சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

India: Hundreds die in Tamil Nadu floods

இந்தியா: தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ளத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழjப்பு

By Deepal Jayasekera
5 December 2015

Use this version to printSend feedback

தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் நவம்பர் 2015 மாத ஆரம்பத்திலிருந்து ஏற்பட்ட மாபெரும் வெள்ளப் பெருக்கால் 280க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், தமிழ்நாட்டின் தலைநகரம் மற்றும் இந்தியாவின் நான்காவது மிகப்பெரிய நகரமான சென்னை துண்டித்துவிடப்பட்டது. இவ்வெள்ளத்தால், அண்டை மாநிலமான ஆந்திரப்பிரதேசத்தில் 50 பேரும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 2 பேரும் பலியாகினர்.

நூறு ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டில் தொடர்ந்து மூன்று நாட்களுக்கும் மேலாக தொடர் கனமழை இருக்கும் என்று கடந்த வியாழக்கிழமை இந்திய வானிலை ஆய்வு துறை விடுத்த முன்னெச்சரிக்கை அறிவிப்பின்படி, தமிழ்நாட்டில் ஏற்பட்ட பெரும் கனமழையால் ஒரு மில்லியனுக்கும் (பத்து லட்சத்திற்கும்) மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டனர். இதுவரை ரூபாய் 3000 கோடி ($3 பில்லியன்)க்கும் மேலாக இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

தற்போது சென்னை, கடலூர், திருவள்ளூர் மற்றும் காஞ்சீபுரம் மாவட்டங்களில் வீடுகளை இழந்து தவிக்கும் 1,64,000த்திற்கும் மேற்பட்ட மக்கள் 460 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தில் இன்னும் சில பகுதிகளுக்கு அவசரகால நிவாரண உதவிகள் சென்றடைய வேண்டியுள்ளது. பெரும்பாலான பகுதிகளில், வீடுகளின் கூரைப்பகுதி மட்டுமே தெரிகிறது. மேலும் அப்பகுதிகளில் வெள்ளநீர் வடிந்து சேறும் மற்றும் குப்பையும் நிரம்பி காணப்படுகிறது.

சென்னை மற்றும் அதன் பெரும்பாலான புறநகர் பகுதிகள் தொடர்ந்து நான்கு நாட்களாக இரண்டரை மீட்டர் அளவு நீரில் மூழ்கி இருந்தன. கடலோர நகரமான சென்னை மற்றும் அதன் அனைத்து சுற்றுப்புற பகுதிகளிலும் பள்ளிகள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள் மற்றும் பிற வசதிகள் அனைத்தும் முடக்கப்பட்டுவிட்டன. அவைகளில் குறிப்பாக, ஃபோர்டு, ரெனால்ட், டெய்ம்லர், ஹூண்டாய் மற்றும் நிஸான் ஆட்டோ ப்ளான்ட்ஸ், ராயல் என்ஃபீல்ட் மோட்டார் சைக்கிள் கம்பெனி, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் மூன்று வர்த்தக தொலைகாட்சி இணையங்கள் அடங்கும்.

சென்னையில் உள்ள சர்வதேச தரம் வாய்ந்த மியாட் தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த குறைந்தபட்சம் 18 நோயாளிகள் டிசம்பர் 2ம் தேதியன்று பலியாகினர். நோயாளிகளின் உயிருக்கு ஆதாரமாக பொருத்தப்பட்டிருந்த ஆக்சிஜன் சிலிண்டர்கள் இணைக்கப்பட்டிருந்த மின்சார ஜெனரேட்டர் அறைக்குள் வெள்ளம் புகுந்து விட்டதாக ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டது.

சென்னை நகரத்துடன் இணைந்த அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளும் மூடப்பட்டது.  பெரும்பாலான கைபேசி, தொலைபேசி வலையமைப்புக்களும் துண்டிக்கபட்டது. புதன்கிழமை (டிசம்பர் 2ம் தேதி) நகரத்தின் மத்திய ரயில்வே நிலையம் இயங்கவில்லை மற்றும் வியாழக்கிழமை (டிசம்பர் 3ம் தேதி) சென்னை விமான நிலையமும் இயங்கவில்லை. புதன்கிழமை (டிசம்பர் 2ம் தேதி) அன்று சர்வதேச விமான நிலையத்திலிருந்து 1500க்கும் மேற்பட்ட தனித்துவிடப்பட்ட பயணிகள் மீட்கப்பட்டனர். அன்றே பகுதி அளவிலான விமான இயக்கத்திற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் இந்திய விமானநிலைய ஆணையம் அறிவித்திருந்தது.

பெரும்பாலும் தொழிலாளர் வர்க்க குடும்பங்கள் மற்றும் ஏழை மக்களே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பால், காய்கறிகள் மற்றும் குடிதண்ணீர் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலையும் பெரிதும் உயர்ந்தது. சாதாரணமாக 30 ரூபாய்க்கு விற்கப்பட்ட இரண்டு லிட்டர் மினரல் வாட்டர் பாட்டிலின் விலை ரூபாய் 150க்கு உயர்ந்தது, அதேபோல வழக்கமாக ரூபாய் 20க்கு விற்கப்பட்ட ஒரு லிட்டர் பாக்கெட் பால் சில பகுதிகளில் ரூபாய் 100க்கும் விற்கப்பட்டு வருகிறது. 

