சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Conflicts over refugee policy dominate EU summit

அகதிகள் கொள்கை மீதான முரண்பாடுகள் ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டை ஆக்கிரமிக்கின்றன

By Peter Schwarz
18 December 2015

Use this version to printSend feedback

புருசெல்ஸில் வியாழனன்று மதியம் தொடங்கி வெள்ளியன்று முடிவடையும் இந்தாண்டின் கடைசி ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாடு, கூர்மையான முரண்பாடுகளால் நிரம்பியுள்ளது. ஐரோப்பிய அரசாங்கங்கள் வேகமாக வலதிற்கு நகர்ந்து வருகையில், முரண்பட்ட சீர்செய்யவியலா நலன்கள் ஐரோப்பிய ஒன்றியத்தை துண்டாட அச்சுறுத்துகின்றன.

சமீபத்திய மாதங்களைப் போலவே, இவ்வார உச்சிமாநாட்டிலும் அகதிகள் கொள்கையே பிரதான பிரச்சினையாக இருந்தது. ஐரோப்பிய அரசாங்கங்கள் சிரியா, ஆப்கானிஸ்தான் மற்றும் ஏனைய நாடுகளின் போர் பிரதேசங்களிலிருந்து வரும் மில்லியன் கணக்கான அகதிகளுக்கு, தேசியவாதம் மற்றும் இராணுவவாதத்தை தூண்டிவிட்டு பிரதிபலிப்பு காட்டுகின்றன.

அகதிகளை துரத்தியடிக்கவும் மற்றும் அண்டை நாடுகளுக்கு செல்ல அவர்களைப் பலவந்தப்படுத்தவும் ஷெங்கன் பிரதேசத்திற்குள் எல்லைகள் மறுஸ்தாபிதம் செய்யப்பட்டுள்ளன. அகதிகளை ஏற்கும் வரம்பு (quota) மற்றும் எல்லைகளை மூடுவதன் மீதான கருத்துமுரண்பாடுகள் ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடுகளுக்கு இடையிலான சூழலில் நஞ்சூட்டியுள்ளது. அதிகரித்துவரும் சமூக பதட்டங்களை முகங்கொடுத்திருப்பதுடன், பாதுகாப்பு படைகள், குறிப்பாக பாரிஸ் பயங்கரவாத தாக்குதல்களை அடுத்து, குறிப்பிடத்தக்க அளவிற்கு பலப்படுத்தப்பட்டு வருகின்றன. பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் ஜேர்மனி இப்போது சிரியா மீது குண்டுவீசுவதில் பங்குபற்றியுள்ளன.

கிரேக்க நெருக்கடியில் சிக்கன நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தும் விவகாரத்தில் செய்ததைப் போலவே, ஜேர்மனி, ஏனைய ஐரோப்பிய அரசுகள் மீது அதன் விருப்பத்தை திணிக்க, மீண்டுமொருமுறை அதன் பொருளாதார மற்றும் அரசியல் பலத்தைப் பிரயோகிக்கிறது.

குறிப்பிட்டளவில் அகதிகளை ஏற்கும் வரம்புக்கு மற்ற நாடுகளும் பொறுப்பேற்க வேண்டுமென்ற பேர்லினின் வலியுறுத்தல், ஜேர்மன்-விரோத உணர்வுகளை தூண்டியதுடன், ஹங்கேரி, போலந்து மற்றும் ஏனைய கிழக்கு ஐரோப்பிய அரசுகளிடமிருந்து கடுமையான எதிர்ப்பைச் சந்தித்துள்ளது.

கிரீஸ் மற்றும் இத்தாலியில் உள்ள 160,000 அகதிகளை ஐரோப்பிய ஒன்றியம் அதன் அங்கத்துவ நாடுகளிடையே பகிர்ந்து கொள்ள செப்டம்பரில் உடன்பட்டிருந்த நிலையில், அவர்களில் வெறும் 208 பேர் மட்டுமே இதுவரையில் அவர்களின் பயணத்தை மேற்கொண்டுள்ளனர். ஹங்கேரி மற்றும் ஸ்லோவக்கியா நீதிக்கான ஐரோப்பிய நீதிமன்றத்தில் அந்த உடன்படிக்கைக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்துள்ளன.

ஐரோப்பிய ஒன்றியம் இப்போது உள்நுழைய முடியாதவாறு அதன் வெளி எல்லைகளை மூடிமுத்திரையிட்டு விடையிறுத்து வருகிறது. “எங்களது நோக்கம் தெளிவானது: புலம்பெயர்வு வருகையைத் தடுக்க மற்றும் ஷெங்கனை பாதுகாப்பதற்காக மீண்டும் எமது வெளி எல்லைகள் மீது கட்டுப்பாட்டை  நிலைநிறுத்துவதாகும்,” என்று உச்சி மாநாட்டிற்கு ஐரோப்பிய ஒன்றிய கவுன்சிலின் தலைவர் டோனால்ட் டஸ்க் இன் வரவேற்புரை வாசிக்கிறது.

