சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The climate crisis and imperialism

காலநிலை நெருக்கடியும், ஏகாதிபத்தியமும்

Andre Damon
16 December 2015

Use this version to printSend feedback

பாரிஸில் 2015 ஐ.நா. காலநிலை மாற்ற மாநாடு வாரயிறுதியில் நடந்து முடிந்தபோது, உலகெங்கிலும் ஏறத்தாழ எல்லா அரசியல்வாதிகளாலும், பத்திரிகைகளாலும் அது சர்வதேச ஒத்துழைப்பின் ஒரு வெற்றியாகவும், மனிதயினத்தை சுற்றுச்சூழல் பேரழிவின் விளிம்பிலிருந்து காப்பாற்றும் என்றும் புகழப்படுகிறது.

அந்த உடன்படிக்கையை ஒரு "வரலாற்று திருப்பமாக" நியூ யோர்க் டைம்ஸ் குறிப்பிட்டது. பொறாமை நிறைந்த இறையாண்மை அரசுகளின் வளைந்துகொடுக்காத சிவப்புகோடுகளுக்குள் இயங்கி வந்தாலும் கூட, தீர்க்கமான இராஜாங்க அணுகுமுறைகளைக் கொண்டு எந்தளவிற்குச் சாதிக்க முடியும்" என்பதை அம்மாநாடு எடுத்துக்காட்டி இருப்பதாக பிரிட்டிஷ் கார்டியன் அறிவித்தது.

ஜனாதிபதி பராக் ஒபாமா அந்த உடன்படிக்கையை "உலகளவிலான கார்பன் மாசுபாட்டைக் குறைத்து, உலகை எதிர்காலத்தில் குறைந்த-கார்பன் போக்கிற்குள் கொண்டு செல்லும் ஒரு நீடித்த உடன்படிக்கை" என்று புகழ்ந்தார். அவர், இச்சவாலைச் சமாளிக்கும் விருப்பமும் திறமையும் இரண்டுமே உலகிற்கு உள்ளது என்பதை" அம்மாநாடு எடுத்துக்காட்டியிருப்பதாக கூறுமளவிற்கு சென்றார்.

ஆனால் அந்த உடன்படிக்கையைக் குறித்த எந்தவொரு ஆய்வும், அது முற்றிலும் சாரமின்றி இருப்பதைத் தெளிவுப்படுத்துகிறது. உலகளாவிய சராசரி வெப்பநிலை உயர்வை முந்தைய-தொழில்துறை மட்டங்களுக்கு (pre-industrial levels) அதிகமாக 2° C க்கு மிகக் குறைவாக வைத்து, புவி சராசரி வெப்பநிலையில்" எந்தவிதமான "உயர்வையும்" தடுக்க அரசாங்கங்கள் முயற்சி மேற்கொள்ளும் என்ற ஒரு பொத்தம்பொதுவான வாக்குறுதிக்கு அதிகமாக அந்த "குறிப்பிடத்தக்க" உடன்படிக்கையில் வேறொன்றும் இல்லை.

குறிக்கோளுடன்" செயல்படுமாறும் மற்றும் "இந்த உடன்படிக்கையின் நோக்கத்தை எட்டும் கண்ணோட்டத்துடன்" கொள்கைகளை வகுக்குமாறும் கோரிய ஒரு பொதுவான முறையீட்டுக்கு அப்பாற்பட்டு, அந்த உடன்படிக்கையை நடைமுறைப்படுத்த, நாடுகளுக்கு எந்த குறிப்பிட்ட நடவடிக்கைகளும் கட்டளையிடப்படவில்லை. அங்கே எந்த குறிப்பிட்ட இலக்குகளோ அல்லது அமுலாக்க வேண்டிய இயங்குமுறைகளோ எதுவும் இல்லை, அதாவது அந்த உடன்படிக்கையில் கையெழுத்திடும் நாடுகள் அவை என்ன விரும்புகிறதோ அதை செய்யலாம் என்பதே இதன் அர்த்தமாகும்.

