சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : கிரீஸ்

Greek parliament approves austerity budget for 2016

கிரேக்க நாடாளுமன்றம் 2016 க்கான சிக்கன வரவுசெலவுத் திட்டக்கணக்கிற்கு ஒப்புதல் வழங்கியது

By Stefan Steinberg
8 December 2015

Use this version to printSend feedback

ஞாயிறன்று காலை கிரேக்க நாடாளுமன்றம் ஒரு புதிய சுற்று கூடுதல் சிக்கனத்திட்ட நடவடிக்கைகளை உள்ளடக்கிய 2016 வரவுசெலவுத் திட்டக்கணக்கு முன்மொழிவுக்கு ஒப்புதல் வழங்கி வாக்களித்தது. அந்த வரவுசெலவுத் திட்டக்கணக்கு பிரதம மந்திரி அலெக்சிஸ் சிப்ராஸ் தலைமையிலான சிரிசாவினால் வரையப்பட்டதாகும்.

ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தை உள்ளடக்கிய முக்கூட்டால் அச்சிக்கனத் திட்ட நடவடிக்கைகள் கோரப்பட்டிருந்தன. ஓய்வூதியங்கள் மற்றும் சமூக நிலைமைகளைப் பாதுகாக்கிறோம் என்று சூளுரைத்ததன் அடிப்படையில் இந்தாண்டின் தொடக்கத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும், இப்போது சிப்ராஸூம் சிரிசாவும், ஓய்வூதியங்களில் 1.8 பில்லியன் யூரோ வெட்டுக்கள் மற்றும் 2 பில்லியன் யூரோவிற்கு சற்று அதிகமான வரி உயர்வுகள் உட்பட கூடுதலாக 5.7 பில்லியன் யூரோ கிரேக்க பொதுச் செலவின வெட்டுக்களுக்கு உடன்பட்டுள்ளனர்.

இந்த சமீபத்திய வெட்டுக்கள், சமூக செலவினங்கள் மற்றும் ஓய்வூதியங்களைச் சிதைப்பதற்கு எதிராக போராட ஏதென்ஸிலும் மற்றும் ஏனைய பிரதான கிரேக்க நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடந்து வெறும் ஒருசில நாட்களில் வந்துள்ளன. பல ஓய்வூதியதாரர்கள் ஏற்கனவே கடந்த ஐந்தாண்டுகளின் சிக்கன நடவடிக்கைகளில் 40 சதவீத அளவிற்கு அவர்களின் வருமானம் குறைக்கப்பட்டிருப்பதை அனுபவித்து வருகின்றனர். வேலைவாய்ப்பின்மை உத்தியோகப்பூர்வமாக 25 சதவீதத்தில் நிற்கின்ற நிலையில், பல குடும்பங்கள் மூத்த குடும்ப உறுப்பினர்களின் ஓய்வூதியங்களையே உயிர்வாழ்வதற்கான வழிவகையாக சார்ந்துள்ளது.

சிக்கனத் திட்டத்திற்குப் பாரிய மக்கள் எதிர்ப்பு இருப்பதை அறிந்துள்ள சிப்ராஸ், அவரது திட்டத்தை அமுலாக்க வலதுசாரி எதிர்கட்சிகளின் ஆதரவை வென்றெடுக்கும் பொருட்டு அனைத்துக் கட்சிகளின் ஒருங்கிணைந்த தாக்குதல் இருப்பதாக காட்டுவதற்கு நாடாளுமன்ற விவாதத்திற்கு முயன்றார். எதிர்கட்சிகள் அவரது யோசனைகளை நிராகரித்ததுடன், அந்த வரவுசெலவு திட்டக்கணக்கு ஒரு சிறிய பெரும்பான்மையுடன் 153 வாக்குகள் ஆதரவாகவும், 145 வாக்குகள் எதிராகவும் நிறைவேற்றப்பட்டது.

