சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Mass police raids in French state of emergency find no terror networks

பிரெஞ்சு அவசரகால நெருக்கடியின் கீழ் பாரிய பொலிஸ் சோதனைகள் எந்த பயங்கரவாத வலையமைப்புகளையும் கண்டறியவில்லை

By Anthony Torres
23 December 2015

Use this version to printSend feedback

பொலிஸ் மற்றும் உளவுத்துறை சேவைகள் நேரடியான சோதனைகளை நடத்தவும் மற்றும் நடைமுறையில் நீதித்துறை பிரிவுகளுக்குள் செல்லாமல் மக்களை நிரந்தர வீட்டுக்காவலில் வைக்கவும் அனுமதிக்கும் ஓர் அவசரகால நெருக்கடி நிலையை பிரான்சின் சோசலிஸ்ட் கட்சி (PS) அரசாங்கம் நடைமுறைப்படுத்தி, ஒரு மாதத்திற்கு சற்று அதிகமான காலமே கடந்துள்ளது.

வரவிருக்கும் வாரங்களில் ஒரு பிரெஞ்சு அரசியலமைப்பு திருத்தத்தைக் கொண்டு நிரந்தரமாக்கப்பட உள்ள இந்த மூன்று மாத அவசரகால நெருக்கடி நிலையானது, ஆளும் வர்க்கம், நடைமுறைக்குக் கொண்டு வர விரும்பும் பொலிஸ் அரசைக் குறித்த ஒரு சிறிய காட்சியை வழங்குகிறது. இந்த வரைவு அரசியலமைப்பு திருத்தம், மந்திரிசபையில் இன்று முன்வைக்கப்படுகிறது.

உளவுத்துறை சேவைகள் சேகரித்த பாரிய தகவல்களின் அடிப்படையில், பொலிஸ், விச்சி ஆட்சிக்குப் பின்னர் பிரான்ஸ் பெருநகரங்களில் பார்த்திராத அளவிற்கு பரந்த எண்ணிக்கையிலான நடவடிக்கைகளை நடத்தி வருகின்றன.

கடந்த மாதத்தில், உள்துறை அமைச்சக தகவல்படி, 2,700 பொலிஸ் சோதனைகள் மற்றும் தேடல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் 120 தேடல்கள் முதல் பத்து நாட்களில் நடந்துள்ளது மற்றும் டிசம்பருக்குள்ளாக நாளொன்றுக்கு சராசரியாக நாற்பது நடந்துள்ளன. நவம்பர் 13 க்குப் பின்னர், உள்துறை மந்திரி பேர்னார்ட் கசெனேவ் 360 வீட்டுக்காவல் உத்தரவுகளில் கையெழுத்திட்டுள்ளார்.

பயங்கரவாதத்திற்கு எதிராக சண்டையிடுவதற்காக என்று கூறி பிராந்திய அதிகாரிகளுக்கும், பொலிஸ் மற்றும் உளவுத்துறை சேவைகளுக்கும் கட்டுப்பாடற்ற அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. எவ்வாறிருப்பினும், இது வெறும் உத்தியோகபூர்வ போலிக்காரணம் தான். நடத்தப்பட்ட 2,700 தேடல்கள் மற்றும் பறிமுதல்களில், வெறும் இரண்டே இரண்டு முதல்கட்ட விசாரணைகள் மட்டும் தான் பாரிஸ் பயங்கரவாத-எதிர்ப்பு பிரிவு நீதிபதிகளால் தொடங்கப்பட்டுள்ளன.

