடிக்கைக்கு அவர்களின் பங்களிப்பை வழங்க விரைந்துள்ளனர், இது ISIL அழிப்பதற்கான நமது முயற்சியை அதிகரிக்க உதவும்,” என்றார்.

அவர்கள் போரை துரிதப்படுத்தி வருகையில், ஒபாமாவும் சரி அரசியல் ஸ்தாபகத்தின் ஏனைய எந்த பிரிவும் சரி ISIS இன் உண்மையான தோற்றுவாய்களைக் குறித்து எதையும் கூற இலாயக்கற்று உள்ளது, இது 15 ஆண்டுகளாக அமெரிக்க வெளியுறவு கொள்கைக்கு அடித்தளமாக இருந்துவரும் "பயங்கரவாதத்திற்கு எதிரான போரின்" பாசாங்குத்தனத்தை அம்பலப்படுத்திவிடும்.

ஞாயிறன்று அவரது உரையில், ஒபாமா குறிப்பிடுகையில், “ஈராக் மற்றும் பின்னர் சிரியா போர் குழப்பங்களுக்கு இடையிலும்" ISIS இன் வளர்ந்திருக்கிறதென, ஏதோ அமெரிக்காவின் கொள்கைக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதைப் போல, பட்டும்படாமலும் எடுத்துரைத்தார். உண்மையில் அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் முதலில் சட்டவிரோதமாக ஈராக்கை ஆக்கிரமித்து சீரழித்தனர், பின்னர் சிரியாவில் இஸ்லாமிய அடிப்படைவாத குழுக்களைக் கட்டமைத்தனர், அதிலிருந்து தான் ISIS, சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத்திற்கு எதிராக போரின் தாக்குமுகப்பாக மேலெழுந்தது.

பாரிஸ் தாக்குதல்களுக்கு தலைமை வகித்த ISIS போராளிகளால் சிரியாவிற்கு சுதந்திரமாக சென்று வர முடிந்திருந்தது, ஏனென்றால் அதேபோன்ற ஆயிரக் கணக்கான இளைஞர்கள் அதிகாரிகளின் ஆதரவோடு அசாத்திற்கு எதிரான போரில் இணைய ஐரோப்பாவிலிருந்து சிரியாவிற்குப் பயணித்திருந்தனர்.

சான் பெர்னார்டினோ தாக்குதலைப் பொறுத்த வரையில், அதிகாரிகள் அந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தை ஒரு பயங்கரவாத தாக்குதலாக நியாயப்படுத்த, அந்த துப்பாக்கிதாரிகளில் இருவர் சவூதி அரேபியாவிற்குப் பயணித்திருந்ததையும் மற்றும் அல் நுஸ்ரா முன்னணியில் இருந்தவர்களுடன் அவர்களுக்கு தொடர்பு இருந்ததையும் மேற்கோளிட்டனர். மத்தியக் கிழக்கு முழுவதிலும் இஸ்லாமிய அடிப்படைவாத குழுக்களுக்கு நிதியுதவி செய்வதற்கான மற்றும் அவர்களை ஆதரிப்பதற்கான மையமாக விளங்கும் சவூதி அரேபியா, அப்பிராந்தியத்தில் அமெரிக்காவின் முக்கிய கூட்டாளியாக உள்ளது, மற்றும் அல் கொய்தா உடன் இணைப்பு பெற்ற அல் நுஸ்ரா முன்னணி நடைமுறையளவில் சிரியாவில் அமெரிக்காவின் கூட்டாளியாக உள்ளது.

ஏகாதிபத்திய சக்திகளின் நடவடிக்கைகள், சமீபத்திய தாக்குதல்களுக்கு ஒரு விடையிறுப்பு என்பதை விட, நீண்டகாலமாக கைவசமிருந்த திட்டங்கள் மற்றும் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்குரியதாக உள்ளன. பிரிட்டனில், இந்த வார வாக்கெடுப்பானது, அசாத் ஆட்சியுடன் ஒரு திட்டமிட்ட அமெரிக்க-தலைமையிலான போரில் பங்கெடுப்பதை நிராகரித்த 2013 மக்களவை (House of Commons) வாக்கெடுப்பை அப்படியே தலைகீழாய் திருப்பிப்போடுகிறது. ஜேர்மன் ஆளும் வர்க்கம் இன்னும் அதிக செயலூக்கத்துடனான இராணுவ பாத்திரம் வகிக்கவும், ஐரோப்பாவின் ஆதிக்க சக்தியாக தன்னைத்தானே ஸ்திரப்படுத்தவும் ஆரவாரத்துடன் இறங்கியுள்ளது.

அமெரிக்காவில், சான் பெர்னார்டினோ தாக்குதல்களுக்கு முன்னதாக, அங்கே அரசியல் ஸ்தாபகம் மற்றும் ஊடகங்களிடமிருந்து தரைப்படை துருப்புகளை அனுப்புவதற்கும் மற்றும் சிரியாவில் பறக்க தடைவிதிக்கப்பட்ட பகுதியை நடைமுறைப்படுத்தவும் ஆணித்தரமான அழைப்புகள் வந்தவாறு இருந்தன.

அமெரிக்கா தலைமையில், ஏகாதிபத்திய சக்திகள் மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவை மையமிட்டு, ஒரு கால் நூற்றாண்டு காலமாக முடிவில்லா போரில் ஈடுபட்டுள்ளன. ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர், மற்றும் மில்லியன் கணக்கானவர்கள் அகதிகளாக்கப்பட்டு உள்ளனர். புஷ் நிர்வாகத்தின் கீழ் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கிய போர்களுக்குப் பின்னர், ஒபாமா லிபியா போரையும், அத்துடன் உக்ரேன் மற்றும் சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கான சிஐஏ-ஆதரவிலான நடவடிக்கைகளையும் மேற்பார்வையிட்டுள்ளார். ஒவ்வொரு நடவடிக்கையின் நாசகரமான விளைவுகளும் போரை விரிவாக்குவதற்கும் தீவிரப்படுத்துவதற்கும் களம் அமைத்துள்ளது.

என்ன நடந்து வருகிறதென்றால் உலகின் மறுபங்கீடு மற்றும் மறுகாலனிமயமாக்கம் ஆகும். பழைய சக்திகள் அனைத்தும் அவற்றின் பங்குகளுக்கு உரிமைகோர ஒன்றின்மேல் ஒன்று ஏறுகின்றன. தற்போது எண்ணெய் வளம் நிறைந்த மத்திய கிழக்கில் மையமிட்டு இருந்தாலும், சிரியா மோதல் ரஷ்யா உடனான ஒரு பினாமி போராக அபிவிருத்தி அடைந்து வருகிறது. யுரேஷிய பெருநிலத்தின் மறுபுறம், அமெரிக்கா தென் சீனக் கடலில் சீனாவிற்கு எதிரான அதிகரித்த ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை நடத்தி வருகிறது.

இன்றைய புவிசார் அரசியல் நிலைமை முதலாம் உலக போருக்கு முன்னர் இருந்த எந்த காலக்கட்டத்தையும் விட மிகவும் வெடிப்பார்ந்து உள்ளது. அவர்களிடம் முற்போக்கான தீர்வு எதுவும் இல்லாத ஒரு கட்டுக்கடங்காத பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியால் சுற்றி வளைக்கப்பட்டு, ஆளும் வர்க்கம் அதிகரித்தளவில் போர் மற்றும் சூறையாடலை மட்டுமே ஒரே சாத்தியமான விடையிறுப்பாக பார்க்கிறது.