சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Trump: The ugly reality of American politics

ட்ரம்ப்: அமெரிக்க அரசியலின் அருவருப்பான யதார்த்தம்

Patrick Martin
10 December 2015

Use this version to printSend feedback

முஸ்லீம்கள், புலம்பெயர்வோராக வந்தாலும் சரி அல்லது பார்வையாளராக வந்தாலும் சரி, அமெரிக்காவிற்குள் நுழைவதற்குத் தடைவிதிக்க வேண்டுமென்று குடியரசு கட்சி ஜனாதிபதி வேட்பாளர் டோனால்ட் ட்ரம்ப் அழைப்புவிடுத்தமை, ஓர் அரசியல் புயலைத் தூண்டிவிட்டுள்ளது. மிகவும் பிற்போக்குத்தனமான, இனவாத மற்றும் பாசிசவாத உணர்வுகளுக்கு ட்ரம்ப் பகிரங்கமாக முறையிட்டமை அமெரிக்க ஆளும் உயரடுக்கிற்கு ஓர் அரசியல் நெருக்கடியை உருவாக்கியுள்ளது.

அவரது அருவருக்கத்தக்க அக்கருத்துக்கள், ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி நிர்வாகங்கள் இரண்டுமே மத்திய கிழக்கு, மத்திய ஆசியா மற்றும் வட ஆபிரிக்கா எங்கிலுமான தலையீடுகள் மற்றும் ஏகாதிபத்திய போர்களை நியாப்படுத்தப் பயன்படுத்தப்படுகின்ற, "சுதந்திரம்" மற்றும் "ஜனநாயகத்திற்கு" அமெரிக்கா பாதுகாவலனாக உள்ளது என்ற உத்தியோகபூர்வ பாசாங்குத்தனத்தை தகர்த்தெறிகிறது. ட்ரம்ப் இந்த ஜனநாயக முகத்திரையை கிழித்துள்ளார். அவர், வெளிநாட்டிலும் சரி அல்லது உள்நாட்டிலும் சரி பெருநிறுவன அமெரிக்காவின் கோரிக்கைகளை எதிர்க்க துணியும் எவரொருவரையும் வன்முறைரீதியில் பகிரங்கமாக ஒடுக்குவதற்காக நிற்கிறார்.

இது, அமெரிக்க அரசியல் ஸ்தாபகத்தின் பரந்த செய்தித்தொடர்பாளர்களின் வரிசையிலிருந்து ட்ரம்ப்க்குச் சரமாரியாக கண்டனங்கள் வர காரணமாகி உள்ளது. வெள்ளை மாளிகை பத்திரிகை பிரிவுகளுக்கான செயலர் ஜோஸ் எர்ன்ஸ்ட் கூறுகையில், ட்ரம்ப் இன் முன்மொழிவு "ஜனாதிபதியாக சேவையாற்றுவதற்கே அவரை தகுதியிழக்க செய்கிறது" என்றார். அமெரிக்க முஸ்லீம் தலைவர்களோடு இணைந்து, சாத்தியமான அச்சுறுத்தல்களைக் கண்டறிய "கூட்டாக இயங்குவதை" அக்கருத்து தொல்லைக்குட்படுத்தி இருப்பதாக கூறி, அவரது அனாவசிய கருத்துக்கள் "அந்நாட்டிற்கே ஆபத்து" என்பதாக எர்ன்ஸ்ட் குறிப்பிட்டார்.

பெண்டகனுக்கான உத்தியோகபூர்வ செய்தி தொடர்பாளர் பீட்டர் குக், பொதுவாக உள்நாட்டு அரசியல் விவகாரங்களில் கருத்துரைக்க மறுக்கும் இவர், அமெரிக்கா ஏதோவிதத்தில் இஸ்லாம் உடன் போரில் உள்ளது என்ற ISIL வனப்புரையைப் பலப்படுத்த முயலும் எதுவும் நமது மதிப்புகளுக்கும் சரி, நமது தேசிய பாதுகாப்புக்கும் சரி முரண்பட்டதாகும், என்றார்.

பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் பௌல் ரெயன், காங்கிரஸின் உயர்மட்ட குடியரசு கட்சியினரான இவர், செய்தியாளர்களுக்குக் கூறுகையில், மதச் சுதந்திரம் என்பது அடிப்படை அரசியலமைப்பு கோட்பாடாகும். அது நமது நாட்டின் ஸ்தாபக கோட்பாடு, என்றார். அதேநேரத்தில் அவர், ட்ரம்ப் குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் என்பதால், அவர் அவரை ஆதரிப்பதாக அறிவித்தார்.

அமெரிக்க ஊடகங்கள் புதனன்று வெளியிட்ட தலையங்கங்கள், கேலிச்சித்திரங்கள் மற்றும் செய்தி தொகுப்புகளில் ட்ரம்ப் க்கு தொடர்ச்சியான கண்டனங்களை வெளியிட்டன, அவற்றில் பல ட்ரம்பை ஹிட்லர் அல்லது முசௌலினி உடன் ஒப்பிட்டன. சிஎன்என் அதன் தேசிய பாதுகாப்புத்துறை பொறுப்பாசிரியர் பீட்டர் பெர்ஜெனைக் கொண்டு, ட்ரம்ப் ஒரு பாசிசவாதியா? என்ற கேள்வியை முன்னிறுத்தி ஒரு செய்தி தொகுப்பு வெளியிட்டது.

100,000 க்கும் அதிகமான முஸ்லீம்-அமெரிக்கர்களின் வசிப்பிடமாக விளங்கும் தென்கிழக்கு மிச்சிகனில் மிகப்பெரிய பத்திரிகையான Detroit Free Press, நாங்கள் இணைந்து நிற்கிறோம்" என்ற பதாகை தலைப்பின் கீழ் ஒரு முதல்பக்க தலையங்கம் பிரசுரித்தது. அச்செய்தி ட்ரம்ப் இன் கண்ணோட்டங்களை "பதவி வெறி மற்றும் இனவாதத்திற்கு மேலதிகமாக வேறொன்றுமில்லை, அமெரிக்க வரலாற்றில் இருண்ட அத்தியாயங்களுக்குத் திரும்புவதாகும்" என்று கண்டித்தது.

நாங்கள் இம்மாதிரியானவர்கள் இல்லை" என்று கையினால் எழுதப்பட்ட வாசகங்களுடன் சேர்ந்து, ட்ரம்ப் இன் பாசிசவாத கண்ணோட்டங்கள் குறித்த அதிர்ச்சி வெளிப்படுத்தும் உத்தியோகப்பூர்வ அறிக்கைகள், நேர்மையின்றியும் அதேயளவிற்கு எரிச்சலூட்டுவதாகவும் உள்ளன. ஆளும் வர்க்கம், அதன் கொள்கைகளில் பொதிந்துள்ள பிற்போக்குத்தனமான, காட்டுமிராண்டித்தனமான மற்றும் ஜனநாயக-விரோத உட்பொருளை இந்தளவிற்கு அப்பட்டமாக கூறுவதை விரும்பவில்லை.

அந்த பில்லியனரின் பிதற்றல் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நிஜமான நடைமுறைக்கு முரண்பட்டதல்ல, மாறாக அது அதன் நேரடியான வெளிப்பாடாகும். ட்ரம்ப் இன் கருத்துக்கள் முற்றிலுமாக அபு கிரைப் (Abu Ghraib), ஃபல்லூஜா (Fallujah), சிஐஏ இரகசிய சிறைக்கூடங்கள் மற்றும் குவாண்டனமோ வளைகுடாவை உருவாக்கிய கொள்கைகளுடன் சரியாக பொருந்தியுள்ளன.

