சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

After Fed rate hike, global economic fault lines deepen

பெடரல் வட்டிவிகித உயர்வுக்குப் பின்னர், உலகளாவிய பொருளாதார அபாயக்கோடுகள் ஆழமடைகின்றன

Nick Beams
19 December 2015

Use this version to printSend feedback

புதனன்று 0.25 அளவிற்கு வட்டிவிகிதங்களை உயர்த்துவதென்ற அமெரிக்க பெடரல் ரிசர்வ் இன் தீர்மானத்தைத் தொடர்ந்து ஓர் ஆரம்ப உயர்வுக்குப் பின்னர், உலகெங்கிலுமான பங்குச்சந்தைகள் கடந்த இரண்டு நாட்களில் குறிப்பிடத்தக்க சரிவுகளை அனுபவித்துள்ளன.

மிகப்பெரிய வீழ்ச்சிகள் அமெரிக்காவில் இருந்தன, அங்கே டோவ் குறியீடு வெள்ளியன்று வர்த்தகம் நிறைவடைந்த போது 368 புள்ளிகள் சரிந்தன, இது 2 சதவீதத்தை விட அதிகமான வீழ்ச்சியாகும், அதேவேளையில் பரந்த அடித்தள எஸ்&பி 500 குறியீடு 1.8 சதவீத அளவிற்கு சரிந்தது. சந்தை ஏற்ற-இறக்கங்களை மதிப்பிடுவதும் மற்றும் பெரும்பாலும் "பயத்தை அளக்கும் அளவீடாக" குறிப்பிடப்படுவதுமான CBOE VIX, 20 ஐ கடந்து சென்றது, இந்த மட்டம் உயர்ந்த அளவிலான சந்தை அழுத்தத்தை எடுத்துக்காட்டுவதாக கருதப்படுகிறது.

பெடரல் தீர்மானத்திற்குப் பின்னர் உடனடியாக உயர்ந்திருந்த உலக சந்தைகளும் சரிந்தன. Euro Stoxx குறியீடு இவ்வாரத்தின் தொடக்கத்தில் அதிகரித்த பின்னர் வெள்ளியன்று 1.4 சதவீத அளவிற்கு சரிந்தது. ஜப்பானில், நிக்கி குறியீடு 1.9 சதவீதத்திற்குக் குறைந்து வீழ்ச்சியடைந்தது.

பங்குச் சந்தைகளது ஏற்ற-இறக்கங்களின் அடியிலிருப்பது, பூகோளமயப்பட்ட பொருளாதாரத்தில் மந்தநிலை மற்றும் தேக்கநிலையை நோக்கி ஆழமடைந்துவரும் போக்கால் தோற்றுவிக்கப்பட்ட விரிவடைந்துவரும் தொடர் அபாயக்கோடுகளாகும். நிதியியல் சந்தைகளின் அதிகரித்த கொந்தளிப்பு, 2008 வோல் ஸ்ட்ரீட் பொறிவுக்குப் பின்னர் வங்கியியல் அமைப்புமுறைக்குள் பெடரல் மற்றும் ஏனைய மத்திய வங்கிகள் பாய்ச்சிய ட்ரில்லியன் கணக்கான டாலரால் எரியூட்டப்பட்ட பாரிய நிதியியல் ஊக வணிகம், நிஜமான பொருளாதார அபிவிருத்திகளை மூழ்கடித்து, குறிப்பாக தொழில்துறை உற்பத்தி சரிவை உண்டாக்கி வருகிறது என்ற உண்மையின் ஒரு வெளிப்பாடாகும்.

இதுவரையில் இந்த இடைத்தொடர்பு, உயர்-ஆதாய, அல்லது "பெறுமதியற்ற", பெருநிறுவன பத்திர, குறிப்பாக எரிசக்தித்துறை பத்திர சந்தைகளில் அதன் கூர்மையான வெளிப்பாட்டைக் கண்டுள்ளது, ஏனென்றால் எண்ணெய் மற்றும் ஏனைய எரிபொருள் விலைகள் கூர்மையாக வீழ்ச்சி அடைந்துள்ளன, இத்துடன் சேர்ந்து அடிப்படை தொழில்துறை பண்டங்களின் விலைகள் உலகளாவிய நிதியியல் நெருக்கடிக்குப் பின்னர் அவற்றின் மிகக் குறைந்தபட்ச மட்டங்களுக்கு சரிந்துள்ளன.

