சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்: ஆசியா :சீனா

What is the BBC doing in the South China Sea?

தென்சீனக் கடலில் பிபிசி என்ன செய்கிறது?

By Peter Symonds
16 December 2015

Use this version to printSend feedback

நேற்று வெளியிடப்பட்ட கட்டுரையில், பிபிசி பத்திரிகையாளர் ரூப்பெர்ட் விங்பீல்ட்-ஹேய்ஸ் தென்சீனக் கடலில் சீனாவின் நிர்வாகத்தில் உள்ள குட்டித்தீவுகளில் ஆத்திரமூட்டும் வகையில் பறந்தது பற்றி மிகைப்படுத்திய வகையில் விபரம் அளித்தார். போட்டிமிக்க நீர்ப்பகுதியில் சீன எல்லைப்புற உரிமைகோரலை சவால் செய்யும் அமெரிக்க பிரச்சாரத்தினோடு ஒன்றிய வகையில் பிபிசி நடவடிக்கை இருந்தது.

விங்பீல்ட்-ஹேய்ஸ் அவரது பறந்து செல்வதன் நோக்கம் என்ன என்பதை ஒளிவுமறைவின்றிக் கூறினார். எமது  குறிக்கோள் இரு வகைப்பட்டது என அவர் அறிவித்தார், எடுத்துக் கொண்டிருக்கும் படம் தொடர்பாக  புதிய சீனக் கட்டுப்பாட்டிலுள்ள உள்ள தீவுகளை எவ்வளவு நெருங்க முடியுமோ அவ்வளவு நெருங்குவது. மற்றும் அதுபோலவே முக்கியமானது எப்படி சீனர்கள் நடந்துகொள்வார்கள் என்பது.

இந்த முறுகல் போக்கை நியாயப்படுத்தும், பிபிசி பத்திரிகையாளர் ஐக்கிய நாடுகள் கடல் எல்லை விதி (UNCLOS) அடிப்படையில் சீனா அதன் செயற்கை தீவுகளைச்சுற்றி 12 கடல் மைல் எல்லைப் பகுதியில் உரிமை கோர முடியாது என வலியுறுத்தினார். வேறுவார்த்தைகளில் கூறுவதானால், சர்வதேச விதிகளை உடைக்காமல் சீனாவின் புது தீவுகள் வரை நாம் பறக்க முடியும், சீனா எங்கள் விமானப் பறத்தலில்  தலையிடக்கூடாது.

அக்டோபரில், அமெரிக்க கடற்படையானது தனது வழிப்படுத்தப்படும் ஏவுகணை அழிப்பான் USS Lassen ஐ, சீன கட்டுப்பாட்டில் உள்ள இரு தீவுத்திட்டுக்களை சூழ்ந்துள்ள எல்லைப்புறங்களுக்குள்ளே அனுப்பியது-  இது சீன இராணுவத்துடன் ஒரு மோதலுக்கு செல்லும் ஒரு நகர்வு ஆகும். பிபிசி போலவே, அப்போது அமெரிக்காவும் சர்வதேச சட்டத்தின்படி நடந்து கொள்வதாக கூறிக்கொண்டது, அப்போதுகூட அது UNCLOS பற்றி குறிப்பிடவில்லை.

சீனா ஆட்சேபிக்கும் என்பது நன்கு தெரிந்தும் விங்பீல்ட்-ஹேய்ஸ் சிறிய, தனி ஒரு செஸ்னா 206 எந்திரம் கொண்ட விமானத்தில் பயணம் மேற்கொண்டார். தென்சீனக் கடலில் சீனாவால் சவால்செய்யப்படும் பிலிப்பைன் எல்லைப்பகுதியை பார்வையிடலுக்கு எதிராக எச்சரிக்க லண்டனில் உள்ள சீனத் தூதரகம் பிபிசியிடம் தொடர்பு கொண்டது என அவரது ஆசிரியர், அவரிடம் தெரிவித்தார்.

