சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan plantation workers sacked for demanding wage rise

சம்பள உயர்வுக்காகப் போராடிய  இலங்கை தோட்டத் தொழிலாளர்கள் வேலை நீக்கம்

By M. Thevarajah
1 December 2015

Use this version to printSend feedback

இலங்கையின் மத்திய பெருந்தோட்ட பகுதியான டிக்கோயாவில் உள்ள இன்ஜஸ்ரி  தோட்ட நிர்வாகம், பொய் குற்றச்சாட்டின் பேரில் வேலை நீக்கம் செய்யப்பட்ட 7 தொழிலாளர்களை மீண்டும் வேலைக்கு அமர்த்துவதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளது. கொழும்பில் உள்ள தோட்ட உரிமையாளரான களனிவெலி பெருந்தோட்ட கம்பனிக்கு  மட்டுமே நவம்பர் 30 அன்று தொழிலாளர்கள் வேண்டுகோள் விடுக்க முடியும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தொழிற்சங்கத்தின் தலைவர்களுக்கு தோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

உலக ரீதியாக தேயிலையின் விலையிலும் மற்றும் கேள்வியிலும் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியின் சுமைகளை தம்மீது திணிப்பதற்கு எதிரான தொழிலாளர்களின்  எதிர்ப்பை நசுக்குவதற்கு எந்தளவு மூர்க்கத்தனமான முறையில் தோட்டக் கம்பனிகள் செயற்படுகின்றன என்பதை இன்ஜஸ்ரி தொழிலாளர்கள் மீதான தாக்குதல் தெளிவாக வெளிப்படுத்துகின்றது.

7 பேரை வேலை நீக்கம் செய்தமைக்கு எதிராக இன்ஜஸ்ரி தோட்டத்தின் ஆறு பிரிவுகளைச் சேர்ந்த 1500 தொழிலாளர்கள் நவம்பர் 13 அன்று இரண்டு நாள் வேலை நிறுத்தத்திலும் சத்தியாக்கிரக போராட்டத்திலும் ஈடுபட்டிருந்த நிலைமையிலும் நிர்வாகம் இத்தகைய தீர்மானத்தை எடுத்துள்ளது. தொழிலாளர்களை அச்சுறுத்துவதற்காக நிர்வாகம் நோவூட் மற்றும் ஹட்டனில் இருந்தும் பொலிசாரை தோட்டத்திற்கு அழைத்திருந்தது.

இலங்கை தொழிலாளர் காங்கிரசின் (இ.தோ.கா) டிக்கோயா பிரதேச தலைவர் தங்கராஜா கிஷோர், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதற்காக தொழிலாளர்களை  கண்டித்ததுடன் வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் வேலைக்கு அமர்த்துவதற்கு நிர்வாகத்துடன் உடன்பாட்டுக்கு வரமுடியும் என உத்தரவாதம் அளித்து வேலை நிறுத்தத்தை நிறுத்துமாறு நிர்ப்பந்தித்தார்.

இன்ஜஸ்ரி தோட்டத்தின் பெரும்பான்மையான தொழிலாளர்கள் இ.தோ.கா.வின் அங்கத்தவர்கள். மேலும் தொழிலாளர் தேசிய சங்கம் (தொ.தே.ச.), மலையக மக்கள் முன்னணி (ம.ம.மு.) ஆகிய தொழிற் சங்கங்களும் இத்தோட்டத்தில் இயங்குகின்றன.

கணேசன் சிவகுமார், கணேசன் புஸ்பநாதன், மாரிமுத்து யோகேந்திரன், கோவிந்தன் லெட்சுமணன், சங்கிலிமுத்து சங்கரன், சிவசாமி மகேந்திரன், பெருமாள் முருகன் ஆகியோரே வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் ஆவர்.

இன்ஜஸ்ரி தொழிலாளர்களுக்கு எதிரான வேட்டையாடல் ஜூலையில் ஆரம்பித்தது. மேலதிக கொடுப்பனவுகள் உள்ளடங்கலாக 1000 ரூபாய் நாள் சம்பளத்திற்கான கோரிக்கையின் அடிப்படையில் இ.தோ.கா. அழைப்புவிடுத்த மட்டுப்படுத்தப்பட்ட மெதுவாக வேலை செய்யும் பிரச்சாரத்தில் அவர்கள் பங்குபற்றியிருந்தார்கள். தோட்ட உரிமையாளர் சங்கம் அக்கோரிக்கையை நிராகரித்த போதிலும், இ.தோ.கா., ஆகஸ்ட் பாராளுமன்ற தேர்தலை காரணம் காட்டி போராட்டத்தை நிறுத்தியதுடன் பின்பு மீண்டும் பிரச்சாரத்தை தொடர்வதாக உறுதியளித்தது.