இவ்வாரம், ப்ரென்ட் (Brent) கச்சா எண்ணெய் விலை ஏழு ஆண்டில் குறைந்தளவாக பேரலுக்கு 36.33 டாலரை எட்டியதால், இன்னும் அதிகமாக எரிசக்தித்துறை பெருமதியற்ற பத்திரச் சந்தையின் பிரச்சினைகளை அது உயர்த்துகிறது. இச்சந்தையில் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் எண்ணெய் பேரலுக்கு சுமார் 100 டாலராக வர்த்தகம் ஆன போது, பணம் நிதி அபாயம் நிறைந்த நிறுவனங்களுக்குள் பாய்ச்சப்பட்டது.

ஆனால் கொந்தளிப்பு எரிசக்தித்துறை சார்ந்த நிதியோடு நின்றுவிடவில்லை. நிதியியல் சந்தைகளுக்குச் செய்திகள் வழங்கும் தோமஸ் ராய்டர்ஸ் நிறுவனமான Lipper செய்தியின்படி, கடன்வழங்கல் மீதான மதிப்பீட்டு நிறுவனங்களால் (credit-rating agencies) நுகர்வு பத்திரங்கள் முதலீட்டு தரத்திற்கு மதிப்பிடப்பட்டதும் அமெரிக்க பரஸ்பர நிதிகளிலிருந்து 5.1 பில்லியன் டாலர் முதலீட்டாளர்களால் திரும்பப் பெறப்பட்டது—இது 1992 க்குப் பின்னர் திரும்பப் பெறப்பட்டதைப் போல அதேமாதிரியான மிகப்பெரிய திரும்பப்பெறும் நடவடிக்கையாகும். இத்துடன் கூடுதலாக 3 பில்லியன் டாலர் பெறுமதியற்ற பத்திர நிதிகளும் திரும்ப பெறப்பட்டன. டிசம்பர் 16க்கு முந்தைய வாரத்தில், வரிவிதிப்புக்குட்படும் பத்திர நிதிகளிலிருந்து 15.4 பில்லியன் டாலர் திரும்பப்பெறப்பட்டதாக மதிப்பிடப்படுகிறது.

நிதியியல் சந்தைகளது நிலை குறித்து இவ்வாரம் பிரசுரிக்கப்பட்ட அறிக்கை ஒன்றில், நிதியியல் ஆராய்ச்சி அலுவலகம் (OFR), 2008 நெருக்கடிக்குப் பின்னர் அமெரிக்க நிதித்துறையால் அமைக்கப்பட்ட இது, ஏழாண்டுகால மிகக் குறைந்த வட்டிவிகிதங்களின் விளைவுகளைக் குறித்த ஒரு சித்திரத்தை வரைந்திருந்தது, பைனான்சியல் டைம்ஸ் பொருளாதார விமர்சகர் ஜில் டெட் வார்த்தைகளில் கூறுவாதானால், “அமெரிக்க நிதியியல் அமைப்புமுறை தனித்துவமாக சிதைந்து கிடக்கிறது.”

"அமெரிக்காவின் நிதியியல்-அல்லாத வியாபார துறையில் கடன்வழங்கல் அபாயம் உயர்ந்துள்ளதுடன், உயர்ந்தும் வருகிறது,” என்று OFR குறிப்பிட்டது. “உயர்ந்த அடிப்படை வட்டிவிகிதங்கள் மறுநிதிவழங்கல் அபாயங்களை உருவாக்கக்கூடும்... மற்றும் சாத்தியமான அளவிற்கு ஒரு பரந்த கடன்செலுத்தவியலா சுழற்சி தீவிரமடைகிறது,” என்று அது எச்சரிக்கும் அளவிற்குச் சென்றது.

