சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

India joins trilateral “dialogue” with US and Japan

அமெரிக்கா மற்றும் ஜப்பானுடன் முத்தரப்பு "பேச்சுவார்த்தை"யில் இந்தியா இணைகிறது

By Deepal Jayasekera
7 October 2015

Use this version to printSend feedback

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், தனது அமெரிக்கா மற்றும் ஜப்பானிய சமதரப்பினரான ஜோன் கெர்ரி, ஃபிமியோ கிஷிடா ஆகியோருடன் கடந்த வாரம் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் முத்தரப்பு அமைச்சர்களுக்கான பேச்சுவார்த்தை குறித்த துவக்க விழாவில் கலந்துகொண்டார். செப்டம்பர் 29ம் தேதி நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டம் நடைபெற்றபோது இக்கூட்டமும் ஒருபுறம் நடத்தப்பட்டது.

இந்த புதிய முத்தரப்பு மன்றத்தில் அமெரிக்கா மற்றும் அதன் மிக முக்கியமான ஆசிய-பசிபிக் கூட்டாளியுடன் சேர்ந்து இந்தியாவின் பங்கேற்பானது, அமெரிக்காக்காவின் "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பு" என்பதற்குள் இந்தியாவை ஒருங்கிணைப்பதில் ஒரு புதிய மைல்கல்லாக உள்ளது இவ்வகையில், இராணுவ மற்றும் மூலோபாய ரீதியாக சீனாவை தனிமைப்படுத்தி சுற்றிவளைக்க வாஷிங்டன் முயற்சிகள் எடுக்கிறது.

அமெரிக்கா, தனது தலைமையில் ஜப்பான் மற்றும் இப்பிராந்தியத்தில் அதன் மற்றொரு முக்கிய இராணுவ கூட்டாளியான ஆஸ்திரேலியாவுடன் சேர்ந்து நடத்தும் முத்தரப்பு மற்றும் நாற்தரப்பு முன்முயற்சிகளில் இந்தியா கலந்துகொள்ள நீண்டநாட்களாக வலியுறுத்தி வருகிறது.

இந்த மாதம் பிற்பகுதியில், இந்தியஅமெரிக்க வருடாந்திர இந்திய பெருங்கடல் கடற்படை பயிற்சியில் -மலபார் பயிற்சியில்- ஜப்பான் இணைய உள்ளது. இந்தியா கடைசியாக 2007ல் ஜப்பானை இப்பயிற்சியில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தபோது பெய்ஜிங் கடுமையாக ஆட்சேபித்தது, மேலும் இது சீனாவை குறிவைக்கும் முயற்சியா என்ற விபரத்தை நியூ டெல்லி, டோக்கியோ மற்றும் வாஷிங்டன் தெளிவுபடுத்தவேண்டும் என்ற வகையில் இராஜதந்திர விளக்கம் கோரியது.

கடந்த வாரம் நடைபெற்ற முத்தரப்பு வெளியுறவு அமைச்சர்களின் கூட்டமானது, அதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டும் வகையில் ஊடகங்களுக்கு முன்பாக பொது அமர்வுடன் தொடங்கப்பட்டது.

பொது அமர்வில் அமைச்சர்கள் அளித்த உரைகளில் மட்டுமல்லாமல், கூட்டங்களின் முடிவில் விடுக்கப்பட்ட அதிகாரபூர்வ அறிக்கைகளிலும் கூட நேரடியாக சீனாவை குறிவைக்கும் விதமாக எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனினும், பயன்படுத்தப்பட்ட பல்வேறு இராஜதந்திர குறியீட்டுச் சொற்கள் "முத்தரப்பு பேச்சுவார்த்தை" சீனாவை குறிவைத்துதான் நடைபெறுகிறது என்பதை தெளிவுபடுத்தியது.

