சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Saudi Arabia and the “war on terror”

சவூதி அரேபியாவும், “பயங்கரவாதத்திற்கு எதிரான போரும்"

Bill Van Auken
18 December 2015

Use this version to printSend feedback

செவ்வாயன்று துருக்கியின் பிரமாண்ட Incirlik விமானத்தள விஜயத்தின் போது ஊடகங்களிடையே பேசுகையில், அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலர் அஷ்டன் கார்டர், பயங்கரவாதத்திற்கு எதிராக ஒரு புதிய "இஸ்லாமிய கூட்டணியை" அறிவித்தமைக்காக சவூதி முடியாட்சியை பாராட்டினார்.

“சவூதி அரேபியா உருவாக்கியுள்ள கூட்டணி குறித்து நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம், அது பயங்கரவாதத்திற்கு எதிரான அவர்களது நடவடிக்கைகளை முன்னோக்கி எடுத்துச்செல்லுமென எதிர்பார்க்கிறோம்,” என்று கார்டர் அறிவித்தார்.

ஆனால் அக்கூட்டணி என்றழைக்கப்பட்டதில் இருந்த பல நாடுகள், அதில் அவை இணைவதைக் குறித்த கேள்விகளை எழுப்புவதற்கு முன்னரே, அவற்றிற்கே தெரியாமல், வேகமாக சவூதியின் அறிவிப்பு வெளியாகி இருந்தது. ஈராக், சிரியா மற்றும் ஈரான் ஆகிய மூன்று முக்கிய முஸ்லீம் நாடுகள் புறக்கணிக்கப்பட்டிருந்தன. இது, நிஜத்தில் சவூதி அரேபியா அப்பிராந்தியத்தின் ஷியா மக்களுக்கு எதிரான அதன் பிரிவினைவாத சிலுவைப் போரை நடத்த ஒரு சுன்னி முஸ்லீம் கூட்டணிக்கு மட்டுமே ஒட்டுப் போடுகிறது என்ற குற்றச்சாட்டுக்களுக்கு இட்டுச் சென்றது.

சவூதி ஆட்சி "பயங்கரவாதம்" என்பதன் மூலம் என்ன அர்த்தப்படுத்துகிறது என்பது தான் மிக அடிப்படையான கேள்வி? தெளிவாக, அது சிரியாவில் சண்டையிட்டு வரும் அல் கொய்தா இணைப்பு கொண்ட பல்வேறு குழுக்களைக் குறிப்பிடவில்லை, அவை அனைத்தும் வஹாபிஸ்ட் (Wahhabist) சவூதி பேரரசிடமிருந்து கணிசமான நிதியுதவிகளையும் அத்துடன் பெரும் எண்ணிக்கையிலான போராளிகள் மற்றும் அவர்களது மத-சித்தாந்த தூண்டுதல்களையும் பெறுகின்றன.

இந்த உண்மையை, 2009 இரகசிய இராஜாங்க ஆவணம் ஒன்றில், அப்போதைய பாதுகாப்புத்துறை செயலர் ஹிலாரி கிளிண்டன் உறுதிப்படுத்தி இருந்தார். “உலகெங்கிலுமான சுன்னி பயங்கரவாத குழுக்களுக்கு நிதி வழங்குபவர்களில் மிக முக்கிய ஆதாரநபர்கள், சவூதி அரேபிய நிதி வழங்குநர்களாவர்,” என்று அந்த ஆவணம் குறிப்பிட்டது.

இதை, அதற்குப் பின்னர் கடந்த ஆண்டு ஹார்வர்டில் உரையாற்றிய துணை ஜனாதிபதி ஜோ பேடெனும் ஒப்புக்கொண்டார். மத்தியக் கிழக்கில் உள்ள ஏனைய அமெரிக்க வாடிக்கையாளர் கொடுங்கோல் ஆட்சிகளோடு சேர்ந்து, சவூதி ஆட்சி, “அசாத்திற்கு எதிராக சண்டையிடுவது யாராக இருந்தாலும் அவர்களுக்குள் நூறு மில்லியன் கணக்கான டாலர்கள் மற்றும் பத்து ஆயிரக்கணக்கான டன் ஆயுங்களையும் பாய்ச்சியது. அதுமட்டுமின்றி அல்-நுஸ்ரா, அல்-கொய்தா மற்றும் உலகின் ஏனைய பாகங்களிலிருந்து வரும் அதிதிவிர ஜிஹாதிஸ்டு கூறுபாடுகளைச் சேர்ந்தவர்கள் அனுப்பப்பட்டு வந்தனர்,” என்பதை அவர் ஏற்றுக் கொண்டார்.