வேறு வார்த்தைகளில் கூறுவாதானால், உயர் அபாய பகுதிகளில் ஒரு கடன்செலுத்தவியலா நிலையோ அல்லது பல கடன்செலுத்தவியலா நிலைகளோ உருவாக்கப்பட்டுள்ள ஒரு சூழ்நிலை ஒட்டுமொத்தமாக அமைப்புமுறையிலேயே தொடர்ச்சியான எதிர்வினைகளுக்குக் களம் அமைக்கும், இது வீட்டு அடமானக் கடன் சந்தை (sub-prime mortgage) பொறிவினது பாதிப்புகளை நினைவூட்டுகிறது. 2006 மற்றும் 2007 இல் அந்த நெருக்கடி எழுந்த போது, அப்போதைய-பெடரல் தலைவர் பென் பெர்னான்கி அதை ஒப்பீட்டளவில் ஒரு சிறிய பிரச்சினையாக, எளிதில் கட்டுப்படுத்திவிடக் கூடிய ஒன்றாக ஒதுக்கித் தள்ளினார்.

மோசமடைந்துவரும் நிதியியல் நிலைமை, உலகின் பிரதான மத்திய வங்கிகளது கொள்கைகளில் உள்ள விரிசல்களால் சூழப்பட்டுள்ளது. பெடரல் இறுக்கமாக்குவதை நோக்கி நகர்ந்துள்ள நிலையில், மிகவும் சிறிது சிறிதான வேகத்தில் இருந்தாலும் கூட, ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் பேங்க் ஆஃப் ஜப்பான் ஆகியவை நிதியியல் அமைப்புமுறைக்குள் கூடுதலான பணத்தைப் பாய்ச்சும் நோக்கில் "பணத்தைப் புழக்கத்தில் விடும்" பல்வேறு வடிவங்களைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

ஆனால் அதிகரித்துவரும் நிதியியல் கொந்தளிப்பிற்கு இடையே, உத்தியோகபூர்வ மந்திரம், அமெரிக்கா ஒரு விரிவடைந்துவரும் பொருளாதார மீட்சியின் இடையில் இருப்பதாகவும், உலக பொருளாதாரத்தில் அதுவொரு "பிரகாசமான புள்ளியாக" பார்க்கப்படுவதாகவும் உச்சரிக்கிறது.

இந்த மென்மையான காட்சி, நீண்டகால அபிவிருத்திகள் மற்றும் உடனடி சூழ்நிலைகள் இரண்டினாலும் பொய்யாக்கப்படுகிறது. 2009 இன் ஜூன் காலாண்டில் அமெரிக்க பொருளாதாரம் வளரத் தொடங்கியதற்குப் பின்னர், அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆண்டுக்கு 2.2 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது, இது இரண்டாம் உலக போருக்குப் பிந்தைய வரலாற்றில் மந்தநிலைக்குப் பிந்தைய எந்தவொரு கட்ட வேகத்தை விடவும் மிகக் குறைந்த வேகமாகும். இதன் விளைவாக, நிதியியல் நெருக்கடியின் காரணமாக ஏற்பட்ட வேலைவாய்ப்பு இழப்பு மற்றும் பொருளாதார வெளியீட்டு இழப்பைச் சரிக்கட்டுவதற்கே அமெரிக்க பொருளாதாரத்திற்கு ஐந்தாண்டுகள் ஆனது.

இப்போது தொழில்துறை புள்ளிவிபரங்களோ மற்றொரு கீழ்நோக்கிய திருப்பத்தை எடுத்துக்காட்டுகின்றன. அமெரிக்க தொழில்துறை உற்பத்தி, அக்டோபரில் இருந்து 0.6 சதவீதம் பருவகாலத்தால் சரிக்கட்டப்பட்டும் கடந்த மாதம் வீழ்ச்சி அடைந்திருந்தது, இது மார்ச் 2012 க்குப் பிந்தைய மிகப்பெரிய வீழ்ச்சியாகும் மற்றும் தொடர்ந்து மூன்றாவது மாத சரிவாக உள்ளது. தொழில்துறை உற்பத்தியில் மூன்று கால்பகுதிகளை உள்ளடக்கியுள்ள உற்பத்தி வெளியீடு, ஒரேமட்டத்தில் இருந்தது. சுரங்க வெளியீடு இந்த மாதம் 1.1 சதவீதம் சரிந்துள்ளது, இப்போது அது ஓராண்டுக்கு முந்தைய மட்டத்தை விட 8.2 சதவீதம் குறைந்துள்ளது.

