சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

இலங்கை: சூழல் மாசடைவுக்கு துன்னான எச்.ஆர்.பி. ஆலை பொறுப்புச்சொல்ல வேண்டியதில்லை என அவிஸ்சாவலை மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது

Vilani Peiris
30 November 2015

Use this version to printSend feedback

ஹேலிஸ் கம்பனிக்கு சொந்தமான, டிப்ட் புரடக்ட்ஸ் நிறுவனத்தின் ஹங்வெல்ல துன்னானையில் அமைந்துள்ள ஹங்வெல்ல ரப்பர் புரடக்ட்ஸ் (எச்.ஆர்.பி) தொழிற்சாலையினால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டை விசாரித்த அவிஸ்சாவலை மேல் நீதிமன்றம், அதன் முடிவை நவம்பர் 11 அறிவித்தது. அந்த தீர்ப்பு ஆலையை தொடர்ந்தும் இயக்குவதற்கு அதிகாரம் அளித்தது. அந்த ஆலையினால் சூழல் மாசடைவு ஏற்படுவதன் காரணமாக, 14 நாட்களுக்குள் ஆலையை மூடிவிடுமாறு கடந்த ஏப்பிரல் 30 அவிஸ்சாவலை நீதவான் விடுத்த உத்தரவு, இந்த புதிய முடிவின் மூலம் தலைகீழாக மாற்றப்பட்டுள்ளது. சூழல் மாசடைவுக்கான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டிருந்த எச்.ஆர்.பி. ஆலையை தொடர்ந்தும் இயக்குவதற்கு அனுமதி கொடுத்தமை வெகுஜனங்களின் பெரும் எதிர்ப்புக்கு வழிவகுத்துள்ளது.

பற்றி எரியக்கூடிய மக்கள் எதிர்ப்பை தடுப்பதற்காக, அரசாங்க நிறுவனங்களின் தொடர்ச்சியான மேற்பார்வையின் கீழ் தொழிற்சாலை இயங்க வேண்டும் என்பது போன்ற பல நிபந்தனைகளை நீதிமன்றம் விதித்திருந்தாலும், மக்கள் இந்த முடிவை எதிர்க்கும் அதேவேளை, உயர் நீதிமன்றில் மேன்முறையீடு செய்வதற்கும் தீர்மானித்துள்ளனர்.

அவிஸ்சாவலை மேலதிக நீதவான் டி.எம்.ஏ. செனவிரத்னவினால் ஏப்பிரல் 30 வழங்கப்பட்ட தீர்ப்பில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது: இந்த ஆலையின் காரணமாக 1. கிணற்று நீர் மற்றும் பொது நீர்விநியோக திட்டங்கள் மூலம் வழங்கப்படும் தண்ணீர் குடிப்பதற்கு பொருத்தமானதாக இல்லை... 2. விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியாமை 3. தொழிற்சாலை அமைந்துள்ள பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு பல்வேறு வகையிலான சுவாசச் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளமை... 4. சிறுநீரக, வயிறு மற்றும் ஈரல் நோய் போன்றவற்றுக்கு மக்கள் ஆளாகின்றமை 5. அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாதவாறு பெரும் சத்தம் கேட்கின்றமை, போன்ற பாதகங்கள் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

அவிஸ்சாவலை மேல் நீதிமன்ற நீதிபதி தேவிகா அபேரத்ன தனது தீர்ப்பை அறிவித்து கூறியதாவது: சுற்றுச் சூழல் அதிகாரசபையினால் ஆராயப்பட்டு நீதவான் நீதிமன்றத்துக்கு வழங்கப்பட்டுள்ள ஆவணங்களை கவனத்தில் எடுக்காமல், பே.4. (முந்தைய) தீர்ப்புக்கு முன்வைக்கப்பட்ட சாட்சியை ஆராய்வதில் நீதவான் அக்கறை காட்டவில்லை என்பது தெரியவந்துள்ளதுடன், மக்களுக்கு ஏற்படும் பாதிப்பு சம்பந்தப்பட்ட வழக்கின் பின்னணியை பார்க்கும்போது, அந்த அரச நிறுவனத்தினால் நீதவான் மன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட அறிக்கையை கவனத்தில் எடுக்காமை, இந்த வழக்கின் தீர்ப்பை மாற்றியமைக்குமளவுக்கு விசேட விடயமாகக் காணப்படுகின்றது.

நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்ட காலகட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அரசாங்கத்தின் மற்றும் சுற்றுச் சூழல் அதிகாரசபையின் அறிக்கைகளின் படி, ஆலையினால் வெளியேற்றப்படும் நீர், சூழல் (பாதுகாப்பு மற்றும் நிலைமை) கட்டளையின் கீழ் சுட்டிக்காட்டப்பட்டுள்ள எல்லைகளுக்கு உட்பட்டு விஞ்ஞானபூர்வமாக சுத்தீகரிக்கப்பட்ட பின்னரே வெளியிடப்படுவதாக குறிப்பட்டுள்ளது, என மேல் நீதிமன்ற தீர்ப்பு சுட்டிக் காட்டுகின்றது. நீதவான் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்ட சாட்சி, விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்படாது, கேட்டுத் தெரிந்துகொள்ளப்பட்டது, மற்றும் அது அவர்களது கருத்துத் தெரிவித்தல் மட்டுமே என்பதை காட்டுகின்றது, என மேல் நீதிமன்ற நீதிபதி அறிவித்தார்.

எனினும், நீதவான் நீதிமன்ற வழக்கு விசாரிக்கப்பட்ட கடைசி தினங்களில் முன்வைக்கப்பட்ட அரசாங்க அறிக்கைகளுக்கு நேர்மாறாக, சூழல் அதிகாரசபை உட்பட அரச நிறுவனங்களால் அதற்கு முந்தைய ஆண்டுகளில் முன்வைக்கப்பட்ட அறிக்கைகளில், ஆலை அவசியமான தரங்களின்படி இயங்கவில்லை என நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் சரியான தரத்தில் இல்லை என 2004ல் சுற்றுச் சூழல் அதிகாரசபையின் ஆணையாளர் நாயகம் வெளியிட்ட கட்டுரை ஒன்று, பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் நீதவான் மன்றத்துக்கு முன்வைக்கப்பட்டிருந்தது. அந்த அறிக்கையின்படி, அப்போது ஆலையில் இருந்து வெளியேற்றப்பட்ட கழிவு நீரில் இருக்க வேண்டிய அமோனியா மற்றும் நைட்ரஜன் வீதமானது உச்சக்கட்ட வரையறையை மீறி இருந்தது.

டிப்ட் புரடக்ட் நிறுவனங்களைச் சேர்ந்த, வெலிவேரியவில் அமைந்துள்ள வெனிக்ரோஸ் மற்றும் துன்னானையில் அமைந்துள்ள எச்.ஆர்.பி. ஆலைகளில் நச்சு ரசாயனத் திரவங்கள் சூழலுக்குள் வெளியிடப்படுவதை எதிர்த்து போராட்டம் நடத்திய மக்களுக்கு மீது நடத்தப்பட்ட பொலிஸ் தாக்குதல் சம்பந்தமாக, ஆறு மாத காலங்களாக சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) முன்னெடுத்த சுயாதீன தொழிலாளர் விசாரணையின் அறிக்கைகள் மற்றும் முடிவுகள், 2014 ஜூலை 20 அன்று கம்பஹா சனச மண்டபத்தில் பகிரங்கமாக வெளியப்பட்டதோடு அதில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது:

மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபை 2004 மே 10 நடத்திய பரிசோதனையின் பின்னர், எச்.ஆர்.பி. ஆலையின் முகாமையாளருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் ஆலைக்குள் கழிவு நீரை துப்புரவு செய்யும் உயிரியல் ரசாயன சுத்திகரிப்பு முறைமைகள் இரண்டும் ரசாயன சுத்திகரிப்பு முறைமை ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தாலும் உயிரியல் சிகிச்சை முறைமை ஒன்று செயற்படாமல் இருக்கின்றது, என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இயங்கக்கூடிய உயிரியல் விஞ்ஞான சுத்திகரிப்பு முறைமையும் ரசாயன சுத்திகரிப்பு முறைமையும் முறையான விதத்தில் செயற்படவில்லை என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. கட்டுரையை எழுதிய மத்திய சுற்றுச் சூழல் அதிகார சபையின் ஆணையாளர் நாயகம், கழிவு நீரில் இருக்கக் கூடிய உயர்ந்த அமோனியா நைட்ரஜன் செறிவு வீதமானது லீட்டருக்கு மில்லிகிராம் 50 ஆக இருந்தாலும், உயிரியல் சுத்தீகரிப்பு முறைமையின் கழிவு நீரில் அந்த வீதமானது லீட்டருக்கு மில்லிகிராம் 160 மற்றும் ரசாய சுத்திகரிப்பு முறைமையில் அது லீட்டருக்கு மில்லி கிராம் 113 ஆகவும் இருக்கின்றது, என குறிப்பிடுகின்றார். எனவே இதன் அர்த்தம் தண்ணீரில் குடிப்பதற்கு பொருத்தமற்ற அளவில் ரசாயனப் பொருட்கள் நிறைந்துள்ளது என்பதாகும்