இச்சூழ்நிலையில் நெருக்கடியான நிலைமை உருவாகவும், காலரா, வயிற்றுக்கழிவு போன்ற நோய்கள் பரவவும் மற்றும் பல்வேறு விதமான தொற்றுநோய்கள் அதிகரிக்கவும் வாய்ப்புக்கள் உள்ளது. எந்தவொரு நோயையும் வரவிடாமல் தடுக்க இம்மாதிரி நேரங்களில் பாதுகாக்கப்பட்ட மற்றும் சுத்தமான தண்ணீரை அருந்தவேண்டும்' என்று அனைத்து இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் கண்காணிப்பாளர் டாக்டர். டி.கே.ஷர்மா இந்திய-ஆசிய செய்தி சேவையில் கடந்த   வெள்ளிக்கிழமை (டிசம்பர் 4ம் தேதி) தெரிவித்தார். மேலும் அவர், பாக்டீரியா மூலம் அசுத்தமான, தேங்கி நிற்கும் தண்ணீரின் விளைவாக பல்வேறு விதமான கடுமையான தோல் மற்றும் தொண்டை நோய்கள் பரவும் எனவும் எச்சரித்தார்.

சென்னையிலுள்ள 30 நீர்வழிகளில், சிலவற்றை வெள்ளத்தின் காரணமாக திறந்து விடுவதற்கு முன்பு முன்னெச்சரிக்கைச் செய்தி எதுவும் சென்னை அதிகாரிகளால் அளிக்கப்படவில்லை. அருகிலுள்ள ஏரியிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட போவது குறித்து போதுமான தகவல் அவருக்கு அளிக்கப்படவில்லை என தென் சென்னைப் பகுதியைச்சார்ந்த ஒருவர் ஆஸ்திரேலிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்துக்கு தெரிவித்தார். முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் விடுக்கப்பட்டது, எனினும் ஊடகங்கள் மற்றும் தொலைபேசி தொடர்புகளில் ஏற்பட்ட சீர்குலைவினால் செய்திகள் சென்றடையவில்லை என தமிழ்நாடு பொதுப்பணித்துறை தெரிவித்தது. தென் சென்னைப்பகுதி மக்கள், அவர்களது வட்டாரங்களில் எவ்வித மீட்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாதது குறித்து தமிழ்நாடு மாநில அரசை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். 'தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் பொறியாளர்களை மத்திய அரசு அனுப்பிவைத்து விரைவில் வெள்ளநீரை வடியவைக்கத் தேவையான தீர்வினை கண்டறிந்து நீர் வெளியேற்றப்படும் எனவும், ஆனால் அது எப்படி நடக்கபோகிறது என்று தெரியவில்லை எனவும்' இந்திய உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறினார்.

தமிழ்நாட்டின் தற்போதைய நிலைமையானது, 'அச்சுறுத்தும் அபாயமாக' உள்ளது எனவும் சென்னை ‘’ஒரு தனித்தீவாக மாறியுள்ளது’’ என்றும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இந்திய பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (டிசம்பர் 3ம் தேதி) அன்று பேசியபோது விவரித்தார்.

வியாழக்கிழமை (டிசம்பர் 3ம் தேதி) அன்று பிரதம மந்திரி நரேந்திர மோடி தமிழ்நாடு வெள்ள நிவாரண பணிக்கு ரூபாய் 1000 கோடி ($154 மில்லியன் அமெரிக்க டாலர்) நிதி விடுவிக்கப்படும் எனத் தெரிவித்தார். இந்திய அரசு அலுவலர்கள், இத்தொகையானது ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ரூபாய் 940 கோடி ($145 மில்லியன் அமெரிக்க டாலர்) தொகையுடன் மேலதிகமாக சேர்த்த ஒதுக்கீடு எனக் கூறினர். சென்னை மட்டுமல்லாது தமிழ்நாடு முழுவதிலும் நிகழ்ந்துள்ள பேரழிவின் அளவினை ஒப்பிட்டுப் பார்த்தால், இந்தத் தொகை மிகவும் சொற்பமானது. தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராமன் இந்திய அரசிடம் ரூபாய் 8000 கோடி வெள்ள நிவாரண நிதி உதவியாக வழங்க கோரியுள்ளார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 'சாத்தியப்படும் அனைத்து உதவிகளும்' அதிகாரிகளால் வழங்கப்படுகின்றன என்ற அரசின் கூற்றுக்கு மாறாக அதிகாரப்பூர்வ மீட்பு பணிகள் மிகவும் குறைந்த அளவிலேயே நடந்தது. 4,000ற்கும் மேற்பட்ட இராணுவ அதிகாரிகள் வெள்ள நிவாரண பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த போதும், வியாழக்கிழமை (டிசம்பர் 3ம் தேதி) அன்று நான்கு ஹெலிகாப்டர்கள் மட்டுமே உணவு, தண்ணீர் மற்றும் மருந்துகள் வழங்கிட ஈடுபடுத்தப்பட்டிருந்தன. சென்னை அருகிலுள்ள செங்கல்பட்டு பகுதியைச் சார்ந்த மக்கள், அவர்கள் எவ்வித அரசு நிவாரண உதவியும் பெறவில்லை எனவும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிற உள்ளூர் அமைப்புகள் மூலமாகவே அவர்களுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டதாகவும் ஊடகங்களில் தெரிவித்துள்ளனர்.

