சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : உலக பொருளாதாரம்

A new tipping point in the global economic crisis

உலகளாவிய பொருளாதார நெருக்கடியில் ஒரு புதிய திருப்புமுனை

By Nick Beams
10 December 2015

Use this version to printSend feedback

சுரங்கத் தொழில்துறையில் உலகளாவிய பகாசுர நிறுவனமான ஆங்கிலோ அமெரிக்கன், உலகளவில் 85,000 தொழிலாளர்களைக் குறைக்க, மற்றும் அதன் சொத்துக்களில் 60 சதவீதத்தை விற்பனைக்குக் கொண்டு வர மற்றும் அதன் சுரங்க இடங்களின் எண்ணிக்கையை 55 இல் இருந்து வெறும் 20 ஆக குறைக்கும் என்ற அறிவிப்பு, உலக முதலாளித்துவ பொருளாதார நெருக்கடி ஒரு புதிய திருப்புமுனையை நோக்கி நகர்ந்து வருவதைக் குறிக்கிறது. உலக பொருளாதாரம், 2007-2008 இல் வெடித்ததை விட இன்னும் அதிக பேரழிவுகரமான ஒரு நிதியியல் நெருக்கடியுடன் சேர்ந்து, ஆழ்ந்த மந்தநிலைமைக்குள் மூழ்குவதற்கு அச்சுறுத்துகிறது.

ஆங்கிலோ அமெரிக்கன் முடிவின் உடனடி விளைவாக, அனைத்து பிரதான தொழில்துறை பண்டங்கள்சிலவற்றைக் குறிப்பிட்டு கூறுவதானால், இரும்பு எஃகு, நிலக்கரி, தாமிரம், நிக்கல் மற்றும் மாக்னைஸ் ஆகியவற்றின்விலைகள் வீழ்ச்சியடைந்தன. 2009 க்குப் பின்னர் அவற்றின் மிகக் குறைந்த மட்டங்களை எட்டியிருந்த நிலையில், அவை தொடர்ந்து வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளன, இது, கடந்த ஏழு ஆண்டுகளாக உலகின் மத்திய வங்கிகளால் நிதியியல் சந்தைகளுக்குள் ட்ரில்லியன் கணக்கான டாலர்களைப் பாய்ச்சியதற்கு இடையிலும், உலக பொருளாதாரத்தின் மேலோங்கிய போக்கு பின்னடைவை நோக்கியே உள்ளது என்பதைக் குறிக்கிறது.

இது, அதிக கூர்மையுடன் உலகளாவிய உற்பத்தி மையமான சீனாவில் வெளிப்பட்டதை விட வேறெங்கும் வெளிப்படவில்லை. உலகளாவிய தேவை வீழ்ச்சியடைந்து வருவதன் காரணமாக, நவம்பரில் சீன ஏற்றுமதிகள் குறிப்பிடத்தக்களவிற்கு சரிந்தன என்பதை இவ்வார தொடக்கத்தில் உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் எடுத்துக்காட்டி இருந்தன, அதேவேளையில் சீன நாணயம், ரென்மின்பி, நான்காண்டுகளில் அதன் மிகக் குறைந்த மட்டத்தை எட்டியது. சீன நிதியியல் ஆணையங்கள் ஒத்துழைப்பதிலிருந்து பின்வாங்கினால், ரென்மின்பி துரிதமாக இன்னும் குறைந்தளவிற்கு வீழ்ச்சியடையும், இது உலக பொருளாதாரத்தில் மற்றொரு பணச்சுருக்க அலையை (deflationary wave) ஏற்படுத்தும்.

அந்நாட்டின் வளர்ச்சி வாய்ப்புகள் மீது, நிதியியல் மற்றும் பொருளாதார உயரடுக்கின் மேல்மட்டங்களில் நிலவும் நம்பிக்கையின்மை மூலதன வெளியேற்றத்தால் எடுத்துக்காட்டப்பட்டது, அத்துடன் அன்னிய செலாவணி கையிருப்பு நவம்பரில் அதன் மூன்றாவது மிகப்பெரிய மாதந்திர வீழ்ச்சியைப் பதிவு செய்தது.

2008 நிதியியல் நெருக்கடிக்குப் பிந்தைய உடனடி ஆண்டுகளில், சம்பிரதாயமான புரிதல் என்னவென்றால், பிரிக்ஸ் (BRICS) நாடுகள் என்றழைக்கப்படுபவை எழுச்சிபெற்றுவரும் சந்தைகளுடன் சேர்ந்து உலக முதலாளித்துவத்திற்கு ஒரு புதிய ஸ்திரப்பாட்டுக்கு அடித்தளத்தை வழங்கும் என்றிருந்தது. அந்த வண்ணப்பூச்சு சூழ்நிலை தகர்ந்துள்ளது.

