சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

German academics Münkler and Baberowski promote imperialist foreign policy

ஜேர்மன் கல்வியாளர்கள் முங்க்லரும் பார்பெரோவ்ஸ்கியும் ஏகாதிபத்திய வெளியுறவுக் கொள்கைகளை ஊக்குவிக்கின்றனர்

By Peter Schwarz 
11 December 2015

Use this version to printSend feedback

பிரஷ்ய இராணுவவாதத்தின் பின்னணியில், அரசியல் விஞ்ஞானி ஹெர்பிரீட் முங்க்லர் (Herfried Münkler) மற்றும் வரலாற்றாளர் ஜோர்க் பார்பெரோவ்ஸ்கி (Jörg Baberowski) திங்கள் மாலை வன்முறை பற்றி பேசிய கூட்டம் உள்ளடக்கத்திற்கு பொருத்தமானதாக இருந்தது.

http://www.wsws.org/asset/f15444f8-9f4f-4819-b934-5e06907c786I/Schl%C3%BCterhof.jpg?rendition=image240
Münkler, Voß und Baberowski (v.l.)

அருங்காட்சியக அமைப்பின் தலைவர், பீட்டர் வோஸ் (Peter Voß) பக்கத்தில் உள்ள ஹம்போல்ட் பல்கலைக்கழகத்திலிருந்து இந்த இரு பேராசிரியர்களையும் அழைத்திருந்தார். தலைப்புவன்முறை: வரலாற்றின் அத்தியாவசியமா?” என்றிருந்தது. அருங்காட்சியகம் அமைந்திருந்த கவச ஆயுத களஞ்சியம் 18ம் நூற்றாண்டில் பிரஷ்யாவுக்கு ஆயுதத்தளவாடக் கூடமாக பயன்பட்டது மற்றும் 19ம் நூற்றாண்டில் இராணுவ அருங்காட்சியகம் மற்றும் புகழ்பெற்ற அரங்காக பயன்படுத்தப்பட்டிருந்தது. 20ம் நூற்றாண்டில் அருங்காட்சியகத்தின் வெளி அரங்கான Schlüterhof இல் ஹிட்லர் மாவீரர்கள் நினைவுநாள் (Heldengedenktag) ஆண்டு உரையை நிகழ்த்தினார்.

கவச கூடம் பிரஷ்யாவின் கடந்தகாலப் புகழுக்குரிய காலம்கடந்து நிற்கும் பழம்பொருட்கள் இணைந்த காட்சிகளால் சூழப்பட்ட ஒரு நிரந்தர கட்டிடமாக இருக்கிறது. போலிப்பகட்டாரவார பேர்லின் கதீட்ரல் மீண்டும் கட்டி எழுப்பப்பட்ட Hohenzollern கோட்டை மதிற்சுவருக்கு அடுத்து நிற்கிறது, தூக்குமேடைக்குப் பின்னால் அரசு இசைக்கூடம் ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தின் பிரதான கட்டிடம் மகா பிரடெரிக்கின் சகோதரருக்கான வசிப்பிடமாக முன்னர் பயன்பட்டது.

கடந்தகாலத்து ஆவியுருக்கள் பற்றிப் படர்ந்துள்ள அதேவேளை, இரு பேராசிரியர்களும் பிரதானமாக தற்போதைய நிலை பற்றி பேசினார்கள். அவர்களைப் பொறுத்தமட்டில், வன்முறை என்பதுவரலாற்றின் அத்தியாவசியம்என்பது மட்டுமல்ல, அது எல்லாவற்றுக்கும் மேலாக எதிர்காலத்தின் அத்தியாவசியமும் கூட.

அத்தகைய ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர், 1933ல் ஹிட்லர் ஆட்சிக்கு வந்தவுடன் பல பேராசிரியர்கள் அவரது பிடிக்குள் எப்படி தம்மை ஆட்படுத்திக் கொண்டார்கள் என்பதை புரிந்துகொள்வது ஒருவருக்கு எளிதாக இருக்கும். ஜேர்மன்  படைவீரர்கள் மீண்டும் யுத்தத்திற்கு அனுப்பப்பட்ட உடனேயே, கடந்தகாலத்து நாஜி ஆதரவு பேராசிரியர்கள் இரண்டாம் உலக யுத்தத்தின்போது மனதில் உள்ளதை நேர்மையுடன் கூற நிர்பந்திக்கப்பட்ட அமைதிவாத கோட்பாடுகளையும் ஜனநாயக கோட்பாடுகளையும் கைவிட்டுவிட்டு, இராணுவ மற்றும் அரசு வன்முறையை ஆரத்தழுவினர்.