அமெரிக்க அரசுத்துறை விடுத்த ஒரு ஊடகக் குறிப்பின்படி, மூன்று நாடுகளும் "சர்வதேச சட்டம் மற்றும் சர்ச்சைகளுக்கு அமைதியான தீர்வு; ஊடுருவல் மற்றும் வான்வழி சுதந்திரம்; தென் சீன கடல் பகுதி உட்பட தடுக்கப்படாத சட்டபூர்வ வர்த்தகம் போன்றவற்றின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டின". சீனாவுடன் கடல்சார்ந்த நிலப்பகுதி மோதல்களைத் தீவிரமாக தொடர அமெரிக்கா தனது உள்ளூர் கூட்டு அமைப்புக்களான பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாமை ஊக்கப்படுத்தி வருகின்ற போதிலும், வாஷிங்டன் இந்தியாவின் துணையுடன், சீனாவை தென் சீன கடல் பகுதியின் "ஆக்கிரமிப்பாளர்" என்று திரும்ப திரும்ப சித்தரிக்க முயன்று வருகிறது. இதில் பெய்ஜிங் அதன் இறையாண்மைக்காக போட்டியிட்டு தென் சீன கடல் சிறு தீவுகளில் நிலச்சீரமைப்பு திட்டங்களைத் தொடருகின்ற போது அதனை கண்டனம் செய்ததும் அடங்கும், அதேசமயத்தில் அமெரிக்கா தனது கூட்டணிகளின் கட்டுப்பாட்டிலுள்ள சிறுதீவுகளில் இதேபோன்ற திட்டங்களுக்கு மறைமுக ஆதரவும் தருகின்றது.

"மூன்று நாடுகளும் அதிக ஒத்துழைப்புடன் கடற்பகுதி பாதுகாப்பினை பராமரிப்பதில் இணைந்து செயலாற்றிட ஒத்துக் கொண்டுள்ளது" என அமெரிக்க அரசு குறிப்பு தெரிவிக்கின்றது. அமெரிக்கா, அதன் திட்டத்திற்கு ஏற்ப இந்தியப் பெருங்கடல் மற்றும் தென் சீனக் கடல் பகுதிகளை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் நோக்குடன் இந்தியாவை அணிதிரட்டுவதுடன், இந்தியா ஒரு ஆழ்கடல் கடற்படையை உருவாக்கவும் அமெரிக்கா இந்தியாவிற்கு கடுமையாக ஊக்கமளித்து வருகிறது. இரண்டு நீர்வழி மார்க்கங்களுமே சீனாவின் எரிசக்தி இறக்குமதி உள்ளிட்ட, அதன் வெளிநாட்டு வர்த்தகத்திற்கு இன்றியமையாதவை, மற்றும் மோதல் ஏற்படும் சமயத்தில் சீனாவுக்கு பொருளாதார ரீதியாக தடுப்பு ஏற்படுத்தும்  வகையில் முக்கிய நீர்வழித் தடங்கள் அல்லது தடை ஏற்படுத்தும் புள்ளிகளை  கைப்பற்றுவதை குறிவைத்து பென்டகனின் திட்டம் குவிமையப் படுத்தப்பட்டுள்ளது.

முத்தரப்பு கூட்டங்களின் வெளிப்படையான அமர்வின்போது சுவராஜ் தனது உரையில், வெளியுறவு அமைச்சர்களின் உரையாடல்கள் "நமது மூலோபாயம், அரசியல், பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு நலன்கள் குறித்து வளர்ந்துவரும் ஒருங்கிணைப்பை உயர்த்தி காட்டியது" எனக் கூறினார்.

"ஆசிய-பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகள்" இந்தியாவின் "பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்"களுக்கு இன்றியமையாதவை என அறிவித்தார்.

ஒபாமா நிர்வாகம், சீன எல்லைப்பகுதிகளில் அமெரிக்காவின் போர் கப்பல்கள் மற்றும் விமானங்கள் ரோந்து சுற்றுவதற்கு அமெரிக்காவிற்கு தடங்கலற்ற உரிமை இருப்பதாக நிலை நாட்ட பயன்படுத்தும் அதே மொழி ஆளுமையை பயன்படுத்தி சுவராஜ் தெரிவித்தார். இந்தியா "சர்வதேச கடற்பகுதிகளில் சுதந்திர கடற்பயணம், வான்வழி உரிமையை நிறைவேற்றுதல், தடையில்லா வர்த்தகம் மற்றும் வளங்களை அணுகுதல் போன்றவற்றிற்கு எப்பொழுதும் உறுதுணையாக’’ இருக்கும் என்றார்.