நிச்சயமாக கிளிண்டனும் பேடெனும் மூடிமறைக்க முயன்றது என்னவென்றால், இந்நடவடிக்கை முழுவதும் தெற்கு துருக்கியின் ஒரு மையத்திலிருந்து சிஐஏ ஆல் ஒருங்கிணைக்கப்பட்டது என்பதைத் தான். வாஷிங்டன் லிபியாவின் ஆட்சி மாற்றத்திற்கான அமெரிக்க-நேட்டோ போரில் அதேபோன்ற குழுக்களுக்கு ஆயுத உதவியும் நிதியுதவிகளும் வழங்கியது, அதற்கு முன்னதாக ஆப்கானிஸ்தானில் சோவியத்-ஆதரவிலான ஆட்சிக்கு எதிராக இஸ்லாமிய போருக்குக் கிளர்ச்சியூட்டுவதில், அல் கொய்தாவை வளர்த்தெடுத்த இதில், சவூதியர்களுடன் நெருக்கமாக வேலை செய்தது.

ஆகவே சவூதி முடியாட்சி எதை பயங்கரவாதமாக காண்கிறது? இதற்கான பதிலை அதன் சிறைச்சாலைகளில் காண முடியும், அங்கே மூன்று இளைஞர்கள், வயதுவராத சிறார்களாக இருந்த போதே கைது செய்யப்பட்ட இவர்கள், ரியாத்தில் அமெரிக்க ஆதரவிலான ஆட்சியின் ஈவிரக்கமற்ற ஒடுக்குமுறைக்கு எதிராக அமைதியான போராட்டங்களில் பங்குபற்றிய "குற்றத்திற்காக" தலை துண்டித்து கொல்லப்பட இருக்கிறார்கள்.

இவர்கள் அதேபோன்ற 52 “பயங்கரவாதிகளில்" உள்ளடங்குவர், இவர்கள் அனைவரது மரண தண்டனையும் எந்நேரமும் எதிர்நோக்கப்படுகிறது. அவர்களில் இருவர்17 வயதில் கைது செய்யப்பட்ட அலி மொஹம்மத் அல்-நிம்ர், 15 வயதில் கைது செய்யப்பட்ட அப்துல்லாஹ் அல்-ஜாஹிர்வாளால் தலை துண்டிக்கப்படும் மரண தண்டனைக்குக் கூடுதலாக, அவர்களது தலையில்லா உடல்கள் சவூதி அரசவையை எதிர்க்கத் துணியும் எவரொருவருக்கும் உதாரணமாக ஒரு பொதுவிடத்தில் சிலுவையில் அறையப்பட உள்ளன.

அனைத்திற்கும் மேலாக, சவூதி முடியாட்சி எதை "பயங்கரவாதம்" என்று குறிக்கிறது என்பது கடந்த ஆண்டின் ஒரு புதிய சட்டத்தால் குறிக்கப்பட்டது. ஏனையவற்றோடு சேர்ந்து, “அரச மதிப்பை அவமதிக்கும்,” “பொது ஒழுங்கை கெடுக்கும்,” அல்லது "சமூகத்தின் பாதுகாப்பைக் குலைக்கும்" “எந்தவொரு நடவடிக்கையும்" பயங்கரவாதத்தில் உள்ளடங்குமென அச்சட்டம் ஸ்தாபிக்கிறது.

“பயங்கரவாதமாக" வரையறுக்கப்பட்ட ஏனைய நடவடிக்கைகளில் உள்ளடங்குபவை: “எந்த வடிவத்தில் நாத்திகச் சிந்தனைக்கு அழைப்புவிடுப்பதும், அல்லது இந்நாட்டின் அடித்தளமான இஸ்லாமிய மத அடிப்படைகள் மீது கேள்வி எழுப்புவதும்,” அத்துடன் "எந்தவொரு குழுக்களுடன், [சிந்தனை] போக்குகளுடன், அல்லது பேரரசுக்கு விரோதமான தனிநபர்களுடன் நேரடி தொடர்பிலோ அல்லது எழுத்துத் தொடர்பிலோ இருப்பது" ஆகியவை.