இன்ஜஸ்ரி தொழிலாளர்கள் மெதுவாக வேலை செய்யும் பிரச்சாரத்தை தொடர்ந்த அதேவேளை, ஆத்திரமூட்டும் விதத்தில் நிர்வாகம் பறிக்கப்பட்ட கொழுந்தை பொறுப்பெடுக்க மறுத்தது. தொழிலாளர்கள் பறிக்கப்பட்ட கொழுந்தை தோட்ட முகாமையாளரின் பங்களாவுக்கு முன்னால் கொட்டியபோது, முகாமையாளரை பயமுறுத்தியதாகவும் பங்களாவின் பூந்தோட்டத்தை சேதப்படுத்தியதாகவும் அவர்கள் மீது பொய் குற்றம் சாட்டப்பட்டது.

மெதுவாக வேலை செய்யும் போராட்டத்தில் முன்னணி வகித்த 7 தொழிலாளர்களும் ஜூலை 20 கைது செய்யப்பட்டு ஒரு வாரம் விளக்க மறியலில் வைக்கப்பட்டார்கள். இறுதியாக அவர்கள் ஒவ்வொருவரும் 1000 ரூபாய் சரீரப் பிணையில் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டார்கள். அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களுக்கான வழக்கின் அடுத்த தவணை அடுத்த வருடம் மார்ச் 28 இடம்பெறும்.

பிணையில் விடுதலையான பின், ஏழு தொழிலாளர்களையும் வேலையிலிருந்து நிர்வாகம் இடை நிறுத்தியதுடன் உள்ளக விசாரணை என்ற பெயரில் ஒன்றையும் ஆரம்பித்தது. தமது சக தொழிலாளர்களுக்கு ஆதரவாகவும் சோடிக்கப்பட்ட குற்றச் சாட்டுக்களை அம்பலப்படுத்தியும் 60 தொழிலாளர்கள் சாட்சியமளித்திருந்த போதிலும், நிர்வாகம் ஒருதலைபட்சமாக தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்தது.

இத்தகைய பழிவாங்கல்கள், தோட்டக் கம்பனிகள் தொழிலாளர்களுக்கு எதிரான ஒடுக்கு முறைகளுக்கு புதிய வழிமுறைகளை பயன்படுத்தத் திரும்பியிருப்பதை எடுத்துக்காட்டுகிறது. இந்த வருடத்தின் முற்பகுதியில் இதேபோன்ற சம்பவம் இடம்பெற்றது. மஸ்கெலிய பெருந்தோட்டத்துக்கு சொந்தமான கிளனியுஜி தோட்டத்தின் டிசைட் பிரிவில், வேலைச் சுமை அதிகரிப்புக்கு எதிராக தொழிலாளர்கள் பெப்ரவரியில் வேலை நிறுத்தம் செய்த பின்னர், நிர்வாகம் ஆத்திரமூட்டல் ஒன்றை திட்டமிட்டு, வெளிக்கள உத்தியோகஸ்தர் ஒருவரை தாக்கினர் என்ற பொய் குற்றச்சாட்டின் பேரில் 8 தொழிலாளர்களை கைது செய்ய வழிவகுத்தது.

எட்டுத் தொழிலாளர்களையும் நீதவான் பிணையில் விடுதலை செய்தபோது, நிர்வாகம் தனது சொந்த விசாரணையை ஆரம்பித்து மூன்று தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்ததுடன், நான்கு தொழிலாளர்களை இடை நிறுத்தம் செய்தது. தொழிலாளர் தேசிய சங்கத்தின் அழுத்தத்தின் பேரில் தாம் செய்யாத குற்றங்களுக்காக தொழிலாளர்கள் மன்னிப்பு கோர வைக்கப்பட்டதன் பின்பே, வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு வேலை வழங்கப்பட்டது.