ஹங்வெல்ல மற்றும் கொஸ்கம மக்கள், சுகாதார பரிசோதகர்களுடன் சேர்ந்து 2008 ஏப்பிரல் 23 அன்று, தொழில்சாலையை பரிசோதித்து அதன் கழிவு நீர் சுத்தீகரிக்கப்படாமல் சூழலுக்குள் கசியவிடப்படுவதாக கண்டறிந்துள்ளனர். பிரதேசத்தில் குழந்தைகள் மற்றும் முதியோருக்கும் அடிக்கடி ஏற்படும் சுவாசப் பிரச்சினை, தோல் நோய்கள் மற்றும் சிறுநீரக, ஈரல் நோய்களுக்கு, ஆலையினால் மேற்கொள்ளப்படும் சூழல் மாசுபடுத்தல் தாக்கத்தை ஏற்படுத்தும் வித்தத்தை தெளிவுபடுத்தும் மேலும் முக்கியமான சாட்சிகள் நீதவான் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. முதலீட்டுச் சபையில் இருந்து கிடைக்கப்பெற்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரம் தன்னிடம் இருப்பதாகவும், மக்களின் துன்பத்துக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனக் கூறி, ஆலையின் நிர்வாகிகள் முன்வைத்த சாட்சிகளை ஏற்றுக்கொள்ள முடியாது என நீதவான் நீதிமன்றத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இதற்கிடையில், மேல் நீதிமன்ற தீர்ப்பின் பின்னர், மக்களை மிரட்டும் நடவடிக்கைகள் ஆலை உரிமையாளர்களால் உக்கிரமாக்கப்பட்டுள்ளது. கடந்த மே 10 அன்று, களனி மிடியாவதையில் உள்ள சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் முன்னெடுப்பினால் ஆலைக்கு முன்னால் நடத்தப்பட்ட எதிர்ப்புப் போராட்டத்தின் பின்னர், அதன் தலைவர் பத்மசிறி வீரசிங்க, நெத் எஃப்.எம். வானொலிச் சேவைக்கு தெரிவித்த கருத்தில் ஆலைக்கு அவமதிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறி, அதன் நிர்வாகிகளால் 250 மில்லியன் நட்டஈடு கோரி அவிஸ்சாவலை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த சகல நடவடிக்கைகளும் நல்லாட்சியை நடத்துவதாக கூறிக்கொண்டு மோசடியாக ஆட்சிக்கு வந்த மைத்திரிபால மற்றும் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்தின் பொருளாதாரக் கொள்கைகளை முன்னெடுத்து, முதலீட்டாளர்களுக்கு வரிச் சலுகை கொடுத்து அவர்களது இலாபத்தை பாதுகாப்பதற்காக அர்ப்பணித்துக்கொண்டுள்ள நிலைமையின் கீழேயே இடம்பெறுகின்றது. துன்னானவில் போலவே ரதுபஸ்வலையிலும் (வெலிவேரிய) மக்கள் இந்த ஆலைகளால் ஏற்படுத்தப்பட்ட சூழல் மாசடைவுகளை எதிர்கொண்டதோடு, ஆட்சிக்கு வந்த பின்னர் இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதாக சிறிசேனவும் விக்கிரமசிங்கவும் தேர்தலில் வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்காக பொய் வாக்குறுதிகளைக் கொடுத்தனர்.