இப்போது 19 வயதாகும் அப்துல்லாஹ் அல்-ஜாஹெர் இன் பெற்றோர்கள், அவரது வாழ்க்கைக்காக மன்றாட முன்வந்துள்ளனர். அவர் கைது செய்யப்பட்டதிலிருந்து, ஒரு பொய் ஒப்புதல் வாக்குமூலத்தில், இதை அவரால் படிக்கக் கூட முடிந்திராத நிலையில், அதில் அவர் கையெழுத்திட்ட வரையில், எவ்வாறு சித்திரவதை செய்யப்பட்டார் மற்றும் இரும்பு கம்பிகளால் அடிக்கப்பட்டார் என்பதை அவர் பெற்றோர்கள் விவரிக்கின்றனர்.

சவூதி ஆட்சி ஏற்கனவே இந்தாண்டு குறைந்தபட்சம் 151 பேரை மரண தண்டனைக்கு உள்ளாக்கி உள்ளது, இது உலகின் எந்த நாட்டு தலையாய தண்டனையின் தனிநபர் விகிதத்தை விடவும் அதிகபட்சமாகும்.

ஒபாமா நிர்வாகம் மற்றும் பெருநிறுவன ஊடகங்களுக்குள், அலி மொஹம்மத் அல்-நிம்ர், அப்துல்லாஹ் அல்-ஜாஹெர் மற்றும் அடுத்து தலை துண்டிப்பை முகங்கொடுத்துள்ள டஜன் கணக்கான ஏனையவர்களின் வாழ்க்கைக்கான முறையீடுகள் செவிட்டுக் காதுகளில் ஓதியதாகவே முடிந்துள்ளது.

வாஷிங்டன் தொடர்ந்து சவூதி அரேபியாவை அரபு உலகில் அதன் நெருக்கமான கூட்டாளியாக கணக்கில் கொண்டுள்ளது, இவ்வுலகில் ஏனைய எந்த நாட்டையும் விட அதிகமாக அமெரிக்கா ஆயுதங்களை அதற்கு விற்று வருகிறது. கடந்த ஆண்டில் மட்டும், அந்த எண்ணெய் பேரரசு 1.2 பில்லியன் டாலர் மதிப்பிலான அமெரிக்க ஆயுதங்களை வாங்கியது. புதிதாக 1 பில்லியன் டாலர் உடன்படிக்கை ஒன்றும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது, அதேவேளையில் பெண்டகன் யேமனில் நடக்கும் அதன் கொடுமையான போரில் மீண்டும் தொடர்ந்து சவூதி இராணுவத்தை அனுப்பியுள்ளது, அப்போரில் ஏற்கனவே 7,000 பேர் கொல்லப்பட்டிருப்பதுடன், அது பத்து மில்லியன் கணக்கானவர்களைப் பட்டினியின் விளிம்பிற்கும் கொண்டு வந்துள்ளது.

அமெரிக்க ஊடகங்கள், தலைதுண்டிக்கப்பட மற்றும் கழுமரம் ஏற்ற தண்டனை விதிக்கப்பட்ட இளைஞர்களின் அவலநிலையைப் பெரும்பாலும் புறக்கணித்துள்ளன. அதற்கு மாறாக, அவை, அங்கே பெண்கள் முதல்முறையாக வாக்களிக்கவும் மற்றும் தேர்தலில் போட்டியிடவும் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற அடித்தளத்தில், ஆனால் அவர்கள் தோற்றப்பாட்டாளவில் ஏனைய எல்லா உரிமைகளும் இழந்திருக்கிறார்கள் என்றாலும், சமீபத்திய முனிசிப்பல் கவுன்சில் தேர்தல்களை மிதமிஞ்சி பாராட்டின.

