சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Paris agreement papers over failure to act on climate change

பாரிஸ் உடன்பாட்டு ஆவணங்கள் காலநிலை மாற்றம் மீது செயல்படத்தவறியமை பற்றி தொடவில்லை

By Patrick Martin
14 December 2015

Use this version to printSend feedback

பாரிஸில் நடைபெற்ற பூகோள காலநிலை மாநாடு, 196 நாடுகளில் ஒன்று கூட உடன்பாட்டை அங்கீகரிக்காமல் சனிக்கிழமை முடிவடைந்தது. தானாக முன்வந்து ஒவ்வொரு நாட்டாலும் சமர்ப்பிக்கப்பட்டதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட 31 பக்க அறிக்கை மாசுபடுத்தும் வாயுக்கள் வெளிப்படலைக் கட்டுப்படுத்தும் இலக்குகளை வகுக்கவில்லை, அது பல விஷயங்களில் முன்னிலைப்படுத்திக் காட்டப்பட்ட எதிர்கால வெளிப்படல்களில் ஒரு குறைப்பைக்கூட பிரதிநிதித்துவம் செய்யவில்லை.

கடல் மட்டம் உயருவதால் வெள்ளப்பெருக்கிற்கு ஆளாகும், புயல்கள் தீவிரமடைவதால் அழிவுக்கு ஆளாகும் நிலையில் உள்ள பசிபிக்கில் உள்ள 20 சிறிய நாடுகளின் தலைவர்கள் கூடுதல் பணம் கொடுத்து வாயடைக்கப்பட்டுவிட்டது. முந்தைய கூட்டங்களில் குறிப்பிடப்பட்ட 2 டிகிரி செல்சியஸ் அளவைக் காட்டிலும், புவி வெப்பநிலை உயர்வை 1.5 டிகிரி செல்சியஸாக மட்டுப்படுத்துவதை காலநிலை ஒப்பந்தம் இலக்காக அமைத்த அவர்களின் கோரிக்கையானது, பேச்சுவார்த்தைகளின் இறுதிக் கட்டத்தில் அலட்சியம் செய்யப்பட்டது.

சனிக்கிழமை ஒப்பந்தம் உலக மாசு தொகையின் பெரும் தொகுதிக்கும் வரலாற்று ரீதியாக பொறுப்பாய் உள்ள பெரிய ஏகாதிபத்திய நாடுகளின் தலைவர்களாலும் அதேபோல உலகம் முழுவதிலும் உள்ள பெருநிறுவன கட்டுப்பாட்டிலுள்ள செய்தி ஊடகங்களாலும் நல்வாழ்த்துரைகளின் வெடிப்புடன் வரவேற்கப்பட்டது.

ஜனாதிபதி ஒபாமா வெள்ளை மாளிகையில் அமைச்சக அறையில் இருந்து அளித்த தொலைக்காட்சி அறிக்கையில், காலநிலை மாற்றத்தை பெரும் அளவில் தடுப்பதற்கான முயற்சிகளில் இந்த உடன்பாடு திருப்பு முனை என்று  அறிவித்தார்.  நாம் சந்தித்த கணம், உலகம் ஒன்றாக நிற்கையில் என்ன சாத்தியமோ அதனை காட்டினோம். என்று அவர் அறிவித்தார்.

எமது அனைத்து குடிமக்களுக்குமான அற்புதமான வெற்றி இது-எந்த ஒரு நாட்டுக்குமானது அல்ல,  மாறாக புவி முழுவதும் உள்ள அனைவருக்குமான வெற்றி இது. மற்றும் எதிர்கால தலைமுறை அனைவருக்குமான ஒரு வெற்றி இது என்று வெளியுறவு செயலர் ஜோன் கெர்ரி கூறினார். பேச்சுவார்த்தைக்கு தலைமை வகித்த பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர் லோரன்ட் ஃபாபிபுஸ், இம்மாநாடு உடன்படிக்கையை எட்டத் தவறுமானால், உலக குடிமக்கள்-எமது சொந்த குடிமக்கள் மற்றும் எமது குழந்தைகள் அதனைப் புரிந்துகொள்ளமுடியாது. அதேபோல், அவர்கள் என்னை மன்னிப்பார்கள் என நான் நம்பவில்லை.

பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹோலண்ட் மிக அளவற்ற மிகை கூற்றுக்கான பரிசை எடுத்துக் கொண்டார், 12 டிசம்பர் 2015 இப்புவிக்கான பெரும் நாளாக இருக்கும். பாரிஸில் நூற்றாண்டுகளாக பல புரட்சிகள் நடந்திருக்கின்றன. இன்று மிகவும் அழகான மற்றும் அமைதியான புரட்சி ஒன்று தற்போது நிறைவேறி இருக்கிறது- அது காலநிலை மாற்றத்திற்கான ஒரு புரட்சி என்று அறிவித்தார்.

அமைதி புரட்சி பற்றிய அவரது அனைத்துப் பேச்சுக்களுக்கும் அப்பால், ஹோலண்ட், கடந்த மாத பயங்கரவாத தாக்குதல்களில் பிரெஞ்சு அரசால் ஏற்கப்பட்ட புதிய கொடூர சட்டத்தை, பாரிஸ் நகர வீதிகளில் சுற்றுச்சூழல் ஆர்ப்பாட்டக்காரர்களை அடிக்க, கைதுசெய்ய மற்றும் சிறையிட பயன்படுத்தும் ஒரு கொடூரமான தடுப்பு நடவடிக்கையை மேற்பார்வையிட்டார். மேலும், இந்த அமைதியான மாநாட்டின் பக்கவாட்டில், அமெரிக்கா, ஜேர்மனி, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் உட்பட- இதில் சம்பந்தப்பட்ட ஏகாதிபத்திய வல்லரசுகள் மத்திய கிழக்கில் ஒரு யுத்தத்திற்கு திட்டமிட்டு வந்திருக்கின்றன.

இரண்டுவார கால உச்சிமாநாடு ஒருவேளை, சிகிச்சை வெற்றி, ஆனால் நோயாளி மரணம் என்ற முதுமொழியை வேறுபட்ட அளவுடன் கொண்டு தொகுத்துக் கூற முடியும். இந்த விஷயத்தில், பாரிஸில் இடம்பெற்ற அரசியல் அறுவைச் சிகிச்சையானது அதனை ஒழுங்கமைத்த, நாம் கொண்டிருக்கும் ஒரே கிரகத்தின்  எதிர்காலம் பற்றி கவலைப்படும் சுற்றுச்சூழலியலாளர்களாக காட்டிக்கொள்ள விழைந்த பிரதானமாக ஹோலண்ட், ஒபாமா மற்றும் பிரதான உலக சக்திகளின் தலைவர்கள் ஆகியோருக்கு வெற்றி. ஆயினும், கிரகித்திற்கான எதிர்கால தாக்கத்தின் முன் கணிப்பு, உலக முதலாளித்துவத்தால் அது தொடர்ந்து சிறையிடப்படும் வரை, தொடர்ந்து மரணத்திற்கு இட்டுச்செல்வதாக இருக்கும்.

பாரிஸில் பிரதான வல்லரசுகளின் தலைவர்கள் என்ன விரும்பினார்களோ அது - உலக சுற்றுச்சூழல் மோசமடைவது மீது பூச்சிய நிலையில் சாதகமான விளைவுடன், சாத்தியமான அளவு சிறு செலவுடன், புவிகாலநிலை மாற்றம் மீதான நடவடிக்கையில் பாசாங்கு செய்வததை பெற்றனர். இறுதி ஆவணமானது நிறைய ஆழமான ஆய்வுக்கு தகுதியுள்ளதாக இருக்கிறது, ஆனால் பரந்த செயல்வழி என்றவகையில், புவி வெப்பமடைதலையும் காலநிலை மாற்றத்தையும் தடுப்பதற்கு ஒன்றும் செய்யவில்லை அல்லது குறைவாகவே செய்துள்ளது. கட்டாய நடவடிக்கைகள் எதுவுமில்லை, அரசாங்கம் அல்லது பெருநிறுவனத்திடம் இருந்து எதுவும் தேவைப்படவில்லை.