ஒருவிதத்தில் இதை துருக்கிய அரசாங்கத்துடனான நெருங்கிய கூட்டுறவின் மூலமாக அடைய முடியும், ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த அருவருப்பான வேலையைச் செய்யவும் மற்றும் ஒரு எல்லையோர காவலாளியாக நடவடிக்கை எடுக்கவும் அந்த அரசாங்கத்திற்கு 3 பில்லியன் டாலர் வழங்கப்பட்டு வருகிறது. இதனுடன் சம்பந்தப்பட்ட ஓர் உடன்படிக்கை நவம்பர் 29 கூட்டத்தில் எட்டப்பட்டது.

நேற்றைய உச்சி மாநாட்டிற்கு முன்னதாக, பதினொரு ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடுகள் அந்த உடன்படிக்கை மீதான அபிவிருத்தியை மீளாய்வு செய்ய தங்களின் துருக்கிய கூட்டாளி அஹ்மெட் தாவ்டோக் ஐ சந்தித்தன.

துருக்கிய அரசாங்கத்தின் நடவடிக்கைகளின் காரணமாக, செப்டம்பரில் நாளொன்றுக்கு 7,000 ஆக இருந்த, அஜியன் கடலில் இருந்து கிரீஸிற்கு தப்பிச்செல்லும் அகதிகளின் எண்ணிக்கை, அக்டோபரிலிருந்து இவ்வாரம் வரையில் நாளொன்றுக்கு 2,000 ஆக குறைந்துள்ளது.

இதில் துருக்கிய அதிகாரிகளால் பயன்படுத்தப்பட்டு வருகின்ற மூர்க்கமான அணுகுமுறைகள், புதனன்று "ஐரோப்பாவின் வாயிற்காவலன்" (Europe’s Gatekeeper) என்று தலைப்பிட்ட ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பினது ஓர் அறிக்கையில் வெளிக் கொண்டு வரப்பட்டன.

ஈராக் மற்றும் சிரிய அகதிகளை, இடர்பாடுகள், சித்திரவதை மற்றும் மரண அச்சுறுத்தல் கொண்ட அதேயிடங்களுக்குத் திரும்ப அனுப்புவதற்காக அந்த மனித உரிமைகள் அமைப்பு ஏனைய விடயங்களோடு சேர்ந்து துருக்கிய அரசாங்கத்தைக் குற்றஞ்சாட்டியது. அவர்கள், அவர்களது சுற்றத்தாருடனான எல்லா தொடர்புகளிலிருந்தும் ஒதுக்கப்பட்டு, திரும்பி செல்ல ஒப்புக்கொள்ளும் ஓர் அறிக்கையில் "சுயமாக விரும்பி" கையெழுத்திடும் வரையில், ஐரோப்பிய ஒன்றிய நிதியுதவி பெறும் முகாம்களில் இரண்டு மாதங்களாக தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

துருக்கி உடனான அதன் உடன்படிக்கையின் கொடுமையான குணாம்சத்தை மூடிமறைப்பதற்காக, ஐரோப்பிய ஒன்றியம், தற்போது அந்நாட்டில் ஒரு சிறிய எண்ணிக்கையிலான 2 மில்லியனுக்கும் அதிகமான அகதிகளை ஏற்றுக்கொள்ள பொறுப்பேற்றுள்ளது. ஆஸ்திரிய சான்சிலர் வெர்னெர் ப்யேமேன் 40,000 மற்றும் 50,000 இடையே பேசியிருந்தார். ஆனால் அங்கே எந்த உறுதியான உடன்படிக்கையும் இல்லை. பல நாடுகள் மொத்தத்தில் அகதிகளை ஏற்பதற்கு நிராகரித்துள்ளன, ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் இருப்பவர்களின் கருத்துப்படி, “விருப்பத்துடன் ஏற்றுக்கொள்ளும் குழு" உருவாக்கப்பட்டுள்ளது, இதில் ஆஸ்திரியா மற்றும் ஜேர்மனி மட்டுமே சேர்ந்துள்ளன.

எல்லை பாதுகாப்பு முகமையான Frontex ஐ ஒரு சுயாதீனமான எல்லை பொலிஸாக விரிவாக்குவதன் மூலம் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளி எல்லைகளை மூடுவது, ஐரோப்பிய ஒன்றியம் விரும்பும் மற்றொரு வழிவகையாகும். அதன்படி, நாடுகளுக்கு விருப்பமில்லை என்றாலும் அவற்றின் எல்லைகளில் Frontex ஆல் நடவடிக்கை எடுக்க முடியும். இந்த முடிவுக்கான ஒரு முன்மொழிவு செவ்வாயன்று ஐரோப்பிய ஒன்றிய கமிஷனால் சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டது.

