சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Political issues in the Spanish election crisis

ஸ்பானிய தேர்தல் நெருக்கடியின் அரசியல் பிரச்சினைகள்

Alex Lantier
23 December 2015

Use this version to printSend feedback

ஸ்பெயினில் ஞாயிற்றுக்கிழமை பொது தேர்தலில் இருந்து உருவான தொங்கு நாடாளுமன்றம், ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் வெடித்த உலகளாவிய பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் பாரம்பரிய ஐரோப்பிய முதலாளித்துவ அரசியல் அமைப்பின் சிதைவில் ஒரு புதிய மைல்கல்லைக் குறிக்கிறது.

கிரீஸில் சமூக ஜனநாயக PASOK கட்சி தோல்வியடைந்து, தீவிர இடது கூட்டணியான சிரிசா அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்ததுடன் 2015 ஆம் ஆண்டு தொடங்கியது. சிரிசா வெகு விரைவிலேயே அதன் சிக்கன-விரோத தளத்தைக் கைவிட்டு, பத்து பில்லியன் யூரோ புதிய சமூக வெட்டுக்களைத் திணித்தது. இம்முறை ஸ்பெயினில், தசாப்தகால பழமையான ஆட்சியின் அதேபோன்ற தோல்வியுடன் இந்தாண்டு நிறைவடைகிறது.

மேற்கு ஐரோப்பாவில், கிரீஸிற்கு அடுத்து, ஸ்பெயினில் தான் நிதியியல் நெருக்கடி மற்றும் சிக்கனத் திட்ட கொள்கைகள் பெரும் அழிவுகளை உருவாக்கி இருந்தன. அடிமட்ட கூலிகளின் காரணமாக ஒரு சிறிய மேல்நோக்கிய பொருளாதார திருப்பம் இருக்கிறது என்றாலும், ஸ்பானிய முதலாளித்துவம் மரணப்படுக்கையில் தான் கிடக்கிறது. அரசு வரவு-செலவுத் திட்டக்கணக்கில் மற்றும் சமூக திட்டங்களில் ஆழ்ந்த வெட்டுக்களுடன், வேலைவாய்ப்பின்மை 20 சதவீதத்திற்கு அதிகமாக உள்ளது, இளம் தொழிலாளர்களில் பாதி பேர் வேலையின்றி உள்ளனர். அங்கே சிக்கனத் திட்டம் மற்றும் ஆளும் உயரடுக்கிற்கு எதிராக வெடிப்பார்ந்த சமூக கோபம் நிலவுகிறது.

இந்த ஞாயிறன்று வாக்கெடுப்பு, 1977 இல் பாசிசவாத பிராங்கோ சர்வாதிகாரம் பொறிந்த பின்னரில் இருந்து ஸ்பெயினை ஆட்சி செய்து வந்துள்ள, ஆளும் பழமைவாத மக்கள் கட்சி (Popular Party-PP) மற்றும் சோசலிஸ்ட் கட்சி (PSOE) இரண்டு கட்சிகளையும் ஓரங்கட்டியது. இந்த இரண்டு கட்சிகளுமே 2008 க்குப் பின்னர் இருந்து மூர்க்கமான சிக்கன நடவடிக்கைகளை திணித்தன. ஞாயிறன்று தேர்தலில், இரண்டு கட்சிகளின் வாக்குகளை சேர்த்தால் அவை பாதி வாக்குகளைக் கூட பெறாது. எஞ்சிய வாக்குகள், பெடெமோஸ் (Podemos), வலதுசாரி குடிமக்கள் கட்சி (Citizens Party), அத்துடன் பாஸ்க் (Basque) மற்றும் கட்டாலன் (Catalan) தேசியவாத கட்சிகள் உட்பட சிறிய குழுக்களுக்கு இடையே பிரிந்தன.

எந்த கட்சியும், அல்லது கட்சிகளின் கூட்டணி ஏற்பட்டாலும் கூட, ஒரு நாடாளுமன்ற பெரும்பான்மையை ஒன்றுதிரட்ட முடியாத நிலையில், முன்னொருபோதும் இல்லாத மற்றும் நீடித்த நெருக்கடி தொடங்கியுள்ளது, இதில் பல்வேறு கட்சிகள் பெரும்பிரயத்தனத்துடன் ஒரு புதிய அரசாங்கம் அமைக்க அல்லது ஒரு புதிய சுற்று தேர்தல்களுக்கு அழைப்புவிடுக்கப்பட்டால் தங்களைத்தாங்களே சிறந்த இடத்தில் நிலைநிறுத்திக்காட்டுவதற்கு முயன்று வருகின்றன.