முன்னணி காலநிலை விஞ்ஞானி ஜேம்ஸ் ஹான்சன் அந்த உடன்படிக்கையை ஒரு "மோசடி" என்றும், போலியானது" என்றும் சுட்டிக்காட்டினார், அதில் வெறும் மதிப்பற்ற வார்த்தைகள் தான் உள்ளன. அங்கே எந்த நடவடிக்கையும் இல்லை, வெறும் வாக்குறுதிகள் தான் உள்ளன, என்றவர் அறிவித்தார்.

ஏதேனும் அற்புதத்தால், அதில் கையெழுத்திட்டுள்ள சகல நாடுகளும் அறிவிக்கப்பட்ட இலக்கை எட்ட அவற்றின் பாகத்தில் செயல்பட்டாலும் கூட, அப்போதும் புவி வெப்பநிலை இந்த நூற்றாண்டின் இறுதியில் சுமார் 2 டிகிரி அளவிற்கு உயரும், இந்த மட்டத்தை ஹான்சன் "மிக அபாயகரமானதாக" குறிப்பிடுகிறார். அது கடல் மட்டங்களை பல மீட்டர் உயரத்திற்கு உயர்த்தும், இந்தவொரு சூழலில் உலகின் பல பிரதான தலைநகரங்கள் வெள்ளத்தில் மூழ்கிப் போகும் மற்றும் அது "நூறு மில்லியன் கணக்கான காலநிலை அகதிகளை" உருவாக்கும்.

இந்த காலநிலை உடன்படிக்கை குறித்த உத்தியோகபூர்வ புகழுரைகளின் துர்நாற்றத்திற்கு இடையே, பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்ட் தான் மிகவும் பரிகாசத்திற்குரியவராக நின்றுள்ளார். ஹோலாண்ட் அறிவித்தார், டிசம்பர் 12, 2015 இந்த பூமண்டலத்தின் முக்கிய தேதியாக நிலைத்திருக்கும். பாரிஸில், நூற்றாண்டுக்கும் அதிகமான காலத்தில் எத்தனையோ புரட்சிகள் நடந்துள்ளன. இன்று நடந்து முடிந்திருக்கும் காலநிலை மாற்றம் குறித்த புரட்சி, மிகவும் அழகான மற்றும் மிகவும் அமைதியான ஒரு புரட்சியாகும், என்றார்.

யதார்த்தத்தில், அந்த காலநிலை மாற்ற உடன்படிக்கையில் கையெழுத்திட்ட நாடுகளில் மேலோங்கி இருப்பது "அமைதியான புரட்சி" அல்ல, மாறாக வன்முறையான எதிர்புரட்சி, அல்லது ஏகாதிபத்தியத்தின் மைல்கல்லாக லெனின் குறிப்பிட்டவாறு அங்கே "அனைத்து நிலைகளிலும் பிற்போக்குத்தனமே நிலவுகிறது. காலநிலை மாற்றத்தால் முன்னிறுத்தப்படும் பாரிய அபாயத்தை கையாள இலாயக்கற்றத்தன்மை, உலக பொருளாதார மற்றும் சமூக ஒழுங்கின் திவால்நிலையினது ஒரு வெளிப்பாடாகும், அது மனிதயினத்தைப் பேரழிவை நோக்கி இட்டுச் செல்கிறது.

அந்த காலநிலை உச்சிமாநாடு, பாரிஸ் பயங்கரவாத தாக்குதல்களை அடுத்து மூன்று மாதகால அவசரகால  நெருக்கடிநிலை திணிக்கப்பட்டதற்குப் பின்னர், முற்றுகை நிலைமைகளின் கீழ் நடந்தது. உலகின் ஏகாதிபத்திய சக்திகளின் தலைவர்கள் தங்களைத்தாங்களே தட்டிக்கொடுத்துக் கொண்டபோது, பாரிஸில் உள்ள காலநிலை நடவடிக்கையாளர்கள், எந்த குற்றமும் செய்திருக்கவில்லை என்றாலும் அல்லது அதற்கு முயற்சி கூட செய்திருக்கவில்லை என்றபோதினும், வீட்டுக் காவலில் நிறுத்தப்பட்டு, கணுக்கால் பட்டைகள் (ankle bracelets) இடப்பட்டிருந்தார்கள். அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்கள் சீருடையில் இல்லாத பொலிஸால் வீதிகளில் தடுத்து பிடிக்கப்பட்டார்கள், மற்றும் போராட்டக்காரர்களின் குழுக்களைக் கலகம் ஒடுக்கும் படையினர் மிளகுப்பொடி தூவியும் மற்றும் குறுந்தடியால் அடித்தும் ஒன்றாக குவித்தனர்.