இந்த முனைவுக்குப் பின்னால் உந்துசக்தியாக இருப்பது ஜேர்மன் அரசாங்கம். அது அகதிகளை ஏற்கும் வரம்பு மீதான விவாதத்தைப் போன்று அதேமாதிரியான ஒன்றைத் தூண்டிவிட அச்சுறுத்தி வருகிறது. போலாந்து, கிரீஸ், ஸ்பெயின் மற்றும் ஏனைய நாடுகள் அவற்றின் விருப்பமில்லாமல் எல்லை பொலிஸை அனுப்புவதை அவற்றின் தேசிய இறையாண்மை மீதான தாக்குதலாக கருதுகின்றன. சில நாடுகள் அதை ஒரு "ஊடுருவல் வகைமுறை" என்று வர்ணிக்கின்றன.

அந்த கவுன்சில் தலைவர் டஸ்க் "கடுமையான நடவடிக்கைகளை" குறித்து பேசினார். “நாம் கமிஷனின் பரிந்துரைகளை நிராகரிக்கிறோம் என்றால், நாம் வேறு வழிமுறைகளைக் காண வேண்டும். ஆனால் அவையும் துரதிருஷ்டவசமாக கடினமானதாக இருக்கும்,” என்றவர் எச்சரித்தார்.

ஒரு எல்லை பொலிஸ் விவகாரம் "தேசிய இறையாண்மை குறித்த மிக அடிப்படையான கேள்விகளை" உயர்த்துவதை ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெலும் ஒப்புக்கொள்ள வேண்டியிருந்தது. இதற்கிடையிலும், அப்பெண்மணி அத்திட்டத்தில் உறுதியாக இருக்க தீர்மானகரமாக இருக்கிறார். ஆனால் தற்போதைய உச்சி மாநாடு அதை அங்கீகரிக்கக் கூடியதாக மட்டுமே இருக்கும். பின்னர் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றமும் மற்றும் ஒவ்வொரு அங்கத்துவ அரசும் மூன்றில் இருந்து ஆறு மாதங்களுக்குள் அதன் மீது முடிவெடுக்க வேண்டும்.

ஜேர்மன் அரசாங்கம் இந்த பிரச்சினையில் அவற்றை அழுத்தத்தின் கீழ் கொண்டு வரும். இவ்விவகாரத்தில் பேர்லினுடன் நெருக்கமாக வேலை செய்துவரும் ஆஸ்திரிய சான்சிலர் ப்யேமேன், “அகதிகளை நியாயமாக பங்கீடு செய்வதிலிருந்து" ஒரு நாடு "பின்வாங்கினால்", அந்நாடு ஐரோப்பிய ஒன்றிய நிதியுதவிகளை இழக்குமென எச்சரித்தார்.

ஆழ்ந்த பிளவுகள் உள்ள ஏனைய பல கேள்விகளும் அந்த உச்சி மாநாட்டில் விவாதிக்கப்பட்டன. அத்தகைய பிரச்சினைகளில் ஒன்று, ஒரு நாடு ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் தங்கியிருப்பதற்கான முன்நிபந்தனைகளாக பிரிட்டிஷ் பிரதம மந்திரி டேவிட் கேமரூன் முன்வைத்த நிபந்தனைகளாகும். ஏனைய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளது பிரஜைகள் நான்காண்டுகள் வேறொரு நாட்டில் இருந்திருந்தால் அவர்களுக்கு வெறும் சமூக நல உதவிகள் மட்டுமே அளிக்க வேண்டுமென்ற கேமரூனின் அறிவுறுத்தல் மீது அங்கே ஆழ்ந்த கருத்து வேறுபாடுகள் நிலவின.

இவற்றிற்கு எதிர்முரணாக, ரஷ்யாவிற்கு எதிராக இன்னும் கூடுதலாக ஆறு மாதத்திற்குத் தடைகளை நீடிப்பதில் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் பாதுகாப்பு முகமைகளை விரிவாக்குவதில் அங்கே பரந்த உடன்பாடு இருந்தது. ஐரோப்பாவின் பயங்கரவாத-எதிர்ப்பு அமைப்புகள் அவற்றின் சொந்த தரவுக்களஞ்சியத்தை உருவாக்கி, மற்றும் அமெரிக்க உளவுத்துறையுடன் நெருக்கமாக ஒத்துழைத்து, இன்னும் நெருக்கமாக கூடி இயங்க உள்ளன.