மேலும், பிபிசி பத்திரிகையாளர், பணம்கொடுத்து அமர்த்தப்பட்டிருக்கும் தாங்கள் செய்யும் வேலையின் ஆத்திரமூட்டும் மற்றும் ஆபத்தான தன்மை பற்றி தெளிவாகப் புரிந்திருந்த இரு பிலிப்பைன் விமானிகளின் தயக்கத்தை வெற்றிகொள்ள வேண்டியிருந்தது. விமானம் முதல் இரு தீவுகளை அனுகியபொழுது, விமான தளபதி திரும்பிச்செல்லுமாறு சீன பொறுப்பாளர்கள் விடுத்த எச்சரிக்கையை செவிமடுத்தார்.

சிலமணிநேர பேச்சுவார்த்தையை அடுத்து மட்டுமே, இரு விமானிகளும் விமானத்தை மீண்டும் எடுத்து சேட்டைமிக்க கடல்திட்டின் 12 கடல் மைல் எல்லைகளில் பறந்தனர் மற்றும் சீன கடற்படை பாதையை மாற்றுமாறு கோரிய அறிவுறுத்தலை அலட்சியப்படுத்தினர். விங்பீல்ட்-ஹேய்ஸ், கடற்கழி (lagoon) பெரிய மற்றும் சிறிய கப்பல்களை கொண்டிருந்தன என்று மூச்சுவிடாமல் குறிப்பிட்டார். சீன ஜெட் போர்விமானங்கள் இங்கிருந்து புறப்பட்டு பிலிப்பைன் கடற்கரைக்கு எட்டு அல்லது ஒன்பது நிமிடங்களில் வந்துவிடமுடியும் என்று அவர் குறிப்பிட்டார். குட்டித்தீவில் போர்விமானங்கள் இருக்கவில்லை என்பது பற்றி ஒரு பிரச்சினையும் இல்லை.

பிபிசி சிறு பயணிகள் விமானத்தை பயன்படுத்திக்கொண்டிருந்த அதேவேளை, அந்த ஒட்டுமொத்த நடவடிக்கையும் மே மாதம் சீனா உரிமைகோரும் எல்லைப் பகுதியை அணுகிய அமெரிக்க கடற்படை கண்காணிப்பு விமானத்தில் பயணிக்க அழைக்கப்பட்ட CNN செய்தியாளர் நடவடிக்கையை ஒத்ததாக இருந்தது. CNN இன் அறிக்கை, சீனாவின் பரந்த நில மீட்பு மற்றும் தென் சீனக் கடலில் அதன் வலிமையை பயன்படுத்தி நெருக்கடி கொடுக்கும் நடவடிக்கைகளையும் வெளிச்சம்போட்டுக் காட்ட வடிவமைக்கப்பட்ட ஒரு பிரச்சாரப் பயிற்சியாக இருந்தது.

இதன் நோக்கம் அச்சத்தை தூண்டிவிடுவதும் USS Lassen ஆல் இறுதியில் மேற்கொள்ளப்பட்ட கடல்வழி சுதந்திரம் நடவடிக்கைக்காக ஒபாமா நிர்வாகத்தின் மீது பெண்டகனின் அழுத்தத்தை கூட்டுவதற்குமாகவும் இருந்தது.

ஏன் பிபிசி அத்தகைய ஒரு புதுமுயற்சியை அங்கீகரித்தது மற்றும் பிரிட்டடிஷ்  வெளியுறவு மற்றும் இராணுவ அமைப்புக்களில் உள்ள யார் சம்பந்தப்பட்டிருந்தார் என்பது தொடர்ந்து தெளிவில்லாமல் இருக்கிறது. சீனா எல்லைப் புற உரிமை கோரல்களை சவால்செய்வது பிரிட்டிஷ் அரசாங்கத்தின் பொது நிலைப்பாட்டுடன் சிறிது மிகைப்பட்டதாக இருக்கிறது. பெய்ஜிங்கில் ஆகஸ்டில், வெளியுறவு செயலர் பிலிப் ஹம்மோண்ட் கடல்வழி சுதந்திரத்திற் கான தேவை மற்றும் ஆசியாவில் எல்லைப்புற தாவாக்களுக்கு விதிமுறை அடிப்படையிலான ஒரு தீர்வு பற்றி பொதுவாக பேசினார், ஆனால் சீனாவை வெளிப்படையாக விமர்சிப்பதை தவிர்த்தார்.