இந்நெருக்கடி நிலைமையில் தொழிலாள வர்க்கம் முகங்கொடுக்கும் மத்திய கேள்வி, முதலாளித்துவ கட்சிகளது தேர்தல் தந்திரோபாயங்கள் சம்பந்தப்பட்டதல்ல, மாறாக அது அதன் சொந்த நலன்களை வலியுறுத்த எவ்வாறு சுயாதீனமாக தலையிடுவது என்பதைக் குறித்ததாகும். பெடெமோஸ் மற்றும் சிரிசா போன்ற நடுத்தர-வர்க்க "இடது" கட்சிகள் தான் அது முகங்கொடுக்கும் சவாலாகும். பழைய சமூக ஜனநாயக கட்சிகளின் பொறிவால் உருவான வெற்றிடத்தை நிரப்ப முன்னுக்கு வருகின்ற இவை, யதார்த்தத்தில், சிக்கனத் திட்டத்திற்கு ஆதரவளிக்கும் அமைப்புகளேயாகும்.

ஸ்பெயினில் PSOE-PP இரு-கட்சி முறையின் தோல்வியும் மற்றும் ஸ்திரமற்ற நான்கு-கட்சி முறையை உருவாக்குவதும் ஒரு புதிய சகாப்தத்திற்கு பாதையைத் திறந்துவிடும் என்றும், அதில் அரசியல் ஸ்தாபகம் திடீரென வாக்காளர்களின் முறையீடுகளுக்குப் பொறுபேற்பதை நிரூபிக்கும் என்றும் பெடெமோஸ் மற்றும் அதன் கூட்டாளி சிரிசா வாதிடுகின்றன. கிரேக்க பிரதம மந்திரியும் சிரிசா தலைவருமான அலெக்சிஸ் சிப்ராஸ், பெடெமோஸிற்கு ஆதரவாக ட்விட்டரில் வெளியிட்ட ஒரு சேதியில், சிக்கனத் திட்டம் இப்போது ஸ்பெயினிலும் அத்துடன் [கிரீஸிலும்] அரசியல்ரீதியில் தோற்கடிக்கப்பட்டுவிட்டது, என்று அறிவித்தார்.

பெடெமோஸ் தலைவர் பப்லோ இக்லெஸியாஸ் (Pablo Iglesias) கூறுகையில், ஒரு புதிய ஸ்பெயின் பிறந்திருப்பதாக" அறிவித்தார், மேலும் அவர் தொடர்ந்து கூறுகையில், PP மற்றும் PSOE ஆல் நடைமுறைப்படுத்தப்பட்ட சிக்கன நடவடிக்கைகளுக்கு ஜேர்மனி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தைக் குற்றஞ்சாட்டினார். ஐரோப்பாவிற்கான எங்களின் சேதி தெளிவானது, என்று அறிவித்த அவர், ஸ்பெயின் இனி ஒருபோதும் மீண்டும் ஜேர்மனியின் விளிம்பில் தொங்கிக் கொண்டிருக்காது. எங்கள் நாட்டின் இறையாண்மை எனும் வார்த்தையின் அர்த்தத்தை நாங்கள் மீளிருப்புச் செய்ய போராடுவோம், என்றார்.

இது தொழிலாள வர்க்கத்தைத் தணியச் செய்து, முடக்குவதற்கு வடிவமைக்கப்பட்ட எரிச்சலூட்டும் தேசியவாத வாய்சவடாலாகும்.

சிரிசா கிரீஸில் சிக்கனத் திட்டத்தைத் தோற்கடிக்கவில்லை, அதை நடைமுறைப்படுத்தி வருகிறது. சிரிசாவின் தேர்தல் பிரச்சாரங்களில் அதை ஆதரித்து மற்றும் சிரிசாவிற்கு வேறு வழியில்லை என்பதால் தான் கிரீஸில் அது சிக்கனத் திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறதென அதை நியாயப்படுத்திய பெடெமோஸ், அதுவும் வேறுபட்டதில்லை என்பதை நிரூபிக்கும். சிக்கனத் திட்டத்திற்கு எதிரான தொழிலாள வர்க்க போராட்டத்தைத் தடுப்பதில் அது எந்தளவிற்கு வெற்றி பெறுகிறதோ, அந்தளவிற்கு ஒரு புதிய தாக்குதலை தயாரிக்க மற்றும் மறுகுழுவாக்கம் செய்ய முதலாளித்துவ வர்க்கத்திற்கு கால அவகாசம் வழங்குகிறது, இதில் பெடெமோஸ் அதுவே ஒரு முக்கிய பாத்திரம் வகிக்கும்.