இந்த ஆலையின் நிர்வாகிகளுக்கே சொந்தமான, ரதுபஸ்வலையில் அமைந்துள்ள வெனிக்ரோஸ் ஆலையில் இடம்பெறும் சூழல் மாசடைவுக்கு எதிராக, 2013ல் நடந்த போராட்டத்தின் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்த ராஜபக்ஷ அரசாங்கம் மூன்று பேரைக் கொன்றது. பின்னர், அந்த ஆலை அந்த பிரதேசத்தில் இருந்து அகற்றப்பட்டு அதே மாவட்டத்தில் உள்ள சுதந்திர வர்த்தக வலயத்தில் நிறுவப்பட்டுள்ளது. எனினும், நடந்த சூழல் பாதிப்பு மேலும் பல ஆண்டுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தவுள்ளதோடு துப்பரவான தண்ணீர் இன்றி மக்கள் நோயாளர்களாவது அதிகரித்துச் செல்கின்றது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்கள் தொழில் செய்ய முடியாமல் துன்பப்படுகின்றனர். அங்கும் மக்களின் எதிர்ப்பை நசுக்குவதற்காக, 2013ல் நடந்த போராட்டத்தில் சொத்துக்களுக்கு நாசம் விலைவித்ததாக கூறி 23 பேருக்கு எதிராக பல வழக்குகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அவஸ்சாவலை மேல் நீதிமன்றத்தின் வழக்குத் தீர்ப்பு அரசாங்கத்தின் கொள்கையுடன் பிணைந்துள்ளமை இதன் மூலம் தெரியவருகின்றது.

துன்னான வழக்கு சம்பந்தமாக உலக சோசலிச வலைத் தளத்துடன் பேசிய துன்னானவாசி பின்வருமாறு கூறினார்: மேல் நீதிமன்ற வழக்குத் தீர்ப்பானது அரசாங்க நிறுவனத்தினால் பின்னர் கொடுக்கப்பட்ட அறிக்கையை பயன்படுத்தியே கொடுக்கப்பட்டது. அரச பரிசோதனைகளை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. அரசாங்கத்துக்கு அவசியமானவாறு அவை மாற்றமடைகின்றன. இந்த பிரதேசத்தில் வாழ்ந்தால், ஆலையின் சூழல் மாசுபடுத்தலினால் மக்களின் வாழ்க்கை சீரழிவதை காண முடியும்.

அந்த அரசாங்கமும் சரி இந்த அரசாங்கமும் சரி, இரண்டும் ஒன்றுதான். சோசலிச சமத்துவக் கட்சி கூறுவது போல், முதலீட்டாளர்களை பாதுகாப்பதையே இவை செய்கின்றன. மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் எமது பிரச்சினைகளை தீர்ப்பாதக வாக்குறுதியளித்தார். இப்போது முதலீட்டாளர்களை பாதுகாக்கின்றார். மக்கள் அரசாங்கத்தைப் பற்றி கடுமையாக அதிருப்தியடைந்துள்ளனர்.

ஊடகங்களை காசுக்கு வாங்கியுள்ளனர். எந்தவொரு ஊடகமும் இப்போது எங்கள் பிரச்சினைகளைப் பற்றி பேசுவதோ எழுதுவதோ இல்லை. பிரச்சாரம் செய்வதற்காக நாங்கள் முயற்சி செய்தோம். பிரயோசனம் இல்லை. உலக சோசலிச வலைத் தளத்தில் வெளியிடப்படும் கட்டுரைகள் மக்கள் மத்தியில் விநியோகிக்கப்பட வேண்டும்.

சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே எங்களது பிரச்சினைகளைப் பற்றி தொடர்ந்தும் அக்கறை காட்டி வருகின்றது. சோ... மேற்கொண்ட தொழிலாளர் சுயாதீன விசாரணையின் அறிக்கையை நான் வாசித்தேன். உண்மையை வெளிக்கொண்டு வருவதற்கு பெரும் முயற்சிகளை மேற்கொள்கின்றீர்கள்.

பிரதேசத்தில் ஒரு ஆசிரியர் குறிப்பிட்டதாவது: வழக்கின் முடிவில் அதிருப்தி அடைந்ததால் இதற்கு மேல் எதுவும் செய்யப் போவதில்லை என நினைத்துக்கொண்டாலும் மக்களில் அநேகமானவர்கள் மீண்டும் செயற்படுவதற்கு முயற்சிக்கின்றனர். வழக்குகளில் மாத்திரம் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது. சோச... வேலைத் திட்டத்தைப் பற்றி கல்ந்துரையாட விரும்புகிறேன்.