"இன்றைய நமது கலந்துரையாடலுக்கும் இந்தியாவின் கிழக்கு நோக்கி செயல்படு கொள்கைக்கும் இடையே வலுவான தொடர்பு" இருப்பதாக சுவராஜ் வலியுறுத்தி பேசினார் - கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியப் பகுதிகளுடன் நெருங்கிய பொருளாதார மற்றும் இராணுவ-மூலோபாய தொடர்புகளை ஸ்தாபிப்பதற்கான புது டெல்லியின் உந்துதல் கிழக்கு நோக்கி செயல்படு என பெயரிடப்பட்டது.

இந்தியாவின் "கிழக்கு நோக்கி செயல்படு" எனும் கொள்கைக்கு அமெரிக்கா உறுதுணையாக இருக்கிறது, உண்மையிலேயே இக்கொள்கையை அமல்படுத்த புது டெல்லிக்கு துணைநிற்க தயாராக இருப்பதாக அமெரிக்கா திரும்ப திரும்ப கூறியது. இதற்கு இரு காரணங்கள் உண்டு. அமெரிக்கா, இந்தியாவை சீனாவிற்கு எதிர்பலமாக வலுப்படுத்து விரும்புகிறது மற்றும் இப் பிராந்தியத்தில் புது டெல்லியின் தாக்கங்களை பெரிதும் விரிவுபடுத்தி இதன்மூலம் அமெரிக்காவுடனான இந்தியாவின் உறவுகள் பின்னிப்பிணைந்து இருக்க வேண்டும் என அமெரிக்கா விரும்புகிறது.

ஜப்பானின் உற்பத்தி சங்கிலியில் தென் கிழக்கு ஆசியா முக்கிய பங்கு வகிப்பதனால், ஜப்பானுக்கும் அது மிக முக்கியமானதாக உள்ளது.

இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலேயே, இந்தியாவின் ஆளும் மேற்தட்டு அமெரிக்க ஏகாதிபத்தியம் சம்பந்தமாக இன்னும் அதிக அளவில் சாய்ந்துள்ளது, அத்துடன் இப்போது இந்தியா "சர்வதேச மூலோபாய கூட்டாளி" யாக இணைந்துள்ளது.

ஒரு தசாப்தமாக எதிரணியில் இருந்த பிறகு, மே 2014ல், நரேந்திர மோடி மற்றும் அவரது இந்துமத மேலாதிக்கவாத பா... மீண்டும் ஆட்சிக்கு வந்ததிலிருந்து இந்திய அமெரிக்க உறவுகள் இன்னும் நெருக்கம் அடைந்துள்ளன.

முந்தைய காங்கிரஸ் கட்சி தலைமையிலான அரசின் சில தயக்கங்களை ஒதுக்கி தள்ளிவிட்டு அமெரிக்காவுடன் இராணுவ இணை தயாரிப்பு ஒப்பந்தத்தை செயல்படுத்த மோடி தலைமையின் கீழ் இந்தியா அவசரமாக முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது மேலும் தற்போது தென் சீனக் கடல் மோதல்களில் வாஷிங்டனின் நிலைப்பாட்டை வழக்கம்போல் பின்பற்றுகிறது.

ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுடனான இராணுவ பாதுகாப்பு உறவுகளை புது டெல்லி மேலும் வலுப்படுத்தியுள்ளது. மேலும் இந்தியா, உயர்ரக முத்தரப்பு முன் முயற்சிகளில் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளுடன் சேர்ந்து பங்கேற்பதில் கொண்டிருந்த தயக்கத்தையும் கைவிட்டுள்ளது. இருந்தபோதிலும், எவ்வித சந்தேகமுமின்றி பெய்ஜிங்கின் கடுமை மீதான பயத்தில், அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகளின் நாற்தரப்பு இராணுவ பயிற்சிகள் மற்றும் மூலோபாய விவாதங்கள் தொடர்பாக அமெரிக்கா விடுக்கும் அழைப்புக்களை தொடர்ந்து தவிர்த்து வருகிறது.