இது, சிரிய போரில் பிரெஞ்சு ஏகாதிபத்தியம் பினாமிகளாகப் பயன்படுத்தும், பிரான்சில் உள்ள பயங்கரவாத வலையமைப்புகளை பொலிஸ் மூடிமறைக்கின்றது என்பதை, அல்லது, உண்மையிலேயே நடைமுறையில் பிரான்சில் எந்த பயங்கரவாத உள்கட்டமைப்பையும் கண்டறிவதற்கு இல்லை என்பதையே எடுத்துக்காட்டுகிறது. இந்த இரண்டு விடயத்திலுமே, அவசரகால நெருக்கடி நிலையானது பயங்கரவாத வலையமைப்புகளின் மீதல்ல, மாறாக பிரெஞ்சு மக்களின் மீது கடுமையான நடவடிக்கைகளை திணிக்க ஒரு சாக்குபோக்காக சேவையாற்றி வருகிறது.

பெருமளவிலான வீட்டு காவல்களை நியாயப்படுத்த, பிரதம மந்திரி மானுவெல் வால்ஸ் அறிவிக்கையில், ஆம், அங்கேடிசம்பர் 11 வரையில்354 வீட்டுக் காவல்கள் நடத்தப்பட்டுள்ளன, ஏனென்றால் அரசுக்கும், பொது நலனுக்கும் மற்றும் பொது ஒழுங்கிற்கும் ஆபத்தான தனிநபர்களை தனிமைப்படுத்துவதற்கு அதுவும் ஒரு வழியாகும், என்றார்.

பாரிஸில் நடந்த உலகளாவிய COP21 காலநிலை மாநாட்டின் பக்கவாட்டில், அவசரகால நெருக்கடி நிலையால் திணிக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் மீதான தடைகளைத் தொடர்ந்து, ஏழு சுற்றுச்சூழல் நடவடிக்கையாளர்கள் டிசம்பர் 12 வரையில் வீட்டுக்காவலில் நிறுத்தப்பட்டிருந்தனர், எதற்காக என்றால் "பொது ஒழுங்கிற்கு [இவர்கள்] தீவிர அச்சுறுத்தலை பிரதிநிதித்துவம் செய்தனராம். அவர்கள் COP21 உச்சிமாநாட்டிற்கு எதிராக, சோசலிஸ்ட் கட்சி தடைவிதித்திருந்த ஆர்ப்பாட்டங்களில் பங்கெடுக்கத் திட்டமிட்டு வந்தனர்.

"அரசுக்கு ஆபத்தானவர்களாக" கருதப்படும் இவர்கள், இஸ்லாமிய அரசு (IS) அல்லது அல் கொய்தாவில் இணைந்து ஏகாதிபத்திய சக்திகளின் சார்பாக சிரிய ஆட்சிக்காக சண்டையிட முடிவெடுத்த இளம் ஜிஹாதிஸ்டுகள் அல்லர். இதுபோன்ற ஜிஹாதிஸ்டுகள், நவம்பர் 13 தாக்குதல்களுக்குப் பின்னர் எழுச்சிபெற்று, சிரிய போரில் அவர்களைப் பயன்படுத்தும் உளவுத்துறை அமைப்புகளுக்குத் தெரிந்தே ஐரோப்பா எங்கிலும் பயணிக்கின்றனர்.

வால்ஸ் இன் அறிக்கைகள் தெளிவுபடுத்துவதைப் போல, அவசரகால நெருக்கடி நிலையானது சோசலிஸ்ட் கட்சி கொள்கைகளுக்கு எதிரான சமூக எதிர்ப்பை இலக்கில் வைத்துள்ளது.

இப்போது-திட்டமிடப்பட்டுள்ள அரசியலமைப்பு திருத்தத்துடன் ஒரு நிரந்தர அவசரகால நெருக்கடி நிலையைக் கொண்டு வந்து ஒரு பொலிஸ் அரசை நடைமுறைப்படுத்துவதை இறுதி செய்வதற்கே நவம்பர் 13 தாக்குதல்கள் பிரெஞ்சு அரசாங்கத்திற்கு உதவியுள்ளன. மக்கள் எதிர்ப்பை, குறிப்பாக தொழிலாள வர்க்க எதிர்ப்பை, எதிர்கொள்வதற்கு தயாரிப்பு செய்யும் வகையில் அடிப்படை ஜனநாயக உரிமைகளை அழிப்பதே நோக்கமாக உள்ளது.