அங்கு எதிர்ப்பின் எந்த அறிகுறியும் இல்லை, பார்வையாளர் பக்கத்திலிருந்து தொல்லைக்கு ஆட்பட்ட மூச்சைக்கூட காணோம். அது அபரிமிதமாக கல்விப் பின்புலம் உடைய மூத்த வயதினரைக் கொண்டிருந்தது. பதிலாக, பேச்சாளர் தம்மைப்பற்றி விரிவாக விளக்கியபோது பணிவான கைதட்டல்கள் எழுந்தன. முன்வரிசையில் பேச்சாளர்களைப் பார்த்த வண்ணம் திலோ சராஸின் (Thilo Sarrazin) அமர்ந்திருந்தது நிகழ்விற்குப் பொருத்தமாக இருந்தது. இவரது புத்தகம் ஜேர்மனி தன்னையே அழித்துக்கொள்கிறது (Germany Abolishes Itself ) ஜேர்மனியில் மீண்டும் ஒருமுறை வெளிநாட்டவர் வெறுப்பினை மரியாதைக்குரியதாய் ஆக்கியது.

இரண்டுமணிநேர கலந்துரையாடல் முழுவதும் வெளிப்பட்ட முக்கிய கருத்து: ஜேர்மனி தனது வெளிநாட்டுக் கொள்கைக்கு அடிப்படையாகக் கொண்டிருந்த, ஜனநாயகக் கோட்பாடுகள் மீதான அதன் உள்நாட்டுக்கொள்கை, சர்வதேச சட்டம் மற்றும் தார்மீகரீதியான தயக்கங்கள் தொடர்பாக உணர்வது ஒரு முடிவுக்கு வந்துவிட்டன. பீட்டர் வோஸ் சுருக்கித் தொகுத்தவாறு, “நாம் தார்மீக அரசியலுக்கு அதிக வலியுறுத்தல் கொடுப்பதிலிருந்து யதார்த்த அரசியலுக்கு பெரும் முக்கியத்துவம் கொடுப்பதற்கு கட்டாயம் மாறவேண்டும்

முங்க்லர்நாம் எப்போதும் கொண்டிருந்த வெளியுறவுக் கொள்கை பற்றிய அடிப்படை திருத்துதலின் விளிம்பில் நிற்கிறோம், அதுமதிப்பு-சார்ந்த வெளியுறவுக் கொள்கைஎன அழைக்கப்படுகிறது என நான் நம்புகிறேன். நாம் பழம்பெரும் யதார்த்த அரசியலுக்கு திரும்புவதற்கு நிர்பந்திக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.”

மத்திய கிழக்கு தொடர்பாக இதன் அர்த்தம் ஒருவர் இனியும் சொல்வதில்லை, “கறைபடிந்த கரங்கள் கொண்டவர்களுடன், இந்த சர்வாதிகாரிகளுடன் ஒன்றும் செய்வதற்கில்லை மற்றும் இவர்களுடன் ஏதும் செய்வதற்கு நாம் விரும்பவில்லைஎன்று முங்க்லர் விவரித்தார். எடுத்துக்காட்டாக அவர் எகிப்திய ஆட்சியாளர் அல்சிசி பற்றி குறிப்பிட்டார்.

எகிப்து வெடித்துவிடாமல் உறுதி செய்வதற்குநாம் அவரை சார்ந்திருந்தோம் என அவர் வலியுறுத்தினார். “பிராந்தியத்தில் எவை ஸ்திரமான அரசுகள் மற்றும் அந்த பகுதியில் உள்ள படைகளுடன் மிக குறைவான செலவு மற்றும் குறைவான ஆபத்தை எதிர்கொண்டு, ஸ்திரத்தன்மைக்கு நெருக்கமான ஏதோஒன்றை உருவாக்க எப்படி அவர்களுடன் நடந்து கொள்வதுஎன்பது பற்றி ஒருவர் கட்டாயம் எண்ணிப்பார்க்க வேண்டும்.