பிபிசியின் செய்தி அறிவிப்பின் மிக முக்கிய அம்சம், சேட்டைமிக்க கடற்திட்டுக்களுக்கு அருகில் ஆஸ்திரேலிய இராணுவ விமானத்திலிருந்து வரும் வானொலிச் செய்தியை முன்கருதாது இடைமறிப்பதாக இருந்தது. இன்றைய தேதிவரை ஆஸ்திரேலிய அரசாங்கமானது குறைந்த பட்சம் பொதுவாகவே, தென் சீனக் கடலில் அமெரிக்காவின் சுதந்திர கடல்வழி நடவடிக்கைகளில் சேர மறுத்தது, ஆனால் அவ்வாறு செய்யும்படி வாஷிங்டனிலிருந்து வரும் கணிசமான அழுத்தத்தின் கீழ் அது இருக்கின்றது.

இருப்பினும், பிபிசி பின்வரும் வானொலி இடைமறிப்பை பதிவு செய்தது: சீன கடற்படை, சீனா கடற்படை. நாங்கள் ஆஸ்திரேலிய விமானம், கடல் விதி மீதான ஐக்கிய நாடுகள் மாநாடு மற்றும் சர்வதேச விமான பறத்தல் மாநாடு இவற்றுக்கேற்ப சர்வதேச வான்வெளியில் சர்வதேச பறக்கும் சுதந்திர உரிமையை செயற்படுத்திக் கொண்டிருக்கிறோம். ஓவர். விங்பீல்ட்-ஹேய்ஸ் இன் படி, சீனாவின் பதிலைக் கேட்காமல் இந்த செய்தி பலமுறை திரும்பத்திரும்ப ஒலிக்கப்பட்டது.

ராயல் ஆஸ்திரேலியன் ஏர்போர்ஸ் P-3 ஒரியோன் விமானம் நவம்பர் 25 முதல் டிசம்பர் 4 வரை வழிதிறப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக வழமையான ரோந்துப்பணியை  நடத்தி வருகின்றது என ஆஸ்திரேலிய பாதுகாப்புத்துறை ஒரேயடியாக அறிவித்தது. அதன் தகவல் ஆதாரங்களின் அடிப்படையில், சிட்னி மார்னிங் ஹெரால்ட் பத்திரிகை, தென்சீனக் கடலில் ஆஸ்திரேலிய விமானங்கள் கண்காணிப்பை பல வருடங்களாக நடத்தி வருகின்றன, ஆனால் கடந்த 12 அல்லது 18 மாதங்களில் அதன் செயல்வேகம் அதிகரித்துள்ளது என்று அறிவித்தது.

மேலோட்டமாக இராணுவ விமானமானது சேட்டைமிக்க கடற்திட்டைச் சுற்றி 12 கடல் மைல்களுக்குள் ஊடுருவவில்லை, ஆனால் அதன் செய்தி அங்கு எந்தவித பதிலும் இல்லாதபோதிலும் சீனக்கடற்படைக்கு சவால்விடும் வகையில் சுதந்திர கடல்வழி என்று தெளிவாகவே வடிவமைக்கப்பட்டிருந்தது.

ஆஸ்திரேலிய மூலோபாயக் கொள்கை நிலைய இயக்குநர் பீட்டர் ஜென்னிங்ஸ், சிட்னி மார்னிங் ஹெரால்ட் இடம் இந்த பிராந்தியத்தில் அதிகரிக்கும் பதட்ட நிலையின் காரணமாக இப்போதிருந்து தென்சீனக்கடலில் வழமையானது எதுவும் இல்லை. இடம்பெறும் வழமையானது கூட அதிமுக்கிய நிலையை எடுக்கிறது என்ற புள்ளியைக் குறிப்பிட்டார்.