இந்திய அதிகாரிகள் இவ்வெள்ள பாதிப்புக்கு பருவநிலை மாற்றமே காரணம் என பழி போடுகின்றனர் ஆனால் வானிலை அறிக்கையைப் பொறுத்தவரையில், எல் நினோ விளைவின்படி கிழக்கு பசிபிக் கடற்பகுதியில் வடகிழக்கு பருவநிலையானது மோசமடைந்து உள்ளது, அதுவே பிரதானமாக முன்னெப்போதும் இல்லாத கனமழைக்கு பொறுப்பாகும்.

இவ்வெள்ள அழிவு மத்திய, மாநில மற்றும் நகரம் போன்ற அரசாங்கங்களின் அனைத்து மட்டங்களையும் குற்றம் சாட்டுகிறது, அவை முதலீட்டாளர்களை கவரும் வகையில் சென்னையை ஒரு 'வளர்ந்த' மாநகரமாக வளரச்செய்வதற்காக நகரம் முழுவதிலும் கட்டுப்பாடற்ற, பாதுகாப்பற்ற வளர்ச்சியினை அனுமதித்தன.

உண்மையில் சென்னையில் ஏற்பட்ட இப்பேரழிவிற்கு, சரியான திட்டமிடல் இல்லாத பெரிய கட்டுமானத் திட்டங்களுக்கு அரசு ஒப்புதல் வழங்கியது மற்றும் தீவிர வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காதது என்பதே முக்கிய காரணங்களுள் ஒன்றாகும். ஏற்கனவே கடும் மழை நீர் உறிஞ்சப்பட்ட ஈரநிலங்கள் மற்றும் சதுப்பு நிலங்களில் கட்டப்பட்டுள்ள மிகப்பெரிய கட்டடங்களால் சாதாரண பருவ காலங்களிலேயே வெள்ளம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. பயனுள்ள புயல்நீர் வடிகால் அமைப்புகள் இல்லையெனில், நீர் வடிய வழியில்லாமல் நகரத்தின் தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் விரைவாக வெள்ளம் ஏற்படும். முறைபடுத்தப்படாத நகரமயமாக்கலின் நேரடி விளைவே சென்னையில் ஏற்பட்ட வெள்ளங்களுக்கு காரணம் என அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மைய இயக்குநர் சுனிதா நரைன் டிசம்பர் 3ம் தேதி ஹிந்துவில் தெரிவித்துள்ளார். 'நகர்புற குடியிருப்பு பகுதிகளான டெல்லி, கொல்கத்தா, மும்பை, சென்னை, ஸ்ரீநகர் போன்றவை அவற்றுள் இருக்கின்ற இயற்கை நீர் நிலைகளைப் பற்றி போதுமான அளவு கவனம் செலுத்துவது இல்லை. சென்னையில் எந்தவொரு ஏரியிலும் வெள்ளநீர் நிரம்பி மிகை வழிதல் ஏற்படும்போது வெள்ளநீரை வெளியேற்றக்கூடிய இயற்கை வடிகால் அமைப்புகளை ஏரிகள் கொண்டுள்ளன. ஆனால், நாம் இந்த நீர் நிலைகள் மீது பல கட்டட அமைப்புக்களை ஏற்படுத்திவிட்டதால் நீரின் எளிதான போக்கு தடுக்கப்படுகிறது.’’

அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் ஆராய்ச்சியின்படி, 1980களில் சென்னையில் 600க்கும் மேற்பட்ட ஏரிகள் இருந்தன, ஆனால் 2008லிருந்து அதில் ஒரு பகுதி மட்டுமே நல்ல நிலையில் உள்ளன. மாநில அரசின் அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளபடி தண்ணீர் சேமிப்புக்கு ஏதுவான 19 பெரிய ஏரிகளின் மொத்தப் பரப்பளவானது, 1980களில் 1130 ஹெக்டேர் ஆக இருந்தது. 2000ங்களின் ஆரம்பத்திலேயே 645 ஹெக்டேர் ஆக சுருங்கிற்று. ஏரிகளிலிருந்து உபரி நீரை மற்ற ஈரநிலங்களுக்கு வடிகால்கள் எடுத்துச்செல்வதும் குறைந்து கொண்டே வருகிறது. நகரத்தின் நூற்றுக்கணக்கான புயல்நீர் வடிகால்களில் உடனடியாக வண்டல் மண் அகற்றப்பட வேண்டிய தேவையும் உள்ளது.