ஏற்றுமதி வீழ்ச்சியை எதிர்கொள்ளும் தோட்டக் கம்பனிகள், கூட்டு ஒப்பந்தம் மார்ச்சில் முடிவடைந்த போதும் சம்பளத்தை உயர்த்த மறுத்துவிட்டது. மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கத்தினதும் தொழிற் சங்கங்களதும் ஆதரவுடன், தொழிலாளர்கள் மேல் கூடுதலான வேலைச் சுமையை சுமத்துவதற்கு கம்பனிகள் பலவகையன திட்டங்கள் சம்பந்தமாக ஆராய்து வருகின்றன.

விசேடமாக முக்கிய சந்தைகளான மத்திய கிழக்கு மற்றும் ரஷ்யாவுக்கான இலங்கை தேயிலையின் ஏற்றுமதி மற்றும் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளன. ஒட்டுமொத்தமான தேயிலை ஏற்றுமதி வருமானம் கடந்த ஆண்டு 16.8 பில்லியன் ரூபாவில் இருந்து 2015ல் அக்டோபரில் 700 மில்லியன் ரூபாவால் வீழ்ச்சியடைந்துள்ளது. ஈராக்கிலும் சிரியாவிலுமான அமெரிக்கத் தலைமையிலான இராணுவத் தலையீடுகள் ஏற்றுமதிகளை துண்டித்துள்ளதுடன் அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் ரஷ்யா மீது திணித்துள்ள வர்த்தக தடையின் காரணமாக ரஷ்யாவுக்கான கேள்வியும் வீழ்ச்சியடைந்துள்ளது.

தொழிற்சங்க தலைவர்கள் தொழிலாளர்களை ஏமாற்றுவதற்காக ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டும் அதேநேரம், கம்பனிகளுடனும் அரசாங்கத்துடனும் திரைமறைவில் அத்தகைய தாக்குதலுக்கு உதவுகின்றனர். இ.தோ.கா. தலைவர் ஆறுமுகம் தொண்டமான் முந்தைய மஹிந்த இராஜபக்ச அரசாங்கத்தில் அமைச்சராக இருந்தவர். உண்மையான சம்பளத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி மற்றும் சீரழிந்து வரும் வாழ்க்கை நிலைமைகள் மற்றும் சமூக நிலைமைகள்  சம்பந்தமாக தொழிலாளர் மத்தியில் வளர்ச்சிகண்டுவரும் எதிர்ப்பை திசைதிருப்பும் நோக்குடன் அவரது தொழிற் சங்கம் மெதுவாக வேலை செய்யும் பிரச்சாரத்திற்கு அழைப்பு விடுத்தது. அப்போதிருந்து தொண்டமான் 1000 ரூபாய் கோரிக்கையை கைவிட்டுவிட்டார். ஏனைய தொழிற்சங்கங்கள் நடைமுறை சாத்தியமற்ற கோரிக்கையை முன்வைத்ததாக தொண்டமானை கண்டிக்கின்றன.

தொ.தே.ச., ம.ம.மு. மற்றும் இன்னொரு தொழிற்சங்கமான ஜனநாயக மக்கள் முன்னணி (ஜ.ம.மு.) ஆகியவற்றின் தலைவர்களான முறையே பி. திகாம்பரம், வி. இராதாகிருஷ்ணன் மற்றும் மனோ கணேசனும் தற்போதய அரசாங்கத்தின் அமைச்சர்களாவர். ஆகஸ்ட் பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் சம்பள உயர்வு பெற்றுத் தருவதாக அவர்கள் உறுதியளித்திருந்தனர். ஆனால், பின்பு கூடுதலாக கேட்டதற்காக தொண்டமானை கண்டித்தார்கள்.

இந்த வகையில், தொழிலாளர்கள் தமது இழிவான நிலைமைகளை சவால் செய்ய முன்வரும்போது, தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களுக்கு எதிராக கம்பனிகளுக்குச் சார்பான நிலைப்பாட்டை எடுப்பதுடன் தொழிற்துறை பொலிஸ்காரனாக செயற்படுகின்றன.

வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளி கோவிந்தன் லட்சுமணன் உலக சோசலிச வலைத் தளத்திற்கு கூறியதாவது: தோட்டங்களில் பயங்கரமான நிலைமைகள் அபிவிருத்தியடைந்து வருகின்றன. கம்பனிகள் எங்களுக்கு சம்பள உயர்வு வழங்குவதை விடாப்பிடியாக நிராகரிக்கின்றன. தொழிற் சங்கங்கள் சம்பள உயர்வு பற்றி கதைப்பதில்லை. நாங்கள் சம்பள உயர்வுக்காகவும் வேலை சுமைக்கு எதிராகவும் போராடியதற்காகவே கம்பனி எங்களை தாக்கத் தொடங்கியுள்ளது.

நாங்கள் இடை நிறுத்தப்பட்டதிலிருந்து, நிர்வாகம் நாளாந்தம் பறிக்க வேண்டிய 18 கிலோவை எடுக்கத் தவறிய தொழிலாளர்களுக்கு அரை நாள் சம்பளம் வழங்க ஆரம்பித்துள்ளது. கடந்த மாதம் 14 கிலோவுக்கு குறைவாக கொழுந்து பறித்தவர்களுக்கு அரைநாள் ஊதியமே வழங்கப்பட்டுள்ளது.

முன்பு, ஞாயிற்றுக் கிழமைகளில் நாங்கள் வேலை செய்தால் ஒன்றரை நாளுக்குரிய சம்பளம் வழங்கப்படும். இப்பொழுது அதனை நிர்வாகம் நிறுத்தியுள்ளதுடன் சாதாரண நாட் சம்பளத்தையே வழங்குகின்றது.

இன்ஜஸ்ரி தொழிலாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டதை ஊடகங்கள் பிரசுரிக்காதமை சம்பந்தமாக லட்சுமணன் கண்டனம் தெரிவித்தார். தாம் கைது செய்யப்பட்டது சம்பந்தமாக உலக சோசலிச வலைத் தளத்தில்  பிரசரிக்கப்பட்டிருந்த பிரதியை ஊடகங்களுக்கு கொடுத்தபோதும் அவர்கள் அதனை பொருட்படுத்தவில்லை, என அவர் கூறினார்.

வேலை நீக்கம் செய்யப்பட்ட மற்றய தொழிலாளியான மாரிமுத்து யோகேந்திரன் கூறியதாவது: கம்பனி எங்களை வேலை நீக்கம் செய்த பின்னர், அமைச்சர் பி. திகாம்பரத்திற்கும் மற்றும் ம.ம.மு. தலைவரும் அமைச்சருமான வி. இராதாகிருஷ்ணனுக்கும் அறிவித்தோம். அவர்கள் எங்களை சந்திப்பதற்காக தோட்டத்திற்கு வருவதாக உறுதியளித்த போதும் வரவில்லை. பொகவந்தலாவையிலிருந்து ஒரு ஊடகவியலாளர் வந்து நாங்கள் வேலை நீக்கம் செய்யப்பட்ட விபரங்களை சேகரித்த போதிலும், அவர் மேல் பிரயோகிக்கப்பட்ட அழுத்தத்தின் காரணமாக அவை பிரசுரிக்கப்படவில்லை என்பது எமக்கு தெரிய வந்தது. தமிழ் மொழி இலத்தரனியல் ஊடகங்கள் ஒன்றும் தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்யப்பட்டதை அறிவிக்காததையிட்டு யோகேந்திரன் கண்டணம் தெரிவித்தார்.

சங்கிலிமுத்து சங்கரனின் தாயான எஸ். சிலம்பாயி, 74, தனது மகனின் வேலை நீக்கத்தின் பாதிப்பை விபரித்தார். எனது பேரப்பிள்ளைகளை பராமரிப்பதற்காக நான் தற்காலிகமாக தோட்டத்தில் வேலை செய்வதற்கு தள்ளப்பட்டுள்ளேன். எனது மகன் தனது தொழிலை இழந்ததோடு எனது மருமகள் வேலைக்குப் போக முடியாமல் சுகயீனமுற்றுள்ளார். 84 வயதுடைய எனது கணவனும் கூட மாட்டுக்கு புல்லு வெட்டுவதன் மூலம் சில பணம் சம்பாதித்து எமது உயிரை பாதுகாக்கின்றோம். நாம் உண்மையில் உயிரை பணயம் வைத்து வாழ்க்கை நடத்துகின்றோம். தோட்ட நிர்வாகம் எங்களை மனிதர்களாக நடத்துவதில்லை.