அது என்ன செய்து கொண்டிருக்கிறதோ அது தான் அமெரிக்க ஆளும் வர்க்கம், அரசியலைமைப்பு நினைவுதினம், சாசன உரிமைகள் நினைவுதினத்தின் விடுமுறை நாள் உரைகளிலும், அல்லது அடிமை முறையை நீக்கிய பதிமூன்றாவது அரசியலமைப்புத் திருத்தம் ஏற்கப்பட்டதன் 150வது நினைவுதினத்தில் புதனன்று ஒபாமா கூறிய கருத்துக்களிலும் பிரகடனப்படுத்தியதை போன்றதல்ல. அமெரிக்க அரசாங்கம் அடிமைகளை விடுவிக்க போர் நடத்திய காலமெல்லாம் வெகுகாலத்திற்கு முன்னேரே போய்விட்டன. இப்போது அது உலகை வோல் ஸ்ட்ரீட்ரிடம் அடிமைப்படுத்த போர்களை நடத்தி வருகிறது.

30 ஆண்டுகளாக, அமெரிக்கா, இப்பூமியின் மிகப்பெரிய எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்கள் நிறைந்த இடமான மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவில் அதன் மேலாதிக்கத்தை பேண ஒரு போர் மாற்றி ஒரு போரை நடத்தி வந்துள்ளது. இப்போர்கள் அதில் பங்குபற்றிய சிப்பாய்களை மட்டும் மூர்க்கமாக்கவில்லை, அவை இராணுவ-உளவுத்துறை எந்திரத்தில் உள்ள தளபதிகளையும் மற்றும் அவற்றின் அரசியல் மற்றும் ஊடகத்தின் முன்னணி ஆட்களையும் கூடுதலாக மூர்க்கமாக்கி உள்ளன.

கட்டுக்கடங்கா, ஓர் இணை நிகழ்வுபோக்கு, 2008 வோல் ஸ்ட்ரீட் பொறிவைத் தோற்றுவித்த நிதியியல் மோசடி நடவடிக்கைகளிலிருந்து கிடைத்த அதிகரித்தளவிலான பெரும் செல்வ வளத்துடன் சேர்ந்து, ஒட்டுமொத்தமாக நிதியியல் பிரபுத்துவத்தின் குற்றமயமாக்கலையும் கண்டுள்ளது. சமூக சமத்துவமின்மை மலைப்பூட்டும் மட்டங்களுக்கு அதிகரித்துள்ள போதினும், ஆளும் உயரடுக்கு தொழிலாள வர்க்கத்தின் மிகவும் ஒடுக்கப்படும் பிரிவுகளுக்கு எதிராக முன்பினும் அதிக வன்முறை மட்டங்களைக் கோருகிறது.

கடந்த வாரம் பிரசுரிக்கப்பட்ட ஒரு அறிக்கையின்படி, கடந்த 15 ஆண்டில் மட்டும் 200,000 அமெரிக்கர்கள் கொல்லப்பட்டுள்ளதால் இச்சமூகம் மிகவும் மூர்க்கமயமாகி உள்ளது. அமெரிக்கா, வெறுமனே மத்திய கிழக்கில் மட்டுமல்ல, மாறாக அந்நாட்டிற்குள்ளேயே, போர் நடத்தும் நாடாக உள்ளது.

ட்ரம்ப்ஸ் இன் எழுச்சி ஓர் தீர்க்கமான அரசியல் தர்க்கத்தைக் கொண்டுள்ளது. அவர் ஊடகங்களும் மற்றும் முதலாளித்துவ வர்க்கத்தினது இக்குற்றகர கூறுபாடுகளின் மேலெழுச்சியும் இணைவதைப் பிரதிநிதித்துவம் செய்கிறார். அவரது சொந்த செல்வவளமே கூட அட்லாண்டிக் நகர சூதாட்ட மையங்களிலும் மற்றும் மன்ஹட்டனின் நில/வீடு பேர ஊக வணிகத்தின் விளைபொருளாக உள்ளது, அதன் பின்னர் அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் நிகழ்ச்சி பிரமுகராக ஊடக பிரபல்யத்தைக் கடந்து வந்திருந்தார், அவற்றில் அவரை அவர் வெற்றிகரமான முதலாளித்துவ எஜமானர்களின் இரக்கமற்ற மற்றும் உறுதியான அவதாரமாக காட்டிக் கொண்டார்.