கடந்த வார முத்தரப்பு வெளியுறவு அமைச்சர்களின் கூட்டம் தவிர, இந்திய வெளியுறவு செயலாளர், எஸ்.ஜெய்சங்கர் தனது ஆஸ்திரேலிய சமதரப்பினர் மற்றும் ஜப்பானிய துணை வெளியுறவு அமைச்சர் இருவரையும் கடந்த ஜுன் மாத முத்தரப்பு கூட்டத்தில் சந்தித்தார்.

செப்டம்பர் 11 முதல் 19ம் தேதி வரை, இந்தியா முதன் முதலாக ஆஸ்திரேலியாவுடன் இணைந்த கடற்படை விளையாட்டுக்களை நடத்தியது, இந்த பயிற்சி கிழக்கு இந்திய கடற்கரை நகரமான விசாகப்பட்டிணத்திற்கு அருகில் இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிகழ்த்தப்பட்டது. அக்டோபர் 2ம் தேதியன்று, இந்திய கடற்படை தளபதி ஆர்.கே.தவான் ஆஸ்திரேலியாவிற்கு அதிகாரபூர்வ பயணம் மேற்கொண்டபோது, ஆஸ்திரேலிய கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வருடாந்திர "கடல் சக்தி மாநாட்டில்" கலந்துகொண்டார். இம்மாநாடு, 40 நாடுகளின் கடற்படை தளபதிகளுடன் "கடல்வழி சுதந்திரம்", "கடற்பகுதி பாதுகாப்பு" உட்பட மற்ற பிரச்சினைகளையும் விவாதிக்க நடத்தப்பட்டது.

டிசம்பர் 2011ல், அமெரிக்கா மற்றும் ஜப்பானுடன் முத்தரப்பு கூட்டங்களை இணைச் செயலாளர் மட்டத்தில் இந்தியா தொடங்கிற்று, அதிலிருந்து இக்கூட்டங்கள் வருடத்திற்கு இரண்டு முறைகள் நடத்தப்பட்டன. இப்பொழுதும், இக்கூட்டம் மூன்று நாடுகளின் முன்னணி தூதரக அதிகாரிகளுக்கான வழக்கமான ஒரு மாநாடாக உயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த வாரத்தில் கூட, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை இந்த ஆண்டில் மூன்றாம் முறையாக மோடி சந்தித்தார். இது ஒரு முழு உச்சி மாநாடாக இல்லை, மோடி, ஐக்கிய நாடுகள் பொது சபைக் கூட்டத்தில் கலந்துகொள்ளவும் மேலும் அந்நிய முதலீட்டிற்கு முரசு கொட்டும் வகையில் அமெரிக்க வர்த்தக தலைவர்களை சந்திக்கவும் அமெரிக்கா சென்றார். ஆனால், இந்திய பிரதம மந்திரி மற்றும் அமெரிக்க அதிபர் இருவரும் அமரிக்க, இந்திய உறவுகளை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வலுப்படுத்தவேண்டும் என்பதை பிரகடனப்படுத்துவதிலும், இருவரது தனிப்பட்ட நட்பின் ஆழத்தை உறுதிப்படுத்துவதிலும் தங்களது வரம்புகளை கடந்து அளவுக்கதிகமான முயற்சிகளை எடுத்துக்கொண்டார்கள்.

ஒபாமா அவர்களது ஒரு மணி நேரம் நீண்ட கலந்துரையாடல்களில் பெரும்பாலும், "பாரீஸில் நடைபெறவிருக்கும் காலநிலை மாநாடே" குவிமையப்படுத்தப்பட்டது என்றார், மேலும், புதிய சர்வதேச காலநிலை மாற்ற நெறிமுறை தொடர்பான பேச்சவார்த்தையில் இந்தியா அமெரிக்காவுடன் ஒத்துழைக்கும் என்ற தனது நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார். அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய சக்திகள் ஒருபுறம் இருக்க, சீனாவைவிட பொருளாதார வளர்ச்சி குன்றியதாக அது இருப்பதனால் பாரீஸ் மாநாட்டில் இந்தியா குறித்து சிறப்பு அக்கறை செலுத்தப்படவேண்டும் என புது டெல்லி வாதிக்கிறது.