பாரிஸ் மாநாட்டின் பிரதான வெற்றி, அதன் முந்தைய மாநாட்டைப் போல பகிரங்க நெருக்கடிக்குள் முடியவில்லை, 2009 கோப்பன்ஹாகன் காலநிலை மாநாடு, அங்கே ஏகாதிபத்திய அரசுகளுக்கும் சீனா, இந்தியா மற்றும் பிரேசில் போன்ற வளர்ந்து வரும் நாடுகளுக்கும் இடையில் பிளவுகள் ஏற்பட்டு முற்றிலும் முறிவு நிலைக்கு இட்டுச்சென்றது. வாஷிங்டன் மற்றும் உள்ள இதர ஏகாதிபத்திய தலைநகர்களை பொறுத்த மட்டில், கோப்பன்ஹாகன் படிப்பினையானது உடன்படிக்கையானது அதன் விதிகளில் எவ்வளவுதான பலவீனமானதாக இருந்தாலும் எந்த உடன்படிக்கையையும் ஏற்கும் வகையில் அதனை முன்னோக்கி வைக்கும் பெரிய எழுச்சிநடையாக முன்வைக்கக் கூடியவாறு முன்கூட்டியே எதிர்ப்பார்ப்புக்களை நிர்வகிக்கக்கூடியதாக இருந்தது.

மாசு வெளிப்பாடுகளை வெட்டுதல் மற்றும் ஒவ்வொருநாடும் தாமாகவே அறிக்கை அளிக்கும் இலக்குகளின் அடிப்படையில், உலக பொதுக் கருத்திற்கு அழுத்தம் கொடுக்கும் ஒரே பலவந்தப்படுத்தும் இயங்குமுறையுடன் ஒபாமா நிர்வாகமானது உடன்படிக்கையின் கட்டமைப்பை வரையப்பணித்தது.

செய்திஊடக அறிவிப்பின்படி, செல்வந்த நாடுகள், வாயு மாசுபடுத்தலை வெட்டிக்குறைப்பதற்கான இலக்குகளை அமைக்க அழைக்கும் ஷரத்து 4-ல் ஆகவேண்டும் என்ற சொல்லுக்கு பதிலாக ஆகலாம் என்பதை கண்டுபிடித்தபொழுது, உச்சிமாநாடானது இறுதி நிமிடத்தில் கிட்டத்தட்ட குழம்பிப்போனது. நான் அதைப் பார்த்த பொழுது, நான் சொன்னேன், நாம் இதைச்செய்ய முடியாது மற்றும் நாம் இதைச்செய்யப்போவதில்லை என்று பின்னர் அமெரிக்க அரசு செயலர் கெர்ரி செய்தியாளர்களிடம் கூறினார். பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர் ஃபாபியுஸ் இந்த மாற்றத்தை தொழில் நுட்ப திருத்தல்கள் என்றவகையில் இறுதி நிமிடத்தில் திணித்து சேர்த்துக் கொண்டார்.

கார்டியன் இன்னொரு திரைமறைவு நடவடிக்கையையும் குறிப்பிட்டது, உச்சி மாநாட்டில் பிரதிநிதித்துவம் செய்த அரசாங்கங்கள் மத்தியில் சிடுமூஞ்சித்தனமான இழிந்த பேரங்கள் இடம்பெற்றதன்மீது வெளிச்சம் போட்டுக்காட்டியது: அமெரிக்க அதிகாரிகள் நிகராகுவாவின் பிரதிநிதி Paul Oquist, இப்பேரம் பற்றி கண்டனம் செய்யும் சினமூட்டும் பேச்சை வழங்க திட்டமிட்டிருக்கிறார் என்று உணர்ந்தபொழுது, அமெரிக்க வெளிவிவகார செயலர் ஜோன் கெர்ரி மற்றும் கியூப தலைவர் ராவுல் காஸ்ட்ரோ ஆகியோர் மானகுவாவிற்கு தொலைபேசி செய்து, அப்பேச்சு மிக மிக தாமதமாக இருக்குமாப்போல், ஒரு உடன்பாட்டை ஏற்றுக்கொண்ட பின்னர் Oquist பேசுமாறு செய்வதை உறுதிப்படுத்திக் கொண்டனர், ஒரு சிறு நாடு அதன் ஆட்சேபனைகளை தெரியப்படுத்துவதை தடுப்பதற்கு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலைமை இராஜதந்திரியும் கியூப அரசுத் தலைவரும் சக்திகளாக இணைந்தனர்.

