சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பிய ஒன்றியம்

One million people fled to Europe in 2015

2015 இல் ஒரு மில்லியன் மக்கள் ஐரோப்பாவிற்குள் தஞ்சம் புகுந்துள்ளனர்

By Andre Damon
23 December 2015

Use this version to printSend feedback

சிரியா, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியங்கள் தூண்டிவிட்ட போர்கள், மனிதயின வரலாற்றிலேயே மிகப்பெரிய அகதிகள் நெருக்கடியாக இருக்கக்கூடிய ஒன்றிற்கு பங்களித்துள்ளன, இதில் எண்ணிறைந்த மக்கள் "முதல்முறையாக 60 மில்லியனுக்கும் அதிகமானவர்கள்" அவர்களது வீடுகளை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை கடந்த வாரம் தெரிவித்தது.

அந்த அகதிகளில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் ஐரோப்பாவில் தஞ்சம் கோரி இருப்பதாக ஜெனிவாவில் உள்ள சர்வதேச புலம்பெயர்வு அமைப்பு (IOM) திங்களன்று அறிவித்தது.

மனித அவலங்கள் மற்றும் புலம்பெயர்வு துன்பங்களின் ஓர் ஆண்டாக 2015 நினைவுகூரப்படும், இது IOM இன் இயக்குனர் வில்லியம் லாசி ஸ்விங் அவரது அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

மத்திய தரைக்கடல் மற்றும் ஏகியன் கடல்களில் மூழ்கி இறந்த 3,692 நபர்கள் உட்பட, தப்பித்து வெளியேறுகையில் 5,000 க்கு அதிகமான அகதிகள் உயிரிழந்துள்ளனர், அதேவேளையில் "மில்லியன் கணக்கானவர்கள் பலியாடுகளாக ஆக்கப்பட்டு, வெளிநாட்டவர் விரோத கொள்கைகள் மற்றும் அபாயகரமான வாய்சவடால்களின் இலக்கில் இருப்பதாக" ஸ்விங் குறிப்பிட்டார்.

மூன்று குழந்தைகள் உட்பட மேலும் பதினொரு அகதிகள், ஏகியன் கடலில் அவர்களது மரப்படகு மூழ்கியதில் செவ்வாயன்று இறந்தனர். மத்திய தரைக்கடலில் துருக்கியிலிருந்து கிரீஸ் வரையிலான பாதை "நமது பூகோளத்தில் புலம்பெயர்வோருக்கான மரணப்பாதையாக" மாறியுள்ளதென ஐ.நா. குறிப்பிட்டது.

ஐரோப்பாவிற்குள் நுழையும் அகதிகளில் மூன்று பங்கிற்கு அதிகமானவர்கள் குழந்தைகள். Save the Children அறக்கட்டளை, சமீபத்திய புள்ளிவிபரங்களுக்கு கூர்மையான வார்த்தைகளோடு ஒரு விடையிறுப்பை வழங்கியது. பாதிக்கப்பட்ட குழந்தை அகதிகளுக்கு உதவ, பாதுகாக்க மற்றும் நமது கடல்களில் குடும்பங்கள் மூழ்கி இறப்பதைத் தடுக்க ஐரோப்பா மிகக் குறைந்தளவே செய்கிறது, என்று அறிவித்தது. நமது வாயிற்படிகளில் குழந்தைகள் இறக்கின்ற போது நாம் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்கே அதைவிட பெரிய முன்னுரிமைகள் இருக்க முடியாது, என்றது அறிவித்தது.

அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபை உயர் கமிஷனர் António Guterres அப்புள்ளிவிபரங்கள் மீது கருத்துரைக்கையில், அடிப்படை பாதுகாப்பு மற்றும் உயிரைக் காப்பாற்றும் நடவடிக்கைகள் விடயத்தில், மனிதாபிமான நடிகர்களால் இனி குறைந்தபட்ச ஆதரவைக் கூட வழங்க முடியாது என்பது தெளிவாகிவிட்டது, என்றார்.