செவ்வாயன்று பைனான்சியல் டைம்ஸ் பிரசுரித்த ஒரு செய்தியின்படி, கேட்டர்பில்லர் மற்றும் Deer & Co போன்ற பிரதான வினியோக தொழில்துறை நிறுவனங்களின் ஒரு பொதுவான கருப்பொருள், “கடுமையான காலக்கட்டம் திரும்பியுள்ளது" என்பதாகும். அதுவும் சில நிறுவனங்கள் "ஒரு தொழில்துறை மந்தநிலை வந்திருப்பதாக" கூட சுட்டிக்காட்டுகின்றன.

அமெரிக்க தொழில்துறை மந்தநிலைமை ஓர் எழுச்சிபெற்றுவரும் உலகளாவிய போக்கின் பாகமாகும். உலகின் பிரதான உற்பத்திய மையமான சீனாவில் தொழில்துறை வேலைவாய்ப்பு மீதான புள்ளிவிபரங்கள், நிகர உற்பத்தித்துறை வேலைவாய்ப்பு அக்டோபரில் முடிந்த இந்தாண்டில் 1.9 சதவீத அளவிற்கு வீழ்ச்சி அடைந்திருப்பதை எடுத்துக்காட்டியது. மூன்றாவது காலாண்டில், அத்துறையில் வேலைவாய்ப்பு உயர்வு 2000க்குப் பின்னர் காலாண்டு அடிப்படையில் அதன் குறைந்தபட்ச விகிதத்தில் இருந்தது. மிகப்பெரிய சரிவுகள் கனரக தொழில்துறையில் ஏற்பட்டுள்ளன, இரும்பு தாது சுரங்க மற்றும் பிரித்தெடுக்கும் துறை வேலைவாய்ப்பு 12 சதவீத அளவிற்கு சரிந்துள்ளது, நிலக்கரி சுரங்கத்துறை 7 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது மற்றும் எஃகுத்துறை வேலைவாய்ப்பு 6 சதவீதத்திற்கு வீழ்ந்துள்ளது.

சீன வளர்ச்சிக் குறைவு எழுச்சிபெற்றுவரும் சந்தைகள் என்றழைக்கப்படுவதன் மீதும் மிக பொதுவாக தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது. ஜேபிமோர்கன் சேஸ் பின்தொடர்ந்த 22 மிகப்பெரிய எழுச்சிபெற்றுவரும் சந்தைகளில் 21, அவற்றின் 2016 க்கான வளர்ச்சி முன்மதிப்பீடுகளைக் கீழிறக்கி இருந்தன. சீனப் பொருளாதாரத்தை அதிகளவில் சார்ந்துள்ள பிரேசில், இந்த போக்கின் மிகக் கூர்மையான வெளிப்பாடாகும். சமீபத்திய புள்ளிவிபரங்களின்படி அதன் பொருளாதாரம் 4.5 சதவீதம் அளவிற்கு சுருங்கி வருகிறது. பிரதான கடன்வழங்குதல் மதிப்பீட்டு நிறுவனங்களில் இரண்டாவதாக Fitch உம் அந்நாட்டின் கடன்பெறும் அந்தஸ்தைப் பெருமதியற்ற தரத்திற்கு கீழிறக்கிய போது, பிரேசிலின் மோசமடைந்துவரும் சூழ்நிலை இவ்வாரம் உயர்த்திக் காட்டப்பட்டது.