முங்க்லர், ஜேர்மனி அதன்பழம்பெரும் யதார்த்த அரசியலைபயிற்சி செய்ய வேண்டிய பூகோளப் பகுதிகளை உருவரை செய்தார். அவர் சொன்னார், “நாம் அக்கறைகொள்ள வேண்டிய பேரரசுக்கு முந்திய இரு பகுதிகள் உள்ளன. ஒன்று மேற்கு பால்கன்களில் இருந்து காஸ்பியன் கடல் வரையிலான பகுதி, மற்றும் இன்னொன்று குறிப்பாக முழு அரபு உலகமும்.”

ஐரோப்பிய ஸ்திரத்தன்மைக்கும் பாதுகாப்புக்கும் பெரும் சவால்கிழக்கு பால்கன்களில் இருந்து காகசஸ்வரையும்மெசபடோமியா மற்றும் லிபியா, லெவான்ட்டே மற்றும் இந்திய பெருங்கடலுக்கு இடையில் உள்ள பகுதியிலிருந்து மத்தியதரைக் கடற்கரை மற்றும் சஹாராவின் மற்ற பக்கம்வரைக்கும் நீள்கிறது என்று இன்னொரு புள்ளியில் அவர் குறிப்பிட்டார்.

உலக வல்லரசுக்கான திட்டங்கள் மற்றும் முதலாம், இரண்டாம் உலக யுத்தத்திற்கு முந்திய மூலோபாய வல்லுநர்களால், வர்த்தக கழகங்களால் மற்றும் இராணுவ தளபதிகளால் வளர்த்தெடுக்கப்பட்ட வெற்றிகளை ஒருவர் ஆய்வு செய்தால், உண்மையில் அதே பூகோள இலக்குகளை ஒருவர் உண்மையில் கண்டுகொள்வார். முங்க்லர் ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் பாரம்பரிய விரிவாக்க கொள்கையை வரைகிறார்.

முங்க்லர், தன்னை போர்வெறியர் என்று விவரிப்பர்களைமூளையில்லாதவர்கள்என்று அழைத்தார், ஆனால் அடுத்த மூச்சில், எடுத்த எடுப்பிலேயே கூறுபவரை கடுமையாய் தாக்குகிறார், “இராணுவ சக்தி என்பது கேள்விக்கே இடமில்லாதது, நாம் எங்கும் துருப்புக்களை அனுப்பப்போவதில்லை மற்றும் நாம் இந்த வகையிலான எதிலும் பங்கேற்கப்போவதில்லை.”

அவர் அவரது பங்களிப்பை, “கூட்டாட்சிக் குடியரசு, அரசியல் ரீதியாக தன்னைத்தானே பார்க்கும் முறையை அடுத்த காலகட்டத்தில் திடீரென்று மாற்றும்என்று தனது நம்பிக்கைகொள்ளலை குறிப்பிடுவதன் மூலம் முடித்தார். அவர் வலியுறுத்தினார், ”எம்மை சுற்றியுள்ள சூழல்களுடன் மிகவும் வேறுபட்ட வகையில் நாம் மீண்டும் ஒருமுறை ஈடுபடல் வேண்டும். நாம் அதனை விரும்பவில்லை. ஒருவரும் நம்மைப் பார்த்திராதவாறு நம்மை சிறிதாக ஆக்கிக் கொண்டால், கொள்கை அளவில் அது சாதகமானது என நாம் காண்போம். அதனுடன் நாம் மகிழ்வோடு முன்னேறுவோம், ஆனால் அதைப்போல பங்காற்ற நாம் போக முடியாது.”

இரு பேராசிரியர்களும் மாலைமுழுவதும் ஒருவருக்கொருவர் முண்டுகொடுத்தனர். பார்பெரோவ்ஸ்கி, முங்க்லர் போல் பகட்டான பூகோள அரசியல் திட்டங்களை குறிப்பிடாத அதேவேளை, அத்தகைய ஒரு கொள்கைக்கு தேவையான மிகவும் ஈவிரக்கமற்ற மற்றும் கொடூரமான வழிமுறைகளைப் பற்றி பேசினார்.