2010 க்குப் பின்னரில் இருந்து கிரீஸ்க்கான மூன்றாவது பிணையெடுப்பாக யூரோமண்டல நாடுகளால் வாக்குறுதி அளிக்கப்பட்ட 86 பில்லியன் யூரோ நிதியில் (93 பில்லியன் டாலர்) பெரும் பெரும்பான்மை நிதி, மேற்கொண்டும் கிரேக்க வங்கிகளது மீள்மூலதனமாக்கலுக்கும், கிரிஸின் சர்வதேச கடன் வழங்குனர்களுக்குக் கடன்கள் மற்றும் வட்டிகளைத் திருப்பிச் செலுத்துவதையும் நோக்கி செல்லும்.

கிரேக்க கடன் இப்போது 327.6 பில்லியன் யூரோவாக (356 பில்லியன் டாலராக), அல்லது (2015 மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 180.2 சதவீதமாக இருந்ததுடன் ஒப்பிடுகையில்) அது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 187.8 சதவீதமாக உயருமென முன்கணிக்கப்படுகிறது. வங்கிகளின் மிக சமீபத்திய உத்தேச கணிப்புகள், அதிகரித்துவரும் மலையளவிலான கடன்களை அதன் கடன் வழங்குனர்களுக்கு திரும்பி செலுத்த கிரீஸிற்கு அடுத்த 42 ஆண்டுகள் ஆகுமென மதிப்பிடுகின்றன.

சிப்ராஸ் மற்றும் சிரிசாவின் அடிபணிவு, அதன் கடன் வழங்குனர்கள் இன்னும் அதிக சிக்கன நடவடிக்கைகளைக் கோருவதற்குரிய தைரியத்தைப் பெற மட்டுமே சேவையாற்றி உள்ளது.

இம்மாத தொடக்கத்தில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜேர்மன் அதிகாரிகள், முக்கூட்டினால் கோரப்பட்ட 2015-2016 க்கான 60 கூடுதல் "சீர்திருத்தங்களின்" ஒரு பட்டியலை நடைமுறைப்படுத்த ஏதென்ஸ் நீண்டகாலம் எடுத்துக் கொள்வதாக குறிப்பிட்டனர். ஜேர்மன் பத்திரிகை Die Welt, டிசம்பர் 1 தேதியிட்ட ஏதென்ஸ்க்கான ஜேர்மன் தூதரகத்தின் ஓர் அறிக்கையை மேற்கோளிட்டது, அது, “கிரீஸில் நடைமுறையளவில் ஆட்சியே நடக்கவில்லை. அந்நாடு ஒரு திசைதிருப்பும் விசையற்ற கப்பலைப் போல உள்ளது,” என்று கடுமையாக குறைகூறியது.

ஏற்கனவே முக்கூட்டின் கோரிக்கைகளை நடைமுறைப்படுத்துவதை நோக்கி சிப்ராஸ் அரசாங்கம் கடுமையான முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ள நிலையிலும், இது மாதிரியான குறைகூறல்கள் வருகின்றன. சிரிசா ஏற்கனவே ஓய்வூதிய வயதை அதிகரித்துள்ளது, ஓய்வூதியதாரர்களின் கட்டாய மருத்துவ காப்பீட்டு பங்களிப்பு தொகையை உயர்த்தியுள்ளது, முன்கூட்டிய ஓய்வூதிய சலுகைகள் பலவற்றை நீக்கியுள்ளது. அதற்கும் கூடுதலாக, தங்களின் அடமானக் கடன்களைச் செலுத்தவியலாத குடும்பங்களை ஜப்தி செய்வதிலிருந்து பாதுகாப்பு வழங்கிவந்த பாதுகாப்பு விதிமுறைகளை நீக்கும் நடைமுறைகளைச் சிப்ராஸ் நடைமுறைப்படுத்தி உள்ளார்.