போர் மற்றும் உள்நாட்டு ஒடுக்குமுறையை விரிவாக்கும் முனைவின் பாகமாக, அனைத்து ஏகாதிபத்திய சக்திகளின் ஆளும் வர்க்கங்களும் தேசியவாதம் மற்றும் அரசியல் பிற்போக்குத்தனத்தைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளன. மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் நேட்டோவினால் தூண்டிவிடப்பட்ட பிரிவினைவாத போர்களிலிருந்து தப்பியோடி வந்து தஞ்சம்கோரும் அகதிகளுக்கு, அவர்களது எல்லைகளை மூடியும், காவல் முகாம்களைக் கட்டமைத்தும் மற்றும் பாரியளவில் நாட்டைவிட்டு வெளியேற்றுவதற்கு தயாரிப்புகள் செய்வதன் மூலமாகவும் ஐரோப்பிய சக்திகள் விடையிறுப்பு காட்டியுள்ளன, அதேவேளையில் அவை அதிதீவிர வலது கட்சிகளை சட்டபூர்வமாக்குகின்றன.

அம்மாநாட்டின் பக்கவாட்டில், புகைப்பட நிகழ்வு ஆராவாரங்கள் மற்றும் சர்வதேச சமாதானம் மற்றும் ஒத்துழைப்பு பஜனைகளுக்கு இடையே, ஏகாதிபத்திய சக்திகளின் தலைவர்கள் சிரியாவைத் துண்டாடுவதற்கான திட்டங்களை வெளியிட்டனர். சிரியாவின் பினாமி போரைத் தீவிரப்படுத்த பிரான்ஸ், பிரிட்டன், ஜேர்மனி மற்றும் அமெரிக்கா முடிவெடுத்தப் பின்னர் தான், அந்த காலநிலை உடன்படிக்கை அறிவிக்கப்பட்டது. சிரியாவில் அந்த பினாமி போரால் ஏற்கனவே அந்நாட்டின் மக்கள்தொகையில் பாதி பேர் இடம் பெயர்ந்துள்ளனர், நூறு ஆயிரக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

காலநிலை உச்சிமாநாடு நடந்து கொண்டிருந்த போதே, அமெரிக்காவும் அதன் மேற்கத்திய கூட்டாளிகளும் நேட்டோவிற்குள் மொண்டெனேக்ரோவை (Montenegro) ஏற்றுக்கொள்ளும் ஓர் உடன்படிக்கை உட்பட ரஷ்யாவிற்கு எதிரான ஆத்திரமூட்டல்களைத் தொடர்ந்து நடத்தின. கடந்த மாதம் நேட்டோ அங்கத்துவ துருக்கி ஒரு ரஷ்ய போர்விமானத்தைச் சுட்டுவீழ்த்தியதை அடுத்து, போலாந்து அதன் எல்லையில் நேட்டோ அணுஆயுதங்களை நிலைநிறுத்துமாறு கோரியது.

இந்த உடன்படிக்கை, அமெரிக்கா ஒரு "சுதந்திர கடல்போக்குவரத்து" ஒத்திகை நடத்திய ஒரு மாதத்திற்குப் பின்னர் வருகிறது, அந்நடவடிக்கையின் போது அது சீனா உரிமைகோரிய பிராந்தியத்தின் 12 மைல்களுக்குள் ஒரு ஏவுகணை தாங்கிய போர்க்கப்பலை அனுப்பி இருந்தது, அது பசிபிக்கில் ஒரு முழு-அளவிலான இராணுவ மோதலை அச்சுறுத்தியது.