ஒரு ஆண்டுக்கு முன்னர், Schlüterhof கலந்துரையாடலில், ஒருவர்பணயக் கைதிகளை பிடித்து, கிராமங்களை எரித்து, மக்களை தூக்கிலிட்டு அச்சத்தையும் பயங்கரத்தையும் கட்டவிழ்த்துவிடுவதற்குஎதிராக தயாரிக்கப்படவில்லை என்றால், பயங்கரவாதத்திற்கு எதிரான சண்டையிலிருந்து விலகி இருப்பதே ஒருவருக்கு சிறந்தது என்று அவர் ஏற்கனவே அறிவித்தார். எதேச்சாதிகார அரசுக்கு எதிரான அனைத்து எதிர்ப்பினையும் கொடூரமாக நசுக்கிய ஜாரின் இரகசிய போலீசான Ochrana வை ஒரு பிரகாசிக்கும் உதாரணமாக இப்பொழுது அவர் தனது வாயடிப்புகளுக்கு பயன்படுத்திக்கொண்டனர்.

அவரது பின்பற்ற முடியாத சாய்வு நாற்காலி மனோதத்துவத்தை பயன்படுத்தி, பாபெரோவ்ஸ்கி பயங்கரவாத வன்முறையில் சமூக, அரசியல் மற்றும் கருத்தியல் காரணிகள் பாத்திரம் ஆற்றவில்லை என வலியுறுத்தினார். “எப்படி வன்முறை எழுகிறது மற்றும் அது எப்படி முடிகிறது என்று ஒருவர் விவரிக்க விரும்பினால், மனிதர்களில் ஒருவர் மும்முரமாய் ஈடுபடல் வேண்டும்என்றார். “மூர்க்கம் கொண்ட, வன்முறை மற்றும் விரக்தியுற்ற உணர்வை வெளியேற்றும் இளைஞர்கள் எப்போதும் இருப்பர்….. அங்கு எப்போதும் வன்முறை குழுக்கள் இருக்கும், அங்கு எப்போதும் பயங்கரவாதம் இருக்கும்”.

ஆனால் பயங்கரவாதிகள் கூட விதிமுறைகளின்படி இயங்கும் ஒரு குழுவாக உள்ளனர், என அவர் தொடர்ந்தார். ஆகையால், அங்கு முக்கிய பிரச்சினை தலைவர்களை துடைத்தழிப்பதாக இருந்தது. ”ஒருவர் இந்த மக்களை ஒன்றாய் கொண்டுவந்த ஒரு தலைவரை அழிக்கும்பொழுது இலக்கானது நிறைவேற்றப்படுகிறது.” அவர் சொல்லும் இதைத்தான் Ochrana செய்தது. “அவர்கள் தலைவர்களை அழித்து அப்புறப்படுத்தினார்கள்.”

ரஷ்யா பற்றிய நிபுணரான பார்பெரோவ்ஸ்கி, Ochrana பற்றி நேர்மறையாய் மேற்கோள் காட்டுவது அவரது அரசியல் நிலைப்பாடு பற்றி நிறையவே பேசுகிறது. “பயங்கரவாதத்தை எதிர்த்துப்போராடஒரு சக்திமிக்க எடுத்துக்காட்டாக கெஸ்டாபோவைக்கூட அவர் கூற முடியும். Ochrana அனைத்து ஜனநாயக மற்றும் சோசலிச எதிர்ப்பினரையும் ஈவிரக்கமற்று நசுக்க மட்டும் செய்யவில்லை, சமூகப் பதட்டங்களிலிருந்து திசைதிருப்பஆயிரக்கணக்கானோரை பலியிட்டு அது ஒழுங்கமைத்த செமிட்டிச எதிர்ப்பு மற்றும் யூதவிரோத இனழிப்புக்காக இழிபெயர் பெற்றதாக இருந்தது.

மேலும், ரஷ்ய பயங்கரவாதிகளுக்கு இன்றைய இஸ்லாமியவாத அரசுடன் பொதுவான சம்பந்தம் ஒன்றும் இல்லை. நரோத்னிக்குகளால் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல்கள் சாதாரண மக்களுக்கு எதிராக நடத்தப்பட்டதல்ல, மாறாக பிரத்தியேகமாக ஜாரின் பிரதிநிதிகள் மற்றும் அவரது நபர்களுக்கு எதிரானதாக இருந்தது, அவர்களது மரணங்களை மக்களை கிளர்ச்சியூட்டுவதற்காகவும் ஜனநாயகத்திற்காக போராடுவதற்கான வழிமுறைகளாக அவர்கள் பார்த்தார்கள். இந்த வழிமுறை தவறானதாக இருந்தது. இதுவும், ஜாரிசத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதில் தங்களை அடித்தளமாகக் கொண்டிருந்த சமூக ஜனநாயகவாதிகளின் தோற்றமும் நரோத்தினிக்குகளின் வீழ்ச்சிக்கு காரணங்களாக இருந்தன, Ochrana ஆல் நடத்தப்பட்ட ஒடுக்குமுறை காரணம் அல்ல.