அமெரிக்காவின் சீன எதிர்ப்பு "முன்னெடுப்பு" குறித்து புது டெல்லியின் அதிகரித்துவரும் ஒருங்கிணைப்பிற்கு பிரதியுபகாரமாக, .நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவிற்கென ஒரு நிரந்தர இடம் கோரும் இந்தியாவின் முயற்சிக்கு வாஷிங்டன் துணைபுரியும் என்று மீண்டும் ஒபாமா வலியுறுத்திக்கூறினார்.

மோடி தனது அமெரிக்கப் பயணத்தின்போது, 3 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பீட்டிலான போயிங் இராணுவ ஹெலிகாப்டர்கள் கொள்முதல் உடன்பாட்டில் முறையாக கையெழுத்திட்டார். நடைமுறையிலிருக்கும் ஒப்பந்தங்கள் மற்றும் இணை தயாரிப்பு ஒப்பந்தங்களின்படி ரஷ்யா இந்தியாவின் மிக முக்கியமான இராணுவ விநியோகஸ்தராக தொடரும் பட்சத்திலும், இந்தியாவின் புதிய மிகப்பெரிய ஆயுத விநியோகஸ்தர் என்று அமெரிக்காவின் நிலையை இந்த உடன்பாடு உறுதிப்படுத்திற்று.

முன்னதாக செப்டம்பர் 23ம் தேதியில் அமெரிக்க இந்திய "மூலோபாய மற்றும் வர்த்தக உரையாடல்" துவக்கவிழாக் கூட்டத்தில் சுவராஜ் மற்றும் இந்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இருவரும் முறையே ஜோன் கெர்ரி மற்றும் பென்னி பிரிட்ஜ்கர் போன்ற அமெரிக்க சமதரப்பினர்களை சந்தித்தனர். இனம்தெரியாத ஆறு ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து பெறப்பட்டுள்ள .நா. அமைதி காக்கும் படையினருக்கான இந்திய அமெரிக்கப் பயிற்சியில் முன்னெப்போதும் இல்லாமல் முதன்முறையாக இந்தியா இணைந்திருப்பது உட்பட பல குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் குறித்த தகவல்களை இக்கூட்டம் அறிவித்தது

தற்போது .நா. அமைதி காக்கும் படை என்ற பெயரில் நடத்தப்பட்டுவந்த போதும், வெளிநாட்டு இராணுவ சக்திகளின் கூட்டுப் பயிற்சியானது பரந்த இராணுவ ஒத்துழைப்பு உட்பட பெருகிவரும் கூட்டு இராணுவ தலையீடுகளுக்கு கதவுகளை அகலத் திறக்கிறது.

இந்திய புவிசார் அரசியல் வல்லுநர் ராஜ மோகன், இந்திய அமெரிக்க மூலோபாய கூட்டாண்மைக்கு தானே ஒரு வலுவான ஆதரவாளராக இருப்பவர் உடனடியாக இதனை சுட்டிக்காட்டினார்; "உண்மையிலேயே, இரண்டு மிகப்பெரிய அமைதிகாக்கும் சர்வதேச முதன்மையாளர்களான இந்தியா மற்றும் அமெரிக்காவிற்கு இணைந்து பணியாற்றத் தொடங்க நீண்டகாலம் பிடித்துள்ளது" என மோகன் கடந்த வாரம் இந்தியன் எக்ஸ்பிரசுக்கு அளித்த பேட்டியில் அறிவித்தார். "எப்போதும் இல்லை என்பதை விட தாமதம் நன்று தான்...... பெரும் வல்லரசுகள் மற்றும் அண்டை நாடுகளுடன் இராணுவ ஒத்துழைப்பு மற்றொரு காரணத்திற்காகவும் மிகவும் அவசியம் - அனைத்து அமைதி நடவடிக்கைகளும் .நா. வினால் நடத்தப்படுவதில்லை. இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனையும் தாண்டிய பகுதிகளில் உருவாகும் நெருக்கடியான சூழ்நிலைகளை குறுகிய நேரத்தில் சமாளிக்கும் விதமாக, இந்தியா இராணுவ கூட்டணிகளை உருவாக்க வேண்டும்".