சீனாவின் கீழ்நோக்கிய திருப்பத்தால் இப்போது உலக சந்தைகள் பழுத்து வருகின்றன. பிரேசில் பொருளாதாரம், 1930களின் பெரு மந்தநிலைமைக்குப் பின்னர் பார்த்திராத அளவில் ஒரு இறுக்கத்தை (contraction) அனுபவித்து வருகிறது, ரஷ்யா மந்தநிலையில் உள்ளது, இந்தியா அதிகளவிலான பெருநிறுவன கடன் பிரச்சினைகளை முகங்கொடுக்கிறது, தென்னாபிரிக்கா, அக்கண்டம் எங்கிலுமான பொருளாதாரங்களோடு சேர்ந்து, பண்டங்களின் விலை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டு வருகிறது. எழுச்சிபெற்றுவரும் சந்தைகளின் எதிர்காலம், உலகின் சில மிகப்பெரிய எண்ணெய் வயல்களின் இருப்பிடமாக விளங்கும் வெனிசூலாவில் எடுத்துக்காட்டப்படுகிறது, அங்கே பொருளாதாரம் இந்தாண்டு 10 சதவீத அளவிற்கு சுருங்கக்கூடும்.

உலக பொருளாதாரம் குறித்த அதன் காலாண்டு மீளாய்வை இவ்வார தொடக்கத்தில் வெளியிட்ட சர்வதேச கொடுக்கல் வாங்கல்களை ஒழுங்கமைக்கும் வங்கி, உலகளாவிய நிதியியல் சந்தைகளில் நிலவிய "பதட்டம் நிறைந்த அமைதி" (uneasy calm), "நிஜமாகவே முக்கியமான ஆழ்ந்த பொருளாதார சக்திகளின்" இயக்கத்தால் விரைவிலேயே தொந்தரவுக்கு உள்ளாகக்கூடுமென எச்சரித்தது.

ஆனால் கடந்த காலத்தில் மத்திய வங்கிகளிடமிருந்து வெள்ளமென கிடைத்த மலிவு பணத்தைக் கொண்டு ஜீவித்திருக்கும் நிதியியல் சந்தைகளோ, வெளிப்பார்வையிலேயே, ஆழமடைந்துவரும் உலகளாவிய பின்னடைவு போக்குகளை எதிர்த்து தொடர்ந்து முன்பினும் மேல்நோக்கி செல்லக்கூடியதாக உள்ளன. ஆனால் "ஆழ்ந்த சக்திகள்" (deeper forces) தங்களைத்தாங்களே ஸ்திரப்படுத்துகையில், இச்சீட்டுக்கட்டு வீடு உடைந்து போவதற்குரிய நிலைமைகள் உருவாகி உள்ளன.

மலிவு பணம் பாய்ந்த மிக முக்கிய பகுதிகளில் ஒன்று, அதிக-இலாபமீட்டிய "பெறுமதியற்ற" (junk) பத்திரங்களுக்குள் பாய்ந்த நிதியாகும், பெரும்பாலும் அத்தகைய பத்திரங்கள் எரிசக்தித்துறை நிறுவனங்களால் வெளியிடப்பட்டிருந்தன. மிக சமீபத்தியதென கூறத்தக்க 2014 இன் தொடக்க மாதங்களில் எண்ணெய் விலை பேரலுக்கு 100 டாலருக்கு அதிகமாக எட்டியபோது, அதுவொரு நம்பகமான மூலோபாயமாக தெரிந்தது. ஆனால் இப்போது எண்ணெய் விலை 40 டாலருக்கும் குறைவாக வியாபாரம் ஆகிறது மற்றும் அது இன்னும் மேற்கொண்டும் வீழ்ச்சியடையலாம், அனேகமாக 30 டாலருக்கும் குறைவாக சரியலாம் என்ற அச்சமூட்டுகின்ற நிலையில், அந்த மூலோபாயம் வேகமாக சிக்கலுக்கு உள்ளாகி வருகிறது.

எரிசக்தித்துறை சார்ந்த கடன் செலுத்தவியலா நிலைமைகளின் அதிகரிப்பு, மிகவும் பொதுவான நிகழ்முறையில் ஒரேயொரு அறிகுறி மட்டுமேயாகும்.