பத்திரிகைகளால் வெளியிடப்பட்ட விடயங்கள், பொலிஸ் தேடல்களின் அளவையும் மற்றும் நீண்டகாலம் எட்டப்படக்கூடிய தன்மையையும் மற்றும் பொலிஸ் பயன்படுத்தும் அதிகாரங்களையும் குறித்த ஒரு கருத்தை வழங்குகின்றன.

தொழில்துறை சுத்திகரிப்பு துறையின் ஒரு துணை ஒப்பந்ததாரரான Mickaël L, ஒரு பயங்கரவாத மற்றும் சலாபிஸ்ட் வலையமைப்பைச்" சேர்ந்தவராக சந்தேகிக்கப்பட்டார். நவம்பர் 15 இல், அவருக்கு நண்பர் ஒருவரிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது, அந்த நண்பரது வீடு பொலிஸ் SWAT குழுவால் அப்போது தான் தேடலுக்கு உள்ளாகி இருந்தது. அவரது நண்பர், பொலிஸ் இவரையும் தேடி வருவதாக தெரிவித்தார். Mickaël கூற்றின்படி, அந்நண்பர் "(மார்ச் 2012 இல் துலூஸில் கொல்லப்பட்ட ஒரேயொரு இஸ்லாமிய பயங்கரவாதியான) மொஹம்மத் மெஹ்ராஹ் விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருந்தார். பின்னர் Mickaël துலூஸ் பொலிஸ் நிலையம் சென்றார், அவர் உடனடியாக வீட்டுக் காவலில் நிறுத்தப்படுவதாக அவருக்குக் கூறப்பட்டது.

அவரது வீட்டுக் காவல் குறித்து அறிவிக்கப்பட்ட அடுத்த நாள், அவர் Blagnac பொலிஸ் நிலையத்திற்குச் சென்றார். கையில் ஜெபமாலை வைத்திருப்பதைப் போன்று அவரது வலது கரத்தில் பெரிதாக பச்சைக்குத்தி இருந்ததை அவர் பொலிஸாரிடம் காட்டினார். நான் கத்தோலிக் பயிற்சி எடுத்து வருகிறேன். இந்த பச்சைகுத்தப்பட்ட அடையாளம், சுமார் நான்கு மாதங்களாக இருக்கிறது. மூன்று மாதங்களுக்கு முன்னர் நான் எனது குழந்தைகளோடு லூர்து தேவாலயத்திற்கும் கூட சென்று வந்திருக்கிறேன். நான் தேவாலயங்களுக்குச் செல்வதை விரும்புபவன், அவற்றை குழந்தைகளுக்குக் காட்ட பொதுவாக நான் அங்கே செல்வதுண்டு, என்று தெரிவித்தார். இறுதியில் அவர் நவம்பர் 24 இல் உத்தியோகப்பூர்வமாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார், ஆனால் அவர் பொலிஸ் நிலையத்தில் வெறும் அரை மணி நேரம் மட்டுமே இருக்க வைக்கப்பட்டிருந்தார்.

