சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan SEP to hold public meetings on the 75th anniversary of Leon Trotskys assassination

லியோன் ட்ரொட்ஸ்கி படுகொலை செய்யப்பட்ட 75வது நினைவு பற்றி இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி பொதுக் கூட்டங்களை நடத்துகிறது

21 November 2015

சோசலிச சமத்துவக் கட்சி (சோ...) மற்றும் சமூக சமத்துவக்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (.வை.எஸ்.எஸ்.) அமைப்பும் இலங்கையில் பகிரங்க கூட்டங்களை நடத்துகின்றன. "ஏகாதிபத்திய மிலேச்சத்தனத்திற்கு எதிராக உலக சோசலிசம்," என்ற தலைப்பிலான கூட்டங்கள், புரட்சிகர மார்க்சிச தலைவர் லியோன் ட்ரொட்ஸ்கி படுகொலை செய்யப்பட்டு 75 வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் முகமாக நடத்தப்படுகின்றன.

1940 ஆகஸ்ட் 21 அன்று, ட்ரொட்ஸ்கி, அப்போதைய சோவியத் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் இரகசிய பொலிசான ஜி.பி.யு.வின் ஒரு முகவர், முதல் நாள் நடத்திய தாக்குதலினால் ஏற்பட்ட காயங்களால் மெக்ஸிக்கோவில் உயிரிழந்தார். இந்தப் படுகொலையானது ஜேர்மனி, இத்தாலி மற்றும் ஸ்பெயினில் பாசிச ஆட்சிகள் அதிகாரத்தில் இருந்த, மற்றும் 1939ல் இரண்டாம் உலகப் போர் வெடித்திருந்த, முன்னெப்போதும் இல்லாத ஒரு பிற்போக்கு அரசியல் அலை நிலவிய சூழ்நிலையிலேயே மேற்கொள்ளப்பட்டது. போர் வெடிப்பதற்கு முன்னரான ஆண்டுகளில், சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் ஸ்ராலினிச கட்சிகளால் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர போராட்டங்களுக்கு திட்டமிட்டு குழி பறிக்கப்பட்டதன் விளைவாகவே உலக யுத்தம் வெடித்தது.

ட்ரொட்ஸ்கியை படுகொலை செய்ததன் மூலம், ஸ்ராலினிச அதிகாரத்துவம் சர்வதேச தொழிலாள வர்க்கத்துக்கு ஒரு பேரடியைக் கொடுத்தது. அக்டோபர் 1917ல் ரஷ்ய புரட்சியில் லெனினுடன் இணைத் தலைவராகவும் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் கீழ் சோவியத் ஒன்றியம் சீரழிக்கப்படுவதற்கு எதிரான போராட்டத்தின் தலைவராகவும் இருந்த ட்ரொட்ஸ்கி, பரந்த அரசியல் அனுபவம் நிறைந்தவராகவும் சோசலிச சர்வதேசிய வாதத்திற்கான போராட்டத்தின் ஈடிணையற்ற சாதனையாளராகவும் இருந்தார். அவரது எழுத்துக்களும் தத்துவார்த்த மற்றும் அரசியல் நிலைப்பாடுகளும் இன்னும் சமகால உலகின் பிரச்சினைகளுடன் மகத்துவம் மிக்கதாகப் பொருந்துகின்றன.

2008ல் வெடித்த சர்வதேச பொருளாதார நெருக்கடி தொடர்ந்து தீவிரமாகி, ஏகாதிபத்திய பகைமைகளை, மூன்றாம் உலகப் போர் ஆபத்தை மற்றும் அணு ஆயுத யுத்த அச்சுறுத்தலை உக்கிரமாக்கியுள்ளதோடு தொழிலாள வர்க்கத்தின் அனைத்து சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் பறிக்கப்படுவதையும் தீவிரமாக்கியுள்ளது.

ஏகாதிபத்திய மிலேச்சத்தனத்துக்கான ஒரே மாற்றீடு, தொழிலாள வர்க்கம் சோசலிச சர்வதேசியவாதத்துக்காக போராடுவதும், முதலாளித்துவ இலாப நோக்கு அமைப்பு முறையை ஒரு புரட்சிகரப் போராட்டத்தினூடாக தூக்கிவீசுவதுமே ஆகும். ட்ரொட்ஸ்கியின் பகுப்பாய்வு மற்றும் வேலைத்திட்டத்தை கிரகித்துக்கொள்வது அவசியமாகும். சோ.../.வை.எஸ்.எஸ்.. கூட்டங்கள், இந்த முன்னோக்கை புரிந்துகொள்ளவும் கலந்துரையாடவும் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஒரு இன்றியமையாத வாய்ப்பை வழங்குகிறது.

கொழும்பு புதிய நகர மண்டபம்
20
டிசம்பர்,  3.00 மணி

யாழ்நூலக மண்டபம்
27
டிசம்பர், 3.00 மணி