இந்த உயர் பதட்டங்களுக்கான பொறுப்பானது, தென்சீனக்கடலில் நீண்டகாலமாக இருந்துவரும் எல்லைத்தகராறுகளில் சீனாவுக்கும் அதன் அண்டைஅயலார்களுக்கும் இடையில் இயங்கும் இடைவெளி தடுப்புபோல் தலையீடு செய்துவரும் அமெரிக்காவை வெளிப்படையாகவே தங்கிநிற்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக பெய்ஜிங்குடன் மோதும் வாஷிங்டனின் உறுதிப்பாடானது, இந்த பிராந்தியத்தில் சீன செல்வாக்கை கீழறுக்கவும் தேவைப்பட்டால் இராணுவ சக்தியினால் அமெரிக்க மேலாதிக்கத்தை வலியுறுத்துவதை நோக்கமாகக் கொண்ட, ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பு என்ற அதன் பரந்த திட்டத்தின் பகுதியாகும்.

ஒபாமா நிர்வாகமானது இந்த பிராந்தியம் முழுமையிலும் உள்ள கூட்டாளிகள் மற்றும் மூலோபாய பங்காளர்களின் ஆதரவை திரட்டி வந்திருப்பதுடன், சீன விரிவாக்கம் என்பதை ஆசியா பசிபிக்கில் அதன் சொந்த இராணுவ கட்டமைத்தலை நியாப்படுத்துவதற்கு பயன்படுத்தி வருகின்றது. அதேபோல ஆஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், இந்தியா மற்றும் ஜப்பான் ஆகியன சீனாவின் உரிமைகோரல்கள் தொடர்பாக கடும் நிலையை எடுத்திருக்கின்றன. சனிக்கிழமை அன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் அவரது ஜப்பானிய சமதரப்பான ஷின்சோ அபேயும், தென்சீனக்கடலில் சுதந்திர கடல்வழி மற்றும் விமானம் பறத்தல் மற்றும் தடையில்லா கடல்வழி வணிகத்தை உறுதிப்படுத்துவதற்கு நாம் உறுதியாய் நிற்கிறோம் என்று புதுதில்லியில் கூட்டறிக்கை வெளியிட்டனர்.

முந்தைய செய்திக் கசிவுகளுக்கு மாறாக, மூன்று அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் திங்கட்கிழமை அன்று ராய்ட்டரிடம், சீன கட்டுப்பாட்டிலுள்ள திட்டைகளின் 12 கடல் மைல்களுக்குள் இன்னொரு கடல்வழி நடவடிக்கை இந்த மாதம் இல்லாமற்போனது, ஆனால் புத்தாண்டில் மேற்கொள்ளப்படும் என்று தகவல் அறிவித்தனர்.

அதேநாளில், அமெரிக்க பசிபிக் கடற்படை தலைவர் ஸ்காட் ஸ்விப்ட், சீனாவின் நிலம் மீட்பு நடவடிக்கைகள், அமெரிக்க கடற்படையை அதன்  சுதந்திர கடல்வழி நடவடிக்கையை தொடர்வதிலிருந்து அதனை தடுத்துநிறுத்தப்போவதில்லை. தென்சீனக் கடலில் இராணுவ மண்டலங்கள் என்றழைக்கபடுபவற்றை உருவாக்கி, வழமையான வணிக மற்றும் இராணுவ நடவடிக்கைகளை அச்சுறுத்தும் தேவைக்கதிகமான எச்சரிக்கைகளுக்கு கப்பல்களையும் விமானங்களையும் உட்படுத்துவதாக சீனாமீது அவர் குற்றம் சாட்டினார்.

பிபிசி செய்தியாளர் குழு நடவடிக்கைகள் மற்றும் ஆஸ்திரேலிய P-3 ஓரியோன் தெளிவாகக் காட்டுவது போல, இது கடந்து செல்லும் விமானத்தை தேவையற்றவகையில் சீனா அந்த அளவுக்கு தொல்லைப்படுத்துதல் அல்ல, மாறாக, ஏற்கனவே யுத்தத்திற்கான வெடிக்கும் பொறிமுனையாக இருக்கும் புள்ளியில் அமெரிக்க பிராச்சாரத்திற்கும் மேலும் பதட்டம் வெடிப்பதற்கும் தீனி வழங்கும் ஒரு பதில்நடவடிக்கையை தூண்டிவிடும் வேண்டுமென்றே திட்டமிடப்பட்ட முயற்சிகளாகவே இருக்கிறது.