இன்று நீங்களே ஓர் அகதியாகிவிட்டீர்கள் என்றால், உங்கள் நாட்டிற்குத் திரும்புவதற்கான உங்களது வாய்ப்புகள், 30 ஆண்டுகளுக்கு முன்னர் எந்தவொரு நேரத்திலும் இருந்ததை விட இப்போது குறைந்துவிட்டது, என்று Guterres அறிவித்தார். 2014 இல் வெறும் 124,000 சர்வதேச அகதிகள் மட்டுந்தான் நாடு திரும்பியிருந்தனர், இதுவே 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு மில்லியன் பேர் நாடு திரும்பி இருந்தனர்.

நிராயுதபாணியான நாடுகள் மீது குண்டுவீசுவதற்கும் மற்றும் அவற்றைச் சூறையாடுவதற்கும் "மனித உரிமைகள்" என்பதைத் தாரக மந்திரமாக்கி உள்ள மேற்கத்திய சக்திகள், அவற்றின் சொந்த எல்லைகள் என்று வருகையில் அதே "மனித உரிமைகளை" அவை முற்றிலுமாக புறக்கணிக்கின்றன என்பதை இந்த அகதிகள் நெருக்கடி அம்பலப்படுத்தி உள்ளது. அவற்றின் கடல்களில் மூழ்கி இறந்துபோகும் ஆயிரக் கணக்கான மக்களுக்கு உதவி மற்றும் நிவாரணம் வழங்குவதற்குப் பதிலாக, அவை போர் முனைவை கூடுதலாக தீவிரப்படுத்தவும் மற்றும் உள்நாட்டில் ஜனநாயக உரிமைகள் மீது தாக்குதல் நடத்தவும் ஒரு சாக்குபோக்காக அகதிகள் நெருக்கடியைப் பயன்படுத்தி வருகின்றன.

அகதிகளின் ஓர் ஆதரவாளராக காட்டிக்கொள்ளும் ஜேர்மன் அரசாங்கம் பாரியளவில் திருப்பியனுப்பும் நடவடிக்கையை விரிவாக்கியுள்ளதுடன், அகதிகளுக்கு சமூக உதவிகளையும் குறைத்துள்ளது. அந்நாடு 2015 இல் 18,363 பேரைத் திருப்பியனுப்பி உள்ளது, இது அதற்கு முந்தைய ஆண்டு திருப்பியனுப்பப்பட்டவர்களது எண்ணிக்கையை விட அண்மித்து இரண்டு மடங்காகும், அதுவே கூட 2012 இல் 7,651 ஆக இருந்ததிலிருந்து அதிகமாகும். இதற்கும் கூடுதலாக ஜேர்மனியில் தற்போது தங்கியுள்ள 190,000 மக்களது தஞ்சம்கோரும் விண்ணப்பங்கள் மறுக்கப்பட்டுள்ளன, அவர்கள் திருப்பியனுப்பப்படும் நிரந்தர அச்சத்தில் வாழ்கின்றனர். இக்காட்சிகளுக்குப் பின்னால், ஜேர்மன் அரசாங்கம் அடுத்த ஆண்டு பாரிய வெளியேற்றங்களை நடத்த இராணுவத்தைப் பிரயோகிக்கும் திட்டங்களையும் வகுத்து வருகிறது.