கிரீஸ் அதன் அடுத்த ஒரு பில்லியன் யூரோ பாக்கித்தொகையைப் பெற டிசம்பர் மத்திய காலத்திற்குள் நாடாளுமன்றத்தினூடாக நிறைவேற்ற வேண்டிய 13 “முன்கூட்டிய நடவடிக்கைகள்" என்றழைக்கப்படுவதன் விபரங்களை இறுதி செய்ய, முக்கூட்டின் பிரதிநிதிகள் திங்களன்று கிரீஸிற்குத் திரும்பி வந்திருந்தனர். அந்த பட்டியலின் முதலிடத்தில் இருந்தது தனியார்மயமாக்கலும் மற்றும் அந்நாட்டின் பிரதான மின்சார வழங்குனர் ADMIE போன்ற முக்கிய சேவைகள் மற்றும் தொழில்துறையில் சர்வதேச முதலீட்டாளர்களை அனுமதிப்பதும் ஆகும்.

மொத்தம் 50 பில்லியன் யூரோ திரட்டும் நோக்கில் ஒரு புதிய தனியார்மயமாக்கல் நிர்வாக அமைப்பை அமைக்க வலியுறுத்தியதற்கு கூடுதலாக, முக்கூட்டு, தேசிய சொத்துக்களை விற்பதிலிருந்து எந்த நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் அதிக இலாபமீட்டலாம் என்பதை முடிவு செய்ய, அந்த நிர்வாக அமைப்பின் நிர்வாகக்குழுவில் வெளிநாட்டு முதலீட்டாளர்களை அமர்த்த அனுமதிக்குமாறு கோரி வருகிறது.

பொதுத்துறையில் கூடுதல் சம்பள வெட்டுக்கள் மற்றும் கூடுதல் வரி உயர்வுகள் ஆகியவை அந்த அமைப்புகளால் வலியுறுத்தப்படும் ஏனைய கோரிக்கைகளாகும்.

ஞாயிறன்று வரவுசெலவு திட்டக்கணக்கு வாக்கெடுப்பு வெறும் இரண்டு நாட்களுக்கு முன்னதாக, வங்கிகளால் கட்டளையிடப்பட்ட சிக்கனத்திட்டத்தை சிரிசா நடைமுறைப்படுத்துவதற்கு அமெரிக்க ஒபாமா நிர்வாகத்தின் ஒப்புதல் கிடைத்தது. கடந்த வெள்ளியன்று ஏதென்ஸிற்கான விஜயத்தில், வெளியுறவுத்துறை செயலர் ஜோன் கெர்ரி அமெரிக்கா சிரிசாவின் பொருளாதார கொள்கையை ஆதரிப்பதாக சிப்ராஸிற்கு உத்தரவாதம் வழங்கினார்.

“பொருளாதார சீர்திருத்த முயற்சியை மற்றும் கடன் சவால்களை நீங்கள் எவ்விதத்தில் அணுகி வருகிறீர்களோ அதை நான் பாராட்டுகிறேன்,” என்று கெர்ரி கடந்த வெள்ளியன்று மேக்சிமோஸ் மான்சனில் அவர்கள் சந்திப்பின் ஆரம்பத்தில் சிப்ராஸிடம் தெரிவித்தார்.

“பரந்த பிராந்தியத்தில் ஸ்திரப்பாட்டு அச்சுறுத்தல்கள்" நிலவுகின்ற போது, “அப்பிராந்தியத்தின் சிக்கலான நேரத்திலும்" கிரீஸிற்கு வருகை தந்ததற்காக சிப்ராஸ் கெர்ரிக்கு நன்றி தெரிவித்தார்.

சிக்கனத் திட்டத்தை அமுலாக்குவதற்கு அமெரிக்கா தரும் ஆதரவிற்குப் பிரதியீடாக, வெளியுறவு கொள்கை வட்டத்தில் அமெரிக்காவுடன் சிரிசா இணைந்து இயங்க தயாராக இருப்பதாக சிப்ராஸ் கெர்ரிக்கு உறுதியளித்தார். “இப்பிராந்தியத்தில் கிரீஸ் ஸ்திராப்பாட்டு [சக்தியாக] விளங்குகிறது என்பதை நான் உங்களுக்குக் காட்ட விரும்புகிறேன்,” சிப்ராஸ் கெர்ரியிடம் தெரிவித்தார்.