கடந்த ஆண்டின் தொடக்கத்தில் பெடெமோஸ் உருவாக்கத்திற்கு ஒரு முன்மாதிரியாக சிரிசா சேவையாற்றியது, ஆகவே அது அதிகாரத்திற்கு வந்ததன் அரசியல் மற்றும் மூலோபாய படிப்பினைகளை வரைவதே தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் முகங்கொடுக்கும் மத்திய பிரச்சினையாகும். சிக்கனத் திட்டங்களுக்கு எதிராக ஓர் "இடது" கொள்கையைப் பின்பற்றுவதென்ற சிரிசாவின் வாக்குறுதிகள், பொய்களாக, அதிகாரத்தை வெல்வதற்கு மட்டுமே வடிவமைக்கப்பட்டவை என்பது நிரூபணமாகி உள்ளன. அதிகாரத்திற்கு வந்ததும், அதன் கொள்கைகள் அது பிரதிநிதித்துவம் செய்யும் தனிச்சலுகை மிக்க நடுத்தர வர்க்க அடுக்குகளின் நலன்களுக்கேற்ப இருந்தன, கிரேக்க ஸ்ராலினிச "யூரோ கம்யூனிஸ்ட்" உயர் நிர்வாகத்தின் எச்சசொச்சங்களும் மற்றும் கிரேக்க இராணுவ ஆட்சிக்குழுவின் 1974 பொறிவுக்குப் பின்னர் எழுச்சியடைந்த மாணவர் இயக்கத்திலிருந்து வந்த குட்டி-முதலாளித்துவ கூறுபாடுகளும் அதில் உள்ளடங்கி உள்ளன.

சிக்கன திட்டங்களுக்கான ஐரோப்பிய ஒன்றிய கோரிக்கைகளுக்கு எதிராக அது ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்திடம் ஆதரவு கோர எந்த முயற்சியும் செய்யவில்லை. அதற்கு மாறாக, ஒரு சில வாரகால ஐரோப்பிய ஒன்றிய பேரம்பேசல்களுக்குப் பின்னர், அது சிக்கனத் திட்ட புரிந்துணர்வை தாங்கிப்பிடிக்கும் ஒரு உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட்டது. ஐரோப்பிய ஒன்றியம் கோடையில் புதிய வெட்டுக்களைக் கோரிய போது, சிப்ராஸ் ஐரோப்பிய ஒன்றிய சிக்கனத் திட்டத்தின் மீது ஒரு வெகுஜன வாக்கெடுப்பை ஒழுங்கமைத்தார், அது பதவி விலகுவதற்கு ஒரு போலிக்காரணத்தை வழங்கும் என்றும், அதன் மூலம் ஒரு வலதுசாரி அரசாங்கம் அதிகாரம் ஆட்சிக்கு வந்து ஐரோப்பிய ஒன்றிய கோரிக்கைகளைத் திணிக்க அனுமதிக்கும் என்றும் அவர் நம்பினார்.

தொழிலாள வர்க்கமோ, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் கிரேக்க பெருநிறுவன ஊடகங்களிடம் இருந்து வந்த அச்சுறுத்தல்களைப் புறந்தள்ளி, ஐரோப்பிய ஒன்றிய சிக்கனத் திட்டம் வேண்டாம் என்று வாக்களித்த போது, சிப்ராஸ் அந்த வாக்கெடுப்பையே உதறித் தள்ளினார். யூரோ மண்டலத்திலிருந்து பேர்லின் கிரீஸை வெளியேற்றாமல் இருக்க, அவர் கடுமையான ஒரு புதிய சிக்கனத் திட்டப் பொதிக்கு உடன்பட்டார்.