டிசம்பர் 4 இல் அவரை நேர்காணல் செய்த Le Monde இன் ஒரு இதழாளருடன் சேர்ந்து பொலிஸ் நிலையத்திலிருந்து வெளிவந்த அவரை, அடையாளம் கண்டுகொண்ட ஒரு பொலிஸ் அதிகாரி கூறுகையில்: அது சேவைகளுக்கு இடையிலான குழப்பம். உள்நாட்டு பாதுகாப்பு பொது இயக்குனரகம் (DGSI) கோப்புகளைக் குப்பையில் வீசுவதைப் போல எங்களிடம் அனுப்புகிறது. என்னால் உங்களது மன அழுத்தத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது, என்று தெரிவித்தார். Sophiane என்றவொரு இளைஞரின் கதையை La Voix du  வெளியிட்டது, 67 வயதான அவரது தந்தை, Boulogne-sur-Mer (Pas-de-Calais) இல், நவம்பர் 17 இல் "தரையில் பிடித்து தள்ளப்பட்டார்." "முன்னதாக பொலிஸ் அதிகாரிகள், யாரும் இல்லையென கண்டதும், அவரது வீட்டுக்கதவை உடைத்திருந்தனர். பின்னர் அவர் காவலில் வைக்கப்பட்டார். பொலிஸ் மேலிருந்து கீழாக அந்த வீட்டைத் துலாவியதுஇவை அனைத்தும், அவரது மகன் ஒரு நாள் முன்னதாக ஒர் நிர்வாக சம்பிரதாயத்திற்காக Arras பொலிஸ் தலையகத்தில் இருந்தபோது, புகைப்படம் எடுத்தார் என்ற சந்தேகத்தின் பேரில் இதெல்லாம் நடந்தன.

அவசரகால நெருக்கடி நிலைக்கு எதிராக பொதுமக்களின் எதிர்ப்பு மேலெழும் என அஞ்சி, பொலிஸ் தேடல்கள் மற்றும் வீட்டுக் காவல் நடவடிக்கைகளைக் குறித்து ஆளும் வர்க்கத்திலிருந்து சிலர் ஐயங்களை வெளியிட்டிருந்தனர்.

பொதுவாக பகிரங்கமாக கூறப்படும் ஊக உண்மைகள், அமைச்சகங்களின் விடையிறுப்புகளில் முன்வருவதில்லை. வீடுகளைச் சோதனையிடுகையில் குறிப்பாக எச்சரிக்கத் தவறுவதாக நான் நினைக்கிறேன், மூர்க்கமாக உடைத்து கொண்டு செல்வதாகவும் மற்றும் சிறார்களை இருக்கையிலேயே ஆக்ரோஷமாக கையாள்வதாகவும் நான் நினைக்கிறேன். என்ன முடிவுக்கு வருவது? நமது விசாரணைகளை மேற்கொண்டும் எடுத்துச் செல்ல தான் வேண்டுமா? என்று சோசலிஸ்ட் கட்சி பிரதிநிதியும் மற்றும் உளவுத்துறை வல்லுனருமான Jean-Jacques Urvoas தெரிவித்தார்.

"நிச்சயமாக திரும்ப திரும்ப நடத்தப்படும் நடவடிக்கைகள் வழமையாகிவிடும்" அபாயம் உள்ளது, இவை சாமானிய சட்டங்களை குறுக்காக வெட்டுவதால், அவசரகால நெருக்கடிநிலை எவ்வாறு பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதைக் குறித்த அப்பட்டமான பிரச்சினைகளை உயர்த்துகிறது, என்றவர் குறிப்பிட்டார்.

ஒரு பொலிஸ் அரசை நிறுவுவதே சோசலிஸ்ட் கட்சியின் வேலை என்ற உண்மையானது, சோசலிஸ்ட் கட்சி மிகவும் ஜனநாயகமானது மற்றும் அதை அழுத்தமளித்து சுலபமாக இடதுசாரி கொள்கைகளுக்குக் கொண்டு வர முடியுமென தொழிலாளர்களை நம்ப வைக்கும் முயற்சியில் ஜனாதிபதி தேர்தல்களின் இரண்டாம் சுற்றில் ஹோலாண்டை ஆதரித்த போலி-இடது அமைப்புகளின் அரசியல் திவால்நிலையைத் தான் உயர்த்திக் காட்டுகிறது. இப்போது, முதலாளித்துவ வர்க்கம் அடிப்படை ஜனநாயக உரிமைகளைத் தாக்க, சோசலிஸ்ட் கட்சி மற்றும் பொலிஸ் மீது தான் நேரடியாக தன்னைத்தானே நிறுத்தியுள்ளது.