அத்தகையவொரு பிரமுகர் குடியரசு கட்சி ஜனாதிபதி பிரச்சாரத்தின் ஒரு முன்னணி இடத்திற்கு உயர்த்தப்பட்டிருக்கிறார் என்பது உத்தியோகபூர்வ அமெரிக்க இருகட்சி அரசியல் கட்டமைப்பிற்குள் ஒரு பாசிசவாத போக்கு எழுச்சி பெற்றுவருவதை எடுத்துக்காட்டுகிறது. குடியரசு கட்சி ஜனாதிபதி களத்தில், பாதிப்பேர் முஸ்லீம்களுக்கு தடைவிதிக்க வேண்டுமென்ற ட்ரம்ப் இன் முன்மொழிவைக் கண்டித்துள்ள போதினும், பாதி பேர் அவ்வாறு செய்யவில்லை, மற்றும் பலர் பகிரங்கமாக அந்த பில்லியனருடன் தங்களைத்தாங்களே இணைத்துக் கொண்டுள்ளனர்.

எட்டு வாரங்களுக்குக் குறைவின்றி இருக்கையில் மாமன்றத்தில் உறுப்பினர்களிடையே (caucus) நடத்தப்படும் லொவா (lowa) கருத்துக்கணிப்பில் இப்போது முன்னணியில் உள்ள டெக்சாஸ் செனட்டர் டெட் குருஸ், நான் டோனால்ட் ட்ரம்பை ஆதரிக்கிறேன்" என்றார். நமது எல்லை பாதுகாப்பிற்குத் தேவையானவற்றில் அமெரிக்காவின் கவனத்தை ஒருமுகப்படுத்துவதற்காக டோனால்ட் ட்ரம்ப் போட்டியிடுவதை நான் ஆதரிக்கிறேன், என்று கூறும் அளவிற்கு அவர் சென்றார்.

குடியரசு கட்சி மாமன்ற (caucus) மற்றும் பிரதான வாக்காளர்களாக இருக்கக்கூடியவர்களில் 65 சதவீதத்தினர் முஸ்லீம்களுக்குத் தடைவிதிக்க வேண்டுமென்ற ட்ரம்ப் க்கு ஆதரவாக இருந்ததை ஒரேயிரவில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகள் எடுத்துக்காட்டின. இது மட்டுமே கூட, ட்ரம்ப் இன் வேட்பாளர் நியமனம் அமெரிக்க உத்தியோகபூர்வ அரசியல் பாதையை இன்னும் அதிகமாக வலதிற்குத் திருப்பப் பயன்படுத்தப்படுகிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது.

குடியரசு கட்சியினரைப் போலவே ஜனநாயக கட்சியும் அன்னியநாடுகளின் மீதான போர் கொள்கைகள், உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்தின் வேலைகள், வாழ்விட நிலைமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களைப் பின்பற்றியதால், ட்ரம்ப் இன் உயர்வுக்கு பொறுப்பானவர்களில் ஜனநாயக கட்சியும் பங்கு வகிக்கிறது. ஜனநாயக கட்சியில் முன்னணியில் உள்ள ஹிலாரி கிளிண்டன், ஞாயிறன்று தொலைக்காட்சி பேட்டி ஒன்றில், ISIS இலக்குகளுக்கு எதிராக, எண்ணைய் உள்கட்டமைப்புக்கு எதிராக, அவர்களது தலைமைக்கு எதிராக இன்னும் அதிக வேகமான விமானப்படை நடவடிக்கைகளுக்கும்", அத்துடன் அமெரிக்க சிறப்புப்படைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் கோரி, சிரிய உள்நாட்டு போரில் அமெரிக்க இராணுவ தலையீட்டைத் தீவிரப்படுத்த வக்காலத்துவாங்குபவர்களில் முன்னணியில் உள்ளார்.