இதன் பின்னர், வோல் ஸ்ட்ரீட் மற்றும் கிளிண்டன் குளோபல் திட்ட அமைப்பின் விஜயத்தின் போது, அவரது முதலீட்டாளர் சார்பு கொள்கைகளை அவர் முன்வைத்து, ஒருசில ஆண்டுகளில், கிரீஸ் அன்னிய முதலீட்டிற்கான பிரதான இடமாக மாறும்" என்று சூளுரைத்தார்அதாவது, அவரது கொள்கைகளின் விளைவாக, வங்கியாளர்கள் கிரேக்க தொழிலாளர்களை அதிகளவில்-சுரண்ட அனுமதிக்கப்படுவார்கள்.

சிரிசா அனுபவத்திலிருந்து படிப்பினைகளை எடுத்து, நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு அதன் நவம்பர் 13, 2015 அறிக்கையில் பின்வருமாறு எழுதியது: கிரீஸில் மற்றும் சர்வதேசரீதியில் தொழிலாள வர்க்கத்தை ஒன்றுதிரட்டி, ஒரு நிஜமான புரட்சிகர கொள்கை மூலமாக செல்வதே ஒரே முன்னோக்கிய பாதையாகும். அதற்கு முதலாளித்துவ வர்க்கத்தின் மீது நேரடியான தாக்குதல், அவர்களது செல்வ வளத்தின் பறிமுதல், பிரதான வங்கிகள் மற்றும் உற்பத்தி சக்திகளைக் கைப்பற்றுதல் ஆகியவை அவசியப்படுகிறது, அவற்றை உழைக்கும் மக்களின் ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் வைத்து, ஐரோப்பா மற்றும் உலகெங்கிலுமான தொழிலாளர்கள் அரசை உருவாக்குவது அவசியமாகும். சிரிசா போன்ற கட்சிகளுக்கு எதிரான ஈவிரக்கமற்ற போராட்டத்தில், தொழிலாள வர்க்கத்திற்கு அரசியல் தலைமை கொடுக்க மார்க்சிச கட்சிகளைக் கட்டியெழுப்புவது அத்தகைய போராட்டங்களுக்கு அவசியமாகும்.

ஸ்பெயினில் பெடெமோஸ்க்கு எதிரான ஈவிரக்கமற்ற போராட்டத்திலிருந்து மட்டுமே, உழைக்கும் மக்களுக்காக போராடும் ஒரு கட்சி மேலெழ முடியும். மாட்ரிட் Complutense பல்கலைக்கழகத்தின் ஸ்ராலினிச பேராசிரியர்கள் குழு ஒன்றால் நிறுவப்பட்டு, சிரிசாவை ஆதரித்த முதலாளித்துவ-எதிர்ப்பு இடது போன்ற போலி-இடது குழுக்களிடமிருந்து நிதியுதவி பெறும் அது, ஸ்பானிய தேசப்பற்று, இராணுவம் மற்றும் சுதந்திர சந்தைக்கான முறையீடுகளுடன் ஆளும் "ஜாதிக்கு" எதிரான வெகுஜனவாத சுலோகங்களை உள்ளடக்கி உள்ளது.

கடந்த ஆண்டு, நியூ யோர்க் விஜயத்தின் போது நிதியியல் சேனல் CNBC க்கு அளித்த ஒரு பேட்டியில், பெடெமோஸ் தலைவர் இக்லெஸியாஸ், அவரது கட்சி PSOE அல்லது PP உடன் இணைந்து இயங்குமென பிரகடனப்படுத்தியதுடன், சுதந்திர சந்தை ஒரு "யதார்த்தம்" என்றும் அறிவித்தார். இந்தாண்டு இராணுவத்தில் நியமன நடவடிக்கைகளை தொடங்கிய பின்னர், பெடெமோஸ் அது ஜெனரல் Julio Rodríguez Fernández ஐ Zaragoza மாகாண வேட்பாளராக நிறுத்துமென பெருமையுடன் அறிவித்தது. இவர் தான் நேட்டோவின் 2011 லிபிய போரில் ஸ்பெயின் பங்குபற்றிய போது தலைமை கொடுத்தவராவர்.

போர், சிக்கனத் திட்டம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராக ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்தும் ஒரு போராட்டத்திற்கு, சிரிசாவிற்குக் குறைவின்றி, பெடெமோஸூம், ஓர் ஈவிரக்கமற்ற எதிர்ப்பாளராக இருக்குமென்பதை நிரூபிக்கும்.