கடந்த வெள்ளியன்று, பைனான்சியல் டைம்ஸ் அறிவிக்கையில், 1 ட்ரில்லியனுக்கும் அதிகமான அமெரிக்க பெருநிறுவன கடன்கள் இந்தாண்டு இதுவரையில் மதிப்பிறக்கிக் காட்டப்பட்டிருப்பதாக குறிப்பிட்டது, அதேவேளையில் கடன் செலுத்தவியலாமை 2008 நிதியியல் நெருக்கடிக்கு பின்னரிலிருந்து அவற்றின் அதிகபட்ச மட்டங்களுக்கு உயர்ந்துள்ளது. Standard & Poor, Moody மற்றும் Fitch ஆகிய மூன்று பிரதான கடன் மதிப்பிடும் நிறுவனங்களின் ஆய்வாளர்கள் அடுத்த 12 மாதங்களில் கடன் செலுத்தவியலா விகிதங்கள் இன்னும் அதிகரிக்குமென எதிர்நோக்குகின்றனர், இந்த நிகழ்வுபோக்கு, அடுத்த வாரம் பெடரல் ரிசர்வ் அடிப்படை வட்டி விகிதத்தை உயர்த்த முடிவெடுக்கையில் இன்னும் தீவிரமடையலாம்.

இவ்வாரம் பைனான்சியல் டைம்ஸ் வலைத் தளத்தில் பிரசுரிக்கப்பட்ட டச் வங்கியின் ஒரு பகுப்பாய்வின் சில பகுதிகள், நிதியியல் சந்தைகளில் ஒரு துரிதமான மாற்றம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறைச் சுட்டிக்காட்டியது.

“ஒவ்வொரு கடன் சுழற்சியிலும் இறுதி கட்டங்கள்,” அப்பகுப்பாய்வு குறிப்பிட்டது, “… இந்த முறை ஏன் வித்தியாசமாக இருக்கிறது என்ற தத்துவத்தின் மீதே கட்டமைக்கப்படுகிறது. இவ்வித மனோபாவம், 2015 க்குள் நுழைந்த போது வியாபித்திருந்தது, அப்போது கடன் சந்தைகள் பெரிதும் எண்ணெய் துறையின் சிக்கல்களைக் கண்டுகொள்ளாமல், அதுவொரு தனிப்பட்ட பிரச்சினை என்றும், அதன் வழியில் அது தங்கியிருக்கும் என்றும் நம்பியது.”

ஆனால், அந்த மதிப்பீடு கட்டவிழத் தொடங்கியதும், "சிக்கலில்" இருப்பதாக வரையறுக்கப்பட்ட பெருநிறுவன பங்குகளது சதவீதம் சீராக உயர்ந்ததும், விடயம் அவ்வாறில்லை என்பது நிரூபணமானது.

“ஓராண்டுக்கு முன்னர் எரிசக்தி துறையில் தொடங்கிய அந்த போக்கு, இப்போது போக்குவரத்து, மூலப்பொருட்கள், பிரதான அத்தியாவசிய பண்டங்கள் மற்றும் வர்த்தக சேவைகள் போன்ற ஏனைய பண்டங்கள்-சார்ந்த பகுதிகளை எட்டியுள்ளது. ஆனால் இது இங்கேயே நிற்கப் போவதில்லை என்பதோடு, சில்லரை விற்பனை, விளையாட்டுத்துறை, ஊடகம், அத்தியாவசிய நுகர்வு பொருட்கள் மற்றும் தொழில்நுட்பம் போன்ற காணக்கூடிய இடங்களுக்கும், எண்ணெய் விலை வீழ்ச்சியால் பாதிக்கப்படாதென பரவலாக எதிர்பார்க்கப்பட்ட எல்லா பகுதிகளுக்கும், அவற்றிலிருந்து ஆதாயம் அடைபவை இல்லை என்றாலும் கூட எல்லா பகுதிகளுக்கும் பரவும்,” என்றது குறிப்பிடுகிறது.

ஒரு புத்தம்புதிய நிதியியல் நெருக்கடிக்கு அதிகரித்துவரும் சாத்தியக்கூறு, அமெரிக்க முதலீட்டு வங்கியான கோல்டுமென் சாஸ்ச் கடந்த மாதம் வெளியிட்ட அறிக்கை ஒன்றிலும் மேலுயர்த்திக் காட்டப்பட்டது. அமெரிக்காவில் பெருநிறுவனங்களுக்கான முட்டுக்கொடுப்பு (corporate leverage) இப்போது ஒரு தசாப்தத்திலேயே அதன் அதிகபட்ச மட்டத்தில் இருப்பதாக அது குறிப்பிட்டது.