ஜேர்மன் அதிகாரிகள் மத்தியக் கிழக்கிலிருந்து தரைவழியாக ஐரோப்பாவிற்குள் நுழைவதிலிருந்து அகதிகளைத் தடுக்க ஐரோப்பிய ஒன்றியம் மூலமாக துருக்கிக்கு சுமார் 3 பில்லியன் டாலர் வழங்கும் ஓர் உடன்படிக்கையில் இணைந்து இயங்கும் முனைவை முன்னெடுத்துள்ளது. சுமார் 2.2 மில்லியன் பேர் துருக்கிக்குத் தப்பியோடி வந்துள்ளனர், அங்கே அவர்கள் ஐரோப்பாவிற்குள் வராதபடிக்குத் தடுக்கப்பட்டு, அகதிகள் முகாம்களில் அருவருக்கத்தக்க நிலைமைகளில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஐரோப்பாவிற்கான பெரும்பாலான தரைவழி பாதைகள் அடைக்கப்பட்ட நிலையில், ஐரோப்பாவிற்குத் தப்பியோட முயலும் அகதிகள் கொந்தளிக்கும் ஏகியன் கடலைக் கடந்து கிரேக்க தீவுகளினூடாக கடல் வழியாக அபாயகரமாக பயணிக்க நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். தரைவழியாக பயணித்த சுமார் வெறும் 30,000 பேருடன் ஒப்பிடுகையில், சுமார் 816,752 பேர் இப்பாதை வழியாக வந்தடைந்துள்ளனர், இது ஐரோப்பிய ஒன்றியம் அதன் வெளி எல்லைகளை மூடுவதற்கான அதன் முயற்சிகளின் மூர்க்கமான செயல்திறனுக்கு ஒரு சாட்சியமாக உள்ளது.

கிரீஸின் சிரிசா தலைமையிலான அரசாங்கம், ஐரோப்பிய அதிகாரிகளின் சிக்கனத் திட்ட கோரிக்கைகளுக்கு முழுமையாக மண்டியிட்டதுடன் சேர்ந்து, இந்தாண்டு அதன் தேர்தல் பிரச்சாரத்தில் கிரேக்க தொழிலாளர்களது அகதிகள்-ஆதரவு பொதுநல உணர்வுகளைக் கெடுக்க முயன்றது, அது பெரிய ஐரோப்பிய சக்திகளுக்கு ஒரு எல்லையோர காவல்படையாக பாத்திரம் ஏற்க அதன் சம்மதத்தைத் தெரிவித்துள்ளது.

இப்போது வரையில், கவிஞர் Sappho இன் பிறப்பிடமான கிரேக்க லெஸ்போஸ் தீவு ஒரு பிரமாண்டமான தடுப்புக்காவல் முகாமாக மாற்றப்பட்டுள்ளது. சுமார் 450,000 அகதிகள் இந்தாண்டு லெஸ்போஸ் தீவை வந்தடைந்தனர், இது அத்தீவின் நிரந்தர குடிவாசிகளின் எண்ணிக்கையை விட ஐந்து மடங்கு அதிகமாகும். திங்கட்கிழமை மட்டும் 4,000 க்கும் அதிகமானவர்கள் வந்தடைந்தனர்.

இத்தீவு, ஐரோப்பிய ஒன்றியத்தின் முதல் அகதிகள் "விபர சேகரிப்பு மையமாக" (hot spot) ஆக்கப்பட்டுள்ளது, இந்த தூய்மையான வார்த்தை ஒரு சித்திரவதை முகாம் என்பதை விட சற்று அதிகமாக வர்ணிக்கப்படக்கூடிய ஒன்றுக்காக பயன்படுத்தப்படுகிறது. பொலிஸ் காவலின் கீழ், சுற்றிலும் முறுக்கிய முள்கம்பி வேலிகளால் வளைக்கப்பட்டு, அகதிகள் இழிந்த நிலைமைகளில் வைக்கப்பட்டுள்ளனர்.