பார்பெரோவ்ஸ்கியால் பறைசாற்றப்படும் தலைவர்களை துடைத்தழித்தல் வழிமுறையானது முதலாம் உலக யுத்தத்திலிருந்து அனைத்து பிற்போக்கு ஆட்சிகளினதும் ஜேர்மன் Freikorps மற்றும் ஹிட்லரின் SA முதல் அமெரிக்க CIA வரையிலான அனைத்து உளவு முகவாண்மைகளதும் தரப்படுத்தப்பட்ட பொதுவான நடைமுறையாக இருந்தது. 1919ல் ரோசாலுக்சம்பேர்க் மற்றும் கார்ல் லீப்னெக்ட் படுகொலை செய்யப்படுவதற்கு முன்னர், பேர்லின் வீதிகளில்தலைவர்களை இறக்கும்வரை தாக்குஎன அறிவித்த அட்டைகள் தொங்கின.

முங்க்லர் மற்றும் பார்பெரோவ்ஸ்கி சேர்ந்து தோன்றியது பிப்ரவரி 2014ல் ஆகும். அந்த நேரத்தில் Der Spiegel , நாஜிக்கு வக்காலத்து வாங்கும் ஏர்ன்ஸ்ட் நோல்ட உடன் சேர்த்துவரலாற்றின் உருமாற்றம்என்பதிற்கான முக்கிய சாட்சிகளாய் அவர்களை காட்டியது, அதன் சாராம்சம், முதலாம், இரண்டாம் உலக யுத்தங்களில் ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் குற்றங்களை முக்கியத்துவமற்றதாக ஆக்குவதாக இருந்தது.

அந்த வேளையில், ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தில் உள்ள சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர்கள் அமைப்பு (IYSSE) இதனைக் கடுமையாக தாக்கியது. பல்கலைக்கழக அவைக்கு எழுதிய கடிதத்தில் அது பின்வருமாறு குறிப்பிட்டது, “வரலாற்று ரீதியாக பொய்மைப்படுத்தும் விளக்கத்தை நிலைநாட்டுவதற்கான முயற்சிகள் ஜேர்மன் வரலாற்றில் ஒரு முக்கிய புள்ளிக்கு வந்திருக்கின்றன…. ஜேர்மன் ஏகாதிபத்தியத்தை புத்துயிர்ப்பதற்கு, நாஜி சகாப்தத்து குற்றங்களை முக்கியத்துவமற்றதாக்கும் வரலாறு பற்றிய புதிய விளக்கம் தேவைப்படுகிறது.”

IYSSE மற்றும் உலக சோசலிச வலைத் தளமும் முங்க்லர் மற்றும் பார்பெரோவ்ஸ்கி பற்றி தங்களின் விமர்சனத்தை தொடர்ந்த பொழுது, மாணவர்கள் முங்க்லர் இன் உரை பற்றி, Münkler Watch blog இல் விமர்சித்தபொழுது, ஊடகங்கள் விஷமத்தனமான பிரச்சாரத்தை கட்டவிழ்த்துவிட்டன. அவை IYSSE குற்றம் சாட்டின மற்றும் Münkler Watch blog தணிக்கைக்கு உட்படுத்துமாறு மிரட்டல்களும் அதேபோன்ற நடைமுறைகளும் ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தின் பிற்போக்கு பேராசிரியர்களின் விமர்சனத்தை வெடிகுண்டு மற்றும் படுகொலை அச்சுறுதல்களுக்கு இணையானதாக வைத்தன. இந்த மோதல்கள் புலமைத்திறமா போர்ப்பிரச்சாரமா என்ற நூலில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

யுத்தத்தையும் அரசு வன்முறையையும் சட்டபூர்வமானதாக்குவதற்காக Münkler மற்றும் பார்பெரோவ்ஸ்கி இணைந்து Schlüterhof இல் கூட்டாகத் தோன்றியது, IYSSE-ஆல் வைக்கப்பட்ட விமர்சனத்தை மெய்ப்பிக்கின்றது.