உலக வங்கி "எழுச்சிபெற்றுவரும் சந்தைகளுக்கான ஒரு பலவீன வளர்ச்சி சகாப்தத்தின் தொடக்கம்" குறித்து எச்சரித்துள்ளது. இந்த பொருளாதாரங்கள் உலக வெளியீட்டில் ஏறத்தாழ 40 சதவீதத்தைக் கணக்கில் கொண்டிருக்கும் நிலையில், இது ஒரு குறிப்பிடத்தக்க தாக்கத்தைக் கொண்டிருக்கும். அவை குறிப்பிடத்தக்க நிதிய கொந்தளிப்பாலும் பாதிக்கப்படும், இத்துடன் சர்வதேச நாணய நிதியத்தின் எச்சரிக்கையும் சேர்ந்தது, அப்பொருளாதாரங்கள் பண்டங்களது விலைகள் மற்றும் உலகளாவிய தேவையால் கோரப்பட்ட கடனை விட 3 ட்ரில்லியன் டாலர் அதிகமான கடனைக் கொண்டுள்ளன.

இந்த சமீபத்திய பொருளாதார புள்ளிவிபரங்கள் மற்றும் நிதியியல் சந்தைகளில் அதிகரித்துவரும் கொந்தளிப்பிலிருந்து தப்பிக்கவியலாத இரண்டு தீர்மானங்கள் ஊற்றெடுக்கின்றன.

முதலாவது, பெடரல் மற்றும் ஏனைய மத்திய வங்கிகளால் ட்ரில்லியன் கணக்கான டாலர் அதிமலிவு பணம் பாய்ச்சப்பட்டமை, 2008 இல் வெடித்த நெருக்கடியைத் தீர்ப்பதில் அல்லது ஒரு நிஜமான பொருளாதார மீட்சியைக் கொண்டு வருவதில் ஒன்றும் செய்யவில்லை என்பது.

ஆனால் அது, பங்குவிலைகளை மூன்று மடங்கிற்கு உயர்த்தி, பெருநிறுவன இலாபங்கள் மற்றும் தலைமை செயலதிகாரிகளது கொடுப்பனவுகளைச் சாதனையளவிற்கு உயர்த்தி, சமூக சமத்துவமின்மையை முன்பினும் அதிகமான மட்டங்களுக்கு அதிகரித்து, செல்வவளத்தை அடிமட்டத்திலிருந்து மேல்மட்டத்திற்கு பாரியளவில் பரிவர்த்தனை செய்ய உதவியுள்ளது. வங்கிகளுக்கும் மற்றும் தனியார் முதலீட்டு நிறுவனங்களுக்கும் கையளிக்கப்பட்ட பாரிய தொகை, பெரும் பங்கு, உற்பத்தியில் முதலீடு செய்யப்படவில்லை, மாறாக வேலைகளைக் குறைக்கும் பெருநிறுவன ஒருங்கிணைப்புகள், பங்குகள் வாங்கி-விற்பது மற்றும் ஆதாயப்பங்குகளை (dividend) உயர்வுகள் போன்ற ஒட்டுண்ணித்தனமான நடவடிக்கைகளுக்கு நிதி வழங்க பயன்படுத்தப்பட்டது. இதிலிருந்து விளைந்த அரசு கருவூலத்துறையின் திவால்நிலைக்குப் பணம் செலுத்த, உலகெங்கிலுமான அரசாங்கங்கள் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக மூர்க்கமான சிக்கன நடவடிக்கைகளைத் திணித்துள்ளன.

இரண்டாவதாக, இத்தகைய கொள்கைகள் மற்றொரு நிதியியல் நெருக்கடிக்கு மட்டுமே நிலைமைகளை உருவாக்கி உள்ளன, அதன் விளைவுகள் சாத்தியமான அளவிற்கு வீட்டு அடமானக் கடன் பொறிவால் தூண்டிவிடப்பட்டதை விட இன்னும் அதிக பேரழிவுகரமாக உள்ளது. நிஜமான பொருளாதாரத்தில் ஆழமடைந்துவரும் வீழ்ச்சியும் மற்றும் அதிகரித்துவரும் நிதியியல் பிரச்சினைகளது அறிகுறிகளும், முதலாளித்துவ அமைப்புமுறையே உலகளாவிய பொருளாதார நெருக்கடியின் ஆதாரம் என்பதை எடுத்துக்காட்டுகின்றன, அதை சீர்திருத்த முடியாது, மாறாக அது தூக்கியெறியப்பட்டு, சோசலிசத்திற்கான போராட்டத்தில் சர்வதேச தொழிலாள வர்க்கத்தால் பிரதியீடு செய்யப்பட வேண்டும்.