அந்த "அகதிகளின் விபர சேமிப்பு மையத்தை" பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ள போதினும் புகைப்படங்கள் எடுக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ள ராய்டர்ஸ், அகதிகள் முகங்கொடுக்கும் இரங்கத்தக்க நிலைமைகளைப் பின்வருமாறு விவரித்தது. இரவாகும் போது, வெப்பநிலை சுமார் 6 டிகிரி செல்சியஸ் (43 டிகிரி பாரன்ஹீட்) அல்லது அதற்கும் குறைவாக குறைகிறது, மக்கள் கூட்டம் வெப்பமூட்டிக் கொள்ள துண்டுதுண்டு அட்டைகளை எரித்துக் கொள்கிறார்கள், சூட்கேஸ்களின் குவியல்களுக்குள் சுருங்கிக் கொள்கிறார்கள். அந்நிலத்தின் மண்புழுதி மழை பெய்யும் ஒவ்வொரு முறையும் சகதியாகி விடுகிறது. இன்னும் இதுபோன்ற நான்கு இழிந்த முகாம்களை அமைக்க கிரீஸ் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வாக்குறுதி அளித்துள்ளது.

கடந்த வாரம் ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட புள்ளிவிபரங்களின்படி, இந்தாண்டு புதிதாக இடம்பெயர்ந்த ஐந்து மில்லியன் நபர்களில், ஒரு மில்லியன் அகதிகளால் ஐரோப்பாவிற்குள் சமாளித்து உள்நுழைய முடிந்திருந்தது. இந்த ஐந்து மில்லியன் என்பது 2014 இறுதிக்குள் இடம்பெயர்ந்த 59.5 மில்லியன் மக்களுடன் சேர்கிறது.

ஆனால் மேற்கத்திய சக்திகளால் தலையீடு தீவிரப்படுத்தப்பட்டதன் விளைவாக சிரிய உள்நாட்டு போரிலிருந்து தப்பியோடிய மக்களின் பெரும் அதிகரிப்புக்கு முந்தைய இந்தாண்டின் முதல் பாதியை மட்டுமே, ஐ.நா புள்ளிவிபரங்கள் கணக்கில் எடுத்துள்ளன. அதன் அர்த்தம், அப்புள்ளிவிபரங்கள் புதுப்பிக்கப்பட்டால், உலகெங்கிலும் இடம்பெயர்த்தப்பட்ட மக்களின் எண்ணிக்கை 70 மில்லியனைத் தாண்டக்கூடும்.

இந்தாண்டு மத்திய தரைக்கடலைக் கடந்தவர்களில் சரியாக பாதிப் பேர் சிரியாவிலிருந்து வந்த அகதிகளாவர். ஆப்கானிஸ்தான் போரிலிருந்து தப்பியோடி வந்தவர்கள் 20 சதவீதம் பேர், ஈராக்கிலிருந்து வெளியேறி வந்தவர்கள் 7 சதவீதம் பேர். இவ்விதத்தில் ஐரோப்பாவில் தஞ்சம் கோருபவர்களில் மூன்று கால் பகுதியினருக்கும் அதிகமானவர்கள் மத்திய கிழக்கில் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தால் நேரடியாக தூண்டிவிடப்பட்ட போர்களில் இருந்து தப்பிக்கவே தஞ்சம் கோருகின்றனர்.

இந்த புத்தாண்டில் தங்களின் ஒடுக்குமுறையைத் தீவிரப்படுத்த ஐரோப்பிய சக்திகள் சூளுரைத்துள்ளன. ஐரோப்பிய ஒன்றிய எல்லைக் கட்டுப்பாட்டு அமைப்பான Frontex இன் ஆட்களை மற்றும் நிதியுதவியை இரட்டிப்பாக்கும் திட்டங்களை இம்மாதம் ஐரோப்பிய கமிஷன் அறிவித்தது. அகதிகளைத் தடுத்து திருப்பியனுப்புவற்கு அந்த அமைப்பு அதன் சொந்த கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் வழங்கப்பட்ட "துரித தலையீட்டு துருப்புகளது" படையை உருவாக்கி, அந்த அமைப்பைக் கூடுதலாக இராணுவமயப்படுத்த ஐரோப்பிய கமிஷன் சூளுரைத்தது.