குறைந்த வட்டி விகிதங்களுக்கும் மற்றும் இடைவிடாத இலாபத்திற்குமான ஊக வணிகர்களின் கோரிக்கைகள், பெருநிறுவன அமெரிக்காவைப் பங்கு வாங்கிவிற்பதில் நிதி பாய்ச்சுவது, ஆதாயப்பங்கு (divident) உயர்வுகள் மற்றும் தொடர்ச்சியான ஒருங்கிணைப்பு மற்றும் கையகப்படுத்தல் உடன்படிக்கைகள், பங்குகள் வெளியீட்டின் மூலமாக நிதி திரட்டல் ஆகிய தாராள செலவுகளுக்குச் செல்ல ஊக்கப்படுத்தி உள்ளது. ஆனால் பணப்புழக்கம் பங்கு வெளியீடுகளின் வேகத்திற்கு ஈடாக இல்லை என்பதால், இருப்புநிலைக் கணக்கில் மொத்த கடன் அளவு "நெருக்கடிக்கு முந்தைய மட்டங்களை விட அதிகமாக" உள்ளது என்ற விளைவைக் கொண்டு வந்துள்ளது.

எரிசக்தித்துறை தளர்ந்து போன பின்னரும் கூட, வருவாய்க்கும் நிகர கடனுக்குமான விகிதம் நிதியியல் நெருக்கடிக்குப் பின்னர் அதன் உச்சக்கட்ட புள்ளியில் இருப்பதாக கோல்ட்மன் அறிவித்தது. “அதிகரித்துவரும் இந்த விகிதங்கள், உலகளாவிய பணவீக்க வீழ்ச்சிக்கான (disinflation) சாத்தியக்கூறு ('பணவீக்கம்'? என்று கூறுவதற்கு கூட பயமாக உள்ளது), செயல்பாடுகளிலிருந்து கிடைக்கும் இலாபங்களின் வீழ்ச்சி மற்றும் பரந்தளவில் கடன் பரவல் ஆகியவற்றின் பேராபத்து, பங்குகளைச் சார்ந்திருக்கும் பலவீனமான இருப்புநிலைக் கணக்கால் அண்மித்த கால பேராபத்தை உருவாக்குகிறது,” என்று குறிப்பிட்டு அந்த அறிக்கை நிறைவு செய்கிறது.

நிதியியல் சந்தைகளின் ஸ்திரப்பாடு குறித்து வெளிப்படும் இந்த கவலைகளுடன், பேங்க் ஆஃப் இங்கிலாந்து, அதன் குரலையும் சேர்த்துள்ளது. ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் பேங்க் ஆஃப் இங்கிலாந்து ஒரு இலகுவான நிதிய கொள்கையைப் பேணுகையில், பெடரல் இறுக்குவதை நோக்கி நகர்வதால், மத்திய வங்கிகளின் கொள்கைகளுக்கு இடையிலான வேறுபாடுகளது விளைவுகளைக் குறித்து அது எச்சரித்தது.

அவ்வங்கியின் நிதியியல் கொள்கை கமிட்டி குறிப்பிடுகையில், பெடரல் வட்டி விகிதத்தில் எந்தவித உயர்வுக்கும் சந்தைகள் எவ்வாறு விடையிறுக்கும் என்று உத்தேசிப்பது கூட சிக்கலாக உள்ளது என்றது. கடந்த மாத முடிவில் நடத்தப்பட்ட ஒரு கூட்டத்தின் குறிப்புகள் புதனன்று வெளியிடப்பட்ட போது, அது, “உலகெங்கிலுமான நிதிய கொள்கைகளில் வேறுபட்ட வெவ்வேறு வாய்ப்புகளுக்கேற்ப மூலதன பாய்ச்சல்கள் நுட்பமாக மாறுகின்றன, அந்த கொள்கை வேறுபாடுகள் வளர்ந்து கொண்டிருந்தால் கூடுதல் ஏற்ற-இறக்கங்கள் ஏற்படுவதற்கான அபாயம் உள்ளது,” என்றது குறிப்பிடுகிறது.

ஆழமடைந்துவரும் உலகளாவிய பொருளாதார நெருக்கடி, இராணுவவாதத்தின் எழுச்சிக்கான, அதுவும் குறிப்பாக கடந்த மாத எழுச்சிக்கான உந்துசக்திகளில் ஒன்றாகும். அதேநேரத்தில், போர் உந்துதல் தீவிரப்படுவது பொருளாதார மற்றும் நிதியியல் நிலைமையை இன்னும் கொந்தளிப்புக்கு மட்டுமே உள்ளாக்கும். இது, அதிகரித்துவரும் உலக பொருளாதார மற்றும் அரசியல் நிலைகுலைவு ஏதோ தற்காலிகமான அல்லது கடந்து சென்றுவிடக்கூடிய சமநிலையின்மையின் விளைவல்ல, மாறாக உலகளாவிய முதலாளித்துவ அமைப்புமுறையில் தொடர்ந்து கொண்டிருக்கும் மற்றும் ஆழமடைந்து கொண்டிருக்கும் உடைவின் வெளிப்பாடு என்ற உண்மையை அடிக்கோடிடுகிறது.