உச்சிமாநாட்டிற்கான தலைமை அமெரிக்க பிரதிநிதியும், காலநிலை மாற்றத்திற்கான அமெரிக்க சிறப்பு அரசுத்தூதரருமான ரொட் ஸ்ரேர்ன், உடன்பாடானது தன்னிச்சையானதாக இருந்திருந்தது, ஏனென்றால் அது மாசுவெளிவிடலை குறைப்பதற்கான அதிக இலட்சிய இலக்குகளை அடைவதற்கு தவறினால் அதற்கு அபராதம் இருக்காது என்று அறியும்போது நாடுகளை ஊக்கப்படுத்தும் என்று விவரித்ததன் மூலம் சிடுமூஞ்சித்தனத்தை தொகுத்தார். இலக்குகள் தம்மை அடைவதற்கு சட்டரீதியாக கட்டுண்டிருப்பதைப் பற்றி கவலையுற்று, தங்களால் உண்மையில் இயலக்கூடிய இலக்குகளை விட குறைவான இலக்கை வைக்க மனப்போக்கு கொண்டிருந்த பலநாடுகள் இருந்தன என்பதையிட்டு நாம் மிக திடநம்பிக்கை கொண்டோம். என அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

பாரிஸ் உடன்பாட்டின் தன்னார்வ மற்றும் கட்டுப்பட்டிருக்கத்தேவை இல்லாத பண்பானது ஒரு சாதகமான சிறப்பியல்பு என்ற கருத்துரைத்தல்கள் கூட இருந்தன, ஏனெனில் அது தனியார் மூலதனம் மற்றும் தனியார் பாதுகாப்பு முயற்சிகள் மீது  நம்பிக்கையை ஊக்கப்படுத்தும் என்பதால். வளிமண்டலத்திலிருந்து கார்பனை உறிஞ்சி எடுப்பதற்கான புதிய தொழில் நுட்பத்தை அபிவிருத்தி செய்ய நிதியூட்டுவதற்கு ஒபாமா நிர்வாகம் மைக்ரோசாஃப்ட் பில்கேட்ஸ் போன்ற பில்லியனர்களளை புகழ்ந்து தள்ளியது. ஐ.நா பொதுச்செயலாளார் பான் கி மூன், பேரமானது சிக்கல்களுக்கு தீர்வுகாணும் மனித ஆக்கத்திறனின் முழு சக்தியையும் கட்டவிழ்த்துவிட சந்தைகள் தெளிவான சமிக்கையை இப்பொழுது கொண்டுள்ளன என்பதை அர்த்தப்படுத்துகிறது என்று கருத்துரைத்தார்.

உண்மையில் சந்தைகள்தான் -அதாவது, முதலாளித்துவ இலாப நோக்கு அமைப்புமுறைதான்- மனித முன்னேற்றத்திற்கு பிரதான தடையாக இருக்கின்றது. மனிதசமுதாயம், உலக செல்வம் கையளவே ஆன முதலாளித்துவ பில்லியனர்களால் தனிச்சொத்துடைமையாக கொண்டிருப்பதற்குள்ளும் மற்றும் அதனின்று பிரிக்கவியலாதபடி தேசிய அரசு அமைப்புக்குள் செருகப்படும் வரைக்கும், வளர்ந்துவரும் உலக சுற்றுச்சூழல் தெருக்கடியை தீர்ப்பதற்குத் தேவையான தொழில்நுட்ப மற்றும் பொருளாதார வளங்களைக் குவிப்பது என்பது சாத்தியமற்றது

கட்டுரை ஆசிரியரும்கூட வாசிப்பதற்கு பரிந்துரை செய்வது:
Paris climate talks accomplish nothing to curb global warming