அந்நாட்டின் முற்றிலும் அதிகாரமற்ற ஆலோசனை குழுக்களாக உள்ள முனிசிப்பல் அமைப்புகளுக்கு வாக்களிக்க, மக்களில் 10 சதவீதத்திற்கும் குறைவானவர்களேசவூதி பெண்களில் வெறும் 1 சதவீதத்தினரேவந்தனர் என்ற உண்மையைப் பெரும்பாலான செய்திகள் கடமையுணர்வுடன் கைவிட்டிருந்தன. எந்தவொரு நிஜமான அதிகாரத்தையும் கைகளில் வைத்துள்ள அரச குடும்பங்களே அந்த முனிசிப்பல் ஆலோசனை குழுக்களில் அனைவரையும் நியமிக்கின்றன.

ஒருசில விரல்விட்டு எண்ணக்கூடிய சவூதி பெண்கள் அர்த்தமற்ற பதவிகளுக்கு போட்டியிடுவதை கொண்டாடும் ஊடகங்கள், உள்நாட்டில் வேலைசெய்யும் அடிமைகளைப் போல கையாளப்படும் பல ஆயிரக் கணக்கான வெளிநாட்டு தொழிலாளர்களில் ஒருவரான ஒரு இலங்கை பெண்மணியின் மீது எந்த கவனமும் செலுத்தவில்லை, இவர் மீதான தகாத பாலியல் குற்றச்சாட்டுக்காக இவர் கல்லால் எறிந்து கொல்லப்படுவதற்காக நிறுத்தப்பட்டுள்ளார். இரண்டு இந்தோனேஷிய பெண் வேலையாட்கள் இவ்வாண்டின் தொடக்கத்தில் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டனர்.

அமெரிக்க ஏகாதிபத்தியம் சவூதி ஆட்சியை அரபு உலகில் அதன் மிக நெருக்கமான கூட்டாளியாக கணக்கில் கொள்வது, அப்பிராந்தியத்தில் அதன் தொடர்ச்சியான போர்களை நியாயப்படுத்த அது பயன்படுத்திய எல்லா போலிக்காரணங்களையும் அம்பலப்படுத்துகிறது. அல் கொய்தா இணைப்பு கொண்ட குழுக்களுக்கு நிதியுதவிகள், ஆயுதங்கள் மற்றும் மத-சித்தாந்த தூண்டுதல்களை வழங்கும் ஓர் அரசுடனான கூட்டணி "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்று கூறப்படுவதன் மீதான பொய்யை எடுத்துக்காட்டுகிறது, அதுவும் இளைஞர்களின் தலை துண்டித்து மற்றும் கழுமரத்தில் ஏற்றும் ஒரு முழுமையான முடியாட்சிக்கான அமெரிக்க ஆதரவு, வாஷிங்டனின் "ஜனநாயகம்" மற்றும் "மனித உரிமைகள்" ஊக்குவிப்பின் மோசடியை அம்பலப்படுத்துகிறது.

வாஷிங்டனின் நிஜமான நோக்கங்கள், உலக சந்தைகள் மற்றும் ஆதாரவளங்கள் மீது மேலாதிக்கத்தைப் பெறுவதன் மூலமாக அமெரிக்க முதலாளித்துவத்தின் பொருளாதார வீழ்ச்சியைச் சரிகட்டுவதற்காக இராணுவ பலத்தைப் பிரயோகிப்பதை நோக்கி திருப்பப்பட்ட முழுமையாக சூறையாடல் ஆகும்.

அதிதீவிர-பிற்போக்குத்தனமான மற்றும் திவாலான சவூதி ஆட்சியை அது இக்கொள்கைக்கான முக்கிய தூணாக சார்ந்திருப்பதானது, அமெரிக்கா ஏகாதிபத்தியம் ஒரு பேரழிவை நோக்கி நகர்ந்து வருவதை மட்டுமே எடுத்துக்காட்டுகிறது. அமெரிக்க சமூகத்திற்குள் எழுந்துள்ள ஆழ்ந்த முரண்பாடுகள் ஒரு புரட்சிகர வெடிப்புக்கான நிலைமைகளை உருவாக்கியுள்ள போதினும் கூட, அப்பிராந்திய மக்களுக்கு எதிராக நடத்திய பாரிய குற்றங்களுக்குள் அது வீழ்ந்துள்ளது என்ற அனைத்திலிருந்தும் பலனைப் பெற அது தீர்க்கமாக உள்ளது.