வேட்பாளர்களில் அவரது பிரதான போட்டியாளராக உள்ள "சோசலிஸ்ட்" என்றழைக்கப்படும் பெர்னி சாண்டர்ஸைப் பொறுத்த வரையில், அவர் வெளியுறவு கொள்கை குறித்து எதையும் விவாதிப்பதைத் தவிர்க்க முயல்கிறார் ஏனென்றால் மத்திய கிழக்கின் ஏகாதிபத்திய போருக்கு அவர் ஒரு நீண்டகால ஆதரவாளராக இருந்துள்ளார். அங்கே சாண்டர்ஸ் மற்றும் ட்ரம்ப் க்கு இடையே ஓர் அறிவூட்டத்தக்க முரண்பாடு உள்ளது. பகிரங்கமாக இப்போதைய அரசியல் அமைப்பை அலட்சியப்படுத்துகிற அந்த பில்லியனர், அவர் சுயேட்சை வேட்பாளராக நின்றால் அவரது ஆதரவாளர்களில் 68 சதவீதத்தினர் அவரை ஆதரிப்பதாக புள்ளிவிபரங்கள் எடுத்துக்காட்டுவதைச் சுட்டிக்காட்டி, அவரது ஆதரவாளர்களுடன் இருகட்சி அமைப்புமுறையில் இருந்து வெளியேற அச்சுறுத்துகிறார்.

ஆனால் சாண்டர்ஸ், முன்பினும் அதிகமாக ஜனநாயக கட்சியில் ஆழமாக தன்னைத்தானே இணைத்துக் கொள்வதில் சுறுசுறுப்பாக உள்ளார். அவரது பிரச்சாரத்தில் அவருக்கு ஒதுக்கப்பட்ட பாத்திரத்தை அயராது பின்தொடர்ந்து கொண்டிருக்கிறார்: சமூக சமத்துவமின்மையின் அதிகரிப்பால் சீற்றமுற்றுள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு முறையிட்டு வருவதுடன், வோல் ஸ்ட்ரீட் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இந்த கட்சிக்குள் திரும்பவும் அவர்களைத் திசைதிருப்பி விட்டு வருகிறார்.

அவரது சொந்த பிரச்சாரத்தைத் தொடங்குவதற்கு ட்ரம்ப் ஆல் நம்பகமானரீதியில் அச்சுறுத்தல் விடுக்க முடிகிறது, அவரது பல கோடி பில்லியன் டாலர் செல்வவளத்திலிருந்து நிதி வழங்கப்பட்டு அதையொரு பிரசித்தமான இயக்கமாக ஆக்க முடியும், அத்தகையவொரு இயக்கம் உழைக்கும் மக்கள் முகங்கொடுக்கும் மிகப் பெரும் அபாயமாக இருக்கும். 2016 தேர்தல் பிரச்சாரத்தின் உடனடி விளைவு என்னவாக இருந்தாலும், அது அதன் ஆரம்ப கட்டத்தில்தான் இருக்கிறது என்ற நிலையில், அங்கே பலம் வாய்ந்த புறநிலை சக்திகளும் உள்ளன, அனைத்திற்கும் மேலாக மத்திய கிழக்கிற்கு எதிராக மட்டும் அல்ல, மாறாக சீனா மற்றும் ரஷ்யாவிற்கு எதிராகவும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போர் முனைவு விரிவாக்கமாகும், இது ட்ரம்ப் ஆல் வெளிப்படுத்தப்பட்டவாறு அதிதீவிர-பிற்போக்குத்தனமான, இனவாத மற்றும் பேரினவாத அரசியல் வகையறாக்களுக்கு ஊட்டமளிக்கிறது.

பாசிசத்திற்கு-முந்தைய போக்கு (proto-fascist trend) அமெரிக்காவில் எழுச்சி பெற்றிருப்பது, ஒரு சோசலிச மற்றும் சர்வதேச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஏகாதிபத்திய போரை எதிர்க்க தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கத்தின் அபிவிருத்தி அவசியப்படுவதை அடிக்கோடிடுகிறது.