உலகின் ஆளும் வர்க்கங்களுக்கு இடையே தேசியவாதம் மற்றும் போர்-வெறி மேலோங்கியுள்ள நிலைமைகளின் கீழ், ஐக்கிய நாடுகள் சபையின் மத்தியஸ்தத்துடன் சமாதானம் மற்றும் வளர்ச்சிக்கான ஒரு சர்வதேச உடன்படிக்கை என்ற யோசனை, அதன் முன்முகப்பிலேயே அர்த்தமற்றதாக உள்ளது. ஐ.நா. இன் ஆணை கோர வேண்டுமென்று கருதாமலேயே பிரதான சக்திகள் போர்கள் மற்றும் ஊடுருவல்களைத் தொடங்குகின்ற நிலையில், ஏகாதிபத்திய கொள்கையின் ஒரு கருவியான ஐ.நா. சபையே கூட, வழமையாக ஓரங்கட்டப்பட்டுள்ளது.

போர் மற்றும் அகதிகள் நெருக்கடியில் இருந்து தொடங்கி வறுமை மற்றும் சமத்துவமின்மை வரையில், மனிதயினம் முகங்கொடுக்கும் எந்தவொரு பிரதான நெருக்கடியையும் அதனால் கையாள முடியாதவாறு செய்யும் அதே முரண்பாடுகளின் ஒரு வெளிப்பாடுதான், ஒரு சுற்றுச்சூழல் பேரழிவைத் தடுப்பதை நோக்கிய எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருக்கும் முதலாளித்துவ சமூகத்தின் இலாயக்கற்றத்தன்மையும். முதலாளித்துவ உலக ஒழுங்குமுறையானது, போட்டி தேசிய-அரசுகளில் தங்கியுள்ளது, அதன் அடிப்படை நோக்கம் ஒவ்வொரு நாட்டிலும் செல்வாக்கு செலுத்தி வரும் நிதியியல் தன்னலக்குழுவைச் செழிப்பாக்க உதவுவதாகும்.

காலநிலை மாற்றத்தைத் தடுக்கவும் மற்றும் மாற்றுவதற்கும் அவசியமான தொழில்நுட்ப வழிவகைகள் உள்ளன. பிரச்சினை தொழில்நுட்பமல்ல, மாறாக சமூக மற்றும் அரசியலாகும். உலகின் பில்லியனிய தன்னலக்குழுவின் சுய-செழிப்பிற்காக மற்றும் ஆயுத தளவாடங்கள் மற்றும் இராணுவ வன்முறைக்காக துண்டாடப்பட்டுள்ள பரந்த ஆதாரவளங்கள், சமூகத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக கைப்பற்றப்பட்டு, பயன்படுத்தப்பட வேண்டும். காலநிலை மாற்றத்தை தடுப்பதென்பது பூகோளமயப்பட்ட அடித்தளத்தில் நடத்தப்படும் பகுத்தறிவார்ந்த மற்றும் விஞ்ஞானப்பூர்வ திட்டமிடலைச் சார்ந்துள்ளது. இதற்கு, தனிநபர் இலாபத்திற்கும் மற்றும் போட்டி தேசிய-அரசுகளிடையே பங்கீடு செய்வதிலும் சமூக தேவைகளை அடிபணியச் செய்வதை முடிவுக்குக் கொண்டு வர வேண்டியது அவசியமாகும்.

அதன் அர்த்தம், தற்போதைய சமூக ஒழுங்குமுறையை தூக்கியெறிந்து ஒரு சோசலிச சமூகத்தைக் கொண்டு பிரதியீடு செய்வதாகும். இந்த உலக-வரலாற்று பணியைச் செய்ய தகைமை கொண்ட ஒரே நிஜமான சர்வதேச சமூக சக்தி தொழிலாள வர்க்கம் மட்டுமே ஆகும், அதன் மீதே மனிதயினத்தின் எதிர்கால இருப்பு சார்ந்துள்ளது.